Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுகளே......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தும்பளையான்,

கடந்த சில வருடங்களாக உங்களை யாழில் பல கருத்தாடல்களில் சந்தித்துள்ளேன். என்னுடன் யாழில் என்றும் இனிமையாக கருத்துக்களை பகிர்ந்தவர்களில் நீங்களும் ஒருவர். இன்றுதான் உங்கள் வாழ்க்கையின் ஓர் முக்கியகட்டத்தின் அனுபவங்களை வாசித்து அறிந்துகொண்டேன், மிக்க மகிழ்ச்சி. யாழ் கருத்துக்களத்தில் இவ்வளவு விரிவாக யாராவது தமது க.பொ.த.உ வயது அனுபவங்களை பகிர்ந்து நான் வாசித்ததாக எனக்கு நினைவு இல்லை. உங்கள் பழைய அனுபவங்களை விபரிக்கும் கதையை வாசித்தபோது எவ்வளவோ பல விடயங்களை அறியமுடிந்தது.

நான் 95இல் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறினேன். ஒரே ஒரு தடவை மட்டும் ஹாட்லிக்கல்லூரிக்கு வந்துள்ளேன். எனது நண்பன் ஒருவன் ஈழநாதம் பத்திரிகையில் ஆசிரியராக விளங்கினான். அவன் ஏதோ கட்டுரை எழுதுவதற்காக (எதுபற்றியது என்று தற்போது நினைவில் இல்லை) ஹாட்லிக்கல்லூரிக்கு வந்து, ஹாட்லியின் மிகவும் பழைய அதிபர் ஒருவரின் வீட்டுக்கு சென்று அவரையும் பேட்டி கண்டான். அப்போது அவனுடன் நானும் வந்தேன். இன்னோர் தடவை க.பொ.த.உ பரீட்சையில் தேசிய அளவில் சிறந்தபேறுகளைப்பெற்ற மாணவர்களை ஈழநாதம் பத்திரிகைக்காக பேட்டிகாண்பதற்காக சென்றபோது வர்த்தகத்துறையில் தேசிய அளவில் முதலிடம் பெற்ற தும்பளையில் உள்ள ஓர் மாணவனின் (ஹாட்லி மாணவன் என்று நினைக்கின்றேன்) வீட்டுக்கு எனது நண்பனுடன் பேட்டி காண்பதற்காக சென்றுள்ளேன். அது தவிர வேறு சில சமயங்களிலும் வடமராட்சிக்கு வந்துள்ளேன். நான் யாழ்ப்பாணத்தில் முழுமையாக பார்க்காத இடங்கள் இரண்டு உள்ளன.

ஒன்று: தீவுப்பகுதி - இதை முற்றிலுமாகவே ஒருபோதும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒரே ஒரு தடவை மூன்றாம் வகுப்பில் பள்ளிச்சுற்றுலாவின்போது மண்டைதீவில் அமைந்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினை பார்ப்பதற்கு சென்றபோது ஏதோ பிரச்சனை காரணமாக அரைவழியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுவிட்டோம். இரண்டு: வடமராட்சி, தென்மராட்சி. மிகவும் அரிதாகவே சில தடவைகள் இந்த இடங்களைப்பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், வலிகாமம் பெரும்பாலும் எல்லாப்பகுதிகளும் அத்துப்படி.

உங்கள் அனுபவங்கள் நான் அறிந்திராத, நான் அனுபவிக்காத பல்வேறு விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது. வெவ்வேறு காலங்களில் பிறந்து, வெவேறு சூழ்நிலைகளில் வளர்ந்த நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு காலப்பகுதிகளுக்குரிய வரலாற்றின் சான்றுகளாக வாழ்கின்றோம். எங்கள் ஒவ்வொருவரினுடைய வாழ்வும் வித்தியாசமானது. இதேபருவவயதில் இப்போது யாழ்ப்பாணத்தில் ஹாட்லிக்கல்லூரியில் கற்கின்ற மாணவனுக்கு உங்களைப்போன்றது அல்லாத இன்னுமோர் வித்தியாசமான வேறுபட்ட அனுபவம் கிடைக்கலாம். நாங்கள் எவ்வளவு தூரம் ஒருவருடன் ஒருவர் பல்வேறு வகைகளில் வேறுபாடுகளைக்கொண்டிருந்தாலும் ஏதோவகையில் ஒருவருடன் ஒருவர் அன்யோன்யமாக பிணைப்புக்களையும் கொண்டுள்ளோம்.

