Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

வெறும் வாயை மெல்லும் சிங்கள, ஆங்கில ஊடகங்கள்

9/10 ஜப் போலவே 12/26 உம் வரலாற்று புகழ்பெற்ற திகதியாக மாறிவிட்டிருக்கிறது. அன்றைக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் மனித அவலங்களை சுனாமி அரங்கேற்றியது. சிறிலங்காவின் தென் பகுதிகளும் தமிழீழத்தின் கிழக்குக் கரையும் அதற்குத் தப்பவில்லை. 30000 உறுதிப்படுத்தப்பட்ட சாவுகள், காணாமல் போனவர்களின் கணக்கையும் சேர்ந்து 6000 ஆக அதிகரிக்கும் ஏது நிலை காணப்படுகிறது. 'பொருண்மிய சுனாமி" அடிக்கத் தொடங்கியிருக்கிறது.

இந்த மனித பொருண்மிய அவலங்களை வெளிப்படுத்த வேண்டிய தென்னிலங்கை ஊடகங்கள் 26.12.2004 இல் இருந்து 04.01.2005 வரையான பத்து நாட்களும் நடந்து கொண்ட முறை நாகரிக சமூகத்தினர் வெட்கித்தலைகுனிய வேண்டிய விதத்திலேயே அமைந்தது.

வடக்குக் கிழக்கின் பொது மக்களது சேத வீகிதங்களை பெருமளில் இரட்டிப்பு செய்த இந்த ஊடகங்கள் தென்னிலங்கை சேதங்களையும் 28ஆம் திகதி வரை பெரிதாக வெளிவிடவில்லை. கொழும்பிலிருந்து 1500 பேருடன் புறப்பட்ட புகையிரதங்களில் கிட்டத்தட்ட அனைவருமே பலியாகியதைக் கூட வெளியிடாத இந்த ஊடகங்கள் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டதாக கூறப்படும் சேதங்களை மட்டும் தங்கள் வட்டாரங்களை மேற்கோள் காட்டி 29ஆம் திகதியிலிருந்து வெளியிடத் தொடங்கின. இராணுவத்தின் இழப்புக்களை வெளியிட்ட அதே கையோடு புலிகளின் சேதங்கள் என்று அவை கூற விருபியவற்றை அல்லது ஆட்சிப் பீடத்தினர் 'கேட்க விரும்பிய"வற்றை அவை வெளியிட்டன.

இதற்கு அடியெடுத்து கொடுத்தவர் வேறுயாருமல்ல சந்திரிகாதான். புலிகளின் வளங்கள் பெரும்பாலும் சுனாமி கொண்டு போய்விட்டது. இனி அவர்கள் போருக்கு வரமாட்டார்கள் என்று கூறியவர் அவர்தான்.

அதையும் விட 28.12.2004 அரசு ஊடகங்களின் தலைவர்களுக்கென நடாத்தப்பட்ட அறிவுறுத்தல் கூட்டத்தில் இந்துசமுத்திரப் பிராந்தியம் முழுவதுமே சுனாமியினால் பாதிக்கப்பட்டதாகக் காட்டும் விதத்தில் செய்திகளை வெளியிடும் படியும் சிறிலங்காவைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் இழப்புகளை பூதாகாரமாக்கி காட்டும் படியும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. (ஆதாரம் சண்டேலீடர் 02.01.2005 post Shots)

அரச ஊடகங்கள் மட்டுமல்லாது ஏனைய தென்னிலங்கைப் பத்திரிகைகளும் இதையே வேத வாக்காக கொண்டுவிட்டதுபோல் நடந்து கொண்டன. 29.11.2004 க்கும் பின்பு ஆயுதப் படைகளின் சேத விபரங்கள் வெளிவரவில்லை. இந்தப் பின்னணியில் புலிகள் பற்றிய செய்திகளை எப்படியான கோணத்தில் இந்தத் தென்னிலங்கைப் பேரினவாத ஆங்கில இதழ்கள் கையாண்டன என்று பார்ப்போம்.

02.01.2005 ஞாயிறு சண்டேலீடரில் பிறட்றிக்கா ஜான்ஸ் எழுதிய கட்டுரையின் தலைப்பு.

'புலிகளின் பிரதேசங்கள் துடைத்தழிப்பு" என்பதாக அமைந்ததோடு முல்லைத்தீவில் இருந்த புலிகளின் முக்கிய முகாம் ஒன்று சுனாமியால் தகர்க்கப்பட்டது. அவர்களது நிலத்தடிக் காப்பரண்களும் கருவி கல நிலையங்களும் தகர்க்கப்பட்டிருக்கின்றன. என்று கூறியிருந்தார். இதே கட்டுரையில் 5 அதிகாரிகள் மற்றும் 71 வீரர்கள் முப்படை,பொலிஸ் தரப்பில் பலியானதாகவும் எழுதியிருந்தார்.

02.01.2005 சண்டே ஜலண்டின் பாதுகாப்பு செய்தியாளர் ஒருபடி மேலே போய் முடமாக்கும் வகையிலான அடியை சுனாமி புலிகளுக்கு வழங்கியது என்று தலைப்பிட்டு கட்டுரை வரைந்திருந்தார். 200க்கும் மேற்பட்ட புலிகள் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் பிரமாண்டமான அளவில் புலிகளின் படைக்கலங்கள் அழிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், தலைவர் பிரபாகரனையும் விட்டுவைக்கவில்லை. என்றும் அவர் சுனாமிக்கு பலியானரா என்பது பற்றி உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் (ஏக்கத்துடன்) குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் புலிகளின் முக்கிய தளபதிகள் அனைவரும் மீட்புப் பணியில் நின்றதாக கூறியிருந்தார். முதல் தடவையாக எமது தளபதிகளின் கேணல் நிலையை வழமை போல் 'கேணல்" என்று குறிப்பிடாமல் மேற்கோள் குறி இல்லாமல் குறிப்பிட்டிருந்தது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

இதே கட்டுரையில் புலிகளின் கடல்புலிப் பிரிவு (கிட்டத்தட்ட முழுமையாக) அழிக்கப்பட்டது என்றும் 100க்கு மேற்பட்ட சண்டைக் கலங்கள் மூழ்கிவிட்டன அல்லது பாரிய சேதத்திற்கு உள்ளாகிவிட்டன என்றும் கரையோரமாக இருந்த புலிகளின் தொலைத்தொடர்பு நிலையங்கள் கடற்புலித்தளங்கள், ரேடர் நிலையங்கள் ஆட்டிலறிகள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன என்றும் ஒருபத்தியில் கூறியிருந்தார்.

பின்பு ஒரு பந்தியில் சாலைத்தளம் ஒப்பீட்டளவில் குறைந்த சேதம் அடைந்தது என்று கூறிகிறார்.

இன்னும் சில பந்திகள் கடந்ததும் முழுமையாக அழிக்கப்படாத தங்கள் படகுகளை தேட 'பெரும் எண்ணிக்கையிலான தங்கள் உறுப்பினர்களை கடற்புலிகள் ஈடுபடுத்தினர் என்று கூறுகிறார். 'கிட்டத்தட்ட முழுமையாக" அழிந்துவிட்ட கடற்புலிகளின் பிரிவில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர் மீண்டதன் மர்மத்தை அந்த செய்தியாளரிடம் தான் கேட்கவேண்டும்.

02.01.2005 சண்டே ரைம்ஸ் பத்திரிகை சுனாமியின் போது பிரபாகரனும், சூசையும் கொல்லப்பட்டதாக கூறிவிட்டு அதை தாமே மறுப்பது போல் வதந்திகளை முறியடிக்கும் விதத்திலே பிரபாகரன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து தமிழில் ஒப்பமிட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க சூசை அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் எழுதியிருக்கிறது. 'தமிழில் ஒப்பமிட்டு" என்பதை தடித்த எழுத்துக்களில் போட்டு ஏதோ அப்படி ஒப்பமிடுவது மகா பாவம் என்று காட்ட முனைந்திருக்கிறார்.

எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தது போல் அமைந்தது அத்தாஷின் 02.01.2005 சண்டே ரைம்ஸ் கட்டுரையாகும்.

அவரது தலைப்பு இன்னும் சுவையானது:

'புலிகளை சுனாமி நொருக்கியதோடு போர் அச்சுறுத்தல் தணிகிறது" என்ற தலைப்பில் அவர் கட்டுரை வரைந்திருந்தார். அக்கட்டுரையிலே:

புலிகளின் படை இயந்திரம் சுனாமியால் மோசமான சேதமாகியிருக்கிறது.

கடற்புலிகளின் பிரதானமுகாமான சாலை மிக மோசமான சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது

கரையோரம் இருந்த முகாம்கள் சிறு பிரிவுகள் இவ்வாறே சேதப்பட்டுள்ளன.

திங்கள் (27.12.2004) அளிவிலே புலிகளின் சண்டையிடும் உறுப்பினர்கள் 2100 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என சண்டே ரைம்ஸ்சுக்கு அறியக் கிடைத்தது.

யாழ்,நாகர்கோவில் பகுதிகளில் 250க்கு மேல் புலிகள் பலியாகியதாக கூறப்படுகிறது.

முல்லை, சாலை, நாயாறு அயற்பகுதிகளில் 1400க்கு மேற்பட்ட புலிகள் பலியாகினர்.

சம்பூர், கூனித்தீவு, கொக்குத்தொடுவாயில் அதிகளவில் பலி.

வெருகல், கதிரவெளி, வாகரை அயற்பகுதிகளில் 150 புலிகள் பலியானர்கள் என்று கூறப்படுகிறது. இத் தொகைகள் அதிகரிக்கலாமென்று தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன என்று அத்தாஷ் கூறியிருகிறார்.

இதேபோன்று 29.12.2004 ஜலண்ட இப்படிக் கூறியது.

புலிகளின் வள்ளங்களில் பெரும் பகுதியை சுனாமி அடித்துச் சென்றது"

ஞாயிறு கடல் பயங்கரம் பாதுகாப்புப்படையினரதும் சிறப்பாக கடற்படையினரதும் புலிகளுடைய வளங்களுக்கும் குறிப்பிடத்தக்களவு சேதம் விளைவித்துள்ளது என்றும் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பலவற்றைத் தாக்கியழித்த சுனாமி புலிகளை மட்டும் தப்பவிட்டிருக்காது என்றும் அவர்களுடைய வளங்களில் அநேகமானவை கிழக்குக் கரையிலேயே இருந்தன. அவர்களுடைய நடவடிக்கை ரீதியான கலங்கள் சுனாமிக்குத் தாக்குப் பிடித்திருக்கமுடியாது அவற்றுள் அரைவாசியையாவது இழந்திருப்பார்கள் எனவும் படை அதிகாரிகள் தெரிவித்தனர் என செய்தி வெளியிட்டிருக்கும் இதே ஜலண்ட் பத்திரிகை புலிகளின் ஆட்லறி வான்பிரிவு தரைவழிப் படைகளுக்கு சேதம் ஏற்படவில்லை என்று கூறி தன்னைத் தானே மறுதலித்துக் கொண்டுள்ளது.

இந்தச் 'செய்தியாளர்"களுக்கும் 'ஆய்வாளர்"களுக்கும் பொதுவான ஒரு விடயமாக அவர்களுக்கு உண்மையான கள நிலைமைகள் தெரியாது என்பது இருக்கிறது. முன்பு 'லங்கா புவத்" இருந்தது. அதுகோயபல்சுக்கு பெரியப்பாமுறை, புலிகளின் தாக்குதலில் அல்லது இராணுவத்தின் நடவடிக்கையில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டால் (1இராணுவத்திற்கு 10 புலிகள் என்ற கணக்கில்) 100 புலிகள் கொல்லப்பட்டனர் என்று லங்காபுவத் கூறிவிடும். ஆகாசபுளுகர்களுக்கு லங்காபுவத் என்று தமிழ் மக்கள் பெயர் வைக்கும் அளவிற்கு லங்காபுவத் 'நம்பகத் தன்மை"யின் குறியீடாக இருந்தது.

லங்காபுவத்தையே தோற்கடிக்கும் அளவிற்கு தங்கள் மன விகாரங்களையும் படை அதிகாரிகள் 'தகவல் வட்டாரங்கள்" என்ற பெயரில் அனாமதேயமாகத்தரும் ஊடகக் குறிப்புக்களையும் வெளியிட்டு பொச்சம் தீர்த்துக்கொள்ளும் இந்த பத்திரிகைகள் ஒரு போதும் திருந்தப் போவதில்லை. சுனாமி வரப் போகும் தகவலை தருவதற்கு முழுமுயற்சி எடுக்காமல் இப்போது நிவாரண உதவிகளுடன் இத்தீவில் கால் வைக்க முயலும் மாகானுபாவர்களை கண்ணடிக்க வக்கில்லாமல் ஆதார மற்றசெய்திகளை வெளியிடுவதோடு பலசந்தர்ப்பங்களில் அவற்றோடு முரண்படம் செய்திகளையும் தாங்களே வெளியிடும் இவர்களைக் கண்டு பரிதாபப்படுவதை தவிர எமக்கு வேறு வழியில்லை.

