Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூடப்படாத ஈழ முகாங்கள் - தீபச்செல்வன்,

Featured Replies

சிங்கள அரசு ஈழமக்களுக்கு எதிரான யுத்தத்தை ஒரு விழாவைப்போல கொண்டாடியது. யுத்தம் பற்றிய அறிவிலிருந்து நகரங்களும் கிராமங்களும் வீழ்ந்ததிலிருந்து மக்கள் வகை தொகையாய் கொல்லப்பட்டதிலிருந்து எல்லாவற்றையும் பிரமாண்டமான விழாவாகவே தொடர்ந்து கொண்டாடியது. சிங்களப் பேரினவாத அரசின் ஆட்சியை இந்த உலகிற்கு நியாயப்படுத்தவும் ஈழத் தமிழனம் மீதான இனப்படுகொலையை நியாயப்படுத்தவும் மனிதாபிமான யுத்தம் என்று அறிவித்துக்கொண்டு மனிதாபிமானமற்ற வகையில் ஈழ மக்களை கொன்று அதை விழாவாக கொண்டாடியது. அப்படித்;தான் அண்மையில் மெனிக்பாம் முள்ளிவேலி முகாங்கள் மூடப்பட்டது என்ற அறிவிப்பையும் விடுத்திருக்கிறது சிங்கள அரசு.

இலங்கையில் வடக்கில் வவுனியாவில் இருக்கிறது மெனிக்பாம்முகாம். 2009 மே மாத்தில் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்த பொழுது வடக்கு எங்குமே பரவலாக முள்வேலி முகாங்கள் திறக்கப்பட்டன. யுத்தத்தின் இறுதியில் கைப்பற்றப்பட்ட சுமார் மூன்று லட்சம் மக்கள் அந்த முகாங்களில் அடைக்கப்பட்டார்கள். குறிப்பாக வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் இந்த முகாங்கள் அமைக்கப்பட்டன. இந்த முள்வேலி முகாங்களை சிங்கள அரசாங்கம் நலன்புரி கிராமங்கள் என்றே அழைத்தன. முழுக்க முழுக்க சித்திரவதையையும் அச்சுறுத்தல்களையும் நோக்கமாகக் கொண்டு கொலை செய்யக்கூடிய இந்த முகாங்களை சிங்கள அரசு அப்படித்தான் அடையாளப்படுத்தியது.

அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு முகாங்களுக்கும் சென்று அந்த முகாங்களில் உள்ள நண்பர்களைப் சந்தித்திருக்கிறேன். யாழ்ப்பாண முகாங்கள் சிங்கள இராணுவத்தின் உச்சமான கட்டுப்பாட்டில் இருந்தன. முகாங்களுக்கு உள்ளும் வெளியிலும் சிங்கள இராணுவங்கள் சனங்களை மிரட்டியபடி திரிந்து கொண்டிருந்தன. ஈழமக்கள் மெனிக்பாம் முகாங்களில் மட்டுமே அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரியப்பட்ட நிலையில் யாழ்ப்பாண முகாங்கள் பற்றிய தகவல்கள் பெரிதும் அறியப்படாதிருந்தன. என்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்த சில மாணவர்கள் யாழ்ப்பாண முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களை பார்கக கோப்பாய் என்ற இடத்தில் உள்ள முள்வேலி முகாமுக்குச் சென்ற பொழுது பெரும் அதிரச்சியாக இருந்தது. அளவில் சிறியதாக இருந்தாலும் கொடும் வடிவமைப்பை பிரமாண்டமாகக் கொண்டிருந்தது அந்த முள்வேலிமுகாம்.

ஒருமுகாமைப் பார்க்கும் பொழுது முள்வேலிகளும் துப்பாக்கிகளை ஏந்திய இராணுவங்களும் மட்டும் தெரிவதில்லை. அதற்குப் பின்னால் கொடும் சித்திரவதைகள் உள்ளன. தண்டனைகள் உள்ளன. அங்குள்ள நடைமுறைகளும் அணுகுமுறைகளும் கொடும் வாதையை நோக்கமாக கொண்டது. அந்த வாழ்க்கை பெரும் சித்திரவதை. யாழ்ப்பாணத்தில் அல்லாறை, கோப்பாய், கைதடி, நாவற்குழி, மிருசுவில், தெல்லிப்பழை, குருநகர் உட்பட பல இடங்களில் முள்வேலி முhகங்கள் அமைக்கப்பட்டிருந்தன

