Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

அழுத்தம் பிரயோகிக்கப்படுமா?

சுனாமி பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விடயத்தில் சிறிலங்காவுக்கு உலக நாடுகள் மூன்று விடயங்களை முக்கியமாகத் தெரிவித்து வருகின்றன. ஒன்று வடக்கு-கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவுவதில் புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்குதல் வேண்டுமென்பது. இரண்டாவது இந்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அளவு உதவியை வழங்க அவை தயாராக இருக்கின்றன என்பது. மூன்றாவது. வழங்கப்படும் நிதி உரியவர்களுக்குச் சென்றடைய வேண்டும். அல்லாவிடின் இந்த நிதியுதவி நிறுத்தப்படுமென்பது. இந்த விடயங்களை சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகளும்ää சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் மனிதநேய அமைப்புக்களும் வலியுறுத்தத் தவறவில்லை.

இவற்றையே கொழும்பிற்கு விஜயம் செய்த முன்னாள் அமெரிக்க சனாதிபதிகளான பில்கிளின்டன்ää ஜோர்ஜ் புஷ் ஆகியோரும் வலியுறுத்தியிருக்கின்றனர்.

ஆனால் இவ்விடயங்களில் கவனம் செலுத்துவதற்கு சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா இதுவரை காலமும் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றே கூறலாம். வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சுனாமியால் பாதிப்புற்ற மக்களிற்குதவ புலிகளுடன் இணைந்து செயற்படுவதற்கான பொறிமுறையை உருவாக்குவதில் சிறிலங்கா அரசாங்கம் பெரிய உற்சாகம் காட்டுவதாக இல்லை. தனது அரசியல் இலாபம் கருதி தம்முடன் இணைந்து செயற்பட புலிகள் முன்வந்திருக்கிறார்கள் என்று சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அடிக்கடி கூறி வருகின்றாரே தவிர புலிகளை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அரசாங்கத்தினதும் விடுதலைப்புலிகளினதும் சமாதானச் செயலகங்கள் இம்முயற்சியில் ஈடுபட்டு வந்தபோதும் அது வெற்றியைத் தரவில்லை.

சுனாமிப் பேரனர்த்தம் ஏற்பட்டு இரண்டு மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர் குடியிருப்புகள்ää உடமைகள் தொழில் உபகரணங்கள் அனைத்தையுமே பறிகொடுத்து நிற்கின்றனர். இவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம் அம்மக்களை விரக்தி நிலைக்குத் தள்ளத்தக்கதாகும். மேலும் புனர்நிர்மாணப் பணிகளை ஆரம்பித்தால்கூட அப்பணிகள் முடிவடைய நீண்ட காலம் எடுக்கக்கூடுமெனவும்ää இதற்கு ஆளணி வளப்பற்றாக்குறை முக்கிய தடையாக இருக்குமென்றும் கூறப்படுகிறது. இந்நிலையில்ää பணிகளை ஆரம்பிப்பதிலேயே தாமதம் ஏற்படுவது மேலும் மோசமான பாதிப்புக்களை விளைவிக்கும்.

இரண்டாவதாகää சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ் நிலைக்குத் திரும்ப உதவி புரிய உலக நாடுகளும் பல்வேறு அமைப்புக்களும் தயாராக உள்ள நிலையில் அரச இயந்திரத்தின் நடவடிக்கைகள் இதற்கு முட்டுக்கட்டையாக உள்ளன.

சிறிலங்கா அரச இயந்திரத்தின் செயற்திறன் மிகக் குறைந்ததாகும். அத்துடன் ஊழலும்ää மோசடிகளும் நிறைந்தது என்ற குற்றச்சாட்டு பல தரப்பாலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்பிலேயே சிறிலங்காவின் அரச இயந்திரம் முரண்பாடான புள்ளி விபரங்களை வழங்கியது.

சிறிலங்கா அரசாங்கம் செயற்திறன் குறைந்ததெனவும் அதனுடன் பணியாற்றுவது மிகவும் கடினமானதெனவும் சுனாமி அனர்த்தத்தின் முன்பதாகவே பல வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களும் கூடச் சுட்டிக்காட்டியதுண்டு.

இதேவேளை சிறிலங்கா அரசில் அரசியல்வாதிகளில் இருந்து அதிகாரிகள் வரையில் ஊழல் மோசடியில் திளைத்தவர்கள் என்பதும் உலகறிந்ததொன்று. எடுத்துக்காட்டாக அண்மையில் தென்மாகாணத்தில் மாகாணசபை அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாகனத்தில் சுனாமி நிவாரணப் பொருட்கள் கடத்தப்பட்டதை படங்களுடன் ஒரு பத்திரிகை வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அடுத்ததாக தமிழர் தாயகப் பகுதியில் சுனாமியினால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை உரிய முறையில் சம அளவில் பங்கிட்டு அளிக்க அரசாங்கம் இன்னமும் தயாராக இல்லை. அரசாங்கத்தின் கையில் பெரும் தொகை நிவாரண நிதி இருக்கின்றபோதும் அவற்றைப் பகிர்ந்தளிக்கவோ அன்றித் தமிழர் பகுதி புனர்நிர்மாணத்திற்குப் பயன்படுத்தவோ அரசாங்கம் தயாராக இல்லை. மறுவளமாக அரசு தமிழர் தாயகத்தின் அழிவுகளை உலகின் கண்களிலிருந்து மறைத்து விடவே அக்கறை காட்டுகிறது.

