Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் ஈழம் நோக்கி செல்வோம் -மீரா பாரதி .

Featured Replies

புலம் பெயர்ந்த ஈழ மக்கள் மீண்டும் ஈழம் நோக்கி ஒரு தரமாவது செல்லவேண்டும். ஏன் செல்ல வேண்டும்?

Back%20to%20home_CI.jpg

போரினால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும். அவர்கள் தமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். அவர்கள் தலைநிமிர்ந்து வாழவேண்டும்.... என யார் யார் எல்லாம் சிந்திக்கின்றார்களோ... விரும்புகின்றார்களோ அவர்கள் அனைவரும் மீண்டும் ஒரு தரமாவது ஈழம் செல்லவேண்டும். மரணத்தை வென்ற மனிதர்களுடன் சில கணமாகவது வாழவேண்டும்... மரணத்துடன் போராடி மீண்ட மனிதர்கள் கதைப்பதைக் கேட்கவேண்டும்... மனம் உடைந்து போனவர்கள் (உடன்) மனம் விட்டு பேச வேண்டும்... அப்பொழுதுதான் அவர்களது வாழ்நிலையை, அவர்களது பிரச்சனைகளை, அவர்களது இல்லாமையை... அவர்களது இழப்புகளை, அவர்களது தேவைகளை, அவர்களது வலிகளை அறியவும் உணரவும் முடியும். இதனுடாக ஏற்படும் புரிதல்களே நாம் முழுமையான பங்களிப்புடன் அதற்கான தீர்வுகளை நோக்கி செயற்படுவதற்கு வழிவகுக்கும். இந்த மனிதர்கள் தாம் எதிர்நோக்குகின்ற பல பிரச்சனைகளிலிருந்து விடுதலை பெற்று சுந்திரமாக வாழவேண்டுமாயின் இரண்டு வகையான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுக்கவேண்டும். முதலாவது அரசியல் வேலைத்திட்டம். இரண்டாவது சமூக பொருளாதார மனித மேம்பாட்டிற்கான திட்டம்.

அரசியல் வேலைத்திட்டம் என்பது விரிவாகவும் ஆழமாகவும் சிந்தித்து நீண்டகாலநோக்கில் முழுமையாக பங்களிப்புடன் ஆற்றவேண்டிய ஒன்று. ஏனெனில் இதில் சிறிலங்கா அரசுடனானதும் சிங்கள தேசத்துடனுமான முரண்பாடுகள் பிரதான முரண்பாடாகவும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமலும் இருந்து வருக்கின்றன. மேலும் இந்த நாட்டுக்குள் பன்முக தேசங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் நிலவுகின்றன. அதேவேளை சர்வதேச உறவுகளை உள்ளடக்கிய சிக்கலான பிரச்சனையாகவும் இது இருக்கின்றது. ஆகவே இந்த முரண்பாடுகள் அரசியல் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று. நமது தமிழ், முஸ்லிம், மலையக தேசங்களின் அரசியல் பிரதிநிதிகள் எவ்வாறு இந்த முரண்பாடுகளை கையாள்கின்றார்கள் என்பதனைப் பொருத்தும் சிங்கள தேசத்தின் பிரதிநிதிகள் எவ்வாறு புரிந்துகொண்டு பங்களிப்பு செய்கின்றார்கள் என்பதைப் பொருத்தும் இதற்கான தீர்வுகள் கிடைக்கும். தற்போதைக்கு இதை அவர்களிடம் விட்டுவிடுவதே நல்லது. ஆனால் இவர்கள் எந்தளவிற்கு தூரநோக்குடன் சிந்தித்து மனித விடுதலைக்காகவும் நல்வாழ்விற்காகவும் செயற்படுகின்றார்கள் என்பது கேள்விக்குறியே. இவர்களின் நம்பிக்கையில்லை எனில் நாம் தான் இந்த செயற்பாடுகளிலும் முழுமையாக பங்குபற்றவேண்டும். இது அரசியலில் அக்கறையுடனும் முழுமையான பங்களிப்புடனும் செயற்படுபவர்களின் கவனத்திற்கு உரிய வியடமாகும். ஆனால் இன்று இவ்வாறு செயற்படுகின்றவர்கள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.