வின்சென்ற் புளோறன்ஸ் ஈழநாதம்

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்ப்படவில்லை

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இதுவரை இணக்கப்பாடுகள் எதுவும் ஏற்ப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் லஷ்மன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை குழுவின் செய்தியாளர் மகாநாட்டில் கருத்து வெளியிடும் போது அமைச்ர் கதிர்காமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.விடுதலைப்ப

  • தொடங்கியவர்

சுனாமி அனர்த்த நேரத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா விழா நடத்தினார்.

சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு... மதியம் தாண்ட பயமும், சோகமும் கப்பிய உணர்ச்சியுள் ஈழத்து மக்கள் அனைவரும் விழுகின்றனர். கடற்கோள் ஏற்படுத்திவிட்ட மரணங்கள் தந்த சோகம்... இங்கேயும் கடல் பொங்குமோ என்ற பயம்.. அடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் திகைப்பு... இவ்வாறு ஒன்றுமே முடியாத அவல நிலையில் முழு ஈழமும் கலங்கிக் கொண்டிருக்கிறது. நேரம் ஆக ஆக இறந்தோர் தொகை படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

தலைநகர் கொழுப்பு நேரடியாக கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், தாக்கம் இல்லாமலில்லை. மட்டக்குளியில் தமிழ்க் கல்வியாளர் சார்ந்த க.வை.தனேஸ்வரன் உள்ளிட்ட சிலரை கடல் பலியெடுத்துக் கொண்டுவிட்டிருந்தது.

வெள்ளவத்தையில் கடல் புகையிரதத் தடம் தாண்டி பொங்கி எட்டிப் பார்த்தபடியிருந்தது. வெள்ளவத்தை கடற்கரை வாழ் மக்கள் இடம்பெயரத் தொடங்கிவிட்டிருந்தனர். தொலைக்காட்சிகளுக்கு முன்னால் விழித்துக் கொண்டிருந்தும், வீதிக்கு வந்து நிகழ்கால நிலைமையை அவதானிப்பதுமாக மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

அதே வெள்ளவத்தையில் உள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் அதே அந்த தத்தளிக்கும் வேளையில் ஒரு மலர் வெளியீடு நடந்து கொண்டிருந்தது. அங்கே மல்லிகையின் 40 ஆவது ஆண்டு மலரை வெளியிட்டுக் கொண்டிருந்தார் பிரபல எழுத்தாளர் டொமினிக் ஜீவா. நவீன எழுத்தளார்களுள் ஓரளவு சமுதாயத் தொடர்பு கொண்டவர் அவர் என்றும், பல்கலைக்கழகப் பட்டத்தையே மறுத்த ஆளுமையாளர் அவர் என்றும் நினைத்த நினைப்பெல்லாம் அந்த வெளியீட்டு விழாவில் தூர எறிந்து கொண்டிருந்தார்.

'மானுடம் எழுதுகிறோம்" என்று மார்தட்டிக் கம்பீரமாக முழங்குகிற மல்லிகை ஆசிரியரால் இந்த மனுக்குல அவல நேரத்தில் எப்படி விழா நடத்த முடிந்தது? என்பது பாரிய கேள்விதான். இதில் நோக்கப்பட வேண்டிய இன்னுமொரு அம்சம், விழாவுக்கு இந்த அனர்த்த வேளையிலும் 50 பேரளவில் கலந்து விட்டிருந்தார்கள் என்பது. அவர்கள் பாவம், என்ன செய்வார்கள், மல்லிகையில் கட்டுரை போட்ட, அட்டைப்படம் போட்டதற்கு வேறு எப்படித்தான் நன்றிக் கடன் காட்டுவார்கள்?

வந்தவர்களை ஏமாற்ற விரும்பாத மல்லிகையின் பண்பாடு (?) விழாவை நடாத்தி முடித்துவிட்டது. சரி கொடிய அனர்த்தத்தின் முழு பூதாகர அவலமும் வெளிப்பட்டு விட்ட இன்றைய நிலையில், அடுத்த 'மல்லிகை" இதழில் தான் தவிர்க்க முடியாமல் விழா நடத்த நேர்ந்து விட்டது குறித்த வருத்தத்தை ஆசிரியர் தெரிவிப்பார் என்றால்... கதையை விடுங்கள். எந்த இடர் தொடர்ந்து வந்துற்றாலும் மல்லிகையைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து நெஞ்சு நிமிர்த்துகிற ஆசிரியர், இந்த கடற்கோள் அனர்த்த வேளையிலும் மலர் வெளியிட்டது குறித்து பெருமிதப்பட்டு, வீரப்பிரதாபம் எழுதிக் காட்டியுள்ளார்.

அவருக்கும், அவருக்கு கடன்பட்ட அந்த ஜம்பதின்மருக்கும் ஒரு மரபுத் தமிழ் இலக்கண அறிவரை ஒன்று (இறையானர் களவியலுரைகாரருக்கும் உண்டே முட்டை அடி);" தமிழ் என் நுதலிற்றோ? எனின், தமிழ் அன்பு நுதலிற்று" இதன் பொருள் என்ன தெரிகிறதோ, இதோ:-'தமிழ் மொழி உங்களுக்கு எதனைச் சொல்லித் தருகிறது? வேறெதனையுமில்லை. அன்பினையே சொல்லித்தருகிறது".

இந்த மரபு அறிவுரை வாசித்த கையொடு, மானுடத்துக்கு எழுதும் நவீன எழுத்தாளருடைய ஆசிரியர் தலையங்கத்தையும் வாசிக்க வேண்டும். 'மிக்க மனநிறைவுடன் நிகழ்ந்த மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலர் வெளீயிட மிகச் சிறப்புடன் நடந்து முடிந்ததில் எமக்கெல்லாம் பரிபூரண திருப்தி.... யாரெல்லாம் மல்லிகையின் உழைப்பை மதித்து விழாவில் கலந்து கொண்டார்களோ அவர் அத்தனை பேரையும் மல்லிகை என்றும் நினைவில் வைத்திருக்கும். அவர்களை காலமறிந்து கௌரவிக்கும்(?)

தினக்குரல்

சுனாமி அனர்த்த நேரத்தில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா விழா நடத்தினார்.

சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு... மதியம் தாண்ட பயமும், சோகமும் கப்பிய உணர்ச்சியுள் ஈழத்து மக்கள் அனைவரும் விழுகின்றனர். கடற்கோள் ஏற்படுத்திவிட்ட மரணங்கள் தந்த சோகம்... இங்கேயும் கடல் பொங்குமோ என்ற பயம்.. அடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் திகைப்பு... இவ்வாறு ஒன்றுமே முடியாத அவல நிலையில் முழு ஈழமும் கலங்கிக் கொண்டிருக்கிறது. நேரம் ஆக ஆக இறந்தோர் தொகை படிப்படியாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

தலைநகர் கொழுப்பு நேரடியாக கடுமையாகப் பாதிக்கப்படவில்லை என்றாலும், தாக்கம் இல்லாமலில்லை. மட்டக்குளியில் தமிழ்க் கல்வியாளர் சார்ந்த க.வை.தனேஸ்வரன் உள்ளிட்ட சிலரை கடல் பலியெடுத்துக் கொண்டுவிட்டிருந்தது.

வெள்ளவத்தையில் கடல் புகையிரதத் தடம் தாண்டி பொங்கி எட்டிப் பார்த்தபடியிருந்தது. வெள்ளவத்தை கடற்கரை வாழ் மக்கள் இடம்பெயரத் தொடங்கிவிட்டிருந்தனர். தொலைக்காட்சிகளுக்கு முன்னால் விழித்துக் கொண்டிருந்தும், வீதிக்கு வந்து நிகழ்கால நிலைமையை அவதானிப்பதுமாக மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

அதே வெள்ளவத்தையில் உள்ள தமிழ்ச் சங்க மண்டபத்தில் அதே அந்த தத்தளிக்கும் வேளையில் ஒரு மலர் வெளியீடு நடந்து கொண்டிருந்தது. அங்கே மல்லிகையின் 40 ஆவது ஆண்டு மலரை வெளியிட்டுக் கொண்டிருந்தார் பிரபல எழுத்தாளர் டொமினிக் ஜீவா. நவீன எழுத்தளார்களுள் ஓரளவு சமுதாயத் தொடர்பு கொண்டவர் அவர் என்றும், பல்கலைக்கழகப் பட்டத்தையே மறுத்த ஆளுமையாளர் அவர் என்றும் நினைத்த நினைப்பெல்லாம் அந்த வெளியீட்டு விழாவில் தூர எறிந்து கொண்டிருந்தார்.

'மானுடம் எழுதுகிறோம்" என்று மார்தட்டிக் கம்பீரமாக முழங்குகிற மல்லிகை ஆசிரியரால் இந்த மனுக்குல அவல நேரத்தில் எப்படி விழா நடத்த முடிந்தது? என்பது பாரிய கேள்விதான். இதில் நோக்கப்பட வேண்டிய இன்னுமொரு அம்சம், விழாவுக்கு இந்த அனர்த்த வேளையிலும் 50 பேரளவில் கலந்து விட்டிருந்தார்கள் என்பது. அவர்கள் பாவம், என்ன செய்வார்கள், மல்லிகையில் கட்டுரை போட்ட, அட்டைப்படம் போட்டதற்கு வேறு எப்படித்தான் நன்றிக் கடன் காட்டுவார்கள்?

வந்தவர்களை ஏமாற்ற விரும்பாத மல்லிகையின் பண்பாடு (?) விழாவை நடாத்தி முடித்துவிட்டது. சரி கொடிய அனர்த்தத்தின் முழு பூதாகர அவலமும் வெளிப்பட்டு விட்ட இன்றைய நிலையில், அடுத்த 'மல்லிகை" இதழில் தான் தவிர்க்க முடியாமல் விழா நடத்த நேர்ந்து விட்டது குறித்த வருத்தத்தை ஆசிரியர் தெரிவிப்பார் என்றால்... கதையை விடுங்கள். எந்த இடர் தொடர்ந்து வந்துற்றாலும் மல்லிகையைத் தொடர்ந்து வெளியிடுவது குறித்து நெஞ்சு நிமிர்த்துகிற ஆசிரியர், இந்த கடற்கோள் அனர்த்த வேளையிலும் மலர் வெளியிட்டது குறித்து பெருமிதப்பட்டு, வீரப்பிரதாபம் எழுதிக் காட்டியுள்ளார்.

அவருக்கும், அவருக்கு கடன்பட்ட அந்த ஜம்பதின்மருக்கும் ஒரு மரபுத் தமிழ் இலக்கண அறிவரை ஒன்று (இறையானர் களவியலுரைகாரருக்கும் உண்டே முட்டை அடி);" தமிழ் என் நுதலிற்றோ? எனின், தமிழ் அன்பு நுதலிற்று" இதன் பொருள் என்ன தெரிகிறதோ, இதோ:-'தமிழ் மொழி உங்களுக்கு எதனைச் சொல்லித் தருகிறது? வேறெதனையுமில்லை. அன்பினையே சொல்லித்தருகிறது".

இந்த மரபு அறிவுரை வாசித்த கையொடு, மானுடத்துக்கு எழுதும் நவீன எழுத்தாளருடைய ஆசிரியர் தலையங்கத்தையும் வாசிக்க வேண்டும். 'மிக்க மனநிறைவுடன் நிகழ்ந்த மல்லிகையின் நாற்பதாவது ஆண்டு மலர் வெளீயிட மிகச் சிறப்புடன் நடந்து முடிந்ததில் எமக்கெல்லாம் பரிபூரண திருப்தி.... யாரெல்லாம் மல்லிகையின் உழைப்பை மதித்து விழாவில் கலந்து கொண்டார்களோ அவர் அத்தனை பேரையும் மல்லிகை என்றும் நினைவில் வைத்திருக்கும். அவர்களை காலமறிந்து கௌரவிக்கும்(?)

தினக்குரல்

:roll: :roll: :evil: :evil:

  • தொடங்கியவர்

சுருட்டும் முயற்சி....

வாய்ப்பைப் பயன்படுத்திச் சுருட்டிக் கொள்ளலாம் என ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முற்பட்டுள்ளது போல் தெரிகின்றது. சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து சிறிலங்காவிற்கு உதவ பல அரசுகள் முன்வந்துள்ள நிலையில் சுனாமி அனர்த்தத்தின் பெயரால் அதிகரித்த நிதியுத வியைப்பெற அரசாங்கம் முற்பட்டுள்ளதாக எண்ண வைக்கின்றது.

சுனாமி பாதிப்புக் குறித்து சிறிலங்கா அரசு போலியானதொரு மதிப்பீட்டு அறிக்கையையே வெளிப்படுத்த முற்பட்டுள்ளது என்பதை அரசாங்கத் தரப்புத் தகவல்களே அம்பலப்படுத்தி விடுபவையாக உள்ளன. எடுத்துக்காட்டாகää சுனாமி அனர்த்தத்தினால் இறந்தவர்கள் தொகை சுமார் 30ää000 ஆயிரம் பேர் என்றே முதலில் அறிவிக்கப்பட்டிருந்ததாயினு

  • தொடங்கியவர்

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இந்தியா உதவ வேண்டும்விடுதலைப்புலிகள் கோரிக்கை

கொழும்பு, ஜன. 28- ஈழத்தமிழர் பகுதியிலும் இந்தியா நிவாரண உதவி அளிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்தியா உள்பட பலநாடுகள் உதவி வருகின்றன. ஆனால் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும்தான் அந்த உதவிகள் செய்யப்படுகின்றன.