இந்த வகையில் சிறிலங்காவிற்கு உதவும் சர்வதேச நாடுகளின் எதிர்பார்க்கைகள் எதனையும் அரசாங்கம் கவனத்திற்குட்படுத்தியதாக இல்லை. ஏதோ ஒரு விதத்தில் தட்டிக்கழித்து விடவே அது விரும்புகின்றது. இந்நிலையில் உதவி வழங்கும் சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசின் நடவடிக்கையில் திருப்தி கொள்ள வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்உதவி வழங்கும் நாடுகள் எந்தளவிற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றன என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்க்கையாகும். அதாவது உதவி வழங்கும் நாடுகளும் தமது அபிலாசைகளைத்துறந்து சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்க முற்படுமா? என்பதே தமிழ் மக்களின் முன்னுள்ள கேள்வியாகவுள்ளது.

நன்றி: ஈழநாதம்

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply

கட்டுரைக்கு நன்றி மதன்..

  • தொடங்கியவர்

புரிந்துணர்வு ஒப்பந்தம் தந்த 'புரிந்துணர்வு" என்ன?

இந்த பெப்ரவரி 22ம் திகதியுடன் சிறிலங்கா அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான, யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முழுமையடைகின்றன. புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகின்ற இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தம் இந்த மூன்றாண்டு காலத்தில் தமிழீழ மக்களுக்கு தந்தது என்ன? அல்லது வெளிப்படுத்தியதுதான் என்ன? என்பது குறித்துத் தர்க்கிப்பது இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

நீண்ட ஆலோசனைகளுக்கும் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின்னர் மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்புக்கொண்ட வெளிப்படுத்திய கருத்துக்கள் குறித்து நாம் முதலில் கவனம் செலுத்த விரும்புகின்றோம்.

அதனூடே எழுத்து வடிவத்திற்கும் யதார்த்த நிலைக்கும் உள்ள ஒற்றுமையையும,; முரண்பாட்டையும் நோக்குவது தெளிவினைத் தரக்கூடும்.

இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் முன்னுரையில் உள்ள முதல் பந்தி கீழ்வருமாறு கூறுகின்றது:-

'இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வு ஒன்றைக் காண்பதே சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் (புழுளுடு) தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (டுவுவுநு) ஒட்டு மொத்தமான நோக்கமாகும்."

இந்தப்பந்தியில் எடுத்தாளப்பட்டிருக்கும் சொல்லாக்கமான:- நடைபெற்றுக்கொண்டிருக்கும், இனத்துவ முரண்பாடு|, பேச்சுவார்த்தை|, தீர்வு|, ஒட்டுமொத்தமான நோக்கு| - என்பனவற்றின் கருத்துக்களை முதலில் கவனிப்போம்.

இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு- என்ற சொல்லாக்கம் இரண்டு விடயங்களை ஏற்றுக்கொண்டு அவற்றைச் சுட்டிக் காட்டுகின்றது. இலங்கைத்தீவிலே இனத்துவ முரண்பாடு என்று ஒரு பிரச்சனை இருக்கின்றது என்பதையும் அது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பதையும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட இவ் ஒப்பந்தம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆகவே சில தரப்பின் கூறுகின்ற கூறி வருகின்ற பிரச்சனை எதுவும் இல்லை| என்ற கூற்றானது இந்த ஒப்பந்த முன்னுரையின் முதல் பந்தியின் முதல் வரியிலேயே அடிபட்டுப் போகின்றது.

அடுத்த சொல்லாக்கமான ~பேச்சுவார்த்தை மூலமான தீர்வு| என்பதைக் கவனிப்போம். இவை இரண்டு முக்கிய விடயங்களை வலியறுத்துகின்றன. அதாவது இந்த ~இனத்துவ முரண்பாட்டிற்கு| ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் அது பேச்சுவார்த்தை மூலமாகக் காணப்பட வேண்டும் என்பதையும் இச்சொல்லாக்கங்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பதை இங்கு நாம் காண்கின்றோம். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இப்பந்தியின் கடைசிச் சொற்களான-| (இதுவே) ஒட்டு மொத்தமான நோக்கமாகும்| என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அந்த முதல் பந்தியினை இப்பொழுது மீண்டும் வாசித்தால் ஒரு தெளிவான பார்வை தென்படலாம்.

'இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனத்துவ முரண்பாட்டிற்கு, பேச்சுவார்த்தை மூலமான தீர்வு ஒன்றைக் காண்பதே சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் (GOSL), தமிழீழ விடுதலைப்புலிகளினதும் (LTTE) ஒட்டுமொத்தமான நோக்கமாகும்.

இதனை அடுத்து அடுத்த பந்தியில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேலுமொரு முக்கிய விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றது. அதனை இப்போது பார்ப்போம்.

'சிறிலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் பகைமைக்கு முடிவைக்கொண்டு வந்து மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இனங்கண்டுள்ளனர்.|

இந்தச்சொல்லாக்கங்கள் மேலும் சில விடயங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அவை வருமாறு:-

1. 'மோதலினால் குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.|

2. 'அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும்.|

3. மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டியது ஒரு முக்கியமான விடயமாகும்.

4. இந்த முக்கியத்துவத்தை இருதரப்பினரும் (அதாவது சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப்புலிகளும்) இனங் கண்டுள்ளார்கள்.

5. மோதலினால் பாதிக்கப்பட்ட குடிமக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு முதலில் பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும்.

ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் பகைமைக்கு முடிவு கொண்டு வரும் முயற்சிகளை சிறிலங்கா அரசு எவ்வாறு மேற்கொண்டது என்பது குறித்து இரண்டு கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. கடந்த மூன்று ஆண்டுகளில் சமாதானத்திற்காக, விடுதலைப்புலிகள் கொடுத்த கொடுத்து வருகின்ற விலை அளப்பரியது, என்பதைக் கடந்த காலச் சம்பவங்களே எடுத்துக் கூறும்.!

சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து, விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதோடு அதில் பணியாற்றிய விடுதலைப்புலிகள் கொல்லப்பட்ட சம்பவத்தையும், அண்மையில் படுகொலை செய்யப்பட்ட மட்டு-அம்பாறை அரசியல் துறைப்பொறுப்பாளருமான லெப்டினட். கேர்ணல் கௌசல்யன் மற்றும் சகபோராளிகளினதும் மாமனிதர் சந்திரநேருவினதும் ஈடுசெய்ய முடியாத இழப்புக்களையும் உதாரணத்திற்காக நாம் இங்கே சுட்டிக்காட்ட முடியும்! அது மட்டுமல்ல, கருணா போன்ற துரோகச் சக்திகளை இன்றும் ஒரு முகமூடியாக உபயோகித்து அதன்மூலம் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறியும் செயல்களில் சிறிலங்கா அரசு ஈடுபட்டு வருவதை நாம் அனைவரும் அறிவோம்! இங்கே நாம் சுட்டிக்காட்டியவை உதாரணத்திற்காகத்தான்! பட்டியல் இட்டால் அது பல பக்கங்களுக்கு வரும்.!

இச்சம்பவங்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் பல தடவைகள் மீறியுள்ளதைக் காட்டுகின்றன. எடுத்துக் காட்டாகச் சில விடயங்களை நாம் இங்கே தர்க்கிக்க விரும்புகின்றோம். சர்வதேச கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல்கள் மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதல், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் 1.2 மற்றும் 1.2 ஊ ஆகியவற்றிற்கு முரண்பட்டவையாகும். கௌசல்யன் மற்றும் சக போராளிகளின் படுகொலைகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 1.2 மற்றும் 1.13 ஆகிய சரத்துக்களை மீறிய செயல்களாகும்.

அது மட்டுமல்ல இயல்பு நிலையை மீளக்கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விபரிக்கின்ற சரத்து இரண்டின் பல பிரிவுகளை சிறிலங்கா அரசு மீறியே வந்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாடசாலைக் கட்டிடங்கள் வணக்கத்துக்குரிய தலங்கள், பொதுச்சேவைக்கான கட்டிடங்களை விட்டு சிறிலங்கா ராணுவம் இன்னும் விலகாமல் இருப்பது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சரத்துக்கள் 2.2, 2.3, 2.4 ஆகியவையை மீறிய விடயங்களாகும்.

இந்த விடயங்களை எமது கருத்தில் வைத்துக் கொண்டு தற்போதைய அரசியல் நிலவரங்களைத் தர்க்கிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் பிரமுகர்களைப் படுகொலை செய்வதிலும், கருணா போன்றவர்களை முன்னிறுத்திப் பிரதேசவாதத்தைத் தூண்டி விடுவதிலும், விடுதலைப்புலிகளின் வணிகக் கப்பல்களை அழிப்பதிலும் சிறிலங்கா அரசும் அதன் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டு வருவதானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எதிர்பார்ப்பான பகைமைக்கு முடிவைக் கொண்டு வருவதற்கு எதிரான செயற்பாட்டாகும்.

இதில் ஒரு கருத்தை வித்தியாசமான கோணத்தில் தர்க்கிக்க விழைகின்றோம்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகின்றது. அதற்கான அடிப்படைக் காரணம் என்ன? அந்தக்காரணத்தை புரிந்துணர்வு ஒப்பந்தம் கீழ்வருமாறு கூறுகின்றது.

'மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காக பகைமைக்கு முடிவைக் கொண்டு வரவேண்டும்."

ஆகவே சிறிலங்கா அரசும் அதன் படைகளும் பகைமைக்கு முடிவைக் கொண்டுவர விரும்பாததன் காரணம்-அடிப்படைக்காரணம்-மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்க்கை நிலை மேம்படுத்தப்படக் கூடாது என்ற எண்ணம் தான் என்பது இங்கே நிரூபிக்கப்படுகின்றது.

இந்தத் தர்க்கங்களைப் பின்புலமாக வைத்துக் கொண்டு மற்றைய அரசியல் நிகழ்வுகள் குறித்துச் சிந்திப்போம். சிறிலங்கா அரசும் அதன் படைகளும் பகைமைக்கு முடிவைக் கொண்டு வர விரும்பாது -இத்தனை யுத்த நிறுத்த மீறல்களையும் நடாத்திய போதும் கூட விடுதலைப்புலிகள் சமாதானப் பேச்சுக்களையோ அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தத்தையோ முறித்துக் கொள்ளவில்லை. காரணம் நாம் முன்னர் சுட்டிக் காட்டிய சொல்லாக்கமான-மோதலினால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடிமக்களினதும் வாழ்க்கை நிலையை மேம்படுத்த வேண்டும் என்பதனை நிறைவேற்றுவதற்காகத்தான்.

