Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?

Featured Replies

என்னுடைய Blogல் நான் எழுதியிருந்த கருத்துகள் இவை :

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பா?

நான் பல கருத்துக் களங்களில் கருத்தெழுதி வருபவன்... அதுபோல களங்களில் எல்லாம் சில ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு எதிராக மிக மோசமான கருத்துகளை ஆபாச மொழியில் வைப்பதை பார்க்கும் போது ஈழத்தமிழர்கள் இந்தியாவை எதிரிகளாக நினைக்கிறார்களோ என்று நினைப்பேன்.... எந்த இந்தியனும் ஈழத்தமிழன் மீது வெறுப்பு ஏதும் கொள்ளாத போது அவர்கள் ஏன் இது மாதிரி என்றும் நினைப்பேன்... புலிகள் வேறு, ஈழத்தமிழ் மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் இந்தியர்களுக்கு இருக்கும் அளவுக்கு ஈழத்தமிழர்களுக்கு இந்திய அரசியல் வேறு, மக்கள் வேறு என்று பிரித்துப் பார்க்கத் தெரியாதோ என்றும் நினைப்பேன்...

ஆனால் என் நினைப்புக்கு வேட்டு வைக்கும் வகையிலும் சில மனிதநேயம் கொண்ட ஈழத்தமிழர்களை இணையத்தில் சந்தித்தேன்... அவர்கள் இந்தியா மீதும், தமிழகம் மீதும், தமிழ் மக்கள் மீதும் பெரும் அன்பு கொண்டிருக்கிறார்கள்... ஈழத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் கல்வி கற்று இன்று ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், கனடாவிலும் வசதியாக வாழும் அவர்கள் இந்தியாவுக்கு தங்கள் நன்றி கடனை செலுத்தத் தவறுவதில்லை... தங்களுக்கு வாழ்வு கொடுத்த இந்தியாவை அவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்றும் புரிந்து கொண்டேன்....

ஆனாலும், சில ஈழத்தமிழர்களுக்கு இந்தியா மீது வெறுப்பு ஏன்? என்று சிந்தித்துப் பார்த்தபோது அவர்கள் தரப்பு நியாயமும் எனக்கு புரிந்தது... உதாரணத்திற்கு யாழ் எனும் கருத்துக் களத்தில் பல தோழர்கள் இந்தியாவையும், இந்திய அரசியல் வாதிகளையும் மிக மோசமாக அர்ச்சித்து வந்தனர்... அதை கண்ட என் ரத்தம் கொதித்தது... பதிலுக்கு நானும் கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற அடிப்படையில் அவர்கள் தேசியத்தை அவமானப்படுத்தும் வகையில் கருத்துகளை வைத்தேன்... அந்தக் களத்தின் பொறுப்பாளர் திரு. மோகன் அவர்கள் எனக்கு தனிமடல் மூலம் ஏன் இதுபோல செய்கிறீர்கள் என்று கேட்டிருந்தார்... நான் பதில் அனுப்பும் போது இந்திய தேசியம் அவமானப்படுத்தப்படுவது உங்களுக்கு சந்தோசமா? என்று கேட்டிருந்தேன்.... அதற்கு அவர் கொடுத்த பதிலில் 87 - 90ஆம் ஆண்டுகளில் நடந்த சில சம்பவங்களை (அவரே நேரடியாக அனுபவப்பட்டிருக்கிறார்) எடுத்துச் சொன்னார்... குறிப்பாக அவருக்கு மிகவும் தெரிந்த பெண் ஒருவர் இந்திய ராணுவத்தால் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்டதை எடுத்துச் சொன்னார்.... அதனாலேயே பல ஈழத்தமிழர்கள் இந்தியா என்றாலே வெறுக்கின்றனர்... அது போல சம்பவங்களை எப்படி மறக்க முடியும் என்றும் கேட்டிருந்தார்....

