Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

தவறான தகவல்கள் யாழ் களத்தை தொட்டுச்செல்கின்றமை கவலை தருகின்றது. :oops:

B B C யால் யாழ் களத்தில் செய்தி திரிவு படுத்தப்பட்டுள்ளது வேதனை தருகிறது.

கொப்பிக்கு ஒரு கோப்பி கொடுங்க

கருணா பாவம் அனைத்தும் அவருடைய பனிஸ்மன் காலத்தைத்தான் கூட்டப்போது. சும்மா இருந்த மனிமனை ஊடகங்கள் படுத்துறபாடு. அம்மானின் கையில் அம்புட்டா கதை மிலேனியம் சிட்டியாகத்தான் இருக்கும்

ஓ அப்படி என்றால் நான் இங்கு செய்திகளை போடுவதாலா தாக்குதல் நடந்தது தாத்தா? ஏறக்குறைய மிரட்டல் பரிசாக கிடைத்தது.

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் இங்கே செய்திகள் போடுவதாலேயோ அல்லது மற்றவர்கள் அதற்குக் கூறும் பதில்களாலேயோ அங்கு எந்த வித மாற்றமும் நடந்துவிடாது களம் தான் சூடேறும்

செய்திகளை ஆதாரத்துடன் தாருங்கள் கருத்துக்களைப் பார்ப்போம்

நாங்கள் எம் தலைவரை விட்டுப் பிரிந்து செல்லவோ, வெறுக்கவோ இல்லை, மாறாக அவரை எங்களின் கடவுளாகவே பார்க்கிறோம் - கேணல் கருணா

ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2004, 10:26 ஈழம் ஸ

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேணல் கருணா தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்கு எழுதியதாகக் கருதப்படும் கடிதத்தின் பிரதியொன்று, கிழக்கிலிருந்து வெளிவரும் தமிழ்அலை பத்திரிகையின் வெள்ளிக்கிழமை வெளியீட்டில் பிரசுரமாகியுள்ளது.

தமிழீழ நிர்வாகத் துறையினரின் கீழ் செயற்படாது, நேரடியாக தலைவரின் தலைமையில், தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் செயற்படுவதையே தான் விரும்புவதாகத் தெரிவித்து, வரையப்பட்டுள்ளதாகக் கருதப்படும் இக்கடிதத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுவதாகவோ, அப்படி செயற்பட விரும்புவதாகவோ, அல்லது தனிக்கிளையாகச் செயற்பட விரும்புவதாகவோ எதுவும் குறிப்பிடப் படவில்லை.

கிழக்கில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவரும் பல அரிய போராளிகளுக்கு, தமிழீழ நிர்வாகத் துறையில் இடமளிக்கப்படவில்லை என்பதால், பல போராளிகள் கிழக்கில் அதிருப்தியடைந்திருப்பதால், அந்நிலைப்பாட்டை சுட்டிக்காட்ட வேண்டிய கடப்பாடு தனக்கு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் அக்கடிதம், விரைவில் தலைவரின் நல்ல பதிலுடன், தமிழீழத் துறைப் பொறுப்பாளர்களை விடுத்து, நேரடியாகத் தேசியத் தலைவரின் கீழ் சுதந்திரமாக கிழக்கில் பணியாற்றுவதையே விரும்புவதாகவும் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.

மேலதிக விபரங்கள் விரைவில் புதினம் இணையத் தளத்தில் பிரசுரமாகும். தமிழ்அலையில் வெளிவந்த கடிதத்தின் பிரதியொன்று தமிழ்நெற்.கொம் இணையத்தளத்தில் பிரசுரமாகியுள்ளது. அதன் பிரதியை வாசகர்கள் விரைவில் புதினத்தில் காணலாம்.

source: http://www.eelampage.com/index.shtml?id=20...51026223766&in=

மலையை அசைக்கப் பர்க்கிறார்களா?

என்னமோ நடக்குது.. புரியலையே.. இருக்குது.. உண்மை பொய் எது..? தெரியலையே..

:idea: :?: :!:

தெரிஞ்சுதான் என்ன செய்யப் போறிங்க....மொடந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் சாமர்த்தியசாலிகள் ஆச்சே நீங்கள்...! :lol:

இப்பவே முயற்சி பண்ணுங்க....! :roll:

:twisted: :P :lol:

நடப்பவற்றை அவதானித்துக்கொண்டிருப்போ

புலிகள் விவகாரம்: கருணா தரப்புடன் உடன்படிக்கை இல்லை இலங்கை ராணுவம்.