மேற்குறிப்பிட்ட அரசியல் அடிப்படையிலான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அப்பால், புலத்தில் போரின் பின் வாழ்கின்ற மனிதர்களின் நாளாந்த வாழ்வியல் மற்றும் நடைமுறைசார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எவ்வாறு புலம் பெயர்ந்த சமூகங்கள் பங்களிக்கலாம் என்பதைப் பற்றி சிந்திப்பதும் இன்றைய சூழலில் அவசியமானது. இந்தப் பிரச்சனைகளை அரசியல் முரண்பாடுகளை தீர்ப்பதன் மூலம் தீர்க்கலாம் என நம்புகின்றவர்கள் அதை நோக்கி செயற்படட்டும். ஆனால் அவ்வாறான தீர்வு கிடைக்கும் பொழுது மனிதர்கள் வாழ்வதற்கு இங்கு இருப்பார்களா என்பது சந்தேகமே. ஆகவே, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை இவ்வாறான செயற்பாடுகளையும் சமாந்தரமாக முன்னெடுப்பது அவசியமானது.

இலங்கையில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகப் பிரதேசங்களில் நாளாந்த வாழ்வியல் மற்றும் நடைமுறைசார்ந்த பிரச்சனைகள் எனும்போது அது பலவகைப்படும். அகதி வாழ்வு, சொந்த இடங்களுக்கு திரும்பமுடியாமை, காணியில்லாமை, வாழ்வதற்கு வீடு இல்லாமை, உழைப்பு இல்லாமை, வேலையில்லாமை, உணவில்லாமை, பசி, மதுவிற்கு அடிமையாதல், மனப் பிரழ்வு, மன அழுத்தம், மனச் சோர்வு, மற்றும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் எதிர்நோக்குகின்ற பாலியலடிப்படையிலான தூஸ்பிரயோகங்கள், சுரண்டல்கள், தொழில்கள்,....எனத் தொடர்கின்றன. இவ்வாறு போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பாக முன்னால் போராளிகள் அதிலும் குறிப்பாக பெண்களும் குழந்தைகளும் பலவகையான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார்கள்.

மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளிலிருந்து மீள்வதற்கு முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் பெரும்பாலும் அரைகுறை நிவாரணங்களாக மட்டுமே இருக்கின்றன. இவ்வாறான நிவாரண உதவிகள் தற்காலிமாகவும் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவுவதாக மட்டுமே இருக்கின்றன. ஆனால் இதுவே நிண்ட காலத்திற்கு தொடரப்படுமாயின் சமூகத்தில் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஏனெனில் இவ்வாறு நிவாரணத்திற்கு பழக்கப்பட்ட மக்கள் மற்றவர்களிடம் கையேந்தி நிற்கின்ற தூர்ப்பாக்கியமான பழக்கத்திற்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். இவர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சிகளையோ அதற்கான தன்னம்பிக்கைகளையோ வளர்க்க இது உதாவது. மாறாக ஆரோக்கியமான சமூகங்களாக வளர்வதற்கு தடையாகவே இருக்கும். ஆகவேதான் புலத்தில் வாழ்கின்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் இவ்வாறன வாழ்வு முறையை மாற்றுவதில் புலம் பெயர்ந்த மக்களின் பங்கு அளிப்பரியது என்றால் மிகையல்ல. அதுவும் போரின் பின்பு மிக மிக அவசியமானதாக இருக்கின்றன.

மேற்குறிப்பிட்டவற்றில் அகதி வாழ்விலிருந்து விடுபடுதலுக்கும் சொந்த இடங்களுக்கு மீள திரும்பலுக்கும் மற்றும் காணியில்லாதவர்களுக்கு காணி ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தமிழ் அரசியல் பிரதிநிகள் மட்டுமே உதவ முடியும். மற்ற பிரச்சனைகளை புலம் பெயர்ந்த சமூகம் அக்கறையுடன் ஒன்றுபட்டு செயற்படுமாயின் ஒரளவாவது தீர்க்கலாம்.

