Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

புதிய சர்ச்சை உருவாகிறது "வீடு' சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் நானே. என்னைக் கலந்தாலோசிக்காமல் கட்சியின் செயலாளர் நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் சின்னத்தை பயன்படுத்துவதற்கு முற்படுவதை தங்களுக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என ஆவரங்கால் சின்னத்துரை என அழைக்கப்படும் சே.சின்னத்துரை லண்டனிலிருந்து தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்காவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

22.2.2004 திகதியிட்ட மேற்படி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை தமிழரசுக் கட்சியின்

யாப்பு விதிகளுக்கு முரணாக செயலாளரான மாவை சேனாதிராசா நடந்திருப்பது குறித்து நீதிமன்றம் செல்லவுள்ளேன். எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை வீட்டு சின்னத்தை பாவிக்க அனுமதிக்க வேண்டாம்.

திருமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.தங்கத்துரையின் மறைவையடுத்த கட்சியின் பொருளாளராக இருந்த நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். மாவை சேனாதிராசா செயலாளராக தெரிவு செய்யப்பட்டு அதுபற்றி தங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் எஸ்.சின்னத்துரை தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழர் விடுதலைக்கூட்டணியை போல இலங்கை தமிழரசுக் கட்சி விவகாரமும் நீதிமன்றம் செல்லுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

இது குறித்து இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை. சேனாதிராஜா கருத்து தெரிவிக்கையில் ஆவரங்கால் சின்னத்துரை லண்டனில் நீண்டகாலம் தங்கியிருப்பதால் கட்சியின் புதிய தலைவராக பேராசிரியர் எஸ். சிற்றம்பலம் தெரிவு செய்யப்பட்டு இயங்கிவருகிறார். அவரின் கலந்தாலோசனைப்படி நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கிய சக்தியாக தெரிவு செய்யப்பட்டால் தமிழர் ஒற்றுமையை விரும்பாத குலைக்க விரும்பும் சக்திகள் வீ.ஆனந்தசங்கரிக்கு நெருக்கமான ஆவரங்கால் சின்னத்துரையை பயன்படுத்தி இலங்கை தமிழரசுக்கு கட்சிக்கு சட்டச் சிக்கல்களை கொடுக்கலாமென்றே கூறப்படுகிறது.

கடந்த செவ்வாயன்று நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்த பின்னர் ஆட்சேப நேரத்தில் ஈழமக்கள் ஜனநாயக்கக்கட்சி யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு மாவட்டங்களில் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்ற ரீதியில் க.சின்னத்துரை தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை சமர்ப்பித்து தமது ஆட்சேபத்தை தெரிவித்தது. 1981ஆம் ஆண்டில் முதலாம் இலக்க இலங்கை பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் கீழ் தெரிவத்தாட்சி அலுவலர்கள் சமர்ப்பிக்கப்படும் நியமனப் பத்திரங்களை ஏற்பதற்கு உரியவிதி முறைகள் பின்பற்றப்பட்டிருக்கின்றதெ

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்க புலிகள் கோரிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வவுனியா மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் எஸ்.எழிலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: ஏனைய அரசியற் கட்சிகளைப் போல அதைப் பெற்றுத் தருவோம். இதைப் பெற்றுத் தருவோம் என்று ஆசைவார்த்தை கூறி மோசம் செய்ய எங்களுக்கு தெரியாது. தமிழ் மக்களின் உரிமைக்காக எமது உயிரைக் கூடத் தியாகம் செய்ய நாம் தயங்க மாட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தேர்தலில் புலிகள் இயக்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெளிப்படையாக பேராதரவு வழங்குகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்வதன் மூலம்தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை பாராளுமன்றத்தில் தெரிவிக்க முடியும் என்பது எமது நம்பிக்கை ஆகும். அதே நேரம் இத்தேர்தல் எமது ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் சர்வதேசத்துக்கு வெளிப்படுத்திக் காட்ட அருமையான வாய்ப்பாக அமைகின்றது. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்து தமிழரின் ஐக்கியத்தை சர்வதேசத்துக்கு உணர்த்த வேண்டியது தமிழ்க் குடிமகனாக பிறந்த ஒவ்வொருவரதும் தார்மிக கடமையாகும்.