அவர் தரப்பில் பார்த்தால் அது நியாயம் தான்... 80 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையே நாம் இன்னும் மறக்கவில்லை... வெள்ளையன் என்றாலே நாம் வெறுப்பதற்கு அதுவும் ஒரு காரணம்... 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை அவர்கள் எப்படி மறப்பார்கள்? மறக்கச் சொல்லுவதும் நியாயம் இல்லையே?

இருந்தாலும் கூட அவர்கள் அந்த அநியாயங்களை செய்த இந்திய ராணுவத்தில் எந்த தமிழனும் இருந்திருக்க மாட்டான்... தமிழன் இருந்திருந்தால் அதுபோல செய்திருக்கவும் மாட்டான் என்று இன்னமும் குருட்டுத் தனமாக நம்புகிறார்கள்.... இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களின் நியாயம் இது....

ஆனாலும் இவர்கள் இன்னமும் இந்தியா ஈழத்துக்கு எதிரானது... இந்திய "ரா" உளவு அமைப்பு அவர்களுக்கு எதிராக 5,000 பேரை பணியில் அமர்த்தி இருக்கிறது என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்... இப்போதைக்கு இந்தியாவைப் பொறுத்தவரை ஈழப்பிரச்சினையில் நடுநிலை வகிப்பதையே விரும்புகிறது.... சிங்கள ராணுவத்துக்கோ, அல்லது ஈழச் சுதந்திரத்துக்கு போராடும் எந்த ஒரு அமைப்புக்கோ ஆதரவு தருவதில்லை... நாடு மலர்ந்தாலும் மகிழ்ச்சி என்ற நிலையிலேயே (மக்களின் பெருவாரியான நினைப்பும் இது தான்) நம் நாடு இருக்கிறது...

என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் இலங்கை அரசை விட விடுதலைப்புலிகளே இந்தியாவுக்கு இப்போதைக்கு நம்பகமானவர்கள்... இலங்கை அரசு எத்தனையோ முறை அமெரிக்க ராணுவத்தளத்தை திரிகோணமலையில் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து, இந்தியாவின் கடும் எதிர்ப்பினால் அது நடக்காமல் போய் வருவதை நாம் அறிவோம்....

சரி... ஈழத்தமிழர்களில் இன்னொரு வகையினரைப் பார்ப்போம்.... 83க்கு பிறகு ஈழத்தில் வாழ முடியாமல் இந்தியாவுக்கு வந்தவர்கள் ஒரு வகை.... 89ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் அங்கு கல்வியை பாதியில் விட்டு வந்தவர்கள் உயர்கல்வி கற்கும் வகையில் தமிழகத்தில் அவர்களுக்கு வசதி செய்து தரப்பட்டது.... வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்த ஈழ இளைஞர்கள் பலரும் இந்த வசதியைப் பயன்படுத்தி நன்கு கல்வி கற்று ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு குடிபெயர்ந்து இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்....

இது போன்றவர்கள் இன்னமும் இந்தியாவை மறக்க முடியாமல் வருடம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ இங்கு வந்துப் போகிறார்கள்... இவர்களுக்கு ஈழத்தை விட இந்தியாவின் மீதே ஈர்ப்பு அதிகம்... இந்திய மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.... உதாரணமாக அதே யாழ் களத்தில் வசம்பு என்ற புனைப்பெயரில் ஒரு நண்பர் இருக்கிறார்... சுவிட்சர்லாந்தில் வாழும் இந்த நண்பர் இந்தியா மீது பெரும் பற்று கொண்டவர்... இந்தியத் தலைவர்கள் மீதும், தமிழ் கலாச்சாரம் மீதும் அபிமானம் கொண்டவர்... அங்கிருக்கும் இந்தியாவை எதிர்க்கும் ஈழத்தமிழர்களை எதிர்த்தே கருத்துகள் சொல்லுவார்... கிட்டத்தட்ட இந்தியர் போன்றே நடந்து கொள்ளுவார்...

