Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2012 T20உலக கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவனை

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வேஸ்ட் இண்டீஸ் டீமில சிமித் இற்கு அடுத்த மட்சில் சான்ஸ் வரலாம்.[/size]

[size=1][size=5]சிமித்தும் ஒரு அதிரடி ஆட்டக்காரன். [/size][/size]

ஒம் அவர் அதிரடி விளையாட்டுக்கு பெயர் போன வீரர் தான்....சார்ளஸ் கொஞ்ச நாளா வடிவாய் விளையாடி ஓட்டம் எடுக்கிரார் இல்லை..அதோடை அவர் மட்டையை கையில் வைச்சு கொன்டு பயப் பிடுரார் தன்ட விக்கேட் போயிடுமொ என்று..20‍.20விளையாட்டு என்ரா அடிச்சு ஆடனும்...அடுத்த விளையாட்டில் சிமித்தை கேஜிலோடை ஓப்பினரா விடனும் ...அவர் நல்லா அடிப்பார்.... :D

  • Replies 877
  • Views 34.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிலையும் அவசரப்படக் கூடாது பையா [size=1][வாயைக் குடுத்து மாட்டிக்கப் போறேனோ] :lol:[/size]

தோல்வி உறுதி...அந்த கவலையை போக்காட்ட ..இப்பவே ஒரு போத்தல் எடுத்து வையுங்கோ ஞாயிற்று கிழமை உதவும் ஹிஹிஹிஹிஹி :)

சொறி கைய்ஸ் இந்த முறை டுவன்ரி 20 கப் நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலும் சிறிலங்காவுக்குத்தான். இந்தியா, அல்லது அவுஸ் பைனலுக்கு வந்து இருந்தால் ஓரளவிற்கு கணிக்கலாம், பட் நாசமா போன வெஸ்ட் இன்டீஸ் பைனலுக்கு போனதால இலங்கை காரங்கள் கைகளிற்கு 95% கப் கையில வந்த மாதிரி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொறி கைய்ஸ் இந்த முறை டுவன்ரி 20 கப் நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலும் சிறிலங்காவுக்குத்தான். இந்தியா, அல்லது அவுஸ் பைனலுக்கு வந்து இருந்தால் ஓரளவிற்கு கணிக்கலாம், பட் நாசமா போன வெஸ்ட் இன்டீஸ் பைனலுக்கு போனதால இலங்கை காரங்கள் கைகளிற்கு 95% கப் கையில வந்த மாதிரி.

எதை வைச்சு சொல்லுறீங்கள்...இந்த உலக கோப்பைக்கு என்ன தகுதி வேனுமோ அது வெஸ்சின்டீசிட்டை இருக்கு....போன ஒரு விளையாட்டை வைச்சு சும்ம இடை போடாதைங்கோ...இனி இந்த தண்ணீருக்கை இந்த அரிசி வேக்காது....அதிரடி வீரன் 12ஓவர் மட்டும் நிக்கனும் ..பிறக்கு சிங்களம் மகே அம்மே கேஜிலின்ட அடி கும்மே என்று தான் சொல்லுவாங்கள்...... :D :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கெய்ல் விளாசல்: பைனலில் வெஸ்ட் இண்டீஸ்! * ஆஸி.,க்கு "மரண அடி :D

gayle-336_85.jpg

கொழும்பு: "டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முதல் முறையாக முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ். நேற்று நடந்த அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. "புயல் வேகத்தில் 75 ரன்கள் விளாசிய கெய்ல், வெற்றிக்கு கைகொடுத்தார். ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது.

இலங்கையில், நான்காவது "டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று கொழும்புவில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

டேவிட் ஹசி வருகை:

ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டு டேவிட் ஹசி இடம் பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோவுக்கு பதிலாக டுவைன் பிராவோ தேர்வு செய்யப்பட்டார். "டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி, "பேட்டிங் தேர்வு செய்தார்.

சிக்சர் மழை

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஜான்சன் சார்லஸ் (10) ஏமாற்றினார். இரண்டு சிக்சர் அடித்த சாமுவேல்ஸ் (26) ஆறுதல் தந்தார். பின் கிறிஸ் கெய்ல், டுவைன் பிராவோ ஜோடி இணைந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இவர்கள் சிக்சர் மழை பொழிய, ஸ்கோர் "ஜெட் வேகத்தில் உயர்ந்தது. வாட்சன், தோகர்டி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட கெய்ல், டேவிட் ஹசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி, இத்தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய டுவைன் பிராவோ வாட்சன், பிராட் ஹாக், கம்மின்ஸ் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார். இவர் 37 ரன்களுக்கு வெளியேறினார்.

