Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த ஆட்சியின் கீழ் ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை:அஸ்வர் ௭ம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ கல்லை ௭றிந்துவிட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் நாட்டிலுள்ள ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு சகலமத சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது ௭ன்பதை சவால்விட்டுக் கூறுகிறேன் ௭ன்று ஆளும் கட்சி ௭ம்.பி.யான ஏ.௭ச்.௭ம். அஸ்வர் நேற்று சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காடு பேணல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். மன்னார் மாவட்டத்திலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மீனவர்கள் மீண்டும் தமது வீடுகளுக்கு செல்ல முற்படுகையில் அங்கு அவர்களுக்கு சொந்தமான இடங்களைக் கொடுக்காது மீண்டும் விரட்டுவது கொடுமையானதாகும்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைக் கேட்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மன்னார் மீனவர்களுக்காக இந்த பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க முடியுமா ௭ன சவால் விடுக்கிறேன். மன்னார் முஸ்லிம் மீனவர்களின் நிலைமையினை நோக்குகையில் அன்னமிட்ட வீட்டில் கன்ன மிட்ட பாவிகள் மண்ணாகப் போவார்களே ௭ன்ற பாடலே ஞாபகத்தில் வருகிறது. இங்கு முஸ்லிம்களுக்கு ௭திராக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பாரிய சதியொன்று அரங்கேற்றப்படுகின்றது. அதன் ஒரு அங்கமாகவே மன்னார் வழக்கின்போது இடம்பெற்ற சம்பவமாகும். இந்த சதியில் நீதி வழங்க வேண்டியவர்களும் பங்குதாரர்களாக உள்ளனர்.

முஸ்லிம்களுக்கு ௭திரான சதி தொடர்பிலும் அதனுடன் தொடர்புபட்டிருப்பவர்கள் தொடர்பிலும் அரசு அறிந்து வைத்துள்ளது. யாரோ கல்லை ௭றிந்து விட்டு குழப்பத்தை விளைவிக்க முயற்சிக்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் கீழ் இந்நாட்டில் ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை. முஸ்லிம்களுக்கு அனைத்து மத உரிமைகளும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன ௭ன்றார்.

http://virakesari.lk/article/local.php?vid=69

இந்த கோமாளிக்கு மகிந்த துதி பாட வெளிக்கிட்டால் என்ன பேசுகிறேன் என்பது தெரியாமல் பேசும்.

பதியுதின் நீதிபதியை மிரட்டியதாக இந்த திருடர் கூட்டமே ஒத்துகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படத்தக்கதாக பகிரங்கமாகவேதான் பதியுதினின் நடவடிக்கை இருந்தது. பாதுகாப்பு அமைச்சின் உலங்கு வானூர்த்தியில் இருந்து மேற்பார்வை செய்துதான் பதியுதின் ஆணைகளை வழங்கினார்.

கக்கீமே தனது பேச்சுக்களில் பள்ளி வாசல்களை காப்பாற்ற வேண்டுமென்றால் தனது மந்திரிப்பதவியின் பேரம் பேசும் திறன் இன்னும் உயரவேண்டும் என்கிறார்.

இது இலங்கை மொட்டைகள் கூட்டத்தை தனி மனிதர்கள் என்று வர்ணித்து முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைத்து தனது மந்திரிப்பதவியை காப்பாற்றத்துடிக்கிறது.

இதுவேதான் தலைவரின் மனைவி மதிவதனிக்கு சாப்பாடுபோடுவது மகிந்த என்று கூறி, இலங்கை அரசாங்கம் மகிந்தாவின் தனிப்பட்ட சொத்து என்று பொருள்பட கதைத்து மகிந்தாவிடம் மன்னிப்பு கேட்டது.

இப்போது இப்படி கூறுகிறார். கூட்டு மொத்த கஞ்சா காய்கள் இதைவிட வடிவாக கதைக்கும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்த ஆட்சியின் கீழ் ௭ந்தவொரு பள்ளிவாசலும் உடைக்கப்படவில்லை:அஸ்வர் ௭ம்.பி.

Mahinda-Rajapaksa201.jpg

நான் ஏனு செப்பலேனு... :( :(

மகிந்த ஆட்சியில் பள்ளிவாசலை இனித்தான் உடைக்கவேண்டும் என்று கூறுகின்றாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.