Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விவாதங்களும் விமர்சனங்களும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விவாதங்களும் விமர்சனங்களும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

marx_CI.jpg

விமர்சனங்கள் வேறு வேறு நோக்குகள் கொண்டவை. கருத்துரீதியானவை, ஆத்திரமூட்டுபவை, பொறாமையினல் விளைந்தவை எனப் பற்பலப் பண்புகள் வாய்ந்தவை. முதல் வாசிப்பிலேயே இதனை எந்த வாசகரும் இனம் கண்டுவிட முடியும். கருத்துரீதியிலாக எழுதப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள், அது குறித்த உடனடியாக ஒற்றை வார்த்தையில் ‘அவதூறு’ என்று அறம்பாடிவிட்டு நகர்ந்துவிடுவார்கள். இன்னும் சிலர் குறிப்பிட்ட கட்டுரையில் உள்ள ‘ஆதாரப் பிழைகளை’ - காலம், இடம் சார்ந்த பிழைகள் - முன்வைத்து கட்டுரையின் ‘கருத்தை’ எதிர்கொண்டுவிட்டதாகக் கோரிக்கொள்வார்கள்.

கட்டுரையில் ஆதாரங்கள் முக்கியமானவை என்பதில் மறு கருத்திற்கு இடமில்லை. ஆதாரங்களை உறுதிப்படுத்திக் கொண்டு எழுதுவதென்பது முக்கியம். ஆதாரம் எனும்போது எழுத்து மற்றும் ‘ஞாபகம்’ சார்ந்துதான் எவரும் எழுதமுடியும். ஞாபகப் பிழைகள் நேர்வது இயல்பு. அதனைச் சுட்டிக்காட்டும்போது ஏற்று திருத்திக் கொள்வது ஒரு எழுத்தாளனுக்கு அழகு. சில கட்டுரைகள் ஆதாரப் பிழைகளையும் மீறி அதற்கென தர்க்கத்தையும் கருத்துச் செறிவையும் கொண்டிருக்கும். இசசூழலில் கால-இடப் பரிமாணம் சார்ந்த பிழைகளை மட்டும் சுட்டிக்காட்டி கட்டுரையின் கருத்தையே எதிர்கொண்டுவிட்டதாகக் கோரிக்கொள்வது திசைதிருப்புதல் அல்லது அறிவு நாணயமின்மை.

கருத்தை எதிர்கொள்ள முடியாத எழுத்தாளர்கள் பெரும்பாலுமான தருணங்களில் இந்தத் தந்திரத்தைத்தான் பாவிக்கிறார்கள்.

என்னளவில் எனது கட்டுரைகள் அனைத்திற்கும் முடிந்தவரையிலும் பிரதிசார்ந்த ஆதாரங்களையே உறுதிப்படுத்திக் கொள்ள முனைகிறேன். இதனை எதிர்கொள்வது என்பது பிரதிசார்ந்த ஆதாரங்களை முன்வைத்து விவாதிக்க முடிந்தவர்களுக்கே சாத்தியம். அது அல்லாதவர்களே கட்டுரைக்கு 'நோக்கம்' கற்பிக்கும் எல்லைக்கும் 'அவதூறு' என ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட்டுப் போகிற எல்லைக்கும் செல்கிறார்கள்.

முடிந்தால் புனைபெயரில் வசைஞர்களாக முடிசூடிக்கொள்கிறார்கள்.

பிறிதொரு விவாதமுறை, தான் குறிப்பிட்ட நிலத்தில் வாழ்வதால், குறிப்பிட்ட அனுபவங்கள் கொண்டிருப்பதால் தான் சொல்வது மட்டும்தான் ‘உண்மை’ எனச் சாதிப்பது. அனுபவவாதம் என்பது ‘உண்மை’ அல்ல என்பதற்கு நிறையச் சான்றுகளை நாம் அடுக்க முடியும். குஜராத்தில்தான் நரேந்திர மோடி வாழ்கிறார். பாதிக்கப்பட்ட முஸ்லீம் வயோதிபர் ஒருவர் வாழ்கிறார். ஓரு காந்தியவாதியும் வாழ்கிறார். குஜராத் படுகொலைகள் தொடர்பாக இந்த மூவரதும் அனுபவங்கள் ஒன்றல்ல. புரிதல்களும் ஒன்றல்ல. அவரவர் சார்பு நிலையில் நின்றுதான் அவரவர் பேசமுடியும். ஓரு குறிப்பிட்ட நிலம் சார்ந்த விஷயங்களை ‘நேரடி’ அனுபவம் கொண்டவர்கள் மட்டும்தான் எழுதமுடியும் என்றால், கியூபாவில் மட்டுமே வாழ்ந்த, அதுவும் பல்கலைக் கழக மட்டங்களில் மட்டுமே அனுபவம் கொண்ட, பொலிவியாவில் சில நாட்கள் மட்டுமேயிருந்த ரெஜி டெப்ரே எவ்வாறு முழு இலத்தினமெரிக்கப் புரட்சிகள் பற்றியும் ஒரு மதிப்பீட்டை வைத்தல் முடியும்?

