Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகன சாரதிகளுக்கான நாளாந்த உதவி குறிப்புக்கள்

Featured Replies

2012 ஜனவரி தொடக்கம் யாழ் இணையத்தில் நாம் நாளாந்தம் வழங்குகின்ற சாரதிகளுக்கான உதவி குறிப்புக்களை தொகுத்து இங்கு இணைக்கிறோம், பயன் பெற்று கொள்ளுங்கள். இந்த உதவி குறிப்புக்களில் ஏதும் சந்தேகம் அல்லது தெளிவில்லாமல் தோன்றினால் கேளுங்கள். விளக்கம் தர முயற்சிக்கிறோம்.

இவை பிரதானமாய் கனடா நாட்டில் ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் சாரதிகளுக்கானவை. ஆயினும், ஒரு சில குறிப்புக்கள் தவிர மிகுதியானவை பொதுவாய் வட அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் பயன் உள்ளவை.

____________________________________________________________________________

-------------------------------------------------------------------------------------------------------------------------

.....................................................................................................................................................

வாகனம் நிறுத்த கூடாது என சொல்லப்பட்ட இடத்தில் வாகனத்தை park செய்தால் மூன்று மடங்கு அபராதம் கிடைக்க கூடும்.

winter காலத்தில் சூரியன் தாழ் வானத்தில் நிற்கும் போது சரியாக கண் கூசும். sun glass பாவியுங்கள்.

பாடசாலைகள் மீண்டும் தொடங்கி விட்டன. பாடசாலை சூழலில் வாகனத்தை அவதானமாக ஓடுங்கள். பாடசாலை சூழலில் மற்றைய வாகனங்களை முந்தி பிடிக்காதீர்கள்.

பலமான காற்று, மழை, பனி கொட்டும் நேரங்களில் உங்கள் வாகனத்திற்கும் முன்னால் செல்கின்ற வாகனங்களிற்கும் இடையில் போதியளவு இடைவெளியை ( space cushion ) பேணுங்கள்.

நீங்கள் ஓடும் வாகனத்தில் உங்கள் பாதுகாப்பு வாகனத்தை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடிய சாரதி உங்களில் தங்கி உள்ளது.

வாகனம் ஓடும்போது தற்செயலாக gas pedal உட்பக்கமாக செருகுபட்டால் கைகளை நீட்டி சரி செய்ய முயற்சிக்காதீர்கள்.

வாகனம் ஓடும் போது உங்கள் கவனத்தை சிதறடிக்கும்/வீதி விபத்து ஏற்பட இடம் அளிக்கும் செயற்பாடுகளை தவிர்த்து கொள்ளுங்கள்..

சீரான வேகத்தில் ஓடும் போது எரிபொருளை சேமிக்க முடியும். வேகமாக ஓடும் போது மேலதிகமாக எரிபொருள் தேவைப்படும்.

அவசியமானபோது என்ன செய்ய போகின்றீர்கள் என நீங்கள் சிக்னல் போட்டு காட்டாவிட்டால் மற்றைய வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்படலாம்.

வாகனத்தினுள் நுழைவது தொடக்கம் வெளியேறும் வரை வாகனத்தை ஓடுவதில் ஆற்றல்களை தினமும் மேம்படுத்துங்கள்.

வாகனத்தின் ரயர்களை அடிக்கடி பரிசோதித்து நல்ல நிலையில் வைக்கா விட்டால் விபத்துக்கள் ஏற்படலாம்.

பனி/ஈரம்/மழை தேங்கிய வீதிகளில் அளவில் பெரிய வாகனங்களை அண்மிக்கும் போது wipersஐ போட்டு கண்ணாடியூடான தெளிவான பார்வையை உறுதி செய்யுங்கள்.

வின்றர் காலத்தில் சாரதியின் காலடியில் புதிய இறப்பர் விரிப்பை போடும் முன்னர் பழையதை அகற்றுவது முக்கியம். பழையதுக்கு மேல் புதியதை போடாதீர்கள்.

வீதி சட்டவிதிகளின் பிரகாரம் நீங்கள் கவலையீனமாக வாகனம் ஓடினால் உங்களுக்கு அபராதமும், அத்துடன் சிறைத்தண்டனையும் கிடைக்கலாம்.

திட்டமிட்ட காப்புறுதி, விபத்து மோசடிகள் வாகனத்தை ஓடுகின்ற அனைவரையும் பாதிக்கின்றன. Crime Stoppers 1-800-222-TIPS

நீண்ட பயணங்களில் உங்கள் வாகனத்தின் ரயர் அழுத்தம், திரவம்/fluid அளவு, விளக்குகள், சிக்னல், இதர பழுது/குறைபாடுகள் இவற்றை பயணத்தின் முன்பே சரி/சோதனை செய்வது அவசியம்.

வாகனத்தை ஓடாமல் எஞ்சினை மட்டும் சும்மா வேலை செய்ய விடுவதால் (Idling) எஞ்சினின் ஆயுள் குறையும், எரிபொருள் வீணாகும், சூழல் மாசுபடும், பணமும் விரயமாகும்.

பாடசாலை பேருந்து சிவப்பு Flashஉடன் நிற்கும்போது இரண்டு திசைகளிலும் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை: $400 தொடக்கம் $4000 வரை அபராதம் அத்துடன் ஆறு demerit புள்ளிகள்.

சிறுவர்களை ஒருபோதும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லாதீர்கள். வீட்டு கராச்சில், பாதையில் உள்ள உங்கள் வாகனங்களை சிறுவர்கள் நுழைய முடியாதவாறு பூட்டி வையுங்கள்.

Highway Traffic Act பகுதி150. (1) இன் படி 80km/h வேகத்திற்கு கூடிய அத்துடன் median strip (இடைமறிப்பு கட்டு) உள்ள வீதிகளில், வாகனங்கள் எதுவும் வீதியிலோ அல்லது வீதி ஓரமாகவோ ரிவர்ஸ் செய்யகூடாது.

இருக்கை பட்டியை (seat belt) சரியான முறையில் அணிவது விபத்தின் போது உங்களிற்கு வெளிக்காயம், உட்காயம் ஏற்படுவதை குறைப்பதற்கு/தவிர்ப்பதற்கு உதவும். இல்லாவிட்டால் விபத்தின்போது தலை அடிபடுவதோடு, உட்காயங்களும் ஏற்படலாம்.

உங்கள் வாகனத்தில் ரயர்களின் அழுத்தத்தை (பிரசரை) அடிக்கடி சரிபார்த்து சீராக பேணுவது முக்கியமானது ஆகும்.

உருண்டு செல்லக்கூடிய பொருட்களை ஒருபோதும் வாகனத்தின் தரையில் போடாதீர்கள். அவை உருண்டு சென்று சாரதி வாகனத்தை கட்டுப்படுத்தும் pedalsக்கு கீழ் செருகுப்பட்டு விபத்து ஏற்படலாம்.

முறைகேடாக ஓடக்கூடிய சாரதிகளினால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளை சமாளிக்கும் வகையிலும் உங்களுக்கு வாகனம் ஓடத்தெரிய வேண்டும்.

முன்னுரிமை கொடுத்தல் (Right-of-Way), வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகம், நிறுத்தும் சிக்னல், சைகை இவற்றைஅனுசரித்து போகாமை, சாரதியின் கவனம் இன்மை பாரிய விபத்துக்கள் ஏற்படுவதற்கு வழிகோலுகின்றன.

புகையிரத கடவை வரும் போது வாகனத்தின் பாட்டு பெட்டியை நிறுத்தி, யன்னலை சற்று இறக்கி, எச்சரிக்கை மணி, விசில் சத்தம் இவற்றை அவதானித்து பாதுகாப்பை உறுதிசெய்து கடவுங்கள்.

உங்கள் வீட்டுபுறமாயினும் சரிவான தரையில் வாகனத்தை நிறுத்தினால் கட்டாயம் hand brakeஐயும் மேலதிகமாக போடவேண்டும்.

வாகனம் ஓடுவதற்கு முன்னர் போதியளவு தூக்கத்தை பெறுங்கள். களைப்பு, சோர்வுடன் வாகனம் ஓடுவது மிகவும் ஆபத்தானது.

நீங்கள் வாகன காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டால் $5000 தொடக்கம் $25,000வரை உங்களுக்கு அபராதம் கிடைக்கும்.

வாகனம் ஓடும் போது கவன குறைவுடன் வளைவுகளில் திரும்புதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். வளைவுகள் ஊடாக வாகனம் ஓடும் போது கடினமாக பிரேக் அடிப்பது, gas pedal ஐ கடினமாக மிதிப்பது இரண்டுமே ஆபத்தானவை.