சவாலான இலக்கு:

அடுத்து வந்த போலார்டுடன் இணைந்த கெய்ல், தனது ரன் வேட்டையை தொடர்ந்தார். ஸ்டார்க் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த போலார்டு, தோகர்டி வீசிய கடைசி ஓவரில் "ஹாட்ரிக் சிக்சர் விளாசினார். போலார்டு 38 ரன்களுக்கு அவுட்டானார்.

14 சிக்சர்கள்:

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. கெய்ல் (75 ரன்கள், 41 பந்துகள், 6 சிக்சர், 5 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 14 சிக்சர், 13 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

வாட்சன் ஏமாற்றம்:

கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். பத்ரி வீசிய முதல் ஓவரிலேயே வார்னர் (1) போல்டானார். மூன்று பவுண்டரி அடித்த மைக்கேல் ஹசி (18), சாமுவேல்ஸ் பந்தில் வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்சன் (7), பத்ரீயிடம் சரணடைந்தார்.

விக்கெட் மடமட

ஏழாவது ஓவரை வீசிய வேகப்பந்துவீச்சாளர் ரவி ராம்பால் கேமிரான் ஒயிட் (5), டேவிட் ஹசி (0) ஆகியோரை வெளியேற்றி இரட்டை "அடி கொடுத்தார். வேட் (1) சுனில் நரைன் சுழலில் சிக்கினார். ஆஸ்திரேலிய அணி 43 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பெய்லி ஆறுதல்

பின் கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஆறுதல் அளித்தனர். ரசல் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசிய இவர், 23 பந்தில் அரைசதம் அடித்தார். போலார்டு பந்தில் பெய்லி (63) அவுட்டானார். அடுத்த பந்தில் கம்மின்ஸ் (13) நடையைக் கட்டினார். பிராட் ஹாக் (7), மிட்சல் ஸ்டார்க் (2) ஏமாற்ற, ஆஸ்திரேலிய அணி 16.4 ஓவரில் 131 ரன்களுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. தோகர்டி (9) அவுட்டாகாமல் இருந்தார்.

இந்த வெற்றியின்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி பைனலுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் பெற்றார்.

இலங்கையுடன் மோதல்

நாளை கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்கவுள்ள பைனலில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

33 ஆண்டுகளுக்கு பின்...

நேற்றைய அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பை தொடர்களில் (50, 20 ஓவர் சேர்த்து) 33 ஆண்டுகளுக்கு பின் பைனலுக்கு முன்னேறியது. கடைசியாக 1979ல் நடந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் பைனலுக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 1996 (50 ஓவர்), 2009ல் (டுவென்டி-20) நடந்த உலக கோப்பை தொடர்களில் அரையிறுதி வரை சென்றது.

* "டுவென்டி-20 உலக கோப்பை வரலாற்றில் பைனலுக்கு முன்னேறுவது இதுவே முதன்முறை. முன்னதாக 2009ல் அரையிறுதி வரை முன்னேறியது.

* ஐ.சி.சி., சார்பில் நடத்தபடும் தொடர்களில் 2006ம் ஆண்டுக்கு பின், முதன்முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது. கடந்த 2006ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு முன்னேறிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து இரண்டாவது இடம் பிடித்தது

பழிதீர்த்தது

லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் "பி பிரிவில் இடம் பெற்றிருந்தன. இவ்விரு அணிகள் மோதிய லீக் போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட, "டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இத்தோல்விக்கு நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி பழிதீர்த்தது.

200வது சிக்சர்

ஆஸ்திரேலியாவின் தோகர்டி வீசிய 6வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல். இது, இத்தொடரின் 200வது சிக்சராக அமைந்தது. முதல் சிக்சரை ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கையின் ஜீவன் மெண்டிஸ் அடித்தார். 100வது சிக்சர் நியூசிலாந்துக்கு எதிராக இலங்கையின் தில்ஷன் அடித்தார்.

இதுவே அதிகம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 205 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இத்தொடரில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. முன்னதாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கொழும்புவில் நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது.