ரெஜி டெப்ரேவின் ‘புரட்சியில் புரட்சி’ நூல் ஆயுதப் போராட்டம் குறித்த ஆகச் சிறந்த விமர்சன நூலாக எப்படிக் கொண்டாடப்பட முடியும்? அனுபவம்தான் உண்மை என விவாதித்தால், ஐரோப்பா தவிர வேறு எங்குமே பயணம் செய்திராத கார்ல் மார்க்சின் ஆசியா-ஆப்ரிக்கா குறித்த கருத்துக்களுக்கு உலக அரசியலில் என்ன மதிப்பு இருக்கமுடியும்?

கருத்துக்கள் என்பது பிரதானமாக வாசிப்பு சார்ந்துதான் உருவாகிறது. வாசிப்பு எனும்போது பதியப்பட்ட எழுத்துக்கள் குறிப்பிட்ட அனுபவங்கள் பற்றியவை, எழுதியவரின் சார்புகள் கொண்டவை எனும் அர்த்தத்திலேயே நான் பாவிக்கிறேன். இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது ஒரு நிலத்தில் ஒருவர் வாழும் அல்லது வாழ்ந்த தகுதி மட்டும் அவர் எழுதுவதெல்லாம் ‘உண்மை’ என்று கோரிக்கொள்வதற்கான முகாந்திரமாக ஆக முடியாது.

இன்னொரு விவாதமுறையை பின்நவீனத்துவ அல்லது பின்புரட்சிகர விமர்சனம் எனக் குறிப்பிடலாம். இப்படியான எழுத்துக்களை எழுதுகிறவர்கள் சகல திருஉருக்களையும், புனிதச் சொரூபங்களையும் கவிழ்ப்பதாகவும் கட்டுடைப்பதாகவும் எக்காள முழக்கத்துடன் கோரிக்கொள்கிறார்கள். இவ்வாறு விமர்சனங்களை மேற்கொள்ளும்போது இயல்பாக இவர்கள் திருச்சொரூபங்களாகவும் புனிதஆத்மாக்களாகவும் தம்மை பீடத்திலேற்றிக் கொள்கிறார்கள். துரதிருஷ்டவசமாக அனைத்துத் திருச்சொரூபங்களும் விமர்சிக்கப்பட முடியுமானால் அது 'தமக்கும் பொருந்தும்' (இதை எழுதுகிற என்னையும் சேர்த்து) என்பதனை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

விமர்சனங்களை எதிர்கொள்கிற மனநிலை இவர்களுக்கு கொஞ்சமும் இல்லை. விமர்சனங்கள் வந்தவுடன் கருத்துரீதியிலான விடயங்களை எதிர்கொள்ள முடியாமல் உடனடியாக விமர்சனங்களுக்கு ‘நோக்கம்’ கற்பிப்பதன் வழி அதனைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். அல்லது முகநூல் அல்லது வலைப்பூ அல்லது தமது சொந்த வலைத்தளங்களில் கும்பல் சேர்த்துக்கொண்டு வசைபாடத் துவங்கிவிடுகிறார்கள். கொடுமை என்னவென்றால் எந்த அரசியல் சார்பு தமக்கு இல்லை என அவர்கள் ஸ்தாபிக்க முனைகிறார்களோ அதே அரசியல் சார்புகொண்டவர்கள்தான் இவ்வாறானவர்கள் சேர்க்கும் கும்பலில் இடம்பெறுகிறார்கள். இது எவ்வாறு நேர்கிறது எனும் கேள்வியை நேர்மையாகக் கேட்டுக் கொள்ள முடியுமானால், இவர்களால் இவர்களை நோக்கி முன்வைக்கப்படும் கருத்துரீதியிலான விமர்சனங்களை அதே தளத்தில் எதிர்கொள்ள இவர்களுக்கு முடியும்.

