Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டாவின்சி கோட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

The Da Vinci Code - Sakrileg

þó¾ ¾¢¨ÃôÀ¼õ ÀüȢ ¸¡ðº¢¸û (trailer)«øÄÐ þ¨½Âò¾¢ø Å¡º¢ì¸ìÜÊ þ¾ý ¸¨¾ ±í§¸ þÕ츢ýÈÐ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும், ஒருபேப்பர் புதிய பதிப்பிலும் இந்த நாவல் பற்றிய கட்டுரை வந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20052006thn13image21hf.jpg

கடந்த நான்கு நாள்களாக சர்வதேச பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது 'தி டாவின்சி கோட்' திரைப்படம். டாம் ஹங்ஸ் நடித்திருக்கும் இப்படத்தை இந்தியாவில் திரையிட அனுமதிக்கக்கூடாது என்று பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள் போராடி வருகின்றன. நேற்று ரிலீஸாக வேண்டிய இத்திரைப்படம் போராட்டங்கள் காரணமாக தாமதமாக வெளியாகிறது. இந்நிலையில் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கக்கூடிய 'ஏ' சான்றிதழுடன் 'தி டாவின்சி கோட்' படத்தை திரையிடலாம் என்று அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அப்படியென்ன இருக்கிறது டாவின்சி கோட்டில்?

இயேசு ஒரு பிரம்மச்சாரி, அவர் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறுகிறது கிறிஸ்தவர்களின் மறை நூலான பைபிள். இதற்கு மாறாக இருக்கிறது அமெரிக்க எழுத்தாளர் டேவிட் பிரவுன் எழுதிய நாவலின் கதை. ஒரு கொலையை துப்பறியும்போது டாவின்சியின் ஓவியம் வழியாக சில உண்மைகள் தெரியவருகிறது. அதன்படி இயேசு மேரி மெக்தலினை திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன, இயேசுவின் ரத்த உறவுகள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்று எழுதியுள்ளார் டேவிட்.

இந்த நாவல் வெளியானபோது பெரும் சர்ச்சையில் சிக்கியது. இப்போது 125 மில்லியன் டாலர்கள் செலவழித்து இதனை மெகா பிலிமாக ஹாலிவுட்டில் தயாரித்துள்ளனர். பைபிளில் உள்ள உண்மைக்கு மாறாக இயேசுவை திருமணமானவராக சித்தரிப்பது அவர் புனிதத்துக்கு இழுக்கு என்று கூறி போராட்டத்தில் இறங்கியுள்ளன கிறிஸ்தவ அமைப்புகள்.

இதுபோன்று 'தி லாஸ்ட் டெம்ட்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட்' படம் வெளியான போதும் பெரும் சர்ச்சைகள் எழுந்தன. மெல்கிப்சனின் 'பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட்' படம் வெளிவரும் முன்பு எதிர்ப்புகள் கிளம்பி, பிறகு படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லை என்று தெரிந்ததும் எதிர்த்தவர்களே படத்திற்கு பிரசாரம் செய்தனர். படம் சூப்பர் ஹிட்டானது.

'டாவின்சி கோட்' திரைப்படமும் 'பேஷன் ஆஃப் தி க்ரைஸ்ட்'ன் வெற்றியை மனதில் வைத்து தயாரிக்கப்பட்ட படம்தான். இப்போது கிளம்பியிருக்கும் சர்ச்சையை தொடர்ந்து டேவிட் பிரவுனின் புத்தக விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் படமும் கலெக்ஷ்னை அள்ளும் என்று எதிர்பார்க்கிறார்கள்!

நன்றி - சினி சவுத்

கிறிஸ்தவத்தை காப்பதற்கா என்று கூறி உலம்முழுதும் சண்டை போடுபவனும் அமெரிக்காதான், பணத்திற்காக ஏசுவை இழிவு படுத்துபவனும் அவன்தான். பணம் என்றால் அவன் எதையும் விட்டுக்கொடுப்பான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

§Áľ¢¸ Å¢ÀÃí¸û þíÌõ §À¡ö À¡÷ì¸Ä¡õ.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=10859

இப்படத்தினைப் பார்த்தனான்.இரண்டரை மணித்தியாலப்படம். பரவாயில்லை.

