Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய-சிறிலங்கா நிதிஉதவிகளில் பட்டதாரிகளை மூளைச்சலவை செய்யும் ஜந்துக்கள்

Featured Replies

தமிழர் உரிமைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை செய்து பட்டதாரிகளை மூளைச்சலவை செய்யும் கரியம் ஒன்றினை சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகள் செய்துவருகின்றன. அண்மையில் தமிழ் மக்களது அபிலாசைகளை மழுங்கடிக்கும் வகையிலான கருத்துக்களை பட்டதாரி பயிலுனர்களின் கருத்தமர்வுகளின்போது ஒருசில வளவாளர்கள் வெளியிட்டுள்ளனர்.இது தொடர்பில் பட்டதாரி பயிலுநர்கள் பலர் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் பட்டதாரிப் பயிலுநர்களுக்கு நடத்தப்படும் கருத்தமர்வுகளின்போதே இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகம் ஒன்றில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக் கூறப்படும் கருத்தமர்வில் வளவாளராகக் கலந்துகொண்ட உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் பணிப்பாளரே இவ்வாறு தமிழ் மக்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.குறித்த நபர் இந்திய, சிறிலங்கா அரசுகளிடம் நிதி உதவி பெற்றுவருவதாக தெரியவருகின்றது.

குறித்த கருத்தரங்கில் அவர் “கருத்தமர்வை நடத்துவதன் மூலம் எனக்கு ஒருமணித்தியாலயத்துக்குப் பல ஆயிரம் ரூபா உழைக்கமுடிகிறது. தமிழிழம் கிடைத்திருந்தால் இப்படி என்னால் உழைக்கமுடியாதிருந்திருக்கும். தமிழிழம் கிடைப்பதை நான் விரும்பியதில்லை. தமிழிழம் கிடைத்திருந்தால் நாங்கள் துன்பப்பட்டிருப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

அரச துறைகளில் நியமனம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயிலுநர்களாக நாட்டிலுள்ள சுமார் 42ஆயிரம் பட்டதாரிகள் இந்த வருடம் தெரிவுசெய்யப்பட்டு மாவட்டசெயலகங்கள் பிரதேசசெயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் தற்போது இணைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் திறன் விருத்திக்காகப் பல்வேறு தலைப்புகளில் தொடர் கருத்தமர்வுகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் வாரந்தோறும் நடத்தப்பட்டுவருகிறன. இதற்கென துறைசார்ந்த அரச, அரசசார்பற்ற மற்றும் ஒய்வுநிலை அதிகாரிகள் வளவாளர்களாக அழைக்கப்பட்டே பயிலுநர்களுக்கான திறன்விருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன.

இவ்வாறான வளவாளர்களில் ஒருசிலர் கருத்தமர்வுகளின்போது வெளிப்படுத்திவரும் கருத்துக்கள் மற்றும் உதாரணங்கள் தமிழ் மக்களது அபிலாசைகளை மழுங்கடிக்கும் வகையில் அமைவதாக யாழ்ப்பாணப் பட்டதாரிப் பயிலுநகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

http://thaaitamil.com/?p=33832

இந்தியப் பயங்கரவாதிகளின் கைக்கூலிகள் சிலர் யாழில் உள்ளனர். அவர்களில் ஒருவர் தான் இந்தப் பேர்வழி. இந்தியப் பயங்கரவாதிகள் சில மலையாக மக்களையும் கைக்கூலிகளாக மாற்றி வட-கிழக்கில் மீள் நிர்மாணப் பணிகள் என்ற போர்வையில் உலாவ விட்டுள்ளனர். உதாரணமாக கிளிநொச்சியில் மலையாலபுரத்தில் இவர்களின் செயற்பாடுகள் அதிகமாக உள்ளது.

இந்தியப் பயங்கரவாதிகள் மத அடிப்படையில் "இந்து சுயம் சேவக சங்கம்", தென் இந்திய திருச்சபையின் சில கிறிஸ்தவ பாதிரிகள், வேறுசில இந்திய சாமியார்கள், வியாபாரிகள் ஊடாக வட-கிழக்கில் தமது கைக்கூலிகளை உருவாக்குகிறார்கள். இதில் மக்கள் பலர் (குறிப்பாக மலையாக இளைஞர்கள்) அறியாமையால் பலியாகின்றனர்.

தமிழினக் கொலைகளுக்கு துணைபோன இந்திய காட்டுமிராண்டிக் கும்பலுக்கு விசுவாசமாக கொழும்பில் இருந்து செயற்படும் கம்பன் கழக ஜெயராஜ் போல, கிழக்கில் கூட்டமைப்பின் யோகேஸ்வரனையும் மாற்றும் முயற்சி இந்தியப் பயங்கரவாதிகளுக்கு வெற்றியளிக்குமா என்பது போகப் போக தெரியும்.

சித்தார்த்தன், சங்கரி, சம்பந்தன், மாவை, சுரேஷ் போன்றவர்கள் தாமாகவே இந்திய காட்டுமிராண்டிக் கும்பலின் அடிவருடிகளாக தம்மை மாற்றிக் கொண்டவர்கள். இதில் சுயநலன் முக்கிய காரணம்.

ஸ்ரீரவிசங்கர் என்பவர் முன்னர் இந்திய-சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலியாக கிளிநொச்சி சென்று அங்கு பிரபாகரன் இருக்கிறாரா என்று அறிய முற்பட்டவர்.

சிங்களப் பயங்கரவாதி மகிந்த கும்பலின் "கவனிப்பில்" மயங்கிப் போன "வாழும்கலை" ஸ்ரீரவிசங்கர் என்பவர் மீண்டும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலியாக தமிழகத்தில் தனது கைவரியைக் காட்ட ஆரம்பித்துள்ளார். இப்போது தமிழகத்திலுள்ள தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் வட மாகாணத்தில் தமிழரின் தொகையை கணிசமாக குறைக்க முடியும் என்பது சிங்கள அரச பயங்கரவாதிகளின் சதித் திட்டம். இதற்கு துணை போபவர் "வாழும்கலை" ஸ்ரீரவிசங்கர்.

பகுத்தறிவற்ற கொலைஞர் கருணாநிதியும் இவ்வாறன ஒரு கோரிக்கையை முன்பு முன்வைத்தவர் தான்.

தமிழ் நாட்டிலுள்ள ஈழத் தமிழகதிகள் விரைவில் நாடு திரும்ப புலம்பெயர் அமைப்புக்கள் - ஐ. நா. சபையூடாக முயற்சிகள் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சித்தார்த்தன், சங்கரி, சம்பந்தன், மாவை, சுரேஷ் போன்றவர்கள் தாமாகவே இந்திய காட்டுமிராண்டிக் கும்பலின் அடிவருடிகளாக தம்மை மாற்றிக் கொண்டவர்கள். [/size][size=4]இதில் சுயநலன் முக்கிய காரணம்[/size]

நல்ல கருத்து

இதற்கு மல்லையூரான் அன்ன என்ன சொல்லுறார் :rolleyes: :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.