நன்றி - வீரகேசரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மீண்டும் இப்படியானசெய்திகளை

இணையுங்கள்

ஆவரங்கால் சின்னத்துரை என அழைக்கப்படும் சே.சின்னத்துரை லண்டனிலிருந்து ......

அப்படியா இருக்கட்டும் இருப்பேர் இருப்பேர் இனி நிம்மதியாக..... கெட்டிக்காரதமிழன்.

:x :twisted:

தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றால் தாம் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா?

எடேய் சின்னத்துரை

காகித வீட்டுக்காய்

லண்டனில் இருந்து

வெதும்புகிறாயே

நீலிக்கண்ணீர் வடிக்கிறாயே

உன் உறவுகள்

உற்ற வீடும்

தாங்கிகள் பதம் பாக்க

நடுத்தெருவில் நிற்பது

உனக்குத் தெரியவில்லையா....!

எடேய் சங்கரி

கொழும்பில் குளுகுளு அறையில்

செல்லடிச் சத்தம் கேட்காம

பதிங்கிக் கிடந்த நீ

தேர்தலில் ஆருக்காய் நிற்கிறாய்....!

மாமனா மச்சானா

இருக்கான் உனக்கு வாக்குப்போட...!

அவனைத்தானே

நீ வால்பிடிக்கும் சந்திரிக்கா

மேல்லோகம் அனுப்பி

ஒன்பது திவசம் கொண்டாடியாயிற்று...!

எடேய் காட்டிக் கொடுத்து

பிழைத்த தாடிக்காரக் குத்தியனே...!

அப்பாவிகளை பிடித்தும் கொடுத்திவிட்டு

அனுராதபுரம் போய்

பிணை எடுத்து விளம்பரம் தேடியவனே....!

சிறிதர் தியேட்டர் என்ன

உன் கொப்பர் வீட்டுச் சொத்தா...??!

கொஞ்சம் என்றாலும் சிந்தித்துப்பார்

நீ செய்யும் அநியாயங்கள்

உன் சொந்த உறவுகளுக்கு....!

இதுக்கு மேல என்னடா கேக்கிறிங்கள்

உள்ள தமிழன்ர கோவணமா கேக்கிறியள்...!

அது ஒண்டுதான் கிடக்கு

உள்ள மானம் காக்க

கும்பிட்டு நிக்கிறம்

அடேய்

அதையாவது விட்டுவிடுங்கோடா....!

இது ஒர் அடிபட்டு நொந்துபோய் கிடக்கும் அப்பாவி அகதித் தமிழனின் குரல்....!

:P :twisted: :roll: :idea:

நீங்கள் ஒளிஞ்சு நிண்டு குத்திற சாதியெண்டு இண்டைக்குத்தான் சொன்னியள்போலைகிடக்கு.. அந்தாள் தப்பி வந்து இருக்கவும் விடுறியளில்லை..

:) :P :D

  • தொடங்கியவர்

'வீட்டுக்கு" எதிரான ஆட்சேபனை நிராகரிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது, தமிழரசுக் கட்சியின் 'வீடு" சின்னத்தில் போட்டியிடுவதை தடை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழரசுக் கட்சியிலும் அதன் வீட்டுச் சின்னத்திலும் போட்டியிடுகின்றது.

வடக்கு, கிழக்கில் இதற்கான வேட்புமனுக்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்தனர்.

எனினும், இந்த வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த பின்னர், தமிழரசுக் கட்சியின் தலைவர் எனக் கூறி கே.சின்னத்துரை என்பவர் தேர்தல் ஆணையாளருக்கு கடந்த புதன்கிழமை கடிதமொன்றை லண்டனிலிருந்து அனுப்பியிருந்தார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தானே என்றும் தன்னிடம் உரிய முறையில் அனுமதி பெறப்படாது 'வீடு" சின்னத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்தப் பொதுத் தேர்தலில் பயன்படுத்த தடை விதிக்குமாறும் சின்னத்துரை இந்தக் கடிதம் மூலம் கோரியிருந்தார்.

