Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வு நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதற்காக நம்ம சர்தாஜி விண்ணப்பித்திருந்தார். சர்தாஜிக்கு அந்த நிறுவனத்தில் இருந்து நேர்முகப்பரீட்சைக்கு தோற்றுமாறு அழைப்பு வந்தது. சர்தாஜி அங்குவந்து காத்திருந்தார். அவருடன் ஒரு இத்தாலியரும், ஒரு யூதரும் அதேவேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தனர். முதலில் உள்ளே போன யூதரிடம்….புலனாய்வு அதிகாரி..ஜேசுவைக்கொன்றவர்கள் யார்? என்று கேள்வி கேட்டார்? யூதர் அது நிற்சயமாக ரோமர்கள்தான் என்றார்..சரி நீங்கள் போகலாம் என்றுவிட்டு அடுத்ததாக இத்தாலியரை அழைத்தார் புலனாய்வு அதிகாரி…அவரிடமும் ஜேசுவைக்கொன்றவர்கள் யார்? என்று கேட்டார். நிச்சயமாக அது யூதர்கள் தான் என்று அடித்துக்கூறினார் இத்தாலியர்…சரி..நீங்கள் போகலாம் என்று விட்டு கடைசியாக நம்ம சர்தாஜியை கூப்பிட்டார் புலனாய்வு அதிகாரி.. சர்தாஜியிடமும் ஜேசுவைக்கொன்றவர்கள் யார்? என்று கேட்டார். கொஞ்சம் யோசித்த சர்தாஜி எனக்கு கொஞ்ச நாட்கள் தருகின்றீர்களா கண்டுபிடித்து சொல்கின்றேன் என்றார். அதிகாரியும் சரி போய்வாருங்கள் அனால் அடுத்த வாரம் இதே நாளுக்கிடையில் சொல்லவேண்டும் என்றார்.

வீடு செல்லும் வழியிலேயே சர்தாஜியைக்கண்ட அவரது மனைவி…எப்படி நேர்முகத்தேர்வு? எனக்கேட்டார்..அதற்கு சர்தாஜி…ம்ம்ம்ம்..ரொம்ப நல்லது..எனக்கு வேலை கிடைத்துவிட்டது. ஒருவரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்கவேண்டி உள்ளது. உன்னுடன் கதைக்க நேரம் இல்லை இன்னும் ஒருவாரத்துக்குள் அவர்களை பிடிக்கவேண்டும் என்றுவிட்டு ஓடினார் சர்தாஜி.

:(:D

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சர்தாஜி அரசாங்க வேலை ஒன்றுக்காக விண்ணப்பித்து நேர்முகப்பரீட்சைக்காக வெளியில் காத்திருந்தார். உள்ளே இன்னும் ஒருவர் நேர்முகப்பரீட்சையை சந்தித்துக்கொண்டிருந்தார்.

நிர்வாகி - இந்தியாவுக்கு எப்போ சுதந்திரம் கிடைத்தது?

மற்றவர் - பல ஆண்டுகள் தள்ளிப்போய் இறுதியில் 1947 இல்.

நிர்வாகி -இந்தியாவுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தவர் யார்?

மற்றவர் - பலர்..இதில் ஒருவரை சொல்லி மற்றவர்களை அவமதிக்க

என்னால் முடியாது.

நிர்வாகி – நல்லது. எயிட்ஸ் நோயை தடுக்கமுடியுமா?

மற்றவர் - இது பற்றிய பரிசோதனைகள் நடந்துவருகின்றன. எனவே

அவை வெளியிடப்பட்டதும் திட்டவட்டமாக சொல்கின்றேன்.

மேற்படி மற்றவரின் பதிலை கேட்ட நிர்வாகிகள் அவரை கைலாகுகொடுத்து வாழ்த்துவதையும், மெச்சுவதையும் கண்ணாடியினூடாக நம்ம சர்தாஜி பார்த்துவிட்டார். அவர் வெளியில் வந்ததும் அவரிடம் ஓடிச்சென்று..நண்பரே உள்ளே அவர்கள் எத்தனை கேள்வி கேட்டார்கள்? என்று கேட்டார்..அவரும் 3 என்றார்…..சரி அப்படி என்றால் அந்த 3 கேள்விக்கும் நீங்கள் சொன்ன பதிலை எனக்கு சொல்லுங்கள் என்றார் அவரும் சொன்னார்..

அடுத்து உள்ளே போன நம்ம சர்தாஜி நிர்;வாகியிடம் தெரிவித்தவைகள்

நிர்வாகி – நீங்கள் எப்போது பிறந்தீர்கள்?

சர்தாஜி - பல ஆண்டுகள் தள்ளிப்போய் இறுதியில் 1947 இல்.

நிர்வாகி – உங்களது தந்தை பெயர் என்ன?

சர்தாஜி - பலர்..இதில் ஒருவரை சொல்லி மற்றவர்களை அவமதிக்க

என்னால் முடியாது.

நிர்வாகி – உனக்கு என்ன பைத்தியமா?

சர்தாஜி - இது பற்றிய பரிசோதனைகள் நடந்துவருகின்றன. எனவே

அவை வெளியிடப்பட்டதும் திட்டவட்டமாக சொல்கின்றேன்.

:D :d

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்தார்ஜியிடம் ஒரு பெண்...

“நான் உன்னைக் காதலிக்கிறேன், கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்”

“அது முடியாது. எங்க வீட்டுலே எல்லோரும் சொந்தத்துலேதான் கல்யாணம் பண்ணிக்குவாங்க. எங்க தாத்தா, எங்க பாட்டியைத்தான் கல்யாணம் பண்ணினார்; எங்க மாமா எங்க அத்தையைத்தான் கல்யாணம் பண்ணினார்; எங்க அப்பா எங்க அம்மாவைத்தான் கல்யாணம் பண்ணினார். அதனாலே உன்னை என்னால கல்யாணம் பண்ண முடியாது. மன்னிச்சுடு...”

:(:D

அட புத்தியில்லாத பெட்டையாய் கிடக்குது. என் கணவரே உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லிப்பார்த்திருக்கலாம். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன பொண்ணு சிவன் கோயிலுக்கு போச்சு,,

"சாமி எனக்கு ஒரு சைக்கிள் வேணும்னு வேண்டிகிச்சு"

ஆனா 10நாள் ஆகியும் அந்த பொண்ணுக்கு சைக்கிள்

கிடைக்கல, 11வது நாள் அதே கோயிலுக்கு அந்த பொண்ணு

வந்துச்சு,, வாசல்ல இருந்த சின்ன பிள்ளையார் சிலைய

யாருக்கும் தெரியாம எடுத்துட்டு உண்டியல்ல ஒரு

லெட்டர் ஒன்ன போட்டு போயிடுச்சு.....

