Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

எதுக்கும் சக்தி ரிவி நியூசையும் கேளுங்கோ.. பிபிஸி நியூசையும் கேளுங்கோ.. உந்த இணையத்தள செய்தியளையும் படியுங்கோ.. பிறகு கூட்டிக் கழிச்சு ஒரு முடிவுக்கு வாங்கோ..

லங்காருத்திலை 7 ஆம்திகதி நடந்த ஒரு உரையை மொழிபெயர்ப்புச்செய்து போட்டிருக்கிது.. 800-1000 பேருக்கு ஆற்றிய உரையெண்டு கிடக்குது.. வாசிச்சுப்பாருங்கோ..

மற்றது இண்டைக்கு வளமையை விட வித்தியாசமான றிப்போட் ஒண்டு வந்திருக்கிது.. அது எவ்வளவுதூரம் உண்மையெண்டது நாளைக்குத்தான் தெரியும்..

:idea: :?: :!:

  • Replies 2.2k
  • Views 133.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

Sri Lanka: Can peace be restored?

A breakaway Tamil Tiger commander in Sri Lanka, Colonel Karuna, has accused the rebel leadership of preparing for a resummption of hostilities following the country's April elections.

Colonel Karuna told the BBC that he believed this was the reason why he was asked to send 1,000 troops from the east to the north of Sri Lanka.

Sri Lanaka's fragile peace process is already in trouble because of a rift between the president and prime minister over how to negotiate with the Tamil Tigers.

What is your reaction to the split within the Tamil Tiger rebel movement? Tell us what you think.

புலிகள் இயக்கத்தில் ஏற்பட்ட அண்மைய பிரைச்சனைகளை நீங்கள் அறிவீர்கள்/ இந்த கருணா விடயம் சம்மந்தமான உங்கள் கருத்துக்களை வெளியிடுவதற்காக BBC செய்தி நிறுவனம் கருத்துகளம் (Talking Point) ஒன்றை ஆரம்பித்துள்ளது. அங்கே சென்று நீங்கள் உங்கள் கருத்துக்களை எழுதலாம். இந்த கருத்துக்கள் உலகின் பல இனமக்களால் பார்வையிடப்படும்.

உங்கள் கருத்தை எழுத இந்த முகவரிக்கு செல்லுங்கள்

http://news.bbc.co.uk/2/hi/talking_point/3497548.stm

யாராவது அங்கே கருத்துக்களை எழுதினீங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • தொடங்கியவர்

தமிழ் ஊடகங்களிற்கு கொழும்பில் வசிக்கும் ஒரு தமிழனின் தயவான வேண்டுகோள்.

புதன்கிழமை, 10 மார்ச் 2004, 21:10 ஈழம்

உங்கள் செய்தித் தளத்தைப் பார்வையிடும் வாசகர்களில் நானும் ஒருவன். அந்த வகையில் இக் கடிதத்தை உங்கள் இணையத்தில் பிரசுரிக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

கருணா எதற்காகத் தனது தலைமைப்பீடத்தை நாடவில்லை என்பதை அவர் இப்போது செய்து வரும் செயல்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இப்போது விடுதலைப்புலிகள் போருக்கு ஆயத்தமாகிறார்கள் என்ற செய்தியை வெளிநாட்டு தொலைக்காட்சிக்கு அறிவித்துள்ளார். இது அவர் உண்மையிலேயே மட்டு-அம்பாறை மக்களை தனது தேவைகளிற்காகப் பயன்படுத்துகிறார் என்பதை இது காட்டுகிறது.

அத்தோடு தமிழன ஒற்றுமைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோடு, பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் மீது துவேசம் காட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பிற மாவட்டத் தமிழர்கள் பற்றிய பல அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்தும் அங்கே பரப்பிவருகிறார்கள். இங்கிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையைத் தடுத்துள்ளார்கள். மட்டு-அம்பாறை மக்களை உணர்ச்சியேற்றிவிட்டு, அதில் அவர்கள் குளிர்காய்கிறார்கள் என்ற உண்மையை அந்த மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.

இப்படியான நிலையில், ஈழத்தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்கள் நிதானத்தைக் கடைப்பிடித்து, செய்திகளை ஆராய்ந்து பிரசுரிக்க வேண்டும் என்பதே எனதும் எனது நண்பர்களினதும் தயவான வேண்டுகோள். ஏனெனில் உங்கிருந்து எங்களுடன் கதைக்கின்ற உறவுகள், இங்கே நடைபெறாத பல சம்பவங்களைக் கூட உங்குள்ள வானொலிகள், பத்திரிகைகள் மூலம் அறிந்து அவை உண்மைச் சம்பவங்கள் போல எம்மிடம் சொல்கிறார்கள். கேட்கிறார்கள்.

