Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பியம் ஒன்றிய தடை விதித்தால் அமைதி முயற்சிகளுக்கு ஆபத்து

Featured Replies

ஐரோப்பியம் ஒன்றிய தடை விதித்தால் அமைதி முயற்சிகளுக்கு கடுமையான ஆபத்து ஏற்படும்: பாலசிங்கம் எச்சரிக்கை

சர்வதேசத்தின் மேலதிக எந்த ஒரு தடை நடவடிக்கையும் அது ஏற்கனவே பலவீனமடைந்துள்ள அமைதி முயற்சிகளை மிகக் கடுமையாக எதிர்மறையாக பாதிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எச்சரித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கக் கூடும் என்ற செய்திகள் தொடர்பாக தமிழ்நெட் இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

சர்வதேச சமூகத்திடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தும் வகையிலான தென்னிலங்கை கடும்போக்காளர்களின் இந்த கோரிக்கையானது ஆயுத வழித்தீர்வை கைக்கொள்வதற்கான ஒரு முன்னோட்டமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை போரின் மூலம் தோற்கடிக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகிற தென்னிலங்கையின் கடும் போக்காளர்களுக்கு இந்தத் தடை நடவடிக்கைகள் உற்சாகமளிக்கக் கூடியதாக இருக்கும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் சர்வதேச சமூகம் வேறுபடுத்தி வைக்குமானால், தமிழீழ விடுதலைப் புலிகளும் தங்களது கடும்போக்கு பாணியைத் தொடர வேண்டிய நிலை ஏற்படும்.

எமது செயற்பாடுகளும் கொள்கைகளும் சர்வதேச சமூகத்தின் தலையீடுகளால் தீர்மானிக்கப்படுகிறவை அல்ல.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிழல் யுத்தமானது தற்போது ஒரு தணிவான யுத்தமாக மாற்றமடைந்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச சமூகத்தினது தடை நடவடிக்கையானது சந்தேகத்துக்குமிடமில்லாத வகையில் சிங்களக் கடும்போக்காளர்கள் தங்களது வன்முறைகளை அதிகரிக்கவே உதவும். அவர்கள் போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிடலாம் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர். அப்படியான ஒன்று நடைபெறுமேயானால் தமிழீழ விடுதலைப் புலிகளும் எதிர்ப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஐரோப்பிய ஒன்றியத் தடையானது அமைதியை உருவாக்காது. போருக்கான நிலைமைகளையே உருவாக்கும். சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு

ஜரோப்பிய ஒன்றியம் தடைவிதித்தால் தொடர்ந்து இலங்கை அரசுடனோ அல்லது, சர்வதேசத்துடனோ பேசுவதில் பிரயோசனம் இல்லை, ஒரு இனத்தின் பிரதி நிதிகளை தடை செய்துவிட்டு, அந்த இனத்திற்கான பாரபட்சமற்ற தீர்வினை எப்படி இவர்களினால் தரமுடியும், தடைவிதிக்கப்பட்டால், இவர்களின் அனுசரனையுடன் பேச்சை தொடர்வதை ஏற்கமுடியாது என விடுதலை புலிகள் அறிவிக்கவேண்டும், போர் கொடுமையானதுதான், ஆனால் எமது மக்களின் பாதுகாப்பை நாமே மேற்கொள்ள வேண்டியதுதான், ஈராக்கின் மீது இராணுவ தாக்குதலை மேற்கொள்ள வேண்டாம் என ஜ.நா கூறியபோது அமெரிக்கா என்னசெய்தது, அதனை மறுத்து சத்தியத்தின் பாதையில் நாம் போகிறோம் எம்பின்னால் வாருபவர்கள் வராலாம் என போரை தொடங்கியது, வல்லவன் வகுத்ததுதான் வாய்கால், விடுதலை புலிகளை பலப்படுத்துவது ஒன்றுதான் தமிழினத்திற்கான பாதுகாப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி உவங்கட சொல்லுப்படி ஆடத்தேழ்வையில்லை. நோர்வேயின் அமைதிமுயற்சிக்கு எம்மால் முயன்றதை மிகப்பொறுமையுடன் துணை கொடுத்தோம். முடிவு எங்களை பயங்கரவாதிகளாம். என்னோ உலகத்தையே நாங்கள் உலுக்கிற பயங்கரவாதத்தில் ஈடுபாடுடையவர்கள்மாதிரியல்ல