வாழ்த்துக்கள்!

வணக்கம் கலைஜன் அண்ணா. கருத்துக்களுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட வர்த்தகப் பிரிவு மாணவனை நன்கு தெரியும், முகுந்தன் அண்ணா. 1994 A/L.

Hartley.jpg

தும்பளையான் வாவ்...!

இன்றுதான் சற்று ஆறுதலாக உங்கள் அனுபவப்பதிவுகளை படித்தேன். சுவார்சியமாக எழுதுகிறீர்கள் வாசிக்க வாசிக்க ஆவலைத் தூண்டுகிறது.... :rolleyes:

நன்றி அக்கா.

தும்பளையான்,

அருமையாக எழுதுகிறீர்கள். நீங்கள் ஹாட்லிக்கல்லூரி அனுபதி பற்றிக் குறிப்பிட்டதை வாசித்தபோது, எனது யாழ் இந்து அனுமதிக்காலம் அப்படியே மனதில் விரிந்தது. உண்மைதான், யாழில் குறிப்பிட்ட பாடசாலை உள்நுழைவுகள் பல்கலைக்கழகத் தெரிவைப் போன்றே பார்க்கப்பட்டன.

யாழ்பாணத்தில் வகுப்பறையில் phone எஸ்.எம்.எஸ் என்று நீங்கள் எழுதுவை வாசிக்க எனக்கு வியப்பாக இருக்கிறது. நாங்கள் யாழில் படித்த காலங்களிற்கும் (89ம் ஆண்டோடு சரி) உஙகள் விபரிப்பிற்கும் இடையே ஏகப்பட்ட வளர்ச்சிகள் தெரியுது.

இன்னுமொரு விடயம் பார்த்தேன், 1996, நான் Canadaல் பல்கலைக்கழகம் முடிந்து வேலையில் நுழைந்த வருடம். நீங்கள் ஹாட்லியில் ஆறாம் ஆண்டில் நுழைந்திருக்கிறீர்கள். என்தலையில் எங்காவது நரை தெரிகிறதா என்று உற்றுப் பார்க்கவேண்டும் என்றொரு உணர்வு உள்ளுரக் குறுகுறுக்கிறது. :D

இனிமையான பதிவிற்கு நன்றி

வணக்கம் அண்ணா. நாங்கள் கைத் தொலைபேசி கொண்டு சென்றது தனியார் வகுப்புகளுக்கு (டியூசன்), கல்லூரிக்கு அல்ல. அப்போது தான் ரணிலின் ஒபந்தம் கைச்சாத்திடப்பட்டு A9 திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் நாங்கள் உயர்தரம் படிச்ச காலங்களில் எதுவித கஷ்டங்களும் படவில்லை. 02 - 05 காலத்திலேயே எனது உயர்தரமும் அமைந்ததால் முன்பு எனது அண்ணாவோ பின்னர் பாதை முடிய, இறுதி யுத்த காலங்களில் எனது தம்பி பட்ட கஷ்டங்களையோ நான் படவில்லை. உயர்தரம் படிக்கும் போதே ஒரு காப்புறுதி நிறுவனத்தின் பரீட்சைகளை எடுத்து, பகுதி நேர காப்புறுதி முகவராக வேலை செய்ததால் என்னிடம் பணப் புழக்கமும் இருந்தது. இதனால் எனது 19 வது வயசிலேயே, எனது சொந்தக் காசில், எனது பெயரில் ஒரு புத்தம்புதிய மோட்டார் சைக்கிள் வாங்கும் அளவுக்கு காசு சேர்த்திருந்தேன்.