தமிழினத்தில் பிரிவு ஏற்பட்டால் ஈழத் தமிழர்களிற்கு மாத்திரமல்ல ஆபத்து என்பதை மேற்படி தமிழ்ச் செய்தி நிறுவனங்கள் புரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்தி நிறுவனங்கள் சில இந்த உண்மையை உணர்ந்து செயற்பட வேண்டும். அரசாங்கத்துடன் சேர்ந்து திரியும் குழுக்களோ அல்லது வேறு எவருமோ இப்போதைய பிரிவு பற்றி வாய் திறக்காமல் இருப்பதற்கு இதுவே காரணம். ஏனென்றால் அவர்களின் வாழ்வும் விடுதலைப்புலிகளின் பலத்தில் தான் தங்கியிருக்கிறது. எனவே புலம்பெயர்ந்த எமது உறவுகள் ஒட்டுமொத்த தமிழினத்தின் தேவையையே இப்போது வலியுறுத்த வேண்டும்.

இங்கே கூட தமிழரை ஏளனப்பார்வை பார்க்கும் நிலை மீண்டும் தொடங்குகிறது. சிங்கள இனம் மட்டுமல்ல, இன்னொரு இனமும் சேர்ந்தே இப்படி எம்மை ஏளனமாகப் பார்க்கத் தொடங்குகிறது. எனவே தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதே இப்போது எமக்குத் தேவையானது என்பதை மனதில் வைத்து பத்திரிகா தர்மத்தை, நடுநிலைமையைக் காக்கவேண்டும் என்பதே எமது அவா.

இங்கேயுள்ள சிங்கள அல்லது ஆங்கில செய்திநிறுவனங்கள் தங்களிற்கு இடையேயான பேதங்களை எப்போதுமே தூக்கிப்பாhப்பதில்லை. சிங்களத் தேசியம் சார்ந்த கருத்துக்களையே அவர்கள் தமது வாசகர்களிடையே (எம் மீதும்) திணிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை அதுவே அவர்களது நடுநிலையான செயற்பாடு. தமிழர்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பதையும், தமிழர்கள் மீது இனவாதம் ஏற்படுத்தும் கருத்துக்களை வெளியிடுவதையும் இங்குள்ள ஆங்கில ஊடகங்கள் இப்போதும் செய்கின்றன. சிங்களத் தேசியத்திற்காகச் செயற்படுவதை அவை நடுநிலையாகவும் நியாயப்படுத்துகின்றன.

எனவே நீங்களும் தேவையின் நிமித்தமாவது, தமிழ்த்தேசியம் சார்ந்த செய்திகளையே முன்னிலைப்படுத்துங்கள். கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ்ப்பத்திரிகைகள், வானொலிகள் கடைப்பிடிக்கும் நிதானத்திற்கு மேலான நிதானத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்போது தான் ஈழத்தமிழினம் முன்னேற்றமடையும்.

அன்புடன்,சோ.தயாபரன்

நன்றி - புதினம்

உங்கள் கருத்துக்கள் ?

  • தொடங்கியவர்

தங்களது அணி புலிகளுடன் ஒரு நட்புரீதியிலான கூட்டணியை வைக்க தயாராக இருப்பதாக கருணா தெரிவித்துள்ளார். ஆனா தான் மீண்டும் பிரபாகரனின் தலைமையின் கீழ் செயல்பட போவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

நன்றி - Channel News Asia

முழு செய்தியையும் இங்கே படிக்கலாம்.

http://www.channelnewsasia.com/stories/afp...w/74807/1/.html

  • தொடங்கியவர்

மீண்டும் போருக்கு தயாராகின்றார்கள் என்ற கருணாவின் குற்றச்சாட்டை புலிகள் மறுத்துள்ளார்கள்.

நன்றி - RADIO AUSTRALIA NEWS

முழு செய்தியையும் இங்கே படிக்கலாம்.

http://www.abc.net.au/ra/newstories/RANews...ies_1063316.htm

  • தொடங்கியவர்

santhi.jpg

பதவி நீக்கம் செய்யப்பட்ட அடுத்த கணமே கருணா அம்மான் செய்த முதல் வேலை என்ன?

வன்னித் தலைமையால் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதிகள் கடல்மார்க்கமாக கிழக்கு கரையோரம் வந்து இறங்குவதை தடுப்பதற்காக, மாங்கேணிக்கு வடக்கே உள்ள பனிச்சங்கேணிக்கு போராளிகள் படையொன்றை அனுப்பி வைத்ததுதான் முதல் வேலையாம்.

பறுவதம் பாட்டி: உனக்கு யார் இதை சொன்னது?

சலீம் நானா: நேற்றைய ஆங்கில பத்திரிகையொன்று கிழக்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் முயற்சியில் பிரபாகரன் வெற்றி பெறுவாரா? என்று தலைப்பிட்டு, கட்டுரையொன்றை பிரசுரித்திருந்தது. அந்தக் கட்டுரையாளரே இதனைத் தெரிவித்திருக்கிறார்.