கருணா தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கப் பிரிவுடன் எந்தவிதமான பாதுகாப்பு உடன்படிக்கையும் செய்து கொள்ள மாட்டோம் என இலங்கை ராணுவம் கூறியுள்ளது.

மட்டக்களப்பில் நடந்த சில அரசியல் கொலைகள் தொடர்பாக புலிகள் இயக்க உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனுக்கும், கிழக்குப் பகுதி புலிகளின் கமாண்டரான கருணாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது ஆதரவு படைகளுடன் கருணா தனியாக செயல்பட ஆரம்பித்துள்ளதாகவும், தங்களுடன் இலங்கை அரசு தனியே பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

ஆனால், அதை புலிகள் மறுத்துள்ளனர். சிறிய கருத்து வேறுபாடு உள்ளதாகவும், தாற்காலிகமான இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்பட்டுவிடும் என்றும் அந்த அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நார்வே அமைதிக் குழுவினர் நேற்று புலிகளின் பிரதிநிதிகளை கிழிநொச்சியில் சந்தித்துப் பேசினர். அவர்கள் கொழும்பில் இருந்து கிழிநொச்சி செல்ல இலங்கை ராணுவம் தனது ஹெலிகாப்டரை வழங்கியது.

இந் நிலையில் இலங்கை பாதுகாப்புத்துறைச் செயலாளர் சிரில் ஹெராத் இன்று நிருபர்களிடம் கூறுகையில்,

இலங்கை ராணுவ கமாண்டர்கள் மூலமாக கருணா எங்களைத் தொடர்பு கொண்டார். அப்போது தன்னுடன் தனியே ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று கோரினார். ஆனால், இதற்கு ராணுவ அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துளளனர்.

கருணா தரப்புடன் எந்தவித உடன்படிக்கையிலும் அரசு கையெழுத்திடாது. பிரபாகரனுக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. அப்படி இருக்கையில் அதே தரப்பைச் சேர்ந்த இன்னொருவருடன் எப்படி உடன்பாடு செய்ய முடியும்?

இப்போதைக்கு இரு தரப்பினருமே அமைதி உடன்பாட்டை மதித்து நடப்பதாக உறுதியளித்துள்ளனர். இன்றைய சூழலில் எந்த பிரச்சனைக்கும் நாங்கள் தயாராக இல்லை. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதாமல் இருக்க வேண்டும் என்றார் சிரில்.

Thatstamil.com

எத்தனையோ தமிழ் மக்களினதும் அவர்களின் பிள்ளைகளினதும் குருதியாலும் இழப்பாலும் வளர்க்கப்பட்ட இயக்கம் சிதறுண்டு போவதற்கு எனி மக்கள் இடமளிக்கக் கூடாது...எனவே மக்கள் மெளனமாக இருக்காமல் ஒரு காத்திரமான இயக்கத்தை மக்கள் ஆதரவுடன் 25 வருடங்களாக வழி நடத்திய தலைவனின் பாதையில் எல்லோரையும் இணைந்து செல்ல வழியுறுத்துவதே இவ்வேளையில் சாலச் சிறந்தது....!(our view)

:evil: :idea: :!:

கொஞ்சம் முதல் உதிலை வேறையொரு தலைப்பு கிடந்திச்சிது.. ஏதொ அம்மான் 15/15.. 20/10 எண்டு ஏதோவெல்லாம் வாசிச்சன் இப்ப காணேல்லை.. :!: எங்கை போட்டுது.. :?: செய்தி எவ்வளவுதூரம் உண்மை..?

:idea: :?: :arrow:

உண்மைதான் தாத்தா...அதில சில கருத்துக்களும் கிடந்தது...ஆனா அதுகள் கருத்தாளர்களின் சுய கருத்துக்கள்....இது விடயமா விமர்சனம் வேண்டாம் என்று எடுத்துப் போட்டினம் போல....!

ஏதோ நல்லது நடந்தாச் சரி...கடவுளக் கும்பிடுறதை விட வேறொண்டும் இப்ப தெரியல்ல....!

சிவ சிவா....! ஜேசுவே....! அல்லாவே....! :wink:

:twisted: :P

உண்மைதான் தாத்தா...அதில சில கருத்துக்களும் கிடந்தது...ஆனா அதுகள் கருத்தாளர்களின் சுய கருத்துக்கள்....இது விடயமா விமர்சனம் வேண்டாம் என்று எடுத்துப் போட்டினம் போல....!

ஏதோ நல்லது நடந்தாச் சரி...கடவுளக் கும்பிடுறதை விட வேறொண்டும் இப்ப தெரியல்ல....!

சிவ சிவா....! ஜேசுவே....! அல்லாவே....!

