Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுடன் யுத்தம் ஏற்படும் என பிரேமதாஸ எச்சரித்தார்: இந்திய முன்னாள் உயர் ஸ்தானிகர்

Featured Replies

[size=4]'இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையிலிருந்து வெளியேறாவிட்டால் இந்தியாவுடன் யுத்தம் ஏற்படும் என 1989 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அச்சுறுத்தினார் என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகரான லகான் லால் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் சஞ்சிகையொன்றிலேயே மெஹ்ரோத்ரா இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி பிரேமதாஸவை கொழும்பில அவரின் அலுவலகத்தில் சந்தித்தபோது, இந்திய அமைதிகாக்கும் படையினரை வெளியேற்றுவதற்கு இந்தியா இணங்காவிட்டால், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளை இலங்கைப் படையினர் பொறுப்பேற்பதாக அரச தொலைக்காட்சியில் தான் அறிவிக்கப்போவதாக பிரேமதாஸ கூறினாராம்.

'அதன்பின் இந்திய அமைதிகாக்கும் படையினர் ஆட்சேபித்தால் மோதலும் யுத்தமும் ஏற்படும்' என ஜனாதிபதி பிரேமதாஸ கூறியதாக மெஹ்ரோத்தா தெரிவித்துள்ளார்.

'மேதகு ஜனாதிபதி அவர்களே, நான் உங்களுடன் சமாதானம் பேச வந்துள்ளேன். ஆனால், உங்களுக்கு யுத்தம் வேண்டுமென்றால் நீங்கள் அதை (யுத்தத்தை) கொண்டிருக்கலாம்' என தான் பதிலளித்ததாக மெஹ்ரோத்ரா கூறியுள்ளார்.

'இந்த வார்த்தைகள் மிகத் தீவிரமான வகையில் வெளியிடப்பட்டன. அவை அவரை இறங்கிவரச் செய்தன. அவரை நான் கூர்ந்து அவதானித்தேன். இவ்வாறான பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் அதிர்ச்சியடைந்தவராக காணப்படடார். ஒன்று அல்லது இரு நிமிடங்கள் அவரால் பேசமுடியவில்லை' எனவும் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.

மெஹ்ரோத்ரா அமைதியடைய வேண்டுமென அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான ரஞ்சன் விஜேரட்ன உட்பட இலங்கையின் ஏனைய தலைவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் ஒரு கட்டத்தில், இந்திய அமைதி காக்கும் படையை ஆக்கிரமிப்பு படையாக தான் பிரகடனப்படுத்தப் போவதாகவும் அது புதுடில்லியின் புகழுக்கு பங்கம் ஏற்படுத்தும் என பிரேமதாஸ கூறியதாக மெஹ்ரோத்ரா கூறியுள்ளார்.

'எமது புகழை நாம் கவனித்துக்கொள்வோம்' தான் பதிலளித்ததாகவும் அவர் மெஹ்ரோத்ரா கூறியுள்ளார்.

அப்போது ஜனாதிபதி பிரேமதாஸ, 'அது எனது அரசியல் எதிர்காலத்தை அழிக்கும். உங்கள் அடுத்த விஜயம் எனது இறுதிச் சடங்கிற்கானதாக இருக்கும்' என கோபமாக கூறினாராம்.

1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது. ரணசிங்க பிரேமதாஸ பிரதமராக பதவி வகித்தார். தான் ஜனாதிபதியானவுடன் இந்திய படையினரை வெளியேற்றுவதாக வாக்குறுதியளித்து 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் பெற்றார். 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தபோது 1989 ஜூலை மாதத்திற்குள் இந்தியா தனது படையினரை வாபஸ் பெற வேண்டுமென கோரிமை ராஜதந்திர பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின் நடந்த, மெஹ்ரோத்ரா முக்கிய பாத்திரம் வகித்த பின்னறை கலந்துரையாடல்களின் பின்னர் 1990 மார்ச் மாதம் இந்தியா தனது படையினரை வாபஸ் பெற்றது.

இந்தியா தனது படையினரை வாபஸ் பெறும் என பிரேமதாஸ புரிந்துகொண்டவுடன் மெஹ்ரோத்ராவை கட்டித்தழுவி அவரின் ராஜதந்திர ஆற்றலை பாராட்டினார் எனவும் மெஹ்ரோத்ரா கூறியுள்ளார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/48723-2012-09-16-11-50-00.html

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றபின்னும் ராஜதந்திர ஆற்றல் அது இது என்று கதை விடுறார்.. :D

தோற்றபின்னும் ராஜதந்திர ஆற்றல் அது இது என்று கதை விடுறார்.. :D

இப்பிடிப் பாருங்கோ...

தோற்றுப் போனதுக்கே இப்பிடி எழுதினா

வெற்றி பெற்றிருந்தால்?

[size=5]

இந்தியாவுடன் யுத்தம் ஏற்படும் என பிரேமதாஸ எச்சரித்தார்: இந்திய முன்னாள் உயர் ஸ்தானிகர்

அதனால் தான் இந்திய அரச பயங்கரவாதிகள் பிரேமதாசவை படுகொலை செய்துவிட்டு பழியை புலிகள் மீது சுமத்தினார்கள்!

இந்த மல்கோத்ரா என்ற இந்திப் பயங்கரவாதி யாழ்ப்பாண நாவற்குழிப் பகுதியில் இந்திய ராணுவப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு பொறுப்பாக இருந்தவன். பின்னர் சிலகாலம் (10 வருடங்களின் முன்னர்) இந்தியப் பயங்கரவாத அரசினால் கண்டி துணைத் தூதராக நியமிக்கப்பட்டு சில வருடங்கள் மலையகத்தில் கும்மாளம் அடித்தவன்! [/size]

  • கருத்துக்கள உறவுகள்

||இந்தியா தனது படையினரை வாபஸ் பெறும் என பிரேமதாஸ புரிந்துகொண்டவுடன் மெஹ்ரோத்ராவை கட்டித்தழுவி அவரின் ராஜதந்திர ஆற்றலை பாராட்டினார் எனவும் மெஹ்ரோத்ரா கூறியுள்ளார்.||

மாதிரியான இராஜதந்திரிகளை இந்தியா கொண்டுள்ளதால் தான் சிறிலங்கா போன்ற சிறிய நாடுகள் கூட இவர்கள் மீது சவாரி செய்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.