Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking News

Featured Replies

  • தொடங்கியவர்

திருகோணமலை கடற்படைப் படகு மீதான தாக்குதலில் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக கண்காணிப்புக் குழு அறிவிப்பு

திருகோணமலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கடற்படைப்படகின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான விவகாரத்தில் விடுதலைப் புலிகள் இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தீர்ப்பளித்துள்ளது.

இந்த தாக்குதலின் மூலம், எந்தவொரு தரப்பும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தெளிவாக கூறும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் 1.2 வது சரத்தை புலிகள் மீறியுள்ளதாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல ஹெலன் ஓலவ்ஸ்கோப்பியர்.

அனைத்து இராணுவ நடவடிக்கைகளையும் இந்த சரத்து தடுப்பதுடன், நேரடியாக அல்லது மறைமுகமாக ஆயுத பிரயோகம் செய்யப்படுவதையும் அது தடுக்கின்றது என்றும் ஹெலன் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கை கடற்படைப்படகு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் புலிகளின் பகுதியை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் ஒரு கடுமையான சம்பவம் என்று கூறும் அவர், இது தொடர்பாக விடுதலைப்புலிகளின் கவனத்துக்கு தாம் எடுத்துச் செல்வோம் என்றும் கூறியுள்ளார்.

கடற்படைப் படகின் மீது உப்பாறு பகுதியில் வைத்து புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இந்த சம்பவத்தின் போது, குறிப்பிட்ட கடற்படைப் படகில் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

BBC Tamil News

  • Replies 2.2k
  • Views 133k
  • Created
  • Last Reply

கடற்படைப் படகின் மீது உப்பாறு பகுதியில் வைத்து புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இந்த சம்பவத்தின் போது, குறிப்பிட்ட கடற்படைப் படகில் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இவர் ஏன் அதில் இருந்தார் :roll: :roll:

  • தொடங்கியவர்

ரோந்து படகுகளில் கண்காணிப்பு உறுப்பினர் இருப்பது வழக்கமோ இல்லை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா

  • தொடங்கியவர்

ஐரிஷ் குடியரசு இராணுவம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விடுதலைப் புலிகள் விவகாரத்துடன் ஒப்பிடும் சென்னை `இந்து'

குற்ற வன்முறைகளை இலட்சியத்தின் பெயரால் சட்ட பூர்வமாக்குவதனால் அரசியல் போராட்டங்கள் நிகழ்த்தும் ஆயுதக் குழுக்கள் அவற்றை எவ்வித தயக்கமுமின்றி நிகழ்த்துவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது.

வட அயர்லாந்து பெல்ஃபாஸ்டில் ஒரு கத்தோலிக்கரான ரொபேட் மக்கார்ட்னேயின் கொலையைத் தொடர்ந்து தற்போது ஐரிஷ் குடியரசு இராணுவம் மாட்டிக் கொண்டுள்ள சிக்கலில் இருந்து கிடைக்கும் உறுதியான செய்தி இதுவாகும். இந்தக் குற்றத்தில் தெரிவிக்கப்படும், அக்குழுவின் தொடர்பிற்காக அதற்கெதிரான பொதுமக்களின் கோபம் விலக மறுக்கிறது. அதற்குப் பதிலாக இந்த கொடூரக் கொலையானது, கொலை மற்றும் `நீதியான' தாக்குதல்களிலிருந்து அச்சுறுத்திப் பணம் பறித்தல் வரை பலதரப்பட்ட ஐ.ஆர்.ஏ.யின் குற்றச் செயல்களினுடைய தங்களின் சொந்த அனுபவங்களுடன் ஏனையவர்களையும் முன்னுக்கு வரத் தூண்டியுள்ளது. அண்மைக்காலம் வரை ஐ.ஆர்.ஏ. அச்சம் கலந்த மரியாதையைப் பெற்றுவந்த இடத்தில் இது முன்னென்றும் இல்லாத நிகழ்வாகும். பொதுமக்களின் பிரதிபலிப்பு அக்குழுவை, தமது ஆட்கள் சிலர் நேரடியாக ஈடுபட்டுள்ளார்கள் என்று ஒத்துக் கொள்ளும் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்குத் தள்ளியது. ஆனால், அதற்குப் பொறுப்பான நபர்களை அதனுடைய வெளிப்படையான இணக்கப்பாட்டு முன்வருகையானது எல்லாவற்றிற்கு மேலாக மக்களை ஆத்திரத்திற்கே உட்படுத்தியது.

ஐ.ஆர்.ஏ. பிரதான சந்தேக நபராக உள்ள கடந்த டிசம்பர் மாதத்தைய கொலை மற்றும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்ளையானது அக்குழுவின் தீவிர ஆதரவுக் குரல் தருவோரைக் கூட வாயடைக்கச் செய்துள்ளது. ஐக்கிய அயர்லாந்திற்கான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட அது மறுக்கின்றமையும் அதன் ஆயுதங்களைக் களைவதை தடுக்கின்றமையும் வட அயர்லாந்து சமாதான முயற்சிக்கு முக்கிய தடைக்கற்களாக நீடிக்கின்றன.

ஐ.ஆர்.ஏ.யின் அரசியல் பிரிவான சின்ஃபெயின் கொலையிலிருந்து தன்னை தூரவிலக்கியிருக்க முயற்சித்திருந்தது. ஆனால், இரண்டினதும் அடையாளங்கள் ஒன்றுடன் ஒன்று மிகவும் பின்னிப் பிணைந்தவையாகையால் அண்மைய நிகழ்வுகளுக்கான குற்றச்சாட்டிலிருந்து கட்சியானது தப்பிக் கொள்ள முடியாது. சின்ஃபெயினானது தான் நவீன ஜனநாயகக் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பேரார்வம் கொண்டுள்ளது. ஆனால், ஐ.ஆர்.ஏ. ஆனது கலைக்கப்படுவதற்கு மற்றும் ஆயுதங்களைக் கைவிடுவதற்கு போதுமான அழுத்தத்தை வழங்குவதில் அது அடைந்துள்ள தோல்வியானது அதை நம்பகத் தன்மையான சக்தியாக அங்கீகரிக்கப்படுவதிலிருந்த

:evil: :evil:

:evil:

  • தொடங்கியவர்

திருமலைக்கும் விஸ்தரிக்கப்படும் புலிகளுக்கு எதிரான நிழல் யுத்தம்

* படையினரின் ஆதரவுடனேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக புலிகள் குற்றச்சாட்டு; கருணா குழுவினரே தாக்குதலை நடத்தியதாக இராணுவ தகவல்

கிழக்கில் அதிகரித்து வரும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவது தொடர்பாக போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு படையினரையும் விடுதலைப்புலிகளையும் சந்தித்த மறுநாள் திருகோணமலை மாவட்டத்தில் புலிகளின் சோதனை நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இதுவரை நடைபெற்ற இவ்வாறான தாக்குதல் திருகோணமலை மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதை இது தெளிவுபடுத்துகிறது.

கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பில் இடம்பெறும் தாக்குதலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் முப்பதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டும் அதேயளவினர் காயமடைந்துமுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகள், இராணுவ உளவாளிகள், தமிழ்க் குழுக்களென கொல்லப்படுவோரின் பட்டியல் நீள்கிறது.