எனது அம்மாவும் சகோதரி ஒருவரும் வவுனியா மெனிக்பாம் முகாமிலேயே யுத்தத்தின் இறுதியில் கொண்டு செல்லப்பட்டார்கள். அப்பொழுது நான் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். அவர்களைப் பார்ப்பதற்காக அந்த முகாமுக்குச் சென்றிருந்தேன். யுத்த காலத்தில் இரண்டு ஆண்டுகள் காணாதிருந்த அவர்களை முள்வேலி முகாம் வந்த பின்னர் ஐந்து மாதங்களின் பின்னரே சென்று பார்க்க முடிந்தது. அவர்களை சந்திப்பதற்காக சுமார் இரண்டு மணிநேரம் கால்கடுக்க வரிசையில் நின்றேன். ஒலிபெருக்கிமூலம் அறிவித்து முகாமின் முன்பகுதிக்கு அம்மாவும் சகோதரியும் வந்தார்கள். யுத்தம் எனது அம்மாவை மிகவும் நோகடித்திருந்தது. மனதாலும் உடலாலும் மெலிந்து உக்கிய அம்மாவாக அவர் நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் முகாமிலிருந்து எல்லா மக்களும் உக்கிப் போயிருந்தார்கள். யுத்தத்தின் இறுதியில் அவர்களிடமிருந்த கொஞ்ச நலத்தையும் சிங்கள அரசின் முள்வேலி முகாங்கள் தின்றிருந்தன.

வவுனியாவில் செட்டிக்குளம், பூந்தோட்டம், காமினி வித்தியாலயம், வீரபுரம், நெளுக்குளம், தாண்டிக்குளம், ஓமந்தை போன்ற பலமுகாங்களை சிங்கள அரசு திறந்தது. வவுனியாவில் உள்ள மெனிக்பாம் முகாம் என்பது ஆறு முகாங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு முகாமும் சுமார் மூன்று தொடக்கம் நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு விரிந்திருந்தது. அருகருகமாக அந்த ஆறுமுகாங்களும் இருந்தன. அங்கிருந்த சில முகாங்களுக்கு உள்ளே சென்று சில நாட்கள் தங்கியிருந்தேன். இராணுவத்தினர் துப்பாக்கிகளோடும் பொல்லாங்கட்டைகளோடும் அங்கும் மிங்கும் மக்களை துரத்திக் கொண்டிருந்தார்கள். சில இடங்களில் மக்களை மந்தைகள் போல இருத்திவிட்டு மிரட்டிக் கொண்டிருந்தது இராணுவம். பெண்களும் குழந்தைகளும் மிகவும் பாதுகாப்பற்ற சூழலில் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்தார்கள்;. பல இளைஞர்கள் யுவதிகள் முகாங்களிலிருந்து இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டார்கள். சிலர் இறுதிவரை திரும்பவேயில்லை.

எனது நண்பி ஜெயந்தி சுகவீனம் காரணமாக முள்வேலி முகாமிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அவளுக்குத் துணையாக தாயையோ சகோதரியையோ கூட்டிச் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை. முகாமில் உள்ள ஒலிபெருக்கியில் நீண்ட நாட்களின் பின்னர் அவள் மரணமடைந்த செய்தியை அறிவித்தாக முகாம் அலுவலகத்தில் சொல்லப்பட்டது. இறுதியில் அவளது சடலத்தைகூட இராணுவத்தினர் கையளிக்கவில்லை. இப்படி பலர் கொண்டு செல்லப்படட்hர்கள். சிலர் கொல்லப்ட்டார்கள். சிலர் என்னவானார்கள் என்றே தெரியாமல் போனது. முகாங்களில் உள்ள மக்களில் விடுதலைப் புலிகள் உள்ளனரா? என்றும் போராடக்கூடிய இளைஞர்கள் யார் உள்ளனர் என்றும் தொடர்ந்தும் பீதியோடு தேடுதல்களிலும்; கைது நடவடிக்கைகளிலும் சிங்கள இராணுவம் ஈடுபட்டது. முள்ளிவாய்க்கால் யுத்த்தில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியவர்களை இப்படித்தான் அழித்தது.