அதற்காகத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளிலும் பல ஆலோசனைக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்கள். நாம் மேற்கூறிய பல யுத்த நிறுத்த மீறல்களை சிறிலங்காவின் அரச படைகள்-புரிந்து வந்தபோதும் பொறுமை காத்து வந்தார்கள் விடுதலைப்புலிகள். ஆனால் யப்பான் நாட்டில் நடைபெறவிருந்த பிரதான உதவி வழங்குவோர் மாநாட்டிற்குரிய ஆயத்தம் செய்வதற்கான-முன்னோடியான கூட்டம் அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற போது அக்கூட்டத்திற்குத் தமிழீழ மக்களின் பிரதிநிதிகளான விடுதலைப்புலிகள் தவிர்க்கப்பட்ட போதுதான் இறுக்கமான முடிவொன்றை விடுதலைப்புலிகள் மேற்கொண்டார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகளிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டார்கள். எத்தனையோ இழப்புக்களையும் யுத்த நிறுத்த மீறல்களையும் சந்தித்த விடுதலைப்புலிகள் இந்த விடயத்தில் மட்டும் இறுக்கமான முடிவை எடுத்ததன் காரணம் என்ன?

ஏனென்றால் மோதலினால் பாதிக்கப்பட்ட எமது மக்களிது வழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கான அக்கறை எதுவும் சிறிலங்கா அரசிற்கும் சம்பந்தப்பட்ட சில நாடுகளுக்கும் இல்லை - என்பது வெளிப்படையாகவே நிரூபணம் ஆகியதுதான் காரணம். அதற்கு எதிரான அரசியல் அழுத்தத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு விடுதலைப்புலிகள் கொடுக்கத் தயங்கவில்லை.

இதற்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் வழங்கிய இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்குரிய திட்ட வரைவும் பலத்த எதிர்ப்புக்களைக் கண்டது. இன்றைய தினத்தில் இந்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையானது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்

  • தொடங்கியவர்

இடையூறு விளைவிக்கும் படையினர்!

போர்நடவடிக்கைகள் மூலமோ அல்லது அண்மையில் ஏற்ப்பட்ட ஆழிவுப்பேரலை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் என்றாலும், மீள்கட்டுமானம் என்றாலும் அவற்றைத் துரிதகதியில் முன்னெடுத்துவருகின்ற பெருமை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தையே சாரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்ப்பாடுகளை தமிழ்மக்களும், சகோதர இன மக்களும், பொது அமைப்புக்களும் பாரட்டி வருகின்றமை யாவரும் அறிந்த விடயம். இவ் அமைப்பின் மீது ஸ்ரீவங்கா படையினரும், அவர்கள் சார்ந்த அடிவருடிகளும் திட்டமிட்டு பல்வேறு அத்து மீறல்களையும், நெருக்கடிகளையும் கொடுத்து வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் துரிதகதியில் மீட்புர் பணிகளும், நிவராண நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன அல்லது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றால் அது ஒரு ஒழுங்கான திட்டமிடலில் தமிழர் புனர்வாழ்வு கழகம் மேற்கொண்டு வருகின்ற அளப்பரிய பணியாகவே காணப்படுகின்றது.

யாழ்குடநாட்டிலும், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் இவ்வாறான புனர்வாழ்வுப் பணிகளை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் மேற்கொண்டு வருகின்ற போது அவற்றை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு பெரும் முட்டுக்கட்டையாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ஸ்ரீலங்கா படையினர் இவற்றைத் தடுத்து நிறுத்துவதும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரின் செயற்ப்பாடுகளை முறியடித்துவரும் செயற்ப்பாடுகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்நறனர். இவற்றுக்கு மத்தியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதுவும் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்காலிக குடியிருப்பு நிலங்களை தெரிவு செய்வதில் இருந்து மக்களை தற்காலிமாக குடியமர்த்துவதிலும், அவர்களுக்கான மருத்துவ வசதி, கல்வி வசதி அனைத்தையும் நன்கு திட்டமிட்டு உரியமுறையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இராணுவ ஆக்கிரப்புப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டுவருகின்ற தமிழர் புனர்வாழ்வுக் கழகப்பணியாளர்களை தடுத்து நிறுத்துதல், அவர்கள் மீது அடாவடித்தனங்களை மேற்கொள்ளுதல், அவர்கள் மூலமாக எடுத்துச் செல்கின்ற நிவாரணப்பொருட்களை பறிமுதல் செய்து படையினர் தாம் மக்களுக்கு விநியோகித்து மக்கள் மனங்களை வெல்ல முனைதல், மீட்புப் பணியாயர்களையும் தாக்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

குறிப்பாக அம்பாறையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செல்வாக்கு அதிகரித்ததுடன் மக்கள் மனங்களையும் வென்ற நிலையில் ஸ்ரீலங்கா படையின் சிறப்பு அதிரடிப் படையினரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. அதாவது திருக்கோயில் பகுதியில் செயலணிச் செயலகம் திறக்கப்பட்டு நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது சகலவற்றையும் படையினர் மறித்து கூட்டு விசேட அதிரடிப்படையினர் உதவிகளை மேற்கொண்டு கிராம அலுவலர்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் மூலம் மக்கள் மனங்களை வெல்லுவதற்கு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைவிட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கீழ் உள்ள ஒரு கட்டமைப்பு மனித நேய கண்ணிவெடியகற்றும் பிரிவு இக்கட்டமைப்பு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இவ்வமைப்பு துரித கதியில் தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லுவதுடன் மீள் குடியமர்வுக்கான வெடிபொருள் அகற்றப்பட்ட பிரதேசங்களை உறுதி செய்து மக்களிடம் கையளிக்கின்றது.

ஆனால் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுபட்ட பகுதயில், அவற்றுக்கான வரைபடங்கள் (வெடிபொருடகள்) படையினர் கையில் இருந்தும் அந்தப்பகுதியில் எந்தப்பணியும் விரைவாக முன்னெடுக்கப்படவில்லை. அப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் சென்று பணிகளை மேற்கொள்ள அனுமதியினை வழங்க படையினர் மறுக்கின்றனர்.