வீதி திருத்த வேலைகள் நடைபெறும் இடங்களில் ஆட்கள் வேலை செய்யும்போது போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரியின் பணிப்புரைகளிற்கு கட்டுப்படாவிட்டால் தண்டனை : $500 அபராதம் அத்துடன் மூன்று Demerit புள்ளிகள்.

அவசரகால நேரத்தில் Emergency வாகனங்கள் நிறுத்தி நிற்கும்போது அவற்றை விலத்தி செல்லாவிட்டால் (Move Over Law) தண்டனை $2000 குற்றப்பணம் + 3 demerit புள்ளிகள். தொடர்ந்தும் அதே தவறை செய்தால் தண்டனை $4000 குற்றப்பணம் + 06 மாதங்கள் சிறைத்தண்டனை + 02 வருடங்கள் சாரதி அனுமதி பத்திரம் இரத்து.

சிவப்பு விளக்கு எரியும்போது வலது பக்கம் திரும்புவதாக இருந்தால் திரும்பும் அதே ஒழுங்கையில் வேறு வாகனங்கள் வராவிட்டாலும் உங்கள் வாகனத்தை சந்தியில் முழுமையான நிறுத்தத்திற்கு கொண்டுவந்த பின்னரே பாதுகாப்பாக வலது திருப்பத்தை செய்ய வேண்டும்.

முறையான காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அகப்பட்டால் அதிகூடிய அபராதம் கிடைப்பதோடு எதிர்காலத்தில் காப்புறுதி கட்டணம் அதிகளவு உயரலாம்.

எவ்வளவு தூரம் பார்க்கமுடியும், எவ்வளவு தெளிவாக பார்க்க முடியும் என்பவை நீங்கள் அறியாமலேயே உங்கள் கண்களில் மாறலாம். எனவே, கிரமமாக உங்கள் கண்களை நீங்கள் பரிசோதனை செய்வது அவசியம் ஆகும்.

வாகனத்தை நீங்கள் வேகமாக ஓடுவதால் சேமிக்ககூடிய நேரத்தை விட, வாகனத்தின் வேகத்தை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய வாகன விபத்தின் பாதிப்பு மிக கடுமையானது.

துவிச்சக்கர வண்டி/சைக்கிளும் ஒரு வாகனமே. சைக்கிள் ஓடுபவர்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் வீதி போக்குவரத்து குற்ற செயல்களுக்கான தண்டனையை/அபராதத்தை பெறவேண்டும்.

ரிவர்ஸ் செய்யும்போது யாராவது உதவியானால் ஒழிய டிரக், பேருந்து இவற்றின் சாரதியால் முழுமையாக பின்னால் தெளிவாக பார்க்க முடியாது. ரிவர்ஸ் செய்யும் இந்த வாகனங்களுக்கு அருகில் இல்லாமல் தள்ளி நில்லுங்கள்.

நாட்டுப்புற சாலைகளில் (country roads) வழமையில் நிர்ணயிக்கப்பட்ட வேகம் அதிகமாக இருப்பதாலும், ஒழுங்கை மாறும் போது எதிர்ப்புறமாக வரும் வாகனங்களின் ஒழுங்கையை பகிர்ந்துகொள்ள வேண்டி நேருவதாலும் (if unmarked) ஒழுங்கை மாற்றம் செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை.

வாகனத்தில் திருட்டினால் பாதிக்கப்படாமலிருக்க எல்லா யன்னல் கண்ணாடிகளையும் முழுவதுமாக மூடுங்கள், பெறுமதியான பொருட்களை வாகனத்தினுள் வெளியார் பார்வைக்கு தெரியும்படி வைக்காதீர்கள், வாகனத்தின் கதவுகளை lock செய்யுங்கள்.

அதிக பாரம் (ஆட்கள்/பொருட்கள்) ஏற்றப்பட்ட வானில் புவியீர்ப்பு மையம் மேலே உயர்வதால் வேகமாக ஓடும் சமயத்தில் அவசரமாக நிறுத்தம் செய்ய முற்படும் போது வாகனம் உருண்டு கவிழ்வதற்கான சாத்தியம் அதிகரிக்கின்றது.

புகையிரதம் முந்திப்பிந்தி வரலாம். புகையிரத கடவையை ஒவ்வொரு தடவையும் கடக்கும்போது எச்சரிக்கை தேவை. புகையிரதம் வரும் சமயத்தில் பொறுமை இல்லாமல் வேகமாக நீங்கள் கடக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது.

விபத்து ஏற்படும் போது வாகனத்தில் காற்றுப்பை (airbag) மணிக்கு 200 தொடக்கம் 300 மைல் வேகத்தில் விரிகின்றது. காற்றுபையுக்கு அருகாக இருந்தால் அல்லது பாதுகாப்பு பட்டியை அணியாவிட்டால் காற்றுப்பை தாக்கி சிறுவரிற்கு பாரதூரமான காயம் ஏற்படலாம்.

தெரு உங்களுக்கு மட்டுமானது அல்ல. ஹைவேயில் மற்ற வாகனங்கள் நுழைவதற்கு இடம் விட்டுக் கொடுங்கள். மற்றைய வாகனங்களை வெட்டி மறித்து ஓடாதீர்கள்.

தொடரும்.

முழுமையான குறிப்புக்களின் லிங்க்: http://www.yarl.com/...&member_id=9041

Edited by போக்குவரத்து

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், போக்குவரத்து!

இந்த விதிகள், எல்லா நாட்டுக்கும் பொருந்துகிறது!

கடும் பனியையும், அபராதத் தொகையையும் தவிர!

  • கருத்துக்கள உறவுகள்

கோடை காலங்களில், நகரத்துள்... வாகனம் ஓடும் போது,

எமது கவனத்தை, அங்கு நடந்து செல்லும்... பெண்கள், ஆண்கள் மீது செலுத்தக் கூடாது.

மினி உடைகளுடன், செல்லும் அவர்களை... நாம் பிராக்குப் பார்த்தால்....

முன்னுக்கு.. சிக்கனலில் நிற்கும், வாகனத்துடன் மோத வேண்டி வரும். :lol::icon_idea::D

Edited by தமிழ் சிறி

பலருக்கு பயனளிக்ககூடிய நல்லதொரு ஆக்கத்தை தந்தமைக்கு போக்குவரத்திற்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடை காலங்களில், நகரத்துள்... வாகனம் ஓடும் போது,

எமது கவனத்தை, அங்கு நடந்து செல்லும்... பெண்கள், ஆண்கள் மீது செலுத்தக் கூடாது.

மினி உடைகளுடன், செல்லும் அவர்களை... நாம் பிராக்குப் பார்த்தால்....

முன்னுக்கு.. சிக்கனலில் நிற்கும், வாகனத்துடன் மோத வேண்டி வரும். :lol::icon_idea::D

வாகனஓட்டுனர் அனுமதிப்பத்திரத்திற்கான கேள்விகளில் ஒன்று-:

1)வாகனம் ஓட்டும் போது ஒருபெண் தலையணைஉறை போன்ற உடையுடன் நடந்து சென்றால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

a) கந்தசஷ்டி கவசத்தை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும்.

b) உங்கள் வாகனத்தை நிறுத்தி கைத்தொலைபேசி இலக்கத்தை அவரிடம் கொடுக்க வேண்டும்.

c)டாடி மம்மி வீட்டிலில்லை என்ற பாடலை உரக்க ஒலிக்க விட வேண்டும்.

d)ஹோர்ண் அடித்து அவரை உற்சாகப்படுத்த வேண்டும்.

:icon_mrgreen:

c

  • தொடங்கியவர்

கருத்துக்களை கூறியவர்கள், விருப்பத்தெரிவை வழங்கியவர்கள் அனைவருக்கும் நன்றி.

தொடர்ச்சி:

உங்கள் வாகனத்தின் டயர்கள் நல்ல நிலையில் காணப்பட்டால் அத்துடன் அவற்றின் அழுத்தத்தை சரியாக பேணினால் வாகனத்தில் எரிபொருள் மேம்பாட்டை மூன்று வீதத்தினால் அதிகரிக்க முடியும் (gas mileage by 3 percent).

வாகனம் ஓடும்போது உங்கள் உணர்ச்சிகளை (Emotions) இயலுமானவரை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். கோபம், கவலை, அதிகமகிழ்ச்சி இவை நீங்கள் வாகனம் ஓடுவதை பாதிக்கலாம். இதனால் விபத்துக்கள் ஏற்படலாம்.