விடுதலைப்புலிகளுக்கெதிரான `நிழல் யுத்தம்' ஆரம்பிக்கப்பட்ட பின்பே கிழக்கில் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கருணா குழுவினரையும், இராணுவ உளவாளிகளையும், தமிழ்க் குழுக்களையும் பயன்படுத்தி இராணுவ புலனாய்வுப் பிரிவே தங்கள் மீதான நிழல் யுத்தத்தை நடத்துவதாக புலிகள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

புலிகள் மீதான தாக்குதல்கள் அதிகரிக்க, இராணுவ உளவாளிகள், மற்றும் தமிழ்க் குழுக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரிக்கிறது. புளொட் மோகன் போன்றோர் அடுத்தடுத்து கொல்லப்பட்ட நிலையில் இராணுவ புலனாய்வுப் பிரிவே எலும்புக் கூடாகி விட்டதாக இராணுவ புலனாய்வுத்துறை கலங்கி நின்றபோது, கருணா குழுவை பயன்படுத்தி புலிகள் மீதான தாக்குதலைத் தொடரும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

புலிகள் மீது எங்காவதொரு தாக்குதல் நடைபெற்றுவிட்டால் அது கருணா குழுவின் கைவரிசையே என உடனடியாகக் கூறும் படைத்தரப்பு, பொது மக்கள் அல்லது தமிழ்க் குழுக்களைச் சேர்ந்த எவராவது கொல்லப்பட்டால் உடனடியாக அதற்கான பொறுப்பை புலிகள் மீது சுமத்திவிடுகின்றது. இதுவும் புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்தின் ஒரு அம்சமாகவேயுள்ளது.

முன்னர் போர் நடைபெற்ற காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நீண்ட தூரம் ஊடுருவி தாக்குதலை நடத்தி வந்த இராணுவ புலனாய்வுப் பிரிவு, தற்போது போர்நிறுத்த காலத்தில், தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள், போர்நிறுத்த உடன்பாட்டுக்கமைய அரசியல் பணிகளில் ஈடுபடும் புலிகள் மீது நிழல் யுத்தத்தை நடத்துகிறது. இவ்விரு தாக்குதல்களும் புலிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கத்தையே கொண்டன.

இதேநேரம் தங்கள் மீதான தாக்குதல்களை, இராணுவ புலனாய்வுப் பிரிவே கருணா குழுவையும், தமிழ்க் குழுக்களையும் பயன்படுத்தி மேற்கொண்டு வருவதை புலிகள் பல்வேறு தடவைகளிலும் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே இதுவரை காலமும் மட்டக்களப்பிலும் பொலநறுவை மாவட்டத்திலும் புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல்கள் தற்போது திருகோணமலை எல்லைக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

மூதூர் - மட்டக்களப்பு வீதியில் மஹிந்தபுர இராணுவ சோதனை நிலையத்திற்கு சற்று அப்பாலிருந்து பூநகரிலுள்ள புலிகளின் சோதனை நிலையம் மீது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

மூதூர் - மட்டக்களப்பு வீதியில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியின் எல்லையிலேயே மஹிந்தபுர இராணுவ முகாமுள்ளது. இந்த முகாமைத் தாண்டியே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டும். இந்த முகாமின் சோதனை நிலையத்தினூடாகவே, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைவர்.

இராணுவத்தினரின் இந்தச் சோதனை நிலையத்திலிருந்து 500 மீற்றர் தூரத்தில் புலிகளின் முதல் சோதனை நிலையம் பூநகர் பகுதியிலுள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்பவர்கள், பூநகர் சோதனை நிலைய மூடாகவே நுழைய வேண்டும். படையினரதும் புலிகளதும் சோதனை நிலையங்களுக்கிடையிலான இந்த 500 மீற்றர் தூரமானது இராணுவ சூனியப் பிரதேசமாகும். (No man Zone)

வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இராணுவ சீருடையணிந்த 9 பேர் இந்த இராணுவ சூனியப் பிரதேசமூடாகவே வந்து புலிகளின் பூநகர் சோதனை நிலையம் மீது ஆர்.பி.ஜி. மற்றும் சிறிய ரக துப்பாக்கிகளால் சில நிமிட நேரம் கடும் தாக்குதலை தொடுத்துவிட்டு மஹிந்தபுர சோதனை நிலையத்திற்குள் தப்பியோடி விட்டதாக புலிகள் தரப்பு போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்துள்ளது.

ஏனைய பகுதிகளைப் போலல்லாது, இரு தரப்பினதும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் இறுதிச் சோதனை நிலையங்களென்பதால், போக்குவரத்துக்கான பகுதியை விட ஏனைய பகுதிகளில் கண்ணிவெடிகள், மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் அதேநேரம், தத்தமது பகுதிக்குள் மற்ற தரப்பினரின் ஊடுருவல்களைத் தடுப்பதற்காக பதுங்கு குழிகள், காவலரண்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பும் தீவிரமாயிருக்கும்.

இதனால், இராணுவ சூனியப் பிரதேசத்திலிருந்து தாக்குதல் நடத்தியோர் மஹிந்தபுர இராணுவ சோதனை நிலையத்தினூடாகவே வந்து தங்கள் சோதனை நிலையத்தின் மீது தாக்குதலை நடத்தி விட்டு இராணுவ சோதனை நிலையத்திற்குள்ளே மீண்டும் தப்பிச் சென்று விட்டதாக புலிகள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன

  • தொடங்கியவர்

1995 ஏப்ரல் 19 தாக்குதலை நினைத்து உறங்காது தவிக்கும் சிறீலங்கா இராணுவம்!!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சிறீலங்கா கடற்படையின் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதியிட்ட சிறீலங்கா உளவுத்துறையின் அவசர எச்சரிக்கைக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் அவாதனிப்புடன் அதிக முன்னெச்;சரிக்கையுடனும் இருக்குமாறு அந்த உளவுத்துறை குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த உளவுத்துறை எச்;சரிக்கை குறித்து சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சந்தகிரியிடம் ஊடகவியலாளர்கள் விளக்கம் கேட்டபோதுää இது வழமையான அவதானிப்பு மற்றும் முன் எச்;சரிக்கைதான் என்று மழுப்பலாகக் கூறியுள்ளார்.

ஆனால் சிறீலங்கா இராணுவத்தரப்பின் ஒரு பிரிவினர் வேறு ஒரு தகவலை சுட்டிக்காட்டுகின்றனர்.

1995 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் திருகோணமலை துறைமுகத்தைத் தாக்கி மூன்றாம் ஈழப்போர் பிரகடனம் செய்ததால் இந்த ஏப்ரல் மாதமும் அப்படியான தாக்குதல் நடந்துவிடக் கூடுமோ என்று சிறீலங்கா இராணுவம் அச்;சத்துடன் இருப்பதாகக் கூறுகின்றனர்.

Puthinam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol: :P
  • தொடங்கியவர்

சங்கரிக்கு எதிராக சுடர்ஒளி சட்ட நடவடிக்கைக்குத் தயார்!

கிளிநொச்சியிலிருந்து தனோஜன்

விடுதலைப்புலிகளின் நிதியில் 'சுடர்ஒளி" பத்திரிகை இயங்குவதாகத் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி பேட்டியளித்திருக்கிறார்.

சங்கரியார் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கும் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுத் தொடர்பாக அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது சுடர்ஒளி பத்திரிகை 'த ஐலண்ட்" ஆங்கில நாளிதழில் ஆனந்தசங்கரி தெரிவித்;திருப்பதாகக் குறிப்பிட்டு அதன் நேற்றைய இதழின் முன்பக்கத்தில் தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதியைத் தாக்குகிறார் சங்கரி என்ற ஒரு தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அதில் 'சுடர்ஒளி" தொடர்பாக அவர் கூறியதாவது:-

பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஆர்வமில்லை அவற்றுக்கு முதுகெலும்பு இல்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் டிரம்பட் (இசைக்கருவியை) அவை ஊதுகின்றன.

தமிழ் இனத்திற்கு அவை எதுவும் செய்வதில்லை என்பது குறித்து நான் ஆதங்கப்படுகிறேன். தமிழ் ஊடகங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அடிமைகளாக இருக்க நான் மட்டும் எனது இனம் குறித்தே சிரத்தையுடையவனாக இருக்கிறேன் என்றார் ஆனந்தசங்கரி.