பண்டா ஐயா: அதுமட்டுமல்ல கிழக்கு மாவட்டத்தில் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்வருமாறு இலங்கை இராணுவத்துக்கு கருணா பலதடவைகள் அழைப்பு விடுத்திருந்தார் என்றும் அதற்கு இலங்கை ராணுவம் மறுத்துவிட்டதாகவும் அந்தகட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலிடத்தின் யோசனைக்கிணங்கவே, அங்குவர இராணுவத்தினர் மறுத்து விட்டனராம்.

கந்தர் அம்மான்: கேட்பதற்கு திகிலாக இருக்கிறது. அதிலுள்ளதை வடிவாக சொல்லுங்கோ.

சலீம் நானா: வெருகலுக்கு வட புலத்திலுள்ள மாவடிச்சேனை என்ற இடத்தில் பிரபாகரனின் விசுவாசியான தளபதி சொர்ணம் தலைமையில் ஒரு படை அணியும், தென் தமிழ் ஈழத்தின் தலைவர் கருணாவின் சகோதரன் ரெஜியின் தலைமையிலான படை அணியும் போர் முரசு கொட்டுகின்றன.

ரெஜி அணியினரின் கடும் எதிர்ப்புக்கு சொர்ணம் படை அணியினர் முகம் கொடுத்து வருகிறார்கள்.

கருணாவுக்கும் பிரபாகரனுக்குமிடையே நல்லுறவை உள்வாங்கும் முகமாக சமாதானப் பயணம் ஒன்றை மேற்கொண்டே நாம் வந்து கொண்டிருக்கிறோம் என்று சொர்ணம்,வானொலி மூலம் ரெஜிக்கு செய்தி அனுப்பினார். பல தடவைகள் படித்துப் படித்துச் சொன்னார். ஆயினும் வாகரையை நோக்கிய அவர்களது நகர்வு தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது.

பறுவதம் பாட்டி: கருணாவின் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு வன்னித் தலைமை கையாளும் ஒரு தந்திரம். ஒரு யுக்தி என்று கருணாவின் ஆட்கள் நினைத்திருப்பார்கள்.

சலீம் நானா: அப்படித்தான் நடந்திருக்கிறது. சொர்ணம் வருவதை ஞாயிறன்று அறிந்ததும் உடனடியாகவே கருணா தனது தம்பி ரெஜிக்கு சொர்ணத்தையும் அவரது ஆட்களையும் சுட்டுத்தள்ளுமாறு உத்தரவிட்டிருக்கிறார். ஆனாலும் சொர்ணம் நிலைமைகளை அறிந்து தனது படையினரை அழைத்துக் கொண்டு சில கிலோமீற்றர் தூரம் பின்னோக்கிச் சென்றுவிட்டார்.

பண்டா ஐயா: படித்ததில் ஒரு பகுதியை நான் சொல்லுகிறேன். மீண்டும் திங்கட்கிழமை, சொர்ணம் தோற்றினார். இந்த தடவை கருணாவின் விசுவாசியான சுதாகர், தங்கள் பயணம் பற்றிக் கருணாவுக்கு தகவல் சொன்னார். அவசரப்பட வேண்டாம்.

சற்றே பொறுத்திருங்கோ என்ற பதில்தான் கருணா தரப்பிலிருந்து கிடைத்தது.

பறுவதம் பாட்டி: கண்டமிச்சம் காத்திருப்பது தானாக்கும்

பண்டா ஐயா: கட்டுரையாளரும் அப்படித்தான் எழுதியிருக்கிறார்.

ஞாயிறு இரவு, கருணாவின் கரடியனாறு தளத்திலிருந்து சுமார் 200 புலிப் போராளிகள் ட்ராக்டர்கள் மூலம் வாகரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கிழக்குக்குள் ஊடுருவியுள்ள பிரபாவுக்கு விசுவாசமான போராளிகளுக்கும் கருணாவின் விசுவாசிகளுக்குமிடையே மறு நாள் யுத்தம் வெடிக்கப் போகிறது என்றுதான் பலரும் நினைத்தனர்.

சலீம் நானா: இதேவேளை, இலங்கை ராணுவத்துக்கு ஒரு தகவல் கிடைத்தது.

பண்டா ஐயா: வடக்கு போராளிகள், பல்வேறு மூலை முடுக்குகளாலும் கிழக்குக்குள் பெருமளவு ஊடுருவல் செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி பரவலாக பரவ ஆரம்பித்து விட்டது. அதனை அறிந்து கருணா தனது முகாமை, அதிக பாதுகாப்பு உள்ள தொப்பிக்கலவுக்கு மாற்றிவிட்டார் என்பதே ராணுவத்துக்கு கிடைத்த தகவலாகும்.