Edited by Thumpalayan

  • Replies 59
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் சீமா (CIMA) செய்தனீரா அல்லது திரும்ப வர்த்தாகத்திற்கு மாறினீரா?

நன்றாக போகின்றது தொடருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தும்பளையான்;

துள்ளித்திரிந்த அந்த பள்ளிக்கால நினைவுகளை மீட்டுவரும் உங்கள் ஆக்கம் படிப்பவர் அனைவரின் மனதிலும் தம் இளமைக்கால நினைவுகளை மீட்கும் ஒரு இனிய பொழுதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தொடருங்கள் உங்கள் நினைவுகளை...பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகீர் பற்றிய நினைவுகள் தொடர்கின்றன.....

பின்னேரங்களில வெள்ளவத்தை ஸ்டேசனுக்கு முன்னால கடக்கரையில பெடியளோட பந்தடிக்கிறது பகல் முழுக்க எங்கயாவது அலையிறது எண்டு பொழுது போச்சுது. பகலில நாங்கள் செய்யிற இன்னொரு விஷயம் தான் வேற வேற கோர்ஸ் படிப்பிக்கிற இடங்களுக்கும் போய் அங்க ரிஷப்சன் ல இருக்கிற ஆறாவது ஒரு பெட்டைக்கு பாக்கியப் போட்டு அவளிண்ட கழுத்தை அறுக்கிறது. அவளும் எங்கட அரியண்டம் தாங்கேலாம அஞ்சாறு ப்ரோசருகள தூக்கி தந்து எங்கள அனுப்பி விடுவாள். சில இடங்களில இலவச செமினார் அது இது எண்டு ஏதாவது நடக்கும். இவன் சுழியன் எலாத்தையும் மணந்து பிடிச்சுப் போடுவான். பிறகென்ன ஏதாவது ஒரு கொப்பிய தூக்கிக் கொண்டு வெளிகிட்டிடுவம். அவங்கள் காசு கட்டு எண்டு சொல்லுற நிலை வரேக்க நைசா எஸ்கப் தான். விவேகானந்தா அவென்யுவில இருக்கிற IT படிப்பிக்கிற இடம் (பெயர் ஞாபகம் இல்லை), பம்பலப்பிடியில ஒரு CIMA institute , கொள்ளுப்பிட்டி விஸ்டம் எண்டு ஊருப் பட்ட இடங்களில எங்கட கை வரிசையா காடியிருக்கிரம். எங்களுக்கும் பொழுது போக வேணும் தானே. ஒரு நாள் இப்பிடித்தான் City & Guilds elctonics and telecommunication engineering படிக்கப் போறான் எண்டு வெளிக்கிட்டான். வெள்ளவத்தையில தான் எங்கயோ ஒரு அட்ரச தேடிபோய் அங்க இருந்த மனிசனின்ட உயிரை வாங்கினான். ஒரு கதையில இவன் அப்ப யார் lecturers எண்டு கேக்க அந்த ஆளும் அப்பாவித்தனமா "நானும் படிப்பிபன் என்ட