Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் தேர்தல் இன்னும் சில நாட்களில் நடைபெற இருக்கின்றது.......

மக்களின் முன்னாள் இரண்டு பெரும் அரசியல் சக்திகள் களத்தில் நிற்கின்றன ஓன்று வடக்கின் தமிழர்களுக்கு தேவை வெறும் அபிவிருத்தியும் வேலை வாய்ப்புகளுமே என்றும்

மற்றது வடக்கு கிழக்கு இணைப்பு தமிழரின் சுய நிர்ணயம் மற்றும் வடக்கு என்பது தமிழர்களின் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களின் தாயகம், இவற்றுடன் கூடிய துரித அபிவிருத்தி என்று கூறி களம் காண்கின்றன மக்களுக்கு பல சந்தேகங்கள் இருந்தாலும் ஏகோபித்த பெரும்பான்மை தெரிவாக தமிழ் தேசிய கூட்டமைப்பே இருக்க வேண்டும் .....

தமிழர்களின் இருப்பே கேள்விக்குறியாகி இருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் தமிழர் கட்சிகளின் கூட்டமைப்பிற்கு பின்னால் மக்கள் அணிதிரண்டு தங்களின் தாகத்தை சர்வதேச நாடுகளுக்கு தெரிவிக்க வேண்டும்

அபிவிருத்தி என்பது ஒரு அரசு மக்களுக்கு செய்ய வேண்டிய அத்தியாவசிய செயல்த்திட்டம் அபிவிருத்தியை காட்டி தமிழர்களை தமிழர்களின் கனவுகளை அவர் தம் தியாகங்களை வாங்கலாம் என்று நினைக்கும் ஆளும் வர்கத்தின் கோர முகத்தில் வடக்கு மக்கள் ஓங்கி அடிக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் தேர்தல் என்ற பெயரில் மக்கள் முன்னாள்...

வடக்கு மக்கள் செய்வார்களா?

கிழக்கு மக்கள் போல தமிழ் தேசிய கூட்டமைப்பை அமோகமாக வெற்றியடைய வைத்து தங்கள் தங்கள் தீர்ப்பை கூறுவார்களா?

-----------

சுண்டல்

Edited by SUNDHAL

  • Replies 3.2k
  • Views 178k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எத்தகைய  இடர்களும் சோதனைகளும்  பயமுறுத்தல்களும் அழிவுகளும் வந்தபோதும்

வரலாற்றில்  தமிழ் மக்கள்  சந்தித்ததேர்தல்கள்  அனைத்திலுமே சரியான  முடிவுகளையே  எடுத்திருக்கின்றனர்.

இந்த முறையும் நீங்கள்  விரும்புவது பொலவே அமையும் தம்பி.

நன்றி  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"மகன் வேலைக்கு சென்றதும் தந்தை ஓய்வு பெறுவார்...

ஆனால் தாய்க்கு என்றும் ஓய்வு இல்லை. கணவனுக்காக உழைப்பாள்...

மகனுக்காக உழைப்பாள்...

பேரன், பெயர்த்திக்காக உழைப்பாள்...

அவளின் இறுதி மூச்சு இருக்கும் வரை அனைவருக்காகவும் உழைத்துக்கொண்டே இருப்பாள்...!

"அம்மா."

  • கருத்துக்கள உறவுகள்

"மகன் வேலைக்கு சென்றதும் தந்தை ஓய்வு பெறுவார்...

ஆனால் தாய்க்கு என்றும் ஓய்வு இல்லை. கணவனுக்காக உழைப்பாள்...

மகனுக்காக உழைப்பாள்...

பேரன், பெயர்த்திக்காக உழைப்பாள்...

அவளின் இறுதி மூச்சு இருக்கும் வரை அனைவருக்காகவும் உழைத்துக்கொண்டே இருப்பாள்...!

"அம்மா."

அம்மா என்றவள் எப்போதுமே, உழைத்துக்கொண்டே இருப்பாள் என்பது சரி!

 

அப்பா என்பவரும் அம்மாவினது 'எடு பிடியாக' கடைசி வரையும், உழைத்துக் கொண்டு தான் இருப்பார்! :D

 

ஆனால் அவரை ஒருவருமே, பெரிதாகக் கண்டு கொள்வதில்லை! :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

It's for you pungai Anna

ஆண்--அறிவின் அம்சம்.

ஆண்--ஆளுமை விளக்கம்.