கருத்து.காம் என்ற வெப்சைட்டை நடத்தி வருபவரும் ஒரு ஈழத்தமிழரே... ஆனால் அவர் நடத்தும் கருத்துக் களத்தில் இந்தியப் பிரச்சினைகளும், தமிழக அரசியல், சினிமா என்றே விவாதிக்க இடம் அளித்துள்ளார்... தமிழக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆவல் கொண்டவர்.... விடுமுறையில் இந்தியா வந்திருக்கும் இவர் தன் விடுமுறையை ஜாலி டூராக எண்ணாமல் இந்திய மக்களைப் பற்றிய Case Study ஆக எடுத்துக் கொண்டு இந்தியா வந்திருக்கிறார்.... அதைப் போலவே கனடாவில் வசிக்கும் மணிவண்ணன் என்ற நண்பரும் கூட (83க்கு முன்னாலேயே ஈழத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்) இந்தியா மீது பெரும் பற்று கொண்டவராக இருக்கிறார்...

இவ்வாறாக இரு வேறு கருத்துக் கொண்ட மக்களாகவே ஈழத்தமிழர்கள் இருக்கிறார்கள்.... ஒட்டு மொத்தமாக இந்தியாவை அவர்கள் வெறுக்கிறார்கள் என்று கூறுவது தவறு... 87 - 90ஆம் ஆண்டைய சம்பவங்களே ஒரு சிலருக்கு இந்தியா மீது வெறுப்பு வர காரணம்... ஆனால் அவர்களும் கூட தமிழ்நாட்டுத் தமிழர்களை நேசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...

விரைவில் ஈழம் மலர்ந்தால் இந்தியாவும் அவர்களுக்கு தகுந்த கவுரவம் கொடுக்கும்.... இந்தியா மீது அவர்களுக்கு இருக்கும் கசப்புணர்வும் குறையக்கூடும்.... ஈழம் மலரட்டும்....

  • Replies 91
  • Views 11.8k
  • Created
  • Last Reply

எனக்கு இந்திய மேலாதிக்கத்தின் மீது மிகப் பெரிய வெறுப்பு உண்டு. அங்கே வாழுகின்ற மக்கள் மீது அல்ல.

அத்துடன் மீண்டும் மீண்டும் "இந்தியா" என்னும் பதத்தை உபயோகப்படுத்தி உள்ளது பற்றி ஒரு சிறிய கருத்து. இந்தியா என்பது வெள்ளைக்காரன் உருவாக்கிய ஒரு நாடு. பொருந்தாத பல தேசியங்கள் கட்டாயமாக இணைக்கப்பட்டு இந்தியா என்கின்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

லக்கிலூக்கின் முப்பாட்டன் இந்தியன் அல்ல. அவரின் பேரன் இந்தியனாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.

  • தொடங்கியவர்

எனக்கு இந்திய மேலாதிக்கத்தின் மீது மிகப் பெரிய வெறுப்பு உண்டு. அங்கே வாழுகின்ற மக்கள் மீது அல்ல.

எனக்கு மாடு என்றால் பிடிக்காது... அதன் "பால்" மட்டும் எனக்கு வேண்டும்... :lol::lol::lol:

இந்தியா என்பது வெள்ளைக்காரன் உருவாக்கிய ஒரு நாடு. பொருந்தாத பல தேசியங்கள் கட்டாயமாக இணைக்கப்பட்டு இந்தியா என்கின்ற ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

நகைச்சுவையான விளக்கம்... இன்று உலகில் இருக்கும் பல நாடுகளின் வரலாறு இது தான்.... உதாரணம் : அமெரிக்கா, ஆஸ்திரேலியா... தேசியம் என்பதற்கு முதலில் சரியான விளக்கம் தாருங்கள்... அந்த வார்த்தையை நீங்கள் தவறான அர்த்தத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்....

