Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ உட்கட்டுமானங்கள்

Featured Replies

[size=4]22048_1338224462674_1443010417_949736_5917993_a.jpg[/size]

*தமிழீழ மாவட்டங்கள்

{1}யாழ்ப்பாணம் {சப்ததீவுகள் உட்பட}

{2}மன்னார்

{3}கிளிநொச்சி

{4}வவுனியா

{5}திருகோணமலை

{6}மட்டக்களப்பு

{7}அம்பாறை

{8}புத்தளம்

{9}முல்லைத்தீவு

*தமிழீழ உட்கட்டுமான

அமைப்புகள்

வழங்கற் பிரிவு

மருத்துவப் பிரிவு

கொள்முதல் பிரிவு

பரப்புரைப் பிரிவு

தமிழீழப் பொறியியற்றுறை

வெடிபொருள் தொழில்நுட்பப் பிரிவு

கணிணி தொழில்நுட்பப் பிரிவு

இலத்திரனியல் தொழில்நுட்பப் பிரிவு

போர்கருவித் தொழிற்சாலை

தமிழீழ இராணுவ விஞ்ஞானக் கல்லூரி

விடுதலைப்புலிகளின் ஆங்கிலக் கல்லூரி

திரைப்பட , புத்தக மொழிபெயர்ப்புத் துறை

புலனாய்வுத் துறை

தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியற்றுறை

தமிழீழ விளையாட்டுத் துறை

தமிழீழக் கல்வி மேம்பாட்டுக் கழகம்

தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம்

தமிழீழ நீதித்துறை

தமிழீழ நிர்வாக துறை

தமிழீழ நிதித் துறை

தமிழீழ வைப்பகம் (வங்கி)

தமிழீழக் காவல்துறை

விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு

சூழல் நல்லாட்சி ஆணையம்

தமிழீழ வனவளப் பாதுகாப்புப் பிரிவு

தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்

பொருண்மிய மதியுரையகம்

தமிழீழக் காலநிலை அவதானிப்பு நிலையம்

தமிழீழக் காட்டுமானப் பொறியியற்செயலகம்

வடகிழக்கு மனித உரிமைகள் செயலகம்

ஓளிக்கலைப்பிரிவு ( நிதர்சனம், ஒளி வீச்சு)

விடுதலைப்புலிகளின் வெளியீட்டுப் பிரிவு

புலிகளின் குரல் ( வானொலி)

விடுதலைப்புலிகள் பத்திரிகை

எரிமலை சஞ்சிகை

தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி

*தமிழீழபடையணிகள்

கடற்புலிகள்

வான்புலிகள்

லெப். கேணல் இராதா விமான எதிர்ப்புப் படையணி

மாலதி படையணி ( பெண்புலிகள்)

சோதியா படையணி ( பெண்புலிகள்)

அன்பரசி படையணி ( பெண்புலிகள்)

சிறுத்தைகள்

கரும்புலிகள்

கடற்கரும்புலிகள்

கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணி

லெப். கேணல் விக்ர் கவசவாகன எதிர்ப்புப் படையணி

லெப். கேணல் குட்டிசிறி மோட்டார்ப் படையணி

ஜெயந்தன் படையணி

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி

இம்ரான் பாண்டியன் படையணி

இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி

எல்லைப் படை

துணைப்படை

நன்றி - ஈழம் தேவதை

[size=4]தமிழ்மொழியின் தனித்தன்மை / தனிமாட்சி

1) தமிழ் குமரிநாட்டில் தோன்றிய உலகத்தின் முதன்மொழி.

2) ஒரு தனிமொழி அல்லது உலக முதமொழியின் ஆக்கத்தினை அல்லது படிநிலை உருவாக்கத்தைத் தமிழ் மொழியே காட்ட வல்லதாக உள்ளது.

...

3) தமிழ்ச் சொற்கள் இல்லாத மொழிகள் உலகிலேயே ஒன்றுகூட இல்லை.

4) அறிவியல் அல்லது தருக்க (Logical) அமைப்புடையது தமிழ்மொழி.

5) உயர்ந்தனிச் செம்மொழிகள் ( Classical Language ) எனத்தகுதி பெற்றவை ஒருசில மொழிகளே. அவற்றுள் தமிழ் மட்டுமே உலகவழக்கு அற்றுப்போகாமல் முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னைப் புதுமைக்கும் போர்த்தும் அப்பெற்றியதாய், இருவழக்கும் பெற்று என்றும் குன்றாத சீரிளமைத் திரத்தோடு நின்று கன்னித்தமிழொன்று வாழ்கின்றது.