ஆண்--இயல்பே வீரம்.

ஆண்--ஈவின் ஈரம்.

ஆண்--உறுதியின் தீரம்.

ஆண்--ஊழின் ஊழ்.

ஆண்--எரி தீ உழைப்பு.

ஆண்--ஏர் முனைக் காப்பு.

ஆண்--ஒருங்கு சேர் பிணைப்பு.

ஆண்--ஓய்விலா இயக்கம்.

ஆண்--ஔவியம் போற்றான்.

ஃதே ஆணின் அருமை.

நானும் ஒரு ஆண் பெண் பேதம் கண்டு பிடித்தேன்.

 

aa-in = (செல்வம், மாடு, வணகத்துக்குரிய) உள்ளே

pE-in= (பயங்கரம், மடமை, அழிவு) உள்ளே

 

படிப்பவர்கள் தயவு செய்து நெடுக்கரிடம் இதைக் காட்ட வேண்டாம். :lol:

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"பரிட்சையில ஃபெயில் ஆயிட்டேன்னு வருத்தப்படுறவனும், ஃபிகர் கழட்டி விட்டுடுச்சுன்னு ஃபீல் பண்றவனும் நம்ம சங்கத்திலேயே இருக்கக் கூடாது..."

வருத்தப்படா வாலிபர் சங்கம்

Australia

:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எல்லாம் எப்பவும் எங்கயும் எதை பற்றியுமே கவலைப்படாத ஆக்கள்

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

AUSTRALIA

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எல்லாம் எப்பவும் எங்கயும் எதை பற்றியுமே கவலைப்படாத ஆக்கள்

இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

AUSTRALIA

 

 

உண்மைதான்

அடுத்த படியைத்தாண்டியவன்

தாண்ட விரும்புபவன்

கவலைப்படவேண்டிய விடயம் இது...... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களே ஒரு சந்தேகம்

பொதுவா நல்லூர் கோயில சுத்தி இருக்கிற பொண்ணுங்க அழகா இருக்கிறதுக்கு காரணம் என்ன ? முருகனோட மகிமையா? :D

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே ஒரு சந்தேகம்

பொதுவா நல்லூர் கோயில சுத்தி இருக்கிற பொண்ணுங்க அழகா இருக்கிறதுக்கு காரணம் என்ன ? முருகனோட மகிமையா? :D

 

 

ஏன் ராசா

கோயிலைச்சுத்தி  இருப்பது எதுவும்  உங்களுக்கு   தோதாக  வருகுதில்லை என்ற  ஏக்கமா??? :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்களே ஒரு சந்தேகம்

பொதுவா நல்லூர் கோயில சுத்தி இருக்கிற பொண்ணுங்க அழகா இருக்கிறதுக்கு காரணம் என்ன ? முருகனோட மகிமையா? :D

 

உதாரணத்துக்கு ஒரு படம் போடமுடியுமா? ஏனெண்டால் ஆராய்ச்சி செய்ய லேசாயிருக்கும். :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அஸ்க்கு புஸ்க்கு நாங்க கஷ்டப்பட்டு பிடிப்பமாம் நீங்க easy ஆ பாக்க நிக்குறீங்க

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்க்கு புஸ்க்கு நாங்க கஷ்டப்பட்டு பிடிப்பமாம் நீங்க easy ஆ பாக்க நிக்குறீங்க

 

 

வாழ்த்துக்கள்  ராசா

(சரி

கடலை  இனி  விலை குறையப்போகுது :lol: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ அண்ணே இதெல்லாம் ஜஸ்ட் கடலை போட தான் சரி நாங்க இப்போதைக்கு எதுக்குள்ளையும் பூடுப்படுறதா இல்லை

மக்களே ஒரு சந்தேகம்

பொதுவா நல்லூர் கோயில சுத்தி இருக்கிற பொண்ணுங்க அழகா இருக்கிறதுக்கு காரணம் என்ன ? முருகனோட மகிமையா? :D

நீங்க எங்கள் கோவில் பக்கம் வர இல்லை.

 

"ஏண்டா இப்படி கோவில், குளம் என்று ஒரே சாமிப் பைத்தியம்" ஆகிட்டியே என்னு பார்க்கிறவர்கள் ஒரே கவலை.  :(

 

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது எங்கே அண்ணே இருக்கு

மல்லகாத்தில இருக்கிற அந்த பிள்ளையார் கோயிலா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரொமான்டிக் கதை :

நான் அவளை முதல் முதலாக பார்த்தது ரேஷன் கடையில்!