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான தடைச் சிக்கல்களைத் தவிர்த்து இது ஒரு ஒரு விடுதலைப் போராட்டம் என்பதை வெளிப்படுத்தவே தலைவர், இவ்வளவு சிங்கள அட்டூழியங்களையும் பொறுத்து அமைதி காத்தார். ஆனால் உலகம் தன் சுயநலத்திற்காக தடை செய்யுமிடத்து, தலைவரின் கைகளைப் பலப்படுத்த வேண்டிய தேவை எமக்கிருக்கின்றது. அதை தெளிவாகச் செய்வோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

தவறு இழைக்கும் சர்வதேசம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், தமது தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்ப்பதா என்பது குறித்து இருபத்தைந்து முக்கிய ஐரோப்பிய நாடுகளை அங்கத்துவமாகக் கொண்ட ஐரோப்பிய யூனியன் இன்று முடிவு ஒன்றை எடுக்கவிருப்பதாகத் தெரிகின்றது.

இலங்கையில் "அரச பயங்கரவாதத்துக்கு' எதிராகத் திமி றிக்கொண்டு நிற்கும் தமிழர் தரப்பை அச்சுறுத்தி மிரட்டி பய முறுத்தி பணிய வைப்பதற்கும், அடங்கச் செய்வதற்கும் ஐரோப் பிய ஒன்றியம் பயன்படுத்தக் கூடிய கடைசி ஆயுதம் இதுதான். இந்த மோசமான இறுதியான ஆயுதத்தை தமிழர் தரப்புக்கு எதிராகப் பிரயோகிக்க முன்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த நடவடிக்கையின் பெறுபேறுகளை ஒரு தடவை சீர்தூக்கிப் பார்ப்பது பொருத்தமானது; அவசியமானது.

இருபத்தியைந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இது வரை பிரிட்டன் மட்டுமே தனது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புலிகளைச் சேர்த்திருக்கிறது. கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் பிரிட்டனும் ஏனைய இருபத்தினான்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் புலிகளைத் தடை செய்யும் நிலைமை வருமானால் அதன் விளைவு என்னாகும்?

* தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடந்த இரண்டரை தசாப்த கால சரித்திரத்தை உற்று நோக்குபவர்கள் ஒரு விடயத்தை இலகுவாகப் புரிந்து கொள்வர். "அச்சுறுத்தி அடி பணிய வைத்தல்' என்ற தந்திரோபாயம் புலிகளின் தலைமையிடம் எந்தச் சமயத்திலுமே சரிப்பட்டு வராது என்பதுதான் அது. மிஞ்சினால் கெஞ்சுபவர்கள் அல்லர் புலிகள். மிஞ்சினால் அதனையும் மிஞ்சியே பழக்கப்பட்டவர்கள் அவர்கள். எனவே, ஐரோப்பிய ஒன்றியத் தடை என்ற அச்சுறுத்தல் அத்தடையை விதிக்கும் நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மாறான முரணான விளைவு களையே தரும்.

* சர்வதேச சமூகத்தின் பங்களிப்பில் நீதியான கண்காணிப்பில் சமாதான வழிமுறை மூலம் தங்களுக்கு (தமிழர்களுக்கு) நியாயம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலேயே புலிகள் இப் போதைய யுத்தநிறுத்தத்துக்கும், அமைதி முயற்சிகளுக்கும், சமாதானப் பேச்சுகளுக்கும் முன்வந்தனர்; யுத்தநிறுத்தத்தைத் தொடர்ந்து பேணி அமைதி முயற்சிகளுக்கு வாய்ப்பளிக்கின் றனர். ஆனால், இருபத்தியைந்து நாடுகளைக்கொண்ட ஐரோப் பிய ஒன்றியமும் புலிகளைத் தடை செய்தால், சர்வதேச சமூகத் தின் மீதான நம்பிக்கையே புலிகளுக்குத் தளர்ந்து தகர்ந்து போய்விடும். இனிமேலும் சர்வதேச சமூகத்தையோ, உல கையோ நம்பி இருப்பதில் பயனில்லை என்ற தீர்மானத்துக்கு வரும் புலிகள் மீண்டும் யுத்த வழிமுறையை தங்களின் இலக்கை அடைவதற்கான பாதையாக ஆயுத வழித் தடத்தை நாடும் நிலைமை உருவாகும். இது ஐரோப்பிய யூனியன் இவ்விடயத் தில் தனது நடவடிக்கை மூலம் எதிர்பார்த்த உத்தேச விளைவுக்கு மாறான பெறுபேறையே உருவாக்கும்.