தன்னைத் துரோகி என்றும் அடிமை என்றும் அழைத்துள்ள 'சுடர்ஒளி" பத்திரிகை பிரபாகரனின் கைக்கூலி ஒருவரால் நடத்தப்படுவது என்றும் அந்தப் பத்திரிகை விடுதலைப்புலிகளின் நிதியில் இயங்குகின்றது என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் கூறினார்.

அப்படி இல்லை என்றால் அதை 'சுடர்ஒளி" நிரூபிக்கட்டும் என்றும் ஆனந்தசங்கரி சவால் விடுத்தார். நான் கூறிய எல்லாவற்றிற்கும் நான் முழுப்பொறுப்பு ஏற்கிறேன் என்று ஆனந்த சங்கரி மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இப்படி அந்தப் பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படித் தாம் முழுப்பொறுப்பு ஏற்றார் எனத் தெரிவித்து ஆனந்தசங்கரி கூறிய விடையங்கள் தொடர்பாகவே அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 'சுடர்ஒளி" தீர்மானித்திருக்கிறது. உடனடியாக அவருக்கு சட்ட நிபந்தனைக் கடிதம் ஒன்றை அனுப்புவது குறித்து 'சுடர்ஒளி" தனது நிபுணர்களோடு ஆலோசித்து வருகின்றது.

நன்றி: யாழ். உதயன்;

  • தொடங்கியவர்

லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக பிரபாகரனின் செய்தி இந்தியத் தலைவர்களுக்கு! தெகல்கா.கொம் கூறுகிறது

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் விசேட செய்தியொன்று லண்டனிலுள்ள இந்தியத் தூதரம் ஊடாக இந்திய அரசிற்கு அனுப்பப்பட்டிருப்பதாக `தெகல்கா.கொம்' என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்விணையத்தள சஞ்சிகையில் செய்தியாளரான வி.கே.சஷிகுமார் அண்மையில் இந்தியாவிலிருந்து வன்னிக்கு வந்து 3 வார காலம் வன்னியில் தங்கியிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் பற்றி ஆராய்ந்திருப்பதுடன், விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்கவி, விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத் துறைப் பொறுப்பாளர் பரா மற்றும் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

இதன் பின் அவர் வெளியிட்டுள்ள செய்தியில்:

லண்டனிலுள்ள விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளைச் சந்தித்து பேச்சுகள் நடத்திய பின், வன்னிக்கு வந்து புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் மற்றும் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.

அதன் பின் விடுதலைப் புலிகளின் தலைவரது செய்தியொன்றை எடுத்துச் சென்ற அவர் லண்டனிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக புதுடில்லிக்கு அனுப்பியதாக பரராஜசிங்கம் (பரா) தெரிவித்தார்.

இதேநேரம், ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இடம்பெற்ற தவறிற்கு விடுதலைப் புலிகள் மன்னிப்புக் கோர தயாராய் இருப்பதாக தெரிவித்துள்ள பரராஜசிங்கம், அதேநேரம் விடுதலைப் புலிகளுக்கெதிராக இந்தியா மேற்கொண்ட இராணுவ தலையீட்டிற்காக இந்தியாவும் மன்னிப்புக் கோரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சமாதானத் தீர்வு எட்டப்பட இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள நடேசன், இதற்காக 2002 ஆம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும், புலிகளின் குழுவொன்று இந்தியா சென்றதாகவும், தற்போது லண்டனிலுள்ள இந்திய தூதரகம் ஊடாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2002 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் பேச்சு நடத்துவதற்காக டில்லி சென்ற தூதுக்குழு பின் தலைவரான வண. பிதா கருணாரட்ணம், அச்சமயம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் போர் நடந்து கொண்டிருந்த காரணத்தினால் முன்னர் திட்டமிட்டிருந்தபடி அப்போதைய பாதுகாப்பமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டஸை சந்திக்க முடியாது போய் விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இது குறித்து லண்டனிலுள்ள இந்திய தூதரக ஊடகத் துறை அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இப்படி எதுவும் நடந்ததாகவோ அல்லது நடக்கவில்லை என்றோ தன்னால் உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அந்த இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

Thinakkural

  • தொடங்கியவர்

கருணா குழு - ஈ.என்.டி.எல்.எப். கூட்டை அம்பலமாக்கியுள்ள சொறிவில் தாக்குதல்

* முகாமில் காணப்பட்ட புகைப்படங்கள் வெளிப்படுத்தியிருக்கும் உண்மைகள்

கிழக்கில் தொடரும் மோதல்களின் பின்னணியில் பொலநறுவை மாவட்டம் தற்போது கொலைக்களமாக மாறியுள்ளது. யுத்தம் நடைபெற்ற மிக நீண்டகாலப் பகுதியில் ஒரு சில சம்பவங்களுக்கான களமாயிருந்த பொலநறுவை மாவட்ட எல்லைப் பகுதி இன்று சமர்க்களமாக மாறியுள்ளது. அடிக்கடி இங்கு நடைபெறும் மோதல்கள் மற்றும் காய் நகர்த்தல்களால் பொலநறுவை மாவட்ட எல்லைக் கிராமங்களிலுள்ள தமிழ் மக்கள் திகைப்படைந்து போயுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா குழுவின் நடவடிக்கைகளுக்கு புலிகள் முற்றுப் புள்ளி வைத்ததையடுத்து கருணா குழுவினர் மட்டக்களப்பின் வடமேற்கு எல்லையிலுள்ள பொலநறுவை மாவட்டத்திற்குள் நகர்ந்தனர். இப்பகுதியில் வெலிக்கந்தை படைமுகாமிற்கு சமீபமாகவிருந்து இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடன் இவர்கள் செயற்பட்டு வருவதாக புலிகள் தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளை படைத்தரப்பு மறுத்து வருகின்ற போதிலும் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்கள் புலிகளின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்துகின்றன. அதேநேரம், இந்த எல்லைப்புற மாவட்டத்தில் புலிகளுக்கெதிராக நடைபெறும் தாக்குதல்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

பொலநறுவை - மட்டக்களப்பு எல்லையில் வெலிக்கந்தைக்கு அருகிலிருந்து செயற்பட்ட கருணா குழுவினர், பின்னர் புலிகளின் பல அதிரடித் தாக்குதல்களையடுத்து, பொலநறுவை - வாழைச்சேனை வீதியில், மேலும் மேற்காக நகர்ந்து மன்னம்பிட்டிக்கும் வெலிக்கந்தைக்கும் இடையில் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்தனர்.

இப்பகுதிகளிலுள்ள தமிழ் கிராமங்களுக்கு மிக நெருக்கமாக சிங்களக் கிராமங்களிருப்பதால் இங்குள்ள தமிழ் -சிங்கள மக்களிடையே திருமண உறவுகளும் சர்வ சாதாரணம். அதேநேரம் இப்பகுதியில் ஆங்காங்கே முஸ்லிம் கிராமங்களுமுள்ளதால் இந்த எல்லைப் புறப் பிரதேசம் தங்களுக்கு பாதுகாப்பானதென கருணா குழுவினர் கருதியிருக்கலாம்.

அதேநேரம், புலிகளுக்கெதிரான கருணா குழுவின் நடவடிக்கைகளின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவே இருப்பதாய் குற்றஞ்சாட்டப்பட்டு வருவதால் வெலிக்கந்தை மற்றும் மன்னம்பிட்டி படை முகாம்களின் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் தங்களுக்கு அருகே இவர்களை வைத்துக் கொண்டு இயக்கி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

இதைவிட, கிழக்கிலிருந்து வன்னிக்கான புலிகளின் தரை வழிப் பயணம் இப் பகுதிகளூடாகவே நடைபெறுவதால் புலிகளின் முக்கியஸ்தர்களை மட்டக்களப்புக்கு வெளியே தங்களுக்குச் சாதகமான இடத்தில் வைத்து இலக்கு வைக்கவும் கருணா குழுவினருக்கு இப் பிரதேசம் மிகவும் வசதியாகவிருந்தது.