பறுவதம் பாட்டி: இந்த கட்டுரையாளரின்படி கருணா இப்பொழுது தொப்பிக்கல பகுதியில் நிலை கொண்டு தனது எதிர்கால யுத்திகளை வகுத்து வருகிறார்.

கந்தர் அம்மான்: நேரில் கண்டமாதிரி இந்த கட்டுரையாளர் எழுதியிருக்கிறார். யார் இந்த தகவல்களை இவருக்கு கொடுத்திருப்பார்கள்?

பறுவதம் பாட்டி: இலங்கை பேப்பர் பசங்கள் செய்திகளை ஜோடிப்பதில் கில்லாடிகள்.

இதோ பாருங்கோ திருகோணமலை மாவட்ட தளபதி பதுமன் கிளிநொச்சியிலிருந்து கொண்டு லண்டனிலுள்ள பிபிசி ரேடியோவுக்கு டெலிபோனில் முதல்நாள் இரவு பேட்டி கொடுக்கிறார். ஆனால் மறுநாள் அரச ரேடியோ ஒன்று பதுமன் கொல்லப்பட்டு விட்டதாக ராணுவத்தை மேற்கோள் காட்டி செய்தி ஒலிப்பரப்புகிறது.

இதனை கேட்டுவிட்டு சில பேப்பர்கள் பதுமன் கொல்லப்பட்டுவிட்டாரா? உயிருடன் இருக்கிறாரா? என்று தலையங்கம் இட்டு செய்திகளை பிரசுரித்திருக்கின்றன.

பதுமன் பல போராளிகளுடன் நின்று எடுத்த புகைப்படங்களையும் பிரசுரித்து பரபரப்பாக்கியிருக்கின்றன. வெவ்வேறு கு×ப்பை சேர்ந்த சிங்கள ஆங்கில பத்திரிகைகள், ஒரே மாதிரியான படங்களையும் செய்திகளையும் பதுமனை முன்வைத்து செய்திகளையும் பிரசுரித்துள்ளனர்

பறுவதம் பாட்டி: ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் போல தமிழ் ஈழம் கேட்டுப் போராடியவர்கள் இரண்டு பட்டால் தென்னிலங்கையாட்களுக்கு குஷிதானே!

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

"கிழக்கில் புலிகள் படுகொலை என பல்வேறு கட்டுக்கதைகள்' எந்த சடலத்தையும் காணவில்லை என்கிறார் கடற்படை பேச்சாளர்

""மட்டக்களப்பு கதிரவெளி பகுதியில் புலிகளின் படகு ஒன்று குண்டு தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தில் 20 கடற்புலிகள் பலியானதாக சில சிங்களப்பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இவ்வாறான தகவல்கள் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கின்றன என்று எமக்குத் தெரியாது. எமது அவதானிப்புக்களின்படி இவ்வாறான சம்பவமொன்று நடைபெற்றமைக்கான எந்தவித ஆதாரமும் இல்லை' இவையாவும் கட்டுக் கதைகளாகும்'' கடற்படை பேச்சாளர் கொமடோர் பெரேரா "கேசரி'க்குத் தெரிவித்தார்.

பத்திரிகைச் செய்தியை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த கடற்படையினர் தேடுதல்களை மேற்கொண்டனர். எனினும் ஒரு சடலம் கூட கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

கிழக்கு சம்பவங்கள் தொடர்பாக முன்பின் முரணாக சில ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் தொடர்பாக கடற்படை கொமடோர் பெரேராவிடம்வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில்;

கிழக்கில் புலிகளுக்கிடையிலான மோதலில் பெரும் எண்ணிக்கையானோர் பலியானதாக பத்திரிகைகள் சில அடுத்தடுத்து பிரசுரித்து வரும் செய்திகள் தொடர்பாக தாங்கள் இராணுவதரப்பினருடன் ஆராய்ந்ததாகவும் ஆனால் அதற்கான சான்றுகளையோ, சாத்தியக் கூறுகளையோ தங்களால் காண முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் கிழக்கு நிலைமைகள் குறித்து யுத்த நிறுத்தக்கண்காணிப்புக்குழு

  • தொடங்கியவர்

தேர்தலின்பின் போரை தொடங்கும் நோக்கம் புலிகளுக்கு இல்லை கரிகாலன்

பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் போரை தொடங்கும் நோக்கம் விடுதலைப் புலிகளிடம் இல்லை. கருணா என்ற தனிநபரின் பொய்ப் பிரசாரங்களை நம்பி மக்கள் குழப்பமடையவேண்டிய அவசியம் இல்லை என விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான சி.கரிகாலன் தொலைபேசி மூலம் நேற்று கேசரிக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். கருணா மன்னிப்பு கோரிவந்தால் அவரது வாழ்க்கைக்கான உத்தரவாதம் வழங்கி அவரை வெளிநாடொன்றில் தஞ்சமடைய வைப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய தலைவர் பிரபாகரன் மேற்கொள்வார் எனவும் அவர் கூறினார். கேசரிக்கு வழங்கிய அந்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது;

கேள்வி: தேர்தல் முடிந்த பின்னர் போருக்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்ததாகவும் அதனாலேயேதான் பிரிந்து சென்றதாகவும் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருணா கூறியுள்ளாரே ?