நேரடியாகவே ஸ்ரீலங்கா இராணுவக்கட்டுப்பட்டுக்குள் உள்ள மக்கள் மனங்களை வெல்லும் ஒரு முனைப்பான செயற்பாடுகளில் ஸ்ரீலங்காப் படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் எதிர்ப்பையே சந்தித்து வருகின்றனர். அதாவது யாழ்ப்பாணத்தில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டமை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய பகுதிகளில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத் தொண்டர்கள் மீது படையினர் அடிக்கடி கெடுபிடிகளை மேற்கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் மூலம் மக்களிடம் பெரும் எதிர்ப்புக்களை படையினர் சந்தித்து வருகின்றனர். இதை விட பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்று பார்வையிடுகின்ற பொது அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளை பாரட்டியுள்ளன இதனைப்பொறுக்கமுடியாத இனவாத சக்திகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளையும் உதவிநடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது அவர்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற உதவிகளை தடுத்து நிறுத்தியும் மனிதாபிமானமற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றனர்.

சு.பாஸ்கரன்/Eelanaatham

  • தொடங்கியவர்

புலிகள் விமான படையால் இந்தியாவிற்கு ஆபத்தாம் - சிங்களவெறி கட்சி ஜே.வி.பி. சொல்கிறது

கொழும்பு, பிப். 28- புலிகள் விமானப்படையினால் இந்தியாவுக்கு ஆபத்து வரும் என்று சிங்கள கட்சியான ஜே.வி.பி. செய்தி தொடர்பாளர் கூறினார்.

விடுதலை புலிகள் அமைப்பில் ஏற்கனவே தரைப்படை, கடற்படை ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் விமான படையையும் விடுதலை புலிகள் உருவாக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து சிங்கள வெறி ஜே.வி.பி. கட்சி செய்தி தொடர்பாளர் விமல் வீரவன்சா சன்டே டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது„-

விடுதலை புலிகள் விமான படையை அமைத்து உள்ளனர். இதனால் இந்தியாவிற்கு பேராபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழர் பகுதியில் இடைக்கால நிர்வாகத்தை அமைத்து புலிகளுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. அந்த தவறை இலங்கை அரசு செய்தால், அதை நாங்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ஜே.வி.பி. கட்சி ஆதரவில்தான் அதிபர் சந்திரிகாவின் கட்சி இலங்கையில் ஆட்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினகரன்

  • தொடங்கியவர்

cat.gif

Thinakkural

  • தொடங்கியவர்

சிங்கள பத்திரிகையான லங்காதீபவில் இருந்து ,,,,,

தீவிர புலனாய்வு நடவடிக்கைகளை செய்ய புலிகளின் புதிய ஆயுத படையணி

அண்மையில் மட்டக்களப்பு, அம்பாறை அரசியல் பிரிவுத் தலைவர் கௌசல்யன் கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிர புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக சிறிய படையணி ஒன்றை தயார்படுத்தியிருப்பதாக இராணுவத் தரப்பு புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு ஆயுதப் பிரிவாகத் தம்மைக் காட்டிக் கொள்ளாத முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஆயுதப் படையணி மூலம் எதிர்காலத்தில் தமக்குத் தேவையான அதிரடி நடவடிக்கைகளை நடத்துவதே விடுதலைப் புலிகளின் நோக்கமென்று மேற்படி அரச பாதுகாப்பு செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஆயுத நடவடிக்கைகளிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பத

  • தொடங்கியவர்

ராஜிவ் கொலை: நளினி உள்ளிட்ட 4 பேர் மே மாதம் விடுதலை?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய நான்கு பேரின் சிறைக் காவலும் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.

இதனால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.

இதையடுத்து சிவராசன், தனு, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் மற்றும் அகிலா உள்ளிட்ட 41 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த தனு, சிவராசன் ஆகிய இருவரும் பெங்களூரில் கமாண்டோ படை சுற்றி வளைத்தபோது சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். மேலும் 12 பேர் வழக்கு விசாரணையின்போது இறந்து விட்டனர்.

மிகவும் பரபரப்பான இந்த வழக்கில் கடந்த 1998ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. நளினி, அவரது கணவர் முருகன் உள்ளிட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய இந்த தண்டனையை எதிர்த்து 26 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தூக்கு மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் நளினி தனது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி குடியரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தார்.

அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது

நளினி, பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது 14 ஆண்டு ஆயுள் தண்டனை சிறைக் காவல் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

இவர்களை எப்போது விடுதலை செய்வது குறித்து தமிழக உள்துறை செயலாளருக்கு சிறை நிர்வாகம் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட அதே மே மாதத்தில் 4 பேரும் விடுதலை ஆகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Thats Tamil

  • தொடங்கியவர்

`தம்பி நான் உயிருடன் இருக்கிறேன்....'

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு தொடர்ச்சியாக 15க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள். அனைத்துமே ஊடகங்களிலிருந்தே வந்து கொண்டிருந்தன. 13 ஆவது தொடர்பு `தினக்குரல்' இலிருந்து சென்றது.

ஆனந்தசங்கரி தொலைபேசியில் தொடர்பு கொண்டதும் "ஐயா, `தினக்குரல்' இலிருந்து பேசுகிறேன் என்று சொன்னவுடனேயே அவரது பதில் தம்பி நான் உயிருடன் இருக்கின்றேன்" என்பதுதான்.