உங்கள் வாகனம் தீப்பிடித்தால் வாகனத்தை பாதுகாப்புடன் உடனடியாக நிறுத்திவிட்டு வாகனத்தில் உள்ளவர்கள் அனைவரும் வெளியேறி அதிலிருந்து விலகிச் செல்லுங்கள். Hoodஐ திறந்து பார்க்க முயற்சிக்காதீர்கள், திறந்தால் தீ அதிவேகமாக வாகனமெங்கும் பரவக்கூடும்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓடுவது போன்ற தாக்கத்தை சோர்வுடன் வாகனம் ஓடுவது ஏற்படுத்தக்கூடியது. சோர்வுடன் வாகனம் ஓடும்போது உங்கள் விழிப்புணர்வு குறைகின்றது, விபத்து ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கின்றது.

சைக்கிளில்(துவிச்சக்கரவண்டி) ஓடுபவர்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிவிலக்கு இல்லை. அவர்கள் ஒரு வழிப்பாதையில் எதிர்ப்புறமாக (opposite direction of oneway street) சென்றால் HTA, சரத்து 153இன் படி $85 குற்றப்பணம் செலுத்த வேண்டும்.

வாகனம் ஓடும் போது கவன குறைவுடன் வளைவுகளில் திரும்புதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். வளைவுகள் ஊடாக வாகனம் ஓடும் போது கடினமாக பிரேக் அடிப்பது, gas pedal ஐ கடினமாக மிதிப்பது இரண்டுமே ஆபத்தானவை.

வீதி திருத்த வேலைகள் நடைபெறும் இடங்களில் ஆட்கள் வேலை செய்யும்போது போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரியின் பணிப்புரைகளிற்கு கட்டுப்படாவிட்டால் தண்டனை : $500 அபராதம் அத்துடன் மூன்று Demerit புள்ளிகள்.

அவசரகால நேரத்தில் Emergency வாகனங்கள் நிறுத்தி நிற்கும்போது அவற்றை விலத்தி செல்லாவிட்டால் (Move Over Law) தண்டனை $2000 குற்றப்பணம் + 3 demerit புள்ளிகள். தொடர்ந்தும் அதே தவறை செய்தால் தண்டனை $4000 குற்றப்பணம் + 06 மாதங்கள் சிறைத்தண்டனை + 02 வருடங்கள் சாரதி அனுமதி பத்திரம் இரத்து.

சிவப்பு விளக்கு எரியும்போது வலது பக்கம் திரும்புவதாக இருந்தால் திரும்பும் அதே ஒழுங்கையில் வேறு வாகனங்கள் வராவிட்டாலும் உங்கள் வாகனத்தை சந்தியில் முழுமையான நிறுத்தத்திற்கு கொண்டுவந்த பின்னரே பாதுகாப்பாக வலது திருப்பத்தை செய்ய வேண்டும்.

முறையான காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அகப்பட்டால் அதிகூடிய அபராதம் கிடைப்பதோடு எதிர்காலத்தில் காப்புறுதி கட்டணம் அதிகளவு உயரலாம்.

எவ்வளவு தூரம் பார்க்கமுடியும், எவ்வளவு தெளிவாக பார்க்க முடியும் என்பவை நீங்கள் அறியாமலேயே உங்கள் கண்களில் மாறலாம். எனவே, கிரமமாக உங்கள் கண்களை நீங்கள் பரிசோதனை செய்வது அவசியம் ஆகும்.

வாகனத்தை நீங்கள் வேகமாக ஓடுவதால் சேமிக்ககூடிய நேரத்தை விட, வாகனத்தின் வேகத்தை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய வாகன விபத்தின் பாதிப்பு மிக கடுமையானது.

துவிச்சக்கர வண்டி/சைக்கிளும் ஒரு வாகனமே. சைக்கிள் ஓடுபவர்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் வீதி போக்குவரத்து குற்ற செயல்களுக்கான தண்டனையை/அபராதத்தை பெறவேண்டும்.

ரிவர்ஸ் செய்யும்போது யாராவது உதவியானால் ஒழிய டிரக், பேருந்து இவற்றின் சாரதியால் முழுமையாக பின்னால் தெளிவாக பார்க்க முடியாது. ரிவர்ஸ் செய்யும் இந்த வாகனங்களுக்கு அருகில் இல்லாமல் தள்ளி நில்லுங்கள்.

நாட்டுப்புற சாலைகளில் (country roads) வழமையில் நிர்ணயிக்கப்பட்ட வேகம் அதிகமாக இருப்பதாலும், ஒழுங்கை மாறும் போது எதிர்ப்புறமாக வரும் வாகனங்களின் ஒழுங்கையை பகிர்ந்துகொள்ள வேண்டி நேருவதாலும் (if unmarked) ஒழுங்கை மாற்றம் செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை.

ஓரளவு புதிய வாகனங்களில் வாகனத்தை சூடாக்குவதற்கு (warm up) முப்பது செக்கன்கள் தாராளமாக போதும். இதற்கு மேலாக எஞ்சினை சூடாக்குவதற்காக தொடர்ந்து சும்மா இயக்குவது பொருள் விரத்தையும், சூழல் மாசடைதலையும் ஏற்படுத்தும்.

நெடுஞ்சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 130இன் பிரகாரம் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நீங்கள் கவனக்குறைவுடன் பெருந்தெருவை பயன்படுத்தினால் (வாகனம் ஓடினால்) அதற்கு அபராதமாக $200 தொடக்கம் $1000 வரை குற்றப்பணம் செலுத்த வேண்டி வரலாம்.

தேவையில்லாத நேரங்களில் உங்கள் வாகனத்தின் எஞ்சினை நிறுத்துவதன் மூலம் சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும், சூழல் மாடுபடுவதை குறைக்க முடியும், பணமும் விரயம் அடைவதை குறைக்க முடியும்.

காவல்துறையினர் நீங்கள் முறைகேடாக அல்லது தவறாக வாகனம் ஓடும்போது அவ்வாறான குற்ற செயல்களுக்காக உங்களுக்கு வழங்கும் சீட்டுக்கள் (Tickets) உங்கள் வாழ்வின் எதிர்காலத்தையே மாற்றலாம். போக்குவரத்து விதிகளிற்கு கட்டுப்பட்டு, அதை அனுசரித்து வாகனம் ஓடுங்கள்.

கடுகதி பாதையில் முன்னதாகவே தீர்மானிக்காமல் கடைசி நேரத்தில் அவசரமாக Exit எடுப்பது/வெளியேறுவது ஆபத்தானது. எந்த Exit மூலம் பாதுகாப்பாக வெளியேறுவது என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள்.

photo-thumb-4796.jpg?_r=1340503743

  • நிழலி

    நல்ல தகவல் இது...நான் அடிக்கடி ஜி.பி.எஸ் சொல்லும் பாதையை கவனிக்காமல் திடீர் திருப்பம் எடுப்பது வழக்கம்

கடுகதி பாதையின் ஆர்முடுகும் ஒழுங்கை பகுதியில் அல்லது கடுகதி பாதையுடன் இணையும் பகுதியில் நீங்கள் வாகனத்தை நிறுத்துவது அதிகளவு ஆபத்தானது. பின்பக்கத்தால் வந்து உங்கள் வாகனத்துடன் வேறு வாகனங்கள் மோதக்கூடும்.

வீதியில் உங்களுடன் குதிரைகளும் சவாரியில் ஈடுபட்டால் குதிரைகளிலிருந்து கூடியளவு இடைவெளியை விட்டு மெதுவாக விலத்தி ஓடுங்கள். உங்கள் பாதையை மறைப்பினும் அவற்றுக்கு ஹோன் அடிக்காதீர்கள்.

ஈஸ்டர் வாழ்த்துக்கள்! மதுபானம் அருந்தினால் வாகனம் ஓடாதீர்கள்!! நீண்ட வார விடுமுறை காலத்தில் முறைகேடாக வாகனம் ஓடும் (மது அருந்திவிட்டு) சாரதிகளை கண்காணிப்பதற்கு காவல் துறையினரின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களின் மோதல் (Multiple collision) வாகனங்களிடையே போதியளவு இடைவெளி விட்டு ஓடாதபடியால் வருகிறது. நெருக்கமாக ஒரு வாகனத்தின் பின்னால் செல்லும் போது திடீரென முன்னால் செல்லும் வாகனம் வேகத்தை குறைக்கும்போது அல்லது நிற்கும்போது பின்னால் செல்லும் வாகனங்கள் உடனடியாக நிறுத்தம் செய்ய முடியாது போகின்றது.

துவிச்சக்கர வண்டிகளுக்கு (சைக்கிள்) ஒதுக்கப்பட்ட ஒழுங்கையில் உங்கள் வாகனத்தை தற்காலிகமாகவோ அல்லது குறுகிய அல்லது நீண்ட நேரத்துக்கு நிறுத்தம் செய்யக்கூடாது. துவிச்சக்கரவண்டி ஓடுபவர்களுக்கு நீங்கள் வாகனத்தை அவர்கள் ஒழுங்கையில் நிறுத்தம் செய்தால் ஆபத்து ஏற்படலாம்.