இதுக்குப் பெயர் கருத்துக்களம்தானே.. கருத்துக்களத்தில் கருத்தாளர்களின் சுயகருத்துத்தானே வரும்.. தூக்கினதாலைதான் சந்தேகம் வருகிது..

:!: :idea: :?:

கடவுள் ஞாபகம் இடைக்கிடை உங்களுக்கு வரவேணும் எண்டுதான் இப்பிடி சிலது நடக்கிதாக்கும்..

:lol: :P :lol:

நீங்கள் நோர்வேயிலை இருந்துதானே இயங்கிறதா சொல்லுறியள்.. அங்கு வாஹே (Vaygay) எண்டொரு பத்திரிகையாம்.. அம்மான்ரை அண்ணண் நோர்வேயிடம் பாதுகாப்புத்தரும்படி கோரினதா செய்தி வந்திருக்காம் அதைப்பற்றி சொல்லுங்கப்பா.. அசைலம் அடிக்கத்தான் உந்தக்கூத்தோ தெரியேல்லை..

:idea: :?: :!:

இதுக்குப் பெயர் கருத்துக்களம்தானே.. கருத்துக்களத்தில் கருத்தாளர்களின் சுயகருத்துத்தானே வரும்.. தூக்கினதாலைதான் சந்தேகம் வருகிது..

:!: :idea: :?:

கடவுள் ஞாபகம் இடைக்கிடை உங்களுக்கு வரவேணும் எண்டுதான் இப்பிடி சிலது நடக்கிதாக்கும்..

:lol: :P :lol:

நீங்கள் நோர்வேயிலை இருந்துதானே இயங்கிறதா சொல்லுறியள்.. அங்கு வாஹே (Vaygay) எண்டொரு பத்திரிகையாம்.. அம்மான்ரை அண்ணண் நோர்வேயிடம் பாதுகாப்புத்தரும்படி கோரினதா செய்தி வந்திருக்காம் அதைப்பற்றி சொல்லுங்கப்பா.. அசைலம் அடிக்கத்தான் உந்தக்கூத்தோ தெரியேல்லை..

:idea: :?: :!:

  • தொடங்கியவர்

நீங்கள் இங்கே செய்திகள் போடுவதாலேயோ அல்லது மற்றவர்கள் அதற்குக் கூறும் பதில்களாலேயோ அங்கு எந்த வித மாற்றமும் நடந்துவிடாது களம் தான் சூடேறும்

செய்திகளை ஆதாரத்துடன் தாருங்கள் கருத்துக்களைப் பார்ப்போம்

செய்திகளை போடுவதால் மாற்றம் வராது என்பது உண்மை ஈழவன். நான் என்ன நடக்கின்றது என்று அறியலாம். நாமெல்லாம் பொதுமக்கள் அவ்வளவு தான் செய்ய முடியும். ஆனால் செய்திகளை போடுவதற்கு மிரட்டல் வருகின்றதே என்ன செய்ய?

  • தொடங்கியவர்

Analysis: Divided Tigers

By Frances Harrison

BBC correspondent in Colombo

The Tamil Tiger rebel movement has been plunged into the biggest internal revolt in its two-decade history - throwing Sri Lanka's already ailing peace process into even more jeopardy.

A senior military commander from the east, Colonel Karuna, has told the Associated Press news agency he will no longer take orders from rebel leader Velupillai Prabhakaran and wants to negotiate a defence pact independently with the Sri Lankan army.

At the same time, a local rebel newspaper under Colonel Karuna's control has printed a letter purportedly sent by him to Mr Prabhakaran.

The paper, Thamil Alai, says Colonel Karuna asked to act independently in the east but under the direct command of Mr Prabhakaran, whom he said he worshipped like a god.

It is likely Colonel Karuna is saying one thing to his cadres in the east and another to Colombo journalists.

If he is to have a future he needs to maintain the loyalty of his own fighters and one way to do that is to say he is still with Mr Prabhakaran but at the same time sticking up for the rights of the east against the domination of northern Tamils.

Also, if Colonel Karuna is to break away with any of the thousands of men and women he commands then he needs to avoid links with the Sri Lankan army.

If he were seen as a defector he would have little hope of taking people with him.

But the question is how he hopes to survive alone outside the mainstream rebel movement without the army's backing.

Test of strength

_39921957_tamsy203.jpg

Colonel Karuna in Batticaloa with Tigers from the east

Those who have challenged Mr Prabhakaran in the past have not lived to tell the tale.

At the very least, the leadership of the Tigers will move swiftly to isolate Colonel Karuna from his fighters - assuming few will want to become dissidents.

The worry for the rebels is that if Colonel Karuna is not isolated quickly there may be internecine fighting between the eastern and the northern forces of the Tamil Tigers.