மாலை 7 மணிக்கும் 8 மணிக்குமிடையில் தொடர்ச்சியாக தமக்கு தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும் அனைவரும் ஒரே விடயம் தொடர்பாகவே கதைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புதன்கிழமை மாலையில் ஊடகங்கள் மத்தியில் மாறிமாறி கேட்கப்பட்ட கேள்வி சங்கரிக்கு என்ன நடந்தது? யார் செய்தார்கள்? எத்தனை மணிக்கு நடந்தது? என்பது போன்ற கேள்விகள் பறந்த வண்ணமிருந்தன.

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடந்தது புரியல.. :shock: :shock:

வதந்தீ பரப்புவர்கள் வேலைதான் வேறு என்ன.. :|

புதிய சர்ச்சை உருவாகிறது "வீடு' சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் நானே. என்னைக் கலந்தாலோசிக்காமல் கட்சியின் செயலாளர் நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். ..................................................... வளருமானால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி - வீரகேசரி

மதன் அது நீங்கள் BBC என்ற பெயரில் இருக்கும் பொது தொடங்கிய

Breaking News தொடக்க செய்தி. ஆனால் இப்போது சும்மா கட்டுரைகளைக் கூட அதில் போட்டு பக்கங்கள் வளர்கின்றன போல் தெரிகிறது

ஆகா வந்திட்டாங்கையா.....வந்திட்டங்

அவர் தான் இணைக்கும் செய்திகளை இணைக்க உருவாக்கிய தலைப்பில் தொடர்ந்து செய்திகளை இணைத்து வருகிறார்.

  • தொடங்கியவர்

பாலா - சொல்ஹெய்ம் நாளை லண்டனில் சந்திப்பு

நோர்வேயின் விசேட சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தை நாளை லண்டனில் சந்தித்து பேசுகிறார் என்று கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலைப்புலிகளின் வான்படை விவகாரம் குறித்து அண்மையில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நோர்வே பிரதமர் பொன்டேவிக்கிற்கு கடிதம் எழுதியிருந்தார். புலிகளின் இந்த விசேட படையணி குறித்த தமது உத்தியோகபூர்வ அதிருப்தியையும் ஜனாதிபிதி தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் அறிவிப்பின் பிரகாரம் அவர் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக ஆராயும் பொருட்டே நோர்வே அரசு தனது விசேட தூதுவரை புலிகளின் ஆலோசகரை சந்திக்க அனுப்பியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இச்சந்திப்பின் நோக்கம் குறித்த உண்மையான தகவல்கள் தெரியவரவில்லை.

இதேவேளைää விடுதலைப்புலிகளின் வான்படை விவகாரம் குறித்து அமெரிக்காவின் இராஜாங்கச் செயலர் கொண்டலிஸா றைஸிடம் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் எடுத்துக்கூறியிருப்பதாகவும

  • தொடங்கியவர்

நிவாரணப் பொருட்களுடன் எடுத்துவரப்பட்ட ஹெலிகொப்டர்கள் திருப்பி அனுப்பி வைப்பு

ஸ்ரீலங்காவில் இயங்கிவரும் இரண்டு அரசு சார்பற்ற நிறுவனங்களால் கடல்கோள் நிவாரணப் பொருட்களுடன் மறைத்து இந்த நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த பொழுது விமானப்படையினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு ஹெலிகொப்டர்களும் திரும்பவும் நாட்டை விட்டு எடுத்துச்செல்லப்பட்டன.

மேற்படி இரண்டு ஹெலிக்கொப்டர்களில் "எவர்கிறீன்" எனப்படும் அரசு சார்பற்ற நிறுவனத்தால் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த ஹெலிக்கொப்டரை மேற்படி நிறுவனம் கடந்த 8 ஆம் திகதி பிற்பகல் சிங்கப்பூர் விமான சேவைகளுக்குச் சொந்தமான விமானம் ஒன்றின் மூலம் ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மற்றைய ஹெலிகொப்டரை இங்கு கொண்டு வந்திருந்த `ஹியூமெடிக்கா' எனப்படும் அரச சார்பற்ற அமைப்பு கடந்த 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த ஹெலிகொப்டரை தென்னாபிரிக்காவுக்கு எடுத்துச் சென்றதாகச் சிரேஷ்ட விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டாளரான கிறிஸ்வீன் (பிரித்தானியர் ஒருவர்) கட்டுநாயக்காவுக்கு கொண்டுவரப்படும் கடல்கோள் நிவாரணப் பொருட்களைச் சேகரித்து வைக்கும் களஞ்சியசாலைக்குப் பொறுப்பாகச் செயல்பட்ட பொழுதே மேற்படி ஹெலிகொப்டர்கள்

ஸ்ரீலங்காவுக்கு எடுத்து வரப்பட்டதென்றும் பின்னர் அவற்றை புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆயினும், அக்களஞ்சியசாலையில் செயல்பட்ட விமானப்படையினரால் மேற்படி ஹெலிகொப்டர்கள் பாதுகாப்புத்துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு மாத காலமாக விமான நிலையத்திலுள்ள நிவாரணப் பொருட்கள் வைக்கும் களஞ்சியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தன.

சிங்கள பத்திரிக்கை திவயின 10.03.2005

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

சிறீலங்கா கடற்படை ரோந்துப் படகு மீது துப்பாக்கிச்; சூடு!

சிறீலங்கா கடற்படையின் ரோந்துப் படகு மீது துப்பாக்கிச்; சூடு நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படகில் பயணம் செய்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழு உறுப்பினருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை அருகே உப்பாறு பகுதியில் இன்று காலை 10.30க்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் கருத்து தெரிவித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு பேச்;சாளர் ஹெலன்ää இந்தத் தாக்குதலில் யார் ஈடுபட்டது என்பது மேலதிக விசாரணைகளின் போது தெரியவரும் என்றும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.

