Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெசோ தீர்மானத்தை எடுத்துக் கொண்டு எதிர்வரும் 6ம் திகதி நியூயோர்க் செல்கிறார் மு.க.ஸ்டாலின்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

182820701008-stalin300.jpg

டெசோ தீர்மானத்தை எடுத்துக் கொண்டு எதிர்வரும் 6ம் திகதி நியூயோர்க் செல்கிறார் மு.க.ஸ்டாலின்!

September 29, 2012 01:01 pm

தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் டெசோ மாநாடு ஆகஸ்டு மாதம் சென்னையில் நடந்தது. இதில் இலங்கை தமிழர்கள் நலனை காக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானங்களை ஐ.நா.சபையிடம் கொடுக்க தி.மு.க முயற்சி செய்தது. ஆனால் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்ததால். ஐ.நா சபையிடம் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது தி.மு.க சார்பில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா சபையில் கொடுக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் வருகிற 3-ந் திகதி தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது.

கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீர பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், வக்கீல் ராதாகிருஷ்ணன், ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வற்புறுத்தி சிதம்பரத்தில் இருந்து திருச்சிக்கு திருமாவளவன் வேன் பயணம் செய்வதால் டெசோ கூட்டத்தில் அவர் கலந்து கொள்வாரா என்பது தெரியவில்லை.

இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையம் அக்டோபர், நவம்பரில் ஆய்வு நடத்த உள்ளது. இந்த ஆய்வு பொறுப்பை ஏற்க இருக்கும் இந்தியா, மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று 3-ந் திகதி நடக்கும் கூட்டத்தில் வற்புறுத்தப்படும் என்று தெரிகிறது.

டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நாசபையில் வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த கூட்டத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு, ஆகியோர் அக்டோபர் 6-ந் திகதி நியூயோர்க் செல்கிறார்கள். அங்கு ஐ.நா.சபையில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை அவர்கள் கொடுக்கிறார்கள்.

(மாலைமலர்)

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இலங்கை போரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையம் அக்டோபர், நவம்பரில் ஆய்வு நடத்த உள்ளது. இந்த ஆய்வு பொறுப்பை ஏற்க இருக்கும் இந்தியா, மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று 3-ந் திகதி நடக்கும் கூட்டத்தில் வற்புறுத்தப்படும் என்று தெரிகிறது.[/size]

அடப்பாவிகளா யாரிடமடா பொல்ல கொடுக்கிறியள்

மனித நேயமா அவனுகளிடமா

செத்த தமிழன் எல்லாம் புலி ....இலங்கை ராணுவம் ஒருவரையும் கொல்லவில்லை எல்லா தமிழனும்

தாங்களே தங்களை சுட்டு கொண்டார்கள் எண்டு case ஐ close பண்ணி விடுவானே

கள்ளனுக்கே விதானை வேலையா ............

கடைசியா இருந்த நம்பிக்கையும் போச்சா ....

வாழ்க தமிழ் வளர்க இந்தியா

யாரவது இந்திய நண்பர் இதனை பார்த்தால் தயவு செய்து இந்த கிழட்டு கருணாநிதியையும் அவன்ட கூட்டத்தையும்

அடித்து கொன்றுவிடுங்கள் உங்களுக்கு புண்ணியமாகப்போகும்

உங்கள் சந்ததியே உங்களை பாராட்டுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த டெசோவே இந்திய உளவுத்துறையின் தூண்டுதல்போல்தான் தெரிகிறது.. கருணாநிதி உளவுத்துறையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருபவர் என்று கேள்வி..

வழிக்கு வராத சிங்கள அரசுக்கு தொல்லை கொடுப்பதாக எண்ணி டெசோவை இழுத்து விட்டிருக்கிறார்கள்.. எதிர்க்கட்சிகள் இவர்களின் சுயரூபத்தை எடுத்துச்சொல்லிய பின்பும் இவர்கள் டெசோவில் உறுதியாக இருக்கிறார்கள்.. :rolleyes: சிந்திக்க வேண்டியது..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.