Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒவ்வொரு முறையும் வந்து என்னதான் கேட்கிறார்கள்?

Featured Replies

[size=4]ஒவ்வொரு முறையும் வந்து என்னதான் கேட்கிறார்கள்?

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-07-23 10:51:55| யாழ்ப்பாணம்][/size][/size]

[size=1][size=4]இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்ததோ இல்லையோ வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கொழும்புக்கும் யாழ்ப்பாண த்திற்கும் அடிக்கடி வந்து நிலைமைகளைக் கேட்டறிந்து செல்கின்றனர். அவ்வாறு கேட்டறிபவர்கள் கேட்டதை என்னதான் செய்கிறார்கள் என்பது தெரிய வில்லை. [/size][/size]

[size=1][size=4]வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற எம்மவர்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் புளுகில் அவர்களைச் சந்தித்துக் கொள் கின்றனர். இச்சந்திப்புப் புளுகு அடுத்த பிரதிநிதியின் வருகை வரைக்கும் நீடிக்கும். வடபகுதிக்கு வருகின்ற - சந்திக்கின்ற பிரதி நிதிகளிடம் தொடர்ந்து கருத்துக் கூறாமல், முன்பு வந்து எங்களிடம் கேட்டுச் சென்ற விபரம் தொடர்பில் நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன? என்று கேட்பதற்கு இங்கு ஆட்களே இல்லை என்றாகிவிட்டது.[/size][/size]

[size=1][size=4]யாழ்ப்பாணத்தில்; அரசியல் தலைவர்கள், கத்தோலிக்க மதத் தலைவர் ஆகியோரை வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சந்திக்கும் போது என்ன விடயம் கூறப்படுகின்றது என்பது தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றதா என்று கேட்டால் அதுதான் இல்லை.

மறைமுகமாக அரசுக்கு ஆதரவான கருத் துக்களைத் தெரிவிப்பதுடன் ஒருசில விடயங் களை தமிழ் மக்களுக்காகக் கூறிவிட்டு அதனை ஊதிப் பெருக்கி தமிழ் ஊடகங்களுக் குக் கொடுத்துவிட்டு அங்கும் நல்ல பிள்ளை. இங்கும் நல்லபிள்ளை என்ற பக்கா நடிப்பே தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. [/size][/size]

[size=1][size=4]வடபகுதிக்கு வருகின்ற வெளிநாட்டுப் பிரதி நிதிகள் வடபகுதியின் உண்மை நிலையை அறிய வேண்டுமாக இருந்தால் இந்து சமயத் தலைமைகளையும் சந்திக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படியான சந்திப்புக் கள் நடக்கவே இல்லை. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்து மதத் தலைமைகளையும் சந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தியதாக வரலாறு இல்லை. தந்தை செல்வநாயகம் கிறிஸ்தவ மதத் தைச் சார்ந்தவர். எனவே அந்த சமயம் சார்ந்த ஒருவரை தமிழரசுக் கட்சிக்குத் தலை மையாகக் கொண்டு வருவதற்கு இரா. சம்பந் தன் முயற்சிக்கும் போது வெளிநாட்டுப் பிரதிநிதி களை இந்து சமயத் தலைமைகள் சந்திப்பதை அவரும் அவர் சார்ந்தவர்களும் விரும்பமாட் டார்கள் என்பது தெரிந்த விடயமே.

இந்த நாட்டின் தேசியக் கொடியான சிங்கக் கொடியையும் காளியம்மனின் வாகனமான சிங்கத்தையும் தொடர்புபடுத்தும் மகாமேதை கள் இருக்கும் வரை தமிழ் மக்கள் இருப் பதையும் இழப்பார்களேயன்றி வேறு எதுவும் நடக்காது என்பது நிறுத்திட்டமான உண்மை. எதுவாயினும் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தவே வெளிநாட்டுப் பிரதிநிதி கள் யாழ்ப்பாணத்திற்கு வருவதாக இருந்தால் அவர்களின் வருகை அதிகமாகிவிட்டது என்றே கூறவேண்டும்.[/size][/size]

Edited by akootha

ஊருக்குப் போத்திரும்பிய ஒவ்வொருத்தரும் ஊரைப்பற்றி சொல்லும்போது அந்தமாதிரி கிடக்காம்.

ஊருக்கே போய் இருக்கப் போவதாயும் சொல்ல்கிறார்கள்.

வெளிநாட்டும் பிரதிநிதிகளிடம் அங்கு என்ன சொல்லப்படுகுதோ?

வெளிநாட்டில் இருந்து போபவர்கள் அங்குபோய் தாமிருந்த காலத்துடன் தற்கால வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்து சொல்லும் கருத்துக்களை பார்க்கும்போது பாவம் மாவீரர்கள் என்றுமட்டுமே எண்ணத் தோன்றுகின்றது.

குறுகிய மனமும் மிகக் குறுகிய நினைவு திறனும் கொண்டதே எமது சமுதாயம்.

விடுதலையும் தீர்வும் வெறும் பொழுதுபோக்கு கோசமே..

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள

பல்வேறு முறையில் படம் காட்டுகின்றனர்.

தமிழன் தலையில் மிளகாய் அரைப்பது மிகவும் சுலபம் என்பது

அவர்களுக்கு எப்போதோ விளங்கிவிட்டது.

  • தொடங்கியவர்

[size=4]வெளிநாட்டு பிரதிநிதிகள் வருவது என்பது வராமல் விடுவதை விடமேல். ஆனால் எமது பிரதிநிதிகள் தான் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை. [/size]

வெளிநாட்டு பிரதிநிதிகள் வன்னிக்கு சென்று நிலைமையை பார்வையிட்டால் கூட பரவாயில்லை. ஆனால் யாழ்ப்பாணத்திற்கு தான் செல்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.