நீங்கள் வாகனம் ஓடும்போது உங்கள் வானத்திலுள்ள பயணிகளுடன் அளவுக்கு அதிகமாக உரையாடுவதை தவிர்த்து வாகனத்தை ஓடுவதில் கூடியளவு கவனத்தை செலுத்துவது பாதுகாப்பான சவாரிக்கு உதவும்.

உங்கள் வாகனத்தின் Hornஐ முறையாக பயன்படுத்துவதற்கு தெரிந்துகொள்வது விபத்துக்களை தவிர்ப்பதற்கும், பாதுகாப்பான சவாரிக்கும் உதவும். இதர வீதி பயன்பாட்டாளர்களுடன் திறனுடன் சமிக்ஞைகளை பரிமாறிக்கொள்ள தேவைப்பட்டால் மட்டும் Hornஐ பயன்படுத்துக்கள்.

உங்கள் வாகனங்களில் சில்லுகளின் சீரமைப்பு (Wheel Alignment) வருடத்திற்கு ஒரு தடவை சரிபார்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எரிபொருள் வீணடிக்கப்படும், ரயர்களின் ஆயுளும் குறையும் என்பதோடு வாகனம் ஓடும்போதும் பிரச்சனைகளும் ஏற்படும்.

கை அசைவுகள், சைகை மூலம் மற்றைய வாகன சாரதிகளுடன் அல்லது பாதசாரிகளுடன் நீங்கள் தொடர்புகொண்டாலும் அதை அவர்கள் அவதானித்து சரியான முறையில் விளங்கிக்கொள்வார்கள் என்று நிச்சயம் இல்லை. எனவே அவதானம் தேவை.

தொடர்ந்து மாறுகின்ற வீதி நிலமைகளை கவனித்து அவதானமாக ஓடுதல், வேகக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல், இருக்கைப்பட்டியை அணிதல் இவை பாதுக்காப்பான உங்கள் வாகனச்சவாரிக்கு இன்றியமையாதன.

தொடரும்..

Edited by போக்குவரத்து

  • தொடங்கியவர்

Skateboard ஓடுபவர்களும் பொது போக்குவரத்து விதிகளுக்கு கீழ்படிவதோடு நகர/மாநகரசபையின் அறிவுறுத்தல்களுக்கும் கட்டுப்பட வேண்டும். ஒரு Skateboardஇல் ஒருவர் மட்டுமே ஒரே நேரத்தில் சவாரி செய்யமுடியும்.

நீங்கள் வாகனத்தை வலப்பக்கமாக திருப்பம் செய்யும்போது அதேநேரம் சைக்கிளில் செல்பவர்கள் உங்கள் அருகில் அல்லது பின்னால் நின்றால் அதிக அவதானம் அவசியம். அவர்கள் தொடர்ந்து நேரே சென்றால் நீங்கள் வலப்புறமாக திரும்பும்போது விபத்து ஏற்படலாம்.

சைக்கிள் பாதையில் நீங்கள் உங்கள் வாகனத்தை நிறுத்தி கதவை திறந்தால் தண்டனை $110 குற்றப்பணம் அத்துடன் இரண்டு demerit புள்ளிகள். வாகனத்தின் கதவை திறப்பதற்கு முன்னர் அருகாக சைக்கிளில் யாராவது வருகின்றார்களா என்று பாருங்கள்.

கடுகதி பாதையில் உங்கள் வாகனம் பழுதடைந்து விட்டால் வாகனத்தை தெரு ஓரமாக கொண்டு வந்தபின் வெளி உதவி கிடைக்கும் வரை அதன் உள்ளேயே தங்குங்கள். வாகனத்தை விட்டு கடுகதி பாதையில் இறங்கி வெளியே நடந்து செல்வதற்கு முயற்சிக்காதீர்கள்.

சைக்கிள் ஓடும்போது நீங்கள் சரியான முறையில் தலை கவசம் அணிவது அவசியம். தலை கவசம் விபத்துக்களின் போது தலை, மூளைக்கு ஏற்படும் தாக்கங்களை குறைக்கும் வகையில் பல நுணுக்கங்களுடன் தயாரிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள்களுக்கு மற்றைய வாகனங்களுக்கு வீதியில் உள்ள அதே உரிமைகள் உள்ளன. வாகனம் ஓடும் போது மோட்டார் சைக்கிள்களுடன் வீதியை பகிர்ந்து கொள்வதோடு அவர்கள் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகம் (Posted speed Limit) அதன் சட்ட அமுலாக்கம் எல்லா ஒழுங்கைகளிலும் ஒரே அளவானதே. வேகமான ஒழுங்கை, மெதுவான ஒழுங்கை என்று வேறுபாடு கிடையாது. ஆனால், மெதுவாக செல்லும் வாகனங்கள் வலது பக்க ஒழுங்கையை பாவிக்க வேண்டும்.

வீதி போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் முறைகேடாக வாகனம் ஓடும் சாரதிகளை பற்றிய தகவல்களை காவல்துறைக்கு முறைப்பாடு செய்யுங்கள். வாகனம் ஓடிக்கொண்டு இருந்தால் உங்கள் வாகனத்தை பாதுகாப்பாக வீதி ஓரமாக நிறுத்திய பின்னரே தொலைபேசியில் காவல்துறைக்கு அறிவியுங்கள்.

உங்கள் ஓட்டுநர் (driving record) பதிவு வருடாந்தம் நீங்கள் வாகனத்திற்கு செலுத்தும் காப்புறுதி கட்டணத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணி ஆகும். எனவே, போக்குவரத்து விதிமுறைகளுக்கு அனுசரித்து அவதானத்துடன் வாகனத்தை ஓடுங்கள்.

வாகனம் ஓடும்போது வீதியில் வண்டி ஓடுகின்ற மற்றைய சாரதிகளை அவசரப்படுத்தவோ அல்லது வெட்டி ஓடவோ அல்லது கட்டுப்படுத்தவோ அல்லது அவர்கள் மீது தகாத வார்த்தை பிரயோகங்கள் செய்யவோ முனையாதீர்கள்.

ஒன்றாரியோ போக்குவரத்து அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சாரதி அனுமதி பயிற்சியை பெறும்போது (MTO Approved BDE Course) நீங்கள் நீண்டகாலத்தில் பெருமளவு காப்புறுதி பணத்தை சேமிக்க முடியும்.

அளவில் சிறிதாயினும், பெரிதாயினும் வாகனங்கள் பின்தொடர்வது, பின் தொடரப்படுவது (tailgating) ஆபத்தானது. அளவில் பெரிய வாகனங்களை நிறுத்த (stopping distance) நீண்டதூரம் தேவைப்படும். வாகனம் ஓடும்போது கூடிய இடைவெளிவிட்டு ஓடுங்கள்.

போக்குவரத்து சிக்னல்கள் ஏதாவது கோளாறு காரணமாக வேலை செய்யாவிட்டால் அந்த சந்தியை ALLWAY STOP சந்தியாக (முதலில் வருபவர் முதலில் செல்லுதல், சந்தியில் முழுமையான நிறுத்தத்தின் பின் நகருதல்) பாவித்து மிகுந்த அவதானத்துடன் செல்லுங்கள்.

நீங்கள் வாகனம் ஓடும்போது உங்கள் பார்வையை குறுகிய தூரத்தினுள் மட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களின் பரந்த, நீண்ட பார்வை நீட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு போதிய கால அவகாசத்தை தருகின்றது.

கோடை காலத்தில் உங்கள் வாகனத்தின் உள்ளே போறணை போல் வெப்பம் கடுமையாக காணப்படும். ஏசி போடாவிட்டால் சாரளங்களை திறந்துவிடுவது வெப்பநிலை உயர்வை குறைக்கலாம்.

தரிப்பிடங்களிலுள்ள வாகனங்களிற்கு (parked vehicles) அருகாக நடந்து செல்லும்போது அவதானம் தேவை. நிறுத்தம் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் உங்களை நோக்கி சடுதியாக நகரக்கூடும்.

சூரிய ஒளி கண்ணை கூசச்செய்து வாகனம் ஓடுவதற்கு தடங்கல் தரும். இதை தவிர்ப்பதற்கு சன்கிளாஸ் அணியுங்கள். உங்கள் வாகன கண்ணாடியின் உள்புறம் வெளிபுறங்களையும் அழுக்கின்றி பேணுங்கள்.