லக்கிலூக்கின் முப்பாட்டன் இந்தியன் அல்ல. அவரின் பேரன் இந்தியனாக இருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.

சரி... அதற்கென்ன? உங்கள் தந்தை இலங்கை குடிமகனாக இருந்திருப்பார்... இலங்கை குடிமகனாக இருக்கும் நீங்கள் ஈழக்குடிமகனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது... உங்கள் பேரனும் ஈழக்குடிமகனாகத் தான் இருப்பார் என்று என்ன நிச்சயம்? அப்படி இருக்க அவருக்கு என்ன கட்டாயம்?

வண்க்கம் பார்வை :lol: என்ன உங்களுக்கு ஒரு கருத்து இருக்கின்றதென்பதற்காக அதை ஏன் அடுத்தவரிடம் திணிக்க முற்படுகின்றீர்கள்.

லக்கிலுக்.....வரலாறு தெரியாமால்...பேசுகிறீர்கள்.......

ஆனாலும் இவர்கள் இன்னமும் இந்தியா ஈழத்துக்கு எதிரானது... இந்திய "ரா" உளவு அமைப்பு அவர்களுக்கு எதிராக 5,000 பேரை பணியில் அமர்த்தி இருக்கிறது என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்... இப்போதைக்கு இந்தியாவைப் பொறுத்தவரை ஈழப்பிரச்சினையில் நடுநிலை

ƒÂ¡ lucky þந்தியா நடுநிலை? வகித்தால் சந்தோசமே ஆனால் நீங்கள் நினைப்பது போல் அவ்வாறு இல்லை. பலமாதங்களுக்கு பொலனறுவை காட்டுப்பகுதியில் ஒட்டுக்குழுமுகாம் அழிக்கப்பட்டபோது அங்கு இந்தியபாஸ்போட்கள் சில கண்டெடுக்கப்பட்டன.

90 பகுதியில் அவர்களோடு தொங்கிக்கொண்டு சென்ற பல கடாக்களை கொம்பு சீவி இப்போது வடக்குகிழக்கில் இறக்கியிருக்கிறார்கள்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட சில தமிழர்புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்கள் தெரிவித்த விடயம் தம்மை கடத்தியவர்கள் இந்தியில் பேசினார்கள் என்று. இரு தரப்பினர் ஒப்பந்தத்தில் உள்ளபோது ஒரு தரப்பினர் மீது முன்றாம்தரப்பு வீணாக எதற்கு தாக்குதல்களை நடத்தினம்.

இது சந்தோசமே! அண்மையில் நடந்தமகாநாடுகள் முலம் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் தமிழ்நாட்டுமக்கள்

இதைவரவேற்றாலும், பார்ப்பனிய அரசியல் தலைமைகள் இதைஏற்றுக்கொள்ளுமா தெரியாது.

அதனால் தான் ஒருகாலத்தில் தமிழ்போராட்டங்களுக்கு வெளிப்படையாக உதவி செய்த அரசாங்கமே அது தனிநாட்டைநோக்கி போவதைக்கண்டு அழிக்கமுற்பட்டனர். இந்தியஇராணுவம் வந்த போது தமிழ்மக்கள் பெரும் சந்தோசப்பட்டார்கள். ஆனால் அவர்கள் செய்த அநியாயம் :twisted:

ஆனால், இந்த உண்மையை உங்கடைஅரசுகள் இலங்கை அரசு முதுகில் குத்தும்போது தான் உணர்வார்கள். 90 இல் நடந்ததையே மறந்துவிட்டார்கள்

தமிழ் ஒட்டுக்குழுக்களின் நன்றிவிசுவாசம். தன்மக்களுக்கு இல்லாவிட்டாலும், எலும்பு கொடுத்த, எஜமான் காலை எப்போதும் நக்குவார்கள்.