* இத்தகைய தடை விதிப்பு, ஏற்கனவே தமிழர்களுக்கு எதிராக யுத்த முனைப்பில் தீவிரமாகியிருக்கும் தென்னிலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாத அரசுத் தலைமைக்கு மேலும் யுத்த உஷார் ஏற்றி, உசுப்பிவிடும் ஊக்குவிப்பாகவே அமையும் என்பது தெளிவு. பெரும்பான்மையினரான பேரின வாதிகளை தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைப் போரைத் தீவிரப்படுத்த வழிப்படுத்தும் சமிக்ஞையாகவே இது அமை யும்.

* அது மட்டுமல்ல. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் லட்சக் கணக்கில் குடியேறி, அந்தந்த நாடுகளின் விசுவாசம் மிக்க பிரஜை களாக வாழும் ஈழத் தமிழர்களின் விருப்பத்துக்கும், அபிலா ஷைகளுக்கும் மாறான நடவடிக்கையாகவும் இந்தத் தடை விதிப்பு அமையும். தமது நாட்டில் சுறுசுறுப்பாக உழைத்து நாட்டுக்கும் தமக்கும் பயனுள்ள வகையில் வாழும் பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்களின் நெஞ்சை நோகடிக்கும் விதத் தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த நடவடிக்கையை இவ் வளவு அவசரப்பட்டு எடுப்பதில் அர்த்தம் ஏதுமில்லை.

* மேலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்கனவே அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தியா போன் றவை விதித்த தடை போன்ற ஒன்றைப் புலிகளுக்கு விதித் தால் இந்த நாடுகள் இப்போது இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்புகளில் ஒன்றான புலிகளை நேரடியாகவோ அல்லது உத்தியோக ரீதியிலோ தொடர்புகொள்ள முடியாமல், இலங்கை நிலைவரம் குறித்து வெளியிலிருந்து தம்பாட்டில் அறிக்கை விடுவதுபோல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் எதிர்காலத்தில் வெளியில் இருந்து அறிக்கை வெளியிடுவதோடு அமைய வேண்டியது தான்.

* இலங்கை யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டிருக்கும் கண்காணிப்பாளர்கள் நோர்வே, சுவீடன், டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து போன்ற "நோர்ட்டிக்' நாடு களைச் சேர்ந்தவர்கள். ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீது தடை விதிக்குமானால் அந்த ஒன்றியத்தில் இடம்பெறும் சுவீ டன், டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளின் கண்காணிப் பாளர்கள் புலிகளோடு தொடர்புபட்டு, உறவாடி, கலந்து பேசி கண்காணிப்புப் பணியில் ஈடுபட முடியாத நிலைமையும் ஏற் படும்.

இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச தடைவிதிப்புத் திட்டம் தற்போதைய சமாதான முயற்சிகளை முற்றாக முடக்கி, நாட்டை முழு யுத்தத்துக்குள் மூழ்கடிக்கச் செய்யும் என்பது புலனாகின்றது.

இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களின் ஆத்மார்த்தமான ஆதரவு விடுதலைப் புலி களுக்கு இருக்கும் வரை இத்தகைய உத்தேசத் தடைகள் புலி களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக, மதியுரைஞர் பாலசிங்கம் சுட்டிக் காட்டுவதுபோல அமைதி முயற்சிகளில் எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தி, தீவிரப் போருக்கு வழிசமைப்பதா கவே அவை அமையும்.