இந்த துப்பாக்கிச்; சூட்டுச்; சம்பவம் தொடர்பாக விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டுவதை திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் மறுத்துள்ளார் என்று தமிழ்நெட் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

புதினம்

  • தொடங்கியவர்

கனேடிய தொலைக்காட்சிக்கு இலங்கை அரசின் கட்டுப்பாடு

கனடாவில் சனல் 3 இல் இயங்கி வரும் குளோபல் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர் இலங்கையில் சுனாமியின் பின்னரான மீளமைப்பு முயற்சிகள் குறித்து விவரணம் ஒன்றினைத்தயாரிப்பதற்காக இலங்கை விஜயம் செய்ய வீசாவுக்கு விண்ணப்பித்தபோது கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அவருக்கு வீசா வழங்க கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது.

அவர் தயாரிக்கும் விவரணத்தினை அவர் இலங்கையினை விட்டு வெளியேறும் முன்னர் இலங்கைரூபவாகினி கூட்டுத்தாபனத்திலும் ,இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்திலும் கொடுத்து அனுமதிபெற வேண்டும் என்பதுடன் விவரணத்தின் இறுதிப் பிரதியினை கனடாவிலுள்ள இலங்கை தூதரகத்தில் சமர்பித்து அவர்களின் அனுமதியினை பெறவேண்டும் என்பதே அந்த நிபந்தனையாகும்.

சுனாமி தாக்கத்தின் பின்பு கனேடிய ஊடகங்களில் இலங்கை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளதுடன் அதைவிட பாதிக்கப் பட்ட தமிழ் பகுதிகளுக்கு அரசு ஒன்றுமே செய்யவில்லை என்பதும் வெளிவந்து விடலாம் என்பதுமே காரணமாக இருக்கலாம். குளோபல் தொலைகாட்சியின் இச் செய்தியாளர்ஒரு நடுநிலையான பக்கச்சார்பற்ற செய்தியாளர் என்பதினை இதைக் கொண்டே ஊகிக்கலாம்.இலங்கை அரசுக்கு சார்பான செய்திகளை கொடுப்பவராக இருந்தால் இப்படி நிபந்தனைகளுக்கு இடமே இருந்திருக்காது. இலங்கை அரசினை பொறுத்தவரை வெளிநாட்டு பணம் வேணும் ஆனால் வெளிநாட்டு ஊடகங்கள் தேவையில்லை அவை நடுநிலையாக இருக்கும் பட்சத்தில்.

by கரிகாலன்

  • தொடங்கியவர்

புலிகளை ஏற்றுக்கொள்ள முடியாதென நோர்வேக்கு இந்தியா அறிவிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பை அல்லது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது எந்தவிதமான உத்தியோகபூர்வ அந்தஸ்தையேனும் கொடுத்து ஆதரிப்பதற்கோ இந்திய அரசு எவ்வகையிலேனும் செயற்படாதென இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நோர்வே நாட்டின் உயர்மட்ட உத்தியோகத்தர்களுக்கு தற்போதுள்ள காங்கிரஸ் ஆட்சியை அமைக்குமுன்னரே தெளிவுபடுத்தி விட்டதாக "ஏஸியன் ட்ரிபியூன்" செய்திப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், பிரதமருமான ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு இந்திய அரசு எந்த வகையிலும் மன்னிப்பு அளிக்கப் போவதில்லையென்றும், அந்தப் படுகொலையை இந்திய ஜனநாயகத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதலாகவே இந்திய அரசு கருதுவதாகவும் இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

நோர்வே அரசின் விஷேட தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் மேற்படி "ஏஸியன் ட்ரிபியூன்" பத்திரிகையுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயங்கள் பத்திரிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஷ்ரீலங்காவின் இனப்பிரச்சினைத் தீர்விற்கான சகல சமாதான நடவடிக்கைகள் பற்றியும் இந்திய அரசுக்கும், ஐக்கிய அமெரிக்க அரசுக்கும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருவதாக சொல்ஹெய்ம் மேற்படி பேச்சுவார்த்தையின் போது கூறினார்.

திவயின 4.4.2005

  • தொடங்கியவர்

புலிகளின் பயத்தால் நாட்டை விட்டோடிய புலனாய்வுப் பிரிவு தலைவர் நிலாம்

முன்னர் நிகழ்ந்த மிலேனியம் சிற்றி பொலிஸ் புலனாய்வு நடவடிக்கைகளைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பினரின் கொலைப் பயமுறுத்தலுக்குள்ளாகியிருக

  • தொடங்கியவர்

மயூரணி கொலை: மாணவருக்கு ஆயுள் சிறை

mayurani1.jpg

இலங்கை மாணவி மயூரணி கொலை செய்யப்பட்ட வழக்கில் மாணவர் பாலபிரசன்னாவுக்கு மதுரை நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை திரிகோணமலை பகுதியை சேர்ந்த தியாகராஜன் என்பவரின் மகள் மயூரணி. இவர் மதுரையிலுள்ள அம்பிகா கலைக் கல்லூரியில் படித்து வந்தார். அண்ணாநகரிலுள்ள இந்தக் கல்லூரியின் உரிமையாளரும், பிரபல தொழிலதிபருமான சோலைமலைத் தேவரின் வீட்டில் தங்கி இவர் படித்து வந்தார்.