Then the temptation for the government forces to assist one side or the other would be huge.

There is also the possibility the Sri Lankan military may get drawn into a conflict inadvertently.

Most people assume, however, that both factions will first allow the general elections to take place in early April.

These will now be a test of strength.

It is not yet clear what impact this rift will have on the Tamil National Alliance candidates - who are essentially the political proxies of the rebel movement contesting the polls in the north-east.

De-merger

The situation also poses a major problem for the Norwegian mediators and ceasefire monitors as well as for the Sri Lankan government which is itself divided at the moment.

The nation's president and prime minister are also divided

If they deal independently with Colonel Karuna they may give him legitimacy and incur the wrath of the mainstream Tiger leadership in the north. Then there are the wider implications of a possible separation of the east.

Colonel Karuna has spoken to Associated Press of "full self-administration" in the east in the future.

That raises the possibility of the de-merger of the north and east - something the Tigers have traditionally opposed but Sinhalese and Muslims who live in the more mixed eastern area would support as it would make them less of a minority.

The outlook cannot be good for a quick resumption of peace talks - delayed for almost a year now.

Even supporters of Prime Minister Ranil Wickramasinghe in his feud with President Chandrika Kumaratunga say this latest split in the rebel ranks is a far more serious challenge to the peace process than the president's decision last November to take over the defence ministry.

That action prompted the Norwegian mediators, who were in town to organise the next round of talks, to go home - saying there was nothing more they could do until it was clear which leader was in charge of the government.

Now there's division in both the government and rebel ranks.

  • தொடங்கியவர்

Profile: Colonel Karuna

By Ramesh Gopalakrishnan

BBC Tamil service

The 40-year-old Tamil Tiger commander Colonel Karuna was once a bodyguard of his chief, Velupillai Prabhakaran, but now he is facing the leadership's wrath.

_39923973_colonel.jpg

Karuna fought key battles in the north

Karuna in Tamil means kindness, but the colonel is a hardened strategist commanding the loyalty of a substantial number of cadres, now ensconced in Kokkadicholai, a rebel pocket off Batticaloa in the east.

Colonel Karuna is the nom de guerre of Vinayagamoorthi Muralitharan. He joined the militant outfit in 1983 and, within a few years, became the top commander in his native eastern province.

However his key achievements were to come later in the north, in the Tamil Tigers' battles against Sri Lankan security forces.

Colonel Karuna is said to have been the strategist behind the Jayanthan Force, which helped the Tigers' successful resistance of the Sri Lankan army's Operation Jayasikuru in 1997-98.

The operation against the north was beaten back and the Tigers subsequently captured the strategic Elephant Pass, allowing them to negotiate from a position of strength.

Of that bloody campaign, he says: "As a soldier who has participated in so many wars I have no fear about death. Death means nothing to me compared with the rights of our people."

Banner of revolt

Colonel Karuna's importance in the Tamil Tiger hierarchy became clear when Prabhakaran elevated him to the rank of special commander for the eastern Batticoloa-Amparai districts in 2003.

He replaced special commander Karikalan, who was ousted following his remarks over the communal situation in the district.

Prabhakaran later made Colonel Karuna part of the team that negotiated with the Sri Lankan government during several rounds of peace talks in Bangkok, Oslo and Tokyo.

During these rounds, Colonel Karuna, who initially seemed reticent in his interactions with journalists, came out as an articulate man with lucid views on the issues confronting the east.

He felt his personal promotion was not enough for the east and has been seeking better representation for eastern cadres within the Tamil Tiger hierarchy.

Colonel Karuna is perhaps now trying to restate these feelings but whether his gamble pays off remains to be seen.

By choosing to raise the banner of revolt at this moment, in the run-up to parliamentary elections, Colonel Karuna has certainly sprung a surprise.

The Sri Lankan government has quickly rejected his demand for a separate ceasefire, but Prabhakaran is taking his time to react to the challenge from his top regional commander.

In the past, the Tamil Tiger guerrilla chief has always acted decisively to ensure his outfit remains predominantly a military one with little space for political dissent.

It remains to be seen whether he will be prepared to take action that breaches the ceasefire with the Sri Lankan armed forces.

But when Prabhakaran does decide to act, Colonel Karuna might face the toughest battle of his life.