விடுதலைப்புலிகள் ஆளுகையில் உள்ள பகுதிகளும் சுனாமியால் பாதிக்கப்பட்ட போதிலும் அங்கு எந்த ஒருநாடும் உதவி முன்வரவில்லை. இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது„-

சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் செய்யும் இந்தியா வடக்குப் பக்கமும் தனது கனிவான பார்வையை திருப்பவேண்டும். தெற்கிலும் கிழக்கிலும் மட்டும் உதவி செய்து கொண்டு இருக்கவேண்டாம். துயரப்பட்ட எங்கள் பகுதி மக்களுக்கும் இந்தியா கருணை காட்ட வேண்டும். உதவிகள் எந்த ரூபத்தில் வந்தாலும் அந்த நாங்கள் தடுக்கவில்லை. அரசு பிரதிநிதிகளுடன் இணைந்தே பணி செய்திருக்கிறேhம். இதற்காக அரசு உதவியை வரவேற்கிறேhம். தொழில்நுட்ப உதவியும் எங்களுக்கு தேவைப்படுகிறது. பல ஆண்டுகளாக அவதிப்படும் எங்களுக்கு இந்த பேரழிவு மேலும் துயரத்தை இழைத்துவிட்டது. தமிழ்நாட்டின் மீது இலங்கை அரசின் விரோத மனப்பான்மை தொடரத்தான் செய்கிறது. எங்கள் பகுதிக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அன்னானையும் கனடா பிரதமரையும் வரவிடாமல் இலங்கை அரசு தடுத்தது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது. மேலும் பல உலகத்தலைவர்கள் இங்கு வர விருப்பம் தொpவித்தபோதிலும் இதை ஒரு மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு அணுகவில்லை. இவ்வாறு கூறினார்.

புலிகளுடன் அரசு உடன்பாடில்லை

இலங்கையில் சுனாமியால் பாதித்த மக்களுக்கு சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் நிவாரண உதவிகளை மக்களுக்கு பங்கிட்டு தர இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் இணைந்து செயல்படும் வகையில் பொதுவான ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்க யோசனை தொpவி;க்கப்பட்டது. இதை புலிகள் தலைவர் பிரபாகரன் வரவேற்றhர். இப்போது இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை மந்திhp லஷ்மண் கதிர்காமர் கூறியது வருமாறு„-

பொது அமைப்பு குறித்து இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் தீவிரமாக பேச்சு நடத்தி வருகின்றனர். ஆனால் இன்னமும் உடன்பாடு எட்டப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Thanx: Dinakaran

  • தொடங்கியவர்

எமது மக்களுக்கு உதவி கிட்டுவதற்காக இலங்கை அரசுடன் பேசிவருகின்றோம்

முல்லைத்தீவு நலன்புரி நிலையத்தில் பாலசிங்கம் தெரிவிப்பு ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக் கென உலகின் அனுதாபத்தால் கிடைத்த நிதிகள் எம் மக்களின் நல்வாழ்வுக்காகக் கிடைக்க வேண் டும்.அதற்காக இலங்கை அரசுடன் ஒருமட்டத் தில் புலிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர். கொழும்பிலும் கிளிநொச்சியிலும் உள்ள சமா தான செயலகங்கள் இந்தப் பேச்சுக்களை நடத்தி வருகின்றன.

- இவ்வாறு தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம். ஆழிப் பேரலையால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மற் றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளுக்கு நேற்று விஜயம் செய்த அவர் இயற்கை அனர்த்தம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார் திரு மதி அடேல் பாலசிங்கமும் உடன் வந்திருந்தார்.

வடமராட்சி கிழக்கில் ஆழியவளையில் இருந்து பாலசிங்கம் தம்பதியரை கடற்புலிகளின் படகில் ஏற்றிச்சென்ற தளபதி சூசை பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளை கடலில் இருந்தவாறு அவர்களுக்குக் காண்பித்தார்.

ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களையும் பாலசிங்கம் தம்பதியர் நேரில்சந் தித்து ஆறுதல் கூறினர். முள்ளியவளை வித்தியா னந்தாக் கல்லூரியில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் மத்தியில் உரையாற்றும் போதே பால சிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

ஈழத்தமிழ் மக்களையும் உலகில் வாழும் தமிழ்மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிய துயரச் சம்பவம் ஆழிப்பேரலை அனர்த்தம். இப்படியான பேரழிவுகள் 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடக் கின்றன என வரலாறுகள் கூறுகின்றன.

ஆனால், சமீப காலத்தில் இப்படியான பெரிய அனர்த்தம் எதுவும் - தமிழீழ மண்ணில் நிகழ்ந்த தில்லை. எமது மக்களுக்கு மட்டுமல்ல. உலகத் தமிழினத்துக்கே பெரும் அதிர்ச்சியை இது கொடுத் துள்ளது.

அனர்த்தத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழி வின் ஆழமான பரிமாணங்களை எல்லாம் நாம் அறிவோம். அதன் தாற்பரியத்தை வார்த்தை களால் கூறமுடியாது. ஆறுதல்கூடச் சொல்லமுடி யாத அளவுக்கு இந்தத் துயரம் உங்களை அழுத் தும் என்பது எங்களுக்குத் தெரியும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகத் தமிழ் மக் கள் என்ன செய்தார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை உங்களுக்கு எடுத்துக் கூறவே இங்கு வந்தேன்.

தலைவரின் அழைப்பின்பேரில் நான் இங்கு

வந்தேன். இலங்கை அரசு எமது மக்களுக்கு உதவி செய்வதில் என்னென்ன தடைகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி வருகின்றது என்பதை அறிந்து அதனைச் சர்வதேசத்துக் குத் தெரியப்படுத்துவதே எனது முக்கிய நோக்கம்.

நோர்வேயின் முக்கிய அமைச்சர்கள் இங்கு வந்து தலைவரைச் சந்தித்தபோது நானும் உட னிருந்தேன். எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துவிளக்கி எமது பகுதிகளை மீளக் கட்டி யயழுப்ப உலக நாடுகளின் உதவி தேவை என நாம் வலியுறுத்தினோம்.

இப்போது தலைவரின் பிரதிநிதியாக உங் களைச் சந்திக்க இங்கு வந்துள்ளேன். இரு தினங்கள் தலைவருடன் பேசினேன். அவரின் ஆழமான உணர்வலைகளை என்னால் புரிய முடிந்தது.சகல இராணுவ , அரசியல் நடவடிக் கைகளையும் ஒத்திவைத்துவிட்டு பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புனர்வாழ்வு அளிப் பதற்காக முழுப் புலிகள் இயக்கத்தையும் அதனோ டிணைந்த சகல அமைப்புகளையும் இந்தப் பணி யில் அவர் இறக்கியுள்ளார்.

மக்களைக் காப்பாற்றவும் அவசர உதவிக ளைச் செய்யவும் எமது கடற்புலிகள், அரசியற் பிரிவு உட்பட அனைத்துப் படையணிகளும் தமி ழர் புனர்வாழ்வுக் கழகம் உட்பட சகல பிரிவுகளும் தலைவரால் மீட்புப் பணிக்கு அனுப்பப்பட்டுள் ளன. எமது விடுதலை இயக்கமே உங்களுக் குப் பேருதவி செய்து வருகின்றது என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.

சர்வதேச மட்டத்திலும் இலங்கை அரசுடனும் பேச்சுக்களை நடத்தி உலகத் தலைவர்களை இங்கு அழைத்து அவர்களுடன் கலந்தாலோ சித்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை வளம் படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க எமது தலைமை முழு முயற்சிகளையும் செய்துவரு கின்றது. இந்தத் தகவலை உங்களுக்குச் சொல் லத்தான் இங்கு வந்திருக்கின்றேன்.

இந்தப் பாடசாலையில் - அகதி முகாமில் - நீங் கள் வாழ்க்கையைத் தொடர நாங்கள் அனும திக்கப் போவதில்லை.

வீடமைப்புத் திட்டத்தின் கீழ், உங்களை உங் கள் சொந்தக் காணியில் குடியமர்த்தவும் மீண் டும் தொழில்வாய்ப்பை உங்களுக்கு உருவாக் கித்தரவும் பெரியளவிலான புனர்நிர்மானத் திட்டத்துடன் எமது இயக்கம் முழுமையாக - முழு மூச்சுடன் - பணியாற்றி வருகின்றது என்ற செய் தியை உங்களுக்குச் சொல்லத்தான் வந்திருக் கின்றேன்.

இதற்காக கொழும்பு அரசுடனும் நாங்கள் ஒருமட்டத்தில் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின் றோம். வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்கள் ஏராளமான உதவிகளை நிதி உதவியோடு நிவாரணப் பொருள்களையும் வழங்கிக்கொண் டிருக்கிறார்கள். அந்தப் பொருள்கள் இங்கு வந்த டைந்ததும் எமது இயக்கத்தின் உப அமைப்பான தமிழர் புனர்வாழ்வுக் கழகம் போன் றவை உங்க ளுக்கு அவற்றை வழங்கிக்கொண்டிருக்கின் றன.

அவசர கால உணவு, உடை மற்றும் மருந்து போன்ற அவசர உதவிகள் உங்களுக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால், இது ஆரம்பகால உதவி கள் மட்டுமே. இதை வைத்து கொண்டு வாழ்க் கையை நடத்த முடியாது என்று எங்களுக்குத் தெரியும்.

எனவே, புதிய வீடுகளை அமைப்பதற்கும் மீளமைப்பைத் துரிதப்படுத்தி அகதி முகாமில் இருந்து மக்களை அவர்களது சொந்த இடத் திற்கு திரும்பிச் செல்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

உலக நாடுகள் பெருமளவான உதவிகளைச் செய்ய வாக்களித்துள்ளன. ஆனால், இந்த உதவி கள் இலங்கை அரசு ஊடாகத்தான் வரவேண்டி யிருக்கின்றது. ஓர் அரசு என்ற ரீதியில் வெளி நாடுகள் உடனடியாக தமது உதவிகளை அர சுக்கே கொடுக்கும்.

இந்த அரசு உதவி நிதியை எடுத்து எமது மக் களுக்கு அதனை சரிவர பங்கிடுமோ என்பதில் எமக்கு சந்தேகம் என்று நாங்கள் கூறுகின் றோம்.

சிங்கள அரசு சுனாமி அனர்த்தத்தை தனது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கப்பட்ட நிதி உதவியை வேறு வழிகளில் தனது அரசைப் பலப்படுத்தவும், தனது இராணுவ இயந்திரத் தைப் பலப்படுத்தவும், தமது அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்தவும் பயன்படுத்தலாம் என்ற நோக்கில் அரசு செயற்படுகிறது.

நாங்கள் உலகநாடுகளிடம் ஒரு வேண்டு கோளை விடுத்துள்ளோம்.

வடக்கு - கிழக்கில் தான் பெரியளவில் அழிவு ஏற்பட்டிருக்கின்றது. வடக்கு - கிழக்கின் கரையோ ரப் பிரதேசந்தான் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில்தான் 20 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எமது மீனவச் சமூகம் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வந்திருக்கின்றது. இராணுவம், கடற்படையின் ஒடுக்குமுறை காரணமாக எமது மீனவச் சமூகம் நீண்ட காலமாகப் பெரும் துன்ப, துயரங்களை அனுபவித்துள்ளது. சுமைகளோடு வாழ்ந்தது அந்த நிலையில் இப்போது ஆழிப்பேரலை அனர்த் தம் ஏற்பட்டுள்ளது.

மீனவச் சமூகத்தின் துன்ப வரலாறு ஆழிப் பேரலையுடன் வந்ததல்ல. தலைவர் சொல்லி யிருக்கிறார் முதலாவது ஆழிப்பேரலை இராணு வத்தால் ஏற்பட்டது என்று. இராணுவம், கடற்படை ஆகியவற்றின் கொடுமையால் பல்லாயிரக் கணக்கான மீனவர்கள் தமிழீழத்தில் கொல் லப்பட்டனர். மீனவத் தொழில்துறை பாதிக்கப் பட்டது. மீனவ மக்கள் சமாதானச் சூழலில் தமது வாழ்வை மீளக் கட்டியமைக்க முயன்றபோது இயற்கையின் அனர்த்தத்தால் இப்போது மீண் டும் ஒரு பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தான் இரண்டாவது ஆழிப் பேரலை என்று தலைவர் சொல்கிறார்.

நீண்டகாலமாகத் துன்பப்படும் இந்த மக்க ளுக்கு நிரந்தரமான வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் உலக நாடு களிடம் கோருகின்றோம்.

