Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்!

Featured Replies

உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்!

%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-15.jpg

%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-251x300.jpg

மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும்பொருட்டு தான் கைதாகப் போவதாக உதயகுமார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்ட உதயகுமார், நான் எந்த வெளிநாட்டிலிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த மாதா மீது சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த வெளிநாட்டிலும் ஒரு காசு கூட வாங்கவில்லை என்று கூறி உணர்ச்சிவயப்பட்டு உடைந்து அழுதார்.

இதைக் கண்டவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும் உணர்ச்சிவயப்பட்டு கதறி அழத்தொடங்கினர். திடீரென்று ஆத்திரம் கொண்டு எழும்பிய ஒரு இளைஞர்கள் குழு, உதயகுமார், புஷ்பராயன் போன்றோரை அப்படியே தூக்கிச் சென்றது. உதயகுமாரை கைது செய்ய விடமாட்டோம். வா, வந்து பார். எங்கள் பிணத்தின் மீதுதான் அவரைக் கைது செய்ய முடியும் என்று மைக்கில் முழக்கமிட்டபடியே அவரைத் தூக்கிச் சென்றனர் இளைஞர்கள்.

மின்னல் வேகத்தில் படகு புறப்பட்டுவிட்டது.

ஒரு கொந்தளிப்பான சூழலை எதிர்நோக்கியிருக்கிறது கூடங்குளம் போராட்டம். நூற்றுக்கணக்கான பிணங்களின் மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது.

இந்த மான உணர்ச்சி தமிழகத்தை பற்றிக் கொள்ளட்டும்!

______________________________________________________

தொடர்புடைய பதிவுகள்:

Tags: HRPC, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், ஆடியோ, இடிந்தகரை, இடிந்தகரை போராட்டம், இடிந்தகரை மக்கள் போராட்டம், உதயகுமார், உதயகுமார் அறிவிப்பு, உதயகுமார் பேச்சு, கதிரியக்கம், கூடங்குளத்தில் போலிசு அடக்குமுறை, கூடங்குளம், கூடங்குளம் அணு மின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம், கூடங்குளம் போராட்டம், கூடங்குளம் மக்கள் போராட்டம், கைது, ஜெயலலிதா, தடியடி, தோழர் மருதையன், தோழர் ராஜூ, நாராயணசாமி, நேர்காணல், பாசிசம், பிதாரி, பேட்டி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மீனவர், மீனவர்கள், ராஜேஷ்தாஸ்

மக்களின் நியாயமான சந்தேகங்களை தீர்க்க முடியாமல் பொய் குற்றச்சாட்டுக்களை, வன்முறையை பாவிக்கின்றனர் ஆட்சியில் உள்ளவர்கள்.

தமிழ் மக்களுக்கு சோதனையான காலம். மத்திய அரசு இந்த மின்சார தட்டுப்பாட்டை தமிழ் நாட்டுடன் விட்டிருக்க வேண்டும் இப்படியான அணு உலை ஒன்றுக்கு ஒரு தீவை தெரிந்திருக்கலாம்.

Edited by மல்லையூரான்

கூடங்குளம் போலீஸ் தடியடியை நியாயப்படுத்தி ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பக்திப் பரவசத்தோடு வெளியிட்டிருக்கின்றன. அந்த அறிக்கையில் அணு உலை பாதுகாப்பானது, அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய, மாநில அரசுகள் நியமித்த வல்லுனர் குழுக்கள் அளித்த அறிக்கைகளை அடுத்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை சொல்கிறார், ஜெயா.

இந்த 500 கோடி எதற்கு? கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியில் வேலை வாய்ப்பு, வளர்ச்சி எல்லாம் ஏற்படும் என்று அளந்து விட்டு இந்த ‘லஞ்சப்’ பணம் எதற்கு? போராடும் மக்களை திசைதிருப்பி, உள்ளூர் பஞ்சாயத்து மற்றும் அரசியல் பிரமுகர்களை சரிக்கட்டவே இந்த 500 கோடி பம்பர் பரிசு என்பது பாமரனுக்கும் தெரியும்.