எனினும், வேட்பு மனுத்தாக்கல் முடிவடைவதற்கு முன்பே இது பற்றிய ஆட்சேபனையைத் தெரிவிக்க வேண்டுமெனவும் இனி இது பற்றி எதுவும் செய்ய முடியாதெனவும் கூறி சின்னத்துரையின் கோரிக்கையை தேர்தல் ஆணையாளர் நேற்று நிராகரித்துள்ளார்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

பாதுகாப்பு வழங்க ஈ.பி.டி.பி கோரிக்கை

பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் போட்டிýயிடுவதனால் அக்கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வடக்கு கிழக்கு உட்பட பிற மாவட்டங்களுக்கும் சென்று வருவதற்கு அவர்களின் போக்குவரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்குமாறு இக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் மா அதிபர் இந்திரா டP சில்வாவிடம் கடிýத மூýலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரப் பணிகளில் இக்கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவும், விடுதலைப்புலிகளிடம் இருந்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதால் ஏ9 பாதைய10டாக போக்குவரவு செய்யவும் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்கவும் எனவும் அக் கடிýதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தினக்குரல்

இப்போது அவர் ஆவரங்கால் சின்னதுரையல்ல ஈஸ்ராகாம் சின்னதுரை அவர் லண்டன் பிரயiஐ :idea: இவர் எப்படி இந்த அறிக்கை விடுபார் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ ஆணந்தசங்கரியார் சொல்லியாக்கும் :twisted:

where is sethu.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றால்  தாம் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா?

:roll: :roll: :idea:

where is sethu.
யாரோ ஒரு தாய்க்குலத்தை விசாரித்தார் நேற்று.. அங்கு போயிருப்பார்..

:) :P :D

பாதுகாப்பு வழங்க ஈ.பி.டி.பி கோரிக்கை

பொதுத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் போட்டிýயிடுவதனால் அக்கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வடக்கு கிழக்கு உட்பட பிற மாவட்டங்களுக்கும் சென்று வருவதற்கு அவர்களின் போக்குவரவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்குமாறு இக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பொலிஸ் மா அதிபர் இந்திரா டP சில்வாவிடம் கடிýத மூýலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் சகல பகுதிகளிலும் தேர்தல் பிரசாரப் பணிகளில் இக்கட்சி உறுப்பினர்கள் ஈடுபடுவதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவும், விடுதலைப்புலிகளிடம் இருந்து எமது கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அச்சுறுத்தல் இருப்பதால் ஏ9 பாதைய10டாக போக்குவரவு செய்யவும் பாதுகாப்பு வழங்க நடவடிýக்கை எடுக்கவும் எனவும் அக் கடிýதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தினக்குரல்

Ntl;ghsh;fspd; ngah; gl;baYk;> Nghl;bapLk; khtl;lq;fSk; cq;fs; ghh;itf;F..

aho;; khtl;lk;

01. lf;s]; Njthde;jh

02. fhHj;jpNfR NtYk;kapYk; FNfe;jpud;

03. eluh[h kjduh[h

04. fdful;zk; kzpgy;ytuh[d;

05. rpd;dj;Jiu jtuhrh

06. fe;jrhkp IaH ghyeluh[h IaH

07. jpUehTf;fuR =jud;

08. rq;fug;gps;is rptjhrd;

09. Jiuuh[h gh];fud;

10. kNf];thp NtyhAjk;

11. jk;gpj;Jiu rptFkhud;

12. gRgjp rPtnuj;jpdk;

jpUNfhzkiy khtl;lk;

01. fhrpypq;fk; tpf;Nd];tud;

02. jq;fuhrh G];guhrh

03. Mj;kypq;fk; ukzp

04. Qhdg;gpufhrk; G+Nyhfuh[d;

05. ty;ypGuk; rpj;jpuNty;

06. NrtpaH fj;jhpd;

07. md;udp N[hnrg; Vg;gpufhk;

kl;lf;fsg;G khtl;lk;

01. moifah ,uh[khzpf;fk;

02. fe;ijah mUikypq;fk;

03. me;Jdd; fe;jrhkp

04. ghf;fpauhrh gh];fud;