போராட்டம் என்ற வகையில் அரசியல் உரி மைக்காகப் போராடுவது வேறு. இது மக்களின் பொருளாதார வளத்துக்கான போராட்டம். இதில் நாங்கள் சிறிலங்கா அரசுடன் பேசி, அரசுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பெருந்தொகை வெளி நாட்டு நிதியுதவிகள் எமது பாதிக்கப்பட்ட மக்க ளுக்கும் வந்து சேரும் வழிகளை அமைத்துக் கொடுக்கக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவ தற்குப் பேச்சுக்களை நடத்திக் கொண்டிருக்கின் றோம். பேச்சு ஒருமட்டத்தில் நடக்கின்றது. கொழும் பில் இருக்கும் சமாதானச் செயலகத்துக்கும் கிளி நொச்சியில் இருக்கும் சமாதானச் செயலகத்துக் கும் மத்தியில் பேச்சுக்கள் நடக்கின்றன.

நிவாரண உதவிகளை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சமத்துவமாகப் பகிர்ந்தளிப்பதற்கு இருதரப்பும் இணைக்கப்பாடு கண்டு ஒரு கட்ட மைப்பை உருவாக்குவதற்காகத் தான் பேச்சு நடக்கின்றது. இதிலும் எங்களுக்குச் சில சிக்கல் கள் இருக்கின்றன.

சந்திரிகா அரசின் நிர்வாகத்தின் கீழ் இந்தக் கட்டமைப்பைக் கொண்டுவருவது பிரச்சினைக் குரியது. தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற் காக சந்திரிகா அம்மையார் அனர்த்தம் நிகழ்ந்த - பேரழிவு- சூழ்நிலையிலும் தனது அரசியல் நகர்வுகளை மேற்கொள்ள யோசிக்கிறார்.

ஆனால், தலைவர் பிரபாகரன் நோர்வே அமைச்சரிடம் கூறினார், இந்த நிதியுதவி எவை யும் எமது அமைப்பு ஊடாக வரத்தேவையில்லை. நீங்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாவது உதவிகளைக் கொண்டு வந்து எமது மக்களுக்கு அந்தப் பணத்தை நேரடியாகக் கொடுத்து, அந் தத் திட்டங்களை நீங்களே நின்று செய்து மக்க ளின் வாழ்வை வளம்படுத்தினால் போதும் - என்று

விடுதலைப் புலிகளுக்கு இந்த நிதி வரவேண் டும் என்று நாங்கள் நிர்ப்பந்திக்கவில்லை. உல கத்தின் அனுதாபத்தால் வந்த நிதிகள் எமது மக் களின் நல்வாழ்வுக்காகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் எமது இயக்கத்தின் நிலைப்பாடு.

உங்கள் துயரமான மனநிலை எங்களுக்குப் புரிகின்றது. உங்கள் ஆழமான உணர்வலை கள் எங்களுக்குப் புரிகின்றன. கடலை, சமுத்திரத் தைத் திட்டிப் பயன் இல்லை. எந்தநேரமும் கடல் அமைதியாகத் தான் இருக்கின்றது. சூறாவளி ஏற்படும்போது கொந்தளிக்கும். இது கடற்றொழி லாளர் சகலருக்கும் தெரியும்.

கடலுக்குக் கீழ் பெரிய பூகம்பம் ஏற்பட்டுத் தான் அனர்த்தம் நிகழ்ந்தது - என்றார் பால சிங்கம்.

Jaffna Uthayan

  • தொடங்கியவர்

சந்திரிகா எந்த வழியால் போகிறார்? - நிலாந்தன்

நீ எதையாவது புதிதாக உருவாக்க விரும்பினால் முதலில் ஏற்கனவே இருப்பதை அழித்துவிட வேண்டும் என்று ஜேர்மனிய தத்துவஞானியான நீட்N~ ஒரு முறை கூறியிருந்தார். இது இலங்கைத்தீவின் இப்போதுள்ள நிலைக்கு மிகப்பொருத்தமான ஒரு கூற்றகத்தெரிகிறது.

குறிப்பாக தென்னிலிங்கையின் கடலோரங்களை மீளவடிவமைக்கும் விடயத்தில் அரசாங்கம் முன்பு செய்யமுடியாதிருந்த ஒரு விடயத்தை சுனாமி செய்திருக்கிறது. என்றே செல்லவேண்டும். மேற்படி கடலோரக்கட்டுமானங்கள் பல சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக மீள வடிவமைக்கப்படாதவைகளாய் இருந்தவை என்றும் அவற்றை சுனாமியின் பெயரால் இப்பொழுது புதிதாக கட்டியெழுப்ப ஒரு வாய்புக்கிடைத்திருக்கிறது என்று துறைசார் நிபுனர்கள் கூறுகிறார்கள்.

17ம் நூற்றாண்டில் லண்டன் மாநகரை சாம்பலக்கிய நெருப்பு எப்படி இப்போதுள்ள லண்டன் மாநகரை புதிதாக வடிவமைக்க உதவியதோ அப்படித்தான் இதுவும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 17ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ?லண்டன் நெருப்பு? அப்போதிருந்த பழைய மரக்கட்டடங்களை எரித்தழித்துவிட்டது. இது பின்பு புதிய லண்டன் மாநகரை கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்பைவழங்கியது.

இலங்கைத்தீவிலும் இப்படித்தான் சுனாமி ஆழிவின் பின் அசேநகமான கடலோரக் குடியிருப்புக்களையும் நகரங்கள் பட்டினங்களையும் புதிதாய் வடிவமைக்க ஒரு சந்தர்ப்பம்கிடைத்திருக்கிற

Mathan, நன்றி.............

நன்றி மதன் அண்ணா.

  • தொடங்கியவர்

அரசுக்குள் முரண்பாடுகள்: அஸ்கிரிய பீடாதிபதி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் முரண்பாடுகள் வலுப்பெற்று வருவதாக அஸ்கிரிய பீடாதிபதி மகாநாயக்கர் உடுகம புத்தரகிட்ட தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று சப்ரகமுவ மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆளும் கட்சியினர் மகாநாயக்க தேரரை சந்தி;த்த போதே இந்த கருத்தை அவர் வெளியிட்டு;ள்ளார்.

அரசாங்கத்திற்குள் இருக்கும் இரு கட்சிகளுக்கும் இடையே நாளுக்கு நாள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை இரு தரப்பினரும் விடுத்து வரும் அறிக்கைகளின் மூலம் தெரியவருகிறது.

இவ்வாறு அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை வைத்துக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனத் தெரிவித்த புத்திரகிட்ட தேரர்ää

நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் கட்சிகளிடையே இருக்கும் முரண்பாடுகள் களையப்படுவது அவசியமாகும் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.

நன்றி - புதினம்

நல்ல செய்தி எப்படியோ ஜேவிபியும் சுந்திரகட்சியும் பிரிந்தால் சரி.

  • தொடங்கியவர்

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் பிரிட்டன் பிரதிநிதி றொபேட் ஈவன்ஸ் இலங்கை வருகிறார்

ஜரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதிநிதியான தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான றொபேட் ஈவன்ஸ் தமிழீழத்தில் ஏற்பட்டுள்ள ஆழிப்பேரலை அனர்த்தத்தை நேரில் பார்வையிட தமிழீழம் வருகை தரவுள்ளார்.

இலண்டனில் உள்ள ஈழத் தமிழர்களின் விசேட வேண்டுகோளை அடுத்து எதிர்வரும் 5ம் திகதி இலங்கை வருகை தர உள்ள றொபேட் ஈவன்ஸ், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, காலி ஆகிய பகுதிகளை பார்வையிட உள்ளார்.

தமிழ் தகவல் தொழில்நுட்ப ஒருங்கமைப்பினரால் (TITA - Tamil Information Technology Association) இலண்டன் சிறீ கனக துர்க்கை அம்மன் ஆலய நிதி உதவியுடன் நடைபெறும் TITA/SKTATT யாழ் இலவச கணினி பயிற்சி நிலையத்தில் பயின்று வெளியேறும் மாணவர்களுக்குரிய சான்றிதழ் வைபவம் மற்றும் TITA/SKTATT இலவச ஆங்கில பயிற்சி நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் யாழில் 6ம் திகதி றொபேட் ஈவன்ஸ் பங்குபற்றவுள்ளார்.

தொழிற்கட்சி உறுப்பினரான றொபேட் ஈவன்சுடன் இலங்கையரான ஹரோ கவுன்சிலர் தயாவும் உடன் வருகை தருகிறார்.

றொபேட் ஈவன்ஸ் தமிழீழத்திலே தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அனைத்த மாவட்டங்களிலும் முன்னெடுத்து வரும் நிவாரணப் பணிகளை நேரில் பார்வையிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிமகன்/Puthinam

  • தொடங்கியவர்

மொழி ஒரு தேசியத்தின் மூச்சு..... அயர்லாந்து மக்களின் போராட்டத்தில் இருந்து ஒரு பார்வையும் சில பதிவுகளும்

ம.தனபாலசிங்கம் (அவுஸ்திரேலியா)

அயர்லாந்து மக்கள் தமது சுதந்திரத்திற்காக பல நூற்றாண்டுகளாகப் போராடினார்கள். இந்தப் போராட்டம் பல சோதனைகளையும் வேதனைகளையும் சந்தித்ததை நாம் அறிவோம். இந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக 24 ஏப்பிரல் 1916 இல் அயர்லாந்து குடியரசுப் பிரகடனம் செய்யப்பட்டது. இதனை சிலுவையில் மரணித்த யேசநாதர் உயிர்த்து எழுந்த ஈஸ்ரருடன் தொடர்பு படுத்தி ஈஸ்ரர் எழுச்சி என்பர்.

இதில் பங்குகொண்ட புரட்சியாளர்களுள் பற்றிக் பியேஸ் இயேம்ஸ் கொனொலி மற்றும் பன்னிருவர் இராணுவ சட்டத்தின் கீழ் சுட்டுக்கொல்லப்பட்டனர். பற்றிக் பியேஸ் மே மாதம் 3ம் திகதி 1916ம் ஆண்டு அதிகாலை 3.30 மணியில் சுட்டு கொல்லப்பட்டார்.

குற்றவாளிக் கூண்டில் இருந்து மரணத்துக்கு முகம் கொடுத்த வேளையிலும் பியேஸ் தன்னை தண்டித்தோரை பார்த்து

'நாங்கள் தோற்றது போல் உள்ளது. நாங்கள் தோற்கவில்லை. போராட மறுப்பது தோற்பதாகும். போராடுவது என்பது வெற்றியாகும். எனக்கூறினான்."

போராட்டத்தின் வளர்ச்சியின் இன்னொரு படியாக 1920 இல் னுரடிடin தலைநகராகக் கொண்ட அயர்லாந்தின் பெரும்பகுதிகளுக்கு ஒரு பாராளுமன்றமும் டீநடகயளவ இனை தலைநகராகக் கொண்ட ஆறு மாவட்டங்களுக்கு ஒரு பாராளுமன்றமும் ஏற்படுத்தப்பட்டது.

இந்தப் பிரிவினையை சின் பென் (நாம் எமக்கு என்னும் அரசியல் இயக்கம்) ஏற்கமறுத்தனர். உள்நாட்டு யுத்தம் தொடர்ந்தபோதும் அயர்லாந்து தேசத்திற்கான அங்கீகாரத்தை டிசம்பர் 5ää 1922 இல் பிரித்தானிய பாராளுமன்றம் அங்கீகரித்தது.

கெரிலா கொமாண்டராகää அரசியல் கைதியாகää வெற்றிகண்ட புரட்சிவாதியாகää உள்நாட்டு யுத்தத்தில் தன்பக்கத்தில் திடமாக நின்ற எட்மொன் டி வலெறா (1882 1975) 1932 இல் ஒரு அரசாங்கத்தை அமைத்தார்.

இதன் பிரதம மந்திரியாக இருந்து படிப்படியாக பிரித்தானியாவுடனான தொடர்புகளை துண்டித்தார். முடிவாக 1937 இல் புதிய அரசியல் யாப்புடன் இறைமை கொண்ட ஜ்றிஸ் சனநாயக அரசு உருவாக்கப்பட்டது.

இந்த அரசு அயிறிஸ் தேசியத்தையும் கத்தோலிக்கத்தையும் தமது தனித்துவத்தை நிலைநிறுத்த இணைத்தது என சுழல குழளவநச என்னும் அயர்லாந்து வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுவர்.

அயர்லாந்து தேசம் எப்படி அமையவேண்டும் எனக் கனவுகண்ட டி வலெறா 'நாங்கள் விரும்பும் இலட்சிய அயர்லாந்தின் மக்கள் மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்காக மாத்திரமே பொருட்செல்வத்தை மதிப்பர்ää இவர்கள் குறைந்த சௌகரியங்களுடன் திருப்திகொண்டு தமது ஓய்வு நேரத்தை உயர்வான சிந்தனைகளுக்கு அர்ப்பணிப்பர்.

தேசத்தின் நாட்டுப்புறங்கள் கலகலப்பான குடிமனைகளையும்ää அதன் வயல்களிலும் கிராமங்களிலும் குத்தல்ää இடித்தல்ää கொழித்தல்ää புடைத்தலென படைப்போசையின் ஒலியும்ää குறும்பான சிறுவர்களின் குதூகலமும்ää உடற்பலம் மிக்க வாலிபத்தின் போட்டிகளும்ää வனிதையரின் சிரிப்பொலியும்ää நெருப்பு புகையும் அடுப்பங்கரை முதுமையின் அழகு கொட்டும் ஞானத்தின் அரங்காகவும் இருக்கும் எனக் கூறுகின்றார்.