ஒரு சிறிய எடுத்துகாட்டக போபால் விபத்து தொடர்பாக கூட இந்திய, அமெரிக்க நீதிமன்றங்கள் கைவிரித்து விட்டன. கொலைகார ஆண்டர்சனை கைது செய்ய முடியாது என்றும் கூறிவிட்டன. இதை ஏற்றுக் கொண்டு போபால் மக்கள் அமைதியாக வாழ வேண்டுமென்று ஒருவர் சொன்னால் அது எத்தனை அயோக்கியத்தனமானது? அணுமின்நிலைய விபத்தும், அதனால் கொல்லப்பட்ட, நடைபிணங்களாக வாழும் மக்களும் பல்வேறு இரத்த சாட்சியங்களாக உலகம் முழுவதும் இருக்கும் போது கூடங்குளம் பகுதி மக்கள் மட்டும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை ஏற்று தங்களையே பலி கொடுப்பதற்கு ஒப்புதல் கொடுக்க வேண்டுமா? நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிட்டால் யாரும் போராடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம்?

உதயகுமார் மீது சில மாற்றுகருத்துக்கள் இருந்தாலும் கூட இப்போது கூடங்களம் போராட்டத்தை முழுவீச்சில் கிண்டலும், கேலியும் செய்துகொண்டிருக்கிறார்கள், போபாலில் விஷவாயு விபத்து நடந்து பல்லாயிரக்கணக்க ானோர் பலியான போது அரசு நடந்துகொண்ட விதம் அதனால் பாதிக்கப்பட்டு, இன்னமும் ஊனமாக குழந்தைகள் ஊனமாக பிறக்கிறார்கள். 20 வருடங்களுக்கும் மேலான நீதிப்போராட்டத் துக்குப் பின்பும், ஒரு சாலைவிபத்துக்கு வழங்கும் நஷ்ட ஈடு கூட அதில் மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கவில்லை. போபால் விஷவாயு விபத்தில் பலியானவர்களில் நம் சொந்தங்கள் யாரேனும் இருந்திருந்தால் இன்று கூடங்குளம் மக்களின் பயத்தையும் அதனால் உண்டாகியிருக்கும் போராட்டத்தையும் கிண்டல் செய்ய நமக்கு மனம் வருமா? வளர்ந்த நாடான ஜப்பானே ஆட்டம் கண்டபோது, சுடுகாட்டில் கூட ஊழல் நடக்கும் இந்தியாவின் அணு உலை மீதான நம்பகத்தன்மையை சந்தேகிக்க மெத்தப்படித்த அணு-விஞ்ஞானியாக இருக்கவேண்டாம், சராசரி ஆறறிவு இருந்தாலே போதும்.

நியாயமான குமுறல். சாத்வீகமான போராட்டத்துக்குள் சில நச்சரவங்கள் புகுந்திருக்கின்றன. அணு உலையால் பாதிப்பு வரும் என்ற அம்மக்களின் குரல் அபயக்குரல். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும் முழு விளக்கமும் கொடுக்கப்பட வேண்டும். அதே நேரம் இவ்வளவு பெரிய செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இம்மின் நிலையத்திலிருந்து மின்சாரமும் தேவையே. பாதுகாப்போடு மின் உற்பத்தி அப்பகுதி மக்களை பாதிக்காதவாறு

மக்களின் நியாயமான சந்தேகங்களை தீர்க்க முடியாமல் பொய் குற்றச்சாட்டுக்களை, வன்முறையை பாவிக்கின்றனர் ஆட்சியில் உள்ளவர்கள்.

உதய குமார் போராட்டம் தவறு என்றால் அதை வளர்த்து விட்டது யார்? மிக மோசமான நிர்வாக திறமை உள்ள முதல்வரே இதற்கு பொறுப்பு, எப்போது இவர் ஆட்சிக்கு வந்தாலும் சட்டம் ஒழுங்கு சீர் குலைவது வாடிக்கை, ஆனால் இவர் ஆட்சியில் அது சிறப்பாக இருப்பதாக அவர் புகழ் பாடும் பத்திரிகைகள் பொய் செய்திகளை பரப்பும். இவர் ஆட்சியில் போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்த மட்டுமே தெரியும், பின்னர் கலவரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கினார் என்று முதல்வர் புகழ் பாடப்படும் அனைத்திற்கும் இவரை தேர்ந்தெடுத்த தமிழ் மக்களே காரணம்.