05. Iahj;Jiu jl;rzh%Hj;jp

06. rhkpj;jk;gp rpwp];fe;juhrh

07. fe;ijah gj;kehjd;

08. rpe;jhj;Jiu guNk];tu%Hj;jp

mk;ghiw khtl;lk;

01. khHfz;L FzNrfuk; rq;fH

02. NtyhAjk; utPe;jpud;

03. eluhrh fpUiguhrh

04. ney;rd; Rrpy; vjphprpq;f

05. mG+gf;fH rfhg;Bd;

06. Jiuurh yhy;

07. fhspf;Fl;b rz;Kfehjd;

08. fSgz;lh Qhduj;d

09. yf;];kd; Fyrpwp jHkjhr

10. mypahH Kfkl; gpwjT];

td;dp khtl;lk;

01. me;Njhdpg;gps;is n[auh[h

02. rptd; rptFkhH

03. ,isajk;gp `hpre;jpuh

04. rthpahd; nghdte;J}H nyk;gl;

05. nrgkhiy jprtPurpq;fk;

06. FkhuFU rQ;rPt;

07. me;Njhdpg;gps;is fpwp];hp

08. Rgrpq;f Kjpahd;ryhNf Fkhurpq;f

09. Fkhurhkp ];ldp

nfhOk;G khtl;lk;

01. nwhgl; gr;Nrf;Nf ];hPgd;

02. Iahj;Jiu =uq;fjh];

03. rutzKj;J Nahfehjd;

04. rutzg;ngUkhs; Nahfuh[h

05. khHf;fz;L kNfe;jpuuh[h

06. ghz;bad; rz;Kfehjd;

07. fhHj;jpNfR jpy;iyak;gyk;

08. Jthd; Kfkl; ghW}f; m]P];

09. nghd;idah rptghjk;

10. N[hd; gj;kehafp

11. lhdpay; n[Ndhah

12. Nwha; lhdpay;

13. <.V.b. Gz;zpafhe;jp tPuNrd

14. Kj;J ,Usd; KUfd;

15. Nfhtpe;jrhkp Nahfehjd;

16. Nf.[p.b. fhkpdp Fzlhr

17. rjhrptk; uhk;FkhH

18. tpy;tuh[h n[aNte;jd;

19. jk;gpuh[h uhN[e;jpuuh[h

20. fhjH ghf;fPH nkhfkl; m]p];

21. Fy;nkhfkl; fkhy;Bd;

22. fe;jrhkp fiyr;nry;td;

23. fWg;igah cjar;re;jpud;

Njrpag;gl;bay;

01. gpiw#b ukzd;

02. `rd; Fj;J}]; cit];

03. fe;ijah rq;fud;

04. nry;tuhrh rpwPjud;

05. N[Ruh[h jhrd;.

eilKiwf;F rhj;jpakhd mZFKiwiaf; nfhz;L

kf;fs; Nritapy;...

Thanks ilampallar

  • தொடங்கியவர்

:roll: :roll: :idea:

இந்த தேர்தல்ல புலிகள் பகிரங்கமா கூட்டமைப்பை ஆதரிக்கிறாங்க. நியாயமான தேர்தல் நடந்து கூட்டமைப்பு ஏறக்குறைய முழு இடங்களையும் பிடிக்கலைன்னா இந்த கேள்வியை எல்லாரும் கேப்பாங்க. அப்பிடி நடந்துச்சுன்னா ஏகப்பிரதிநிதியா ஏத்துக்கமுடியாதுங்கிறது உண்மை தான். அதை புலிகள் ஏற்பாங்களா என்றது எனக்கு தெரியாது. இதைபத்தின கருத்தை மத்த யாழ் நண்பர்களும் சொன்னா நல்லது. எல்லா விதமான கருத்தையும் அறிஞ்சுக்கலாம்.

சிறுத்தை இலை குளைகல் சாப்பிடுவதுயில்லையே

தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றால் தாம் தமிழர்களின் ஏகபிரதிநிதிகள் இல்லை என்று ஒத்துக்கொள்வார்களா?

மேற்கால் சூரியன் உதிக்கட்டும் முதல் நாம் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறோம்...