அநியாயங்களை செய்த இந்திய ராணுவத்தில் எந்த தமிழனும் இருந்திருக்க மாட்டான்... தமிழன் இருந்திருந்தால் அதுபோல செய்திருக்கவும் மாட்டான்

சில இடங்களில் அத்தமிழ் இராணுவச் சிப்பாய்களால் தமிழ்மக்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்டதும் (நடத்தப்பட்டதும்) உண்டு. வரலாற்றை இனியும் திரிக்காதீர்கள். அதுவும் கண்முன்னே நடந்தவற்றை....

இலங்கைத்தமிழர்கள் எல்லோருமே 100வீதம் இந்தியாவை நேசித்தவர்கள் தான்.இது இந்திரா காந்தி அம்மையார் இறந்த போது இருந்தவர்களுக்குத்தெரியும். ஆனால் அதன்பின் இந்திய எம்மக்கு செய்த நம்பிக்கைத்துரோகத்திற்குப்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ,, லக்கி தன் பாட்டுக்கு புலம்புதே,, அது சரி என்ன தேனி இணையத்தளத்தில வாற கட்டுரை மாதிரி இருக்கு லக்கியிண்ட புலம்பல்??? லக்கி எண்ட தனி நபரது கருத்தை இந்தியாவில இருக்கிற அட்லீஸ் 0,000001% மக்கள் கருத்து எண்டு எடுத்துகலாமா?? லக்கி உமக்கு பழ.நெடுமாறன் ஐயாவை தெரியுமா?அவரது அரசியல் வயசு தெரியுமா? அவரை எவ்வளவு இந்திய & தமிழக மக்கள் நேசிக்கிறார்கள் தெரியுமா? அவரின் உள்ள குமுறல்களை அண்மையில் வெளியிட்டு இருந்தாரே வாசித்தனீரா?

இருங்க இருக்கு அந்த கட்டுரை,, நெருப்பு அதிரடியில வாற செய்திகள் மாதிரி அம்மானும், அங்கிளும் நல்லவர்கள் ஜனநாய்யகவாதிகள் மற்றவர்கள் எல்லாம் சும்மா புலம்புறாங்கள் எண்ட ரீதியில கதைக்காதையும்,, யாழ்களத்தையோ அன்றி வேறொரு தமிழீழ களத்திலையோ என்றைக்குமே 90% கருத்துக்கள் இந்தியா வல்லாதிக்கத்துக்கு எதிரானதாகத்தான் இருக்கும், ஏனெனில் அவர்கள் நம்பவைத்து கழுத்தறுத்ததை எந்த ஒரு தமிழீழழ பொதுமகனும் மறக்கமாட்டான்,,

அன்றிலிருந்து இன்றுவரை இந்தியா தன் சுய நலம் கருதித்தான் செய்ற்பட்டு வருகின்றதே ஒளிய பல சகப்தங்களாக கஸ்ரப்படுற இனம் நிம்மதியாக இருக்கட்டுமே என்று வருத்தப்பட்டது கிடையாது, ஏனென்றால் இந்திய உயர் வர்க்கத்துக்கு பயம், அருகில் இருக்கும் நாடு முன்னேறினால் அதே விளையாட்டை தன் மாநிலக்காரனும் செய்ய ஆரம்பிச்சுடுவான் எண்டு...

லக்கி இந்தியா எண்டு குறிப்பிடுவது ஒட்டுமொத்த இந்தியாவையல்ல,,, மத்தியில் காலம் காலமாக ஆட்சியில் இருப்பவர்களையும், அந்த ஆட்சியில் இருப்பவர்கள் செய்பவற்றை கண் மூடிக்கொண்டு ஆதரிப்பவர்களையும், புலனாய்வு செய்யிறம் நாட்டை காக்கிறம் எண்டு நினைத்து அட்டூழியம் செய்பவர்களையும்தான்,,, :evil: :evil:

உனது என்னங்களை இந்தியாவின் ஒட்டுமொத்த கருத்து என்று எண்ணி அதை நம்ப நாங்கள் ஒன்றும் சுவிஸ் வாழ் தமிழர்கள் அல்ல (மன்னிக்கவேண்டும் சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே, இந்த கருத்து புரியவேண்டிய ஓரிருவருக்கு புரியும்),, 83 கலவரத்தோடு புலத்துக்கு ஓடிவந்தவர்களுக்கு என்ன தெரியும் இந்தியா இராணுவத்தைப்பற்றி,, :evil: :evil: :evil:

எதிரியை மன்னிக்கலாம், ஆனால் துரோகிக்கு மன்னிச்சால் அது மன்னிக்கிறவன் குற்றம்,, அவன் ஒரு மனிதன் அல்ல... :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

2 தரம் பதியப்பட்டுவிட்டது,, அதனால் ஒன்றை நீக்கியிருக்கின்றேன்.. :idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுடைய இந்திய இராணுவம் உவ்வளவு கொடுமைகளை இழைத்தபின்னரும் அம் மக்களுக்கான விடுதலைக்காக தங்களது உயிர்களை அர்பணித்து போராடும் விடுதலைப்புலிகள் இன்றைக்கும் "நாம் இந்தியாவை எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது தந்தைநாடாக தான் பார்க்கிறோம்" என்று சொல்லுகின்ற பெரும் தன்மை யாருக்கு சார் வரும்??

இந்த ஒரு விடயம் போதாதா தமிழீழ மக்கள் இந்தியாவை நேசிக்கிறார்கள் என்பதற்கு??

இந்தியர்கள் ஈழத்தமிழர்களையும் விடுதலைப்புலிகளையும் பிரித்துப் பார்க்க கூடியவர்கள் என்று லக்கிலூக்தான் நகைச்சுவையாக எழுதி உள்ளார். ஒன்றான ஒன்றை எப்படி பிரித்துப் பார்ப்பது? இதற்கு பதிலாகவே "இந்திய மேலாதிக்கத்தை வெறுக்கிறேன், அங்குள்ள மக்களை அல்ல" என்று எழுதினேன். உண்மையில் "மாடு (புலிகள்) பிடிக்கவில்லை, பால் (ஈழத் தமிழர்) வேண்டும்" என்று எழுதியிருப்பது லக்கிலூக்தான்.

மற்றைய இரண்டு கேள்விக்களுக்காமன பதில் சின்னக்குட்டியின் கருத்தில் இருக்கின்றது. சின்னக்குட்டிக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்விடயம் தொடர்பாக முன்னர் ஒருமுறை கருணாநிதி முதல்வராக இருந்தபோது சொன்ன அதே விடயம் "நான் விடுதலைப்புலிகளை ஆதரிக்கமாட்டேன். தமிழீழம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன்" என்று..

இதற்கு செல்லப்பா ஒரு முறை நகைச்சுவையாக் கருணாநிதியின் கருத்தை சொல்லியிருந்தார். அதாவது கருணா நிதி தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துகொடுக்கமாட்டார். குழந்தை பிறந்தால் சந்தோசப்படுவார் என்று.

நல்ல நகைசுவையான செய்தி !! ட்ங்க் இது போல நிறைய நகை சுவை செய்திகள் எழுத வேண்டும்ம் :lol::lol::lol::lol::lol::lol:

லக்கி உமக்கு பழ.நெடுமாறன் ஐயாவை தெரியுமா?அவரது அரசியல் வயசு தெரியுமா? அவரை எவ்வளவு இந்திய & தமிழக மக்கள் நேசிக்கிறார்கள் தெரியுமா? அ.. :evil: :evil:

:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைசுவையான செய்தி !! ட்ங்க் இது போல நிறைய நகை சுவை செய்திகள் எழுத வேண்டும்ம் :lol::lol::lol::lol::lol::lol:

:lol::lol:

நிச்சயமாக நண்பா.. உம்மைப்போல ஓரிருவர் களத்தில் இருக்கும் வரை அடிக்கடி இப்படியான நகைச்சுவையான செய்திகளை தருவேன்.. ஆனால் ஒண்டு என்னோட இந்த நகைச்சுவை செய்திகளை, திமுக, தலைவர்கள், செயலாளர்கள், எடுபிடிகள், தொண்டர்கள் மேடைகளீல், இணணயத்தளங்களில் சொல்லுவீனமே?? அதுதானப்பா காமெடி நகைச்சுவை பேச்சு, அதோட ஒப்பிடாதேங்க,,, என்னால இப்படிப்பட்ட சின்ன சின்ன நகைச்சுவைகளைத்தான் உமக்கு விருந்தாக தரமுடியும்,, திமுக அணியினர் புலம்புற நகைச்சுவை ரேஞ்சில என்னால நகைச்சுவைகளை முன்வைக்கமுடியாது என்ற வருத்தமான செய்தியை இந்த நேரத்தில மிகவும் மனவருத்தத்தோட தெரிவிச்சுக்கிறேன்ப்பா.. :oops: :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு மாடு என்றால் பிடிக்காது... அதன் "பால்" மட்டும் எனக்கு வேண்டும்...

இலங்கைத் தமிழர்களை எங்களுக்குப் பிடிக்கும், ஆனால் விடுதலைப் புலிகளை எங்களுக்குப் பிடிக்காதென்பது, "மாட்டை மட்டும் பிடிக்கும் பால் மட்டும் வேண்டாம்" என்பது போன்றது தான். :lol::lol::lol:

உடனே திமுக பக்கம் தாவ வேண்டாம் !! இந்திய தமிழ்ர்களை பொருத்தவரை நெடுமாறன் ஒரு **** !! அவரை எல்லாரும் மதிக்கிறார்கள் என்று நீங்கள் நம்புவது சிரிப்பு தான் வருகிறது.

கொன்சம் இந்தியா தமிழ் நாடு பக்கம் வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்

**** சொல் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

இலங்கைத் தமிழர்களை எங்களுக்குப் பிடிக்கும், ஆனால் விடுதலைப் புலிகளை எங்களுக்குப் பிடிக்காதென்பது, "மாட்டை மட்டும் பிடிக்கும் பால் மட்டும் வேண்டாம்" என்பது போன்றது தான்.

சரி இலங்கை தமிழ்ர்களை புலிகளாகவே இந்தியா பக்கம் வர சொல்லும் !! ஏன் தமிழ் நாடு பக்கம் வந்து பார்க்க சொல்லும் !! ஒருத்தர் கூட மதிக்க மாட்டார்!!

இங்கு இருப்பவர்கள் பலர் தமிழ் நாட்டை இணைய தளங்கள் மூலம் தான் தெரிந்து இருப்பீர் என்று நினைக்கிறேன். நேரடியாக வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்

  • கருத்துக்கள உறவுகள்

உடனே திமுக பக்கம் தாவ வேண்டாம் !! இந்திய தமிழ்ர்களை பொருத்தவரை நெடுமாறன் ஒரு தேச விரோதி !! அவரை எல்லாரும் மதிக்கிறார்கள் என்று நீங்கள் நம்புவது சிரிப்பு தான் வருகிறது.

கொன்சம் இந்தியா தமிழ் நாடு பக்கம் வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்

அட என்ன அண்ணாத்தை இப்படி சொல்லுறீங்கோ.. அண்டைக்கு ஒரு கூட்டம் நடாத்தி இருந்தாரு ஐயா. நெடுமாறன் அவர்கள்,, எம்புட்டு மக்கள் வந்திருந்தாக பார்க்கலையோ?? அப்ப வந்தவங்க எல்லாம் பாகிஸ்த்தான், தமிழீழத்தவர்களோ??? உம்மைப்போல ஒரு சிலருக்கு பிடிக்காட்டால் என்ன செய்யமுடியும்? அப்படி பார்த்தால் நகைச்சுவை காமெடியர் கறுனாநிதியை அதிமுகாவில இருக்கிறவைக்கு பிடிக்காதே,, அவரை ஒரு காமெடியனாகத்தான் பார்க்கிறாங்க அதிமுக காரங்கள்... :P :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி இலங்கை தமிழ்ர்களை புலிகளாகவே இந்தியா பக்கம் வர சொல்லும் !! ஏன் தமிழ் நாடு பக்கம் வந்து பார்க்க சொல்லும் !! ஒருத்தர் கூட மதிக்க மாட்டார்!!