இன்று பத்தாம் வகுப்பு காலாண்டு பரீட்சை துவங்குகிறது,சென்னையை தவிர வேறெங்கும் நிர்வாக புலி ஆட்சியில் மின்சாரம் இல்லாததால் மற்ற மாவட்ட மாணவர்கள் துன்பபடுகிறார்கள் போரட்டகாரர்களுக்கு ஆரம்பம் முதலே ஆதரவளித்து பிரச்சினை பெரிதாக காரணமான நிர்வாக திறமை இல்லாத முதல்வரே இதற்கு பொறுப்பு.

சென்ற ஆட்சியில் பொது மக்கள் அல்லது அரசு துறை இது மாதிரி எதாவது போராட்டம் என்று சொன்னால் உடனே சம்பந்தப்பட்ட அமைச்சர் சென்று பேச்சு நடத்தி உடனே தீர்த்து வைப்பார் அல்லது அவர்கள் முதல்வரை சென்று சந்தித்து பின்னர் பிரச்சினை தீரும், ஆனால் இன்று?

கடந்த ஒன்றரை ஆண்டாக மக்கள் படாத துன்பம் இல்லை இவரது ஆஸ்தான சோதிடர்கள் இவர் ஆட்சிக்கு வந்தால் ராணி போல இருப்பார்,அமைச்சர் எல்லாம் அடிமை போல் இருப்பார்கள், மக்கள் மண்ணு போல் ஒன்னும் தெரியாமல் இருப்பார்கள், உங்களுக்கு பொற்காலம் என்று ஒத்து ஊதுவர்,ஆனால் அது உண்மை,அதே சமயம் இவர் ஆண்டால் தமிழகம் சீரழியும்,இயற்கை சீற்றங்களால் துன்பப்படும்,நோய் பரவும்,வறட்சி, வெள்ளம் வாட்டி வதைக்கும்,தமிழகதிற்கு அது ஒரு கேடுகாலமாக அமையும் என்று உண்மையை சொல்ல பயந்து சொல்லாமல் விட்டுவிடுவார்கள்,மொத்தத்தில் இதை எல்லாம் அனுபவிப்பது தமிழக மக்களே!

நேற்று CNN -IBN தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்த இந்தியாவின் அறிவுஜீவி சு.சுவாமி இந்த போராட்டத்துக்குள் விடுதலைபுலிகள் உள்ளார்கள் என்கிறார்!! இந்த ஆளு சேது சமுத்திர திட்டம் வேண்டாம் அங்கு ராமர் பாலம் உள்ளது என்கிறார்!! அது ராமனும் சீதையும் கட்டியது என்ற கதைக்குள் எந்த புலிகள் உள்ளார்கள்?

20 ஆண்டுகளாக வன்முறை ஆட்சியாளர்களுக்கு கு….டி கழுவிய தமிழ்நாடு போலீசும், அரசும், அதிகார வர்க்கமும், ஓட்டுக்கட்சிகளும் மாமா வேலைபார்த்த ஊடகங்களும் இப்போது இடிந்தகரை மக்களுக்கு எதிராகத்திரும்பியிருக்கின்றன.

கலவரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கினார் என்று ஜெயா புகழ் பாடப்படும் ஊடகங்களை நினைக்கும் போது அமைதிப்படை ராஜராஜ சோழன் பாணிதான் நினைவுக்கு வருகிறது.

வாழ்க புரட்சி தலைவி நாமம் போடும் தமிழ் மாக்கள்!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கூடங்குளம் மக்களின் சாபமாவது பலிக்கட்டும்..!

மீண்டும் தனது அரசியல் சர்வாதிகாரத்தை லத்திகளின் துணையோடு செய்து காட்டியிருக்கிறார் தமிழகத்து புரட்சித் தலைவி..! இவருக்கும் ஜனநாயகத்திற்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என்பதை இவரது முதல் ஆட்சிக் காலத்தில் இருந்தே நாம் பார்த்துதான் வருகிறோம். ஆனாலும் கேவலங்கெட்ட இந்திய அரசியல் முறையினால் மிக மோசமான அரசியல்வியாதிகளில் ஒருவராக இருக்கும் இந்த தாய்தான் மீண்டும், மீண்டும் ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்..!