எனினும், இப் பகுதிகளுக்குள்ளும் கருணா குழுவுக்குள்ளும் ஊடுருவிய புலிகள் இப் பகுதிகளில் வைத்து கருணா குழுவினர் மீது அடுத்தடுத்து அதிரடித் தாக்குதல்களை நடத்தி வந்ததால், பொலநறுவை - வாழைச்சேனை பிரதான வீதிக்கு சமீபமாகவிருந்து செயற்பட்ட கருணா குழுவினர் பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதான வீதியிலிருந்து கிராமங்களுக்குள்ளே நீண்டதூரம் சென்று பாதுகாப்பு தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தீவுச்சேனை தமிழ் கிராமமும் இவ்வாறானதொன்றே. மேற்படி பிரதான வீதியின் வடக்குப் பக்கமாக மன்னம்பிட்டிக்கும் வெலிக்கந்தைக்கும் இடையில் ( வெலிக்கந்தைக்கு சமீபமாக) பிரதான வீதியிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில் தீவுச்சேனையில் பலத்த இராணுவப் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்கள் முகாம் அமைந்திருந்தது. கடந்த மாத நடுப்பகுதியில் ஆங்கில வார இதழ் ஒன்றினால் அம்பலப்படுத்தப்பட்டது.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தீவுச்சேனையில் கருணா குழுவின் முகாமிருப்பது அம்பலத்திற்கு வந்த மறுநாள் இந்த முகாம் மீது புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்த இது மேலும் அம்பலப்படுத்தப்பட்டது. கிழக்கில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் கூட போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இங்கு கருணா குழுவின் முகாமிருப்பதாகத் தெரிவித்தனர்.

எனினும், தீவுச்சேனைக்கு நீண்ட நாட்களின் பின்னர் கண்காணிப்புக் குழுவினர் சென்ற போது அங்கு, கருணா குழுவினரின் முகாமிருந்த அடையாளங்கள் இல்லாதிருந்தன. ஆனாலும், தங்கள் விசாரணைகள் தொடர்வதாக கண்காணிப்புக் குழு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் வெலிக்கந்தைக்கு தெற்கே (பொலநறுவை - வாழைச்சேனை வீதிக்கு தெற்கே) சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் திம்புலாகல பிரதேச சபை எல்லைக்குள்ளும் அரலகன்வில பொலிஸ் பிரிவிலுமுள்ள சொறிவில் தமிழ் கிராமத்துக்கு வெளியே வெள்ளிக்கிழமை அதிகாலை தாக்குதல் சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.

சொறிவில் கிராமத்திலிருந்து மேலும் தெற்காக (அம்பாறை நோக்கி) ஒரு கிலோமீற்றர் தூரத்தில் வண்ணாந்துறை எனும் பகுதியுள்ளது. இது பற்றைக் காடுகள் நிறைந்த பகுதி. இப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆயுதக் குழுவொன்று முகாமிட்டுள்ளது. இங்கு பத்திற்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் நடமாடுவதை அப் பகுதி மக்கள் அவதானித்துள்ளனர்.

சொறிவில்லுக்கு அருகே மலியதேவபுர, நாமல்பொக்குண கிராமங்களுமுள்ளன. சொறிவிலில் இந்த ஆயுதக்குழு முகாம் அமைத்த பின்னர் மேற்படி மூன்று கிராமங்களிலும் இந்த ஆயுதக் குழுவின் நடமாட்டங்களும் நடவடிக்கைகளும் அதிகரித்தன. மலியதேவபுர மற்றும் நாமல் பொக்குண கிராமங்களில் 121 சிங்களக் குடும்பங்கள் வசிக்கின்றன. சொறிவிலில் 246 குடும்பங்களுள்ளன. திம்புலாகல விகாரைக்கு செல்லும் பாதையின் தென் பகுதியிலேயே இந்த மூன்று கிராமங்களுமுள்ளன.

சொறிவில் மட்டக்களப்பு எல்லையிலிருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. கடந்த வாரம் இந்த மூன்று கிராமத்தவர்களையும் கூட்டமொன்றுக்கு அழைத்த இந்த ஆயுதக் குழு, இந்த மக்களிடமிருந்து ஆதரவு தேடும் முயற்சியில் ஈடுபட்டது. இப்பிரதேசத்தவர்கள் பெரும்பாலானோர் வறியவர்களென்பதால் இவர்களது வருமானத்திற்காக சில சட்டவிரோத நடவடிக்கைகளுக்குத் தூண்டிய இந்த ஆயுதக் குழு இதற்குத் தாங்களும் உதவுவதாகவும் கூறியதாக `லங்காதீப' சிங்களப் பத்திரிகை தெரிவித்திருந்தது.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னம் அதிகமாயிருக்கும் இப்பிரதேசத்திலேயே இந்த ஆயுதக் குழுவின் முகாமிருந்துள்ளது. ஐந்து சிறிய கொட்டில்களில் மூன்று கொட்டில்களுக்குள் பத்துக்கும் மேற்பட்டோரும் இரண்டுக்குள் அவர்களுக்கான உணவுப் பொருட்களும் இருந்துள்ளன. இங்கேயே வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் திடீர் தாக்குதலொன்று நடைபெற்றதில் இவற்றிலிருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொழுது புலர்ந்த பின்னர் அப்பகுதிக்குச் சென்ற கிராமவாசிகள், மூன்று கொட்டில்களுக்குள்ளும் அவற்றின் வெளிப்புறத்திலும் 9 பேர் இறந்து கிடப்பதையும், சிலர் படுகாயமடைந்திருப்பதையும் பார்த்துள்ளனர். படையினரும் பொலிஸாரும் பின்னர் அங்கு வந்து இறந்தவர்களது சடலத்தை அரலகன்வில ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றதுடன் காயமடைந்த இருவரையும் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

எனினும், ஐந்து சடலங்களே ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மிகுதி நான்கு சடலங்களுக்கும் என்ன நடந்ததெனத் தெரியவரவில்லை. ஆனாலும், தாங்கள் 9 சடலங்களை பார்த்ததாக கிராமவாசிகள் கூறுகின்றனர். அப்படியாயின் மிகுதி நால்வரும் இராணுவத்தைச் சேர்ந்தவர்களா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

முதலில் இந்தச் சம்பவத்தை பற்றி படைத்தரப்பு எதனையும் கூறவில்லை. பின்னர் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயாரட்ண, விடுதலைப்புலிகளின் உள் முரண்பாட்டால் வன்னிப் புலிகளுக்கும் கருணா குழுவினருக்குமிடையே நடைபெற்ற மோதலில் ஐவர் கொல்லப்பட்டதாகக் கூறினார். எனினும், இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எதுவித தொடர்புமில்லையெனக் கூறிய புலிகள், கருணா குழுவுக்கும் ஈ.என்.டி.எல்.எவ். வுக்கும் (பெட்டிச் செய்தியை பார்க்கவும்) இடையிலான மோதலின் விளைவே இதுவெனக் கூறினர்.

அதேநேரம், இக் குழுவினருடன் இருந்த சிலரது கை வரிசையே இதுவென வேறொரு தகவல் கூற, இத் தாக்குதலை புலிகள் நடத்தினார்களா அல்லது கருணா குழுவுக்கும் ஈ.என்.டி.எல்.எவ்.வுக்கும் இடையிலான மோதலா அல்லது உடனிருந்தவர்களின் கை வரிசையா இதுவென்ற கேள்வியும் எழுந்தது.