முதலில் மீளக் குடியேறியவர்கள் தமது காணிகளில் பாதுகாப்பகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கு ஒழுங்கான சிறு வீடாவது இருப்பது அவசியமானது. இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். பலர் வேலை செய்வதற்கு தயாராக இருந்தபோதும் அவர்கள் உழைப்பதற்கு எந்தவிதமான தொழிலும் இல்லாது இருக்கின்றனர். ஆகவே பல்வேறு தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம். இவ்வாறான வேலைத்திட்டங்களை உருவாக்கும் பொழுது போரில் பாதிக்கப்பட்டு தமது அங்கங்களை இழந்தவர்கள் செய்யக்கூடிய வேலைத்திட்டங்களையும் கருத்தில் கொள்வது நல்லது. மேலும் இவர்கள் அவ்வாறான தொழில்களை செய்வதற்கான பயிற்சிகளையும் வழங்கவேண்டியிருப்பதைக் கவனத்தில் கொள்வது அவசியமானதாகும்.

போரின் பின் வாழ்கின்ற புதிய இளம் தலைமுறையினரும் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளும் முக்கியத்துவமானவை. இவர்கள், தாம் எதிர்நோக்கும் வறுமை காரணமாக கல்வியைத் தொடரமுடியாது வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறு வேலைக்கு செல்கின்ற மாணவர்கள் கல்வி கற்காமல் இருப்பதற்கும், பாடசாலைகளுக்கு செல்லாமல் இருப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. உதாரணமாக, குடும்பத்தில் நிலவும் வறுமை மற்றும் பெற்றோர்களின் அறியாமை, மற்றும் தாய் தந்தையோருக்கு இடையிலான முரண்பாடுகள், குடும்ப வன்முறை, குடிக்கு அடிமையாக இருக்கும் தந்தை அல்லது பெற்றோர், ஆசிரியர்கள் இல்லாமை, பாடசாலைக்கான கட்டிடங்கள் இல்லாமை மற்றும் மாணவர்களுக்கு கற்பதற்கு ஏற்ப வசதிகள் இல்லாமை, அல்லது வறுமை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாமையால் நீண்ட தூரம் நடந்து செல்லுதல், இவ்வாறு எதிர்கொள்ளும் கஸ்டங்களினால் கல்வி கற்க முடியாமை அல்லது விருப்பமில்லாமை, அல்லது மாணவர்களின் அக்கறையினம்... எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இதனை நிவர்த்தி செய்வதற்கு முதலாவது இந்தக் குடும்பங்களின் பொருளாதார தேவைகள் பூர்த்தி செய்யப்படவேண்டி உள்ளது. இவ்வாறன பிரச்சனைகள் பெரும்பாலும் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களே எதிர்கொள்கின்றனர். நகரப்புரங்களை சேர்ந்தவர்களது பிரச்சனைகள் வேறுவகையானவை. இவர்களுக்கு மேற்குறிப்பிட்ட பிரச்சனைகள் குறைவாக இருப்பினும் சரியான வழிகாட்டல்கள் இல்லாமை முக்கியமான குறைபாடாக இருக்கின்றது என தற்போதைக்கு குறிப்பிடலாம்.

போரின் பின்பான சூழலில் காணப்படுகின்ற இன்னுமொரு முக்கியமான பிரச்சனை பெற்றோர் இல்லாத குழந்தைகள். இப்பொழுது சிறுவர் இல்லங்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அதிகமாக இருக்கின்றது. மட்டக்களப்பில் மட்டும் 75க்கு மேற்பட்ட சிறுவர் இல்லங்கள் செயற்படுகின்றன. ஒவ்வொன்றிலும் மூன்று நான்கு வயதுகளிலிருந்து 16 வயது வரையிலான குழந்தைகள் குறைந்தது 30 பேராவது இருக்கின்றார்கள். பலருக்கு பெற்றோர் இல்லை. சிலருக்கு பெற்றோர் இருந்தும் இக் குழந்தைகள் வளர்ப்பதற்கான பொருளாதார வசதிகள் இல்லை. சிலருக்கு தந்தை இல்லை. ஆகவே தாயினால் தனித்துக் காப்பாற்றக் கூடிய பொருளாதார வசதிகள் இல்லை. அல்லது தாய் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருப்பார். இதைவிட இராணுவத்தின் பாலியல் வன்புணர்ச்சியால் உருவான குழந்தைகளை வளர்க்க விரும்பாது இவ்வாறன இல்லங்களுக்குப் பொறுப்புக் கொடுத்துள்ளார்கள். மற்றும் மரணமடைந்த அல்லது கொலைசெய்யப்பட்ட முன்னால் போராளிகளின் குழந்தைகள். இவ்வாறு பல காரணங்களினால் குழந்தைகள் அநாதைகளாக இந்த இல்லங்களில் வாழ்கின்றன.