மீன் பிடிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியாத மீனவர்கள் தாங்கள் காலம், காலமாக வாழ்ந்து வரும் அதே இடத்தில்தான் தங்களது சந்ததிகளும் வாழ வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்..? நாளைய பொழுதுகளில் தங்களது பரம்பரையினருக்கு மீன் வலைகளையும், படகுகளை மட்டுமே சொத்தாக வைத்துவிட்டுப் போகவிருக்கும் இந்த குடும்பத் தலைவர்கள், தங்களுடைய நலனுக்கு குந்தகம் விளைவிப்பதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள்..? அந்த வகையில்தான் என்றோ ஒரு நாள் அவர்களுடைய உயிரைக் கொள்ளையாக அடித்துப் போகக் காத்திருக்கும் அணு உலையை எதிர்த்து அறவழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்..!

திருவள்ளுவருக்கு எந்த “ள்” போட வேண்டும் என்றுகூட தெரியாத கட்சி பிரமுகருக்காக பஸ் மீது கல்லெடுத்து அடிக்கும் கட்சிக்காரர்களை பார்த்திருக்கும் தமிழகத்து மக்கள் கடந்த சில ஆண்டுகளாக மெளனமாக, அற வழியில்.. உண்மையான சத்தியாக்கிரக முறையில் போராட்டம் நடத்தி வரும் இந்த கூடங்குளம் அணு மின் நிலைய திட்ட எதிர்ப்புகளை கவனித்தே வந்திருக்கிறார்கள்..!

ஊர்வலம் நடத்திக் காண்பித்தார்கள். ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் காட்டினார்கள்.. நீண்ட, நெடிய உண்ணாவிரத்த்தைக்கூட நடத்தினார்கள்.. ஆனாலும் கல்நெஞ்சக்காரர்களையே அரசியல்வியாதிகளாக நாம் பெற்றிருக்கும் காரணத்தினால் இன்றுவரையில் இந்த மக்களின் சக்தியை உடைக்கும் வேலையிலேயே ஈடுபடுகிறார்கள் இந்த ஈனப் பிறவிகள்..!

முறையாகத் தகவல் சொல்லிவிட்டு, ஊர்வலமாக வந்த மக்களிடத்தில் சமாதானம் பேசுவதற்கு ஒரு அமைச்சரைக்கூட அனுப்பத் தெரியாத முக்கா லூஸு முதலமைச்சரை வைத்துக் கொண்டு நாம் என்னதான் செய்வது..? மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு இதுதான் என்று முன்பே சொல்லப்பட்டிருந்தாலும், இந்த ஆலையின் துவக்கமே சர்வாதிகாரத்தில்தானே துவங்கியிருக்கிறது..! எங்கோ டெல்லியில் உட்கார்ந்து கொண்டு அதை செய். இதைச் செய்.. அதை இங்கே வை.. இதை அங்கே வை என்று ஆணையிடுபவர்கள் இந்த ஆலையை டெல்லியிலேயே அமைத்திருக்கலாமே..? ஜனாதிபதி மாளிகையை இடித்துக்கூட கட்டியிருக்கலாமே..? இந்திய ஜனநாயகத்திற்கு பலிகடா அப்பாவி மக்கள்தானா..? அரசியல்வியாதிகளுக்கு இல்லையாமா..?

சுற்றுப்புற மக்களிடம் கருத்து கேட்காமல், அவர்களுடைய ஆதரவைப் பெறாமல் அவர்களுக்கு அறிவுறுத்தாமலேயே அவர்களுடைய உயிருடன் விளையாடும் ஆபத்துக்குரிய அந்த ஆலையை அங்கே கொண்டு வந்து அமைத்ததே ஜனநாயகமானதல்ல..! அந்த மக்களை முழுமையாக திருப்திப்படுத்த முடியவில்லையெனில் அப்படியொரு ஆலைதான் அங்கே எதற்கு..? கல்பாக்கத்தின் அருகே குடியிருக்கும் மக்களில் 100-ல் ஒருவர் ஏதோ ஒரு இனம் புரியாத நோயால் இன்னமும் பாதிக்கப்படுகிறார்..! அங்கே அணு மின் நிலையம் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னமும்கூட சொன்னபடியாக செட்டில்மெண்ட்டும், வேலையும் தரப்படவில்லை. போபால் விஷ வாயு கசிவுக்கு பின்பு இப்போதுவரையிலும் எத்தனையோ குழந்தைகள் உடல் குறைபாட்டுடன் பிறந்து வருகின்றன.. இதையும் இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த நாயும் கேட்டபாடில்லை.. இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய நிதியுதவியைக்கூட வாங்கித் தர வக்கில்லாத பரதேசிகள்தான் இப்போதும் நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்..! இப்படிப்பட்ட அரசியல் சூழலில், இந்த மக்களின் இந்தக் கோரிக்கை மிக, மிக நியாயமானதுதான்..