பதில்: அப்பட்டமான பொய்.போராளிகளையும் மக்களையும் திசை திருப்புவதற்காகவே கருணா அவ்வாறு கூறியிருக்கவேண்டும். அத்துடன் தனது தவறுகளை மூடி மறைப்பதற்காக கருணா அவ்வப்போது பொய்களை கூறிவருகின்றார். கிழக்கில் இருக்கின்ற போராளிகளும் மக்களும் அதனை நம்ப வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்.தேர்தல

  • தொடங்கியவர்

ஊடகங்கள் பொறுப்பான தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் - வடகிழக்கு கல்விமான்கள் அமைப்பு

சிறீலங்கா அரச ஊடகங்களும் ஏனைய ஊடகங்களும் பொறுப்பான முறையில் நடந்து கொள்வதோடு, தற்போது நின்று போயுள்ள சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படுவதற்கு ஏதுவாக பொறுப்பான வகையில் நடந்து கொள்ள வேண்டுமென வடகிழக்கு கல்விமான்கள் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக, சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; திருகோணமலை மாவட்டம் தொடர்பாக வெளியிட்ட பொய்யான செய்திகள் அமைதியான சு10ழ்நிலையில் இருக்கும் இனங்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் முயற்சியே எனவும் மேற்படி வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கேணல் பதுமன் கொல்லப்பட்டதாக நேற்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதே போன்று இன்று திருகோணமலையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டாகவும் செய்தி வெளியிட்டிருந்தது.

மேற்படி இரு செய்திகளுமே பொய்யானவை எனச் சுட்டிக்காட்டிய கல்விமான்கள் அமைப்பு சிறீலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் திருக்கோணமலை மாவட்டத்தில் பதட்டத்தையும், வன்முறையையும் தோற்றுவிக்கவே இவ்வாறான பொய்ச் செய்திகளை வெளியிடுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் 900,000 மேற்பட்ட தமிழர்களின் ஆதரவிலேயே புலிகள் இயக்கம் இயங்குகிறது எனவும், அந்த ஆதரவை இல்லாது செய்யும் தேவையே தற்போதுள்ளது எனவும் சிங்கள ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழர்கள் மத்தியில் பிரதேசவாதக் பிரிவினை ஏற்படும் பட்சத்தில் இவ்வாறான நிலை சாத்தியமாகும் என அது ஹேஸ்யம் தெரிவித்திருக்கிறது. எனினும் சிறீலங்கா அரசு இவ்வாறான முயற்சிகளில் புலம்பெயர்ந்த நாடுகளில் ஈடுபட முயற்சிக்கும் என கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழர்களின் ஊடகங்கள் இந்த விடயத்தில் அவதானமாக இருப்பது இன்றியமையாததொன்று என்று அவர் மேலும் அவர் தெரிவித்தார்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

cartoonl.jpg

Thanx: Daily Mirror

  • தொடங்கியவர்

புலிகள் இயக்கதில் ஏற்பட்ட பிரிவுக்கு பின்னால் இந்திய உளவு அமைப்பு இருப்பதாக இலங்கையின் உள்ளூர் பத்திரிகைகை செய்தி வெளியிட்டிருந்தன, இதை கருணா தரப்பு மறுத்துள்ளது. வெளியார் யாரும் இதில் சம்மந்தப்படவில்லை என்று கருணாவின் பேச்சாளர் AFP செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

நன்றி - Khaleej Times

முழு செய்தியையும் இங்கே படிக்கலாம்.

http://www.khaleejtimes.com/DisplayArticle...on=subcontinent

கள்ளம் செய்தவன் யார்த்தான் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான்...அப்படி ஒப்புக்கொண்டால் ஏந்தான் சிறையும் நீதிமன்றமும் இருக்கு....!

இல்ல உந்தக் கருணாவின்ர செய்தி எங்கை இருந்தெல்லாம் இங்க வருகுது...உது ஆற்ர தளமோ ஆரறிவார்....மலேசியாவிலதானே சொந்த வீடு வாக்கி இருக்காராம் தளபதி....ஏன் கொக்கட்டிச்சோலையில பெரிய பங்களா கட்டி இருக்கலாமே....அபிவிருத்தியாவத

அடபாவி இவரை இவ்வளவுகாலம் உளவறியாமல் என்னதான் செய்தீர்கள் எந்தகாரணம் கொண்டும் இவருக்கு பொதுமன்னிப்பு கிடைக்காது எனதெரிந்து கொண்டார். இவருக்கு மேலேசொன்னது உண்மை என்றால் மன்னிப்பே கொடுக்க கூடாது காரணங்கள் பல..... :twisted:

karuna_dis.jpgkaruna_dis.jpgkaruna_dis.jpgkaruna_dis.jpgkaruna_dis.jpg

7 ஆம் திகதி போட்ட ஈமெயிலுக்கு அதுகும் slow மெயிலிலை 10 ஆம் திகதிதான் பதில் வந்திருக்குது.. அதுக்கு என்ன பதிலோ..? பொறுத்திருந்துதான் பார்க்கவேணும்.