இங்கு இருப்பவர்கள் பலர் தமிழ் நாட்டை இணைய தளங்கள் மூலம் தான் தெரிந்து இருப்பீர் என்று நினைக்கிறேன். நேரடியாக வந்து பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளவும்

வாறதில பிரச்சினை இல்லை திரும்பி வரக்கை பெண் எண்டால் கற்பு இருக்காது,,ஆண் எண்டால் கையில காசு ஒண்டுமிருக்காது, அந்த ரேஞ்சுக்கு வளர்ந்திட்டீங்க நீங்க, அட நான் இதை சொல்லலையப்பா,, ஐரோப்பியன் சொல்லுறானப்பா,, :oops: :P :P

ஆமாம் நானும் தாய்லாந்து விழயம் எல்லாம் கேள்வி பட்டேன்!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் நானும் தாய்லாந்து விழயம் எல்லாம் கேள்வி பட்டேன்!!

ஜோவ்வ் என்ன உமக்கு ஞாபக மறதியா?? முந்த நாள் நீர் தானே எழுதினீர்??எழுதினதை இண்டைக்கு மறந்து போனீரோ?? நல்ல ஒரு டாக்டரா பாரும்,, ஆ மாத்திரபூதத்தை அடச்சா அந்தாள் மேல போய் சேர்ந்துடுது எல்லோ? வேற ஒரு நல்ல டாக்டரா பாருமோய்...முத்திடிச்சு,, (அட ஞாபகமறதி முத்திடிச்சு எண்டு சொல்ல வந்தன்) :oops: :lol:

டங் வெகு நாட்கள் கழித்து இன்று தான் நான் கருத்து எழுதிகிறேன் என்று தங்களுக்கு சொல்லி கொள்கிறேன். தேவை இல்லாமல் தனி நபர் தாக்குதல் வேண்டாமே

  • கருத்துக்கள உறவுகள்

டங் வெகு நாட்கள் கழித்து இன்று தான் நான் கருத்து எழுதிகிறேன் என்று தங்களுக்கு சொல்லி கொள்கிறேன். தேவை இல்லாமல் தனி நபர் தாக்குதல் வேண்டாமே

சா அடிக்கடி எனக்கும் மறதியப்பா,, சாறி,, அதுசரி எங்க போயிருந்தீர்? நலமா??? எங்க உடன்பிறவா சகோதரன் லக்கி? அதுசரி நீரும் ஏதாவது புளக் (வலைப்பூ) பதிஞ்சு வைச்சுருக்கிறீரோ?? இல்லை நீரும் உம்மட மனசில இருக்கிற பரம ரகசியங்களை எங்கயாவது கொட்டியிருப்பீர் அதுதான் என்ன எண்டு பார்க்கலாமெண்டு..... :? :oops:

  • தொடங்கியவர்

அட என்ன அண்ணாத்தை இப்படி சொல்லுறீங்கோ.. அண்டைக்கு ஒரு கூட்டம் நடாத்தி இருந்தாரு ஐயா. நெடுமாறன் அவர்கள்,, எம்புட்டு மக்கள் வந்திருந்தாக பார்க்கலையோ??

என்னையும் சேர்த்து 33 பேர்... அதில் 30 பேர் கூட்டத்துக்கு தலைமை, முன்னிலை தாங்கியவர்கள்.... :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.