நேற்று ஊர்வலத்தில் வந்தவர்கள் எங்களுக்கு ஒரு இறுதி முடிவு தெரியும்வரையில் இடத்தைக் காலி செய்ய மாட்டோம் என்று சொல்லிவிட்டு இரவில் கடலோரத்தின் தாலாட்டலில் அங்கேயே உறங்கியிருக்கிறார்கள். அந்த மக்களின் ஒத்துழைப்பையும், பயத்தையும், போராட்ட உணர்வையும் புரிந்து கொள்ளாத இந்த ஜெயலலிதாவின் பாசிஸ அரசு.. விடிந்தபோது தனது காவலாட் படைகளைக் கொண்டு நாயை விரட்டியடிப்பது போல சொந்த நாட்டு மக்களையே பந்தாடியிருப்பது கேவலமானது..!

இன்றைக்கு நடந்த இந்தக் கொடூரத்தின் மூலம் இந்த மக்களை ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தால் அது நிச்சயம் பலிக்காது..! தங்களுடைய எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது என்பதை அந்த மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.. எந்த சதிவேலையை செய்தும் அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நேற்றைய அவர்களது போராட்டமும் வெளிப்படுத்திவிட்டது. தமிழகத்தின் எந்தப் பகுதி மக்களுக்கும் இல்லாத அளவுக்கான கூடங்குளம் மக்களின் போராட்ட வெறியும், நேர்மையான வழிமுறையைப் பின்பற்றிய அவர்களது குணமும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. அவர்களுக்கு எனது சல்யூட்..!

அதே சமயம் அதிகார வர்க்கம் தனது ஆக்டோபஸ் கரங்களால் ஊடகங்களையும் வளைத்துவிட்டது என்பதும் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது..! எல்லோருக்கும் நான் நட்ட நடுநிலையாளன் என்று தன்னைத் தானே புகழ்ந்து சொல்லிக் கொண்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி இன்று காலையில் இருந்து தனது ஒளிபரப்பில் சொல்லிக் கொண்டிருந்த கூடங்குளம் பற்றிய செய்திகளும், முறைகளும் அதன் உரிமையாளரின் குடுமி டெல்லிக்கும், சென்னைக்குமாக மாட்டியிருப்பதால் அரசுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்த்துகிறது..! இந்தக் கேவலத்திற்கு இந்த்த் தொலைக்காட்சியைத் துவக்கிய காசில் மேலும் 2 கல்லூரிகளைத் துவங்கி அங்கேயாவது கொள்ளையடித்து மொத்தமாக பாவத்தில் மூழ்கியிருக்கலாம்..!

தமிழகத்தின் ஒரு மூலையில் ஒரு தி.மு.க. தொண்டன் போலீஸால் மிரட்டப்பட்டான் என்றாலே ஆண்டி போண்டியிலும், சிந்து, பொந்துவிலும் பஞ்ச் வசனம் பேசியும், முழுப் பக்கத்துக்கு ஒப்பாரியும் வைக்கும் மஞ்சத்துண்டு மைனர்.. இந்தக் கொடூரத்தை டிவியில் பார்த்து பேதி கண்டு வீட்டில் அமைதியாகப் படுத்திருக்கிறார்.. இதில் ஏதாவது வாயைக் கொடுத்து டெல்லியை பகைத்துக் கொண்டால், தனது அருமை மகளும், மகனும், பேரன்களும் தப்பிக்க முடியாதே என்று பச்சையான தனது சுயநல நோக்கத்தை வெளிக்காட்டிவிட்டார்..!

இவரது குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களுக்கெல்லாம் தக்காளி சூஸ்தான் உடலில் இருக்கிறது என்பதை கண்டறிந்திருக்கும் இந்த முத்தமிழ் வித்தகர் தமிழர்களின் முதல் துரோகி பட்டியலில் இருந்து இறங்க மறுத்து அடம் பிடிப்பதுதான் ஏன் என்று தெரியவில்லை. ஆட்சிக் கட்டில் இருந்தபோதுதான் அப்படியென்றால், இப்போதும்கூடவா..?