:) :P :D

மட்டு-அம்பாறையில் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்துடன் கருணா முரண்பட்டுள்ளதன் காரணமாக,

இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முன்னெடுத்துவரும் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு பகுதியில் கடமையாற்றி வந்த பிரதம கண்காணிப்பு அதிகாரி பேர் ரொஸன்டல் இது குறித்துக் கருத்துக் கூறுகையில்,

தாம் கருனாவின் ஆளுகைக்கு உட்பட்ட

பகுதிகளில், கண்காணிப்பு நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும், தம்மோடு புலிகள் தரப்பிலிருந்தும், அரச தரப்பில் இருந்தும், தலா இருவரைக் கொண்ட சர்வதேச கண்காணிப்பு அதிகாரியின் கீழான 5 உறுப்பினர்களைக்

கொண்ட உள்ளுர் கண்காணிப்பு குழுவினரும்

தமது நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் மட்டக்களப்பு அம்பாறை தவிர்ந்த

ஏனைய பகுதிகளில், தமது கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் தெரிவித்த

மேற்படி அதிகாரி, அண்மையில் கிழக்குப் பகுதியில் புலிகளிற்கிடையே போர் மூண்டதாக

ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி, வவுணதீவில், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிரேஷ்ட இராணுவத் தளபதிகள் அடங்கிய குழுவினர்,

போர் நிறுத்த கண்காணிப்புக் குழு அதிகாரிகளின் முன்னிலையில், கருனாவை, சந்திப்பதற்கு

ஏற்பாடு செய்யப்பட்டபோதும், கருணா அச்சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும்

தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு பல்கலைக்கழக சமுhகம் என்ற பெயரில் அது தாங்களில்லை என இன்னொரு அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

கிழக்கு பல்கலைக்கழக சமுhகம் என்ற பெயரில் அது தாங்களில்லை என இன்னொரு அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
நேரடியாக பதிலளிக்க முடியாதவர்கள்தான் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் அறிக்கை விடுவார்கள்.. அது சார்பாக இருந்தாலென்ன எதிராக இருந்தாலென்ன..?

:) :P :D

குடிச்சவனிற்குத்தானே ருசி தெரியும்

நேரடியாக பதிலளிக்க முடியாதவர்கள்தான் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் அறிக்கை விடுவார்கள்.. அது சார்பாக இருந்தாலென்ன எதிராக இருந்தாலென்ன..?

:) :P :D

  • தொடங்கியவர்

புலிகளின் உட் பிரச்சனையைப் பயன்படுத்தி குறுகிய அரசியல் ஆதாயம் தேட முயலக் கூடாது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையைப் பயன்படுத்தி, தென்னிலங்கை அரசியலாளர்கள் குறுகிய அரசியல் ஆதாயம் தேட முயலக்கூடாது என ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போது, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர் பேராசிரியர் ஐp.எல்.பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயகத்தில் தோன்றியிருக்கும் தற்போதைய பிரச்சினை, அவர்களது உள்முரண்பாடு எனவும், அதனை அவர்களே தீர்த்துக்கொள்வர் என்றும் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், தென்னிலங்கை அரசியல் கட்சிகள் இதனைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனையக்கூடாது எனவும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் தற்போது தோன்றியுள்ள முரண்பாட்டைப் பயன்படுத்தி, அவர்களை அழித்துவிட வேண்டும் என்று Nஐ.வி.பி.யின் தலைவர் சோமவன்ச தெரிவித்துள்ளதை இந்த மாநாட்டில் சுட்டிக்காட்டிய அமைச்சர் பீரிஸ், ஆனாலும், அதேநேரம் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடாத்தப்போவதாக ஐனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளமையானது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நிலவும் குழப்பமான நிலைப்பாட்டையே எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.

ஐனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா, இப்போது ஒரு நாட்டின் தலைவி என்ற வகையிலல்லாமல், கட்சித் தலைவியாகவே செயற்பட்டுவருகிறார் எனவும் இந்த மாநாட்டில் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

நன்றி - புதினம்

  • தொடங்கியவர்

sanakeyan.jpg

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

'வட, கிழக்கு மாநில ஒருமைப்பாடு" ஒருபோதும் சிதையக்கூýடாது!

