Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுடில்லிக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழைப்பு

Featured Replies

[size=4]ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்து சில நாட்கள் கழிந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடானான பேச்சுவார்த்தை உட்பட சில சுற்று பேச்சுக்களில் பங்குபற்றுவதற்காக புதுடில்லிக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒக்டோபர் 10 ஆம் திகதி புதுடில்லி வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அங்கு அவர்கள் எதைப்பற்றி பேசவுள்ளனர் என கேட்டபோது, 'எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது மட்டும்தான் நடந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்' என அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தபோது இலங்கையில் தேசிய பிரச்சினையில் தமிழ்நாடு மட்டுமன்றி முழு இந்தியாவுமே அக்கறையாக இருப்பதை இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

பல தசாப்தங்களாக தொடரும் இனப்பிரச்சினை மற்றும் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வு என்பவை தொடர்பாக ஏற்புடைய தீர்வொன்றை விரைந்து காணுமாறு இந்தியா வலியுறுத்தியதாக 'டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வெளியிட்டிருந்தது.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/49234-2012-09-24-11-48-44.html[/size]

இது ஒன்றும் தமிழர்கள் மீதான அக்கறை காரணமாக இல்லை!

கூட்டமைப்பினர் / தமிழர் தரப்பு எதெற்கெடுத்தாலும் மேற்குலகை நாடுவதாக பயங்கரவாதி மகிந்த கும்பல் ஹிந்திய பிச்சைக்காரக் கும்பலிடம் போதையிலிருந்த மலையாளக் காட்டேரிகளிடமும் கோள் மூட்டியுள்ளதாக தெரிகிறது.

அதனால் தான் கூட்டமைப்பின் மீது இத்தனை அக்கறை. இந்தியா சென்றுவிட்டு அப்படியே சீனா அல்லது பாகிஸ்தான் போய்விட்டு வந்தால் எல்லாம் சரியாகி விடும்.

சிங்களப் பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இந்திய அரசு உள்ளது என்பதை இந்த பயணம் நிரூபிக்கும்!

[size=4]தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒக்டோபர் 10 ஆம் திகதி புதுடில்லி வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சு அழைத்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அங்கு அவர்கள் எதைப்பற்றி பேசவுள்ளனர் என கேட்டபோது, 'எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது மட்டும்தான் நடந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்' என அவர் கூறினார்.[/size]

இதுக்குத்தான் :D :D

http://www.yarl.com/...howtopic=108636

இந்தியாவின் கையை அமெரிக்காவால்த்தான் முறுக்க முடியும். கூட்டமைப்புக்கு முடியாது. தேவானந்தா 13ம் திருத்தம் என்ற கதையை ஆரம்பித்திருப்பதால் கூட்டமைப்பை இந்தியா அழைக்கும் ஒவ்வொரு தடவையும் நெஞ்சில் கை வக்க வேண்டும். ஆனல் இலங்கையுடன் ஒத்துபோக்க இந்தியா கூட்டமைப்பை வற்புறுத்தினாலும், சீனா நாளைக்கு 32 ஒப்பந்தங்கள் இலங்கையுடன் கையெழுத்திட்டு மேற்குநாடுகளை தூங்கவிடாது பார்த்துக்கொள்ளும்.

Sep 25, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒக்டோபர் மாதம் டில்லிக்கு விஜயம்!

TNA%20copy.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாத முதல் வாரத்தின் இறுதிப்பகுதியில் டில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது. இவ் விஜயமானது இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது .

இக்குழுவினர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அங்கு சந்தித்து சமகால அரசியல் நிலைமை,அரசியல் தீர்வு மற்றும் வடக்கில் இராணுவப் பிரசன்னம் உட்பட பல முக்கிய விடயங்கள்; குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

http://www.pathivu.c...ticle_full.aspx

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லிக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழைப்பு

அவன் கூப்பிட்டால் ஏதோ அலாவுதின் கில்ஜி கூப்பிட்டதற் போல ஒரு பில்டப்பு.. இந்த மாதிரியான ரீ பிஸ்கெட்டுகளுக்கான சந்திப்பையும் தனியாக சேகரித்து.. மக்கள் துயரம் என்ற பகுதியில் சேகரிக்க வேண்டும்.. இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்..

டிஸ்கி:

மான ரோசம் இன்னும் எக்ஸ்ரா எக்ஸ்ரா இருந்தா ஒரே ஒரு தடவை புறக்கணித்து பாருங்கள்.. பெரிய காரணம் எல்லாம் வேண்டாம் .. எங்களுக்கு வயித்தால போகுது அதனால் வர இயலவில்லை என்று சொல்லி பாருங்கள் .. யாருக்கு வயிற்றாலை போகுது என்று அப்புறம் உங்களுக்கு தெரியும்... :icon_mrgreen: :icon_mrgreen:

ஒரு நாறிப்போன விஷயத்தை எத்தினை தரம்தான் கூப்பிட்டு கதைக்கிறது ஓயறகு வந்து கதைக்கிறது?

இது காட்டுவது ஒன்றைத்தான் அதாவது முடிவெடுக்கமுடியாமல் இருக்கும் கையாலாகத்தனம்.

கூட்டமைப்பு கோமணத்தை கழட்டி வித்துப்போட்டு வரமாட்டம் எண்டு சொல்லவேண்டும்.

முடிவெடுக்கவேண்டியது இந்தியாதான்..

ஒரு நாறிப்போன விஷயத்தை எத்தினை தரம்தான் கூப்பிட்டு கதைக்கிறது ஓயறகு வந்து கதைக்கிறது?

இது காட்டுவது ஒன்றைத்தான் அதாவது முடிவெடுக்கமுடியாமல் இருக்கும் கையாலாகத்தனம்.

கூட்டமைப்பு கோமணத்தை கழட்டி வித்துப்போட்டு வரமாட்டம் எண்டு சொல்லவேண்டும்.

முடிவெடுக்கவேண்டியது இந்தியாதான்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.