டி வலெறா கூறும் உயர்ந்த சிந்தனைகளுள் மொழி முதல் இடத்தை பெறுகின்றது. (அவர் குறிக்கும் மொழி தொன்மையும்ää செம்மையும் கொண்ட அயர்லாந்தின் ஹேலிக் மொழியாகும்) எமக்கு எமது மொழிக்கு ஈடாக வேறு எந்த மொழியும் இல்லை. இது எங்களுடையதுää எங்களுக்கு மாத்திரமே. இது வெறும் குறியீட்டிற்கு அப்பாற்பட்டது. இது எமது தேசியத்தின் மிக முக்கியமான உறுப்பாகும்.

ஆயிரம்ää ஆயிரம் ஆண்டு காலமாக எமது மூதாதையினரின் சிந்தனைகளில் இது செப்பனிடப்பட்டது. அவர்களின் சிந்தனைகளும்ää அனுபவங்களும் இந்த மொழியில்தான் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளத

  • தொடங்கியவர்

ஆராவது கண்ணீர் வடிச்சபடி மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்...

'ஆராவது கண்ணீர் வடிச்சபடி மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்... எனக்குக்கெட்ட கோபம் வந்திடும்..."

எல்லாருக்கும் வணக்கம்! வணக்கம் என்ன கனகாலமா ஆளையே காணேல்லை... வாகனக்காரங்கள் ஆராவது ஆத்திரத்தில் ஒரேயடியா அடிச்சு நொருக்கிப் போட்டாங்களாக்கும் எண்டு நினைச்சிருப்பியளாக்கும். என்னை அறிஞ்சவை தெரிஞ்சவையள் காணிற நேரமெல்லாம் கேட்பினம் 'என்ன அப்பு எழுதிறதை விட்டிட்டியள். நொட்டை தாங்கேலாமல் ஆராவது வெருட்டிப்போட்டாங்களோ? எண்டு. ம்...ம்... அடுத்தவங்கள் வெருட்ட மருண்டு போற ஆளில்லை இந்த ஏரம்பர்! எட நல்ல விசயத்தை துணிச்சு சொல்லிறதுக்கு, அதுகும் வன்னியில நான் ஏன் பயப்பிட வேணுமென்டு கேட்கிறன்.

உதுக்கு மேல நடந்ததைப் பற்றிக் கதைக்கிற தருணமும் இல்லை இப்ப. ஏனெண்டால் எங்கட இனம் பெரிசா ஒரு அழிவைச் சந்திச்சிருக்கு. கன சனத்தை நாங்கள் இழந்திருக்கிறோம்.! சொத்த, பத்தெண்டு காலாகாலமாச் சேர்த்ததையும் சுனாமி அள்ளிக்கொண்டு போட்டிது. அவனவன் அங்கையிஞ்சை உதவி செய்ய ஆலாப்பறக்கிற நேரத்தில எங்கட 'சிங்கிடி நோணா" தமிழாக்களின்ரை சடலங்களுக்குப் பக்கத்தில நிண்டுகொண்டு, போறவாற நாடுகளையெல்லாம் இழுத்திழுத்து ஒப்பாரி வைச்சுக் கொண்டிருக்கிறா. என்னடா! எங்கையிருந்து உப்பிடி ஒரு ஞானம் பிய்ச்சுக் கொண்டு வந்திச்செண்டு பார்த்தால், பிணங்களின்ரை தொகையைக் காட்டி சர்வதேச சமூகத்துக்கு முன்னால பிழைப்பு நடத்தலாம் எண்டிற கேவலமான புத்திதான் பாருங்கோ அது! சே.... உதுகும் ஒரு பிழைப்பே! எந்தக்கேவலமான பிழைப்பும், உந்தளவுக்கு கேவலம் இல்லை! தங்கட இனவாதப் போக்கின்ரை வன்முறையால கன வருசங்களாகப் பாதிக்கப்பட்ட சனத்துக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்யிறத்துக்கான 'சிரான்' ஜயும் உருப்படவிடேல்லை, 'இடைக்காலத்தீர்வுதிட்ட"த்தையும் ஏற்றுக்கொள்ளேல்லை. இப்ப என்னடாண்டால கலைச்சுக்கலைச்சுப் பிடிச்சு கைகுடுக்கிறா. கோபால் பற்பொடிக்கு மாதிரி ஈ-யெண்டு போஸ் வேற குடுக்கிறா! இழப்பைப் பொறுத்தவரை இனசனம் பார்க்ககூடாது. உண்மையைச் சொல்லப் போனால் இன்னுமொரு தரையிறக்கத்தை அனுமதிக்கக்கூடாதெண்டு கரையெல்லாம் முகாம் அடிச்சு நிண்டு, அலையடிச்சதில செத்துப் போட்டினம். சண்டையில சாகிறது வேற, இது வேற! நினைச்சா ஏதோ மனசில வேதனையாகத்தான் கிடக்கும். எங்கட மனம் இப்படிப் பாடுபட, 'கோல்" ஜயும், ஹம்பான்ரோட்டை' யையும் காட்டி, அங்கதான் முழு இழப்பும் எண்டு சொல்லிறதோட, வாற உதவிப்பொருள்களில ஆறிலொரு பங்கை மட்டுந்தான் தாங்கள் எடுக்கிறம், மிச்சத்தையெல்லாம் புலியளிட்டைக் குடுகிறம் எண்டு அண்டாப்புளுகை எல்லோ அவிழ்த்து விடிறா. இஞ்சை அவையின்ர வந்து குவியிற லட்சணத்தை ஒருக்கால் பார்ப்போமெண்டால் பிபிசி இன்ரை கமராவயர் காலியில சிக்குப்பட்டுக் போய்க் கிடக்கு. எங்கட செய்தியாளர்மாரும். பேய்க்காயள். அன்றாடம் தேவையான பொருட்களெல்லாம் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில தவறாமல் கிடைக்கிறது. ஆனால் அது எங்கையிருந்து கிடைக்கிதெண்டு கேட்டால் 'அறிஞ்சு கொள்ளேலாமல்' கிடக்கிதாம். தயவுசெய்து உந்த 'விலாங்குபம்மாத்து' விளையாட்டுக்களை கொஞ்சம் ஒத்தியாவது போடுங்கோ! எங்கட தலையளைக் காட்டி எடுக்கிற பிச்சையை வைச்சே, எங்கட தலையளிலை குண்டுகளைக் கொட்டக்கூடிய 'நோணா"வின்ர நோகாத நகர்வுகளுக்கு தெரியாமல் கூட ஒத்துழைச்சு, பாதிக்கப்பட்ட சனத்தின்ர பழியை வாங்கிக்கொள்ள வேண்டாம்! அந்த வெள்ளைக் காரத்தங்கச்சி பிரான்சிஸ் ஹரிசன் தன்னோட வேலையைத்தரமாச் செய்யிது. அந்தளவுக்கொண்டாலும் செய்யாட்டி தமிழனா இருந்து என்ன அர்த்தம்? நீங்கள் சொல்லிறது வெறுமனே செய்தி மாத்திரமல்ல. இஞ்சை நொந்துபோயிருக்கிற எங்கட சனத்தின்ரை நிலைமை எண்டதையும் மனசில வைச்சுச் செயற்படுங்கோ! மற்றது இன்னுமொரு விசயம் நாங்கள் கி.பி. 2005 இலும். பிரபாகரனுக்குப்பின் 51ஆம் ஆண்டிலையும் இருகிறம். அப்பிடியிருக்க பன்னாட்டு சேவையில கிடைச்ச ஒரு வாய்ப்பில அதேன் இயக்கத்தைக் குறிப்பிடிறதுக்கு Rebel (கலகக்காரர்கள், கிளிர்ச்சியாளர்கள்) எண்டு பாவிக்கிற பழக்கம்? விடுதலைப்புலிகளின்ர மாவீரர் தினம் பற்றியும் குறிப்படிறனீங்கள். சனத்தின்ர விடிவு இயக்கத்துக்கான சர்வதேச அங்கீகாரத்திலையும் தான் தங்கியிருக்கு. அதுக்காக நாணொணடும் பரணிபாடச்சொல்லிச் சொல்லேல்லை. மனச் சாட்சியோட பாதிக்கப்படிற மக்களின்ர குரலா வெளியுலகத்துக்கு ஒலிக்கிற ஒரு பத்திரிகையாளனாக இருந்தால் போதும். தயவுசெய்து 'விறகு நெருப்பில' மட்டும் குளிர்காயவும்! மற்றது பாருங்கோ, உந்த உலக நாடெல்லாம் கண்ட கிண்ட பிரச்சினைக்கெல்லாம் விசாரணைக்கமிசனுள் வைப்பினம். எங்கட நாட்டிலையும் காணாமல் போன பட்டியலில் உப்பிடியானகன 'கமிசனுகள்" இருக்கினம். வெளிநாட்டுக்காரைக் கொண்ட அப்பிடி ஒண்டை வைச்சு, உந்த நிவாரணப்பொரட்கள பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேர்றதை உறுதி செய்யேலாதோ?

என்னவோங்கோ! முதல் தொங்கிக்கொண்டிருந்த 4.5 பில்லியன் உதவியையும் இப்படியாவது (இன,மத, போதமில்லாமல் எல்லாற்றை சடலங்களையும் வைச்சு, அழுது காட்டி) எடுத்து ராணுவத் தேவையளை பூர்த்திசெய்து, வீர 'துட்ட'கைமுனுக்களின் கைகளில நாட்டை விளையாடக்குடுக்கத்தான் அலுவல்கள் நடக்கிது. அதுக்காகத்தான் அந்தப் பொறுப்பும் ராணுவத்திட்டை குடுக்கப்பட்டிருக்கு. இப்போதைக்கு ஆமியின்ரை சாப்பாட்டுத் தேவையளையாவது நிவாரணத்தில இருந்து எடுத்தாலே, அவாவின்ரை கஜானாவின்ர கஷ்ரம் ஓரளவுக்கு எண்டாலும்தீரும் தானே! என்னவோ ஒண்டு சொல்லிறன். ஆராவது ஒரு நாடு நல்ல உள்ளத்தோட உதவி செய்ய முன்வந்தால், அதை ஏற்றுக் கொண்டு உறவாக இருக்கோணுமே தவிர அதுக்காக மற்றாக்களின்ரை கையளையே நம்பியிருக்கக்கூடாது. எங்களின்ரை பலம், நாங்கள் ஒவ்வொருவரும் தான்! அதிலையும் வெளியால வாழிற எங்கட சனம் தங்கட கடமைக்கு மேலாலயே செய்யிறது நீங்களெல்லாம் அறிஞ்சியிருபியள்தானே! சில ஆக்கள் நினைப்பீங்கள். 'ஏதோ தாய்-தகப்பனுகள் தங்கட மனச்சாட்சிக்குச் செய்யினம். அடுத்த தலைமுறைக்கு சமூகம் கைமாறேக்கிள்ளை நிலைமை மாறிடும்' எண்டு. அது பிழையுங்கோ! இன உணர்வு மனச்சாட்சியில தங்கியிருக்கேல்லை. இழக்கப்படிற ஒவ்வொரு ஈழத்தமிழன்ரை உயிராலையும், எங்கட தலைவரின்ரை நெறிகாட்டலாலையும் இன உணர்வு சகலதுமாய் வியாபிச்சிருக்கு. உதாரணத்துக்கு ஒரு சம்பவம் நான் சொல்லிறன். எனக்குத் தெரிஞ்ச ஒரு தம்பி வெளியால போய்க்கனகாலம் ஆயிட்டிது. அவருக்கு போகேக்கிள்ளை கைக்குழந்தையா ஒரு பொம்பிளைப்பிள்ளை இருந்தது. இப்ப கிட்டடியில அவற்றை இடத்தில இருந்து வேற ஒரு தம்பி வந்து என்னைச் சந்திச்சுது. உங்களுக்குத் தெரியும்தானே, உந்த விடுப்பக் கேட்கிறதெண்டால் எனக்கும் அல்வா மாதிரி எண்டு. அப்பை நானும் விளா வாரியா விசயங்களைக் கேட்டன். கீழ்ப்பந்திக்கு வாங்கோ, வடிவாய்ச் சொல்லிறன்!