சர்வதேச சமூகத்துக்கு இந்த உண்மை யதார்த்தம் சமர்ப்பணம்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

தடை இப்போதைக்கு வராதாம்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஐரோப் பிய ஒன்றியத் தடை முடிவு இன்று எட்டப் படும் என ஊடகங்களில் நேற்றுப் பரபரப் பான தகவல்கள், செய்திகள் வெளியானா லும்

அத்தகைய முடிவு இவ்வளவு விரைவாக எட்டப்படுவதற்கோ, நடைமுறைப் படுத்தப் படுவதற்கோ சாத்தியமே இல்லை என்று வேறு இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுக் கொழும் பில் அடித்துக் கூறின.

""ஐரோப்பிய ஒன்றியத்தில் 25 நாடுகள். அவை அனைத்தும் ஏகமனதாகவே இத்த கைய ஒரு முடிவை எடுக்க வேண்டும். அமெ ரிக்க அழுத்தத்துக்காகவோ அல்லது பிரிவு நிலைப்பாடுகளுக்காகவோ இவ்வளவு விரை வில் அத்தகைய இணக்கப்பாடு இந்த விட யத்தில் வந்துவிடும் என்று நம்புவதற்கு இடமில்லை.

""மேலும் இந்தக் கட்டத்தில் புலிகளைத் தடை செய்யும் திட்டத்துக்கு இரு நோர்ட்டிக் நாடுகள் ஆதரவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

""இந்தச் சூழ்நிலையில் புலிகளுக்கு எதி ரான தடை விதிப்புக்குப் பூர்வீக நடவடிக் கைகள் கூட இப்போதைக்குப் பூர்த்தியாகும் நிலைமை இல்லை.

""புலிகளுக்கு எதிராகத் தடை விதிக் கப்பட வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் சில தரப்புகளின் தந்திரோபாயப் பிரசாரமா கக் கூட இந்தத் தடை விதிப்புப் பற்றிய பர பரப்புச் செய்திகள் அமையலாம்.'' என்று அந்த இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைத் தடைசெய்ய ஐரோப்பிய ஒன்றியம் முஸ்தீபு

முடிவு இன்று எடுக்கப்படும் என

இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சேர்த்துக்கொள்ளவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராகிவருவதாக ஒன்றியத் தின் இராஜதந்திரிகள் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பான இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்றும் அந்த இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன என்று "ரொய்ட்டர்' செய்தி நிறு வனம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.

""இந்த விவகாரம் குறித்து அடிப்படைத் தீர்மானம் ஓரிரு நாள்களில் மேற்கொள்ளப் படும்'' என்று ஓர் இராஜதந்திரி தெரிவித் தார்.

ஆனால், இந்த முடிவு இன்று (வெள்ளிக் கிழமை) எடுக்கப்படும் என மற்றேர் இராஜ தந்திரி புதனன்று தெரிவித்தார் என "ரொய்ட் டர்' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட் டிருக்கின்றது.

இன்று அத்தகைய முடிவெடுக்கப்பட்டா லும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இருபத்தி யைந்து அங்கத்துவ நாடுகளினாலும் பிறிதொரு தினத்தில் அம்முடிவு அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட் டது.

ஐரோப்பிய ஒன்றியம் புலிகளைத் தடை செய்யும் பட்சத்தில் அந்தந்த நாடுகளிலுள்ள புலிகளின் அலுவலகங்கள், பிரசார மையங் கள் போன்றவை மூடப்படுவதோடு புலிகளின் சொத்துகளும் முடக்கப்படும் நிலைமை ஏற் படும்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 25 நாடு களில் ஏற்கனவே பிரிட்டன் மட்டும் தனது தனியான சட்டம் மூலம் புலிகள் இயக்கத் தைத் தனது நாட்டில் தடை செய்திருப்பது தெரிந்ததே.

இனி, ஐரோப்பிய ஒன்றியத் தடை வரு மானால் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, டென் மார்க், நெதர்லாந்து, சுவீடன், ஒஸ்ரியா போன்ற ஈழத் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் புலிகளின் நடவடிக்கைகள் முற்றாக முடக் கப்படும் சூழ்நிலை ஏற்படும் என்பது குறிப் பிடத்தக்கது.

சுவிற்ஸர்லாந்து, நோர்வே போன்றவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் வர வில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

-உதயன்

 

"புலிகளுக்கு எதிராகத் தடை விதிக் கப்பட வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் சில தரப்புகளின் தந்திரோபாயப் பிரசாரமா கக் கூட இந்தத் தடை விதிப்புப் பற்றிய பர பரப்புச் செய்திகள் அமையலாம்.'' என்று அந்த இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.  

