Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்தால் தீர்வு காண்பது இலகு என உலகத் தலைவர்கள் தெரிவித்தனர்: சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]60(1511).jpg'[/size][/size]

[size=2][size=4]முஸ்லிம் மக்களுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணுவது இலகுவாக இருக்கும் என்று உலகத்தலைவர்கள் சிலருடனான சந்திப்பின்போது எமக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையிலேயே நாம் இன்று பேசி வருகின்றோம்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சி.தண்டாயுதபாணிக்கு ஆதரவு தெரிவித்து நேற்று வியாழக்கிழமை மாலை திருகோணமலை நியூசில்வர்ஸ்டார் ஹோட்டலில் திருகோணமலை கல்விச் சமூகம் ஒழுங்கு செய்திருந்த பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய போது சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்;ந்தும் உரையாற்றிய அவர்,

'மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரிஸின் தலைவர் அஷ்ரப்புடன் அன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது வடக்கு மாகாணத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை இணைத்து வடக்குகிழக்கு மாகாண சபை ஒன்றையும் கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளை இணைத்து தென்கிழக்கு மாகாண சபை ஒன்றையும் உருவாக்குவது பற்றி ஆராயப்பட்டது.

அதன்படி, வடக்கு மாகாண சபைக்கு தமிழ் முதலமைச்சராகவும் முஸ்லிம் ஒருவர் பிரதி முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்றும் தென்கிழக்கு மாகாணசபைக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகவும் தமிழர் ஒருவர் பிரதி முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்று அப்பேச்சுவார்த்தையின் போது பிரஸ்தாபிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழக்கூடியதாக தாராளமாக விட்டுக்கொடுத்து நீண்ட கால அரசியல் அபிலாசைகளுக்கு நிரந்தரமானதும் நியாயமானதுமானதும் மற்றும் நிலைத்து நிற்கக்கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றை காண விரும்புகின்றோம்' என தெரிவித்தார்.

முதன்மை வேட்பாளர சி.தண்டாயுதபாணி உரையாற்றுகையில்,

'மாகாணசபை அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் தமிழ் மக்களின் சகல உரிமைகளும் வென்றெடுக்கப்படும் என அர்த்தமாகாது. தமிழ் மக்கள் தமது சுய கௌரவத்துடன் வாழும் சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்ற செய்தியை ஒருமித்து தெரிவிப்பதற்கு இத்தேர்தலை நாம் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபையின் முடிவினை சர்வதேசம் வெகு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. இத் தேர்தலில் அரசாங்க கட்சியின் சார்பில் போட்டியிடும் எந்த தமிழரும் வெற்றி பெறக் கூடாது. அரசாங்கம் தமிழ் பிரதிநிதிகள் வெற்றி பெறுவதை காட்டி கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் இருக்கின்றார்கள் என்ற பிரசாரத்தை மேற்கொள்ள ஆயத்தமாக இருக்கின்றது. இது ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும் அச்சுறுத்தலாக எதிர்காலத்தில் இருக்கும்.

தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பினை காட்டுவதற்கு இத்தேர்தலை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெறும் அபிவிருத்தி திட்டங்கள் மாத்திரம் தமிழ் மக்களின் தீர்வாக அமைய மாட்டாது' என்றார்.

திருகோணமலை மாவட்டத்தின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், வேட்பாளர்கள் ப.நித்தியானந்தம், ந.குமணன் ஆகியோரும் இக்கூட்டத்தில் உரையாற்றினர்.

2(1639).jpg

0(264).jpg[/size][/size]

[size=2][size=4]http://www.tamilmirr...3-11-21-55.html[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

யார் அந்த உலகத் தலைவர்கள்..???!

அதே உலகத் தலைவர்களிடம் சொல்ல வேண்டியது தானே ஈராக்.. ஆப்கானிஸ்தான்.. சிரியா.. ஈரான் என்று முஸ்லீம்களோடு இணக்கப்பாட்டுக்கு வந்தால்.. உலகம் அமைதியாகிடும் என்று...!