வயதில் மூத்தவர்களின் கண், செவிப்புலன்கள் பலவீனமாக காணப்படும் அத்துடன் அவர்கள் வீதியை கடப்பதற்கு அதிக நேரமும் எடுக்கும். வாகனம் ஓடும்போது இவர்களை எதிர்கொண்டால் மேலதிக அவதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடியுங்கள்.

கோடைகாலங்களில் செல்லப்பிராணிகளை வாகனத்தினுள் தனிமையாக விட்டு பூட்டிவிட்டு செல்லாதீர்கள். அவை இறந்துவிடக்கூடும்.

கோடை காலங்களில் வாகனத்தில் எரிபொருளை தொட்டி நிறையும் வரை முழுவதுமாக நிரப்பாதீர்கள். வெப்ப விரிவாக்கம் காரணமாக கசிவு ஏற்பட்டு எரிபொருள் வீணாகிவிடும்.

நாட்டுப்புற சாலைகளில் நீங்கள் வாகனம் ஓடும்போது எதிர்பாராமல் குறுக்கே வரக்கூடிய விலங்குகளை உங்கள் பரந்த பார்வை மூலம் முன்கூட்டியே அவதானித்தாலே அவற்றுடன் மோதுவதை பாதுகாப்பாக தவிர்க்க முடியும்.

மோட்டார் சைக்கிள் ஓடுவதற்கு மேலதிகமான உடல் மற்றும் உள ஆரோக்கியம் தேவை. இல்லாவிட்டால் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ பாதிப்பு ஏற்படலாம்.

தெருவில் நடந்து செல்லும் போது கையடக்க மின்னணு சாதனங்களை பயன்படுத்தினால் அவதானமின்மை காரணமாக நீங்கள் விபத்தில் சிக்கக்கூடும்.

வாகனம் ஓடும்போது கையடக்க மின்னணு சாதனங்களை (cell phones, texting devices and GPS systems) பயன்படுத்தினால் விபத்தில் நீங்கள் சிக்குவதற்கான வாய்ப்பு 4 மடங்குகள் கூடுகிறது (குறுஞ்செய்தி/Text பாவித்தால் 28 மடங்கு கூடுகிறது)

வாகனத்தை வீட்டில் தரிக்கும் போது நேராக முன்னாக சென்று நிறுத்தாமல் ரிவர்சில் விட்டால் மீண்டும் எடுக்கும் போது இலகுவாக காணப்படும், அத்துடன் பாதுகாப்பானதும் கூட.

பல ஒழுங்கைகள் உள்ள பாதையானால் மழை நேரங்களில் கரை ஒழுங்கைகளை பாவிக்காமல் நடு ஒழுங்கைகள் ஊடாக ஓடுவதன் மூலம் பல சிரமங்களை தவிர்க்க முடியும்.

நீங்கள் Roller Skater பயன்படுத்துபவரானால் அதனை ஒவ்வொரு தடவையும் பயன்படுத்த முன்னர் சில்லுகள், பலகை, பொருத்துக்கள் என்பன சேதமின்றி நல்ல நிலையில் காணப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.

குடியிருப்பு பகுதி, விளையாட்டு மைதானம் உள்ள இடங்களில் வாகனம் ஓடும் போது மேலதிக கவனம் தேவை.

புகையிரத பாதையில் நடந்து செல்லாதீர்கள்.

நீண்ட வார விடுமுறையில் காவல்துறையினரின் கண்காணிப்பு அதிகமாக காணப்படும். போக்குவரத்து விதிகளுக்கு அனுசரித்து வாகனம் ஓடுங்கள்.

தொடரும்..

Edited by போக்குவரத்து

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணியடித்து விட்டு, வாகனம் ஓட முயற்சிக்காதீர்கள்.

அப்படி ஒடி... விபத்து ஏற்படுத்திய பலர் (வெளிநாட்டவர் உட்பட) வாகன‌ அனுமதிப் பத்திரத்தை பறி கொடுத்து, வாழ்க்கை முழுக்க.... பாதிக்கப் பட்டவர்களுக்கு பணத்தை கொடுத்துக் கொண்டே.. நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.

வாகனஓட்டுனர் அனுமதிப்பத்திரத்திற்கான கேள்விகளில் ஒன்று-:

1)வாகனம் ஓட்டும் போது ஒருபெண் தலையணைஉறை போன்ற உடையுடன் நடந்து சென்றால் நீங்கள் என்ன செய்யவேண்டும்?

a) கந்தசஷ்டி கவசத்தை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும்.

b) உங்கள் வாகனத்தை நிறுத்தி கைத்தொலைபேசி இலக்கத்தை அவரிடம் கொடுக்க வேண்டும்.

c)டாடி மம்மி வீட்டிலில்லை என்ற பாடலை உரக்க ஒலிக்க விட வேண்டும்.

d)ஹோர்ண் அடித்து அவரை உற்சாகப்படுத்த வேண்டும்.

:icon_mrgreen:

:D

சரியான விடை. a)

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல்கள்.

  • தொடங்கியவர்

நன்றி கறுப்பி

தொடர்ச்சி:

கோடைகால விடுமுறை அண்மிக்கிறது. சிறுவர்கள்களின் நடமாட்டம் தெருவில் அதிகரித்து காணப்படும். வாகனம் ஓடும்போது அவதானம் தேவை.

இருக்கைபட்டியை (seatbelt) அணிவதனால் எதிர்பாராத சமயங்களில் உங்கள் தலை, உடற்பகுதி வாகனத்தின் உட்பாகங்களுடன் மோசமாக அடிபடுவதை தவிர்ப்பதோடு, விபத்துக்களின்போது வாகனத்தின் வெளியே நீங்கள் தூக்கி எறியப்படுவதையும் தடுக்க முடியும்.

தரிப்பிடங்களிலுள்ள வாகனங்களிற்கு (parked vehicles) அருகாக நடந்து செல்லும்போது அவதானம் தேவை. நிறுத்தம் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் உங்களை நோக்கி சடுதியாக நகரக்கூடும்.

வீதியில் உங்களை சீண்டும் வகையில் யாராவது செயற்பட்டால் வாகனத்தை நிறுத்தவோ, அல்லது வாகனத்தைவிட்டு வெளியே வரவோ முயற்சிக்காது / குறிப்பிட்ட நபர் மீது கவனம் செலுத்தாது பாதுகாப்பான முறையில் வாகனத்தை ஓடுவதில் கவனத்தை குவியுங்கள்.

கவனம் இல்லாமல் நீங்கள் வாகனம் ஓடினால் உங்களுக்கு தண்டனையாக குற்றப்பணம் + சிறைவாசம் + சாரதி அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படுதல் ஆகியவை கிடைக்கலாம்.

மோசமான விபத்துக்கள் நகர வீதிகளில் சிவப்பு ஒளி சமிக்ஞையில் சந்தியை கடப்பதால் ஏற்படுகின்றன. சமிக்ஞை செம்மஞ்சள் நிறத்துக்கு மாறும்போது அவசரப்பட்டு சந்தியை கடக்க முயற்சி செய்யாதீர்கள்.

சூழல் வெப்பநிலை உயர்வாக உள்ள நேரங்களில் மோட்டார் சைக்கிள் ஓடுவது உடல் நலத்திற்கு தீங்கானது. உடல் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைக்க போதியளவு நீர்/குளிர்பானம் பருகுங்கள்.

வாகனத்தில் பயணங்கள் செல்லும்போது அளவுக்கு அதிகமான சுமைகளை ஏற்றுவது ஆபத்தானது. ஆகக்கூடியது எவ்வளவு பாரம் உங்கள் வாகனத்தில் ஏற்றப்படமுடியும் என்பதற்கு வாகனத்தின் உரிமையாளர் கையேட்டை பாருங்கள்.

கோடை காலங்களில் அளவில் மிகவும் பெரிய வாகனங்கள் அதிகளவில் தெருவில் காணப்படக்கூடும். அவற்றுடன் அருகாக செல்லும்போது எச்சரிக்கையுடன் ஓடுங்கள்.

மற்றவர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குறிப்பிட்ட அளவுக்கு மேலாக தேவையில்லாமல் நீண்ட தூரத்திற்கு தொடர்ந்து பின்பக்கமாக வாகனத்தை ஓட்டுவது (reversing) ஒரு குற்றச்செயல்.

தரைமட்டம், வளைவு, புவியீர்ப்பு, குடிசனபரம்பல் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வீதிக்குரிய வேகம் நிர்ணயம் செய்யப்படுகிறது. வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மிஞ்சிய வேகத்தில் செல்வதனால் பெருமளவான வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இரவு மது அருந்தினால் காலை பிரச்சனையின்றி வாகனம் ஓடமுடியும் என தவறாக நினைக்காதீர்கள். காவல்துறையினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டால் மதுபோதை மதியம் 2.00 வரை உங்கள் குருதியில் காண்பிக்கப்படக்கூடும்.