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D:)
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் தோத்தது எனக்கு அவளவு சந்தோசம். இங்க இருக்கிற இன்னொரு தமிழ் பெடியன் அவுசுக்கு தான் சரியான சப்போட் எண்டு FB ல என்னோட சூடாகீட்டார். இவங்களை என்ன செய்யுறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol:

ஒம் அவர் அதிரடி விளையாட்டுக்கு பெயர் போன வீரர் தான்....சார்ளஸ் கொஞ்ச நாளா வடிவாய் விளையாடி ஓட்டம் எடுக்கிரார் இல்லை..அதோடை அவர் மட்டையை கையில் வைச்சு கொன்டு பயப் பிடுரார் தன்ட விக்கேட் போயிடுமொ என்று..20‍.20விளையாட்டு என்ரா அடிச்சு ஆடனும்...அடுத்த விளையாட்டில் சிமித்தை கேஜிலோடை ஓப்பினரா விடனும் ...அவர் நல்லா அடிப்பார்.... :D

பாஸ் கிறிஸ்கேய்ல் முக்கியமான போட்டிகளில் கோட்டை விட்டுவிடுவார், அவர் உடல் பலத்தை மட்டுமே நம்பி விளையாடுபவர், அடிச்சால் சிக்ஸ்சார் இடிச்சால் பவுன்ட்றி என்ற கொள்கை கொண்டவர், இலங்கை அணியின் சுழலை எதிர்கொள்ள சிரமப்படுபவர், கிறிஸ்கேய்ல் ஏமாற்றினால் பொல்லார்ட், கில்லார்ட் எல்லாம் கொல்லை பக்கம் தான். அதைவிட அண்மையில் நடந்த போட்டிகள் (இலங்கை * உலகம்)இலங்கையை வென்றதாக (பெரிய ரன் வித்தியாசத்தில்) இல்லை. அதேவேளை மகிளே,டில்சான் சோடி செம பார்மில இருக்கிற படியால்..... 100% விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஸ் கிறிஸ்கேய்ல் முக்கியமான போட்டிகளில் கோட்டை விட்டுவிடுவார், அவர் உடல் பலத்தை மட்டுமே நம்பி விளையாடுபவர், அடிச்சால் சிக்ஸ்சார் இடிச்சால் பவுன்ட்றி என்ற கொள்கை கொண்டவர், இலங்கை அணியின் சுழலை எதிர்கொள்ள சிரமப்படுபவர், கிறிஸ்கேய்ல் ஏமாற்றினால் பொல்லார்ட், கில்லார்ட் எல்லாம் கொல்லை பக்கம் தான். அதைவிட அண்மையில் நடந்த போட்டிகள் (இலங்கை * உலகம்)இலங்கையை வென்றதாக (பெரிய ரன் வித்தியாசத்தில்) இல்லை. அதேவேளை மகிளே,டில்சான் சோடி செம பார்மில இருக்கிற படியால்..... 100% விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.......

நீங்கள் சொறிலங்கனின் தீவிர ரசிகன் என்று மட்டும் வடிவாய் தெரியுது...இலங்கை தங்கட சொந்த மண்ணி எத்தைனையோ தரம் மண் கவ்வி இருக்கினம்....அது நாளையும் நடக்கப் போக்குது...என்ன சுழல் குழல்...அயாந்தா மேடீன்சின்ட பந்தை கேஜில் எதிர் கொள்ள்வது அவருக்கு பெரிய பிரச்சனை இல்லை.....இலங்கை ரீமின்ட மட்டையடி ஜயோ கையோ......பொறுத்து இருந்து பாப்போன் நாளைக்கு.....huhuhuhu:D

ஒகே பாஸ் நான் சொறிலங்கனின் ரசிகனாகவே இருந்துட்டு போறன், உங்க கணிப்பின் படி மேற்கு இன்டியா வென்றால் யாழில் நான் எழுதும் ஒவ்வொரு கருத்துகளுக்கும் முன்னாடி அதாவது சிவமயம் என்று எழுதுவம் இல்லையா அதே மாதிரி ''பையன்26 யூ கிரேட்'' அப்படின்னு ஆரம்பித்து (எந்த கருத்தென்டாலும்)ஆரம்பிப்பேன் அதே மாதிரி நீங்கள் தோற்றுவிட்டால் '' ஓண்டிபுலி யூ கீரேட்'' அப்படின்னு எழுதவேண்டும், 1,2 கருத்துக்கள் இல்லை 25 கருத்துக்களுக்கு அப்படி எழுதவேண்டும். இந்த டீலுக்கு உங்களுக்கு தில் இருந்தால் வாரமுடியுமா பாஸ்?