டோட்டரும் படிப்பிப்பா... எண்டு சொல்லி முடிய இவன் அவரிண்ட டோட்டர் பத்தி அவரிட்ட கேள்வி எல்லாம் கேட்டான். இதில பிரச்சனை என்ன எண்டா இவன் நக்கல் அடிகேக்கையும் முகத்த வலு சீரியஸா வச்சிருப்பான், போதாக்குறைக்கு அப்பாவித்தனமான லுக் வேற. இவனோட கூடப் போற எனக்கு சிரிப்பை அடைக்க ஏலாது. மாறிச் சிரிச்சாலும் எனக்குதான் அடி விழும் என்னேடா என்ட முக ராசி அப்பிடி. ஒருக்கா எனக்கு நல்ல ஞாபகம் கிறிஸ்மசுக்கு முதல் நாள், (24 /12 /2005) நாங்க இரண்டாம் முறை A /L படிச்சுக் கொண்டிருக்கிறம். நான் இவனிட்ட கேட்டன், நெல்லியடிக்கு ஒரு அலுவலாப் போகனும், வாறியோ எண்டு. என்ட CBZ ல தான் போய் அலுவல முடிச்சுக்கொண்டு திரும்பி வரேக்க கிராமக் கோட்டடியில ஆமி நிண்டாங்கள். (அது சண்டை வர முதல் கிளைமோர் வச்சு திரிஞ்ச காலம். போதாக் குறைக்கு palsar, CBZ போல சைக்கிள்களில வந்து தான் கிரனேட் எல்லாம் எறிஞ்சு போட்டு போறவங்கள்). நான் எதோ யோசினையில என்ட wallet இருக்கோ எண்டு பாக்கிறதுக்கு கைய விட்டுப்போட்டு பொக்கடுக்க கைய விட்டன். உதக் கண்ட ஆமிக்காரன் உடனே அருட்டப்பட்ட நிலைக்கு வந்து துவக்கையும் தூக்கிக் கொண்டு "அடோ அடோ...." எண்டு கத்திக்கொண்டு ஓடிவந்தான். கடவுள் புண்ணியத்தில சுடேல்ல. என்னை இறக்கி கைய, கால தூக்கசொல்லி என்ட உடம்ப அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு மேஞ்சு, சீட் எல்லாம் கழட்டச் சொல்லி ஊருப்பட்ட செக்கிங். பின்னால இருந்த இவன் வலு கூலா இறங்கி ஒரு கரையில நிக்கிறான். கோதாரி விழுவார் அவனிட்ட ஒரு கேள்வி கூட கேக்கேல. அட்லீஸ்ட் ஒரு formality ய்காக NIC கூட கேக்கேல. காரணம் இவர் கிளீன் சேவ் எடுத்து, சேர்ட் எல்லாம் இன் பண்ணி வலு கலாதியா இருந்ததுதான். இவனை போகவும் சொல்லிப் போட்டாங்கள், எனக்கு அதுதான் அடுத்தகவலை. பிறகு நான் தெரிஞ்ச நாலு சிங்களத்தில கதைச்சு, போதாக் குறைக்கு நான் கொழும்பில பிறந்தபடியா அதையும் காட்டி ஒரு மாதிரி தப்பியாச்சு. motorbike நம்பர், என்ட NIC no எல்லாம் எழுதி வேற எடுத்துப் போட்டாங்கள். இந்தப் பயத்தில ரெண்டு மாசத்தில மோட்டசைக்கிள வித்துப் போட்டன்.