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாவின்சி கோட் - இயேசு கிறிஸ்து திருமணமானவர் என்ற நாவல்

இயேசு கிறிஸ்துவிற்கு திருமணமாகிவிட்டது அவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. அவர் ஒரு சராசரி மனிதன், கடவுளின் குழந்தை அல்ல.

டான் பிரவுன் அவர்களின் நாவலான டாவின்வி கோட் நாவலில் ராபர்ட் லாங்டன் என்ற கதாபாத்திரம் சோபியா என்ற பாத்திரத்திடம் இவ்வாறு கூறும் சமயம் சோபியா மட்டும் அல்ல எனக்கும் தூக்கிவாரிப் போட்டது.

என்னை முதன் முதலில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை வித்தியாசமான ஒரு கோணத்தில் பார்க்க வைத்தது டாவின்சி கோட் நாவல்தான்.

இந்த நாவலின் ஆரம்பம் லாவுரே( Louvre ) என்ற மியுசியத்தில் ஆரம்பிக்கிறது. அந்த மியுசியத்தின் மேற்பார்வையாளர் ஜாக்குவஸ் கொலை செய்யப்படுகிறார்.அவர் இறக்கும் நேரத்தில் அவர் விழுந்து கிடக்கும் இடத்தில் ராபர்ட் லாங்டன் பெயரையும் சில எண்களையும் சில வார்த்தைகளையும் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். ராபர்ட் லாங்டனை ஹாவர்ட் பல்கலை கலகத்தில் சரித்திரம் மற்றும் கூறியீட்டியல் பேராசிரியர். சரித்திர ஆராய்ச்சி செய்து வருபவர்.

அங்கு வரும் காவல்த்துறை ராபர்ட் லாங்டன் பெயரை பார்த்து விட்டு ராபர்ட்தான் கொலை செய்தார் என்று சந்தேகம் கொண்டு ராபர்டின் பெயரை அழித்துவிட்டு சம்பவ இடத்திற்கு ராபர்டை அளைத்து வந்து விசாரணை செய்கிரார்கள்.ஜாக்குவஸின் மரண வாக்குமூலத்தில் எண்கள் இருப்பதால் கிரிப்ட்டோகிராபி துறையின் உதவியை நாடுகிறார்கள் காவல் துறையினர்.

அங்கு வேலை பார்க்கும் சோபியா ஜாக்குவஸின் பேத்தி. சோபியா அந்த செய்தியைப் பார்த்தவுடனே தன்னுடய தாத்தா தனக்காகதான் இந்த செய்தி என்பதை உணர்ந்து கொள்கிறாள். இந்த செய்தியால் ராபர்ட் கைது செய்யப்படலாம் என்பதையும் உணர்ந்து இந்த செய்தியை முழுவதுமாக புரிந்து கொள்ள ராபர்டை தொடர்பு கொள்ளச் சொல்லி இருக்கிறார் தன்னுடய தாத்தா என்பதயும் புரிந்து கொள்ளும் சோபியா, இதனால் ராபர்டிற்கு ஆபத்து உள்ளது என்று உணர்ந்து ராபர்டை போலிஸில் இருந்து தப்புவிக்கிறார்.

இப்படி கொலை என்று சஸ்பென்ஸ் நாவலாக ஆரம்பிக்கும் டாவின்சி கோட் ஒரு புதையல் வேட்டையாக மாறுகிறது.ஜாக்குவஸ் இறக்கும் முன் தான் பல காலம் பாதுகாத்து வந்த ரகசியம் யாருக்கும் தெரியாமலே தொலைந்து விடக் கூடும் என்ற சூழ் நிலை உருவாகி விட்டதாலும், தன்னுடய பேத்தியான சோபியாவிற்க்கும் ஆபத்து இருக்கலாம் என்பதாலும், சோபியாவிற்கு ராபர்ட் லாங்டனை சந்திக்குமாறு விடுகதை போல ஒரு செய்தி எழுதி வைத்தார் என்பதை அறிகிறோம்.