யுத்தம் முடிந்து சில மாதங்களிலேயே முகாங்களில் உள்ள மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாக சொல்லி வந்தது அரசாங்கம். சிங்கள அரசு தமிழர் பகுதியில் தேர்தல் நடத்தும் பொழுது அதில் வெல்வதற்காக மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அதாவது நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வெளியே விட்டது. கடந்த மூன்றாண்டுகளாக மூன்று லட்சம் மக்களையும் வைத்து இப்படித்தான் சில்லறையாக அரசியல் செய்கிறது. விடுதலைக்காகவும் வாழ்வுக்காகவும் போராடிய ஈழமக்களை இப்படித்தான் சிங்கள அரசு தனது அரசியலுக்காக பலியாக்கியது.

2009ஆம் ஆண்டில் இறுதிப் பகுதியில் ஜனாதிபதித்தேர்தல் வந்தது. அப்பொழுது ராஜபக்சேவுக்கும் முன்னாள் இராணுவத்தளபதி பொன்சேகாவுக்கும் இடையில் கடும் போட்டி வந்தது. முகாங்கள் எல்லாம் திறந்தே இருக்கும் என்றும் யாரும் வெளியே போகலாம் யாரும் உள்ளே வரலாம் என்று அதிரடியாக அறிவித்தது ராஜபக்சே அரசு. ஆனால் வெறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியில் விடப்பட்டனர். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் முகாங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

முகாங்களிலிருந்து எங்களை எங்கள் சொந்த நிலத்தில் வாழ விடுங்கள் என்று தொடர்ந்து மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனையடுத்து மக்களை நிர்கதி நிலைக்கு தள்ளியிருக்கிறது சிங்கள அரசு. முகாங்களில் உள்ள மக்களின் காணிநிலங்களைப் பறிக்கிறது சிங்கள இராணுவம். முகாம்களில் இருந்த மக்கள் தெருவுக்கு அனுப்பட்டடிருக்கிறார்கள். வன்னிப் பிரதேசத்தில் பல கிராமங்களை சிங்கள இராணுவம் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

அண்மையில் மெனிக்பாம் முகாங்களை மூடியிருப்பதாக சிங்கள அரசு அறிவித்துள்ளது. இதனை ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டியிருக்கிறது. இந்தக் கொடும் முகாங்களை நேரடியாக வந்து பார்த்தவர் ஐ.நா செயலாளர் பான்கிமூன். சிங்கள அரசால் ஒழுங்குபடுத்தப்பட்ட முகாமை வந்து பார்த்த அவர் முள்வேலி முகாங்கள் சிறப்பாக உள்ளன என்று சிங்கள அரசிற்கு சான்றிதழ் அளித்தார். ஐக்கியநாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதது. அந்த தீர்மானத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் மெனிக்பாம்முகாமை இடமாற்றியருக்கிறது சிங்கள அரசு.

இப்பொழுது மெனிக்பாம் முகாங்களை இடமாற்றியிருக்கிறது சிங்கள அரசு. முள்வேலி முகாமைப்போலவே போர் நடந்த வன்னிப் பிரதேசத்தில் பல முகாங்களை திறக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் கேப்பாப்புலவு என்ற இடத்தில் மெனிக்பாம் மக்கள் கொண்டு செல்லப்பட்டு இருத்தப்பட்டிருக்கிறார்கள்.

கேப்பாபுலவில் காலம் காலமாக வாழ்ந்த மக்கள் வீதியில் விடப்பட்டு அந்த இடத்தில் மெனிக்பாம்முகாமை மாற்றியிருக்கிறது சிங்கள அரசு. அதாவது மெனிக்பாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறே துண்டு துண்டாக்கி பல இடங்களுக்கு முகாங்கள் இடமாற்றப்பட்டிருக்கின்றன. முள்வேலி முகாங்களில் அடைத்து வைக்கப்பட்ட ஈழமக்களை வன்னிப் பெருநிலமெங்கும் சிங்கள இராணுவத்தின் முள்வேலிகளுக்குள் அடைக்கபட்டிருக்கிறார்கள். முகாங்களில் மக்கள் வாழ்ந்த அதே கூடாரங்களை மறுபடியும் அமைத்து மறுவாழ்வு என்ற பெயரில் மீள்குடியேற்றியிருக்கிறது சிங்கள அரசு. வீடுகள், தெருக்கள், கிராமங்கள், தெருக்கள் என்ற முழு நிலத்திலும் துப்பாக்கி ஏந்திய இராணுவம் சுற்றி வளைத்திருக்கிறது. இன்றையே ஈழமே மூடப்படாத முள்வேலி முகாமாக மாறியிருக்கிறது. விடுதலைக்கும் உரிமைக்கும் தாய்நிலத்திற்கும் போராடிய ஈழமக்கள் அதற்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தீபச்செல்வன்,