பெரும்பாலும் இது, இக்குழுவுடன் உடனிருந்த சிலரது கைவரிசையே எனக் கருதப்படுகிறது. எனினும், உடனிருந்தவர்கள், ஊடுருவிய புலிகளா அல்லது கருணா குழுவைச் சேர்ந்தவர்களா அல்லது ஈ.என்.டி.எல்.எவ்.வை சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை. கொழும்பின் புறநகர்ப் பகுதியான கொட்டாவையில் கடந்த வருட நடுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் போன்று இதுவும் நடைபெற்றிருக்கலாம்.

துப்பாக்கிச் சூட்டை கேட்டு விழிப்படைந்த மக்கள், அங்கு மோதல் நடைபெற்றது போல், அதாவது, இரு தரப்புகளிடையே சண்டை நடைபெற்றது போல் தெரியவில்லையென்றும், யாரோ சிலர் கண்டபடி சுடுவது போன்றே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறினர். அத்துடன், தாக்குதலுக்கு முன்னர் அப்பகுதியில் எவரது நடமாட்டமோ அல்லது தாக்குதலின் போது வெளியார் நடமாடியதற்கான அறிகுறியோ அப்பகுதியில் தென்படவில்லையென்றும் கூறினர்.

இதேநேரம், அங்கிருந்த 5 கொட்டில்களுக்குள் மூன்று கொட்டில்களுக்குள்ளேயே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதால், குறைந்தது மூவராவது தங்களுடனிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது. இந்த மூவரும் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் தப்பிச் செல்லும்போது, இவர்கள் வசமிருந்த முக்கிய பொருட்களையும் கையடக்க தொலைபேசிகளையும் கொண்டு சென்றிருக்கலாமெனவும் நம்பப்படுகிறது.

அதேநேரம், சம்பவம் நடைபெற்ற பகுதியில் பெருமளவு புகைப்படங்கள் சிதறிக் கிடந்தன. இவையெல்லாம், படையினருடன் இளைஞர் குழுவொன்று இணைந்து எடுத்த படங்களாகும். படையினர் இளைஞர் குழுவொன்றுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்குவது போன்றும் அவர்களுடன் இவர்கள் இணைந்து செயற்படுவது போன்றும் அந்தப் புகைப்படங்கள் தென்படுகின்றன.

இதேநேரம், இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களில் விஜயன் (ராசேந்திரன் பேரின்பநாதன் - திருகோணமலை), கவியன் (செல்லையா குழந்தைவேலு - திருகோணமலை) ஆகிய இருவரும் ஈ.என்.டி.எல்.எவ். வைச் சேர்ந்தவர்களெனவும் துரை (சின்னப்பிள்ளை கிருஷ்ணபிள்ளை), வாசு (தேவதாசன் தெய்வேந்திரன்), காந்தன் (கந்தசாமி ஜெயநிதன்) ஆகிய மூவரும் கருணா குழுவைச் சேர்ந்தவர்களெனவும் தெரிவிக்கப்படுகிறது. மிகுதி நால்வர் யார் என்ற கேள்விக்கு இது வரை விடை கிடைக்கவில்லை.

கருணா குழுவுடன் ஈ.என்.டி.எல்.எவ்.சேர்ந்த பின்னர் இரு தரப்பும் ஒன்றாக இருந்த போது நடைபெற்ற முதல் சம்பவம் இதுவாகும். இதன் மூலம் இவ்விரு குழுக்களையும் இணைத்து களமிறக்கும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஒருவர் சொறிவில் கிராமத்தை சேர்ந்தவரென்பதால் கிழக்கிற்கு வெளியேயும் கருணா குழுவினருக்கு ஆட்களைச் சேர்க்கும் முயற்சிகள் ஆரம்பமாகி விட்டதும் உறுதியாகியுள்ளது.

இதைவிட ,தீவுச்சேனை முகாமே சில காரணங்களுக்காக இப் பகுதியில், பிரதான, வீதியிலிருந்து நீண்ட தூரக் கிராமத்திற்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈ.என்.டி.எல்.எவ்.வும் இங்கு வந்து சேர்ந்ததால் அயல் நாட்டு புலனாய்வுப் பிரிவும் இப்போது புலிகளுக்கெதிராக களமிறங்கி விட்டதோ என்ற ஐயமும் எழுந்துள்ளது.

அதேநேரம் மட்டக்களப்போ அல்லது அம்பாறையோ அல்லது அதற்கு வெளியே எங்கு சென்றாலும் கருணா குழு நிழல் போலப் பின் தொடரப்படுவதை இது நன்கு தெளிவுபடுத்தியுள்ளது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதன் மூலம் இந்தக் குழுவினருடனான படையினரின் தொடர்புகள் உறுதியாகிவிட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.

மக்களுக்கு அறிமுகமில்லாத ஒரு குழு திடீரென அங்கு வந்து முகாமமைத்து மக்களை அழைத்து கூட்டம் நடத்திய பின்பும் இது பற்றித் தங்களுக்கு எதுவுமே தெரியாதென படைத்தரப்பு கூறினால் அது மிகப்பெரும் நகைச் சுவையே. ஆனாலும் கருணா குழுவுடன் மட்டுமல்லாது தற்போது ஈ.என்.டி.எல்.எவ்.வுடனும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்புகள் ஏற்பட்டுள்ளமை இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

கிழக்கில் தொடரும் நிழல் யுத்தம் முடிவுக்கு வரப் போவதில்லையென்பதை இது நன்கு தெளிவுபடுத்தியுள்ளது. நிழல் யுத்தம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்து இராணுவத்தினரின் ஆதரவுடன் முன்னெடுத்துச் செல்லப்படுவதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தவறி வருவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும், ஆதாரம் தேவையென கண்காணிப்புக் குழு அடி, முடி தேடுவதால் `நிழலை` கண்காணிப்புக் குழு பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இங்கும் கண்காணிப்புக் குழு செல்ல நீண்ட நாட்களெடுக்குமென்பதால் இங்கும் தமிழ்க் குழுக்களின் முகாமிருந்ததற்கான ஆதாரமில்லாது போகலாம்.

அதேநேரம், கருணா குழு படையினருடன் சேர்ந்தியங்கவில்லை முகாம்களை அமைத்தே அவர்களும் செயற்படுவது போன்றதொரு தோற்றப்பாட்டை இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் வெளியுலகிற்கு காண்பிக்க முடியும். ஆனாலும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பாதுகாப்புகளுக்கு மத்தியிலிருக்கும் கருணா குழுவின் முகாம்களே தாக்கப்படுகையில், புலிகளின் பகுதிக்குள்ளேயே கருணா குழுவின் முகாம்களிருப்பதாக படைத்தரப்பு கூறுவது எடுபடுமா என்ற கேள்வியும் எழுகிறது.

எவை எப்படியிருந்தாலும் அரசாங்கம் உறுதியான சில முடிவுகளை எடுக்காவிட்டால் தற்போதைய நிழல் யுத்தம் நிஜப் போராகுவதற்கு மிகவும் குறுகிய காலமே தேவையென்பது சர்வ நிச்சயம்.

thinakkural

  • தொடங்கியவர்

யார் இந்த விஜயன்?

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கருணா `தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள்' என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் இவர், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எவ்.) யுடன் இணைந்து தமிழீழ ஐக்கிய மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார்.

1987 இல் இலங்கை - இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின், புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு அமைக்கப்பட்டது தான் ஈ.என்.டி.எல்.எப்.

இலங்கையில் இந்தியப் படை நிலை கொண்டிருந்த போது விடுதலைப் புலிகளுக்கெதிராக ஈ.என்.டி.எல்.எவ். தீவிரமாகச் செயற்பட்டதுடன் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துடன் இவர்களும் தமிழகம் சென்று சேலத்தில் நிலை கொண்டனர்.

கருணாவின் கிளர்ச்சியைத் தொடர்ந்து அவருடன் இணைய ஈ.பி.டீ.பி. முற்பட்ட போதும் கருணாவுடன் ஈ.என்.டி.எல்.எவ்.பை இந்திய புலனாய்வுப் பிரிவான `றோ' வே இணைத்ததாக தமிழர் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டது.