படிக்க எண்டு நான் புலம் பெயர வேண்டிய நாளும் வந்தது. நானும் இவனும் தான் வெள்ளவத்தையில போய் பெரிய ஒரு சூட்கேஸ் வாங்கி, ஒரு மாதிரி அனுப்பி விட்டான். இங்கு வந்த பிறகும் நான் இவனோட சாமம் சாமமா ஸ்கைப்பில அலட்டியிருக்கிரம். போன மார்கழி ஊருக்கப் போன போது போய்ச் சந்திச்சன்.

பெடியன் அப்பிடியே தான் இருக்கிறான், ஆனா என்ன கொஞ்சம் உடம்பு வச்சிட்டுது. போன உடனேயே போனடிச்சு உன்ன எப்ப சந்திக்கலாம் மச்சான் எண்டு கேட்டா ஆள் ஒரே பிசி. ஒரு மாதிரி அம்மியிண்ட ஸ்டேசன் ரோட் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். கிளீன் சேவ், சேட் போட்டு இன் பண்ணி black office shoes, citizan மணிக்கூடு, கையில ஒரு பைல், அதுக்க அஞ்சாறு லண்டன் A/L pass papers எண்ட கெட்டப்பில வந்தான். ஆரோ ஒரு அப்பாவி இவனிட்ட கிளாஸ் எண்டுற பேர்ல நல்லா அறுவை வாங்கிறான் எண்டு மட்டும் எனக்கு விளங்கிச்சு. "என்ன மச்சான் வகையீடையும், தொகயீடையும் வச்சு எத்தின நாளுக்கு தாண்டா அறுக்கப் போறியோ" எண்டு நான் கேக்க "டேய் லூசா உனக்கு எப்பவும் நக்கல் தான்" எண்டு சொல்லி சிலபஸ் மாறீட்டுதடா. இப்ப பேப்பர்ல மூண்டு பகுதி இருக்கு எண்டு சொல்லி எனக்கு வகுப்பெடுத்தான். இவனை இனியும் கதைக்க விட்டா எனக்கு கரைச்சல் எண்டு சொல்லி கதையா ஒரு மாதிரி மாத்திப் போட்டன். பிறகு இன்னொரு நாளும் இரவு இவனிண்ட வீட்ட போனனான். போய், மொட்ட மாடியில இருந்து சாமம் நாலு மணி மட்டும் அலம்பிப் போட்டு வந்தம்.

பகீரைப் பற்றிய பதிவை இத்துடன் முடிக்கிறேன் இது கொஞ்சம் வழமையை விட நீண்டு விட்டது. வேறு பல சம்பவங்களிலும் இவரது பெயர் வரும் போது இவரைப் பற்றி அந்த அந்த இடங்களுக்கு ஏற்ற மாதிரி அறிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக நான் பதிய இருப்பது குட்டி (பிரதீபன்) பற்றி. இஅவனும் எனக்கு மிக நெருக்கமான நண்பன். பல்வேறு கால கட்டங்களில் பல உதவிகளை செய்திருக்கிறான். இவரைப் பற்றிய பல சுவாரசியமான விடயங்கள் விரைவில் தொடரும்......

தும்பளையான், நீங்கள் க.பொ.த.உவில் வர்த்தகமா அல்லது பெளதிக விஞ்ஞானமா படித்தீர்கள்? அவுஸ்திரேலியாவுக்கு எப்படிச்சென்றீர்கள்? இந்தவிடயங்களையும் அறிய ஆவலாய் உள்ளது. உங்கள் தனிப்பட்ட விடயங்களை கூறத்தேவையில்லை. பொதுவான விசயங்களை கூறினால்போதும். நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான், நீங்கள் க.பொ.த.உவில் வர்த்தகமா அல்லது பெளதிக விஞ்ஞானமா படித்தீர்கள்? அவுஸ்திரேலியாவுக்கு எப்படிச்சென்றீர்கள்? இந்தவிடயங்களையும் அறிய ஆவலாய் உள்ளது. உங்கள் தனிப்பட்ட விடயங்களை கூறத்தேவையில்லை. பொதுவான விசயங்களை கூறினால்போதும். நன்றி!

க.பொ.த உயர்தரம், கணிதம் தான் படித்தேன். ABC முடிவு வந்தது. பொறியியல் கிடைக்கவில்லை. அவுசிட்கு மாணவர் விசாவில் தான் வந்தேன். இங்கு பொறியியலை விட வர்த்தகம்/பொருளியல்/கணக்கியல் துறையில் வேலை வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாலும் நிரந்தர வதிவிட உரிமையைப் பெற இலகு என்பதாலும் வர்த்தகம் தான் இங்கு படித்தேன்.

தும்பளையான் சீமா (CIMA) செய்தனீரா அல்லது திரும்ப வர்த்தாகத்திற்கு மாறினீரா?

நன்றாக போகின்றது தொடருங்கள்..