இதுக்கு மேல தாத்தா சொன்ன 'அசைலம்'.....கூட உண்மையா இருக்கலாம்....இப்படி PKK- குர்திஸ்தான் போராட்ட அமைப்பை காசு கொடுத்து அமெரிக்க உளவு நிறுவனம் உடைச்சது.....அதில இருந்து தப்பி வந்தவைக்கு மேற்குலகம் அடைக்கலம் கொடுத்தது...இராணுவ வலிமையால அழிக்க முடியாட்டில்.... காசைக்காட்டியும் அழிக்கிறது இருக்கு.....இதில மேற்குலக உளவாளிகள் கில்லாடிகள்.....ஆரை வளைச்சுப் போட்டிச்சினமோ....அப்படி ஏதும் நடக்குதோ ஆரறிவார்.....! :roll:

:twisted: :P :lol:

மோகன் வன்னியில் புலிகளின் குரல் ஈழநாடு

எல்லா பத்திரிகையிலும் வெளிவந்து விட்டது இந்த

  • தொடங்கியவர்

"பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வுகாணப்படும் விரைவில் தமிழ் மக்களுக்கு விளக்குவோம்'

மட்டு. அம்பாறை சிறப்புத் தளபதி ரமேஷ் தெரிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை பிரிவு ராணுவப் பொறுப்பாளர் கேணல் கருணா அம்மான் என்ற முரளிதரன் ஏனைய துறையினரின் தலையீடு இன்றி தலைவர் பிரபாகரனின் நேரடித் தலைமையின் கீழ் "" தனி வழி'' செல்வதற்கு முன் வந்ததை தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடி குறித்து மூத்த தளபதிகளுடனும், மட்டக்களப்பு மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஷ், மூத்த தளபதி ராம், அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன், பொறுப்பாளர் கீர்த்தி உட்பட மாவட்ட உயர் மட்டக் குழுவினருடனும் விரிவாக ஆராய்ந்துள்ள தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அமைப்பின் கட்டுக்கோப்பை காப்பாற்றும் முகமாக தீர்க்கதரிசனமான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக வன்னியிலிருந்து மட்டக்களப்புக்கு கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கை அமைப்பின் கட்டுக்கோப்பை மேலும் வலிமைப்படுத்துவதாகவே இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மாவட்ட பதவிகளில் பதவிமாற்றங்கள் செய்யப்படலாம் எனத் தெரிய வருகிறது.

இன்றுகாலை 10 மணிக்கு கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெறவிருக்கிறது. அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் நெருக்கடிக்கு தீர்வுகாண்பது

தொடர்பாக தலைவர் எடுத்துள்ள தீர்க்கமான நடவடிக்கைகள் பற்றி இந்த மாநாட்டில் வைத்து அறிவிப்பார் என தெரியவருகிறது.

சுமுகமான தீர்வு

இதேவேளை வன்னிசென்று தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த உயர் மட்ட மாநாட்டில் பங்குபற்றியவர்களில் ஒருவரான மட்டு.அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரி.ரமேஸ், பிரச்சினைகள் எல்லாம் சுமுகமாக முடியும் என்று தெரிவித்திருக்கிறார்.

"" எங்கள் தலைவருடன் மட்டக்களப்பு நிலைமைகள் குறித்து நாங்கள் விரிவாக பேசினோம். பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது நிலைமைகளை எமது தலைவர் மிக விரைவில் மிகத் தெளிவாக தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் விளக்கிவைப்பார்'' என்று சிறப்புத் தளபதி ரமேஸ் கூறியதாக தமிழ் நெட் நேற்று தெரிவித்தது.

கள நிலைமைகளை ஆக்கமான முறையில் அணுகி மிகத் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தலைவருடன் நடந்த சந்திப்பின்போது முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறியதாக "தமிழ்நெட்' மேலும் தெரிவித்துள்ளது.

பிரபாகரனுக்கு கருணா நீண்ட கடிதம்

இது இவ்விதம் இருக்க, கேணல் கருணா அம்மான் தலைவர் பிரபாகரனுக்கு மார்ச் 2 ஆம் திகதியிட்டு நீண்ட கடிதம் ஒன்றை மட்டக்களப்பிலிருந்து அனுப்பி வைத்திருக்கிறார்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலை தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்குவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் என்ற பூர்வபீடிகையோடு கடிதத்தை ஆரம்பித்துள்ள கருணா அம்மான்,

""தமிழீழ துறைப்பொறுப்பாளர்களை தவிர்த்து நேரடியாக உங்களின் கீழ் சுதந்திரமாக இங்கு பணியாற்றுவதையே விரும்புகிறேன். இதனால்தான் புலனாய்வுத் துறையையும் நிறுத்தியுள்ளேன் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