அந்தத் திறந்த மனம் இவர்களிடம் இல்லாததனால்தான் வசைகளில் அடைக்கலம் தேடுகிறார்கள்.

வரலாற்றில் தனிமனிதர்கள் வகிக்கும் பாத்திரம் என்பது மிகவும் சொற்பமானது. வரலாற்றைத் தான் விரும்பியபடி எந்தத் தனிமனிதனும் உருவாக்க முடியாது. கொடுக்கப்பட்ட நிலைமையில், அதற்குத் தகவே ஒருவர் வரலாற்றைச் சமைக்க முடியும். அதற்காகவே குறிப்பான நிலைமையில் குறிப்பானதைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என லெனின் கோருகிறார். துரதிருஷ்டவசமாக ஈழச் சூழலில் அனைத்துவிதமான கருத்துரீதியிலான பிரச்சினைகளும் தனிநபர்களுக்கு இடையிலானதாகவும், குழாயடிச்சண்டை போலவும், வம்பளப்புகளுக்கான இடமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. விவாதமுறைகளும் விமர்சனமுறைகளும் அதற்கு இயைபாகவே உருவாகியிருக்கிறது.

ஆயிரமாயிரம் மனிதர்களின் படுகொலை குறித்த அவலத்தை புனைபெயர்களில், அநாமதேயமாக விமர்சனத்துக்கு உட்படுத்துவதனைவிடவும், இனக்கொலைக்கு உள்ளான ஒரு மக்கள் கூட்டத்திற்கு வேறு எந்தவிதமான அவமானத்தை இவர்களால் தந்துவிட முடியும்?

http://www.globaltam...IN/article.aspx

[size=4]இந்த ஆக்கத்திற்கும் படத்தில் உள்ளவருக்கும் என்ன சம்பந்தம்?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

விவாதங்களும் விமர்சனங்களும் - குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யமுனா ராஜேந்திரன்

ஆயிரமாயிரம் மனிதர்களின் படுகொலை குறித்த அவலத்தை புனைபெயர்களில், அநாமதேயமாக விமர்சனத்துக்கு உட்படுத்துவதனைவிடவும், இனக்கொலைக்கு உள்ளான ஒரு மக்கள் கூட்டத்திற்கு வேறு எந்தவிதமான அவமானத்தை இவர்களால் தந்துவிட முடியும்?

நன்றி பதிவுக்கு கிருபன்............ :icon_idea:

ஆயிரமாயிரம் மனிதர்களின் படுகொலை குறித்த அவலத்தை புனைபெயர்களில், அநாமதேயமாக விமர்சனத்துக்கு உட்படுத்துவதனைவிடவும், இனக்கொலைக்கு உள்ளான ஒரு மக்கள் கூட்டத்திற்கு வேறு எந்தவிதமான அவமானத்தை இவர்களால் தந்துவிட முடியும்?

[size=4]எமது மக்களின் அரசியல் / சமூக/ பொருளாதார வாழ்வை புனைபெயரில் கருத்துக்களாக கட்டுரைகளாக, விமர்சனங்களாக எழுதுவதானது அவமானம் என்கிறார் 'யமுனா இராஜேந்திரன்' (நிச்சயம் இது அவரின் சொந்தப்பெயராக இருக்கும்).[/size]

[size=4]ஒன்றில் எழுதுபவர்கள் எல்லோரும் சொந்தப்பெயரில் எழுதவேண்டும் இல்லை எழுதாமல் விடவேண்டும்.[/size]

[size=4]சரி சொந்தப்பெயரில் எழுதுவதால் ஏதாவது பிரச்சனைகள் வருமா? வராது, நீங்கள் நீங்கள் வசிக்கும் நாட்டைப்பற்றி, அதன் அரசியல்வாதிகளைப்பற்றி விமர்சித்தால்.[/size]

