Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் படையினரின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகின்றது!

Featured Replies

வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவான படையினர் நிலைகொண்டுள்ளநிலையில் மிக குறைந்தளவு மக்களே அங்கு வாழ்ந்துவருகின்றார்கள் எங்கு பார்த்தாலும் படைமுகாம்களும் காவலரண்களும் இவற்றிற்கு மத்தியில் அரச இயந்திரங்களின் செயற்பாட்டினை தீர்மானிக்கும் சக்தியாக அங்குள்ள படையினரே காணப்படுகின்றார்கள்.

எங்கு பார்த்தாலும் பாடசாலை நிகழ்வாக இருந்தாலும்,கோவில் நிகழ்வாக இருந்தாலும் அங்கு படையினரின் ஆதிக்கமே அதிகமாக காணப்படுகின்றது இதில் பெருமளவான மக்களின்காணிகள் படையினரின் வசம் காணப்படுகின்றது முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த மக்களே போரின் போது அதிகளவான உயிர் இழப்பினையும் சொத்திழப்பினையும் எதிர்கொண்டு இன்னும் மீள்குடியேறாத நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

தற்போது குறிப்பாக முல்லைத்தீவின் கடற்கரை பகுதிகள் அண்டிய பகுதிகளை படையினர் தங்கள் கைவசம் வைத்துக்கொண்டு அங்கு சிங்கள மக்களை குடியேற்றும் திட்டங்களை மேற்கொண்டுவருகின்றார்கள்,மணலாறு என்று செல்லப்பட்ட வெலிஓயா பகுதியில் தற்போது ஜந்தாயிரம் வீடுகளை கட்டும்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன ஆனால்அங்கு தமிழ்மக்கள் எவரும் இல்லை முற்றுமுழுதாக சிங்கள குடியேற்றங்களே காணப்படுகின்றதுஅதேபோல் நாயாறுகடல் நீரேரி மற்றும் ஆண்டான்குளம் குமுழமுனை,செம்மனை,அளம்பில், பேன்ற பகுதிகளில் தமிழ்மக்களின் காணிகள் பெருமளவு படையினரின் ஆதிக்க்தின் கீழ் காணப்படுகின்றது குறிப்பாக தென்னந்தோப்புக்கள் பல படையினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றது இன்னிலையில் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் பாரிய மரக்கறிசெய்கை பண்ணப்படும் பண்ணையாகவும் அதற்கு அருகில் மீன்பிடிபண்ணைகளை அமைக்கும் நடவடிக்கையிலும் படையினர் ஈடுபட்டுள்ளார்கள் இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தின் முதன்மை குளங்களாக முத்தையன் கட்டுக்குளும் வுவனிக்குளம்,மற்றும் பெருமளவான குளங்களை அண்டிய வளந்தரும் நிலங்கள் படையினரின் ஆதிக்கத்தின் கீழ் காணப்படுகின்றது இன்னிலையில் தமிழ்மக்களின் காணிகளை வாங்கிக்கொண்டு அங்குள்ள இளைஞர்களை அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பும் நடவடிக்கையில் நாமல்றாஜபக்சவின் அடிவருடிகள் ஈடுபட்டுவருகின்றார்கள்,குறிப்பாக அளம்பில் செம்மலை பகுதிகளில் ஒருஏக்கர் தென்ந்தோப்பினை கொடுத்துவிட்டு தனது மகனை அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பிய பெற்றோர்களும் இருக்கின்றார்கள் இவ்வாறு நாளுக்கு நாள் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் ஆதிக்கம் தலைவிரித்தாடிக்கொண்டிருக்கின்றது

இவற்றுக்கொல்லாம் மேலாக படைபுலனாய்வாளர்கள் கிராமங்கள் தோறும் இளைஞர்களை தமது புலனாய்வு முகவர்களாக செயற்படுத்திக்கொண்டிருக்கின்றார்கள் இந்தபுலனாய்வு முகவர்கள் ஊடாக ஊரிற்கு புதிதாக செல்பவர்கள் பற்றிய தகவல்களும் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பான தகவல்களையும் திரட்டுகின்றார்கள் பல இளைஞர்கள் படையின் புலனாய்வாளர்களாக மாறி தங்கள் பிளைப்பினை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

இதேவேளை படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கு படையினரே உரிமைகோரும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் படையினரால் அபகரித்து வைத்துள்ள சுமார் 2 ஆயிரத்து 282 ஏக்கர் காணிக்குரிய அனுமதிப் பத்திரத்தை வழங்குமாறுபடையினர் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் வளமான விவசாயக் கிராமமாகக் காணப்பட்ட கேப்பாபுலவுக் கிராமத்தில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. தற்போது மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினரால் அபகரித்து வைத்துள்ளனர்.மேற்படி பகுதிகளை படையின் 59டிவிசனின் 1ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் அவற்றைத் தமக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளைத் தொடர்ந்தும் வற்புறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தப் பகுதியிலுள்ள மக்களை வேறிடம் ஒன்றில் மீள்குடியமர்த்துமாறும் படையினர் கூறி வருகின்றனர்.இதேவேளை இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதார வளங்களான கால்நடைகளும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் காணப்படுகின்றன. அத்துடன் இந்தப் பகுதி மக்களின் சிறுகடல் தொழில்களும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை படையினரால் தம்வசம் வைத்திருக்கின்றமையினால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் அவர்களின் வாழ்வாதாரங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலை தொடருமானால் தமது இருப்பே கேள்விக்குறியாகிவிடுமென இங்குள்ள மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

அத்துமீறிய சிங்கள கடற்தொழிலாளர்களின் ஆதிக்கத்தினால் கடல்தொழில்செய்யும் மக்களின் தொழில் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது விவசாய செய்கையும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சங்கதி24செய்திஆய்வு

http://thaaitamil.com/?p=29227

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அங்கு இல்லாத நிலையில் சிங்களவனிடம் என்னத்தை எதிர்பார்க்க முடியும் ?

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் படையினரின் ஆதிக்கம் தலைவிரித்தாடுகின்றது!

வேறு எதை நாம் தற்போது அங்கு எதிர்பார்க்கலாம்??? :( :( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.