தனியான யுத்த நிறுத்த உடன்படிக்கை

தனி வழி செல்லத் தீர்மானித்துள்ள கேணல் கருணா அம்மான் கிழக்குக்கு என்று தனியான யுத்த நிறுத்த உடன்படிக்கையொன்றை அரசு செய்ய முன்வரவேண்டுமென்று அரசாங்கத்தை கோரியதாகவும், இதற்கு ராணுவ தரப்பில் இப்பொழுது அந்த அவசியம் எழவில்லை என்று கூறி மறுத்துவிட்டதாகவும் பி.பி.சி. செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி விடுதலைப் புலிகளின் பேச்சாளரான தயா மாஸ்டரிடம் கேட்ட பொழுது ""கேணல் கருணா இப்பொழுது ஒரு தனியாள் அவரது சிரேஷ்ட தளபதிகள் அனைவரும் மட்டக்களப்பு பகுதியிலிருந்து இப்பொழுது வன்னி வந்து தலைவருடன் பேச்சு நடத்துகிறார்கள். அவருக்கு ஆதரவு கிடையாது எனவே அரசுடன் தனியான பேச்சுவார்த்தையை கேட்டிருப்பது புத்திசாதுரியத்தனமானது அல்ல'' என்று அவர் பதிலளித்திருக்கிறார்.

""தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசு யுத்த நிறுத்த உடன் படிக்கையொன்றை ஏலவே செய்திருக்கிறது. இப்பொழுது அமுலில் உள்ளது. பிரிந்ததாக சொல்லப்படும் மற்றொரு குழுவோடு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இப்போதைக்கு இல்லை. ஆயினும் நாம் நிலைமைகளை அவதானித்துக்கொண்டுதான் இருக்கிறோம்'' என்று இதுபற்றி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத்தும் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

""உங்களை எங்கள் கடவுளாக நேசிக்கும் நாம் உங்களின் கீழ் சுதந்திரமாக பணியாற்ற விரும்புகின்றோம்'

'தலைவர் பிரபாவுக்கு தளபதி கருணா கடிதம்

தமிழீழ துறைப் பொறுப்பாளர்களைத் தவிர்த்து நேரடியாக உங்களின் கீழ் சுதந்திரமாக இங்கு பணியாற்றுவதையே விரும்புகின்றேன். இதனால்தான் புலனாய்வுத்துறைப் பணிகளை இங்கு நிறுத்தியுள்ளேன். நான் உங்களைவிட்டு பிரிந்து செல்லவோ,உங்களை வெறுக்கவோ இல்லை. மாறாக உங்களை எங்களின் கடவுளாகவே பார்க்கிறோம். சிலவேளை இந்த முடிவு உங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தலாம். இதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்.'' என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கு கிழக்குத் தளபதி கேணல் கருணா அம்மான் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடிதத்தின் பூரணவிபரம் வருமாறு ;

மதிப்பிற்குரிய தலைவர் அவர்கட்கு,

தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலான சூழ்நிலை தொடர்பாக எங்கள் நிலைப்பாட்டை தெளிவாக்குவதற்காக இக் கடிதத்தை எழுதுகின்றேன்.பொதுவாக எமது போரியல் வரலாற்றில் எங்கள் மட்டக்களப்புஅம்பாறை மாவட்டம்

பெரும் பங்காற்றியுள்ளது என்பதை எவரும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது. அதுமட்டுமல்ல பல படுகொலைகளையும்,அழிவுகளையும் சந்தித்துள்ளது.

இதுவரை நடந்த போராட்டத்தில் 4550 மட்டக்களப்பு அம்பாறை போராளிகள் களத்தில் வீரச் சாவடைந்துள்ளார்கள். இவர்களில் கிட்டத்தட்ட 2248 வீரர்கள் உங்கள் கட்டளையை ஏற்றுவந்து யாழ்.வன்னி மண்ணில் வீரச்சாவடைந்துள்ளார்கள்.

நாங்கள் வன்னிக்களமுனையில் போரிட்டுக் கொண்டிருந்த வேளைகளிலெல்லாம் பல பல சிக்கல்களையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டு வந்திருக்கின்றோம். இவைகள் யாவும் உங்களுக்கும் தெரிந்த விடயமேயாகும்.