6) தமிழ் தனது செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியைவிட பண்பட்டதாயும் சரியானதாயும் ; பேச்சு வழக்கு செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிலும் கடன்பெற்றுள்ள சொற்செல்வங்களுடன் விளங்கும் இலத்தீன் மொழியைவிடச் சொல்வளம் உள்ளதாயும் விளங்குகிறது என்று குறிப்பிடுவது அளவுகடந்து கூறுவதாகாது. (வின்சுலோ)

7) அது (தமிழ்), இனிமை என்று பொருள்படுதற்கு ஏற்ப அதனிட்த்தில் கேட்டாரைத் தன்வயமாக்கும் இனிமை பொருந்தியிருப்பதற்கு ஐயமில்லை. (வின்சுலோ)

8) ஆற்றல் மிக்கதாகவும், சில சொற்களால் கருத்தைத் தெரிவிப்பதாகவும் விளங்குவதில் தமிழ்மொழியை எந்த மொழியும் மிஞ்சமுடியாது. உள்ளத்தின் பெற்றியை எடுத்துக் காட்டுவதில் வேறெந்த மொழியும் தமிழைவிட இயைந்ததாக இல்லை. (பெர்சிவல்)

9) எந்நாட்டினரும் பெருமைக் கொள்ளக்கூடிய இலக்கியம், தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தைத் தருவது. (எப்.டபிள்யு. கெல்லட்)

10) தமிழ் போன்ற தமிழிய மொழிகளை நன்றாகக் ஐரோப்பியர் ஒருவர் அத்தகைய வியத்தகு மொழியை வளர்த்துள்ள மக்கள் இனத்தை மதிப்போடு கருதாமல் இருக்க முடியாது

11) தமிழ், தான் ஏற்றிருக்கும் சமற்கிருதச் சொற்களில் பெரும்பகுதியை, ஏன் அவை அனைத்தையுமே அறவே கைவிட்டு, அவ்வாறு கைவிடுதாலொன்றிலேயே பெருநிலைமைப் பெற்றுவிடும். (அறிஞர் கார்ல்டுவெல்)

12) பயிலுவதற்கும் அறிவதற்கும் மிக இலேசுடையதாய் , பாடுதற்கும் துதித்தற்கும் மிகவும் இனிமையுடையதாய், “சாகாக் கல்வியை” எளிதில் அறிவிப்பதாய் அறிவிப்பதாய் அமைந்த்து தமிழ்மொழி.

13) தமிழ்மொழி ஒரு திறவி (சாவி) போன்றது. அதைக் கொண்டு உலகம் என்னும் பெரிய பூட்டைத் திறக்கலாம். இன்னும் சரியாகச் சொன்னால், தமிழ் ஒரு மாபெரும் மலையைப் போன்றது; அதில் முதலில் ஏறுவதற்குக் கொஞ்சம் கடினமாக இருக்கும், ஆனால் அதன் உச்சியை அடைந்துவிட்டால் ஒரு புதிய உலகத்தையே பார்க்கலாம். (ஆறாம் உ.த மாநாட்டில் அமெரிக்க அறிஞர்)

14) தொன்மை, முன்மை, ஒன்மை (ஒளிமை), எண்மை (எளிமை), இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை எனப் பதினாறு வளங்களும் நிறைவாக உடையது. (மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள்)

15) எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் மட்டுமல்ல வாழ்க்கையின் இலக்கணமான பொருளிலக்கணமும் முறைப்படக் கொண்டு, அகம்-புறம் என இருதிறத்தும் அறம், பொருள், இன்பம், வீடு என வகைப்பட்டு அவற்றை அறிவு-பகுத்தறிவு-மெய்யறிவு-வாலறிவு எனத் தம் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்பக் கொண்டு ஒழுகி வந்த பொய்யாமை ஏன்ற சமயத்தை அல்லது வாழ்க்கை நெறியை முக்காலப் பொருத்தமாய் உலகினுக்கு தந்தது தமிழேயாகும். (மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)

16) உலக ஒற்றுமை அல்ல்லது மாந்தநேயம் என்று உலகியம் பேசும் அறிஞர்கள்; தனித்தூய தமிழைக் கடைப்போக ஆராய்ந்து பார்ப்பார்கள் ஆயிடின் தமிழே உலகப்பொதுமொழியாய் – தாய்மொழியாய் – உயிரியக்க உறவுமொழியாய் – மாந்தநேய மாண்புவழியாய் – சமய நெறியாய் – ஓருலக இனத்தின் இனப் பெயராய் விளங்கும் நடுநிலையான உண்மையைத் தெளிவர். உலகமக்கள் யாவரும் ஒருமூத்தவர் என்பதறிந்து அகங்களிப்பர் – அகங்கலப்பர் – இகல் மறப்பர்.

((மெய்ப்பொருள் ஞாயிறு பாவலர் அ.பு திருமாலனார்)[/size]

Edited by யாழ்அன்பு

தம்பி தமிழீழன் இப்ப உதை எழுதி என்னத்தை காணப் போறியள்?

தமிழீழன் மணலாறு மாவட்டத்தை விட்டுவிட்டீர்கள் என்று ஈழம் தேவதையிடம் சொல்லுங்கள்.