நன்றி அண்ணா. CIMA செய்திருக்கிறேன் ஆனால் இங்க வந்ததால் முடிக்கவில்லை. இங்கு அதன் கிராக்கி குறைவு. ஊரிலே பொய் இருக்கும் விருப்பம் இருக்கு. CIMA இருந்தால் நல்ல சம்பளத்துடன் கொழும்பிலே செட்டில் ஆகலாம். FCMA இருந்தால் CPA கையில தூக்கி தருவாங்கள். இப்ப CPA செய்கிறேன். ஒரு MBA செய்யவும் விருப்பம் தான் :unsure:

ABC என்று உங்களுக்கு ஏ.எல் இல் வஞ்சகம் இல்லாத பெறுபேறு கிடைத்துள்ளது. கணிதப்பிரிவில் கற்று வர்த்தகப்பிரிவுக்கு மாற்றலாகி நல்லநிலைக்கு வந்திருக்கின்றீர்கள், கெட்டிக்காரன். தொடர்ந்து கற்கக்கூடிய சூழ்நிலையும், நேரம், வசதியும் கிடைக்கும்போது பொருத்தமான கற்கைநெறியை பெற்றுக்கொள்ளுங்கள். அது எம்.பீ.ஏ ஆகத்தான் இருக்கவேண்டும் என்று இல்லை. எம்.பீ.ஏ என்றாலும் பரவாயில்லை. ஆனால், தற்போதைய நிலமையில் எம்.பீ.ஏ கற்கைநெறி மாணவர்களின் பணத்தை குறிவைத்துள்ளதால் (இங்குள்ள நிலமை) கூட்டிக்கழித்து பார்க்கும்போது எம்.பீ.ஏயைவிட வேறு சிறந்த கற்கைநெறிகள் உள்ளன என்று எனக்கு பேராசிரியர் ஒருவர் கூறினார்.

Edited by கலைஞன்

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை ஊர் பெடியன் எண்டு உங்கடை கதையை தொடர்ந்து வாசிச்சு கொண்டு வந்தன் . இப்பிடி இடையிலை நிப்பாட்டி போட்டு சும்மா இருக்கிறியள் தும்பளையான் .   அடுத்த தொடரையும் கெதீயிலை போட்டால் என்ன ?? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குட்டி (பிரதீபன்) - இவரும் என்னோட சின்னனில இருந்து ஒண்டாப் படிச்ச ஆள் தான். ஆண்டு 1லிருந்து ஆண்டு 5  வரை தும்பளை சிவப்பிரகாசத்தில ஒண்டாவும் பிறகுஹாட்லியில A/L மட்டும் ஒண்டாவும் படிச்சவன். A/L  வந்தாப் பிறகு தான் நாங்கள் இரண்டு பெரும் ஒரு வகுப்பு. அதுக்கு முதல் வேற வகுப்புகள் எண்டாலும் எனக்கு குட்டியுடன் நல்ல பழக்கம் இருந்தது. இவனுக்கு குட்டி என்ட பெயர் இவனிண்ட அப்பாவிலிருந்து தான் வந்தது. அவரை எல்லோரும் குட்டி அண்ணா எண்டு தான் பொதுவா கூப்பிடுறவை. முந்தி  ஊரில ஆறும் யாழ்ப்பாணம் போறது எண்டா ஊரில ரெண்டு கார் தான் பிடிக்கிறது. ஒண்டு ரவி அண்ணயிண்ட கார் (Morris Oxford), மற்றது குட்டியன்னயிண்ட கார் (Austin A40). இதால பிரதியிலும் இந்தக் "குட்டி" எண்டுற பட்டம் வந்து ஒட்டிக் கொண்டிச்சு. ஆளுக்கு சின்னனில அது கொஞ்சம் பொருத்தமும் கூட. உருவத்திலையும் ஆள் கொஞ்சம் "குட்டி" தான். மெலிஞ்ச சின்னப் பெடியன். ஊருக்குள்ள சேட் போட மாட்டான். முந்தி ஒரு சின்ன சிவப்புச் சைக்கிள் வச்சிருந்தவன். அதில தான் ஆள் திரியும். ஆக முந்தி காலும் எட்டாது, ஆளை சீட்டில எத்தி தள்ளி விட்டா கட கட எண்டு உழக்கிக் கொண்டு போவான். இப்பிடித்தான் "பபி அண்ணா" ட வகுப்புக்கு போகேக்க ஆள் வரும். ஆள் கால் எட்டாமல் தடுத் தடுமாறிக் கொண்டு வந்து அந்த தும்பளையில இருந்த, வகுப்பு நடந்த அந்த தலை வாசல் வச்ச பழைய வீட்டில வந்து லான்ட் ஆகிடுவான். பிறகு வகுப்பு முடிய ஆரூம் ஏத்தி தள்ளி விட்டா போடுவான். பிறகு பிறகு, முழுச் சைக்கிளிண்ட பாறுக்கால கால விட்டும் ஓடிக்கொண்டு வருவான். "டேய் குட்டி நீ முழுச் சைக்கிளும் ஒடுவியோடா...." எண்டு நாங்கள் எல்லாரும் வாயப் பிளக்கிறது. அவனும் பைலட் ரேஞ்சுக்கு எங்களை எல்லாம் அலச்சியமா ஒரு பார்வை பாப்பான்.

