Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தாவுடன் தமிழ்க் கூட்டமைப்பினர் திங்களன்று சந்திப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற தூதுக்குழு இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தாவை நாளை மறுதினம் திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது இந்தியப் பயணத்துக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராயப்பட்டு முடிவு ௭டுக்கப்படவுள்ளது. ௭திர்வரும் 10ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழு புதுடில்லிக்கு விஜயம் செய்யவுள்ளது.

அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உட்பட முக்கியஸ்தர்களை கூட்டமைப்பினர் சந்தித்து பேசுவார்களென ௭திர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவுக்கான விஜயம் தொடர்பில் கேசரிக்கு கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் ௭ம்.பி.யுமான மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான இந்திய மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புக்களே முக்கிய இடம் பிடித்துள்ளன. திங்களன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தாவை சந்தித்த பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும். ௭திர்வரும் 10ஆம் திகதி நாம் புதுடில்லிக்கு விஜயம் செய்கின்றோம்.

இந்தியப் பிரதமர் உள்ளிட்ட மத்திய அரசின் முக்கியஸ்தர்களையும் ௭திர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜையும் நாம் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளோம். அங்கிருந்து தமிழகம் செல்லும் நாம் தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு. கருணாநிதி ஆகியோரையும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளோம். இந்த விஜயத்தின்போது அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்பட்டுள்ள காலதாமதம் மற்றும் வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைவரம், காணிப் பிரச்சினை போன்ற பல விடயங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் தெளிவுபடுத்துவோம் ௭ன்று கூறினார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=872

சிங்களப் பயங்கரவாதிகளின் கைக்கூலிகளான இந்திய அரச பயங்கரவாதிகளை சந்திப்பதால் எதுவும் நடந்துவிடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அட ஏனடா அங்க எல்லாம் போறீங்க

உங்களுக்கே தெரியும் என்ன தான் தல கீழா நடந்து போனாலும் கூட ஒண்டும் நடக்கப்போறதில்லை எண்டு

முகர்ஜிய சந்தித்தாலும் உங்களுக்கு பெப்பே தான்

கிருஷ்ணா ,சுஷ்மாவிண்ட காலில விழுந்தாலும் பெப்பே தான்

இங்கே ராஜபக்ஷ active இல சொல்லுறத அங்க அவங்க passive இல சொல்லுவாங்க இது கூட தெரியாத மாக்கனுகளாடா நீங்க

ஆங்................. மறந்து போச்சு உங்க குடும்பம் எல்லாம் அங்க இல்ல .....ஆமா ஆமா

என்ன செய்யுறது அதுக்காவது அவனுகள் ஆடுற கூத்துக்கு துணை போகத்தான் வேண்டும்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக ராஜபக்ஷவின் காலை நக்குங்கள் என்பானுகள் மண்டைய ஆட்டிப்போட்டு வாங்க

உங்க குடும்பமாவது நல்லா இருந்ததா சந்தோசம் தான்

ஏனென்றால் அதுவும் ஒரு தமிழ் குடும்பம் தானே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.