அந்த லெட்டர்ல என்ன எழுதிருந்ததுன்னா?

இன்னைக்கு நைட்டுக்குள்ள சைக்கிளோட என் வீட்டுக்கு

வந்தீன்னா உன் பையன நான் உன்கிட்ட ஒப்படைக்கிறேன்.....

இல்லேன்னா மேட்டர் பினிஷ்....

:D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  ஆண்டி:    சே ,எனது இளமைக் காலத்தை நினைத்துப் பார்க்கவே எனக்கு மிகவும் வெறுப்பாய் இருக்கு !

சுண்டல்: ஆர்வத்துடன் , அப்படி என்னதான் நடந்தது ஆண்டி விரும்பினால் சொல்லுங்கோ !

ஆண்டி: எதுவுமே நடக்கவில்லை சுண்டல், அதனாலதான்..... :D

 

 

நானும் எனது மனைவியும் பத்து வருடங்கள் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தோம் !

 பிறகு ?

எங்களுக்கு திருமணமாகி விட்டது !! :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன் படங்களில் இடம் பெறும் பாடல்கள் விஷயத்தில், அதிக அக்கறையும், சிரத்தையும் எடுத்துக் கொள்வார் எம்.ஜி.ஆர்., தான் எதிர்பார்க் கும் விதத்தில், மெட்டு வரும் வரையில் இசையமைப்பாளர்களை ஓய விட மாட்டார். தான் நடிக்கும் படப் பாடல்களின் மெட்டுக்கள் மட்டுமின்றி, பாடல் வரிகளும் மிக சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில், எம்.ஜி.ஆர்., அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார்.

எவ்வளவு பெரிய கவிஞராக இருந்தாலும், எம்.ஜி.ஆர்., போதும் என்று சொல்லும் வரை, அவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, பாடல் வரிகளை அடித்துத் திருத்தி, எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., படங்களுக்கு மெட்டுப் போடுவதில் இருந்து, பாடல் எழுதுவது வரை, இசையமைப் பாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும் அவசியமாக இருந்தது. அந்த அளவுக்கு, எம்.ஜி.ஆர்., கசக்கிப் பிழிந்து விடுவார்.

அளவுக்கு அதிகமான எம்.ஜி.ஆரின் தலையீடும், சிரத்தையும் தான், மற்ற நடிகர்களின் பழைய பாடல்களை விட, எம்.ஜி.ஆரின் பழைய பாடல்கள், இன்றைய இளைஞன் முதல் முதியவர்கள் வரை ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதற்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன என்றால், அது மிகையல்ல. எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் நடித்த படம், நினைத்ததை முடிப்பவன்.

இந்தப்படத்தில், எம்.ஜி.ஆர்., கொள்ளைக் கூட்டத்தின் மத்தியில், அவர்களை வேவு பார்க்க வந்து, மாறு வேடத்தில் நின்று கொண்டிருக்கும் போலீஸ்காரர்கள் மத்தியில், பாடுவதாக ஒரு பாடல் காட்சி.

அருமையான ஒரு மெட்டமைத்து, எம்.ஜி.ஆரிடம் பாடிக் காட்டினார் எம்.எஸ்.வி., அந்த மெட்டு எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

ஒரு பிரபலமான கவிஞரை, அந்த மெட்டுக்கு பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்., காட்சிச் சூழலை நன்கு கேட்டு, தெரிந்த கொண்ட அந்த கவிஞர், பாடல் எழுதி முடித்ததும், எம்.ஜி.ஆரிடம் படித்துக் காண்பித்தார். பாடல் வரிகள் நன்றாக இருந்தும், எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அந்த வரிகள் அமையாததால், மீண்டும் புதிதாக சில பல்லவிகளையும், சரணங்களையும் எழுதச் சொன்னார்.

ஆனாலும், எம்.ஜி.ஆர்., முகத்தில் திருப்தி இல்லை. வேறு ஒரு பிரபல கவிஞரை அழைத்து, இதே மெட்டுக்கு எழுத வைத்தனர்.

அந்தப் பாடலும் திருப்தி இல்லை. இதே போல், அந்த நாளில் பிரபலமாக இருந்த ஆறு கவிஞர்கள், அந்த மெட்டுக்கு பாடல் எழுதப் பணிக்கப்பட்டனர். எந்த வரிகளுமே, எம்.ஜி.ஆரை வசீகரிக்கவில்லை.

கடைசியில், ஒரு மூத்த கவிஞரை கூப்பிட்டு எழுதச் செய்தனர். பாடல் வரிகளை கேட்ட எம்.ஜி.ஆர்., முகத்தில், பூரண சந்திரனாக புன்னகை பொங்கி வழிந்தது... "இது தான். இதே தான். நான் எதிர்பார்த்தது...' என்றார் எம்.ஜி.ஆர்., உடனே பாடல் ஒலிப்பதிவுக்கு, ஏற்பாடு செய்யுங்கள் என்றார் எம்.ஜி.ஆர்., உற்சாகம் பொங்க. அந்தப் பாடல் இது தான்...

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்

உண்மை இல்லாதது...

அறிவை நீ நம்பு! உள்ளம் தெளிவாகும் அடையாளம்

காட்டும் பொய்யே சொல்லாதது...

எம்.ஜி.ஆரின் எதிர்பார்ப்பை, பாடலில் கொண்டு வந்த அந்தப் பாடலாசிரியர் கவிஞர் மருதகாசி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாரில் ஓரத்தில் தனியாக உட்கார்ந்து மூன்று கிளாஸ்களில்பீர் வாங்கி நாராயணசாமி உள்ளே தள்ளிக் கொண்டிரு­ந்தார் ­.

அடித்த சரக்கு பத்தாமல் மீண்டும் ஒரு முறை எழுந்து சென்று சரக்கு ஊற்றித் தருபவரிடம் மூன்று கிளாஸ்களில் பீர் கேட்டார். சரக்கு ஊற்றித் தருபவர் சற்று நேரம் பார்த்து விட்டு,"ஸார், நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒன்னு கேக்கறேன்,

ஒவ்வொரு கிளாஸா வாங்கி குடிச்சா இன்னும் நல்ல இருக்குமே.