அவளும் ரேஷன் எடுக்க வந்திருந்தாள் , நானும் ரேஷன் எடுக்கவே போயிருந்தேன் .

-ஒற்றுமை நெம்பர் 01

நான் அவளை ரெண்டாவது அவளும்

சாமிகும்பிட வந்திருந்தாள், நானும்

சாமி கும்பிடவே போயிருந்தேன் .

- ஒற்றுமை நெம்பர் 02

மூன்றாவது தடவை பார்த்தது லைப்ரெரியில் நான் புக் எடுக்க போயிருந்தேன்!

என்ன ஆச்சரியம்? அவளும் புக் எடுக்கவே வந்திருந்திருந்தாள் .

-ஒற்றுமை நெம்பர் 03

இப்படி, கடைத்தெரு, பீச், மார்கெட், பேங் என எங்கும், நான் எதுக்கு போகிறேனோ அவளும் அதே காரணத்துக்காக வந்தாள்!

எங்கள் ரெண்டுபேருக்கும் இடையில் இப்படி ஒரு அபூர்வ ஒற்றுமை இருப்பதை ஆச்சரியப்பட்டேன் !

அவளும் ஆச்சரியப்பட்டாள் !

நாம கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒத்துமையா இருக்கலாம்னு எனக்கும் - அவளுக்கும்

தோணிச்சுது!!

அவளாக வந்து காதலை சொல்லட்டும்னு ' நான் நினைத்தேன்!

அவளும் ' அவராக

வந்து காதலை சொல்லட்டும் ' என

நினைத்துவிட்டாள் !

இதனால் ரெண்டு பேரோட லவ்வும் ரொம்ப நாளா சொல்லப்படாமல் இருந்திச்சு!

ஒருநாள் போனாப் போகுதுன்னு, நானே வலியப்போய் " மாலினி ஐ லவ் யூ " என்றேன்!

அதுக்கு அவள் " என்பேரு ஜீவமாலினி! என்னோட பேர்ல பாதிதான் உனக்கு தெரியுமா ?

அப்டீன்னா உன்னோட லவ்வும் பாதிதானா? " என்று மொக்கை போட்டாள் .

அதை நான் தாங்கிகிட்டேன்! ( எல்லாம் சுயநலம்தான் )

ஆமா நீ என்ன வேலை பார்க்குறேனு கேட்டாள் .

நான் வெட்டியாக இருந்ததை வெளிப்படையாக சொன்னேன் .

" அக்கா தங்கச்சி? "

" மூணு பேரு " "

அவங்களுக்கு கல்யாணம் ஆச்சா? "

" இன்னும் இல்லை " "

ஓகே ரெண்டு மாசம் கழிச்சு பதில் சொல்லுறேன் "

அவள் கிளம்பிவிட்டாள்

!

எனக்கோ ரெண்டு மாசம் ரெண்டு வருஷமா போனது .

ஆனா அடுத்த, ஒரு வாரத்திலேயே அவள் என்னை முகமலர்ச்சியோடு பார்க்க வந்தாள்!

இந்தக்கதையின் தொடர்ச்சியை என்னால் சொல்ல முடியாது!

காரணம், நான் படிச்ச பேப்பர் துண்டில் இவ்வளவும் தான் இருந்திச்சு! பின்ன ஐம்பது பைசாவுக்கு வாங்கினா முழுப்பேப்பர்லயா கொடுப்பான் .

இத்துனூண்டு சின்ன தாள்ல தான் கொடுப்பான் . . .

நீதி : சுண்டல் வாங்கும் போது கொஞ்சம் அதிகமாவே வாங்குங்க . . .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....

"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"

"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"

"அதுக்கில்லைங்க..."

"அதான் சொல்றேன்ல"

"குழந்தைங்க ..."