கிறிஸ்கேய்ல் மேல நம்பிக்கையை போட்டுட்டு வருவீக என்டு நம்புறன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒகே பாஸ் நான் சொறிலங்கனின் ரசிகனாகவே இருந்துட்டு போறன், உங்க கணிப்பின் படி மேற்கு இன்டியா வென்றால் யாழில் நான் எழுதும் ஒவ்வொரு கருத்துகளுக்கும் முன்னாடி அதாவது சிவமயம் என்று எழுதுவம் இல்லையா அதே மாதிரி ''பையன்26 யூ கிரேட்'' அப்படின்னு ஆரம்பித்து (எந்த கருத்தென்டாலும்)ஆரம்பிப்பேன் அதே மாதிரி நீங்கள் தோற்றுவிட்டால் '' ஓண்டிபுலி யூ கீரேட்'' அப்படின்னு எழுதவேண்டும், 1,2 கருத்துக்கள் இல்லை 25 கருத்துக்களுக்கு அப்படி எழுதவேண்டும். இந்த டீலுக்கு உங்களுக்கு தில் இருந்தால் வாரமுடியுமா பாஸ்?

கிறிஸ்கேய்ல் மேல நம்பிக்கையை போட்டுட்டு வருவீக என்டு நம்புறன். :)

ஒக்கே ஓன்டிபுலி

சரி அதையும் ஒருக்கா பாப்போம் நான் தயார்.... :unsure: :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டி புலி...நான் வெஸ்சின்டீஸ் தோல்வி கண்டால்..நான் யாழில் ஒரு மாதம் எழுதுறதை நிப்பாட்டுரன்..அதே மாரி நீங்களும் இலங்கை தோல்வி கண்டால் ஒரு மாதம் எழுதுறதை நிப்பாட்டனும்...உது தான் உண்மையான சவாள்....... :unsure::huh:

சரி அதைவிட என்னொரு மொரு பெட்டும் இருக்கு, நான் என்ட அக்கவுன் நம்பரை தாரன்!! 4,5 டிஜிட்டில நம்பர் மாதிரி காசை போடுங்கோ.. பட் நான் தோற்றால் 1, 2 டிஜிட்டில அனுப்புறன்.. :)

மேற்கிந்தியத்தீவுகள் ஒரு கை பார்க்கத்தான் நிற்கின்றார்கள் ,

சிறிலங்கா டீமை எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் அவர்களின் விளையாட்டு ஸ்பிரிட் .சிம்பிளாக விளையாடுவார்கள் .

இரண்டு அணிகளுக்கும் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி அதைவிட என்னொரு மொரு பெட்டும் இருக்கு, நான் என்ட அக்கவுன் நம்பரை தாரன்!! 4,5 டிஜிட்டில நம்பர் மாதிரி காசை போடுங்கோ.. பட் நான் தோற்றால் 1, 2 டிஜிட்டில அனுப்புறன்.. :)

:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோப்பை அறிமுக விழாவில்

சாமி ஜெயவத்தனா

மற்ற பக்கம்

பீஈலெட் அவுஸ்ரெலியா மகளிர் கிரிக்கெட் கப்டன்

இட்வாஸ் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் கப்டன்

150722.jpg

150721.jpg

150720.jpg

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

west_indies.gif

வெற்றி நடை போட்டு கோப்பையை வெல்ல எனது வாழ்த்துக்கள்....

வாழ்க்க வெஸ்சின்டீஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டுவென்டி-20' உலக கோப்பை கோப்பை யாருக்கு *இலங்கை-வெ.இண்டீஸ் பலப்பரீட்சை

Jayawardene-sammy.jpg

கொழும்பு: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனல் இன்று நடக்கிறது. சொந்த மண்ணில் கோப்பை வெல்லும் நோக்கத்துடன், இலங்கை களமிறங்குகிறது. 33 ஆண்டுகளுக்குப் பின் பெரிய தொடர் ஒன்றில் சாதிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியும் காத்திருக்கிறது.

