Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை முஸ்லிம் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: ஹக்கீம் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hakeem-seithy-20120918-150.jpg

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை முஸ்லிம் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.[/size]

[size=4]13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.தற்போது அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம், தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.[/size]

[size=4]கிழக்கு மாகாணசபையில் சர்வகட்சி ஆட்சியை அமைக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பரிந்துரை செய்ததாகவும் இதற்கு ஏனைய எந்தத் தரப்பினரும் இணங்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாராளுமன்றத் தெரிவுக்குழு நடவடிக்கைகளின் போது முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்ளடக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.[/size]

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களின் நிலைமை குறித்து கருத்து வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]முஸ்லிம் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இடம்பெயர் மக்கள் மீள்குடியேற்றம் மற்றும் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு போன்ற விடயங்கள் குறித்து ரொபர்ட் ஓ பிளக்கிற்கு, அமைச்சர் ஹக்கீம் விளக்கமளித்துள்ளார்.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள ஜனனாயகத்தின் கலாச்சாரத்தில் கருணா, பிள்ளையான் கக்கீம் போன்ற வர்கள்தான் உருவாக்கப்பட முடியும்!

கிழக்கில் கக்கீமின் தோல்வி அமெரிக்காவில் இருக்கு பிரச்சனை கொடுத்திருக்கு போலிருக்கு. 15 முஸ்லீம் பிரதிநிதிகளில் 7 தான் கக்கீமிடம். கக்கீமின் நேர் எதிரிகளிடம் 7 இருக்கிறது. அரசியல் விளங்குவோர் கக்கீமீடம் இதற்கான ஒரு விளக்கத்தை எதிர்பார்ப்பார்கள். இது அவரின் கையாலாகாத்தனத்தை காட்டுவதால், ககீமுக்கு தமிழ் தலைமைகளை ஏற்கும் படி அழுத்தங்கள் ஆரம்பிக்கலாம்.

[size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களின் நிலைமை குறித்து கருத்து வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.[/size]

[size=4]இது சுத்தப்பொய் :( [/size]

கக்கீம் சொன்ன இந்தக் கருத்தை ஆமோதிப்பதற்கு Poet ஏன் இப்போது வருவதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு மீண்டும் மு.கா. தவறிழைப்பு; முஸ்லிம்களை எவரிடமும் மண்டியிட விடோம் என்கிறார் சம்பந்தன்

sampanthan23.jpg

மாகாணசபைகளுக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு மீளப்பெறுவதற்கான அங்கீகாரத்தை வழங்கியதன்மூலம் தமிழ் பேசும் மக்களுக்குப் பெரும் அநீதியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் இழைத்துவிட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று குற்றஞ்சாட்டினார்.

திவிநெகும சட்ட மூலத் திற்கு அங்கீகாரம் வழங்கி கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும்போதே மேற் கண்டவாறு குறிப்பிட்ட சம் பந்தன் மேலும் தெரிவித்தவை

கிழக்கு மாகாணசபையில் நண்பகலுக்கு முன்னர்வரை "திவிநெகும' சட்டமூலத்தை விமர்சித்துப் பேசிவந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண உறுப்பினர்கள் நண்பகலுக்குப் பின்னர் இதற்கு ஆதரவாகப் பேசத் துணிந்ததன் பின்னணி என்ன?

மாகாணசபையில் விவாதத்தை சில தினங்களுக்காவது ஒத்திவைக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் கேட்டபோதும் அவை கணக்கில்கூட எடுக்கப்படவில்லை. ஒரு பிரேரணையை ஒத்திவைக்கக்கூட அனுமதிபெற முடியாத மு.கா. எப்படி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கப் போகிறது?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவர்களை நம்பி வாக்களித்த மக்களை கைவிட்டாலும், நாங்கள் எமது முஸ்லிம் சகோதரர்களைக் கைவிடமாட்டோம்.

நாங்கள் எவரிடமும் விலைபோகமாட்டோம்; மண்டியிடமாட்டோம்; அடிபணியமாட்டோம். முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்காக பதவிகளுக்காக மண்டியிட்டாலும் உரிமைகளைப் பெறும் விடயத்தில் முஸ்லிம் மக்களை நாங்கள் எவரிடமும் மண்டியிடவிடமாட்டோம்.

முஸ்லிம் மக்களுக்காக நாங்கள் குரல் கொடுப்பதை முஸ்லிம் காங்கிரஸ் விமர்சித்தாலும், நாங்கள் முதுகெலும்புடன் இருந்து அந்த மக்களுக்காகப் பேசுவோம். முஸ்லிம் மக்களுடன் பேசுவதற்கு அவர்களுக்காகப் பேசுவதற்கு எமக்கு எவரினதும் அனுமதி தேவையில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது வழிமாறிப்போய்க்கொண்டிருக்கிறது. விரைவில் அவர்கள் சரியான பாதைக்கு வருவார்கள். இவ்வாறு குறிப்பிட்டார் சம்பந்தன் எம்.பி.

http://onlineuthayan.com/News_More.php?id=821471485404116306

நாங்கள் எவரிடமும் விலைபோகமாட்டோம்; மண்டியிடமாட்டோம்; அடிபணியமாட்டோம். முஸ்லிம் தலைவர்கள் சலுகைகளுக்காக பதவிகளுக்காக மண்டியிட்டாலும் உரிமைகளைப் பெறும் விடயத்தில் முஸ்லிம் மக்களை நாங்கள் எவரிடமும் மண்டியிடவிடமாட்டோம்.