நா கிளாஸ்ல ஊத்தும் போதே நுரை அடங்கி உள்ள போய்டுதே ஆனா நீங்க மூணு மூணு கிளாஸா வாங்கி குடிக்கிறீங்களே ­­.. இதில இதோட நிஜ டேஸ்டே இல்லாம போய்டுமே" என்றான்.

"இல்லப்பா, நாங்க அண்ணன் தம்பி மூணு பேர். அண்ணன் துபாய்ல இருக்கான், தம்பி

கனடாவில இருக்கான், நான் இங்க லண்டன்ல இருக்கேன். சின்ன வயசிலேர்ந்தே நாங்க மூணு பேரும் ஒன்னாதான் சரக்கடிப்போம். நாங்க மூணு பேரும் ஆளுக்கு ஒரு மூலையா பிரிஞ்சு போனதால, சரக்கு சாப்பிடறதா இருந்தா மூணு கிளாஸ்ல வாங்கி, மத்தவங்க ஞாபகார்த்தமா அந்த சரக்கை சாப்பிடனும்னு ஒரு சத்தியம் பண்ணிருக்கோம்.

என் தம்பி அண்ணன் ரெண்டு பேருமே இதை செஞ்சுட்டுதான் குடிப்பாங்க.

அதனாலதான்" என்றார் நாராயணசாமி .

ஆச்சர்யமாக பார்த்தான் அந்த 'சரக்கூற்றி '.இதேபோல தினமும் அந்த பாருக்கு சென்று அமர்ந்து மூன்று மூன்று கிளாஸ்களில் பீர் வாங்கி மோர் போல குடித்து தன் தொப்பையை வளர்த்து வந்தார் நாராயணசாமி .

ஒரு நன்னாளில், இரண்டு கோப்பையில் மட்டும் பீர் தரச்சொல்லி வாங்கி குடித்தார் நாராயணசாமி .

இதைக்கண்ட சரக்கூற்றி சரக்கப்பன் மிகவும் சங்கடப்பட்டான். ­­ நேரே அவரிடம் சென்று "ரொம்ப ஸாரி ஸார், இப்படி ஆகும்ன்னு நான் நினைக்கலை" என்றுவருத்தப்பட்டான் ­­.

"ஏம்ப்பா என்னாச்சு" என்றார் நாராயணசாமி சகஜமாக."இல்லை எப்போதும் நீங்க உங்க பிரதர்ஸ் ஞாபகார்த்தமா மூணு கிளாஸ்ல வாங்கிக் குடிப்பீங்க.

உங்க பிரதர்ல ஒருத்தர் இறந்துவிட்டாங்க ­­ போலிருக்கு இன்னிக்கி இரண்டு கிளாஸ்ல மட்டும் ஊத்தி குடிக்கிறீங்க" என்றான்.

அந்த இரண்டு கிளாஸ் பீரையும் நிதானமாக சிப் பண்ணி குடித்துவிட்டு முழு போதையுடன் சொன்னார் நாராயணசாமி ..

"யாருக்கும் எதுவும் ஆகலை, நேற்றையோடு நான்தான் குடியை நிறுத்திட்டேன்பா, அதான் என் பிரதர்ஸ்க்காக இரண்டு கிளாஸ் மட்டும் குடிக்கிறேன்".! !

இதை கேட்ட சரக்கூற்றிக்கு போதை தெளிய ரெண்டு நாள் ஆனது

:D:(:D

  • கருத்துக்கள உறவுகள்

குடிப்பவர்கள்  எப்பொழுதுமே இந்த விடயத்தில் நிதானமாக இருப்பார்கள்... :D



எனது தகப்பனார் தண்ணி  போட்டால் வீட்டிலுள்ள  பொருட்களை  உடைப்பார்

ஆனால் தனக்கு  தேவையானவற்றை  உடைத்ததில்லை.

அதேநேரம் தவமிருந்து பெற்ற என் மீது எதுவும்  பட்டுவிடக்கூடாது என்று கவனமாக இருப்பார்.

வளர்ந்த பின் ஒரு நாள் கேட்டேன்

எப்படி இது சாத்தியம் என்று.

சிரித்து விட்டு போய் விட்டார் :D  :D

"யாருக்கும் எதுவும் ஆகலை, நேற்றையோடு நான்தான் குடியை நிறுத்திட்டேன்பா, அதான் என் பிரதர்ஸ்க்காக இரண்டு கிளாஸ் மட்டும் குடிக்கிறேன்".! !

:D:(:D

 

  :unsure: :unsure:

 

இந்த  சமன்பாட்டை எப்படி விடுவிப்பது?

 

தலையை கிறு கிறுக்க வைக்கிறார் சுண்டல்.

 

:unsure:

 

 

மேலும் குடியால் அவர்களுக்கு ஈரல் எரிவு வந்தால் குடியை நிறுத்திவிட்ட  இவரின் ஈரலிலிருந்து வெட்டி ஒட்டிவிடலாம் என்று நினக்கிறேன்.

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில்

உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177

வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில்

கட்டும் போது, இதன் கீழ் உள்ள

மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம்

கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட

கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும்

மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம்

சாயத்தொடங்கியது

,இரண்டாம் தளம் கட்டும்

போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்

சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர்

தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள

மண் இதற்கு ஒத்துழைத்தது !

இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க

முடிந்தது ! ஒரு கேவலமான

கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான

ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும்

உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர்

போன ராஜா ராஜா சோழனால்

கட்டப்பட 216அடி உலகையே மிரளச்செய்யும்

தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில்

கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள

ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ )

எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும்

கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த

காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட

கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம்

பெறவில்லை !சில நேரங்களில்

வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும்

நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின்

பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது, அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

பாபு: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க முடியாதுன்னு தெரியுது.

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்க வீட்டு நாய் என் மாமியாரைக் கடிச்சுடுச்சு லதா…!

-

அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? வேணும்னா

உன் நாயை விட்டு என் மாமியாரைக் கடிக்கச் சொல்லு…!