 

ஹாட்லிக்கு போனாப் பிறகு குட்டி D வகுப்பு. இந்தக் காலத்தில குட்டியோட நெருக்கம் கொஞ்ச்ம் குறைவு எண்டாலும் சயன்ஸ் செண்டரில ஆளை காணுறது. முந்தி சயன்ஸ் செண்டரில 6 ,7  வகுப்புகள் படிக்கேக்க பள்ளிக்கூடம் முடிய பெடியள் எல்லாம் வீட்ட போய் அவுக் அவுக் எண்டு திண்டு போட்டு நேர என்ட வீட்ட தான் சயன்ஸ் சென்டருக்கு போகுமுன்னம் கிரிகெட் அடிக்க வருவாங்கள். கிரி,  நிமல், அரவிந்தன், கோஷ்டியளோட குட்டியும் வருவான். எங்கட வீட்ட அம்மா நட்ட பூமரம் எல்லாத்தையும் நாசமாக்கி எனக்கு பிறகு கிழி வாங்கிதாறது தான் இவங்கட முழு நேர வேலை. முந்தி வீட்டில முன்னுக்கு ஒரு மல்லிகைப் பந்தல் இருந்திச்சு, அதைவிட இங்காலை கூரை எண்டு ஊருப்பட்ட இடங்களுக்கிளால gap பாத்து தான் அடிக்கோணும். அப்பிடி எவளவு தான் கவனமா விளையாடினாலும் கிரி போல யாரும் ஒரு left hander பந்தை எங்கட கூரைக்கில இறக்கிப் போடுவான். உடனே நாங்கள் யார் பந்த எடுக்கிறது எண்டு எங்களுக்க அடிபடேக்க குட்டி சேட்டக் கலட்டி பக்கத்து மரத்தில கொழுவிப்போட்டு பக் எண்டு கூரையில ஏறீடுவான். எதிலையும் என்னத்திலையும் ஏறுரதில ஆள் விண்ணன். குட்டி batting  செய்யேக்க முரளி மாதிரித்தான் முழுப் பல்லையும் காட்டிக்கொண்டு நிப்பான். மச் வழிய இவன் போய் இப்பிடி சிரிச்சுக்கொண்டு நிக்க அம்பயருக்கு நிக்கிற சிங்கத்துக்கு (அரவிந்தன்) கோவம் வந்திடும். "டேய் செம்மலி எண்டா இளிச்சுக்கொண்டு நிக்கிறாய்? இப்பிடி நிண்டியெண்டால்  உனக்கு எல்.பி (LBW) குடுத்துப்போடுவன் (அந்தக்காலத்தில எங்கட மச் வழிய ஒருநாளும் எல்.பி குடுக்க மாட்டாங்கள். அப்பிடிக் குடுத்தா அம்பயருக்கும் batsman  இக்கும் எதோ கொளுவல் எண்டு அர்த்தம்)" எண்டு கத்துவான். இவனுக்கு அது உதைசாத் தானே. பண்ணிரத பண்ணிப் பார் எண்டு  சொல்லி தான் நினைச்சத செஞ்சு போட்டுதான் வருவான்.