இந்த இல்லங்களைப் பராமரிப்பவர்கள் சிலர் நல்ல உள்ளம் படைத்தவர்களாக இருக்கின்றனர். சிலர் வியாபார நோக்கம் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். எவ்வாறு இருந்தபோதும் (இவ்வாறான ) குழுந்தைகளை வளர்ப்பது தொடர்பான பரந்த ஆழமான அறிவற்றவர்களாக அக்கறையற்றவர்களா இருப்பதையும் அறியக் கூடியதாக இருந்தது. ஆகவே இந்த இல்லங்களில் வாழ்கின்ற குழந்தைகளுக்கு சரியான வழிகளில் உணவு, உடை, கல்வி என்பன கிடைப்பதற்கு வழிசெய்யவேண்யுள்ளது. மேலும் இந்த இல்லங்களில் தொழில் புரிகின்றவர்களுக்கு குழந்தை வளர்ப்பு தொடர்பான முறையான தொழிற்பயிற்சியும் வழங்க வேண்டியது முக்கியமானதாகும் அவசியமானதுமாகும்.

இவ்வாறன பிரச்சனைகளை விட போரினால் ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள், அனுபவங்கள் என்பவற்றினால் பல்வேறு வகைகளில் அனைவரும் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரு பிரிவினர்கள் உள்ளனர். ஒரு வகையினர் போரினால் பாதிக்கப்பட்ட சதாரண மக்கள். மற்ற வகையினர் போரில் பங்குபற்றிய முன்னால் போராளிகள். இவர்கள் அனைவரும் போரினாலும் அதன் பின்னான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள சூழல்களினாலும் பல வகைகளில் பாதிக்கப்பட்டவர்கள். இருப்பினும் வேறுவேறான மனநிலை பாதிப்புகளைகளைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களது முரண்பட்ட மனநிலைகளை மாற்றி பொதுவானதும் ஆரோக்கியமானதுமான மனநிலையை உருவாக்குவதன் மூலமும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்க வைக்கின்றமையும் முக்கியமான செயற்பாடுகள். இதுவே இவர்கள் மீண்டும் தமது குடும்பங்களுடன், உறவுகளுடன், சமூகங்களுடன் இணைந்து வாழ வழிவகுக்கும். இதற்காக இவர்களுக்கு பலவிதமான உளவியற் பயிற்சிகளும் தியான வழிப் பட்டறைகளும் ஒழுங்கு செய்யலாம். தூரதிர்ஸ்டமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் உளவியல் வைத்தியர்கள் (psychiatrists), யாழில் சிவயோகன், வன்னியில் சிவதாஸ், கிழக்கில் கடம்பநாதன் என, மூவர்தான் செயற்படுகின்றனர் என அறியமுடிகின்றது. ஆகவே புலம் பெயர்ந்து வாழ்க்கின்ற இத் துறை சாரந்த நிபுணர்கள் இவ்வாறான செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் அக்கறை காண்பிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட பல்வேறுவகையான செயற்திட்டங்களை வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் பகுதிகளில் இருக்கின்ற சமூக அக்கறையுள்ளவர்கள் சிலர் சிறிய குழுக்களாக இணைந்தோ அல்லது தனிமனிதர்களாகவோ முன்னெடுத்து செயற்படுகின்றனர். இவர்கள் தமது திட்டங்களை பல்வேறு உதவிகள் மற்றும் வழிகளுக்கூடாக சிறியளவில் முன்னெடுக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு ஆட்பலம், நிதிப்பலம், புலமைத்துவ அறிவுப் பகிர்தல்கள், தொழில் நிபுணத்துவ வழிகாட்டல்கள் என்பவற்றில் நிறையவே பற்றாக்குறைகள் நிலவுகின்றன. புலம் பெயர்ந்த மனிதர்கள் தம் தேசத்தை மீட்டெடுக்க விரும்பின் இப் பிரதேசங்களுக்கு சென்று சிறிது காலம் வாழ்வதனுடாக இவ்வாறன குழுக்களின் அறிமுகங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அவர்களிடமிருந்து நேரடியாகவே அவர்களது பிரச்சனைகள், தேவைகள் என்ன என்பதையும் அறிந்து கொண்டு தம்மால் செய்ய முடிந்த பங்களிப்புகளை செய்யலாம். ஆனால் எத்தனை பேர் இதற்கு முன்வருவோம்?