:P :):D

அதுசரி சூரியன் உதிக்கிதாமா இலங்கையில் இப்ப.....

:D:D :P 8)

  • தொடங்கியவர்

sanakiyan.jpg

நன்றி - தினக்குரல்

மேற்கால் சூரியன் உதிக்கட்டும் முதல் நாம் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறோம்...

:P :):D

அதுசரி சூரியன் உதிக்கிதாமா இலங்கையில் இப்ப.....

:D:D :P 8)

நான் என்ன எழுதியிருந்தேன் என்பதை சரியாக புரிந்து கொண்டுதான் பதில் எழுதுகிறீர்களா?

இப்படியான முட்டாள்தனமான பதில்கள் வரும் என்பதனால்த்தான் அனேகமான கருத்துக்களுக்கு நான் பதில் எழுதுவதில்லை. உங்கள் பாசையில்சொல்வதென்றால்: சிந்திக்கவேண்டிய விடயங்களுக்கு கிட்னியை பாவிக்காமல் கொஞ்சம் மூளையையும் பாவியுங்க நைனா

  • தொடங்கியவர்

உங்க கேள்விக்கு நான் பதில் எழுதியிருந்தேன் கண்ணன்.

  • தொடங்கியவர்

புலிகள் பிரதேசத்தில் தேர்தல்

வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசுடனும், சம்பந்தப்பட்ட தரப்புடனும் பேசி, அடுத்த ஓரிரு நாட்களில் இது தொடர்பான முடிவை அறிவிப்பதாக, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ரொன்ட் பிய10று ஹொவ்டே விடுதலைப்புலிகளிடம் உறுதியளித்துள்ளார்.

கண்காணிப்புக் குழுவின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் நேற்றுச் சனிக்கிழமை முதல் தடவையாக கிளிநொச்சிக்குச் சென்ற ஜெனரல் பிய10று ஹொவ்டே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனைச் சந்தித்துப் பேசினார்.

முற்பகல் 11 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள அரசியல் நடுவப் பணியகத்தில் ஆரம்பமான இந்தச் சந்திப்பு நண்பகல் 12.30 மணிவரை நீடி த்தது.

இதன் போது போர் நிறுத்த உடன்பாட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை இதனை வெகுவாகப் பாதிக்கக் கூ டியது என்பதால் இதனை அமுல்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்தனர்.

இதைவிட விசேடமாக பொதுத் தேர்தலில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இம்முறை வாக்களிப்பது தொடர்பான நடைமுறை ஒழுங்கு குறித்து விடுதலைப்புலிகள் சில பிரேரணைகளை ஜெனரல் பிய10று ஹொவ்டேயிடம், சமர்ப்பித்தனர்.

அத்துடன், சரியான முறையில் தேர்தலில் மக்கள் வாக்களிக்க ஒழுங்குகளைச், செய்து கொடுக்க வேண்டி யதன் அவசியம் குறித்தும் தமிழ்ச்செல்வன் விளக்கமளித்தார்.

போர் நிறுத்த உடன்பாட்டில் இரானுவமும், விடுதலைப் புலிகளும் சம்பந்தப்பட்டுள்ளதால் கண்காணிப்புக் குழுவினரே சில நடைமுறைகளை ஒழுங்குபடுத்தி மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் புலிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்பாட்டுக்கு அமைய புலிகளின், கட்டுப்பாட்டுப் பகுதியில் வாக்களிப்பு நிலையங்களை அமைக்கவும் புலிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இவை தொடர்பாக புலிகள் சமர்ப்பித்த பிரேரணையுடன் அரச தரப்பினரையும் சம்பந்தப்பட்ட தரப்புகளையும் சந்தித்து, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அடுத்த ஓரிரு தினங்களில் பதில் தரப்படுமெனவும் ஜெனரல் பிய10று ஹொவ்டே தமிழ்ச்செல்வனுக்குத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கடந்த தேர்தல்களில் தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதி வாக்காளர்கள், இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டது போன்ற சம்பவங்கள் இம்முறை நடைபெறக் கூடாதெனவும் தமிழ்ச்செல்வன் கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளார்.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

LTTE proposes: Vanni access for foreign, local polls monitors

Polling booths to be sited in LTTE-held areas?