லதா தன் வீட்டு நாயை நம்வீட்டு மாமிக்கு கடிக்கும்படி சொல்லற டெக்னிக்கை தெரிஞ்சு வைச்சிருக்கா. அதைத்தான் ஒருவாட்டி நமக்கும் சொல்லித்தருவியா என்னு அவவிடம் கேட்டோம். ஒன்னுமே தெரியாத அப்பாவியாட்டம் "நாய் தான் கடிசுட்டுது அதற்கு நான் என்ன பண்ண" என்னு துள்ளிக்குதிக்கிறா. அவதான் அந்த டெக்னிக்கை சொல்லிக்கொடுத்தால் நாம் நம்ம வீட்டு மாமிக்கு வேண்டும் போது கட்டிக்க சொல்லுவமில்லியா? அவ எதற்கு இதற்குள். இல்லை, அந்த டெக்னிக்கை தெரிஞ்சுகிட்டா என்ன நாம் அவ மாதிரி அடுத்த வீட்டு மாமியை கடிக்க சொல்லி இல்லாத  ஊர் வம்புக்கு எல்லாம் போற ஆளா?  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வர் சுந்தரம் என்ற நாடகத்தில், நாகேஷ் சர்வர். மேஜை துடைக்கும் கிளீனராக, ஒரு பையன் வரவேண்டியிருந்தது. "எச்சில் இலை எடுக்கும் வேஷத்தைக் கொடுக்கிறீர்களே...' என்று, அந்த வேடம் போடும் பையன், வருத்தப்படுவானோ என்ற எண்ணத்தில், அவ்வேடத்தை நாடகத்தில் நானே போட்டேன். வசனமே இல்லாத வேடம். அந்தக் கிளீனர், மேஜையைத் துடைக்கும் முறையைப் பார்த்து, நாகேஷ் கிண்டல் செய்வது தான் காட்சி.

இந்த கிளீனர் வேடத்தை, சர்வர் சுந்தரம் படத்திலும் நானே செய்ய வேண்டுமென்று டைரக்டர் பஞ்சு விரும்பினார். அதே போல் நானும் நடித்தேன். ஆனால், படத்தின் இறுதித் தொகுப்பு நேரம் வரும் போது, இக்காட்சியை டைரக்டர் பஞ்சு வெட்டி விட்டார். "நீங்களே அந்தப் பாத்திரத்தை நடிக்க வேண்டும்...' என்று, என்னை வற்புறுத்தி நடிக்க வைத்த டைரக்டரே, கடைசியில் இந்தக் காட்சியை வெட்டி எறிந்து விட்டார். எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. கதையின் வேகத்தை மனதில் வைத்து பார்த்து, இக்காட்சி தேவையில்லை என்று வெட்டி விட்டார்.

டைரக்டர் பஞ்சு அடிக்கடி கூறுவார்: படப்பிடிப்பு நடக்கும் போது, இருக்கும் டைரக்டர் வேறு; தொகுப்பு அறையில் கத்தரிக்கோலுடன் உட்காரும் டைரக்டர் வேறு! அங்கு என்னுடைய எண்ணமெல்லாம், விறுவிறுப்பான காட்சிகள் தான்! சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு அங்கே இடமில்லை, என்பார்.

அன்றைக்கு அந்தக் காட்சியை எடுத்த போது, வருத்தப்பட்ட நானே, இன்று இயக்குனர் என்ற முறையில், அதே போல பல விஷயங்களை வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகன் : அப்பா எதுக்கு சட்டம் ஒரே ஒரு மனைவியோட மட்டும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கின்றது??? இது அநியாயமான சட்டம் இல்லையா?

அப்பா : மவனே உனக்கு கல்யாணம் ஆனதும் தெரிஞ்சிக்குவ.... அந்த சட்டம் நமக்கு எவ்வளவு சாதகமானதுன்னு ...

மகன் : அப்பா எதுக்கு சட்டம் ஒரே ஒரு மனைவியோட மட்டும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கின்றது??? இது அநியாயமான சட்டம் இல்லையா?

அப்பா : மவனே உனக்கு கல்யாணம் ஆனதும் தெரிஞ்சிக்குவ.... அந்த சட்டம் நமக்கு எவ்வளவு சாதகமானதுன்னு ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனிப்பெயர்ச்சி- தனிப்பெயர்ச்சி வேதனையானது மட்டுமல்ல, வேடிக்கையானதும்கூட.

திருமணமான புதிதில் காதல் மனைவியை அழைத்துக் கொண்டு முதன்முதலாகக் கோயிலுக்கு போகிறான் கணவன். வழியில் மனைவியின் காலில் ஒரு முள் குத்திவிடுகிறது. அது தன்னுடைய கண்ணில் குத்தியதாகத் துடித்துப் போய் கதறுகிறான்.

""சே, சனியனே! என் மனைவி காலிலா குத்துவே?'' என்று கூறி முள்ளை எடுத்து எறிந்தான். ஆறேழு வருடங்கள் கழிந்தன. அதே கோயிலுக்கு தன் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு மனைவியுடன் சென்றான். அப்போது முள் மனைவியின் காலில் குத்திவிட்டது. அவள் "ஓ'வென கதறிவிட்டாள்.

உடனே கணவன்,""ஏய் சனியனே! முள் இருக்கும் என தெரியும் அல்லவா... பார்த்து வரக்கூடாதா?'' என்று கூறினான். என்ன வாழ்க்கை!

ஆறு ஆண்டுகளுக்கு முன் முள்ளில் இருந்த சனி, அதாவது அன்று முள்ளை சனி என்றான். இன்று அந்த சனி மனைவிக்கு இடம் மாறிவிட்டது. மனைவி சனியாகிவிட்டாள். இந்த சனிப்பெயர்ச்சி எப்படி?

கூறியவர்: சுகி.சிவம்

:( :( :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இளைஞன் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறான். அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் அவனை முந்திச் செல்கிறாள்.

இளைஞன் : “ஏய் எருமை”

பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”.. என்று திரும்பி அவனைப் பார்த்த திட்டிக் கொண்டே செல்கிறாள் திடீரென சாலையைக் கடந்த கொண்டிருந்த எருமை மீது மோத காயமடைந்து விடுகிறாள

நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்ல வருவதை பெண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.