[size=4]நீங்கள் சொந்தப்பெயரில் தாயகத்தில் நடந்த, நடக்கும் நிகழ்வுகளைப்பற்றி சொந்தப்பெயரில் எழுதலாமா? எழுதலாம் - மகிந்தாவை, கோத்தாவை, டாக்கியை புகழ்ந்து.[/size]

[size=4]மாறாக எதிர்த்து எழுதினால் ..உங்கள் உறவுகள் கடத்தப்படுவார்கள், கொல்லப்படுவார்கள். இல்லை நீங்களே கொல்லப்படுவீர்கள். [/size]

[size=4]சொந்தப்பெயரில் எழுதிய நிமலராஜனும் இல்லை லசந்தாவும் இல்லை. புனைபெயரில் எழுதிய தராக்கியும் இல்லை. அதை செய்தவர்களோ அவமானம் இன்றி உலாவிவருகின்றனர்.[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இந்த ஆக்கத்திற்கும் படத்தில் உள்ளவருக்கும் என்ன சம்பந்தம்?[/size]

படத்திலுள்ளவர் கார்ல் மார்க்ஸ்.. யமுனா ராஜேந்திரனை புனைபெயரில் எழுதும் மார்க்கசியவாதிகள் புண்படுத்தியிருக்கலாம்!

படத்திலுள்ளவர் கார்ல் மார்க்ஸ்.. யமுனா ராஜேந்திரனை புனைபெயரில் எழுதும் மார்க்கசியவாதிகள் புண்படுத்தியிருக்கலாம்!

[size=4]எங்கெல்ஸ், லெலின், ஸ்டாலின், மாவோ ... [/size]

[size=4]இன்னும் கூடுதலாக புண்படுத்தி இருக்கலாம்[/size] :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எங்கெல்ஸ், லெலின், ஸ்டாலின், மாவோ ... [/size]

[size=4]இன்னும் கூடுதலாக புண்படுத்தி இருக்கலாம்[/size] :D

துரதிருஷ்டவசமாக ஈழச் சூழலில் அனைத்துவிதமான கருத்துரீதியிலான பிரச்சினைகளும் தனிநபர்களுக்கு இடையிலானதாகவும், குழாயடிச்சண்டை போலவும், வம்பளப்புகளுக்கான இடமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. விவாதமுறைகளும் விமர்சனமுறைகளும் அதற்கு இயைபாகவே உருவாகியிருக்கிறது. :)

[size=1] [/size]

[size=4]இதில் என்ன துரதிஸ்டம் :lol:[/size][size=1]

[size=4]கருத்துக்களை சுதந்தரமாக தெரிவிக்க முடித்தால் அதுதான் எந்த சமூகத்திற்கும் இனத்திற்கும் நல்லது.[/size][/size][size=1]

[size=4]கருத்துக்களை சுந்தந்திரமாக வெளியே சொல்ல முடியாமல் இருப்பதை விட இது எவ்வளவோ மேல். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனங்களை எதிர்கொள்கிற மனநிலை இவர்களுக்கு கொஞ்சமும் இல்லை. விமர்சனங்கள் வந்தவுடன் கருத்துரீதியிலான விடயங்களை எதிர்கொள்ள முடியாமல் உடனடியாக விமர்சனங்களுக்கு ‘நோக்கம்’ கற்பிப்பதன் வழி அதனைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். அல்லது முகநூல் அல்லது வலைப்பூ அல்லது தமது சொந்த வலைத்தளங்களில் கும்பல் சேர்த்துக்கொண்டு வசைபாடத் துவங்கிவிடுகிறார்கள். கொடுமை என்னவென்றால் எந்த அரசியல் சார்பு தமக்கு இல்லை என அவர்கள் ஸ்தாபிக்க முனைகிறார்களோ அதே அரசியல் சார்புகொண்டவர்கள்தான் இவ்வாறானவர்கள் சேர்க்கும் கும்பலில் இடம்பெறுகிறார்கள். இது எவ்வாறு நேர்கிறது எனும் கேள்வியை நேர்மையாகக் கேட்டுக் கொள்ள முடியுமானால், இவர்களால் இவர்களை நோக்கி முன்வைக்கப்படும் கருத்துரீதியிலான விமர்சனங்களை அதே தளத்தில் எதிர்கொள்ள இவர்களுக்கு முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.