இவ்வாறன வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு பணம் எங்கே என அனைவரும் கேட்கலாம். ஆயுதப் போராட்டம் நடக்கும் பொழுது அந்த மனிதர்கள் போராடவும், மரணிக்கவும், அங்கவீனர்களாக வருவதற்கும் பணம் அனுப்பியவர்கள் புலம் பெயர்ந்த மக்களாகிய நாம். இதைவிட இப்பொழுதும் புலம் பெயர்ந்த நாடுகள் பலவற்றில் அடுத்தகட்ட போருக்கான பணம் தொடர்ந்தும் சேர்க்கப்படுகின்றது. தனி நபர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து நேரடியாக சில வங்கிக் கணக்குகளுக்கு பணம் இப்பொழுதும் செல்வதாக அறியக்கிடைக்கின்றன. மேலும் ஏற்கனவே போராட்டத்திற்கு என சேர்க்கப்பட்ட பணங்கள் பினாமிகளின் பெயர்களின் இருக்கின்றன. இந்தப் பணங்கள் எங்கே செல்கின்றன, எங்கே இருக்கின்றன என்பதை மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக குறிப்பிட்டவர்கள் முன்வைக்கவேண்டும். இது மட்டுமின்றி புலம் பெயர்ந்த நாடுகளில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள், நட்சத்தர விழாக்கள் போன்றவற்றுக்கும் குறைவில்லை. இவ்வாறான விழாக்கள் நடாத்துவதில் ஒரு தவறுமில்லை. ஆனால் இலங்கையில் நடக்கின்ற விழாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் மட்டும் நிற்பதுடன் அந்த மக்களின் மகிழ்ச்சிக்கு எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்காமல் இருப்பது பாரிய தவறு மட்டுமல்ல நியாமற்றதுமாகும். அதேவேளை புலத்தில் வாழ்கின்ற மக்களை முன்னிலைப்படுத்தி அவர்களுக்கு உதவுவதாக விளம்பரப்படுத்தி நடைபெறும் இவ்வாறான பல நிகழ்வுகள் மூலம் சேர்க்கப்படுகின்ற நிதிகள் அந்த மக்களுக்கு பயன்படுத்தப்படுகின்றதா என்பதும் கேள்விக்குறியது. புலம் பெயர்ந்த மக்களிடம் சேர்த்த பணத்திற்கான கணக்கு வழக்குகளை யார் கேட்பது? யார் பார்ப்பது?

மேற்குறிப்பிட்டவாறு பல வழிகளில் புலம் பெயர்நாடுகளில் சேர்கின்ற அல்லது சேர்ந்த பணத்தை போரினால் பாதிக்கப்பட்டு தொடர்ந்தும் கஸ்டங்களை அனுபவிக்கின்ற புலத்தில் வாழ்கின்ற மக்களின் தேவைகளுக்காக பயன்படுத்தலாம். இந்த நிதிவளங்களை நாம் பொதுவான ஒரு நிறுவத்தினுடாகவும் கணக்கு வழக்குகளுகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்கின்ற, பயன்படுத்துகின்ற வழிமுறைகளை உருவாக்கிப் பின்பற்றலாம். சில வேலைத்திட்டங்களை அங்கு அதிகாரத்திலிருக்கின்றவர்களின் அனுமதி பெற்றே செய்யவேண்டி இருக்கின்றமை தூரதர்ஸ்டம். ஆனாலும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் குறிப்பாக பெண்களினதும் குழந்தைகளினதும் முன்னால் போராளிகளினதும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இவ்வாறான உடன்படிக்கைகள் செய்வது தவிர்க்க முடியாததாகும். ஊனமுற்ற ஒரு தேசமாக இருப்பதைவிட இவ்வாறன உடன்படிக்கைகள் மூலமாக ஆரோக்கியமான தேசத்தைக் கட்டி எழுப்ப முயற்சிப்பதில் எந்தவகையிலும் குறைந்ததுமில்லை தவறுமில்லை. இது நமது தொடர்ச்சியான போராட்ட முன்னெடுப்புகளுக்கும் தேசங்களின் விடுதலைக்கும் தடையாக இருக்கப் போவதில்லை. மாறாக பலம் சேர்க்கும் ஒன்றாகவே இருக்கும்.