:(:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மளிகைக்கடைக்காரர், தம் கடையில் ஒரு கிளி வளர்த்து வந்தார். அந்தக் கிளிக்கு நிறையப் பேச கற்றுக் கொடுத்துள்ளார். அந்தப் பக்கம் போக வர இருப்பவர்களை நிறைய கிண்டல் செய்யும் கிளி. அந்தக் கடைக்கு நேர் எதிரே உள்ள வீட்டில் ஒரு இளம் பெண் வசித்து வந்தாள். அவள் அந்த கடையைத் தாண்டும் போதெல்லாம், கிளி அவளை' ஹே' என்று கூப்பிடும். அவள் திரும்பிப் பார்த்ததும் 'நீயேன் இவ்வளவு அசிங்கமாக இருக்கிறாய்" என்று கேட்கும். ஒவ்வொரு முறையும் இப்படி நடந்து வந்ததால், பொறுமை இழந்த அந்தப் பெண் கடைக்காரரிடம் முறையிட்டாள். கடைக்காரரும் "சரிமா, கோபப்படாதே. நான் கிளியை கண்டிக்கின்றேன்' என்று கூறி விட்டார். இரண்டு நாட்கள் கழிந்தன. அந்தப் பெண் கடைப் பக்கம் வந்தாள். மனம் குறுகுறுவென்று இருந்ததால், கிளி இப்போது என்ன சொல்லும் ஆவலில் அருகில் போய் நின்றாள். கிளி பேசாமல் இருந்தது. 'சொல்லலையா?' என்று கிளியைப் பார்த்து கேட்டாள். "அதான் உனக்கே தெரியுமே" என்று கூறிவிட்டு கிளி வேறு பக்கம் திரும்பி நின்று கொண்டதாம்......!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அகம்பாவம் கொண்ட இளைஞன் ஒருவன் ஓடிக்கொண்டிருக்கின்ற பேரூந்தில் பாய்ந்து ஏறினான். அப்படியே ஜம்பமாய் எல்லோரையும் பார்த்துவிட்டு நடத்துனரிடம் , என்ன ஜூ வில உள்ளதேல்லாத்தையும்  பஸ்சில கொண்டு போறாய் போல !

நடத்துனர் :  ஓம் நீ ஏறும் வரை ஒரு குரங்குதான் இல்லாமல் இருந்தது !! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahaha :D. Super

ஒரு அகம்பாவம் கொண்ட இளைஞன் ஒருவன் ஓடிக்கொண்டிருக்கின்ற பேரூந்தில் பாய்ந்து ஏறினான். அப்படியே ஜம்பமாய் எல்லோரையும் பார்த்துவிட்டு நடத்துனரிடம் , என்ன ஜூ வில உள்ளதேல்லாத்தையும் பஸ்சில கொண்டு போறாய் போல !

நடத்துனர் : ஓம் நீ ஏறும் வரை ஒரு குரங்குதான் இல்லாமல் இருந்தது !! :lol:

திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்?

திருமண அழைப்பிதழ்கள் மட்டுமல்ல.

ஒருவர் இன்னொருவரிடம்

பொருளொன்றை கடனாகக் கொடுக்கையில்

தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

அரிசி, நெல் முதலானவற்றை

கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள்.

பணமாயிருந்தால் தட்டு.

இது எதனாலென்றால்,

கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில்

மேல்கீழாய் இருந்தாலும்

அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே.

வெறுமனே கையால் கொடுத்தால்,

கொடுப்பவர்கை மேலும்

வாங்குபவர்கை கீழுமிருக்கும்.

இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்

நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே

எப்பொருளை கொடுத்தாலும்

தட்டில் வைத்துக்கொடுப்பதை பழக்கமாகக்கொண்டிருந்தனர்

நம் முன்னோர்கள்.

இதே முறைதான் ஒருவரை அழைப்பதிலும் இன்றுவரை கடைபிடிக்கப்படுகிறது.

# அழைப்பிதழ் கொடுக்கப்போகும்போது

கூடவே தாம்பூலத்தட்டையும் எடுத்துச்செல்லுங்கள்.

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா மாமன்ற கட்டிடத்திலே 52 நுழை வாயில் உண்டு அந்த 52 வாயிலிலும் ஒரு நாட்டின் உன்னதமான உயர்ந்த பழமொழியை எழுதி வைத்திருக்கிறார்கள்.

அந்த 52 வாயிலிலும் மிகப்பெரிய வாயில் தலைவாயில், அந்த தலை வாயிலில் என்ன எழுதி வைத்திருக்கிறான் தெரியுமா ?

" யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற உங்கள் தமிழ் மொழி எழுதப்பட்டு இருக்கிறது.

உலகமே தமிழை உச்சிமீது வைத்து மெச்சிக் கொண்டிருக்கிறது... ஆனால் தமிழர்களே நீங்கள் அதை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள் இது சரிதானா ?

தமிழே உங்கள் அடையாளம் அதை இழக்காதீர்கள் .......

  • கருத்துக்கள உறவுகள்

ஐ நா மாமன்ற கட்டிடத்திலே 52 நுழை வாயில் உண்டு அந்த 52 வாயிலிலும் ஒரு நாட்டின் உன்னதமான உயர்ந்த பழமொழியை எழுதி வைத்திருக்கிறார்கள்.

அந்த 52 வாயிலிலும் மிகப்பெரிய வாயில் தலைவாயில், அந்த தலை வாயிலில் என்ன எழுதி வைத்திருக்கிறான் தெரியுமா ?

" யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற உங்கள் தமிழ் மொழி எழுதப்பட்டு இருக்கிறது.

உலகமே தமிழை உச்சிமீது வைத்து மெச்சிக் கொண்டிருக்கிறது... ஆனால் தமிழர்களே நீங்கள் அதை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறீர்கள் இது சரிதானா ?

தமிழே உங்கள் அடையாளம் அதை இழக்காதீர்கள் .......

உலகத்தை ஒன்றாக இணைக்கும், மகத்தான வார்த்தைகள் இவை!

 

கணியன் பூங்குன்றனாரின் வார்த்தைகள் இவை, அந்தக்காலத்தில் தமிழன் வாழ்ந்த வாழ்வைச் சரியாகப் பிரதிபலித்திருக்கிறார்!

 

நன்றிகள், சுண்டல்!

அந்த பாடல் அரசியல் கலப்பதால் அதன் முதல் இரண்டுவரிகளும் மட்டும் பிரசித்தமாகிறது. ஆனால்  அதன்பின்னால் அறிய வாழ்க்கைத்தத்துவம் பேசப்பட்டும் அவை கவனிக்கப்படுவதில்லை.  இராதாகிருஸ்ணன்  இந்தியாவை முதன் முதல் ஐ.நாவில் பிரதிந்திப்படுத்தும் போது அந்த இரண்டு வரிகளுடந்தான் தனது பேச்சை ஆரம்பித்திருந்தார். அன்பும் வீரமும்தான் தமிழரின் சங்ககால அடிப்படை நியமம். திருநாவுக்கரசர் ஆன்மீகம் பாடும் போது "நாமார்க்கும் குடியெல்லோம்... பணிவோம் அல்லோம்"  என்று பாடுகிறார்.