அவர் காத்து வந்த ரகசியம் ஹோலி கிரைல்( holy grail ) எனப்படும் ஒரு கோப்பை என்று அறிகிறோம். இந்தக் கோப்பை கிறிஸ்து தன்னுடய கடைசி உணவு உண்ணும் சமயம் வைண் குடிக்க உபயோகப்படுத்திய கோப்பை என்றும் அறிகிறோம். இந்த கோப்பைதான் உலகில் உள்ள எல்லா புதையலிலும் மிக முக்கியமானது, விலை உயர்ந்தது. கிங் ஆர்தர் போன்றவர்கள் இந்த கோப்பையை கண்டு பிடிப்பதையே தன்னுடய வாழ்க்கையின் லட்சியமாக வைத்து இருந்தார்கள்.

ஆனால் சீக்கிரமே லாங்டன் ஹோலி கிரைல் என்பது உண்மையில் ஒரு கோப்பை அல்ல என்பதை விளக்கி அதன் உண்மையான அர்த்ததை விளக்கி கூறும் சமயமே நாம் முதலில் பாராவில் எழுதி இருக்கும் வசனத்தை ராபர்ட் சோபியாவிடம் கூறுகிறார்.

மேலும் கிறிஸ்து மேரி மங்லாடின் என்ற பெண்மணியை திருமணம் செய்துள்ளார் அவர்களுடய குடும்பம் பல தலைமுறைகளை தாண்டி இன்றும் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார். அதற்க்கான ஆதாரங்கள் அடங்கி உள்ள ஆவனங்களே ஹோலி கிரைல் என்று அழைக்கைப் படுகிறது என்றும் கூறுகிறார்.அதை அடையுதற்காகவே ஜாக்குவஸ் கொலை செய்யப் பட்டுருக்கிறார் என்பதையும் கூறுகிறார்.இதன் பிறகு ராபர்டும், சோபியாவும் ஹோலி கிரைலை எதிரிகள் அடையும் முன் எவ்வாறு ஜாக்குவஸ் அமைத்திருக்கும் ஒவ்வொரு புதிருக்கும் விடை கண்டு பிடித்து அடைகிறார் என்பதுதான் நாவல்.

இந்த நாவல் மற்ற சஸ்பென்ஸ் நாவல்களில் இருந்து வித்தியாசப் பட்டுருப்பதற்க்கு கிறிஸ்துவின் வாழ்க்கை நாவலில் பின் புலமாக சொல்லப்பட்டுருப்பது ஒரு காரணம்.

மற்ற காரணம் என்னவென்றால் இந்த நாவலின் கதையை ஒட்டி பல சுவாரஸ்யமான தகவல்களும் சொல்லப் பட்டுருப்பதுதான். உதாரணமாக என்னுடா முந்தய பதிப்பான தெய்வீக எண் என்று அழைக்கப் படும் 1.618ன் ஆச்சர்யமான விஷேசங்கள் நாவலில் கதையின் போக்கிலேயே சொல்லப்படுகிறது.

நைட்ஸ் டெம்ப்லர்(Knights Templar)( இங்கிலாந்து நாட்டில் 1500ல் இருந்த ஒரு குழுவினர் இவர்கள் திடிரென்று சில வருடங்களில் பணம், அதிகாரம் பெற்று போபைவிட பலம் வாய்ந்தவர்களாகிவிட்டர்கள். இவர்களின் பண பலம், அதிகார பலம் கண்டு பயந்த போப் இவர்களை கொலை செய்ய ஏற்பாடு செய்தார் என்று பல வதந்திகள் இவர்களைப் பற்றி உண்டு. இன்றும் அவர்கள் எவ்வாறு பணம், அதிகாரம் அனைத்தியும் அடைந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ) போன்ற சரித்திரத்தில் புதிராக இருக்கும் பல விஷயங்கள் நாவல் முழுவதும் கதையின் ஒட்டத்தினிடயே சொல்லப்பட்டிருக்கிறது.

உங்களுக்கு சரித்திரம் மற்றும் சஸ்பென்ஸ் நாவல்கள் பிடிக்கும் என்றால் இந்த நாவலை நீங்கள் கண்டிப்பாக படியுங்கள்.

கிறிஸ்து திருமணம் ஆனவரா என்பது பற்றி என்னுடய கருத்துக்கள், டாவின்சி கோடில் அதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ஆதாரங்கள் பற்றி அடுத்த பதிவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயேசு கிறிஸ்து திருமணம் ஆனவரா ஒரு அலசல்

டாவின்சி கோட் நாவல்தான் முதன் முதலில் இந்த கேள்வியை என்னுள் எழுப்பியது.