இருந்தாலும் உங்கள் மீதுள்ள பக்தியின் காரணமாக எல்லா விடயங்களையும் சமாளித்தே வந்திருக்கின்றோம். ஆனால் தற்போது இந்தப் பிரச்சினை பெரிதாகியுள்ளது.இதற்கான காரணத்தையும் உங்களுக்கு தெளிவாக்க கடமைப்பட்டுள்ளேன். குறைந்தது 30 இற்கும் மேற்பட்ட தமிழீழத் துறைப் பொறுப்பாளர்கள் இதுவரையில் உங்களால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இவ

  • தொடங்கியவர்

புலிகளுக்கிடையில் முரண்பாடு என்ற செய்திகளில் பல்வேறு முரண்பாடு அதனை விளக்க இன்று கிளிநொச்சியில் செய்தியாளர் மாநாடு;

ரமேஷ், கௌசல்யன் பங்கு கொள்வர்

விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றினை நடத்தவுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும், கிழக்கு பிராந்திய தளபதி கேணல் கருணாவுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்தே தமிழ்ச்செல்வன் இந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கவுள்ளார். இன்று காலை 10 மணிக்கு கிளிநொச்சியிலுள்ள விடுதலைப் புலிகளது சமாதான செயலகத்தில் நடைபெறவுள்ள இச் செய்தியாளர் மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் ரமேஷ், அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

புலிகளின் தலைமைப்பீடத்திற்கும், கருணாவுக்குமிடையில் முரண்பாடு என்று வெளியான செய்திகளில் பல முரண்பாடுகள் காணப்படுவதனால் அதற்கான உரிய விளக்கத்தை அளிக்கவே இச் செய்தியாளர் மாநாடு நடைபெறுவதாக புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை குறித்து தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் புலிகளின் தளபதிகள் கூடி ஆராய்ந்துள்ளனர்.

நன்றி - வீரகேசரி

  • தொடங்கியவர்

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

தமிழர் பிரச்சினை இந்நாட்டின் தலையாய பிரச்சினையாகி அதற்கான தீர்வு இன்றேல் விமோசனம் இல்லை என்ற நிலைக்கு நாடும் மக்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இத்தகையதொரு உணர்வலைகள் நாடுதழுவியரீதியில் எழுச்சி பெறுவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள் என்றால் மிகையில்லை. அவர்களிடையே பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளிவரும் வதந்திகள் தமிழர் பிரச்சினைக்கு பெரும் பின்னடைவை உண்டுபண்ணக்கூடியதாகும். கடந்த இருபது வருடகாலமாக அரச ராணுவ நெருக்கடிக்கு முகம் கொடுத்து பல்வேறு தியாகங்களுடன் உயிர்களை பலிகொடுத்து விடுதலைப்புலிகள் பெற்றுத்தந்த வரப்பிரசாதம்தான் எப்படியாவது தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என இன்று மேலெழுந்துள்ள உணர்வுப்பிரவாகம் ஆகும்.

இலங்கையில் இனப்பிரச்சினை இல்லை பயங்கரவாதம் தான் தலைவிரித்தாடுகிறது என்ற பேரினவாத குரல் எழுந்து உலகின் கண்முன்னே பொய்த்திரையை விரித்து மறைத்துவந்த நிலையை தகர்த்து கிழித்தெறிந்தது விடுதலைப்புலிகளின் தியாகம் நிறைந்த போராட்டமே. இரத்தச் சிந்தலும், உயிர்ப்பலியும் போராட்டத்தின் அம்சங்களானது. துயரமானது. கவலைக்குரியது. பல்லாயிரக்கணக்கான உயிர்,பொருட்சேதங்களின் பின்னர் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்றினை தேடும் மன உந்துதல் ஏற்பட்டது. பிறிதொரு விதத்தில் மகிழ்ச்சியானது.

இலங்கையின் இரத்தம் சிந்துதலுக்கு முடிவுகாண்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்துவிட்டிருப்பன சர்வதேச சமூகம் இனம்கண்டது. உதவிக்கரம் நீட்டிட ஓடோடி வந்தது. மக்களின் ஆதரவும் கிட்டியது. அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ள இனவாதமும், யுத்தமும் பெரும் உதவிகரமானது என கருதியவர்கள் மட்டும் இதற்கு எதிராக செயல்பட்டார்கள். இன்றும் செயல்படுகிறார்கள்.

யுத்தநிறுத்தம், புரிந்துணர்வு உடன்படிக்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் என்ற நிலைக்கு புலிகள் மாற்றம் அடைவார்கள் என்பது பகற்கனவாகும் என்றதொரு காலகட்டத்திலே புலிகளின் இந்த சமாதான யாத்திரை ஆரம்பமானது.

சமாதான பேச்சுவார்த்தைகளை பலவீனமானதொரு நிலையிலிருந்து புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பது தெளிவானது. இராணுவ மற்றும் அரசியல் சித்தாந்த பலத்துடேனே புலிகள் பேச்சுவார்த்தை மேடைக்கு ஏறினார்கள். அவர்களின் பின்புலம் இராணுவ, பொருளாதார, ஆயுத, அரசியல் சித்தாந்த பலம் மிக்கது என்பதை சர்வதேச சமூகம் நன்றாகவே அறிந்துகொண்டது.