கை;குழந்தையா போன் அந்தச் சின்னன் இப்ப பதினைச்சு வயசு, பத்தாம் வகுப்பு முடிச்சு, பல்-டொக்ரரா வரப்படிக்கிதாம். அப்படிப் படிக்கேக்கிள்ளை போக்குவரத்து, அதுஇதுககெண்டு உதவித்தொகை கிடைக்குமாம்! தன்ர முதலாவது சம்பளம் நாட்டுக்குத்தான் எண்டு சொல்லி, எடுத்து வைச்சுக்குடுத்திச்சாம்! தகப்பன் குடுக்கிறதுக்கு மேலாக அவாவும் தன்னோட கையிருப்பைப் பொறுத்து அப்படியே இயக்கத்துக்கும், புனர்வாழ்வுக்கழகத்துக்கும் தொடர்ந்தும் குடுத்துக் கொண்டு வாறாவாம்! உண்மையில அந்த வீட்டில வயசுக்கு வந்த இரண்டு பொம்பிளைப் பிள்ளையள் இருக்கினம். ஆம்பிளைப்பிள்ளையள் இல்லை. அப்படியிருந்தும் தங்களைப் பற்றி நினை;காமால் நாட்டைப்பற்றி நினைக்கிற அப்பிடியான சனம் இருக்கேக்கிள்ளை எங்களுக்கென்ன யோசனை!! அதுசரி, நீங்கள் யோசிக்கிறது. விளங்கிது. அங்கை எங்கட சனம் எப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு உழைச்சுக் கொண்டிருக்க, இஞ்சை வேலைவெட்டி ஒண்டும் செய்யாமல், நோகாமல் இருந்து கொண்டு, ரெலிபோண் அடிச்சு காசனுப்பச் சொல்லிறதும், அந்தக் காசில் மோட்டர்சைக்கிள் வாங்கி பெற்றோலும் விட்டுக் கொண்டு, நேரகாலம் தெரியாமல் பெட்டையளுக்குப் பின்னால் சுத்திறதுகளும் எங்கட சந்ததியள் எண்ட தானே நீங்கள் யோசிக்கிறீயள். இனத்துக்கு அது குறுகிய காலப் பிரச்சினை பாருங்கோ! அவையளுக்கு கழுத்தை நீட்டிற ஆக்களுக்குத்தான் அது நீண்டகாலப் பிரச்சினை. ஆரோ சிலர் தங்களை ஏதோ பெரிய வைஜந்திமாலா, பட்டம்மா, சரோஜாதேவி.. சீச்சீ ! நான் என்ர காலத்திலேயே நிக்கிறன். இப்ப ஆரது? உந்த என்ன பேர்... அதுகும் அயத்துப் போச்சு.. ஆ.... சோனியா அகர் வாலோ.... ஆட்டுவாலோ எண்ட நினைப்பிலை, இரவல் பெற்றோலிலை ஓடிற TVS களுக்கு கழுத்தை நீட்டினால் அது தனிப்பட்ட பிரச்சினை தானேங்கோ. சே! எங்கையோ தொடங்கி புனர்வாழ்வு வரைக்கும் வந்திட்டன். எதிலை விட்டனான்? ஆ. அப்பிடி கனக்க வெளிநாட்டு விசயங்கள் வைச்சிருக்கிறன். பேந்து பேந்து தாறன்.

அப்பிடி ஆயிரம் விசயங்கள் இருக்கு கதைக்கிறதுக்கு பத்தாக் குறைக்கு எருமைமாடு வேற எனக்குக் கிட்ட வந்திட்டிது. ஜயோ.. என்ர பக்கத்துவீட்டுக்காரர் தங்களைத்தான் நான் சொல்லிறன் எண்டு கோவிக்கப்போயினம். சத்தியமா நான் அந்த எருமையளை சொல்லேல்லை. இயமன்ர எருமையைச் சொல்லிறன். சுனாமி அமளியோட பிறந்தநாளுகளையும் மறந்திட்டன். எத்தினையெண்டு முந்திச் சொன்னனான்?.... பாருங்கோ வயசு போறதால வாக்கும் மாறத்தொடங்கிட்டிது. ஆ.. எழுபத்தி மூண்டெண்டு சொன்ன ஞாபகம். அதோட ஓண்டைக் கூட்டிக் கொள்ளுங்கோ! அதாலதான் நேர காலத்துக்குள்ளை போய்ச்சேர்றதுக்கு முன்னால உங்களோட எவ்வள வைக்கதைக்கலாம் எண்டுதான் இறங்கிட்டன்.

நீங்கள் வேற பிரச்சினையளில் இருக்க. நான் வந்து என்ர கதையளைச் சொல்லிக்கொண்டிருக்கிறன. இண்டைக்கு முடிக்க முதல் ஒண்டைச்சொல்லிறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். முக்கியமாக ஒருத்தரும் நடந்ததை நினைச்சு கவலைப்பட்டக்கொண்டு இருக்கக்கூடாது. நாங்கள் ஒரு சின்ன இனமா இருக்கலாம். ஆனாலும் சிறுத்தை இனம் பாருங்கோ! மற்ற இனங்கள் மாதிரி இல்லாமல், உலகத்திலேயே எங்கட இனம் மட்டும் தான் இரண்டு சூரியனுக்கச் சொந்தக்காரர்.

இயற்கைச்சூரியன் ஒண்டு இனத்துக்கான சூரியன் மற்றவர். ஒண்டும் யோசிக்காமல் எதிர்காலத்தில் பற்றுறுதியோட இருக்கோணும். உலகநாடுகள் உதவுதோ இல்லையோ உங்கட இயக்கம் உங்களுக்காக இருக்கெண்டிறதை நினைவில வைச்சிருக்கோ! தலைவற்றை விருப்பப்படி தம்பி சூசை முன்னுக்கு நிண்டு எல்லாம் செய்து கொண்டிருக்கிறா முல்லைத்தீவுக்குப் போய்வாற சனங்கள் சொல்லுது. அதேமாதிரி மற்றமற்ற இடங்களிலையும் கெதியாத் தொடங்கிடும். நம்பிக்கையாக இருங்கோ! அதைவிட்டிட்டு ஆராவது இடம்பெயர்ந்தோருக்கான நிலையங்களில் கண்ணீர் வடிச்சபடி, மூக்கு உறிஞ்சிக்கொண்டு இருக்கிறதா கேள்ளிப்படோணும்... எனக்குக் கெட்டகோபம் வந்திடும். வந்து அலகு பேர்த்துப்போடுவன் பேர்த்து. சொல்லிப்போட்டன். ஓம்!

பொறுங்கோ! பொறுங்கோ! கடைசியாய்க் கிடைச்ச விசயங்கள் கொஞ்சம் கிடக்கு. ஆரோ ஒருத்தர் இந்தோனேசியாவில் நிண்டு சொல்லியிருக்கிறார். 'இனியெண்டாலும் 'ஆச்சே" இலையும், இலங்கையிலயும் பிரிவினை கோரிறதை விட்டிட்டு, சுமூகமாக வாழப்பார்ப்பினம் எண்ட நினைக்கிறேன்" எண்டு. இதென்ன கதை? நாங்களென்ன சுனாமிக்குத் தாற சோத்துப்பாசலுக்கும், சுடுதண்ணிப்போத்திலுக்காகவு

ரெலிபோண் அடிச்சு காசனுப்பச் சொல்லிறதும், அந்தக் காசில் மோட்டர்சைக்கிள் வாங்கி பெற்றோலும் விட்டுக் கொண்டு, நேரகாலம் தெரியாமல் பெட்டையளுக்குப் பின்னால் சுத்திறதுகளும் எங்கட சந்ததியள் எண்ட தானே நீங்கள் யோசிக்கிறீயள். இனத்துக்கு அது குறுகிய காலப் பிரச்சினை பாருங்கோ! அவையளுக்கு கழுத்தை நீட்டிற ஆக்களுக்குத்தான் அது நீண்டகாலப் பிரச்சினை.
:P :lol:

நன்றி மதன் ஈழநாதம்

இணையத்திலுண்டா.....

  • தொடங்கியவர்

இல்லை என்றே நினைக்கிறன். இது சூரியனில் இருந்து

  • தொடங்கியவர்

நறுக்கென? ஆட்சியைக் குழப்பும் சுனாமி.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலும் நடைபெறப்போவதில்லை என்ற சிறிலங்கா சனாதிபதியின் அதிரடி அறிவிப்பால் அதிகபட்சம் அதிர்ச்;சியடைந்து போயுள்ளார்கள். அவரது சகோதரரும், பிரதான பங்காளிகளும்தானாம்!

ஏப்படியாவது சனாதிபதிக் கதிரையில் ஒரு தடைவ குந்திவிட்டாவது எழும்பும் நாற்காலிக் கனவில் ?சதாபோதையுடன்? மிதக்கும் அனுரா பண்டாரநாயக்க தனது சகோதரியின் இந்த அறிவிப்பால் சோர்ந்து துவண்டு தொளதொளத்துப் போயுள்ளாராம்.

ஏற்கனவே ஜே.வி.பியினருக்கும், சிறிலங்கா சுதந்திரக்கட்சியினருக்குமி

  • தொடங்கியவர்

சிங்கள இனவாதிகளின் சுயநலம்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் ?சந்தர்ப்பவாத? கூட்டணிக்கான உடன்படிக்கை தொடர்பான விடயங்களில், சனாதிபதி தரப்பினர் பாதிப்பு ஏற்படும் வகையில் நடப்பார்களேயானால் அதன்விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும் எனவும். இது தொடர்பாக தாம் தனித்து தீர்மானங்களை எடுக்க வேண்டிh நேரிடுமென்றும் ஜே.வி.பியனரின் தலைவர் சோமவன்ச அமரசிங்க அரசுக்கு கடும் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இது அவரின் உண்iiயான எச்சரிக்கையா, அல்லது வெறும் மிரட்டல்தானா என ஆராய்வது ஒரு புறமிருக்க இப்படி ஒரு அச்சுறுத்தலை வெளிப்படையாக சனாதிபதிளை நோக்கி விடுமளவுக்கு ஜே.வி.பி அட்சிக்குள் அதிகார பலம் கொண்ட ஆதிக்க சக்தியாக வளர்ந்துள்ளது என்பது வெளிப்படையாகியுள்ளதுடன், ஜே.வி.பியினரின் அதிகார தோரணை கொண்ட செயற்பாடுகளால் அரசுக்குள் சி.ல.சு கட்சிக்கு சவாலான பங்காளியாக ஜே.வி.பி வளர்ந்து விட்டுள்ளதையும் உணரக்கூடியதாக உள்ளது.

சாத்தானோடு கூட்டுச்சேர்ந்துள்ள சனாதிபதி அதன் மிரட்டல்களுக்கெல்லாம் இது நாள்வரை பணிந்து வந்துள்ள நிலையில் இப்போது அவருக்கும், அவரது ;பண்டா? பாரம்பரிய அரசியலுக்கும் அவரது பிரதான தோழமைப்பங்காளிகளே மோசமான எதிரிகளாக உருவாகி வருகின்ற சு10ழலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேறுஎதாவது புதிய பேயுடன் கூட்டுச்சேரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று கூறப்படுகின்றத. இந்த நிர்ப்பந்தத்திற்கு ?சுனாமியால்? ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிகளும், சர்வNதுச அழுத்தங்களுமே காரணம்.

?இரவல் புடவையில் இது நல்லகொய்யகம்? என்பதுnபுர்ல் ?சுனாமி?யால் கிடைத்துவரும் உதவிகளை தமது சுயு அரசியல் இலாபங்கi நோக்கிய பிராசாரத்திற்கு ஜே.வி.பியும், தனது ஆட்சியை தக்கவைக்கும் முயற்சிகளும் சனாதிபதி பயன்படுத்த நினைப்பதும் முயற்சிப்பதும் சர்வதேச சமூகத்திற்கு எரிச்சலூட்டும் விடயங்களாவிட்டுள்ள நிலையில் ஜே.வி.பியை அடக்கி வாசிக்குமாறும், மனிதநேயப்பணிகளில் குறுக்கிடாது இருக்குமாறும், சனாதிபதி கூட்டணிப் புரோக்கர்களான மங்கள சமரவீர மற்றம் அனுரா பண்டார நாயக்க மூலம் ஜே.வி.பி தலைமைக்கு விடுத்துள்ள மறைமுக எச்சரிக்கையே அவர்களை சீற்றம் கொள்ளச்செய்துள்ளதாம்.

இந்த நிலையில் கடந்த ஒன்பது மாத காலத்துள் ஆட்சியின் சகல கட்டமைப்புகளுள்ளும், நன்கு வேரூன்றி விட்ட ஜே.வி.பியினர் மீண்டும் ஒரு கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபடும் நோக்குடனேயே தமது சகல நடவடிக்கைகளையும் திட்டமிடுவதாகவும் இதற்கு பிராந்திய வல்லாதிக்க சக்தியொன்று பின்னணியில் இயங்குவதாகவும் தென்னிலங்கை அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

எதுவானலும் சந்தர்ப்பவாத ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூட்டணிக்குள் சுயநலவாதம் ஆட்சியை சிதைக்குமளவுக்கு விரிசலை ஏற்படுத்தி வருகிறது.

Eelanaatham

  • தொடங்கியவர்

நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. பெர்னாட் பொத் வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு செல்வாரா ?

நாளை 03-02-2005 வியாழக்கிழமை நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. பெர்னாட் பொத் அவர்கள் (Minister of foreign affairs - Mr. B.R. Bot ) நெதர்லாந்தின் தெற்காசியப்பகுதிகளிற்கான வெளிவிவகார அமைச்சர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை இந்தோனேசியா ஆகிய நாடுகளின நிலைமையை பார்தையிடுவதற்காக செல்ல இருக்கிறார்.

