Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா சிறைக்கைதிகள் மீதான வன்முறை – விசாரணைக்கு ஐ.நாவின் உதவியை நாடுமாறு அழைப்பு.

Featured Replies

சிறிலங்காவில் உள்ள சிறைகளில் இடம்பெறும் மிகமோசமான வன்முறைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு, ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் நாடவேண்டும் என்று சிறிலங்காவில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

சிறிலங்கா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு கைதிகளின் மரணத்தைத் தொடர்ந்தே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலம் வரை கோமாவில் இருந்த சிறைக் கைதி ஒருவர் கடந்த வாரம் மரணமடைந்திருந்தார். அண்மைய மாதங்களில் சாவைத் தழுவிக் கொண்ட இரண்டாவது சிறைக் கைதி இவராவார்.

இவ்விரு சாவுகளுக்கும் சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என மனிதஉரிமைச் செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆனால் இதற்கான பொறுப்பை ஏற்க சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

கடந்த ஜுனில் தமிழ்ப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட 30 சிறைக் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சிறிலங்காவில் உள்ள சிறைகளில் வன்முறை ஆரம்பமானது.

இவர்கள் வேறு சிறைகளுக்கு மாற்றப்படுவதற்கு முன்னும், அதற்குப் பின்னும் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்ட கைதிகளை சிறை அதிகாரிகள் தாக்கியதாக உரிமைச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கணேசன் நிமலரூபன் என்ற சிறைக்கைதி சிறை அதிகாரிகளின் தாக்குதலில் முதலில் சாவடைந்திருந்தார்.

இதே தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து சில வார காலமாக கோமா நிலையில் இருந்த மற்றொரு சிறைக் கைதியான மரியதாஸ் டில்ருக்சன் பின்னர் உயிரிழந்திருந்தார்.

சிறைக் கைதிகளின் மரணத்திற்கு சிறிலங்கா அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும், சிறை அதிகாரிகளால் சித்திரவதை புரியப்பட்டதே இவர்களது மரணத்திற்கு காரணம் எனவும் 28 பேரைக் கொண்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் அமைப்பு ஒன்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

‘இவ்வாறான சூழ்நிலையை கையாள்வது தொடர்பில் பொது அமைப்புக்களாகிய நாங்கள் உள்நாட்டில் நடைமுறையிலுள்ள பொறிமுறையில் அவநம்பிக்கை கொண்டுள்ளோம்’ என இக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் விசாரணை ஆணைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு சிறைச்சாலைகளில் இடம்பெறும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்கா அரசாங்கத்திடம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பொறுப்பதிகாரியை பி.பி.சி தொடர்பு கொள்ள முற்பட்ட போதிலும் அவரது தொடர்பைப் பெறமுடியவில்லை.

இது தொடர்பாக பதிலளிக்க சிறிலங்கா காவற்துறை பேச்சாளர் மறுத்ததுடன், டில்ருக்சனின் பிரேத பரிசோதனை தற்போது நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

நிமலரூபன் மாரடைப்பின் காரணமாகவே மரணித்ததாக ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது.

கடந்த சனிக்கிழமை டில்ருக்சனின் மரணச்சடங்கு இடம்பெற்ற யாழ்ப்பாணத்தில், எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘தமிழர்களைக் கொல்ல வேண்டாம்’ ‘அரசியல் கைதிகளை கொலை செய்தவர்களை கைது செய்’ என அவ் ஆர்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட டில்ருக்சன் தொடர்பாக, அவர் கடந்த ஜுனில் காயமடையும் வரை, எவ்வித தகவல்களையும் இவரது பெற்றோர் அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அரசியற் கைதிகள் நடத்தப்படும் முறைமையானது நீதிக்குப் புறம்பானது எனவும் மிகக் கொடிய செயல் எனவும் தமிழ் அரசியல்வாதியான வி.ஆனந்தசங்கரி விபரித்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் ஊடகங்கள் இக்கைதிகளை ‘அரசியற் கைதிகள்’ எனக் குறிப்பிடும் அதேநேரத்தில், சிங்கள ஊடகங்களில் இக்கைதிகள் ‘பயங்கரவாதிகள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

வழிமூலம் – பிபிசி

http://thaaitamil.com/?p=29190

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில் தமிழ் ஊடகங்கள் இக்கைதிகளை ‘அரசியற் கைதிகள்’ எனக் குறிப்பிடும் அதேநேரத்தில், சிங்கள ஊடகங்களில் இக்கைதிகள் ‘பயங்கரவாதிகள்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

பயங்கரவாதிகளின் மனித உரிமைகளையும் மீற முடியாது என்பதையும் சிங்கள ஊடகவியாலளர்கள் உணர வேண்டும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.