Sajjad Karim MEP, Liberal Democrat spokesperson for Human Rights???

http://sangam.org/taraki/articles/2006/05-...rd.php?uid=1743 (from the feedback post)

உவருடைய வங்கிக்க கணக்குகளில் கிட்டடியிலை பெருந்தொகைகள் கையாளப்பட்டிருக்கோ, வேண்டிய உல்லாச சொத்துக்கள் என்ன என்பது பற்ற ஒரு விசாரணை நடத்தினால் நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் சிங்கள ஆக்கிரமிப்பு படைகளைகத் துரத்திய பின்பு, விடுதலைப்புலிகளின் பெயர் மாற்றத்தை செய்தால் தடைகளின் தாக்கம் இருக்குமா? பாகிஸ்தானின் லக்சா இ தொய்பா கூட தனது அமைப்பின் பெயரை மாற்றம் செய்து அமெரிக்காவின் தடையில் இருந்து தப்பியிருப்பதாக சொல்லப்படுகின்றதே!

இந்திய அணுகுண்டு ஆராச்சி செய்ய ஆரம்பித்த பொழுது கூட தடை வந்தது அதை விட அதிகமாக கேட்டு கேட்டு புளிச்சுப்போன இராஜதந்திர அறிக்கைகளும் வந்தது. இப்ப பெயர்மாற்றம் செய்தோ உறவாடீனம் மூதலீடு செய்யினம் எதிர்காலத்தின் முக்கிய பங்காளியாக ஏற்றுக் கொண்டிருக்கினம்.

அவைக்குத் தேவையானது எங்கடை கைக்கு வந்தா வருவினம் வழிக்கு, அது மட்டும்..... :roll:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். தங்களின் தேவைகளுக்காக விதிக்கப்படுவதே இத் தடைகள். ஆனால் இவற்றையும் மீறி தமிழீழம் மிளிர்நதால் தாமாகவே வருவினம். ஆனால் தமிழ்மக்கிளின் ஒற்றுமையிலும், சிறப்பான காய்நகர்த்தலிலும் தான் எம் வெற்றி தங்கியிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சொத்துக்கள், வங்கிக் கணக்குளை உறைநிலையாக்குக - ஐரோப்பிய நாடாளுமன்றம்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடடிவக்கை எடுக்குமாறு ஐரோப்பிய ஆணையகத்திடமும் அங்கத்துவ நாடாளுமன்றமிடமும் வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

19 சரத்துக்களைக் கொண்டமைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தீர்மானத்தின் 15வது சரத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் வசிக்கும் தமிழ் சமூகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமாக வரிவிதிப்பதை சகல வழிகளிலும் தடுத்து நிறுத்துமாறு அங்கத்துவ நாடுகளிடம் அழைப்பு விடுத்துள்ளது.

இதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் தொடர்புடைய வங்கிக் கணக்குகள், உடமைகள், நிறுவனங்கள், பொறுப்புக்கள் என்பனவற்றை உறைநிலையில் வைக்குமாறு அங்கத்துவ நாடுகளிடமும் ஐரோப்பிய ஆணையகத்திடமும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் 16வது சரத்து அழைப்பு விடு்த்துள்ளது.

அத்துடன் காலவரையறையின்றி தமிழீழ விடுதலைப் புலிகளை வரவேற்பதில்லை என்ற நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் பயங்கரவாதப் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளை இணைத்துக் கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக ஆலோசித்து வருவது குறித்தும் அங்கிகரிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தீர்மானத்தின் 17 சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்ற கூற்றை அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது. அரசியல் தன்மைத்துவத்திற்கும் வடக்கு கிழக்கில் மாற்று ஐனநாயகக் குரல்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடமளிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தீர்மானத்தின் 8வது சரத்து அழைப்பு விடுத்துள்ளது.