 

மானிட உறவை பாடும் இந்த காதல் கவிதையும் கனியன் பூங்குறனாரின் தத்துவத்தையே பின்பற்றுகிறது.

 

அறியாத இருவர் தமக்குள் மலர்ந்த அன்பு பற்றிப் பேசுவதாக அமைந்தது இந்த பாடல்.

"என் தாய் யார் என்று உனக்கு தெரியாது..உன் தாயார் யார் என்று எனக்கு தெரியாது.. தந்தை பற்றிய அறிவும் அவ்வளவே.. அவர்களுக்குக்குள் என்ன உறவு? நானும் நீயும் எப்படி பழக ஆரம்பித்தோம் எப்படி ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டோம்? ஆனாலும்... எப்படி செம் மண்ணில் நீர் விழுந்த பின் அந்த செம்மண்ணும் நீரும் கலந்த கலவை போல் நம் நெஞ்சங்கள் பிரிக்க முடியா வண்ணம் கலந்து விட்டன.. "

பாடல்..

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்
யானும் நீயும் எவ் வழி அறிதும்
செம் புலப் பெயல் நீர் போல‌
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

தலைவன் தலைவியிடம் கூறும் குறிஞ்சிப்பாடல்.. செம்புலப்பெயனீரர் என்ற புலவர்..(இந்த பாடலைப் பாடியபின் வந்த பெயராக இருக்கும்..)

 

http://www.narsim.in/2008/11/blog-post_20.html

 

பாடல் காணப்பட்ட இணைப்பை தருகிறேன். ஆனால் அதில் இருக்கும் உதாரணம் இந்தக் காலத்து casual வாழ்வு பற்றியது. பாடலைப்பற்றி முழுமையாக அறிய பார்த்தசாரதியின் பொன்விலங்கு வாசிக்க வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஜி.ஆர் தி.மு.க விலிருந்து நீக்கப்பட்டது எப்படி? -கவியரசர் கண்ணதாசன் நினைவுகளிலிருந்து...

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் உண்மையாகவே அப்போது நடந்ததை வெளிச்சமிட்டு காட்டுகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார்.

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும்.

கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே அவர்கள் இருவருக்கும் தகராறு நடந்து கொண்டிருந்தது.

திடீரென்று ஒருநாள் கருணாநிதி எனக்கு டெலிபோன் செய்து, “என்னய்யா செய்யலாம்” என்று கேட்டார்.

“சரி, அவர் கணக்குத்தானே கேட்கிறார். எல்லா ஊர்களிலேயிருந்தும் கணக்கு அனுப்ப வேண்டும் என்று செயற்குழுவிலே தீர்மானம் போட்டு, செயற்குழுவை ஒத்தி வைத்துவிடுங்கள். கணக்கு வருவதற்கு ஒரு தலைமுறையாகும். அதுவரை என்ன செய்வார் என்று பார்க்கலாம்,” என்று நான் சொன்னேன்.

செயற்குழுவுக்கு முதல் நாள் நண்பர் கருணாநிதி அவர்கள், எனக்கு டெலிபோன் செய்து, “இல்லை இல்லை. அது ஒன்றும் நடக்காது. இன்று ஒரேடியாக ஒழித்துவிட வேண்டியதுதான்” என்று சொன்னார்.

நான் சொன்னேன், “சில மக்கள் பின்னணி இருக்குமே” என்று.

“என்ன, பத்துப்பேர் கத்துவான். பார்த்துக் கொள்ளலாம்” என்றார்

மறுநாள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நண்பர் ‘சோ’ அவர்கள் எனக்கு டெலிபோன் செய்தார்.

“தெரியுமா விஷயம்?” என்று கேட்டார்.

“என்ன?” என்றார். “தெரியாது” என்றேன்.

“எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்” என்றார்.

“இருக்காதே” என்றேன்.

“இப்பொழுது தான் எனக்குச் செய்தி வந்தது” என்றார்.

இது இரண்டு மணிக்கு நடந்திருக்கும் என்றால், எனக்கு இரண்டு ஐந்துக்கெல்லாம் இந்தச் செய்தி வந்தது.

அவர் டெலிபோனை வைத்த உடனேயே, டெலிபோன் மணி அடித்தது.

கருணாநிதி பேசினார்: “முதல் முதலாக உனக்குத் தானய்யா சொல்லுகிறேன். கேள்விப்பட்டாயா?” என்றார்.

“உங்களுக்கு முன்னாலே சோ போன் பண்ணினார் அய்யா” என்றேன்.

“என்ன நினைக்கிறாய்?” என்றார்.

“கொஞ்சம் கலகம் இருக்குமே” என்றேன்.

“பார்த்துக் கொள்ளலாம்”என்றார் அவர். “என்ன, பத்து ஊரிலே கலகம் செய்வார்கள். பார்ப்போம்” என்றார்.

ஆனால் அவர் போட்ட கணக்குத் தவறு. மக்கள் பின்னணி என்பது எழுச்சியாக எழுமானால் காரண காரியங்கள் இன்றியே அது பெருங்கூட்டமாகத் திரளும் என்பதை நான் பல கட்டங்களில் பார்த்திருக்கிறேன்.

1971 பொதுத் தேர்தலே சான்று.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு மிகப் பெரிய பின்னணி இருக்கிறது என்பதை கருணாநிதி கண்டு கொள்ள முடிந்தது.

இந்தச் சூழ்நிலையில், எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகும் கூட மாநில சுயாட்சி கோஷமாக ஆக்கி, வாயில் வந்தவாறு இந்திரா காந்தியைத் திட்டவும், காங்கிரஸைத் திட்டவும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தயாரானார்கள்.

திராவிட முன்னேற்றக் கழக்த்தின் கோயமுத்தூர் மாநில மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கருணாநிதியினுடைய மகனே பேசும்போது, என்னுடைய அப்பா எல்லா விதவைகளுக்கும் ‘பென்ஷன்’ கொடுக்கிறார். இந்திராகாந்தி தேவையானால் வந்து வாங்கிக் கொள்ளட்டுமே” என்று பேசியதாகச் செய்தி வந்தது.

ஆசைதம்பி பேசும்போது இந்திராகாந்தியை, “என்ன இவள், எலெக்‌ஷன் நடத்தினால் நடத்தட்டும், இல்லா விட்டால் நாம் நடத்துவோம்” என்று பேசினார். அதே மாதிரி மற்றவர்களும் பேசினார்கள்.