நான்காவது "டுவென்டி-20' உலக கோப்பை தொடர் இலங்கையில் நடக்கிறது. இந்தியா, தென் ஆப்ரிக்கா போன்ற அணிகள் "சூப்பர்-8' சுற்றுடன் வெளியேறின. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதியுடன் நாடு திரும்பின.

இன்று நடக்கும் பைனலில், சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற, போட்டியை நடத்தும் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரண்டாவது முறை

"டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இலங்கை அணி, இரண்டாவது முறையாக முன்னேறியுள்ளது. 1996ல் உலக கோப்பை வென்ற பின், இலங்கை அணி எந்த தொடரிலும் சாதித்தது இல்லை.

தற்போது இதற்கான வாய்ப்பு, சொந்த மண்ணில் கிடைத்துள்ளது. அணியின் கேப்டன் ஜெயவர்தனா (210 ரன்கள், 6 போட்டி), சங்ககரா (148) ஆகியோர் அணிக்கு என்ன தேவையோ, அதை சரியாகச் செய்வர். தனித் திறமையால் போட்டியின் முடிவையே மாற்றிடும் வல்லமை படைத்தவர்கள்.

இதில் ஜெயவர்தனா, சங்கராவுக்கு "பார்ம்' பிடித்துக் கொண்டால், இலங்கை அணிக்கு பாதி வெற்றி. "ஆல்-ரவுண்டர்கள்' மாத்யூஸ், பெரேரா இருவரையும் இன்று எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதைப் பொறுத்து போட்டியின் முடிவு மாறலாம்.

மலிங்கா பலம்

வேகப்பந்து வீச்சில், 8 விக்கெட் சாய்த்த மலிங்கா, முக்கிய ஆயுதமாக இருக்கலாம். சுழலில் இதுவரை 11 விக்கெட் வீழ்த்தி முன்னணியில் உள்ள அஜந்தா மெண்டிஸ் உடன், "சீனியர்' ஹெராத் களமிறங்குவது உறுதி. தனன்ஜயாவை கெய்ல் எளிதாக சமாளித்து விடலாம் என்பதால், இவருக்கு வாய்ப்பு கிடைக்காது.

பேட்டிங் எழுச்சி:

வெஸ்ட் இண்டீஸ் அணியில் போலார்டு, சாமுவேல்ஸ், சார்லஸ் என, அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தாலும், கெய்லின் செயல்பாட்டை பொறுத்து தான் ஆட்டம் அமையும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், 41 பந்தில் 75 ரன்கள் குவித்த கெய்ல், இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் 219 ரன்கள் சேர்த்துள்ளார்.

இவரது மிரட்டல் தொடர்ந்தால், இலங்கை அணிக்கு சிக்கல். டுவைன் பிரவோவும் "பார்முக்கு' திரும்பியது கேப்டன் சமிக்கு கூடுதல் பலம்.

நம்பிக்கையற்ற பவுலிங்

பவுலிங்கை பொறுத்தவரை, சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் மட்டும் (6 விக்.,) சிறப்பாக செயல்படுகிறார். எனினும், சுழற்பந்து வீச்சை இலங்கை அணியினர் எளிதாக சந்திக்கலாம் என்பதால், பத்ரீக்குப் பதில் எட்வர்ட்ஸ் களமிறங்கலாம்.

வெற்றி முக்கியம்:

கரீபிய தீவுகளில் கிரிக்கெட் தாக்கம் குறைந்து, கூடைப்பந்து ஆதிக்கம் செலுத்த துவங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பை வெல்லும் பட்சத்தில், அங்குள்ள இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும்.

அதேநேரம், 16 ஆண்டுகளாக உலக கோப்பை கனவில் மிதக்கும் இலங்கை அணிக்கும் பட்டம் தேவை. தவிர, இத்தொடரின் "சூப்பர்-8' போட்டியில், ஏற்கனவே வெஸ்ட் இண்டீசை வென்ற உற்சாகத்தில் இலங்கை உள்ளதால், இன்று களத்தில் அனல் பறப்பது நிச்சயம்

சொந்த மண்ணில் சாதிக்குமா

இலங்கை அணி 1996, உலக கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2007, 2011 உலக கோப்பை தொடர்களின் பைனலுக்கு முன்னேறிய போதும், கோப்பை வெல்ல முடியவில்லை.

