Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தி சிலை உடைக்கப்பட்டமைக்கு “த ஹிந்து” கண்டனம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]the_hindu_logo_-100x100.jpg[/size]

[size=3][size=4]இந்திய தேசப் பிதா மகாத்மா காந்தியன் சிலை யாழ்ப்பாணத்தில் உடைக்கப்பட்டமைக்கு இந்திய ஊடகமான “த ஹிந்து” கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.சிறிலங்காப் படையினரின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள பகுதியொன்றில் இவ்வாறான சம்பவம் நடந்திருப்பதாகவும் ஏற்கனவே மட்டக்களப்பு நகரில் இருந்த மஹாத்மா காந்தி மற்றம் விவேகாநந்தரின் சிலைகள் உடைக்கப்பட்டமையையும் அவ் ஊடகம் தனது கண்டனத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறது.[/size][/size]

[size=3][size=4]மேலும், இச்சிலை கைகளால் சேதப்படுத்தப்படவில்லை எனவும், இயந்திரம் ஒன்றின் மூலமே வீழ்த்தப்பட்டிருப்பதாகவும் அது சந்தேகம் வெளியிட்டுள்ளது. இராணுவத்தின் கழுகுக் கண்ணின் பார்வை எந்த நேரமும் படக்கூடியதாக இந்த இடம் விளங்குவதாக குறிப்பிட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]இந்தச் சிலைக்கு கொங்கிறீற் தளமிடப்பட்டிருப்பதாகவும், எளிதில் அழித்து விட முடியாது எனவும் யாழில் உள்ள தூதரக அதிகாரி மகாலிங்கம் தெரிவித்திருந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]அத்துடன் மகாலிங்கம் இது தொடர்பில் யாழ். அரச அதிபருக்கு முறையிட்டுள்ளதுடன், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தாவிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]இந்த சிலையை உடனடியாக சீர்த்திருத்துமாறு, இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் வெளியுறவுச் செயலரிடம் கோரியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[/size][/size]

[size=3][size=4]http://www.saritham.com/?p=65322[/size][/size]

[size=5]இறையாண்மையுள்ள சிங்கள தேசத்திற்கும் இந்தியா தலையிடுவது .... கண்டிக்கத்தக்கது. [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அழிக்கும் போது வேடிக்கை பார்த்த 'இ' பத்திரிக்கை ஒரு சிலைக்காக குரல் கொடுப்பது தமிழர்களைவிட இந்த சிலை மேலானது போன்று காட்டுவதாகும் இந்த மாதிரியான மனப்போக்கு கொண்ட “த ஹிந்து” பத்திரிகையை வன்மையாக கண்டிக்கவேண்டும்.

பி;கு: காந்தி சிலை யாழில் இருக்கவேண்டுமானால் தியாகி திலீபனின் சிலை இந்தியாவில் அமைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை ஆயிரம் தமிழர்கள்.. (தமிழக மீனவர்கள் உட்பட) மனித உயிர்கள் இந்திய மற்றும் சிறீலங்கா அரசுகளால் அழிக்கப்பட்ட போது கண்டனம் தெரிவிக்காதவை எல்லாம்.. ஒரு உயிரற்ற.. காந்தி சிலை உடைஞ்சதுக்கு கண்டனம் தெரிவிக்கிறாங்கப்பா.

என்ன உலகம்.. சிலைக்கு கொடுக்கிற மரியாதையைக் கூட மனிசனுக்கு (தமிழனுக்கு) கொடுக்க வக்கில்லாத நாடு.. அகிம்சா தேசமாமில்ல..! அதுக்கு இறையாண்மை வேற இருக்காமில்ல..! :(:rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்தை ஆழ்வது சிங்களக்காடைகளா அல்லது கிந்திய பயங்கரவாதிகளா என்ற போட்டி, போரில் வென்ற கூட்டுக்கிடையில் அடிக்கடி வெளிக்காட்டப்பட்டு அம்பலமாகிறது. அதற்கு இந்த அரை வேக்காட்டு மகாலிங்கம் ஒற்றராக பதவி வகிக்கிறார். சென்றவருடம் இவரேதான் கிந்தியா பலாலியில் 150 அடி நீள ஓடுபாதை அமைத்து பலாலியை சர்வதேச விமானத்தளமாக மாற்றப்போகிறது என்று அறிவித்தல் விட்டவர். பின்னர் இவரேதான் இந்த வருடம் பலாலி இராணுவமுகாமில் நடந்த கொண்டாடத்தின்போது மனைவி,மற்றும் உறவினர் முன் களுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக அவமானப்படுத்தப்பட்டவர்.

எப்படி காந்தி தென்னாபிரிக்காவிலிருந்து வந்து இந்தியாவுக்கு மேலான அடக்கு முறைகளை எதிர்த்து போராடினாரோ அதேபோல்த்தான் SJV மலேசியாவிலிருந்து வந்து ஈழத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராடினார். இதில் வெளிப்படையான உண்மைகளாவன SJV அப்பழுக்கில்லாத நேர்மையான தலைவன். மிக மிக திறமையான சட்ட, அரசியல் அறிஞ்ஞன். இவை உண்மையில் காந்தியிடம் இருந்தனவா எனபது தெரியாது. எந்த அரசியல் மேடையிலும் SJV 5 நிமிடம்் தமிழிலில் பேசுவதே ஆச்சரியமான விஷையமாக கருதப்படவேண்டியிருக்கையில், தமிழர்களை மட்டுமல்ல முஸ்லீம்களையே தன் பின்னால் திரள் திரளாக சேரவைத்தவர்தான் SJV. இதனால்த்தான் கிந்தியருக்கு காந்தியை விட ஈழத்தவருக்கு SJV பெரியராவார்.

கிந்துவுக்கு காந்தி உரிமைகளை பெற்றுத்தந்தவர் என்ற பெருமை உணர்வு இருக்காயிருந்தால், சுதந்திரத்திற்கு போராடுபவன் மீது மதிப்பு, மரியாதை இருக்காயிருந்தால், ஈழத்தில் அந்த ஈழத்து காந்தி SJVயின் சிலையை உடைத்த போது தட்டிக்கேட்க மான்பு இல்லாமல் போன கிந்திய திமிர் பிடித்த பத்திரிகை "கிந்து" இன்றுமட்டும் கொக்கரிப்பது ஏன்? காந்தியின் சிலையை ஈழம்மீது தனது அடக்குமுறையின் அடியாளச்சின்னமாக அனுப்பிவத்த கிந்தியாவின் கிந்து, காந்தி சிலையை உடைத்தபோது கொக்கரிப்பது, நிச்சயமாக ஈழத்தின் மீது கிந்தியரின் கைப்பிடி தளருகிறது என்ற கவலையே மட்டுமன்றி காந்திமீது இருக்கும் மான உணர்வாக இருக்க முடியாது.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.