இவையெல்லாம் சி.பி.ஐ. ரிப்போர்ட்டாக இந்திரா காந்திக்குப் போய்ச் சேரும் என்று அவர்கள் யாரும் அப்போது கருதவில்லை.

1970 – 1974 க்கு இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர். அரசியல் தலைவரானதை நான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அரசியலில் ஒரு கட்சியைத் துவக்க வேண்டும், தலைவராக வேண்டும் என்கின்ற விருப்பம் எப்போதுமே எம்.ஜி.ஆருக்கு இருந்ததில்லை என்பது எனக்குத் தெரியும்.

சினிமா உலகத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை விட்டு விடக்கூடாது, அரசியலில் தன்னுடைய பிடியை விட்டு விடக் கூடாது என்றுதான் அவர் நினைப்பாரே தவிர, முழு அரசியல்வாதியாக முழு நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ள அவர் எப்போதும் விரும்புவதில்லை.

ஆனால் அவரை வலுக்கட்டாயமாக அரசியலில் ஒரு தலைவராக்கிய பெருமை நண்பர் கருணாநிதிக்கு உண்டு. கட்சியிலிருந்து அவரை விலக்கியதன் மூலமாக ஏராளமான கூட்டத்தை அவர் பக்கத்தில் ஓடவிட்ட பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் போய் விட்டார்கள்.

முதன் முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1961 ஏப்ரலில் பிளவு ஏற்பட்டது.

அந்தப் பிளவுக்கு நானும் சம்பத்தும் காரணமாக இருந்தோம். எங்களைப் பின்பற்றி வந்தவர்கள் மாவட்டங்களில் நல்ல தலைவர்களாக இருந்தார்களே தவிர, தொண்டர்களாக இல்லை. ஏராளமான தொண்டர்கள் தி.மு.கழகத்திலிருந்து எங்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களுக்குக் கிடைத்ததெல்லாம் காங்கிரஸ் தொண்டர்களும், திராவிடக் கழகத் தொண்டர்களும்தான்.

ஆனால் எம்.ஜி.ஆர். விலக்கப்பட்ட பிற்பாடு, அவருக்குப் பின்னணியாக நின்றவர்கள் அனைவரும் மிக அற்புதமான தி.மு.கழகத் தொண்டர்களாக இருந்தார்கள்.

கட்டுப்பாடற்ற, முறையாக செயல் திட்டமற்ற தொண்டர்கள் தான் என்றாலும், ஒரே தலைவரின் கீழே திரண்டவர்கள். எம்.ஜி.ஆரிடம் அவர்கள் உயிரையே வைத்திருந்தார்கள்.

அந்த முறையில் எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே அனைவரும் போனார்கள் என்பது மட்டுமல்லாமல், அரசியல் கட்சியில் ஒரு தலைவர் நீக்கப்பட்டார் என்பதற்காக நாடு முழுவதிலும் கொந்தளிப்பு ஏற்பட்ட சம்பவம் இது இரண்டாவது முறையாகும்.

இந்திராகாந்தி நீக்கப்பட்ட போது முதன் முதலில் எப்படி நாடு முழுவதிலும் ஒரு எதிரொலி ஏற்பட்டதோ, அப்படியேதான் எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டவுடனே தமிழ்நாடு முழுவதிலும் எதிரொலி ஏற்பட்டது.

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் போலவே ஒரு மாபெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. ஆங்காங்கே கார்களையும், பஸ்களையும், லாரிகளையும், நிறுத்தி அதில் எழுதத் தொடங்கினார்கள்.

சின்னச் சின்னப் பள்ளி மாணவர்களிலேயிருந்து கல்லூரி மாணவர்கள் வரை, அதில் ஈடுபட்டார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். கை வண்டி இழுப்பவர்களில் இருந்து, கடலை விற்போர்கள் வரையில் ஆத்திரப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற ஒரு பெரிய இயக்கத்தைத் துவக்க வேண்டிய நிர்பந்தம் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது.

அப்படித் துவங்கியவுடனே அது தமிழக அளவில் பெரிதாக வளர்ந்ததும் மிகச் சுலபமாக நடந்தது. வளர்ந்தது என்று சொல்வதைவிட வளர்ந்த நிலையிலேயே அது உருவாயிற்று என்று சொல்வது பொருந்தும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் கட்சியாகத் தமிழகத்தில் விளங்கும் என்று நான் எதிர் பார்த்ததுண்டு. அது நியாயமாக நடந்துவிட்டது.

அதைச் சரிக்கட்டவும், ‘அப்படியொன்றும் இல்லை’ என்று காட்டவும் நண்பர் கருணாநிதி பல்வேறு திசையில் பிராயணம் செய்து பார்த்தார். பல ஊர்களில் அவர் பேசவே முடியாமல் போயிற்று.

எம்.ஜி.ஆர். மீது ஜனங்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இருந்த பிரியம் என்பது சாதாரணமானதாக இல்லை.

அதற்குக் காரணம் நியாயமா இல்லையா என்று ஆராய்வதைவிட, ஏதோ சில காரியங்களை அவர் செய்திருக்கிறார், செய்யக்கூடியவர், நியாயமானவர், நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்றெல்லாம் மக்கள் எண்ணினார்கள். அப்படி எண்ணிய மக்களின் நம்பிக்கை வீண் போகவில்லை.

கருணாநிதியின் மீது மக்களுக்கிருந்த நல்ல பெயரை அதுதான் போக்கடித்தது.

எம்.ஜி.ஆரை அவர் விலக்காமல் இருந்திருந்தால் நிலைமைகள் வேறுபட்டிருக்கக் கூடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைக் தவிர வேறு யாரும் ஆட்சிக்கு வருவதென்பது இன்னும் ஒரு 25 ஆண்டுக் காலத்துக்கு நடக்காமலேயே போயிருக்கும்.

அதனால் எம்.ஜி.ஆருடைய விலகம் காரணமாக, எம்.ஜி.ஆர் விலக்கப்பட்டதன் காரணமாக, திராவிட முன்னேற்றக் கழகம் மெலியும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற கட்சி ஓங்கி வளரும் என்று நம்பினேன்.

மற்ற நடிகர்களைப் போல் அவரும் ஒரு நடிகர்தான் என்றாலும், அரசியல் ஈடுபாட்டில் அவருக்கு இருந்த பிடிப்பின் காரணமாக, சில அரசியல் தத்துவங்களையும் அவர் உணர்ந்து கொண்டிருந்தார்.