"டுவென்டி-20' உலக கோப்பையை, 2009 பைனலில் பாகிஸ்தானிடம் பறி கொடுத்தது. இப்போது, சொந்த மண்ணில் பைனலுக்கு தகுதி பெற்றது. --

பரிசு ரூ. 5 கோடி

இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 14.25 கோடி. கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 5.20 கோடி பரிசுத் தொகை கிடைக்கும். இரண்டாவது அணிக்கு ரூ. 2.60 கோடி கிடைக்கும்.

எல்லாமே தோல்வி

இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை நான்கு "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடின. அனைத்திலும் இலங்கை தான் வென்றது.

* இரு அணிகள் இடையிலான போட்டியில், இலங்கை அணி அதிகபட்சமாக 195/3 ரன்கள் (பிரிட்ஜ்டவுன், 2010) எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்த 177/5 ரன்கள் தான் (2009, நாட்டிங்காம்) அதிகம்.

* பேட்டிங்கில் இலங்கையின் ஜெயவர்தனா (98*), வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (63) அதிக ரன்கள் எடுத்துள்ளனர்.

கடைசி போட்டி

"டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு சைமன் டபெல் (ஆஸி.,), அலீம் தர் (பாக்.,) அம்பயர்களாக செயல்படுகின்றனர். ராடு டக்கர் (ஆஸி.,) மூன்றாவது அம்பயராகவும், "மேட்ச் ரெப்ரியாக' ஜெப் குரோவும் (நியூசி.,) இருப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியுடன் சைமன் டபெல், 41, சர்வதேச அம்பயர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

வேறு வழியில்லை

பைனல் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெய்ல் கூறுகையில்,"" இலங்கையை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், இது எங்களுடைய உலக கோப்பை, எங்களுக்கு மட்டும் தான் வேண்டும். இன்றைய போட்டியில் நாங்கள் ஆதிக்கம் செலுத்துவோம் என்று நம்புகிறேன்,'' என்றார்.

கெய்ல் பயம் இல்லை

இலங்கை அணி கேப்டன் ஜெயவர்தனா கூறுகையில்,"" இன்று ஒட்டுமொத்த வெஸ்ட் இண்டீஸ் அணி மீது தான் கவனம் செலுத்துவோம். கெய்லை பொறுத்தவரையில் அந்த அணியில் உள்ள ஒரு மற்றொரு வீரர், அவ்வளது தான். சாதனைகள் பல இருந்தாலும், சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி திறமை வெளிப்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து தான் வெற்றி கிடைக்கும்,'' என்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D :D
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு விளையாடும் வீரர்கள் விபரம்

West Indies 1 Chris Gayle, 2 Johnson Charles, 3 Marlon Samuels, 4 Dwayne Bravo, 5 Kieron Pollard, 6 Darren Sammy (capt.), 7 Andre Russell, 8 Denesh Ramdin (wk), 9 Sunil Narine, 10 Ravi Rampaul, 11 Samuel Badree

Sri Lanka 1 Tillakaratne Dilshan, 2 Mahela Jayawardene (capt.), 3 Kumar Sangakkara (wk), 4 Lahiru Thirimanne, 5 Jeevan Mendis, 6 Angelo Mathews, 7 Thisara Perera, 8 Nuwan Kulasekara, 9 Lasith Malinga, 10 Ajantha Mendis, 11 Rangana Herath/Akila Dananjaya

west_indies.gif

வெற்றி நடை போட்டு கோப்பையை வெல்ல எனது வாழ்த்துக்கள்....

வாழ்க்க வெஸ்சின்டீஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாத்தம் பிடிச்ச மகிந்த ராஜபக்ஸ்சா நாளைக்கும் விளையாட்டை நேரில் சென்று பாக்கனும்..அப்ப தான் சொறி லங்கன் ரீமிக்கு சனி பிடிக்கிறது...2007உலக கோப்பையில் மகிந்தா நேரில் சென்று பாத்து பினலில் சொறிலங்கன் அவுஸ்ரெலியாவிடம் தோல்வி கண்டது...2011உலக கோப்பையிலும் அந்த நாசமாய் போவான் நேரில் சென்று பாத்து இலங்கை இந்தியாவிடம் தோல்வி கண்டது..நாளைக்கும் அவன் அங்கை போனா ஆண்டவனே என்று நல்லா இருக்கும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 14மணித்தியாலம் இருக்கு விளையாட்டு ஆரம்பம்மாக்க.... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.