இவர்களுடைய கலைஞர் தொலைக்காட்சியிலும், சன் தொலைக்காட்சியிலும் சுப.உதயகுமார் தப்பி ஓட்டம் என்று பிளாஷ் நியூஸ் போட்டுத் தாளித்தார்கள். அட பக்கிகளா..? கிரானைட் ஊழல் வழக்கில் இவரது அருந்தவ புத்திரனின் மகன் தயாநிதி அழகிரி ஒரு மாதமாக தலைமறைவாகத்தானே இருக்கிறார்.. அதைப் பற்றி போட வக்கில்லாமல், உண்மையான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவரைப் பற்றி பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பி அந்த மக்களின் உண்மையான உணர்வுகளை கேவலப்படுத்தும் இந்தப் பொழைப்பெல்லாம் தேவைதானா..?

ஆத்தாவுக்கு எப்போதுமே மக்கள் பிரச்சினைகள் என்றால் என்னவென்றே தெரியாது..? முன்பே தெரியாது.. இப்போது மட்டும் என்ன தெரிந்துவிடவா போகிறது..? எப்படியாவது பெங்களூர் வழக்கில் இருந்து தப்பித்தாக வேண்டும் என்கிற பயத்துடன் இருக்கும் அம்மையார், நேற்றைக்கு ஊருக்குள்கூட வராத ஒண்ணுமில்லாத மண்ணுமோகனசிங்கை விமான நிலையத்தில் பார்த்து வணக்கம் சொல்கிறார்.. தானும், தனது கட்சிக்காரர்களும் ஓட்டே போடாத ஜனாதிபதியை பார்த்து வணங்கியும் இருக்கிறார்.. கூடவே பாஜகவுடன் இணக்கமாகவும் இருக்கிறார். இத்தாலிய மம்மியை பற்றி கிண்டலடித்தவர் தற்போதெல்லாம் தி.மு.க.வை மட்டுமே தாக்கிவிட்டு மற்றவர்களை சைக்கிள்கேப்பில்கூட கண்டு கொள்வதில்லை..!

“நான் உன் ஊழலை கண்டு கொள்ள மாட்டேன்.. நீ என் ஊழலை கண்டு கொள்ளக் கூடாது..” என்ற ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட்படி இனி காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணி ஓஹோவென வளரும் சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் இந்தப் போராட்டத்தை எந்த வகையிலாவது ஒடுக்கி சுத்தமாக இல்லாமல் செய்தால் ஒருவேளை ஆத்தா ஜெயில் கம்பி எண்ண வேண்டிய சூழலில் இருந்து 2 பெரிய கட்சிகளும் சேர்ந்து காப்பாற்றலாம்... இந்த காரணத்துக்காகவே ஆத்தா பொதுமக்களுடன் இப்படி மல்லு கட்டிக் கொண்டிருக்கிறார்..!

இவரே அடித்து கொலை செய்ய போலீஸை அனுப்புவாரம்.. யாராவது செத்து போனால் உடனேயே நம்முடைய பணத்தில் இருந்து 5 லட்சம் கொடுப்பாராம்.. இவரை யாராவது கொலை செய்துவிட்டு, இவருக்கே 5 லட்சம் கொடுத்தால் ஒருவேளை நரகத்தில் இருந்தபடியே ஏற்றுக் கொள்வாரோ..?

மண்ணை வாரி தூற்றி வீசியிருக்கும் அந்தச் சாபக் குரல்களுக்கு சக்தி இருக்கோ இல்லையோ.. அரசியல்வியாதிகள் கோவில், கோவிலாக சுத்தும் அந்த பக்திக்கு பலன் கிடைக்குமோ கிடைக்காதோ..? இந்தக் கேடு கெட்டவர்கள் விரைவில் மாண்டொழிந்தால்தான் இந்தப் பிரச்சினைக்கெல்லாம் விடிவு கிடைக்கும்.. இல்லாவிடில் அதுவரையில் இது போன்ற பலிகளில் நாம் நமது குடும்பத்தினரை இழந்துதான் ஆக வேண்டும்..!

இது நமக்குக் கிடைத்திருக்கும் சாபக்கேடு..!

http://truetamilans.blogspot.com/2012/09/blog-post_11.html#.UFFU0q6hl_8

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் போராட்டத்திற்கு நல்லதொரு முடிவு கிடைக்கனும், கஷ்டப்படும் மக்களுக்கே கஷ்டங்களுக்கு மேல் கஷ்டங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.