இதைப் பற்றி வலைதளங்களில் தேடும் சமயம் இது பல நாட்களாக இருக்கும் ஒரு சர்ச்சை என்பதை அறிய முடிந்தது.

ஆகவே பல நாட்களாக பல வலைத் தளங்கள் மற்றும் புத்தகங்களைப் படித்தும் எனக்குக் கிடைத்த தகவல்களையும் என்னுடய கருத்துக்களையும் இங்கு கொடுக்கிறேன்.

இந்த அலசலை முதலில் உறுதி படுத்தப்பட்ட தகவல்களைக் கொண்டு ஆரம்பிக்கிறேன்

மேரி மங்லாடின் விபச்சாரி அல்ல

பல வல்லுனர்களும் உறுதி செய்யும் தகவல் இது. கிறிஸ்து ஒரு விபச்சாரியை மக்கள் கல் கொண்டு அடிக்கும் சமயம் பாவம் செய்யாதவர் மட்டும் இந்த பெண்ணை அடிக்கலாம் என்று கூறியது உண்மை ஆனால் இந்தப் பெண் மேரி மங்லாடின் அல்ல என்று பல சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்ட ஒரு விசயம். டாவின்வி கோட் நாவலில் மேரி மங்லாடினின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகதான் அவரை விபச்சாரி என்று பிரச்சாரம் செய்யப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது இது ஒரு கோணத்தில் சரி என்றே சொல்லலாம் போப் கிரிகாரி என்பவர்தான் முதன் முதலில் மேரி மங்லாடினை விபச்சாரி என்று கூறினார். 1969ம் வருடம் கிறிஸ்துவ தேவாலயம் மேரி மங்லாடினும், அந்த விபச்சாரியும் வேறு வேறு நபர்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளது.

பைபிள் 100 சதவீதகம் உண்மையை சொல்லவில்லை

இதை உறுதி படுத்திக் கொள்ளப் பட்ட தகவல்களில் சேர்ப்பதே சர்ச்சைக்குரியதுதான். ஆனால் இதில் உண்மை உள்ளது என்பதை பலர் ஒப்புக் கொண்டுள்ளார்கள். பைபிளில் என்தெந்த பகுதிகள் வைக்கப் பட வேண்டும் என்பதை தீர்மானம் செய்தவர்கள் கிறிஸ்து கடவுள் என்று தீவிரமாக நம்பிக்கை கொண்டவர்கள் ஆகவே அவர்கள் கிறிஸ்துவை தெய்வப் பிறவியாக காட்டும் பகுதிகளேயே வைத்தார்கள் என்பது உண்மை. பைபிளில் அவருடைய சீடர்கள் எழுதிய பல பகுதிகள் வைக்கப் படவில்லை. இன்று நமக்கு டெல் ஸீ ஸ்கூரொல் போன்றவை கிடைத்துள்ளன அவை கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவரை ஒரு தெய்வப் பிறவி என்ற நோக்கில் அல்லாமல் ஒரு தலை சிறந்த தலைவனாக சித்தரிகிறது. நாம் இந்த ஆவனங்களை பொய் என்று ஒதுக்கி தள்ளி விட முடியாது ஏனெனில் இதுவும் கிறிஸ்து அவர்களில் சீடர்களாலேயே எழுதப்பட்டது. இது பொய் எனில் பைபிள் மட்டும் எந்த அளவு உண்மை??

இதன் பிறகு நான் கொடுக்கும் தகவல்கள் அனைத்துமே சர்ச்சைக்குரியவை.

டாவின்சியின் லாஸ்ட் சப்பர் கிறிஸ்து பற்றிய உண்மைகளை வெளிப்படுத்திகிறது

டாவின்சி கோட் நாவலின் மிக முக்கிய கிறிஸ்துவின் திருமணத்திற்கு முக்கிய ஆதாரமாக காண்பிக்க படுவது டாவின்சியின் லாஸ்ட் சப்பர் ஓவியம்தான். இந்த ஓவியத்தை இங்கே கீழே பாருங்கள்