நீண்ட வார விடுமுறையில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகமாக காணப்படும். மது அருந்தினால் வாகனம் ஓடாதீர்கள்.

ஆறு மாதங்களுக்கு குறைவான வாகனம் ஓட்டும் அனுபவம் கொண்ட 21 வயதுக்கு குறைந்த சாரதிகளே வேக கட்டுப்பாட்டுடன் ஓடாத காரணத்தினாலும், முன்னால் செல்லும் வாகனங்களை மிக அருகாக பின் தொடர்ந்து செல்வதாலும் அதிகளவு விபத்துக்களிற்கு காரணமாக அமைகின்றார்கள்.

சட்டவிரோதமான முறையில் பாடசாலை பேருந்தை முந்தி சென்றால் குற்றப்பணம் $400 தொடக்கம் $2000 வரை, அத்துடன் ஆறு Demerit Points.

வீதி திருத்த வேலைகள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து குறியீட்டு அடையாளங்களை அவை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடியும்வரை கவனமாக கவனித்து பின்பற்றுங்கள்.

உங்கள் வாகனத்தை தயாரிப்பாளரின் பரிந்துரைப்படி முறையாக பராமரித்தால் (oil filter, tire, brake,air filter) எரிபொருள் வீணாகுவதை தவிர்க்க முடியும்.

காற்றுடன் இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் அவை நீங்கும்வரை உங்கள் வாகனத்தினுள் தங்குவதே அதிக பாதுகாப்பானது.

அவதானத்துடன் கவனமாக நீங்கள் வாகனம் ஓடினால் அதனால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வாகனத்தில் உள்ள பயணிகள், வீதியை பாவிக்கும் ஏனையோருக்கும் நன்மைகள் ஏற்படும்.

கோடை காலத்திலேயே வீதி திருத்த வேலைகள் அதிகளவில் நடைபெறுகின்றன. வீதி திருத்த வேலைகள் நடைபெறும் இடங்களில் மேலதிக அவதானத்துடன் வாகனத்தை ஓடுங்கள்.

வெவ்வேறு வகையான வாகனங்களுக்கு வெவ்வேறு வகையான சாரதி அனுமதி பத்திரங்கள் உள்ளன. உங்கள் சாரதி அனுமதி பத்திரம் மூலம் அனுமதியுள்ள வாகனங்களை மட்டும் ஓடுங்கள்.

மழைநீர் கிரீஸ், ஒயில் இவற்றுடன் கலப்பதால் வீதி மேற்பரப்பில் வாகனத்தின் ரயருடன் ஏற்படக்கூடிய உராய்வின் வீரியம் குறைகிறது, வாகனத்தை உடனடியாக நிறுத்தம் செய்ய முடியாமல் போகிறது. எனவே, மழைகாலங்களில் வாகனத்தை மெதுவாய் ஓடுங்கள்.

முன்னால் செல்லும் வாகனத்தை மிக அருகாக நீங்கள் பின் தொடர்ந்து செல்வது (Tailgating) மிகவும் ஆபத்தானது. Tailgating நீங்கள் விபத்தில் சிக்கும் சாத்தியத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.

வாகனத்தின் பின் இருக்கைகளில் உள்ளவர்கள் இருக்கை பட்டி அணியதேவையில்லை என நினைப்பது மிகவும் தவறானது. ஓடுகின்ற வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டி அணியவேண்டும்.

ஒருவரும் வரவில்லை என்று மனதினுள் நினைத்து கொண்டு STOP Sign இல் முழுமையான நிறுத்தத்திற்கு வாகனத்தை கொண்டுவராது அவசரப்பட்டு திருப்பத்தை மேற்கொள்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

ஒழுங்கை மாற்றம் செய்யும்போது, ஒழுங்கை மாறும் முன்னர் வேறு வாகனங்கள் நீங்கள் செல்ல விரும்பும் அதே ஒழுங்கையினுள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள்.

சீரான சமநிலை, நேர்த்தி இல்லாத டயர்கள் (Improperly balanced & Misaligned tires) உள்ள வாகனத்தை ஓடும்போது ஓடும் பாதையில் இருந்து எதிர்பாராமல் விலகி சென்று விபத்து ஏற்படலாம்.

STOP Sign வரும்போது வாகனத்தை முழுமையான நிறுத்தத்திற்கு கொண்டு வந்த பின்னரே திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும்.

உங்கள் வாகனத்தின் காற்று வடிகட்டி (Air filters) பழையதாயின் அதை மாற்றுங்கள்; இல்லாவிட்டால் எரிபொருள் வீணாகுவதோடு இயந்திரத்தின் இயங்குதிறனும் குறைவடையும்.

தொலைபேசி, குறுஞ்செய்தி பாவனைகள், உணவு உண்ணுதல், அதிகமான உரையாடல்... இவை வாகனம் ஓடும்போது உங்கள் கவனத்தை சிதறடித்து விபத்து ஏற்படுவதற்கு காரணமாகலாம்.

மிக விரைவாக செய்யப்படும் பாதுகாப்பற்ற ஒழுங்கை மாற்றங்கள் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. அந்நிலையில் வாகனத்தின் அளவு/வகை/தெரு நிலமை ஆகியவை விபத்தின் கோரத்தை தீர்மானிக்கின்றன.

விரைவான திருப்பங்களை மேற்கொள்ளும்போதும், விரைவான U திருப்பத்தை மேற்கொள்ளும்போது ஆபத்தான Skidding ஏற்படுகிறது. Skidding ஏற்பட்டால் பதற்றம் அடையாது வாகனம் வழமைக்கு திரும்பும் வரை ஸ்ரியரிங்கை நேராக பிடியுங்கள்.

உங்களுக்கு வாகனம் ஓடுவதால் உடல் உபாதைகள் (வலி, நோ) ஏற்பட்டால் குடும்ப மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனைகளை பெறுங்கள்.

நேரடியாக கதவை திறந்து வாகனத்தை ஓடாமல் வீதிக்கு எடுக்க முன்னர் உங்கள் வாகனத்தை ஒரு தடவை சுற்றி வந்து, வாகனத்தின் கீழ்ப்புறமும் குனிந்து பார்த்து எல்லாம் சரியாக உள்ளதாக என்று சிறிய சோதனை செய்துவிட்டு ஓடுவது பாதுகாப்பானது.

வீதியில் நடக்கும் பாதசாரிகள் தம்மை வாகனத்தின் சாரதிகள் இலகுவாக காணக்கூடிய வகையில் உடைகளை அணிந்துகொள்வது விபத்துக்களை தவிர்க்க உதவும். இரவில் நடந்து செல்லும் போது பிரகாசமான ஆடைகளை (reflective materials) அணிந்து செல்லுங்கள்.

நீண்ட பயணங்களின் போது இரண்டு மணித்தியாலங்களுக்கு ஒரு தடவையாவது வாகனத்தை நிறுத்தி சுமார் பதினைந்து நிமிடங்களாயினும் இளைப்பாறிவிட்டு பயணத்தை தொடர்வது நீங்கள் அவதானத்துடன் வாகனம் ஓடுவதற்கு உதவும்.

வாகனம் ஓடும் போது வீதியின் குறிப்பிட்ட இடத்திலிருந்து 15 தொடக்கம் 20 செக்கன்களின் பின் வாகனம் வீதியில் எங்கு நிற்குமோ அவ்வளவு தூரத்திற்கு நீண்ட பார்வை வீச்சை ஏற்படுத்தி எவ்வாறான வீதி நிலமைகளுக்கும் முன்கூட்டியே உங்களை தயார்ப்படுத்தி ஓடுங்கள்.

பாடசாலை மீண்டும் ஆரம்பிக்க உள்ளது. மாணவர்களின் நடமாட்டம் வீதியில் அதிகரித்து காணப்படும், காவல்துறையின் நடமாட்டமும் அதிகரித்து காணப்படும். அவதானமாக வாகனத்தை ஓடுங்கள்.

நீங்கள் வைக்கும் கொண்டாட்டங்களில் மதுபானம் பரிமாறப்பட்டால் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மதுபோதையில் வாகனம் ஓடுவதற்கு அனுமதியாதீர்கள். அவர்கள் வாகன திறப்பை வாங்கிவிட்டு தற்காலிக தங்குமிட வசதியை செய்து கொடுங்கள்.