இறுதியாக நமது தேசம் ஊனமுற்ற தேசமாக, தாம் வாழ்வதற்காக மற்றவர்களினடம் கையேந்தி பிச்சை எடுக்கவேண்டுமா இல்லை சொந்தக் காலில் எழுந்து நிற்க வேண்டுமா என தீர்மானிப்பதில் புலம் பெயர்ந்த மக்களுக்கும் பங்கு உண்டு. பிச்சைக்கார தேசத்தால் தனது விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது என்பதை நாம் புரிந்துகொள்வில்லை எனில் தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி கதைப்பதற்கான அருகதையை நாம் இழந்தவர்களாவோம். அடுத்தது புலிகளின் தலைமை அதிகாரத்தில் இருக்கின்றபோது புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்து பலபேர் புலம் நோக்கி சென்றனர். இவ்வாறு சென்றவர்கள் பலர் புலிகளின் வீர தீர செயல்களைப் பார்ப்பதற்கும் புலித்தளபதிகளுடன் படம் எடுப்பதற்கும் அவர்களுடன் உறவுகளை வளர்ப்பதற்கும் சென்றார்கள். ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்களே. அதேபோல் இன்று இலங்கைக்கு செல்கின்ற பலரும் கலியாணங்கள், கோயில் திருவிழாக்கள், ஊர் சுற்றுலாக்கள் போன்றவற்றுக்கே செல்கின்றனர். மிகச் சிலரே, அந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் அவர்களுடன் வாழ்வதற்காகவும், மக்களின் வேதனைகளை அறியவும் ஆறுதல் கூறவும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் அன்றும் இன்றும், செல்கின்றனர். இவ்வாறன நோக்கங்களுக்காக செல்பவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். உண்மையிலையே இப்பொழுதுதான் அதிகமானவர்கள் அங்கு செல்லவேண்டும். ஆம்! தங்கள் உயிருக்கு பாதுகாப்பானவர்கள் என உணர்பவர்கள் மட்டும் செல்லவேண்டும். ஆனால் பலபேர் முகநூல் புரட்சி செய்து விட்டு தமக்குப் பிரச்சனை என சும்மா படம் காட்டுபவர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் தாம் எழுதும் கதைகளிலும் கட்டுரைகளிலும் பின்னுட்டங்களிலும் வீரவசனங்கள் எழுதுவதில் மட்டும் எந்தக் குறையும் வைப்பதில்லை? சிலர் தம்மைத்தாமே தலைவர்களாக கற்பனை செய்து செய்து கொண்டு தலைமறைவாக வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். இவர்கள் இவ்வாறான தமது வீரவசனங்களையும் தலமைத்துவ ஆசைகளையும் கற்பனைகளையும் குறைத்துக்கொண்டு ஒருதரமாவது வடக்க, கிழக்குக்கு மட்டுமல்ல மலையகப் பகுதிகளுக்கும் சென்று அவர்களுடன் வாழ்ந்து வருவது மிகவும் பயனுள்ளதும் அவசியமானதுமாகும். ஆகக் குறைந்தது அந்த மக்களுக்கு சில கணங்கள் ஆனந்தத்தையும் அமைதியையுமாவது இது வழங்கும்.

நாம் மீண்டும் இலங்கைக்கு வடக்கு கிழக்கு மலையகத்திற்கு செல்வது ஒரு இயக்கமாக மாறவேண்டும். உண்மையிலையே தமிழ் தேசத்தின் விடுதலையில் அக்கறையாக இருக்கின்றவர்கள் இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவை இரண்டும் ஒரு இயக்கம் போல அலையலையாக நடைபெறவேண்டும். வெறுமனே ஆயுதம் தூக்கிப் போராடுவதும் மற்றவர்களின் குழந்தைகள் மரணிப்பதற்கு நிதிப்பங்களிப்பு செய்வது மட்டுமல்ல போராட்டம். காலத்திற்கு ஏற்றால்போல நமது இலக்கை நோக்கிய பயணத்தை முன்னெடுப்பதற்கு புதிய வழிமுறைகளையும் தந்திரோபாயங்களையும் கண்டறிவதே ஆரோக்கியமானதும் முன்னேற்றகரமானதுமாகும். புரிந்துகொள்வோமா...?

