Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகத் தமிழினமே எண்ணிப்பார் நீ உறங்கினால் வரலாற்றில் யார் உன்னை மன்னிப்பார் – தமிழ் இளையோர் அமைப்பு பிரான்ஸ்

Featured Replies

தியாகதீபம் திலீபன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவெழுச்சியுடனும் சிங்கள இனவெறி அரசின் கோரப்பிடியில் சிக்குண்டு நாளும் பொழுதும் மரணப்பொறிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் உறவுகளை காப்பாற்றவும் அங்குலம் அங்குலமாய் பறிபோய்க்கொண்டிருக்கும் எமது தாய்நிலத்தை மீட்க குரல் கொடுப்பதற்காக ஒன்றாய் எழுவோம்.

எம் மண்ணின் விடிவிற்காய், மாண்ட எம் வீரர்களின் கனவை நனவாக்க, ஒர் அணியில் திரள்வோம். இளையோர்களே எம் புலம்பெயர் மக்களே எம் தாய் மண் விடிவிற்காய் நாம் விழித்தெழுவோம்.

எமது நிலம் எமக்கு வேண்டும் என்கின்ற இலட்சிய உறுதியோடு நாம் ஒன்றாய் கரம் கொடுத்து நீதி கேட்டு தாயகம் மீட்போம். இளையோர்களே எம் சொந்தங்களே ஒன்றாய் பொங்கி எழுவோம் உலக அரங்கில் உரத்துக்குரல் கொடுப்போம்.

nஐனிவா ஐ.நாடுகள் மனிதவுரிமைகள் சபை முன் 22.09.2012. சனிக்கிழமை அணிதிரள்வோம் வாரீர். வாரீர்…

‘ நாம் உறுதியுடன் தொடர்ந்தும் போராடுவோம்; எமது தாயகéமியை எதிரியிடமிருந்து மீட்டெடுத்து சுதந்திரத்தமிழீழம் அமைக்கும்வரைஇ நாம் தொடர்ந்தும் போராடுவோம்.”

-தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையிலிருந்து…

”தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

தமிழ் இளையோர் அமைப்பு – பிரான்ஸ்

http://thaaitamil.com/?p=31952

  • தொடங்கியவர்

எதிர்வரும் 22 .09 .2012 அன்று ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மாபெரும் பொங்கு தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவித்து கனடா தமிழ் மக்களின் சார்பாக கனேடிய தமிழர் தேசிய அவையின் தமிழ் மொழிக்கான ஊடக பேச்சாளர் திரு தேவா சபாபதி அவர்கள் ஐரோப்பிய தமிழ் மக்களை நோக்கி உரிமையோடு பணிவான வேண்டுகோள் விடுத்துள்ளார் . தமிழீழ புலம்பெயர் மக்கள் ஒன்று கூடி தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற தமிழர் கோட்பாட்டை வலியுறுத்தி எழுச்சியுடன் பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு தமது விடுதலை நோக்கிய பாதையை வலுப்படுத்த வேண்டும் .

பல்லாயிரக்கணக்கில் மக்கள் இவ் நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்களின் தேசிய எழுச்சியை எந்த சக்தியாலும் மழுங்கடிக்கமுடியாது என்பதை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்த வேண்டி உள்ளோம் .விரைவில் நடைபெறவிருக்கும் பொங்குதமிழ் நிகழ்வுக்கு எமது மக்கள் திரண்டு சென்று எமது தாயக மக்களின் விடுதலைக்காக ஓங்கி குரல் கொடுப்பார்கள் என நம்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார் .

http://thaaitamil.com/?p=32028

பொங்குதமிழ் தொடர்பாக மின்னஞ்சலில் கிடைக்கப்பெற்ற தகவலின் ஒரு பகுதி :

-----

newsem.png

[size=4]ஒரு கிழமைநாளில் வைப்பதே அதியுச்ச பயனை தரும்.[/size]

சாத்திரியின் துணிவு எனக்கில்லை ,அதைவிட தெரிந்தவர் எப்படி எழுதுவது ?

எழுதினால் ஒரு புத்தகமே எழுதலாம் .இவை எல்லாம் மேலே ஊடக பேச்சாளர் என கனடாவில் இருப்பவர் பற்றியதுதான் .

  • தொடங்கியவர்

தமிழர்கள் நிலம் பறிபோய் கொண்டிருக்கிறது- நிலங்கள் சூறையாடப்படுகிறது- புத்த சமய சின்னங்கள் காளான்கள் போல் முளைத்து கொண்டிருக்கின்றன. தன்னிறைவு அடைந்த வாழ்வை வாழ்ந்த தமிழர்களை மற்றவர்களை தங்கி நிற்கும் இனமாக மாற்றுகிறார்கள் சிங்கள அரசு.

ஒரு இனப்போராட்டதை அழிக்க வேண்டும் என்றால், அவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும், ரசியா இந்த வழிமுறைகளை பல இடங்களில் கையாண்டு இருக்கிறது.

பலஸ்தீனத்தில், காஸ்மீரில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.

தமிழர் பிரதேசங்களை காலனித்துவப்படுதிய சிங்கள அரசு தமிழீழ பிரதேசங்களின் எல்லைகளை மாற்ற நினைத்து கொண்டிருகிறது. ஆரம்பத்தில் சிலாபம், பின்பு அம்பாறை, திருகோணமலை என்று தமிழர்களை நிலங்கள் பறிக்கப்பட்டு எல்லைகளும் மாற்றப்படுகிறது.

தமிழ் மண்ணின் பாதுகாவலர்கள் உலகத் தமிழ் மக்கள்- தாய் மண்ணில் மண்மீட்பு போராட்டம் சர்வதேச புவியல் வலைப்பின்னலில், உலகமயமாக்களில் சிக்குண்டு அழிக்கப்பட்ட போது, அந்த போராட்டத்தின் தொடர்ச்சி புலம்பெயர் மக்களின் கையில் தரப்பட்டது.

அங்கே வித்திடப்பட்டு அந்த மக்களின் ரத்தத்தால் இறைக்கப்பட்ட போராட்டம், உலகத்தமிழர் பொங்கி எழ இறைக்கப்பட்ட ரத்தமாக நாம் கருதிக்கொள்ள வேண்டும்.

செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை சபை கூடுகிறது. அங்கே தொடரும் தமிழரின் உரிமை பறிப்புகள், தமிழர் நில பறிப்புகள் உலகத்தமிழரின் குரலாக கூறப்படவேண்டும்.

தமிழினமே! ஜெனிவா மனிதவுரிமை சபை முன் பொங்கி எழுவோம்.

தமிழர் நாம் சிலாபம் முதல் அம்பாறை வரை தமிழீழ பிரதேசங்கள் மீட்டெடுக்கும் வரை பொங்கி எழுந்து கொண்டே இருப்போம்.

எல்லோரும் ஒன்றாக கைகோத்து தமிழீழம் நோக்கி பயணிப்போம் வாருங்கள்.

“தமிழர்களின் தமிழீழ தாயகம்”

- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

http://thaaitamil.com/?p=32415

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.