குறிப்பாக பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவின் அட்சே மாநிலத்திற்கு விஜயம் செல்லும் இதேவேளை இலங்கையில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு பிரதேசங்களுக்கு செல்வாரா என்று அவரது பயண அட்டவணையில் குறிப்பிடப்படவில்லை.

இதன் காரணமாக நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களும் மற்றும் தமிழ் அமைப்புக்களும் நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சின் தொலைநகல் ஊடாகவும் மின்னஞ்ஞல் ஊடாகவும் நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் வடக்கு-கிழக்கிற்கு பிரதேசங்களுக்கு செல்லவேண்டுமென்பதை வலியுறுத்தி கேட்டுக்கொண்ட வண்ணம் உள்ளார்கள். ஐரோப்பா வாழ் தமிழ்மக்களும் தமிழ் அமைப்புக்களும் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பகுதிகளிற்கு சென்று பார்வையிடுமாறு நெதர்லாந்தின் வெளிவிவகார அமைச்சரிற்கு உங்கள் வேண்டுகோளை தெரிவிக்கலாம்.

கீழ்காணும் தொலைநகல் அல்லது மின்னஞ்ஞல் முகவரிகளை உபயோகிக்கவும்.

வெளிவிவகார அமைச்சு - நெதர்லாந்து

தொலைநகல் : 0031 (0)70 3484848> 0031 (0)70 3486675

நெதர்லாந்தின் தெற்காசியப்பகுதிகளிற்கான வெளிவிவகாரப்பிரிவு.

தொலைநகல் : 0031 (0)70 3485323

மின்னஞ்ஞல் : wt.mohr@minbuza.nl

இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகம் - இலங்கை

தொலைநகல் : 0031 (0)70 3485323

மின்னஞ்ஞல் : nethemb@sri.lanka.net

மது

  • தொடங்கியவர்

ஆழிப்பேரலையில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையை அடையாளம் காண மரபணு பரிசோதனைக்கு உத்தரவு

baby_81_06_36601_200.jpg

ஆழிப்பேரலையில் அநாதரவான நிலையில் கண்டெடுக்கப்பட்டு தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையின் பராமரிப்பிலுள்ள 4 மாத ஆண் குழந்தைக்கு உரிமை கோரும் பெற்றோரை அடையாளம் காண்பதற்கு மரபணு பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கல்முனை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 26ம் திகதி மாலை கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் எஸ்.சிறீஸ்கந்தராஜா என்பவரால் கண்டெடுக்கப்பட்டு எஸ்.அழகையா என்பவர் ஊடாக இந்த குழந்தை கல்முனை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இந்த குழந்தைக்கு பல பெற்றோர்கள் தமது குழந்தை என வைத்தியசாலை நிர்வாகத்திடம் உரிமை கோரியிருந்தனர்.

இருப்பினும் கல்முனையைச் சேர்ந்த ஜெயராஜா - ஜூனித்தா தம்பதிகள் இந்த குழந்தை தங்களுடைய குழந்தை அபிலாஸ் எனக் கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசார் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

கடந்த 12ம் இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற போது குறிப்பிட்ட தம்பதிகளிடம் பராமரிப்பிற்காக குழந்தையை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடைக்கால உத்தரவொன்றை பிறப்பித்தது.

வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் கே.முருகானந்தம் மகப்பேற்று வைத்திய நிபுணர் எம்.முகுந்தன் ஆகியோர் நீதிபதியைச் சந்தித்து குழந்தையின் உடல் ஆரோக்கியம் கருதி தொடர்ந்து வைத்தியசாலைப் பராமரிப்பில் வைப்பதற்கு அனுமதி கேட்டது.

இதனையடுத்து குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலை பராமரிப்பில் இருந்து வருகிறது.

இன்று கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.பி.முகைதீன் முன்னிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பெற்றோர் எனக் கூறும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழந்தைக்கு பல பெற்றோர் உரிமை கோரியிருந்தாலும் சட்ட ரீதியாக குறிப்பிட்ட தம்பதிகளே உரிமை கோரியிருப்பதால் குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்குமாறு வாதிட்டனர்.

மகப் பேற்று வைத்திய நிபுணர் எம்.முகுந்தன் தமது சட்டத்தரணி ஊடாக சமர்ப்பித்த வாதத்தில் தற்போது ஆழிப்பேரலையினால் பல பெற்றோர்கள் தமது குழந்தைகளை இழந்துள்ளனர்.

எதிர்காலத்தில் மேலும் சிலர் இக் குழந்தைக்கு சட்ட ரீதியாக உரிமை கோர இடமுன்டு.

இந்நிலையில் உரிமை கோருபவர்களையும் குழந்தையையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துவதன் மூலமே பெற்றோரை அடையாளம் காண முடியும் என்றார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி குழந்தையையும் அதற்கு உரிமை கோரும் பெற்றோரையும் மரபணு பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

எதிர்காலத்தில் யாராவது உரிமை கோரினால் அவர்களையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதுவரை குழந்தை வைத்தியசாலை பராமரிப்பில் இருக்க வேண்டும்.

உரிமை கோரும் பெற்றோர் வைத்தியசாலை சட்ட திட்டத்திற்கு அமைய பார்வையிட முடியும் என்றும்䤠தனது உத்தரவில் குறிப்பிட்டு விசாரனையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையில் குழந்தை தொடர்ந்தும் வைத்தியசாலை பராமரிப்பில் இருக்க வேண்டும் என நீதிமன்றத்தினால் விடுக்ப்பட்ட உத்தரவையடுத்து ஆத்திரமடைந்த உரிமை கோரும் தம்பதிகளும் அவர்களது உறவினர்களும் நீதிமன்றத்திற்கு வெளியே வந்து வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பினார்கள்.

அங்கிருந்து நேரடியாக வைத்திசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழந்தையை எடுத்துச் செல்ல முற்பட்டார்கள். இதனால் வைத்தியசாலை ஊழியர்களுக்கும் அவர்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக வைத்தியசாலை அலுவல்கள் ஓரிரு மனித்தியாலங்கள் பாதிக்கப்பட்டன.

இதனையடுத்து பொலிசார் அங்கு வரவழைக்கப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

இவர்கள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கும்䤠வைத்திசாலை ஊழியர்கள் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் செய்தமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட போதிலும் பின்பு நிலமை சுமூக நிலைக்கு திரும்பியுள்ளது.

குழந்தைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் கைது செய்யப்பட்டோர் விளக்கமறியலில்

கல்முனை ஆதரார வைத்தியசாலையில் இன்று நண்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரில் இருவர் நிபந்தனையின் பேரில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனைய இருவரும் எதிர்வரும் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்ப்பட்டுள்ளனர்.

ஆழிப்பேரலையின் பின் மீட்கப்பட்ட குழந்தைக்கு உரிமை கோரும் தம்பதிகளான முருகுப்பிள்ளை ஜெயராஜா அவரது மனைவி ஜூனித்தா ஜெயராஜா ஆகியோரே நாளை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் இன்றிரவு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மரபண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என பொலிசார் நீதிபதி கே.தட்சனாமூர்த்தி முன்னிலையில் சமர்ப்பித்த அறிக்கையையடுத்தே இவர்களுக்கு பினை வழங்கப்பட்டது.

குழந்தையை வைத்தியசாலைக்கு சென்று பார்ப்பது என்றால் இருவர் மட்டும் தான் செல்ல வேண்டும் என்றும் நீதிபதி இவர்களுக்கு எச்சரிக்கையுடன் உத்தரவிட்டார்.

வைத்திசாலையில் சட்ட விரோதமாகக் கூடியது. அத்துமீறி பிரவேசித்தது䤠தாதியர்களை தாக்கியது䤠போன்ற குற்றச்சாட்டுக்கள் இந்த நால்வர் மீதும் பொலிசாரால் சுமத்தப்பட்டுள்ளது.

ஏனைய சந்தேக நபர்களான சாமித்தம்பி சிறீஸ்கந்தராஜா தாமோதரம் பிரதீபன் ஆகியோரே எதிர்வரும் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

News: Puthinam

Photo: TamilNet

  • தொடங்கியவர்

ஜே.வி.பி. விலகினால் அரசுக்கு தாம் ஆதரவளிக்கத் தயார் என்கிறது ஐ.தே.க.

அரசாங்கத்திலிருந்து ஜே.வி.பி. வெளியேறினால் அரசாங்கத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் 15 அம்ச திட்டங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாரகவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி நேற்று அறிவித்துள்ளது.

எதிர்க்;கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையில் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர் ராஜித சேனாரட்ன இதனைத் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கான ஐக்கிய தேசிய கட்சி; இந்த ஆதரவானது வெறுமனே அமைச்சு பதவிகளை நோக்கமாக கொண்டதல்ல என்றும் இது நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு தமது கட்சி வழங்கும் பங்களிப்பாகும்; என்றும் அவர் அங்கு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்ää

அரசாங்கத்திலிருந்து ஜே.வி.பி. ஒருபோதும் விலகப்போவதில்லை. ஜே.வி.பியினருக்கு தற்போது அதிகாரம் தேவை என்றும் எனவே அரசிலிருந்தும் அதிகாரத்திலிருந்தும் ஜே.வி.பி ஒருபோதும் விலகாது. அரசாங்கத்தை மிரட்டி பணியவைக்கும் நடவடிக்கைகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று ராஜித சுட்டிக்காட்டினார்.

புதினம்

  • தொடங்கியவர்

அனர்த்த நிவாரணம் அமைதி முயற்சி ஆகியவற்றை உறுதி செய்ய கிளிண்டன் நியமனம்

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணி தொடர்பில் சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடரும் இழுபறித்தீர்வு காண உதவிபுரியவும் அனர்த்த நிவாரணப்பணிகள் சீராக நடைபெறுவதை உறுதிசெய்யவும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனான் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனை ஐ.நா.வின் சிறப்புத்தூதராக நியமிக்கவுள்ளார்.

இந்தத் தகவலை ஜ.நா. இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிளிண்டனின் நியமனம் குறித்த ஐ.நாவின் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழிப்பேரலையால் பயங்கரமாகப் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாää சிறீலங்கா ஆகிய நாடுகளில் மீள்கட்டுமானப்பணிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கு ஐ.நாவின் விசேட தூதுவராக கிளிண்டனை நியமிக்க எண்ணியுள்ள அனான்ää இந்த இரு நாடுகளிலும் அரசுக்கும் விடுதலை அமைப்புக்களுக்கும் இடையில் பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சச்சரவுகளுக்கான தீர்வுக்கும் கிளிண்டன் உதவவேண்டும் எனக்கருதுகிறார் என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவிலும் சிறீலங்காவிலும் சுதந்திரத்துக்காக இருதசாப்த காலத்துக்கு மேலாகப் போராடிவரும் இயக்கங்களுக்கும் அந்நாடுகளின் அரசாங்கங்களுக்கும் இடையில் பணியாற்றி தனது அரசியல் முதிர்ச்சி மூலம் நல்ல பங்களிப்பை நல்கி தீர்வுக்காக உழைக்க கிளிண்டனுக்கு நல்ல சந்தரர்ப்பம் கிடைத்துள்ளது என்று ஐ.நா. வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஆழிப்பேரலையால் அழிந்துபோன இடங்களைப் பார்வையிட சிறீலங்காவுக்கு அண்மையில் வந்திருந்த கோபி அனானை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் செல்லவிடாமல் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா தடுத்தமை குறிப்பிடத்தக்கது.

புதினம்

  • தொடங்கியவர்

இந்திய இராஜதந்திரத்தை அடித்துச் சென்ற சுனாமி

-ஜெயராஜ்-

தெற்காசியப் பிராந்தியத்தில் அனர்த்தத்தை விளைவித்த சுனாமியினால் ஏற்பட்ட அரசியல் தாக்கம் புவிசார் அரசியலில் ஏற்படுத்திய விளைவுகள் தொடர்பான உணர்வுகள் படிப்படியாக வெளிவரத் தொடங்கி விட்டன. இவ் உணர்வுகள் வெளிப்படுவது தவிர்க்கமுடியாதவையே ஆகும். ஏனெனில் புவிசார் அரசியலில் சுனாமி அரசியல் ஏற்படுத்திய தாக்கம் பெரியதாகும். சுருக்கமாகக் கூறுவதானால்ää தெற்காசியப் பிராந்தியத்தின் இராணுவ சமநிலையை மாற்றிவிடக் கூடிய அளவிற்கு அதன் தாக்கம் உள்ளது.

சுனாமியினால் தென்கிழக்காசிய நாடுகள் பாதிப்புற்ற போது இந்தியாதான் இப்பிராந்தியத்தின் (இந்து சமுத்திர பிராந்தியத்தின்) வல்லரசு என்ற எண்ணப்பாட்டுடனேயே செயற்பட்டது. இதன் வெளிப்பாடே பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிவாரணம் மட்டுமல்லää மீட்புப்பணிக்கென தனது கடற்படைக் கப்பல்களையும்ää உலங்குவானூர்திகளையும்ää இராணுவத்தினரையும் அனுப்பி வைத்தது. அத்தோடு இந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு உலக நாடுகள் நிவாரண உதவிகளை வழங்க முன்வந்தபோதும் தம்மாலேயே தமது இழப்பை ஈடுசெய்ய முடியும் என்ற ரீதியில் நிவாரண உதவிகளையும் இந்தியா ஏற்க மறுத்து விட்டது.