புலிகளின் இந்த பலம் தனியாக பிரிந்து தனிநாடு அமைக்கும் அளவுக்கு சக்தியானது எனவும் அறியக்கூடியதாக விருந்ததால் அந்நிலைமையை தவிர்த்து சுமுகமானதொரு பேச்சுவார்த்தைகளின் மூலம் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமானதொரு முறையினால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு வழிவகுப்பதன் பொருட்டு சர்வதேச சமூகம் பொருளாதார ரீதியாகவும் உதவ முன்வந்தது.

விடுதலைப்புலிகள் பலம்வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற காரணத்தினாலே அரசுகூட அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது என்ற யதார்த்தம் உள்வாங்கத்தக்கது. தமிழர் பிரச்சினையின் தீர்வுக்கான முயற்சிகளின் நீண்டவரலாற்றை அவதானித்தால் இந்த உண்மை புலப்படும். சுதந்திரத்தின் பின்னரான காலத்தில் பல கட்டங்களில் தமிழருக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாதத் தாக்குதல்களும், உயிர்ப்பலிகளும் இந்த உண்மையை உறுதிப்படுத்துபவையாகும்.

சிவில் எதிர்ப்பு நடவடிக்கைகள், சக்தியாக்கிரகப் போராட்டங்கள் என்ற நிலைகளையெல்லாம் கடந்து ஆயுதப் போராட்டம் உருவானதொரு கட்டத்திலே சர்வதேச சமூகத்தின் பார்வையில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தென்படத்தொடங்கியது. அதற்கு அடிப்படைக்காரணம், விடுதலைப்புலிகளின் பலமும், அவர்கள் தமிழ்மக்களிடையே கட்டிவளர்த்துவிட்ட ஒற்றுமையுமாகும்.

இது தேர்தல் காலம் தமிழரைப் பொறுத்தவரையில் தேர்தல் தீர்க்கமானதொரு கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாணுங்கள் என்ற ஒருமித்த குரலுடன் தேர்தல் களத்திற்கு போகவேண்டிய நிலை இத்தகையதொரு சந்தர்ப்பத்திலே விடுதலைப் புலிகளின் மத்தியில் பிளவு என்ற வதந்தி வியாபித்து வருகிறது.

முரண்பாடுகள் சர்வவியாபகமானவை கட்சிகள், குழுக்கள் இயக்கங்கள்,தலைவர்கள் மத்தியில் என சகலவற்றிலும் கருத்து முரண்பாடு வியாபித்துள்ளது இயல்பு. விடுதலைப்புலிகளின் இயக்கத்திலும் முரண்பாடு நிலவுகிறது. வியப்புக்குரியது அல்ல. நீண்டகால போராட்ட அனுபவம்மிக்கவொரு இயக்கம் பிளவுபடும் அளவுக்கு அதனை இட்டுச்செல்லாது என்பதே எதிர்பார்ப்பு, அதுவும் மக்களின் எதிர்பார்ப்பு தீர்க்கமாகியுள்ளதொரு காலகட்டத்தில் இவ்வாறானதொரு பிளவுநிலை உண்மையானால் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நீண்டகால பின்னடைவைக் காண்பது தவிர்க்கமுடியாது.

நன்றி - வீரகேசரி

சரியான கண்ணோட்டம் வீரகேசரி....நன்றி..BBC...!

BBC துணிந்து நில்லுங்கள் தொடர்ந்து செல்லுங்கள்....!

மெய்பொருள் காண்பதறிவு நண்பரே....!

அச்சுறுத்தலுக்கு அஞ்சாதீர்கள்...அநியாயத்துக்க

  • தொடங்கியவர்

நீங்கள் நோர்வேயிலை இருந்துதானே இயங்கிறதா சொல்லுறியள்.. அங்கு வாஹே (Vaygay) எண்டொரு பத்திரிகையாம்.. அம்மான்ரை அண்ணண் நோர்வேயிடம் பாதுகாப்புத்தரும்படி கோரினதா செய்தி வந்திருக்காம் அதைப்பற்றி சொல்லுங்கப்பா.. அசைலம் அடிக்கத்தான் உந்தக்கூத்தோ தெரியேல்லை..

:idea: :?: :!:

அந்த வாஹே பத்திரிகையை தேடி பார்த்தேன். இந்த ஒரு செய்தியைதான் பார்த்தேன். அதில் பாதுகாப்பு கேட்டமாதிரி ஒன்றும் இல்லை.

http://www.vg.no/pub/vgart.hbs?artid=217692

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.