 

பட்டம் ஏத்துறதில குட்டிக்கு நிகர்குட்டி தான். எப்பவும் தன்னை விடப் பெரிய படலம் தான் கட்டுவான். இவருக்கு பிடிச்ச ஒட்டு நீலமும் சிவப்பும் டைமன் ஒட்டு. பிற் காலங்களில பொலித்தீன் அடிச்சு பெயின்ட் அடிக்கிறது பிரபலமான போதும் அந்த நீலமும் சிவப்பும் டைமன் மாறவேயில்லை! சாரத்தையும் கட்டிக்கொண்டு ஓட்டில எந்தப் பயமும் இல்லாமல் பட்டத்தையும் கொண்டு ஓடித்திரிவான். இவனிண்ட வீட்டில பட்டம் ஏத்துறது கொஞ்சம் கஷ்டம். பின்னால் காணீக்க நிக்கிற புளி, வேம்பு எல்லாத்தையும் பாத்து, ரோட்டில போற வயருக்கு கவுண் எறிஞ்சு தான் ஏத்தொனும். ஆகப்பெரிய கொடி எண்டா பக்கத்துக் காணீக்க போய் ஏத்திப்போட்டு கவுண் எறிஞ்சு எறிஞ்சு கொண்டுவரோணும். உதெல்லாம் இவனுக்கு தூசு, படலத்த ஏத்திக் கட்டிப் போட்டுதான் டியூசனுக்கே வருவான். நல்லா இளக்கி இராக்கொடியும் சிலவேளை விடுவான். அப்பிடி விட்டா எங்கட வீட்டுக்கு மேலதான் இரவிரவா கூவிக்கொண்டு நிக்கும். காத்து விழுந்து பனிக்கு கொடி படுத்தாலும் எங்கட வீட்டுக்கு மேலதான். இப்பிடித்தான் ஒருநாள் இவனிண்ட ராக்கொடி படுத்திட்டிது. காலங்காத்தால வீட்ட வந்து விசயத்தச் சொன்னான். போய்ப் பார்த்தா எங்கட பின்வேலி எல்லையில நிக்கிற வேம்பிண்ட உச்சியில கொடி கிடக்குது. அங்கயும் இங்கயும் பாத்துப் போட்டு கட கட எண்டு வேம்பு உச்சிக்கே ஏறி பட்டத்த எடுத்துப் போட்டான். எதையும் செய்யோணும் எண்டு நினைச்சான் எண்டால் செய்து முடிக்கிறதில ஆள் கில்லாடி.  ஒருநாள் பட்டத்துக்கு லைட் பூட்டோனும் எண்டு சொன்னான். முந்தியொருக்கா என்ட அண்ணா எங்கட படலம் ஒண்டுக்கு லைட் பூட்டினதில வயர் எல்லாம் என்னட்ட இருந்திச்சு. அதோட சேர்த்து உள்ள நாட்டு றோல் பிளக் (Role plug) எல்லாம் சேத்து வயரில கட்டி லைட்டும் போட்டான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்லை உன்கூட பேசணும் மச்சி.. முடிஞ்சா தனிமடல் போடு..

 

தெரிஞ்சதுகளை எழுதும் போது .. அந்த நாள் ஞாபகம் தான் வருது.

 

வாழ்த்துக்கள் மச்சி.. தொடர்ந்து எழுது.. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.