விஷயங்களுக்குப் பதில் சொல்வதில் கெட்டிக்காரராக விளங்கினார். பிரச்சனைகளுக்குப் பரிகாரம் தேடுவதிலும் கெட்டிக்காரராக விளங்கினார். ஒரு கட்சியை நடத்தக் கூடிய சாமர்த்தியம் தனக்கு இருக்கிறது என்பதையும் காட்டினார்.

“பிரித்தலும் பேணிக் கொளலும் பிரித்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு”

- என்றும் அவர் காட்டினார்.

அவர் கட்சிக்குள் மிக முக்கியமான ஆட்களும் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தில் அங்கம் வகித்தவர்களில் பட்டதாரிகள் அதிகமாக இருந்தார்கள். அதே அளவுக்கு பட்டமோ, படிப்போ இல்லாத கிராம வாசிகளும் அதிகமாக இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு எரிச்சல் அடைந்தும் கூட இந்த வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை

எம்.ஜி.ஆருக்கு எதிராகக் கருணாநிதி அதிகார பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட அவரால் அவருடைய வளர்ச்சியை நிறுத்த முடியவில்லை.

யாரோட உறவு கொண்டால் எந்த எதிரியைத் தீர்த்துக் கட்டலாம் என்பதில் கருணாநிதியைவிட எம்.ஜி.ஆர் கெட்டிக்காரராக விளங்கினார். கருணாநிதிக்கு இல்லாத சில புதிய திறமைகளும், எம்.ஜி.ஆருக்கு இருந்ததாக அந்தக் காலங்களில் கருதப்பட்டது. உண்மையாகவே ஒரு கட்டத்தில் ஆகிவிட்டது.

எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது.

ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.

திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

இந்த நேரத்தில் நண்பர் கருணாநிதி அவர்களைப் பற்றியும் தெளிவாகச் சில விஷயங்களைச் சொல்லி விடுவது நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏற்கனவே ‘வனவாச’த்திலும் மற்ற இடங்களிலும் நான் அவரைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்றாலும், அரசியல் ரீதியாக இரண்டொரு விஷயங்களை நான் கூறியாக வேண்டும்.

கருணாநிதி அரசியல் நிர்வாகத்தில் மிகுந்த திறமைசாலி. ‘எங்கே எந்தத் தொண்டன் இருக்கிறான், எந்த மாவட்டத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள், எந்த ஊரில் கிளை இருக்கிறது இல்லை’ என்கிற அனைத்தும் அவர் விரல் நுனியில் அடங்கி இருந்தன. அவ்வளவு திறமைசாலி.

பேச்சில் ஒருவரை வளைக்க வேண்டும் என்றால் அவரால் வளைக்க முடியும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர்களை அழ வைக்க வேண்டும் என்றால் அழ வைக்க முடியும். யாரைப் பக்கத்திலே இழுக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களை சாகசம் பண்ணியாயவது வரவழைத்து விடுவார், உள்ளே இழுத்து விடுவார்.

கம்யூனிஸ்டு கட்சியில் இருந்துகூட ஆட்களை இழுத்துக் கொள்ளக் கூடிய சாமர்த்தியம் அவருக்கு மட்டுமே உண்டு. எந்தக் கட்டுப்பாட்டையும் உடைத்து ஆட்களை இழுக்கக் கூடியவர்.

எம்.ஜி.ஆர். விஷயத்தில், யானை தடம் தப்பியதைப் போலத் தப்பினாரே தவிர, மற்றபடி அவருக்கு அரசியல் சாமர்த்தியம் என்பது மிக அதிகம்.

நிர்வாகத்தில் ஏற்கனவே இருந்த எல்லாரையும் விட அவர் திறமைசாலி என்று செக்ரட்டேரியட்டில் இன்றைக்கும் எல்லாரும் ஒப்புக் கொள்கிறார்கள்

ஆனால் அவரைப் பொறுத்தவரைக்கும் இருந்த மிகப் பெரிய பலவீனம், ‘பணம், பதவி’ இந்த இரண்டும் தன்னுடைய குடும்பத்திற்குப் போகத்தான் மற்றவர்களுக்கு என்று, ஒன்றை வைத்திருந்தார்.

இந்த எண்ணம் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் இருந்ததில்லை. இந்தப் பணமும், பதவியும், தனக்கும் தன் வீட்டுக்கும் என்று அவர் கருதியதில்லை.

ஆனால் கருணாநிதியைப் பொறுத்தவரை ஒரு பதவி காலியானால் அதில் மாறனைப் போடலாமா, மற்ற நெருங்கிய நண்பர்களைப் போடலாமா, உறவினர்களைப் போடலாமா என்று தான் கருதுவார். பணம் ஏதாவது கிடைக்குமானால் குடும்பத்திற்கு ஒதுக்கிக் கொண்டு மீதியில்தான் மற்றவர்களுக்கு செலவழிக்கலாம் என்று கருதுவார்

அதே நேரத்தில் நானும் அவரோடு 25 வருடங்களாகப் பழகியிருந்தேன். காரில் ஏறி உட்கார்ந்தாலோ, கடை வீதியில் இறங்கினாலோ, யாராவது பிச்சைக்காரர்கள் வந்து காசு கேட்டாலோ நாலணா போடலாம் என்கின்ற எண்ணம் ஒருபோதும் இவருக்கு வந்ததில்லை. அப்படிப் போடுவது பயனற்றது என்றும் அவர் கருதுவார்.

ஆனால் எம்.ஜி.ஆர். அவர்களைப் பொறுத்துவரைக்கும் 10,000 கொடுக்க வேண்டிய இடத்தில் 20,000-மாவது கொடுத்து நல்ல பேர் வாங்க வேண்டும் என்று அவர் கருதுவார்.

இரண்டு பேருக்கு இடையிலே பேதம் இது என்றால் கருணாநிதியினுடைய சுபாவம் இது

பணத்தையும் பதவியையும் பெரிதாக நினைத்த காரணத்தினால்தான், அந்த பலஹீனத்தினால்தான், மிகப் பெரிய அவருடைய பலங்களெல்லாம் அடிப்பட்டுப்போய் கடையில் அவருக்குப் பல சிரமங்கள் தோன்றின என்று நான் கருதுகிறேன்.

by ஜெகதீஸ்வரன்

ஆதாரம் -கவிஞர் கண்ணதாசன் (நான் பார்த்த அரசியல்)

நன்றி: கண்ணதாசன் வலைப்பக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.