அந்த வீட்டின் இன்னொரு அறையில் இலங்கையை சேர்ந்த பாலபிரசன்னா என்ற மற்றொரு மாணவரும் தங்கி கல்லூரியில் படித்து வந்தார்.

இந் நிலையில் மயூரணி, கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதியன்று சோலைமலைத் தேவரின் வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சேலைமலைத் தேவர், அவரது மனைவி ராக்கம்மா, மாணவர் பால பிரசன்னா, இவரது நண்பர் ஹாஜி அலி, வேலைக்காரன் வீரண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. முதலில் இந்த வழக்கு சோலைமலைத் தேவருக்கு எதிராக திரும்பியது. மயூரணி உடை மாற்றுவதை சோலைமலைத் தேவர் ஒளிந்திருந்து ரசித்ததாகவும், இதைப் பார்த்து விட்ட மயூரணி பிரச்சினை செய்ததால் பாலபிரசன்னாவை வைத்து மயூரணியை அவர் கொலை செய்ய வைத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

ஆனால் பிறகு வழக்கு மெதுவாக தேவருக்கு ஆதரவாக திரும்பியது. வழக்கிலிருந்து சோலைமலை தேவரை விடுவிக்க முயற்சி நடப்பதாக மயூரணியின் தந்தை புகார் கூறினார். அவர் கூறியதைப் போலவே கொலை வழக்கிலிருந்து தேவர் விடுவிக்கப்பட்டார்.

போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மாணவர் பாலபிரசன்னா தான் பணத்திற்காக மயூரணியை கொலை செய்தார் என்று கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் இன்று இந்த வழக்கில் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தீர்ப்பு வழங்கினார்.

மயூரணியை கொலை செய்ததற்கு மாணவர் பாலபிரசன்னாவுக்கு ஆயுள் தண்டனையும்,. அவரது பொருட்களை கொள்ளையடித்ததற்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும் மொத்தம் 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் தீர்ப்பு வழங்கினார்.

தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:evil: :evil: :evil: :evil:

இவங்கட நீதிமன்றத்தை நம்பவே ஏலாது...காசுக்கு ஆள் மாற்றியே தீர்ப்பும் சொல்லுவாங்க... பாரத தேசயத்தில் சுதந்திரத்துக்குப் பின் நீதியெங்கே....தர்மம் எங்கே....! :idea:

  • தொடங்கியவர்

இது முதல் தீர்ப்பு தானே. தண்டனை வழங்கப்பட்டவர் இனி மேல் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று தொடர்ந்து மேன்முறையீடு செய்து கடைசியில் சிறையில் இருந்த காலம் வரை போதும் என்று விடுதலையாகி விடுவார் :evil:

  • தொடங்கியவர்

திருகோணமலை மாவட்டத்திலும் புலிகளின் காவலரண் மீது தாக்குதல்

திருகோணமலை நகரிலிருந்து எண்பது கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் மூதூர் மட்டக்களப்பு பிரதான பாதையில் மூதூரின் தெற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் காவலரண் மீது இன்று அதிகாலை நான்கு மணியளவில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட தாக்குதலின் விளைவாக ஒருவர் பலியாகி உள்ளார்.

மற்றும் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்காகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்த மற்றும் இறந்தவரின் பெயர் விபரங்கள் இது வரை தெரிவிக்கப்படவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் அடையாளம் தெரியாதோரால் விடுதலைப் புலிகளின் காவலரண்மீது மேற்கொள்ளப்பட்ட முதலாவது தாக்குதல் சம்பவம் இதுவாகும்.

இதேவேளை மூதூர் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் காவலரணுக்கு 500 மீற்றர் தொலைவிலேயே மஹிந்தபுரம் இராணுவ முகாம் அமைந்துள்ளது.

இந்த இராணுவ முகாமுக்கும் விடுதலைப் புலிகளின் காவலரணுக்கும் இடைப்பட்ட தூரம் சூனியப் பிரதேசமாகும்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் திருகோணமலை மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

போர் நிறுதத கண்காணிப்பு குழு உறுப்பினரான அல்ப் அவர்கள் மூதூர் தெற்குப் பிரதேசத்திற்குச் சென்று இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடத்தைப் பார்வையிட்டுத் திரும்பிய போதிலும்கூட இது தொடர்பான தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கபடவில்லை.

இதே வேளை விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன், இராணுவ முகாம்களில் தங்கியிருந்த கருணா குழுவினரே அவர்களின் உதவியுடன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக போர்நிறத்த கண்காணிப்பு குழுவினரிடம் தெரிவித்திருக்கின்றார்.

இத்தகைய தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என ஏற்கெனவே கடந்த புதனன்று மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக இராணுவ கட்டளைத் தளபதிக்கு போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தாக்குதல் சம்பவமானது ஒரு போர்நிறுத்த மீறுலாகும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் எழிலன் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கிடையே கந்தளாய்க்கும் மூதூருக்கும் இடைப்பட்டதான சேருநுவர சிறீ மங்களபுர பகதியில் உள்ள இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் இன்று பிற்பகல் இராணுவ சிப்பாய் ஒருவர் இனம் தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நிலையில் கந்தளாய் அரசினர் வைத்திய சாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள சிறீமங்கலபுர பகுதியில் பனை ஓலை வெட்டச் சென்ற வேளையிலேயே இவர் முன்னே எதிர்ப்பட்ட நான்கு பேர், இவர் மீது துப்பாக்கப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயங்களுக்கு இலக்கான இந்த சிப்பாயின் பெயர் விபரம் தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக இராணுவத்தினரால் மாவட்ட போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

BBC Tamil News

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.