கருணா குழுவும் ஈ.என்.டி.எல்.எவ்.பும் இணைந்த பின், கௌசல்யன் மீதான வெலிக்கந்தை தாக்குதலுக்கு தாங்களே பொறுப்பென தமிழ்த் தேசிப் படை (ரி.என்.எவ்.) என்ற அமைப்பு வெளிநாடொன்றிலிருந்து உரிமை கோரியதுடன் தமிழீழ ஐக்கிய மக்கள் முன்னணி அமைப்பின் துணைப் படையே `ரி.என்.எவ்.' எனக் கூறியிருந்தது.

கௌசல்யன் கொலையுடன் விஜயன் என்ற ஈ.என்.டி.எல்.எவ். உறுப்பினருக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் சொறிவில் தாக்குதலின் விஜயன் கொல்லப்பட்டார்.

புலிகளுக்கெதிரான தாக்குதலை கிழக்கில் தீவிரப்படுத்துவதற்காக விஜயன் விசேடமாக அனுப்பி வைக்கப்பட்டவரெனக் கூறப்படுகிறது. இவரது குடும்பத்தினர் தற்போது சேலத்தில் ஈ.என்.டி.எல்.எப். முகாமிலிருக்கின்றனர்.

விஜயன் இந்திய கடவுச் சீட்டைக் கொண்டவர். இவரது இழப்பு புலிகளுக்கெதிரான நிழல் யுத்தத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் இவருக்குப் பதிலாக ஈ.என்.டி.எல்.எவ்.பைச் சேர்ந்தவர்கள் இங்கு அனுப்பப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது

Thinakkural

ஆனந்த சங்கரி தலைமையில் புலிகளுக்கெதிரான அரசியற்குழு

Written by Raavanan Sunday, 17 April 2005

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான அரசியல் மற்றும் இராணுவ செயற்பாடுகளை மேற்கொள்ள புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இந்திய புலனாய்வு பிரிவான றோ ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழர் விடுதலைக் கூட்டனித்தலைவர் ஆனந்தசங்கரி தலைமையில் அரசியல் நடவடிக்கைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழுவினர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்வார்கள் என்றும் இவர்களது பிரச்சாரங்களுக்கு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் வானொலி ஒன்றும் சில இணையத்தளங்களும் பயன்படுத்தப்படுவதாகவும் அதுதெரிவத்துள்ளது.

இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்ட்ட கருணாவின் ஆதரவாளர்கள் இந்தியாவில் தளம் அமைத்துள்ள ஈபி.ஆர்.எல்.எப். வரதர் அணியின் உறுப்பினர்களை உள்ளடக்கிய இராணுவப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் மீது தாக்குதல்களை நடத்துவது மற்றும் பதற்ற சூழல் ஒன்றை தோற்றுவிப்பது போன்ற நடவடிக்கைகளில் இந்தக் குழுவினர் ஈடுபடுது;தப்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சங்கதி.கொம்

வெள்ளவத்தை நகைக்கடையில் பட்டப்பகலில்

35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை

வெள்ளவத்தையிலுள்ள நகைக் கடையொன்று, இனந்தெரியாத கும்பலொன்றினால், நேற்று பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை ஸ்ரீ ஜுவல்ஸ் கார்டன் என்ற நகைக் கடையே இவ்வாறு பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்ட நகைக் கடையாகும். இக்கொள்ளைச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

மேற்படி நகைக் கடை வழமைபோல் நேற்று திறந்திருந்தபோது கடையில் இரண்டு பேர் கடமையில் இருந்துள்ளனர். பகல் 12 மணியளவில் வானொன்று கடைக்கு அருகில் வந்து நின்றது.

அதிலிருந்து சுமார் 20 வயது மதிக்கத்தக்க யுவதியொருவரும் மேலும் மூன்று இளைஞர்ளும் இறங்கியுள்ளனர். இதில் ஒருவர் வாசலில் நிற்க, மற்றைய இரு இளைஞர்களும் யுவதியுடன் நகைக் கடைக்குள் சென்றுள்ளனர்.

குறிப்பிட்ட யுவதி, தான் நவரத்தினக் கற்கள் பதித்த மோதிரம் வாங்க வந்துள்ளதாக நகைக் கடை ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.

கடை ஊழியர்கள் வந்த மூவரையும் அமரும்படி கூறியுள்ளனர். குறிப்பிட்ட யுவதியும், ஒரு இளைஞரும் மட்டும் ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்.

ஆனால், மற்றையவர் நின்றுகொண்டிருந்தார். நின்றுகொண்டிருந்தவரை அமரும்படி கடை ஊழியர் கூறியதையடுத்து கடைக்குள் யுவதியுடன் வந்த இரண்டு இளைஞர்களும் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களைக் காட்டி, கடையிலிருந்த நகைகள் அனைத்தையும் ஒன்றாக கட்டும்படி கூறி ஊழியர்களை ஆயுத முனையில் பயமுறுத்தியுள்ளனர்.

அச்சத்திற்குள்ளான ஊழியர்கள் கடையிலிருந்த அனைத்து நகைகளையும் கொண்டுவந்து மேசையில் வைக்க கொள்ளையர்கள் ஊழியர் ஒருவரை பலமாகத் தாக்கிவிட்டு, நகைக் கடையின் கண்ணாடிகளையும் உடைத்துவிட்டு, சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான 291 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து வெள்ளவத்தை பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கைரேகைகளை பதிவு செய்ததோடு, சம்பவம் இடம்பெற்றபோது நகைக் கடையில் இருந்த ஊழியர்களையும் விசாரணைக்குட்படுத்தினார்கள

கிளாலி கடற்பரப்பின் மேலாக மர்ம விமானம்: விசாரணைக்கு விமானப்படை உத்தரவு

றுசவைவநn டில சுயயஎயயெn ளுரனெயலஇ 17 யுpசடை 2005

கிளாலியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி கடற்பரப்பின் மேலாக மர்ம விமானம் ஒன்று பறந்து சென்றது தொடர்பாக விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கிளாலியில் நிலை கொண்டுள்ள படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி கடற்பரப்பின் மேலாக விமானம் ஒன்று பறந்து சென்றதை அவதானித்தனர். இதனையடுத்து இராணுவ அதிகாரிகள் இவ்விடயத்தை விமானப்படையினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விமானம் புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பரப்பின்மேல் இரு தடவைகள் பறந்ததைத் தாங்கள் கண்டதாகவும் எனினும் இது தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் பிரவேசிக்கவில்லை எனவும் படையினர் தெரிவித்தததாக உதயன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

sankathi.com

இருபாலையில் இடம் பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் உள்ள இருபாலைச் சந்திப்பகுதியில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற மினி பஸ் - மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியானதுடன், மேலும் இருவர் காயமடைந்தனர். இச் சம்பவத்தையடுத்து அங்கு வந்த பொலிஸார் விபத்துடன் தொடர்புடைய மினி பஸ்சை அகற்ற முற்பட்டதால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பொலிஸாரை விரட்டியடித்து சம்பவத்துடன் தொடர்புடைய மினி பஸ்சை எரியூட்டியுள்ளனர்.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,

முகமாலையிலிருந்து பயணிகளுடன் வந்து கொண்டிருந்த மினி பஸ் ஒன்று இருபாலைச் சந்தியில் ஏற்கனவே துவிச்சக்கர வண்டி ஒன்றுடன் விபத்துக்குள்ளாகிய நிலையில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளையும் அதனை ஓட்டி வந்தவர்களையும் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவரும் இருபாலைப் பகுதியைச் சேர்ந்தவருமான தேவராஜா உதயகுமார் (வயது 26) என்பவர் பலியானதுடன், அதே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களான தேவராஜா ஜெயராஜ் (வயது 28) செல்லையா றஞ்சன் (வயது 26) ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விபத்துடன் தொடர்புடைய மினி பஸ்ஸினை சம்பவ இடத்திலிருந்து அகற்ற முற்பட்டனர்.