http://www.globaltam...IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேப்பாபுலவில் காலம் காலமாக வாழ்ந்த மக்கள் வீதியில் விடப்பட்டு அந்த இடத்தில் மெனிக்பாம்முகாமை மாற்றியிருக்கிறது சிங்கள அரசு. அதாவது மெனிக்பாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறே துண்டு துண்டாக்கி பல இடங்களுக்கு முகாங்கள் இடமாற்றப்பட்டிருக்கின்றன. முள்வேலி முகாங்களில் அடைத்து வைக்கப்பட்ட ஈழமக்களை வன்னிப் பெருநிலமெங்கும் சிங்கள இராணுவத்தின் முள்வேலிகளுக்குள் அடைக்கபட்டிருக்கிறார்கள். முகாங்களில் மக்கள் வாழ்ந்த அதே கூடாரங்களை மறுபடியும் அமைத்து மறுவாழ்வு என்ற பெயரில் மீள்குடியேற்றியிருக்கிறது சிங்கள அரசு. வீடுகள், தெருக்கள், கிராமங்கள், தெருக்கள் என்ற முழு நிலத்திலும் துப்பாக்கி ஏந்திய இராணுவம் சுற்றி வளைத்திருக்கிறது. இன்றையே ஈழமே மூடப்படாத முள்வேலி முகாமாக மாறியிருக்கிறது. விடுதலைக்கும் உரிமைக்கும் தாய்நிலத்திற்கும் போராடிய ஈழமக்கள் அதற்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தீபச்செல்வன்,

http://www.globaltam...IN/article.aspx

இப்படியான அடக்கு முறைகள், ஆடாவடித்தனங்களே விடுதலைக்கான, விடுதலை வேட்கைக்கான தீக்குச்சிகள், வெடிமருந்துகள். இவர்கள் நாணின் பிடியில் இருந்தது பாய இருக்கும் எரி-தணல் அம்புகள். அவை வீடுதிரும்ப இருக்கும் தன் புலம் பெயர் உறவுகளுக்காயும், அவர்களில் ஆள்புல, படைப்புல, உதவிகளுகாயும், ஆவேச, ஆக்கிரோஷ கவிதைகள், கட்டுரைகள், கொடிகள், கொடிகம்பங்களுகாயும், அவர்களின் மாவீரர் தின, வேறுபல தினங்களுக்காயும் காத்திருகின்றன. அவர்களில் பொறுமைக்கும் எல்லை உண்டு...

அனாலும் தீபச்செல்வன், உங்களுடைய பல தலையங்கள்- உந்த ஆவேச கூட்டங்களை நோக்கித்தான்/கவரத்தான் இருப்பதுவும் கவலைக்குரியது..மூடபடாத ஈழ முகாம்கள்...எந்த "ஈழ" முகாம்...முதலும் ஒன்று எழுதியிருந்தீர்கள்..."இசைபிரியாவும், இன்னுமொருவரும் பேசினார்கள்/ஓலமிட்டார்கள்" என்பது போன்ற தலையங்கத்துடன்.. வாசி வாசி என்று வசித்து முடிய, கடைசி பத்தியில்..இவர்கள் கனவில் வந்தது என்று எழுதியிருந்தீர்கள்;....இங்கே யாழுக்கு வருவதர்ற்கு முன் எனது நண்பர் ஒருவர், தேடித்தேடி உங்களது "கட்டுரைகளை" முகநூலில் இணைப்பார்...அதற்காக நான் அவரது நட்பை துண்டிக்க வேண்டியது இல்லைதானே...

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.