ஒரு வகையில் பார்த்தால் இந்திய அரசு தனது நாட்டில் மேற்கொள்ள வேண்டியதான நிவாரணப் பணிகளையும் ஓரம் தள்ளிவிட்டுää அண்டைய நாடுகளுக்கு நிவாரண உதவிகளை உணவுப் பண்டங்கள்ää நிதிää ஆளணி என்ற ரீதியில் உதவ முன்வந்தமைக்கு காரணம் சுனாமியினால் ஏற்பட்ட அனர்த்தத்தை ஏனைய நாடுகள் -குறிப்பாக மேற்குலக வல்லரசுகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி இப் பிராந்திய அரசியலில் தலையீடு செய்வதை நிறுத்துவது அல்லது மட்டுப்படுத்துவது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே ஆகும்.

ஆனால் இந்தியாவின் இத்தகைய எதிர்பார்ப்பு தோல்வியில் முடிவுற்றது என்பதே உண்மையாகும். அத்தோடு இச்சுனாமி அரசியல் தொடர்பான இராஜதந்திர செயற்பாட்டை இந்தியா திறம்பட்ட முறையில் கையாளவும் இல்லை. இவ்வாறான நிலைமை தோன்றியமைக்கு இத்தகையதொரு சந்தர்ப்பத்தை எவ்வாறு தமது நலனுக்குப் பயன்படுத்த முடியும் என மேற்குலக வல்லரசுகள் ஏற்கனவே அனுபவரீதியில் புரிந்து கொண்டு இருந்தமையும்ää சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதம் மிக உயர்வாக இருந்தமையுமே காரணமாகும்.

சுனாமி தாக்கியதும் இலங்கைக்கெனப் பெரும் நிவாரண உதவிகளை இந்திய அரசு அறிவித்ததோடு விரைந்தும் செயற்பட்டது. இந்தியாவின் சரக்குக் கப்பல்களும்ää கடற்படை கப்பல்களுமே சுனாமிக்குப் பின்னர் இலங்கை வந்தடைந்த முதலாவது நிவாரணக் கப்பல்களாக இருந்தன.

இவ் விரைந்த செயற்பாட்டின் மூலம் சிறிலங்கா அரசை தனது பிடிக்குள்ஃ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம் என்றே இந்தியா கருதியது. ஆனால்ää வழமைபோலவே இந்தியாவுடன் கலந்து போசாமலே- ஏன் இந்தியாவிற்கு அறிவிப்புச் செய்யாமலே அமெரிக்க போர்க்கப்பல் இலங்கைத் துறைமுகங்களுக்குள் பிரவேசிக்கவும்ää அமெரிக்க இராணுவ விமானங்கள் விமானத் தளங்களில் தரையிறங்கவும் சிறிலங்கா அரசால் அனுமதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் உட்பட பல நாட்டுப் போர்க்கப்பல்கள்ää விமானங்கள் இராணுவää கடற்படை சிப்பாய்கள்ää சிறிலங்காவிற்குள் பிரவேசித்தன. இது ஒரு வகையில் இப்பிராந்தியத்தின் இராணுவச் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி தம்மிடம் உள்ளதென இந்தியாவிற்கு மேற்கு நாடுகள் உணர்த்தியஃ வெளிப்படுத்திய சம்பவம் எனக் கொண்டாலும் தவறாக மாட்டாது.

அமெரிக்கத் துருப்புக்கள் இலங்கையில் தரையிறங்கியதும்ää இது குறித்து இந்திய அரசு விசனம் அடைந்திருப்பதாகவும்ää சிறிலங்கா அரசிற்கு சில அறிவித்தல்களைச் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்தபோது சிறிலங்கா அதனை மறுத்தது. அமெரிக்க வருகை இந்தியாவுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதானதொரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டது.

ஆனால் தற்பொழுது வரும் தகவல்களின் படியும்ää இந்தியத்தரப்பில் இருந்து வெளிப்படுத்தும் கருத்தின் அடிப்படையிலும்ää அமெரிக்க இராணுவத்தினரின் வருகை குறித்து சிறிலங்கா அரசு இந்தியாவிற்கு தெரியப்படுத்தவில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. அதாவது இந்தியாவுடன் ஆலோசனையோ அன்றிப் கருத்துப்பரிமாற்றமோ இன்றி அமெரிக்கத் துருப்புக்கள் வருகைக்கு சிறிலங்கா அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனை வெளிப்படுத்துவது போன்றே இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங்கின் பேட்டியும் அமைந்திருந்தது. 'இரண்டு நாடுகளும் கலந்தாலோசித்த பின்னர் யார் வேண்டுமானாலும் இலங்கைக்கு உதவி செய்திருக்கலாம்." என்ற நட்வர்சிங்கின் கூற்றுக்கள் இந்தியா இதில் ஓரம் கட்டப்பட்டு இருந்தது என்பதையே வெளிக்காட்டுவதாக இருந்தது.

இந்த வகையில் சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர போட்டியில் இந்தியா பின்னடைவைச் சந்தித்த அதேவேளைää இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் இந்தியாவின் அணுகுமுறை தோல்வி கண்டுள்ளது. ஏனெனில்ää சுனாமி அரசியலின் பின்னணியில் ஏற்படக்கூடிய அன்றி பயன்படுத்திக்கொள்ளக் கூடியதான மிகப் பெரிய அரசியல் வாய்ப்பினை இந்திய இராஜதந்திரிகள் வெற்றிகரமாக கையாளவில்லையென்றே கூறலாம்.

கடந்த நூற்றாண்டின் 90 களின் ஆரம்பத்திலிருந்து இலங்கை தொடர்பான இராஜதந்திர செயற்பாட்டில் இந்தியா பெரிதாக எதனையும் சாதித்துக் கொண்டதாக இல்லை. ஒரு மந்த நிலையிலேயே அது இருந்தது. மாறாகத் தவறானதொரு வழிமுறையைக் கைக்கொண்டது என்றே கூறலாம். அதிலும்ää இனப்பிரச்சினை தொடர்பான அதன் இராஜதந்திரமானது உணர்ச்சிகளின் அடிப்படையிலானதாக இருந்ததே ஒழிய -மதிப்பிடத்தக்க மதிநுட்பத்துடனும்ää தேச நலனுடனும் கூடியதாகவும் இருக்கவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்த இந்திய அரசு இலங்கையின் தமிழ் மக்கள் தொடர்பான அணுகுமுறையில் பெரும் தவறிழைத்திருந்ததென்பது வெளிப்படையானது.

இனப்பிரச்சினைக்கு சமாதானப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் எனக் கூறிய இந்திய அரசின் நடவடிக்கைகள் சம நிலையானதாக இருக்கவில்லை. சிறிலங்கா அரசுக்கு சார்பாகவே இருந்தது.

மறுபுறத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மாறாகச் செயற்படுபவர்களையும்ää சிறிலங்கா அரசின் கைக்கூலிகளாகச் செயற்படுபவர்களையும் கொண்டே தமிழ் மக்களை அணுகவும் இந்தியா முனைந்துள்ளது. அதாவது தமிழ்மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போயுள்ள சக்திகளை தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இந்தியா முயன்று கொண்டிருந்தது.

அதுமட்டுமன்றி இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு முன்பாக இந்தியாவிற்கு இதில் உரிய பங்கை வழங்குவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தயாராகவே இருந்தது. இதன் காரணமாகவே விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இந்தியா ஊடாகப் பயணம் செய்வதற்கு அனுமதிக்;குமாறு கோரிக்கைகளும் விடுக்கப்பட்டது.

ஆனால் இந்திய மத்திய அரசும் சரிää தமிழக அரசும் சரி இலங்கையின் கள நிலவரம்ää இலங்கை தொடர்பாகச் சர்வதேச நாடுகளின் பார்வையில் ஏற்பட்டு வரும் மாற்றம் விடுதலைப்புலிகள் விடயத்தில் அவர்களின் அண்மைக்காலப் போக்கு என்பன போன்ற எதிலுமே கவனம் செலுத்தவில்லை. இராஜதந்திர நகர்வுகளை ஏதோவொரு வரையறைக்குள் உட்பட்டது போன்றதாகவே இலங்கை விவகாரத்தை இந்தியா கையாண்டது.

இவ்வாறு இந்தியா கையாண்டமைக்கு வறட்டுத்தனம் பொருந்திய சில இராஜதந்திரிகள் காரணமாக இருந்திருக்கலாம். குறிப்பாக அண்மையில் காலமான முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் டிக்சிற் போன்ற இராஜதந்திரிகளின் தீர்க்கதரிசனமற்ற செயற்பாடுகளும் இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் ராம் போன்றவர்களின் வறட்டுத்தனமான வழி காட்டுதலும் காரணமாக இருந்திருக்கலாம்.

மேலும்ää சுனாமி அனர்த்தத்தின்போது மேற்கு நாடுகளின் இராஜதந்திரத்தைப் புரிந்து கொண்டாவது இந்திய இராஜதந்திரிகள் நடந்து கொண்டிருக்கலாம். இந்தியா மட்டும்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்துள்ள நாடு அல்ல சிறிலங்காவிற்கு நிதியுதவி செய்யும் பிரதான 12 நாடுகளில்; அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து முக்கிய நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடைசெய்தே உள்ளன.

இருப்பினும்ää சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கை அரசியலில் தீவிர கவனம் செலுத்திய மேற்கு நாடுகள் நிவாரணம் என்ற நிலையில் தமிழர் தாயகப் பகுதிக்கும் நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கைகளை வெளியிட்டன. அது மட்டுமல்ல ஒப்பிற்குச் சிறிய அளவிலாயினும் வடக்கு- கிழக்கில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டன.

ஆனால் இந்தியா ஆட்சியாளர்களோ கொழும்பிலுள்ள சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவரோ இவ் விடயத்தை எள்ளளவிலும் சிந்திக்கவில்லை. சிறிலங்கா அரசாங்கத்துடனேயே தமது உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டன. இந்தியா கடைப்பிடித்த இவ் இராஜதந்திரமே இன்று இப்பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கிற்கு எல்லையிடுபவையாகியுள்ளன.

ஆனால் இந்தியாவில் இருந்து காலம் தாழ்த்திய நிலையிலாயினும் இலங்கை தொடர்பான சிறிலங்காவின் கொள்கை குறிப்பாக இலங்கையின் தமிழர் தொடர்பான நிலைப்பாடு மாற்றம் செய்யப்படுதல் வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்த வகையில் ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகப் பேராசிரியர் சகாதேவன் அண்மையில் பி.பி.சிக்கு வழங்கிய பேட்டியில் இக் கருத்தினைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை பேராசிரியர் சகாதேவன் போன்றவர்கள் தமது கருத்துக்களை ஏன் முன்னர் வலுவாக வெளிப்படுத்தவில்லை. தற்பொழுது வெளிப்படுத்தவேண்டிய தேவை ஏன் வந்தது? என்ற கேள்விக்கும் இடமுண்டு. ஆனால் இதற்குச் சில வேளை இந்தியாவின் இராஜதந்திர செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தி பொருந்தியவர்களாக இருந்த டிக்சிற் போன்றவர்களின் வறட்டுத்தனமான பிடிவாதங்கள் இவர்களின் கருத்துக்களை புறம்தள்ளியிருக்கலாம். அல்லதுää சுனாமி இப் பிராந்தியத்தில் உருவாக்கிய இராணுவச் சமநிலை மாற்றம் பேராசிரியர் சகாதேவன் போன்றவர்களுக்கு இலங்கை தொடர்பான- குறிப்பாக இலங்கைத் தமிழர் தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக இருந்திருக்கலாம்.

காரணம் எதுவாயினும் இந்தியாவின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படவேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாது ஏற்பட்டுள்ளது என்பது வெளிப்படையானதொன்று.

இப்பிராந்தியத்தில் அமெரிக்காவோ அன்றி அதன் நேசநாடுகளோ தமது ஆயுதப் படைகளை நிரந்தரமாக வைத்திருக்காது போனாலும்ää இப்பிராந்தியத்தில் எவ்வேளைகளிலும் தமது ஆயுதப்படைகளை இந்தியாவின் அனுசரணையின்றி அதாவது இந்தியாவின் கருத்தறியாது தரையிறக்க முடியும் என்பதை அவை செயல் மூலம் வெளிப்படுத்தியுள்ளன.

அத்தோடு சிறிலங்கா இந்தியாவின் விசுவாசம் மிக்க உற்ற நண்பனாக எப்பொழுதுமே இருக்க மாட்டாது என்பதையும் இந் நிகழ்வுகள் வெளிப்படுத்தியிருக்கும். இதேவேளை வரலாற்று ரீதியாகவும் சரிää இன்றும் சரி இந்தியா மீது சிறிலங்கா தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியது கிடையாது.

Eelanatham

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.