வன்முறைக் கலாசாரத்திலிருந்து நாட்டை விடுவிக்க முடிýயும் என்ற நம்பிக்கை, படுபயங்கரமாகச் சிதறடிýக்கப்படுகின்றது. நாட்டை சமாதானப் பாதையிலும், அபிவிருத்திப் பாதையிலும் செலுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவுமே தேங்கிப் போயுள்ளன.

பாராளுமன்றத்திலே அதிகாரத்தைப் பெறுவதற்கான போட்டிýயில் இறங்கியுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளும், தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வைக் காணும் முயற்சியில் இறங்கி 'கவிண்டு கொட்டிýண்டு போயுள்ள நிலைமையிலே" பேரினவாத அரசியல் கூýச்சல்கள் தாறுமாறாக வெளிப்படுகின்றன!

ஜனநாயக ரீதியாக இலங்கையில், இதுவரைகாலமாகத் தொடர்ந்த பெரும்பான்மைக் கட்சியாட்சி, பெரும்பான்மையின ஆட்சியாகவே இருந்து வந்துள்ளது. ஏறத்தாழ, இலங்கையில் அரை நூற்றாண்டு காலமாக நடந்தேறிய ஆட்சியில், சிறுபான்மையினங்களின் அடிýப்படை உரிமைகள் முதல் மனித உரிமைகள் யாவற்றுக்கும் மேலாக வாழும் உரிமைகளையே கொள்ளையடிýத்த கதை இன்னும் முடிýயவில்லை.

ஆயுதப் போராட்டம் யுத்தமாகித் தொடர்ந்த அழிவுப் பாதையில் இருந்து நாட்டை மீட்ட ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம், சமாதானம், பேச்சுவார்த்தைகள் என்ற படிý உருவாக்கிய சர்வதேச வலைப்பின்னல் இப்பொழுது அப்படிýயே 'பிறந்த மேனியோடு" பெருமூýச்சு விட்டபடிý கிடக்கின்றது.

இரண்டு வருடங்களாக ஆரவாரங்களுடன் அரங்கேற்றப்பட்ட சகல சமாதான முயற்சிகளும், இனிமேல் எந்தப் பாதையில் காலடிý எடுத்து வைக்கப் போகின்றன? விடுதலைப் புலிகளுடன் சர்வதேச மட்டத்திலே ஓடிýயோடிý நடத்திய சமாதானப் பேச்சுகள், இடைக்கால நிர்வாகக் கட்டமைப்புத் தேடல் வரைதான் நகர்ந்தாலும், யுத்த நிறுத்தம் என்ற ஒன்றைத்தான் உருப்படிýயாக வெளிப்படுத்தின.

புரிந்துணர்வு உடன்படிýக்கை, வெறும் 'கடதாசியளவிலான ஒரு ஆவணமாகத் தான்" உள்ளது. ஜனாதிபதியும், எதிரணியினர், இனவாதச் சக்திகளின் ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகளின் மத்தியில் வெளிப்படுத்திய, எதிர்ப்பலைகள் ஒன்று திரண்டு உருவாகியுள்ள பொதுத் தேர்தல், தேசிய அரசியல் வன்முறைக் கலாசாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கின்றது.

முரண்பாடுகள் சகல கோணங்களிலும் ஆழமாகிக் கொண்டிýருக்கின்றமை தேர்தல் பிரசாரங்கள் மூýலமாக மட்டுமல்ல, வன்முறைகளைத் தூண்டிýவிடும் சுயநல அரசியல் சக்திகளின் நடைமுறைகள் மூýலமாகவும்தான் வெளிப்படுகின்றது.

சாதாரண மக்களைப் பொறுத்த வரையிலும், நாட்டிýன் எதிர்காலத்தைப் பொறுத்தவரையிலும் நாடு எந்தத் திசையில் செல்லப் போகின்றது என்பதை எவருமே அனுமானிக்க முடிýயாதுள்ளது. எத்தனை கட்சிகளும், சுயேச்சைகள் என்ற தற்குறிகளும் இந்தத் தேர்தலில் குதித்திருந்தாலும், இரு பிரதான கட்சிகளின் கூýட்டமைப்புத்தான் ஆட்சியை அமைக்கப் போகின்றது.

இப்பொழுது மக்களின் முன்னால் ஒரு பாரிய பொறுப்பு விரிந்துள்ளது. விரும்பியோ, விரும்பாமலோ மக்கள் இந்த இரு பிரதான கட்சிகளுக்கும் வாக்காளிக்காவிட்டாலும் கூýட, இந்தக் கட்சிகளுக்குத் துணைபோகும் கட்சிகளிற்கு வாக்களிப்பது நடைபெறப் போகின்றது. சிறிய கட்சிகளுக்கோ, சுயேச்சை என்ற தற்குறிகளுக்கோ, புதிய கட்சிகளுக்கோ வாக்களிப்பது வாக்குகளை விரயம் செய்யும் விடயமாகத் தான் போய் முடிýயும்.