பி.கு: ஒன்று - புலம் பெயர்ந்த தேசத்திலிருந்து சென்று வந்தவர்களின் குறிப்புகளில் மிகவும் பயனுள்ள குறிப்பு சஞ்சயன் சிவமாணிக்கம் அவர்களுடையது. அவரது வலைப்பதிவில் பலரின் அனுபவங்களையும் பிரச்சனைகளையும் வாசிக்கலாம். http://visaran.blogspot.ca.

பி.கு: இரண்டு – மேற்குறிப்பிட்டவாறு எழுதியது உங்களுக்காக மட்டுமல்ல. இனிவரும் காலங்களில் குறைந்தது வருடத்தில் ஆறு மாதங்களாவது இலங்கையில் சென்று என்னால் முடிந்ததை செய்யும் நோக்கம் உள்ளது. போரில் பல வகைகளில் பாதிக்கப்பட்ட மனிதர்கள் அந்தப் பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான சில பங்களிப்புகளை எனது பயிற்சிப்பட்டறை மூலமாக செய்யலாம். இம் முறை செய்த குறுகிய நேர பயிற்சிப்பட்டறைகள் நல்ல வரவேற்பை பெற்றன. இதை மேலும் சிறப்பாக செய்வதற்கு (போர்கால) நெருக்கடிகளின் பின் ஏற்படும் மன அழுத்தங்களை (PTSD) குறைப்பதற்கான அல்லது நீக்குவதற்கான பயிற்சிகளையும் பெற்றிருப்பது நல்லது. இத் துறையில் மேலும் கற்கவும் பயிற்சி பெறவும் நீங்கள் அறித கனேடிய நிறுவனங்கள் இருந்தால் அறியத்தரவும். இவ்வாறன பயிற்சி பெற்று செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இலங்கையில் ஆறுமாத காலங்கள் செயற்படுவதற்கான திட்டங்களை எந்த நிறுவனங்களாவது முன்னெடுக்கின்றது எனின் அதன் விபரங்களையும் அறியத்தாருங்கள்.

மீராபாரதி

01.09.2012

[size=4]பல நல்ல கருத்துகள் உள்ள கட்டுரை / பயணக்குறிப்பு. நன்றி இணைப்பிற்கு. [/size]

[size=1]

[size=4]உதவிகளை மக்களை ஒன்று சேர்த்து பரந்து பட்ட அளவில் செய்யும் வசதிகள் இல்லை, எனவே, தனிப்பட்ட உதவிகளே சாத்தியமாகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]அரசியல் தீர்வு ஒன்று ஏற்பட்டு [/size][size=4]ங்குள்ள எமது மக்கள் தாமே சுதந்திரமாக எமது உதவிகளை திட்டமிட்டு பயன்படுத்தும் நிலை வரும்வரை அவர்களை முடிந்தளவிற்கு வாழவைப்போம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிதிவளங்களை நாம் பொதுவான ஒரு நிறுவத்தினுடாகவும் கணக்கு வழக்குகளுகளில் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்கின்ற, பயன்படுத்துகின்ற வழிமுறைகளை உருவாக்கிப் பின்பற்றலாம்.

இந்த பூனைக்கு மணி கட்டுவது யார்? நம்பகமான அமைப்பு எது?

வீர வசனம் பேசுவது போல இதுவும் இருக்ககூடாது

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இரட்டை குடியுரிமை பெறுவற்கான வழி முறைகள் என்ன?

இலங்கையின் இரட்டை குடியுரிமை பெறுவற்கான வழி முறைகள் என்ன?

[size=5]http://www.migrationlanka.com/dual_citizenship.htm[/size]

இந்த பூனைக்கு மணி கட்டுவது யார்? நம்பகமான அமைப்பு எது?

வீர வசனம் பேசுவது போல இதுவும் இருக்ககூடாது

[size=4]சிறியளவில் பல உள்ளன. [/size]

[size=4]பெரியளவில் ஒன்றும் இல்லை, இருக்கவும் முடியாது என்பது எனது கருத்து. [/size]

இந்த பூனைக்கு மணி கட்டுவது யார்? நம்பகமான அமைப்பு எது?

வீர வசனம் பேசுவது போல இதுவும் இருக்ககூடாது

[size=4]சிறியளவில் பல உள்ளன. [/size]

[size=4]பெரியளவில் ஒன்றும் இல்லை, இருக்கவும் முடியாது என்பது எனது கருத்து. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.