Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியுயோர்க்கில் மன்மோகன்சிங்கை சந்திக்கும் மகிந்தவின் திட்டம் தோல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR-M.mohan.jpg

[size=4]இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நியுயோர்க்கில் சந்தித்துப் பேச சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச போட்டிருந்த திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பூகோள கால மீளாய்வின் போது சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

இதன்போது இந்தியாவின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த மீளாய்வுக்கு இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பொறுப்பாக நியமித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்த மூன்று நாடுகளும் ஆதரித்திருந்தன என்பது, சிறிலங்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது இந்தியாவுடன் இருக்கும் இடைவெளியைக் குறைத்து, அதன் ஆதரவை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக இந்தமாத பிற்பகுதியில் பசில் ராஜபக்ச தலைமையில் கோத்தாபய ராஜபக்ச, லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழுவை புதுடெல்லிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டது.

அந்தப் பயணத் திட்டத்தை புதுடெல்லி நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்தமாதம் ஐ.நா பொதுச்சபையின் ஆண்டுக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேச சிறிலங்கா அதிபர் மகிந் ராஜபக்ச திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அடுத்தமாதம் 25ம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாக, அமைச்சர் ஒருவரே இந்தியாவின் சார்பில் உரையாற்றவுள்ளார்.

இது சிறிலங்கா அதிபருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்மோகன்சிங்கை நியுயோர்க்கில் சந்திக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஒக்ரோபர் மாதத்தில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மாவிடம் தான் விரைவில் புதுடெல்லி வருவதாக சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. [/size]

[size=4]http://www.puthinapp...?20120817106817[/size]

[size=4]இரு மாந்தங்களுக்கு முன்னர் பிரேசிலில் சந்தித்தனர். பின்னர் மேனன் வந்தார். அதற்குபிறகு பசில் செல்ல இருந்தார், ஆனால் பயணம் - நிற்பாட்டப்பட்டது.இப்பொழுது இது, சந்திப்பு இல்லை. [/size]

[size=1]

[size=4]இந்திய மாற்றங்கள் சிறிதானவையாகவும் காலத்திற்கு தாமதமானவையாகவும் உள்ளன. [/size][/size]

மூதூரில் அனல் மின்நிலையம் அமைக்கவிட்டால் மன்மோகாகன் சிங் மகிந்தாவை சந்திக்க தயாராக இருக்கிறாராமா? அப்போது அனுமதிப்பத்திரம் தரப்படும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

இந்நிலையில், தற்போது இந்தியாவுடன் இருக்கும் இடைவெளியைக் குறைத்து, அதன் ஆதரவை பெறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.[/size]

shaving-cream3.s600x600.jpg

நாங்களெல்லாம் எதற்கு இருக்கம் இதுக்கா.. ஒ சேட்... :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.