ஒன்றுபட்ட வட, கிழக்குத் தமிழ் மாநிலத்தை உறுதிப்படுத்தும் இலக்குகளுடன் தான் தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்களின் தேசிய அபிலாiர்களாக இதுவரை வெளிப்படுத்தப்பட்ட விடயங்களை எல்லாம் ஜீரணிக்க முடிýயாத தென்னிலங்கைக் கட்சிகள், இந்தக் கூýட்டமைப்பையே சிதைப்பதற்கு எதையுமே செய்யத் தயங்காத நிலைமைதான் இப்பொழுது வெளிப்படுகின்றது.

சுருங்கக் கூýறின், இப்பொழுது யதார்த்தமாகியுள்ள வட, கிழக்கு இணைப்பு என்ற ஒருமைப்பாடு, கடந்த கால ஆயுதப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்டதுதான் என்பதை எவரும் மறுக்க முடிýயாது. பேரினவாத சக்திகள் முதல் குறுகின இனவாத சிந்தனைகளை வளர்க்கும் தற்குறிகள் வரை யாவருமே தீர்க்கதரிசனமில்லாது தமிழ் பேசும் மக்களின் பலத்தைக் குறைப்பதற்கான வட, கிழக்கு ஒருமைப்பாட்டையே சிதைக்க முற்படும் பாதையில் இறங்க முற்படுவது துரதிர்ர்;டவசமானது.

சுயநலத்திற்காக அரசியல் கட்சிகள், அமைப்புகள் மட்டத்தில் பிளவுபட்ட சிலரும் பேரினவாத சக்திகளுக்கு 'ஒத்தூதுவது" சில்லறைத்தனமான அரசியலாகவே வெளிப்படுகின்றது. மொத்தத்திலே வட, கிழக்கு மாநிலத்தின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கவிடாத வகையிலே, அப்பிரதேசத்தை தாயகமாகக் கொண்ட தமிழ், முஸ்லிம் மக்கள் பிரதேசவாதம் என்ற குறுகிய நிலைப்பாட்டிýலிருந்து விடுபட்டு பரந்த நோக்குடன் ஒன்றுபட்டு, எதிர்வரும் தேர்தலில் வாக்குப் பலத்தை நிலைநாட்டுவதுதான் மிக மிக அவசியமானது.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

moorthy.gif

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மந்தநிலையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழலில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இம்முறை போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் மந்த நிலையை அடைந்துள்ளன.

தலைமை வேட்பாளரும், முன்னைனாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர் விடுதலைக்கூட்டணியின் சிரேர்;ட உபதலைவருமான ஜோசப் பரராஜசிங்கம், தேர்தல் பிரசாரப் பணிகளை இடைநிறுத்திவிட்டு கொழும்பு சென்றுள்ளார்.

ஏனைய வேட்பாளர்கள் தமது வழக்கமான பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுவந்தபோதிலும், பொதுமக்கள் முன்னரைவிட உற்சாகம் குன்றிய நிலையிலேயே காணப்படுகின்றனர். இதனால், வேட்பாளர்களும் கூட உற்சாகம் இழந்தே காணப்படுகின்றனர்.

அதேநேரம், மாற்றுத் தமிழ்க் கட்சிகளான ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி), புளொட் ஆகியவை புதிய உற்சாகத்துடன் தேர்தல் பிரசாரப் பணியில் ஈடுபட்டுள்ளமையைக் காண முடிகின்றது.

சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த இவர்கள், தற்போது வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளமையையும் காணமுடிகின்றது.

நன்றி - தினக்குரல்

  • தொடங்கியவர்

Rupavahini blamed for falsifying report

[TamilNet, March 11, 2004 11:24 GMT]

Amparai district former Tamil National Alliance (TNA)parliamentarian Mr. A.Chandra Nehru Thursday issued a statement denying a report carried by State controlled Sri Lanka Rupavahini Corporation (SLRC) saying that he participated in a demonstration burning the effigy of LTTE leader Mr.Pirapaharan, sources in Amparai said.

"I carried a placard stating that our National Leader Mr.Pirapaharan and Area Commander Karuna should join hands. But the SLRC in its news bulletin showed a video clip that I was present in the procession that burned the effigy. No such thing took place in Thirukovil on that day in my presence. The irresponsible action of the SLRC has caused pain of mind and tarnished my image in the public," said Mr. Chandra Nehru in his statement.

People of Batticaloa and Amparai district have been reeling because of a crisis. Under this circumstances the State controlled media organizations, under the control of Sri Lanka's President, are attempting to exploit the situation with false reports, the statement said.

"The LTTE leader and Karuna Amman should join hands to foil the attempt by the State media organizations to create divisions within the Tamil community. This is my wish," said Mr.Chandra Nehru in his statement.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.