எனினும் சிறீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் ஐரோப்பிய ஒன்றிய தீர்மானம் கண்டித்துள்ளது. சமாதான முயற்சிகளைப் பாதிக்கின்ற தாக்குதல்களை இரு தரப்பினரும் நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் ஊடகங்கள், தமிழ் அமைப்புக்கள் மீதான ஒடுக்குமுறைகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மயில்வாகம் நிமலராஜன், தர்மரட்ணம் சிவராம், மற்றும் உதயன் செய்தித் தாளின் பணியார்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள் காத்திரமான முறையில் விசாரணை செய்யப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

பல வருடங்களாக பெருமெடுப்பிலான பாதுகாப்புகள் செலவீனங்கள், சிறீலங்காவின் சமூக பொருண்மிய உட்கட்டுமானங்களுக்கான முதலீடுகளை திசைதிருப்பி இருப்பதைக் கண்டிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

கடற்கோளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என ஐரோப்பிய ஒன்றியத்தினாலும் ஏனைய உதவி வழங்கும் நாடுகளாலும் அனுப்ப்பட்ட நிதி இன, மத, பாகுபாடின்றி அனைவரையும் சென்றடையவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

நிதி உதவிகைள பகிர்வதற்கான உடன்படிக்கை தொடர்ந்து அமுல்படுத்தப்படாது இருப்பதையிட்டு கவலை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் மிதிவெடிகளின் பயன்பாட்டை இருதரப்பினரும் நிறுத்துவதோடு ஒட்டாவா உடன்படிக்கையில் சிறீலங்கா அரசாங்கமும் ஜெனீவா உடன்படிக்கையின் பற்றுதிதி ஆவணத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் கையொப்பமிட வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் வலியுறுத்தியுள்ளது

தகவல்:பதிவு

EU bans LTTE as terrorists - Times

[TamilNet, May 20, 2006 06:53 GMT]

The European Union has agreed to blacklist the Liberation Tigers of Tamil Eelam (LTTE) as a terrorist group, despite warnings that this could lead to full-blown civil war in Sri Lanka, the Times newspaper reported Saturday. Quoting EU diplomats, the London daily said Britain and other countries persuaded Sweden, Denmark and Finland to overcome their reservations and that pressure from the United States was also a factor.

The 25 member states unanimously agreed to the ban on Thursday night after Britain and other countries persuaded Sweden, Denmark and Finland to overcome their reservations. The Scandinavian countries were showing solidarity with Norway, which has acted as peace broker in Sri Lanka and strongly believes that proscribing the Tamil Tigers as terrorists will be counter-productive, the Times reported.

There is now an agreement. The last reservations have been lifted, one EU diplomat told the paper.

The agreement in principle, which was cloaked in secrecy until now, will be formally adopted by EU ministers on May 29.

The Times felt the move is likely to bring about the restriction of diplomatic contacts with EU governments, a bar on fundraising by the group, a freeze on its assets and the prevention of Tamil Tiger members from travelling to the EU.

The Europe-wide ban was agreed two days after a request by the US. Washingtons request was a determining factor, a diplomat said.

The Times said that Washington and EU member states hope that proscribing the LTTE will help to bring it to the negotiating table.

However, Ulf Henricsson, the retired Swedish MajorGeneral leading the Sri Lankan Monitoring Mission, warned that it could backfire.

I m not sure the EU ban is coming at the right time, he told the Times.

Worst-case scenario might be that the LTTE thinks it is abandoned by everyone and there is no alternative to a full-scale guerrilla war. They target Colombo investors leave, tourists leave, rich people leave.

Senior LTTE officials have, for several months, been repeatedly warning international diplomats that unqualified international support has been encouraging hardline and ruthless policies in Colombo, including a decision to punish Tamil civilians for attacks on security forces by suspected Tamil Tigers.

The LTTEs top negotiator, responding to reports of the EU ban, reiterated Thursday that further proscriptions of the LTTE would encourage an escalation of violence and inexorably lead to war.

Anton Balasingham told TamilNet Thursday: Emboldened by international support, and especially by further proscriptions of the LTTE, the Sinhala hardline elements will undoubtedly take steps further to escalate the violence and precipitate a war in which they hope to destroy the LTTE. If this happens, the LTTE will be compelled to resist.

As the Times hit British newsstands, Sri Lanka s Army opened tank and artillery fire on LTTE defence lines in southern Jaffna. The LTTE replied with mortars.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.