இந்த நிலைமை கிழக்கில் ஏற்பட்டுவிட்டது. முஸ்லீம் காங்கிரசின் தலைமை நோர்வே போன்ற நாடுகளின் அறிவுரைகளை ஏற்க மறுத்து கிழக்கு தேர்தலில் கூட்டமைபுக்கு எதிராக பயணித்தது. தேர்தல் முடிந்தவுடன் இவற்றை மூ.கா தலைமையின் காயாளெயே சரி செய்ய வேண்டிய தேவை அரசுக்கு இருந்தது. இதனால் அவசரம் அவசரமாக கக்கீம் பிளேக்கை சந்திக்க அமெரிக்கா அனுப்பட்டார். அங்கே அவர் பிளேகை சந்திக்கும் போது அரசு கொடுத்த அட்டவணைப்படி நடந்து கொள்கிறாரா என்று கண்காணிக்க பீரிசு, அழகபெருமா, சாயன் வாஸ் போன்றோர் அருகில் அமரத்தப்பட்டிருந்தார்கள்.

சமூகத்தின் உரிமையை விற்கும் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றம்: அப்துல் மஜீத் face.jpg By General

2012-10-04 17:25:30

திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபையில் ஆதரவளித்ததன் மூலம் சமுதாயத்தை ஏமாற்றி, அரசியல் பிழைப்பு நடாத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் உண்மையான முகம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்

திவிநெகும சட்டமூலத்தை அமுல்படுத்தவதாயின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபைகளின் அனுமதியை நீதிமன்றம் கோரியமை மூலம் இதனால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது மிக தெளிவாகவே தெரிகிறது. எதிர்காலத்தில் இதனால் ஏற்படப் போகும் இழப்புக்களுக்காக மக்கள் நீதி மன்றத்தை நாடும்போது தீர்ப்பளிப்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவே மாகாண சபைகளின் அனுமதியை நீதிமன்றம் நாடியுள்ளது.

ஆனால் மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் இத் திட்டத்திற்கு கிழக்கு மாகாண சிறுப்பான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவோர் குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைக்குரல் என கூறிக்கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் ஆதரவளித்திருப்பது கவலை தருவதாக இருப்பினும். இது எம்மால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். காரணம் முஸ்லிம் காங்கிரஸ் மேல்மட்ட உறுப்பினர்களின் பதவிகள் மற்றும் வசதிகளை மட்டுமே பிரதானமான கொள்கையாகக் கொண்ட கட்சியாகும்.பதவிக்காக ஒட்டு மொத்த சமூகத்தையே விலை பேசி விற்றவர்களிடம் இத்தகைய செயல்களைத்தான் நாம் காண முடியும்.

இச்சட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் நகர அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் மட்டுமல்ல ஏன் பள்ளிவாயில்களும் கூட அரசால் சுவீகரிக்கப்படலாம். அப்போது அதற்கெதிராக நீதிமன்றம் சென்றால் அந்த வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும் நிலையே ஏற்படும். இத்தகைய பாரிய சதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் துணை போனதன் மூலம் தலைவர் எவ்வழியோ அவ்வழியை பின்பற்றி உறுப்பினர்களும் தம்பாட்டுக்கு சமூகத்தை ஏலம் போட்டு விட்டார்கள்.

கடந்த 12 வருடங்களாக முஸ்லிம் சமூகம் முஸ்லிம் காங்கிரஸால் பாதிப்புக்களையோ அடைந்து வருகிறது. முஸ்லிம் காங்கிரஸின் எத்தகைய தீர்மானங்களும் சமூகத்திற்கு நன்மை தராமல் ஒரு சில தனி நபர்களுக்கே நன்மையளிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. சமூகத்தின் எந்தவொரு உரிமையையும் பெற்றுத்தர முடியாத இக்கட்சி இப்போது உரிமைகளை விற்கும் கட்சியாக மாற்றம் பெற்றுள்ளது.

இதனை உணர்ந்தே நாம் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென கூறினோம். ஆனால் மக்கள் சிந்தனைகளை ஒதுக்கிவிட்டு ஏமாற்றுக்காரர்களின் பகட்டுகளுக்குப் பின்னால் போனதன் காரணமாக ஏற்பட்டுள்ள இவ்வாறான நிலைக்கு வாக்களித்த மக்களே பொறுப்புக் கூற வேண்டும்.

இனியும் இவர்களின் பின் சென்று ஏமாற வேண்டாம். உண்மை, நேர்மை என்பவற்றின் பின் நிற்கும் அரசியல்வாதிகளின் பின் செல்லுங்கள். அப்போது தான் இத்தகைய ஏமாற்று அரசியல்வாதிகளின் விரட்டியடிக்க முடியும் என்றார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=943

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இப்படி கத்துறானுகள்

ஆனா நாளைக்கு "ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான்"

எண்ட பாட்ட கேட்டதும் ஓடிப்போய் அதுக்கு தான் (மரத்துக்கு) கீறிப்போட்டு வருவானுகள்

எப்படி இருந்தாலும் அவனுகள் வாழுறானுகள் தானே

அரசாங்கம் இவனுக்களுக்கு நல்ல பரிசு கொடுக்க அல்லா உதவி செய்வானாக

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.