பிரேக் அடிக்கும் போது பின்னால் ஏதும் வாகனங்கள் வருகின்றனவா என்பதையும் கவனியுங்கள். நீங்கள் சடுதியாக பிரேக் அடிக்கும்போது பின்னால் வருகின்ற வாகனம் உங்கள் வாகனத்தின் மீது மோத வாய்ப்பு உள்ளது.

அளவுக்கு மிஞ்சிய வேகம், முன்கூட்டியே வளைவுகளை எதிர்பார்த்து தாயார்ப்படுத்தாமை, பரிந்துரை செய்யப்படும் வேகத்துடன் பயணம் செய்யாமை போன்ற காரணிகளால் வாகனம் குடை சாய்ந்து விபத்து ஏற்படுகிறது.

போக்குவரத்து விதிகளின் பிரகாரம் நீங்கள் ஒழுங்கை மாற்றம், திருப்பம் இவை செய்வதற்கு மூன்று செக்கன்களின் முன்னதாக மற்றைய வாகனங்களின் சாரதிகளுக்கு எச்சரிக்கை கொடுப்பதற்கு சமிக்ஞை செய்ய வேண்டும் (சிக்னல் போடவேண்டும்).

வளைவுகள், திருப்பங்கள் வரும்போது உங்கள் வாகனத்தின் வேகத்தை முன்கூட்டியே திட்டமிடுவது பாதையிலிருந்து வாகனம் விலகிச்செல்வதையும், விபத்துக்கள் ஏற்படுவதையும் தவிர்ப்பதற்கு உதவும்.

வாகனம் ஓட்டுதல் மற்றவர்களுடன் வீதியில் நீங்கள் பங்குபற்றும் ஒரு போட்டி நிகழ்வு இல்லை. நேரம் பிந்தினாலும், உங்கள் ஒவ்வொரு பயணத்தையும் நிதானமாகவும், பாதுகாப்பாகவும் பூர்த்தி செய்வதில் கவனத்தை செலுத்துங்கள்.

பெரும்பாலான மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அவற்றை (வீதியில் செல்லும் மோட்டார் சைக்கிள்களை) இதர வாகனங்களின் சாரதிகள் அவதானிக்காமையினாலேயே ஏற்படுகின்றன.

இரவில் வாகனம் ஓடும் போது வெளிச்சத்துக்கும் இருளுக்கும் இடையிலான மாறுபாடு உங்கள் கட்புலனை குறைக்கின்றது. வாகனத்தின் டாஷ்போடின் வெளிச்சத்தை மிகவும் குறைவாக வைப்பது (dashboard lights at low) வெளியில் தெளிவாக பார்ப்பதற்கு உங்களுக்கு உதவும்.

சூரிய உதயத்துக்கு சற்று முன்னதாகவும், சூரிய அஸ்தமனத்திற்கு சற்று பின்னதாகவுமே அதிகளவு வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த நேரங்களே வாகனம் ஓடுவதற்கு ஒப்பீட்டளவில் அதிக ஆபத்து உள்ளவை.

தொடரும்..

Edited by போக்குவரத்து

  • தொடங்கியவர்

கோடை காலங்களில், நகரத்துள்... வாகனம் ஓடும் போது,

எமது கவனத்தை, அங்கு நடந்து செல்லும்... பெண்கள், ஆண்கள் மீது செலுத்தக் கூடாது.

மினி உடைகளுடன், செல்லும் அவர்களை... நாம் பிராக்குப் பார்த்தால்....

முன்னுக்கு.. சிக்கனலில் நிற்கும், வாகனத்துடன் மோத வேண்டி வரும். :lol::icon_idea::D

வாகனம் ஓடும் போது ஆடைகள் இல்லாமல் அல்லது அரை/முழு நிர்வாணமாக வாகனம் ஓடுவது, இவ்வாறே வீதியில் நிர்வாணமாக நடந்து செல்வது வழமையில் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். காரணம் வீதி பாவனையாளர்களின் கவனத்தை அவ்வாறான செயற்பாடுகள் சிதறிடித்து வீதி விபத்துக்களுக்கு வழிகோலும் என்பதாகும் (Safety Hazards)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தொடர்ச்சி:

எவராவது வாகன சாரதி உங்கள் வாகனத்தை ஆத்திரத்துடன் தொடர்ந்தால் சன நடமாட்டம் அதிகம் உள்ள வாகன தரிப்பிடம் அல்லது காவல்துறை நிலையம் நோக்கி உங்கள் வாகனத்தை செலுத்தி வாகனத்தை அங்கு நிறுத்துங்கள்.

உங்களுக்கு வயது கூடிகொண்டு போகும் போது பார்வையின் கூர்மை குறைந்து செல்கிறது. நீங்கள் வாகனம் ஓடுவதாயின் உங்கள் பார்வை புலன் சரியாக தொழிற்படுவதை உறுதி செய்யுங்கள்.

வாகனம் ஓடும் போது வழுக்கி சென்றால் (skid) பதற்றப்படாது gas pedal இல் இருந்து உடனடியாக காலை எடுத்து ஸ்ரியரிங்கை நீங்கள் போகவேண்டிய பக்கமாக வாகனம் சமநிலைக்கு வரக்கூடியவகையில் பிடியுங்கள்.

வாகனம் ஓடும் போது டயர் வெடித்தால் காற்று போனால் பதற்றபடாது gas pedal இல் இருந்து உடனடியாக காலை எடுத்து ஸ்ரியரிங்கை வாகனம் சமநிலைக்கு வரக்கூடியவகையில் பிடியுங்கள், இப்படியான நிலையில் பிரேக் அடிக்காதீர்கள்.

மழை காலத்தில் பாதுகாப்பாய் வாகனம் ஓடுவதற்கு உங்கள் வாகனத்தின் wiper blades, டயர்களை நல்ல நிலையில் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் வாகனத்தின் பிரேக் ஈரமாக காணப்பட்டால் பிரேக் பெடல் மீது சிறிது அமத்தி அழுத்தத்தை கொடுங்கள். அவ்வாறு செய்யும் போது உராய்வு காரணமாக பிரேக் drum உலர்ந்து பிரேக்கின் ஈரத்தன்மை நீங்கும்.

வாகன சாரதிகளை போலவே பாதசாரிகளும் வீதி போக்குவரத்து விதிகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டிய கடமை உள்ளது. இல்லாவிட்டால் முறைகேடாக செயற்படும் பாதசாரிகளுக்கும் காவல்துறையினால் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கலாம்.

இடது பக்க திருப்பத்தை மேற்கொள்ளும் போது இடது பக்க திருப்பத்தை மேற்கொள்ள சந்தியினுள் ஒரு வாகனம் மட்டுமே முன்னே சென்று நிற்க வேண்டும், இடது பக்கம் திரும்பும் மற்றைய வாகனங்கள் பாதசாரிகள் கடவையின் வெள்ளைக்கோட்டுக்கு பின்னால் நிற்க வேண்டும்.

உங்கள் வாகனத்தை விட அளவில் மிகவும் பெரிய வாகனங்களை பின் தொடர்ந்து செல்லாதீர்கள். அளவில் பெரிய வாகனங்களை பின் தொடர்வதால் விபத்துக்கள் ஏற்படலாம்.

வாகனம் ஓடும் போது மற்றவர்கள் மோசமாக ஓடினாலும் நீங்கள் எந்த நிலையிலும் நிதானமாக ஓடுங்கள். விபத்து மற்றவரின் தவறினால் ஏற்பட்டால் உங்களுக்கு இழப்பீடு கிடைக்கலாம். ஆனால், பறிபோகும் நேரமோ, உயிரோ, நிம்மதியோ மீளவராது.

தொடரும்..

Edited by போக்குவரத்து

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தொடர்ச்சி:

நீங்கள் வாகனத்தை அவதானத்துடனும், பாதுகாப்பாகவும் ஓடுகின்ற ஆற்றலை உங்கள் உணர்ச்சிகள் பாதிக்கின்றன. வாகனம் ஓடும்போது உணர்ச்சிவசப்படுவது விபத்துக்களை ஏற்படுத்தலாம்.

வெறும் வயிற்றுடன் மதுபானம் பருகும்போது போதை விரைவாக இரத்தத்தில் கலக்கிறது. இப்படியான நிலையில் வாகனம் ஓடவேண்டிய தேவை வரும்போது இதற்குப் பரிகாரமாக கோப்பி குடித்துவிட்டு வாகனத்தை ஓடலாம் என்று நினைப்பது தவறு.

ஒழுங்கை மாற்றம் செய்யமுன், வாகனத்தை நகர்த்தமுன், உடனடியாக வாகனத்தை இழுத்து கரையாக நிறுத்த முன், கண்ணாடியை (rear) பாருங்கள். உங்கள் தோள்களுக்கு மேலாக blind spotஐ கவனியுங்கள்.

நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு தாமதம் ஏற்பட்டு விட்டாலும் பதற்றம் அடையாது அவதானத்துடன் வாகனத்தை ஓட்டுங்கள். அவசரப்பட்டு ஓடுவது விபத்துக்களில் சென்று முடியலாம். முறைகேடாக ஓடியதற்காக காவல்துறையிடம் பிடிபடவேண்டியும் வரலாம்.

Thanksgiving நீண்ட வார விடுமுறையில் அவதானமாக வாகனம் ஓடுங்கள். மதுபானம் பருகினால் வாகனம் ஓடாதீர்கள். காவல்துறையின் நடமாட்டமும் அதிகமாக காணப்படும்.

சூழலின் வெப்பநிலை மாற்றங்கள் வீதி நிலமையை பாதிக்கிறது. நீங்கள் பாளங்கள் (overpasses & bridges) மேலாக வாகனத்தை ஓடும் போது மிக அவதானமாக ஓடுங்கள். அதில் மெதுவாக ஓடுங்கள், இறுக்கமாக பிரேக் பிடிக்காதீர்கள்.

  • photo-thumb-4862.jpg?_r=0

    தமிழ் சிறி
    நன்றாக காய்ந்துள்ள‌ வீதியில்... திடீரென்று மழை பெய்யும் போது, அதில் ஓடிய வாகன ரயர்களின் நுண்ணிய றப்பர் துகள்கள், மழை நீருடன் கலந்து... வழுக்கச் செய்யும். அந்நேரம் மெதுவாக ஓட வேண்டும்.
    Oct 04 2012 12:23 AM · Delete
  • photo-9041.jpg?_r=0
    முன்னால் போகின்ற வாகனத்துக்கும் உங்கள் வாகனத்துக்கும் இடையில் போதுமான அளவு இடைவெளி விடுவதும் முக்கியம்.

தொடரும்..

Edited by போக்குவரத்து

  • 1 month later...
  • தொடங்கியவர்

தொடர்ச்சி:

வாகனத்தை தரிக்கும்போதும் (parking), தரிப்பில் இருந்து வெளியே எடுக்கும்போதும் பக்கப்புற, பின்பார்வை கண்ணாடிகளின் உதவியுடனும், தோள்பட்டை மேலாகவும் திரும்பி 360° இல் சுற்றி பார்த்தல் வேண்டும். அவதானம் இன்மையால் தரிப்பிடங்களில் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுகிறது.

மற்றைய சாரதிகளோ அல்லது பயணிகளோ தருகின்ற அழுத்தம் காரணமாக அவர்களின் அழுத்தத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நீங்கள் பாதுகாப்பற்ற வகையில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு முரணாக வாகனம் ஓடுவது ஆபத்தானது.

உங்கள் வாகனத்தின் வேகம் அதிகரிக்கும்போது வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தேவையான தூரமும் அதிகரிக்கும். உங்களால் வெளியே தெளிவாக பார்க்ககூடிய அளவு வேகத்தையும் மேவி அதற்கு மேலான வேகத்தில் வாகனத்தை நீங்கள் ஓடுவது ஆபத்தானது.

போக்குவரத்து சட்டவிதியின் பிரகாரம் தெருவில் வருகின்ற அவசர கால வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவை வரும்போது அவற்றின் பாதையிலிருந்து விலத்தி உங்கள் வாகனத்தை ஓரமாய் கொண்டு செல்ல வேண்டும்.

வாகனத்தின் எஞ்சினை போட்டதும், வாகனம் ஓடும்போதும் இடையிடையே யன்னல்களை சிறிது நேரம் திறவுங்கள். CO வாயுவினால் உங்கள் உடநலம் பாதிப்பு அடைவதை இது தடுக்கும். தொடர்ச்சியாக வெளி காற்றோட்டம் இல்லாத வாகனத்தினுள் பயணிப்பது உடல்நலத்துக்கு கேடு.

நீங்கள் திருப்பங்களை மேற்கொள்ளும்போது மிக முன்னதாகவோ அல்லது மிகவும் தாமதமாகவோ சிக்னலை போடாமல் சரியான வேளையில் சிக்கனை போடுங்கள். நீங்கள் போடும் சிக்னல் போக்குவரத்து சீராக தொடர்வதற்கும், விபத்துக்கள் தவிர்க்கப்படுவதற்கும் உதவும். அதேவேளை, தேவையில்லாமல் சிக்னல் போட்டால் விபத்து ஏற்படலாம் (உ+ம்: திரும்புவதாக போட்டுவிட்டு திரும்பாமல் நேரே போவது).

ஒரு வாகனம் பாதசாரிகள் கடவையில் நிறுத்தப்பட்டு காணப்படும் போது அந்த வாகனத்தை முந்துவதற்கு/கடப்பதற்கு முனையாதீர்கள். அந்நிலையில் முந்துவது பாதுகாப்பற்றதும், சட்டவிரோதமானதும் ஆகும். குறிப்பிட்ட வாகனம் பாதசாரியை கடக்கவிடுவதற்கு நிறுத்தி நிற்ககூடும்.

வெளிச்சம் குறைவான, இரவு நேரங்களில் உங்கள் வாகனத்தின் அருகாக நகர்கின்ற பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் பற்றி அதிக எச்சரிக்கையாக இருங்கள். இல்லாவிடின் அவதானமின்மை விபத்தினை ஏற்படுத்தும்.

வெள்ள நீரை ஊடறுத்து வாகனம் ஓடவேண்டி வந்தால், அதன் நீரின் ஆழம் தெரியாமல் தொடர்ந்து ஓட முயற்சிக்காதீர்கள். ஆழம் குறைந்த நீரோட்டம் என்றால் சீரான, மெதுவான வேகத்தில் செல்லுங்கள்.

பலமான காற்று உங்கள் வாகனத்தை தள்ளி பாதையை விலத்தி ஓட வைக்கும். பலமான காற்று வீசும் போது வாகனம் போகவேண்டிய திசையில் ஸ்ரியரிங்கை இறுக்கிப்பிடியுங்கள், மற்றைய வாகானங்களுக்கு இடையில் போதுமான இடைவெளி விடுங்கள், மெதுவாக ஓடுங்கள்.

மோசமான காலநிலையின்போது வாகனம் ஓடி காலநிலை காரணமாக தெருவில் விபத்து ஏற்பட்டால் காப்புறுதி நிறுவனங்கள் அதை உங்கள் தவறாகவே பார்ப்பார்கள். மோசமான காலநிலை நிலவும்போது வாகனம் ஓடுவது தவிர்க்கப்படவேண்டிய ஒரு விடயம்.

சடுதியாய் பிரேக் அடிப்பது, சடுதியாய் வேகத்தை கூட்டுவது எரிபொருள் பாவனையை அதிகரிக்கும். சீராக நேர்த்தியாக வாகனம் ஓடும் போது எரிபொருள் வீணாகாது.

தொடர்ச்சியான கற்றல், முன்கூட்டிய திட்டமிடல், எதிர்வு கூறுதல், Common Sense ஐ பாவித்தல், விரைவாக முடிவுகளை எடுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் ஒரு சாரதி பாதுகாப்பான சவாரியை மேற்கொள்வதற்கு இன்றியமையாதது.

உங்கள் வாகனத்தின் முன்விளக்குகள் (headlights) நேர்த்தியாக (Properly aligned) ஒளியை பாய்ச்சுவது முக்கியம் ஆகும். இல்லாவிட்டால் உங்களால் இரவில் தெளிவாக பார்க்க முடியாது, உங்கள் எதிரில் வரும் வாகன சாரதிகளுக்கும் உங்கள் வாகனத்தின் முன்விளக்குகள் இடைஞ்சலை ஏற்படுத்தும்.

பாதுகாப்பானதும், அவதானமானதுமான வாகனம் ஓட்டும் முறை எரிபொருள் வீணாகுவதை தடுப்பதோடு, உங்கள் வாகனம் நல்ல நிலையில் பேணப்படுவதற்கும் உதவுகிறது.

அசுத்தமான கண்ணாடி தெளிவின்மையை ஏற்படுத்துகிறது. வாகனத்தை நகர்த்தமுன்பே கண்ணாடியை சுத்தம் செய்யுங்கள்.

உங்கள் வாகனத்தை பின்பக்கத்தால் வேறு வாகனங்கள் வந்து இடித்து விபத்து ஏற்பட்டால் உங்களுக்கு ஏற்படும் உடல்பாதிப்புக்களை இயலுமானவரை குறைப்பதற்கு உங்கள் சாரதி இருக்கையை சரிப்படுத்துங்கள்.

தொடரும்..

Edited by போக்குவரத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.