fsdavincilastsuppercleaned6bz.jpg

இந்த ஓவியத்தில் கிறிஸ்துவின் இடது புறத்தில் உள்ளது ஒரு பெண் அது மேரி மங்லாடின் என்று கூறப்பட்டுள்ளது. இவர்களுடய ஆடைகளையும் கவனியுங்கள் கிறிஸ்துவின் ஷாலும், மேரியின் மேலாடையும் மேரியின் ஷாலும் கிறிஸ்துவின் சட்டையும் ஒத்திருப்பதைக் காணுங்கள். டாவின்சி அப்படி வரைந்தது இருவரும் கணவன் மனைவி என்பதைக் குறிக்கத்தான் என்று டாவின்சி கோட் நாவலில் கூறப்படுகிறது. மேலும் இருவருடைய ஷாலும் அதற்கு நடுவே உள்ள இடைவெளியும் M என்ற சொல் உருவாவது போல தோன்றுகிறது பாருங்கள் இந்த சொல் மேரியை குறிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விசயம் என்னவென்றால் தன்னுடய கடைசி உணவைக் கொண்ட சமயம் கிறிஸ்து ஒரு கோப்பையில் வைண் பருகிய பின் அந்த ஒரு கோப்பையில் இருந்தே அவருடய சீடர்கள் அனைவரும் பின் வைண் பருகினார்கள் என்றுதான் இன்று வரை கூறப்பட்டு வருகிறது. அந்த கோப்பையே புனிதக் கோப்பை என்று அழைக்க படுகிறது அதுவே இன்று உலகில் மிகவும் தேடப்பட்டு வரும் புதையல். ஆனால் இந்த படத்தில் அந்த கோப்பை இல்லவே இல்லை. டாவின்சி மேரி மக்லாடினையே புனிதக் கோப்பையின் வடிவாக கருதி வரைந்துள்ளார் என்றும் டாவின்சி கோட் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

இதைப் பற்றி வல்லுனர்களிடம் பல கருத்துக்கள் நிலவுகின்றன. பலர் கிறிஸ்துவின் அருகில் உள்ளது ஜான் என்று கூறுகிறார்கள். ஆனால் M என்ற எழுத்திற்க்கும் புனிதக் கோப்பை பற்றியும் ஒரு விளக்கமும் இல்லை.

கிறிஸ்து ஒரு யூதர் ஆகவே அவர் திருமணம் செய்திருக்க வேண்டும்.

கிறிஸ்து வாழ்ந்த கால கட்டத்தில் யூதர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற சூழ் நிலை நிழவியது ஆகவே அவருக்கும் திருமணம் நடந்திருக்க வேண்டும்.

இந்தக் கருத்து பற்றியும் வல்லுனர்கள் கிறிஸ்து ஒரு விதிவிலக்காக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள் ஆனால் கண்டிப்பாக கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யூதர்களின் பழக்க வழக்கங்கள் இருந்ததும் உண்மை.

கினாஸ்டிக் காஸ்பலிஸில்( Gnostic Gospels ) கிறிஸ்துவிற்க்கும் மேரிக்கும் காதல் இருந்திருக்கலாம் போன்று இருக்கும் பகுதிகள்.

கினாஸ்டிக் காஸ்பலிஸ் என்பது சில வருடங்களுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது இது கிறிஸ்துவின் போதனைகளை சொல்லும் அதே நேரத்தில் அவருக்கு மேரியுடன் காதல் இருந்தது என்பதைப் போன்று எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கிறிஸ்து மேரியை முத்தமிடுவது போன்று சில பகுதிகளில் எழுதப்பட்டுள்ளது.

இதைப் பற்றி வல்லுனர்களிம் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இந்த ஆவனங்களை நம்ப முடியாது என்று கூறுகிறனர். சிலர் கிறிஸ்து தன்னுடய சீடர்கள் அனைவரையுமே முத்தமிடுவார் என்று கூறுகிறார்கள்.

இது வரை நான் சேகரித்த தகவல்களை கூறி வந்தேன் இப்பொழுது இதைப் பற்றி என்னுடய கருத்துக்கள்.

டாவின்சி கோடில் எனக்கு பிடித்த ஒரு வசனம் பைபிள் சொர்க்கத்தில் இருந்து பேக்ஸில் வரவில்லை என்ற வசனம்.

என்னைப் பொறுத்த வரை பசி இல்லாமல் அனைத்து மக்களும் வாழ வேண்டும் என்று பாடு படும் அனைவரும் தெய்வப் பிறவிகள்தாம் அந்த வகையில் கிறிஸ்துவும் தெய்வப் பறவிதான்.