In an unprecedented move that may help resolve the dilemma of the fairness of elections in LTTE-controlled areas of the North-East region, the LTTE leadership has now proposed that polling stations be set up in Tiger-controlled territory and agreed to allow foreign and local election monitoring teams to monitor voting in these stations during the April 2 parliamentary election. According to informed sources in Kilinochchi, the Tiger leadership has proposed this as an alternative to the earlier plan by the Government to set up polling stations for some 260,000 voters in Tiger-held areas in the no-man's land between Government and LTTE frontlines.

Sources in Kilinochchi told the Sunday Observer that the Tiger high command had felt that since the no-man's land strip was yet dangerously strewn with landmines and other defences, voters would be at risk and suffer considerable nuisance if they were compelled to vote there. The proposal to have polling booths in LTTE areas has been transmitted to the Government and the Tigers are awaiting a response.

While polling stations will be allowed in Tiger-held territory, the LTTE will not allow any State security personnel, including police, to enter LTTE areas to provide security for these polling stations. However, the voting may be monitored by foreign and local polls monitors, these sources said.

..... Conti .....

இதைபற்றிய மேலதிக விபரங்களை சண்டே ஒப்சேவரில் (Sunday Observer) படிக்கலாம்.

http://www.sundayobserver.lk/2004/02/29/pol01.html

:roll: :? என்னகருத்தில் அப்படி எழுதியுள்ளீர்கள் கண்ணன்... சொல்லுங்கோ பாப்பம்

உந்த ஆங்கிலம் புரியல்லயப்பா...தமிழில போடுங்கோவன்....உது புரிஞ்சா ஏன் இங்க வாறம்...நேராப் போய் படிப்பமே செய்தி...! :D

முதலில புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்று சொல்லும் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொண்டு கருத்தாடுவது நல்லம்...! ஏற்கனவே 25 இயக்கங்கள் வளர்த்து தமிழீழம் கண்டது போல......சிந்திக்காம இருந்தியளோ...நல்லம்....! உதுக்கு மேல உங்களோட பறையிறதில வேலை இல்லை....! பட்டும் தெளியாத கேசுகள் போல.....நடக்காதேங்கோ....! :P

:P :twisted: :)

  • தொடங்கியவர்

உந்த ஆங்கிலம் புரியல்லயப்பா...தமிழில போடுங்கோவன்....உது புரிஞ்சா ஏன் இங்க வாறம்...நேராப் போய் படிப்பமே செய்தி...! :D

தமிழ்ல போட முயற்சிக்கிறேன், எல்லாவற்றையும் மொழிபெயர்க்க நேரம் போதவில்லை,

முதலில புலிகள் ஏகபிரதிநிதித்துவம் என்று சொல்லும் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொண்டு கருத்தாடுவது நல்லம்...! ஏற்கனவே 25 இயக்கங்கள் வளர்த்து தமிழீழம் கண்டது போல......சிந்திக்காம இருந்தியளோ...நல்லம்....! உதுக்கு மேல உங்களோட பறையிறதில வேலை இல்லை....! பட்டும் தெளியாத கேசுகள் போல.....நடக்காதேங்கோ....!  :P  

:P  :twisted:  :)

இந்த தேர்தல்ல புலிகள் பகிரங்கமா கூட்டமைப்பை ஆதரிக்கிறாங்க. நியாயமான தேர்தல் நடந்து கூட்டமைப்பு ஏறக்குறைய முழு இடங்களையும் பிடிக்கலைன்னா இந்த கேள்வியை எல்லாரும் கேப்பாங்க. அப்பிடி நடந்துச்சுன்னா ஏகப்பிரதிநிதியா ஏத்துக்கமுடியாதுங்கிறது உண்மை தான். அதை புலிகள் ஏற்பாங்களா என்றது எனக்கு தெரியாது. இதைபத்தின கருத்தை மத்த யாழ் நண்பர்களும் சொன்னா நல்லது. எல்லா விதமான கருத்தையும் அறிஞ்சுக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.