அது தவிரவும் ,

தமிழீழ விடுதலைபுலிகளின் சர்வதேச பிரிவு

இராணுவ புலனாய்வுத்துறை

மயூரன் குறி சூட்டு படையணி

யாழ் செல்லும் படையணி

மற்றும் கடற்புலிகளின் நீரக நீச்சல் படையணி உட்பட பல படையணிகள் விடுபட்டு உள்ளன.

Edited by பகலவன்

தம்பி தமிழீழன் இப்ப உதை எழுதி என்னத்தை காணப் போறியள்?

இதுவும் ஒரு வரலாறுதான்.

  • தொடங்கியவர்

தமிழீழன் மணலாறு மாவட்டத்தை விட்டுவிட்டீர்கள் என்று ஈழம் தேவதையிடம் சொல்லுங்கள்.

அது தவிரவும் ,

தமிழீழ விடுதலைபுலிகளின் சர்வதேச பிரிவு

இராணுவ புலனாய்வுத்துறை

மயூரன் குறி சூட்டு படையணி

யாழ் செல்லும் படையணி

மற்றும் கடற்புலிகளின் நீரக நீச்சல் படையணி உட்பட பல படையணிகள் விடுபட்டு உள்ளன.

1) அன்பு உறவு பகலவன், உண்மையில் தமிழீழ மாவட்டங்கள் எட்டு என்பதே எனது எண்ணம் மணலாறு மாவட்டம் என்பது (வெலிஓயா) முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து சிறிலங்கா நிர்வாகப் பிரிவின் பிரகாரம் உருவாக்கப்பட்ட பகுதி. உதாரணத்துக்கு, தமிழீழ நிர்வாக முறைமையில் மணலாறு மாவட்ட நீதிமன்று, மணலாறு மாவட்ட அரசியல்துறை போன்ற நிர்வாக அமைப்புக்களை தமிழீழநிர்வாக உட்கட்டுமானம் கொண்டிருக்கவில்லை. அதனால் தமிழீழ நிர்வாக வடிவமைப்பில் மணலாறு மாவட்டமாக கணிப்பிடப்படவில்லை என்றே நான் கருதுகின்றேன். ஆனால், முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று முல்லைத்தீவு மாவட்ட அரசியல்துறை போன்ற கட்டுமானங்கள் இருந்தன இதற்கு உட்பட்டதே மணலாறு.

அதே போன்றே மட்டக்களப்பு, அம்பாறை என்பதும் சிறிலங்கா நிர்வாகப் பிரிவின் அடிப்படையில் இரண்டு மாவட்டங்களாயினும் தமிழீழ நிர்வாக முறையில் மட்டு/அம்பாறை என்பது ஒரே மாவட்டமே நிர்வகிக்கப்பட்டது. எனினும், நிகழ்வுகளின் போதும் செய்திகளின் போதும் மணலாறு, மட்டக்களப்பு, அம்பாறை என தனித்தனியாக அவைகள் எம்மால் மாவட்டங்களாக விளிக்கப்பட்டும் அழைக்கப்பட்டும் வந்துள்ளன என்பதும் உண்மையே.

2) தமிழீழ உட்கட்டுமானங்களுக்குள் தமிழீழ விடுதலைபுலிகளின் சர்வதேச பிரிவு வராது என்பது எனது தாழ்மையான கருத்து.

3) மேலும் விடுபட்டுப்போனதாக சில படையணி, நிர்வாக பெயர்களை தந்துள்ளீர்கள் நன்றி. அவைகளை விடவும் இன்னும் பலவும் உண்டு என்பதையும் அன்புடன் தெரிவிக்கின்றேன். விசாலகன் படையணி, தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ இசைக்குழு, தமிழீழ மாவீரர் பணிமனை, தமிழீழ மாவீரர் போராளிகள் குடும்பநலக் காப்பகம், தமிழீழ அரசியல் துறை மகளிர், தமிழீழ...... இப்படி இன்னும் நிறையவே உண்டு பகலவன். இவைகள் யாவும் இன்னொன்றின் கீழ் வருவதால் பதிந்தவரால் அவைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். எடுத்துக்காட்டாக, தாங்கள் இறுதியாக குறிப்பட்ட கடற்புலிகளின் நீரக நீச்சல் படையணியை எடுத்துக்கொள்வோம் மன்னிக்கவும் அது கடற்புலிகளின் நீரக நீச்சல் படையணி அல்ல அது கடற்புலிகளின் நீரடிநீச்சல் பிரிவு. அது கடற்புலிகளின் கீழ் வருகின்றது. நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி தமிழீழன்.

நன்றி தமிழீழன் உங்கள் பொறுமையான பதிலிற்கு.

மணலாறு மாவட்டம் அரசியல் ரீதியாக உள்வாங்கபடாவிட்டாலும், மணலாறு மாவட்ட தளபதி (லெப் .கேணல் அன்பு) போன்று இராணுவ மாவட்டமாக கருதபட்டமையால் தான் கேட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.