எனினும், அங்கு திரண்ட மக்கள் நீதிவான் சம்பவ இடத்தை பார்வையிடமுன் மினி பஸ்ஸை அங்கிருந்து அகற்ற வேண்டாம் என கோரினர். இதனை ஏற்க மறுத்த பொலிஸார், வலுக் கட்டாயமாக சம்பவ இடத்திலிருந்து மினி பஸ்ஸை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய முற்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாரை அங்கிருந்து விரட்டியடித்ததுடன் சம்பவத்திற்குக் காரணமான மினி பஸ்ஸையும் அடித்து நொருக்கி தீயிட்டனர். இதில் அம் மினி பஸ் முற்றாக எரிந்து நாசமானது.

இதனையடுத்து, அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது. யாழ் மாநகர சபையின் தீயணைக்கும் படையினர் எரிந்து கொண்டிருந்த மினி பஸ்ஸின் தீயை அணைக்க முற்பட்ட போதும் அது முற்றாக எரிந்து நாசமாகிவிட்டது.

இவ் விபத்தினால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் வீதியூடான போக்குவரத்தைத் தடை செய்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் வீதிக்கு குறுக்காக ரயர்களைப் போட்டும் எரித்தனர். இதனால் இவ்வீதியூடாக போக்குவரத்துத் தடைப்பட்டது.

இதனையடுத்து, பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டியதையடுத்து பொது மக்களும் பொலிஸார் மீது கற்களை வீசினர். இதனால் அங்கு ஒரு களேபரம் ஏற்பட்டது.

எனினும், அங்கு வந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவினர் சமரச முயற்சிகளில் ஈடுபட்டு நிலைமையைக் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்ததையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளின் காவலரண் மீது இராணுவம் துப்பாக்கிப் பிரயோகம்!

திருகோணமலை மூதூரில் கிழாத்தி மலைப் பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் காவலரண் மீது நேற்றிரவு 7.10 மணியளவில் சுமார் 15 முதல் 20 வரையான சிறீலங்கா இராணுவத்தினர் சீருடையில் வந்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

மூதூர் கிழக்கு பச்சனூர்ப்பகுதியில் கிழாத்தி மலையில் உள்ள ஆறு ஒன்றின் கிழக்காக விடுதலைப்புலிகளின் அரணும் மேற்காக சிறீலங்கா இராணுவத்தினரின் அரணும் உள்ளன.

இம் முகாம் மீது நேற்றிரவு திடீரென தாக்குதல் மேற்கொண்ட சிறீலங்கா இராணுவத்தினர் சிறிது நேரத்தின் பின்னர் பின்வாங்கிச் சென்று வி;ட்டனர்.

இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார்.

புதினம்

ஈரானில் விமான விபத்து:50 பேர் பலி

ஈரானில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென தீப்பிடித்து வெடித்தது.

இதில் 50 பயணிகள் பலியாகினர் என துபாயிலிருந்து வெளிவரும் அல்-அரேபியா என்ற தொலைக்காட்சி தெரிவித்தது.

Saha விமான நிறுவனத்திற்குச் சொந்தமான அப்பயணிகள் விமானம், Tehran அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று தரையிறங்க முற்பட்டது.

அப்போது திடீரென இயந்திரப்பகுதியில் தீப்பிடித்து,வெடித்தது. இச்சம்பவம் நேரிட்ட போது விமானத்துக்குள் 157 பயணிகள் இருந்தனர்.

  • தொடங்கியவர்

கஞ்சிக்குடிச்சாற்றில் விடுதலைப்புலிகள்- கருணா அணியினர் மோதல்

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில், கங்சிக்குடிச்சாறு என்னுமிடத்தில் விடுதலைப்புலிகளுக்கும், கருணா அணியினருக்கும் இடையில் நடந்த மோதலில் 5 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஆறு அல்லது ஏழு பேர் காயமடைந்ததாகவும் தமக்கு செய்திகள் கிடைத்ததாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறியுள்ளார்.

ஆனால் தமது பகுதிக்குள் வந்த ஆயுத குழு ஒன்றின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாகவும், அதனையடுத்து அவர்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி தப்பியோடிவிட்டதாகவும் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளர் குயிலின்பன் தெரிவித்துள்ளார்.

அந்த குழுவினரின் பொருட்களை தமது தரப்பினர் கைப்பற்றியதாகவும் அவற்றில் இராணுவத்தினர் பயன்படுத்தும் சில பொருட்களும், அவர்களது தொப்பியும் இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால் இந்த மோதலில் தமது தரப்பில் எவரும் பலியாகவில்லை என்று கூறும் குயிலின்பன், இந்த சம்பவங்களுடன் இராணுவத்திற்கு சம்பந்தமுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அந்த சம்பவத்தில் இராணுவத்துக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று பிரிகேடியர் தயா ரட்ணாயக்கா கூறுகிறார்.

இதற்கிடையே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பகுதியில் இளைஞர் ஒருவர் அடையாளந் தெரியாத ஆட்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

BBC தமிழ் செய்தி

  • தொடங்கியவர்

உயர்நிலை பொலிஸ் அதிகாரியைக் காணவில்லை!

பயங்கரவாதத் தடுப்புக் குற்றப்பிரிவின் உயர்நிலை அதிகாரியான திரு.ரி. ஜெயரத்தினம் என்பவரைக் காணவில்லையென இலங்கை பொலிஸ்மா அதிபர் இன்றிரவு தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் உயர்நிலை அதிகாரியும் மேற்படி பிரிவில் மிகவும் அனுபவம் வாய்ந்தவருமான திரு.ரி.ஜெயரத்தினம் என்பவரை கடந்த புதன்கிழமை இரவிலிருந்து காணவில்லையெனத் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

யுத்தகாலத்தில் கொழும்பு மாநகரை மையமாகக் கொண்டு செயற்பட்ட இவ்வதிகாரிää கொழும்பில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கருதப்பட்டவர்களை கைது செய்து விசாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பி;டத்தக்கது.

இவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத போதும்ää இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரியவருகிறது.

puthinam

  • தொடங்கியவர்

இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் கடத்தப்பட்டார் புளொட் இளைஞன் மீது மனைவி சந்தேகம்

கல்கிசை பொலிஸ் நிலைய பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் எஸ்.ஜெயரட்ணம் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1999 ஆம் ஆண்டின் பின்னர் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டதால் இவர் பொலிஸ் திணைக்களத்தில் மட்டுமல்லாது அதற்கு வெளியேயும் பிரபலமாகியிருந்தார்.

பலத்த பாதுகாப்பின் மத்தியில் கொழும்பு ஹைலெவல் வீதியிலுள்ள பொலிஸ் விடுதியில் தங்கியிருக்கும் இவர், பம்பலப்பிட்டி கள நடவடிக்கை பொலிஸ் பிரிவில் அண்மைக் காலமாக கடமையாற்றி வந்தார்.

கடந்த புதன்கிழமை இரவு, நண்பர்கள் இருவரின் அழைப்பின் பேரில் குடும்பத்தினருடன் கல்கிசை ஹோட்டலுக்கு இரவு உணவருந்தச் சென்ற இவர், அது முடிவடைந்ததும் நள்ளிரவு 11.45 மணியளவில் குடும்பத்தினரை வாகனமொன்றில் அனுப்பி விட்டு பம்பலப்பிட்டியிலுள்ள தனது பொலிஸ் அலுவலகத்திற்குச் செல்வதாகக் கூறி நண்பர்களுடன் சென்றுள்ளார்.

மறு நாள் காலை இவரது மனைவி, இவருடன் அலுவலக தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது ஜெயரட்ணம் அங்கு வராதது தெரிய வந்தது.