"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"

"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க‌ கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக அமெரிக்கா செனட் சபையின் செல்வாக்கு மிக்க உறுப்பினர் ஜோன் மெக்கெயின் செனட் சபையின் வெளிவிகார குழு முன் உரையாற்றும் போது கூறி இருக்கின்றார்

ஜோன் மெக்கெயின் மிகவும் ஷக்தி வாய்ந்த ஒரு செனட் உறுப்பினர் என்பது குறிப்பிட தக்கது

சொல்லி மட்டும் என்னாவப்போவுது?. ஈராக் மாதிரி ஒரு போடு போட வேண்டியதுதானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கும் ஆணுக்கு தேவையான தகுதிகள் :-

****************************************

♣- ► நிச்சயமா நல்லவனா நடிக்க தெரியணும்

♣- ► நிறைய பொய் சொல்லணும்

♣- ► நண்பர்களுடன் இருக்கும் நேரத்தை இழக்க தயாரா இருக்கணும்

♣- ► நிறைய மொக்கை ஜோக்ஸ் தெரியணும்

♣- ► பொண்ணுங்க போடுற மொக்கைய தாங்கிக்கிற நல்ல மனசு வேணும்

♣- ► பொண்ணுங்க என்னதான் தப்பு பண்ணினாலும் கண்டுக்காத நல்ல மனசும் அவசியம்

♣- ► காதலிக்கும் பொண்ணுக்கு பிடிச்ச கலர் ..நடிகர் ..நடிகை .. பாட்டுஎல்லாவற்றையும் உங்களுக்கும் பிடிக்கிறது போல மனச மாத்திக்கணும்

♣- ► நைட்டில கண் முழிக்க தயாரா இருக்கணும் ..

♣- ► மொபைல்க்கு பில் கட்ட /ரீச்சார்ச் பண்ண லம்பா ஒரு அமவுண்ட்ரெடி பண்ணனும் ...

அடி வாங்கும் உடல் திறன் மிக அவசியம்

(அவளுக்கு அண்ணன் இருந்தா /அப்பா ரவுடியா இருந்தா )

♣- ► இத்தனையும் நாம பண்ண அவங்க லாஸ்ட்ல டாட்டா காட்டிட்டு இன்னொரு பையனை கலியாணம் பண்ணி போகும் போது

"எங்கிருந்தாலும ் வாழ்க " பாட்டு கண்டிப்பா பாடனும் ...

அந்த மனசுதான் வெரி இம்போர்டேன்ட் ...

♣- ► நிச்சயமா ஒரு டைலாக் மனப்பாடம் பண்ணனும் .......

♣- ► "திரிஷா இல்லன்னா திவ்யா.. ... "

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தி டாட்டா காட்டிடடுப் போனாலும், இன்னொருவனுக்கு டாட்டா காட்டிட்டு ஒரு பொண்ணு உங்ககிட்ட வரத்தானே போறா.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

* சரஸ்வதியின் கையில் உள்ள ஏட்டுச்சுவடியும், ஜெபமாலையும் வித்தை, ஞானத்தின் அடையாளங்கள். வித்தை என்னும் படிப்போடு கடவுளை அறியும் ஞானமும் நமக்கு வேண்டும் என்பது இதன் பொருள்.

* கடவுளை வழிபடாவிட்டால் படித்துப் பயனில்லை என்பதை திருவள்ளுவர், ""கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்'' என்கிறார்.

* மூன்றாம் பிறைக்கு கலைநிலா என்று பெயர். கலை என்றால் வளர்வது. சரஸ்வதி தலையில் மூன்றாம் பிறையைச் சூடியிருக்கிறாள். இதற்கு காரணம் கலைகள் இடைவிடாமல் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை உணர்த்தவே!

* வெண்தாமரை, வெண்ணிற அன்னம், ஸ்படிகமாலை, பிறைநிலா, வெள்ளை ஆடை ஆகியவற்றைக் கொண்ட கலைவாணியை தியானிப்பவர்களின் மனதில் தூய்மையும் அமைதியும் நிலைத்திருக்கும்.

காஞ்சிப்பெரியவர்

(இன்று சரஸ்வதிபூஜை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்றும் இன்றும் என்றும்

சிங்களவன் மாறவில்லை

மாறப்போவதும் இல்லை

நான் மட்டும் மாறுவேனா

மரணத்தின் பிடிக்குள் நின்றாலும்

மார்தட்டி சொல்வேன் தமிழனென்று

அன்றும் கொடியவர் கூட்டம்

அடங்கவில்லை இன்றும் அவர்கள்

அடங்கவில்லை என்றும் அவர்கள்

அடங்கப்போவது இல்லை

அவனை அடக்காமல் நாமும்

அடங்கப்போவது இல்லை

Thanks: யாழில் இருந்து முகபுத்தகம் ஊடக ஒரு ஊடகவியலாளர்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.