ஏனாம் முடியல்ல.. அதே காரணங்கள் நமக்கும் இருக்குது..???! :icon_idea:

தீர்வுக்கு இதுவரையும் சிங்களத்தலைமைகளோடு பேச்சுவார்த்தை நடத்வேண்டும் என்றுதான் உலகத்தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதே மாதிரித்தான் இந்த முஸ்லீம் தலைமைகளோடும் இணக்கப்பாடு கணப்படவேண்டும் என்பதும் அவர்களின் நீண்ட நாளைய கருத்து. ஆனால் சிங்களத்தலைவர்களுடன் பேசிவிட்டாலோ அல்லது முஸ்லீம்களுடன் இணக்கப்பட்டு கண்டுவிட்டாலோ சிங்கள மக்கள் அந்த தீவில் தம்மைத் தவிர யாரும் வசிக்கலாம் என்ற மன நிலைக்கு இறங்கி வரபோவதில்லை. இந்த பிரச்சனை இனி தமிழ்-முஸ்லீம்-சிங்களத்தலைவர்களின் கைகளில் இல்லை. உலகத்தலைவர்கள் முன்வந்து தீர்க்காவிட்டால் இது தீராது.

Edited by மல்லையூரான்

[size=4]சம்பந்தர் நல்ல ஒரு செய்தியை முஸ்லீம் மக்களுக்கு கூறியுள்ளார்.[/size]

[size=4]தெரிவு அவர்கள் கையில். [/size]

[size=4]தொடர்ந்தும் சிங்களத்தலைமைகளுடன் சேர்ந்து ஏமாறாமலும் தமிழர்களை ஏமாற்றாமலும் [/size]

[size=4]இருந்தால் இரு இனங்களும் நிம்மதியாக வாழலாம்.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சார் கூறும் உலகத்தலைவர் சோனியா காந்தியாக இருக்குமோ ? :D

உலகத்தலைவர்கள் என்று சம்பந்து தன்னையும் தனது தோழர்களையும் கூறுகின்றது. நீங்கள் முஸ்லீம் மதவாத வெறியர்களுடன் சேர்ந்து ஒன்றையும் புடுங்கப்போவது இல்லை. தமிழர்கள் அனைவரையும் இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்து ஒன்று சேருங்கள். இருள் தானாகவே வெளிக்கும்.

அதைவிடுத்து சோம்பேறித்தனமான அறிவுரைகள் கூறுவது என்றால் நீங்கள் உ ங்கள் சின்னத்தம்பியின் நுனிக்கட்டையை வெட்டிவிட்டு முஸ்லீமாகவே மாறிவிடுங்கள். தமிழர்கள் அனைவரையும் முஸ்லீம் மதவாதிகள் ஆக்கிவிடுங்கள், பிரச்சனை தீர்ந்துவிடும்.

அரைத்த மாவை அரைத்து காலத்தை ஓட்டி வீணாக்குகின்ற சம்பந்து போன்றவர்கள் இளைப்பாறவேண்டிய தருணம் இது. இவர்கள் மட்டுமே முஸ்லீம் மதவாதிகளுடன் கைகோர்ப்பது பற்றி பேசுகின்றார்கள். முஸ்லீம்மதவாதிகள் தமிழர்களுடன் கைகோர்க்கவேண்டும் இணக்கப்பாட்டுக்கு வந்து எமது பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என்று எப்போதாவது சொன்னது உண்டா?

ஆங்கிலம் தெரியுமென்றால் சம்பந்துவுக்கு மொழிபெயர்ப்பாளர் பணியை மட்டும் கொடுப்பது போதுமானது. வேறு பணிகள் கொடுத்தால் தமிழினம் விரைவில் முஸ்லீம் மதவாதிகளாகவோ அல்லது சிங்கள இனமாகவோ அல்லது முஸ்லீம் மதவாத சிங்கள கலப்பாகவோ மாறிவிடும்.

தேவை புதிய தலைமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.