இதையடுத்து இவர் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாமெனச் சந்தேகித்த பொலிஸார் உடனடியாக உஷாரடைந்த நாடு முழுவதிலுமுள்ள சகல பொலிஸ் நிலையங்களையும் உஷார்படுத்தினர்.

இதுபற்றி ஜெயரட்ணத்தின் மனைவி கூறுகையில்,

மனோ என்ற புளொட் உறுப்பினருடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர், வவுனியாவிலுள்ள காணி ஒன்று தொடர்பாக தொலைபேசி மூலம் உரையாடியதையடுத்து எமக்கு பழக்கம் ஏற்பட்டது.

புளொட் முகாமிலிருந்த அவர், பின்னர் அந்தக் காணி அலுவலை முடித்துத் தந்த பின்னர் அடிக்கடி தொலைபேசியில் கதைப்பார். எனது கணவருடனும் பின்னர் இவர் நண்பரானார்.

தொலைபேசி மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் இவர் எமது வீட்டிற்கு வந்தார். அதன் பின்னர் அடிக்கடி வருவார்.

கடந்த புதன்கிழமை மாலை வீட்டிற்கு வந்த இவர், லண்டனிலிருந்து நண்பரொருவர் வந்துள்ளதாகவும் அவருக்கு தான் அன்றிரவு இரவு உணவு விருந்தளிப்பதாகவும் அதற்கு எங்களைக் குடும்பத்துடன் வருமாறும் வற்புறுத்தி அழைத்தார்.

பாதுகாப்பு காரணத்தால் வெளியே எங்கும் செல்லாத எனது கணவன், இந்த விருந்துக்குச் செல்ல இணக்கம் தெரிவித்திருந்தார். எனினும், மனோவுடன் வந்திருந்தவர் மீது எனக்கு சிறிது சந்தேகமிருந்ததால் இதனை நான் பெரிதாக விரும்பவில்லை.

எனினும், கணவரின் வற்புறுத்தலால் பிள்ளைகளுடன் இரவு 8 மணியளவில் சென்றோம். நள்ளிரவு 11.45 மணியளவில் விருந்து முடிந்ததும் எம்மை வாடகை வாகனமொன்றில் வீட்டுக்கு அனுப்பியதுடன், தான் பம்பலப்பிட்டி அலுவலகத்திற்கு செல்வதாகக் கூறி மனோவுடனும் அவருடன் வந்தவருடனும் சென்று விட்டார்.

மறுநாள் காலை அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போதே அவர், முதல் நாள் மாலை வெளியே சென்ற பின்னர் மீண்டும் அங்கு வராதது தெரியவந்தது.

அதேநேரம், மனோவுடனும் தொடர்பும் இல்லாது போய் விட்டது. அவர்தான் எனது கணவனை வேறு ஆட்களுடன் சேர்ந்து கடத்திச் சென்றிருக்க வேண்டுமென்றார்.

இவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக இறங்கியுள்ளதுடன், வடக்கு, கிழக்கு உட்பட படையினரும் பொலிஸாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

தினக்குரல்

இலங்கை கொழும்பில் பயங்கரவாதத் தடுப்பு உளவுத் துறையில் பணியாற்றி வந்த அதிகாரி ரி. ஜெயரட்ணம் அவர்களைக் கடந்த இரண்டு நாட்களாகக் காணவில்லை என்று பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த செய்திகள் பற்றி இலங்கை பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ பேசிய போது - பிரிட்டனில் இருந்து வந்த ஒருவருடன் இரவு உணவுக்குப் போன அவர் திரும்பி வரவில்லை என்றும், இந்த விஷயம் தொடர்பாக சர்வதேச உதவிகளும் நாடப்பட்டுள்ளன என்றும் கூறினார்.

ஜெயரட்ணத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்றும். எந்த ஒரு குழு மீதோ அல்லது தனிப்பட்ட நபர் மீதோ தாங்கள் இப்போது சந்தேகம் கொள்ளவில்லை என்றும், வழக்கம் போல திறந்த கண்ணோட்டத்துடன் அனைத்தையும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

from BBC tamil

menu_english_r2_c2_f2.gif

Norway

Oslo-resident Tamil journalist victim of death threats and harassment

norway1.jpg

Sethurupan Nadarajah

Reporters Without Borders is very concerned about incitement to murder and other threats against independent Tamil journalist Sethurupan Nadarajah, who is living in Norway.

Fearing for his own and his wife's safety, the journalist appealed to the worldwide press freedom organisation for help and it has been able to confirm both the truth and the gravity of his claims.

The Tamil journalist has for the past six months been the target of death threats posted on several Danish-based websites hosted in the United States, including nerupu as well as receiving threats directly.

Reporters Without Borders has written to the Norwegian minister for Justice and the Police, Odd Einar Dorum, calling for the journalist to be given police protection and for a full investigation into the origin of the telephone and electronic threats against him

The organisation also urged the Danish interior minister Lars Lokke Rasmussen to work to pinpoint the precise origin of the threats.

The website carries a photomontage of Sethurupan with the caption : "Tamil terrorist. Mr Sethu collects money for the journalist Nadesan but uses it for his family. Watch out for this individual".

Sethurupan received an email in Tamil on 25 April 2005 from the address tamil3rdview@ yahoo.co.uk, with the message : "We have been collecting information about you. We will soon act against you. We have also informed the LTTE [Tamil Tigers]. You are a very dangerous individual for our liberation struggle. We live in Norway and we are going to eliminate you." The IP address of the computer from which the message was sent has been identified as : 81.191.153.244. It is apparently an Oslo address.

In another worrying incident on 20 April, a Tamil speaker phoned the journalist and threatened his wife, a Sri Lankan nurse who has taken Norwegian nationality, saying : "Where is your wife ? We are going to rape and kill her because she is a prostitute."

These death threats were recently relayed by London-based Tamil and pro-Karuna station TBC Radio and on another website nitharsanam.net, also based in Denmark and with the same host server, the American company GoDaddy.

Tamil groups who are pro-Karuna - the LTTE rebel chief who broke with the Tamil Tigers - are believed to be behind the death threats. They accuse Sethurupan of belonging to the LTTE and of writing articles in English and Tamil about their activities in Sri Lanka and abroad. In fact, the Tamil journalist is known to be independent and in 2001 he was threatened by LTTE supporters. He is an active member of the Sri Lanka Tamil Media Alliance (SLTMA) for which he is foreign affairs representative. He currently contributes to a Tamil radio station based in London, runs several websites, including Oslo Voice, and sends regular articles to the media in Sri Lanka.

http://www.rsf.org/article.php3?id_article=13372

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தினரின் ஆட்லறித்தளத்தில் பாரிய வெடிச்சத்தங்கள்!

ஜ யாழ். நிருபர் ஸ ஜ வியாழக்கிழமைää 05 மே 2005ää 15:50 ஈழம் ஸ

யாழ்ப்பாணம் தனங்கிளப்பு சிறீலங்கா இராணுவத்தினரின் ஆட்டிலறி தளத்தில் நேற்று முற்பகல் பாரிய வெடிச் சத்தங்கள் கேட்டதாக அப்பிரதேச மக்களின் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் தயா ரத்னாயக்காää

ஆயுதக் களஞ்சியத்தில் வெடி விபத்தொன்று ஏற்பட்டதாகவும்ää இதில் மூன்று இராணுவ சிப்பாய்கள் காயமடைந்து பலாலி இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இச்சம்பவமானது தொழில் நுட்பக் கோளாறாக இருக்கலாம் என்று கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நேற்று வெலிஓயா இராணுவ தலைமையகப் பகுதியில் இடம்பெற்ற மிதிவெடி விபத்தில் இராணுவ சிப்பாயொருவர் காயமடைந்து பதவியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார

www.puthinam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.