வாடிகன் நகரம் கிறிஸ்துவின் பெயராலே, போப் என்ற ஒருவரின் கருத்திக்களுக்கு ஏற்ப நடந்து கொண்டு வருகிறது. பல போப்புகள் மிக நன்றவர்களாகவே இருந்தாலும் சிலர் சூனியக்காரிகள் எரிப்பு என்று படித்த பெண்களை கொல்வது, சிலுவை யுத்தம் என்று நாடுகள் மேல் படை எடுப்பது என்று தவறான பல காரியங்களை செய்துள்ளார்கள். இன்று உள்ள மத தீவிரவாதம், நிறக் கொடுமை போன்ற விசயங்கள் தேவாலங்களில்தான் ஆரம்பித்தது.

இங்கு கூற வருவது என்னவெனில் கிறிஸ்து என்பவர் தெய்வப் பிறவியாக இருக்கலாம் ஆனால் வாடிகன் நகரத்தில் உள்ளவர்கள் அவ்வாறு இல்லை.

ஆகவே கிறிஸ்து உண்மையாக திருமணம் ஆனவராக இருந்தாலுமே அதை மறைக்க வேண்டும் என்று வாடிகன் முடிவு செய்திருந்தால் அது அவ்வாறே நடந்திருக்கும்.

கிறிஸ்து திருமணம் ஆனவாரா என்ற கேள்விக்கு பதில் ஆமாம் இல்லை என்று பதில் சொல்லக் கூடிய நிலை இல்லை என்று பதிவை முடிக்கிறேன்

நன்றி

http://rasithathu.blogspot.com/2006/04/blo...og-post_25.html

இணைப்புக்கு நன்றி விஷ்ணு நான் இன்னும் பார்க்கவில்லை இந்தப் படம். தாங்கள் பார்த்துவிட்டீர்களா??

இப்படம் தற்போது வெளியாகி வசூலிலும் தூள் கிளப்பிட்டு இருக்கிறது. சென்ற வருடம் பிபிசியில் ஒரு டொக்கிமென்ரறி யேசுவின் வாழ்வு பற்றி ஒளிபரப்பானது. அதிலும் யேசு திருமணம் செய்தார் என்றும் அவர் சிலுவையில் அறையப்பட்டு இறக்கவில்லை தப்பி தற்போதைய காஷ்மீர் பகுதியில் வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் எல்லாம் கைப்போதித்திக்கல் ஆய்வுகள் என்றும் இறுதியில் சொல்லப்பட்டது. :P :idea:

களத்தில் வெறு இடத்திலும் இது பற்றீ சில செய்திகள் வந்திருக்கு....

முதலில் டாவின்சி கோட்-யை எழுத்துவடிவில் படித்து பின்பு படம் பார்க்கலாம் என்று இப்போதுதான் புத்தகத்தை இரவல் வாங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

டாவின்சிக் கோட் மதநிந்தனைப் படமா என்ற வாதத்துக்கு அப்பால், கிறிஸ்தவ மதத்தலைவர்களின் சில செயற்பாடுகள் அது உண்மையோ என்று நம்பத் தலைப்படுகின்றது.

பைபளில் திருத்தம் என்ற பெயரில் பழைய, புதிய பைபிள்களில் பல குளறுபடிகள் நிறைந்திருப்பதைக் காணமுடியும். உதாரணமாக யுத்தம் ஒன்றிற்கு மத்தேயு பத்தாயிரம் பேர் போனார்கள் என்று சொன்னால், லூக்க ஒரு லட்சம் என்று சொல்லும். அக்காலப்பகுதியில் "சைபர்" கண்டபிடிக்கப்படாததால் அவற்றில் பொய் உள்ளது என்பது தெளிவு. இதை விட வம்சாவழி கூற ஒவ்வொரு அதிகாரத்திலும் மாறுபட்டுக் காணப்படுகின்றது. பைபிளில் பிழையாக அச்சிடக்கூடாது என்று சொல்லும் றோம் இவற்றை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன் என்று தெரியவில்லை!

ஜரோப்பாவின் இருண்ட காலம் என்று சொல்லக்கூடிய கிபி.800-1500க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், பாதிரிமார்களின் மேலாதிக்கம் மிகவும் அதிகமாக இருந்தது என்பது உண்மை. பைபிளுக்கு எதிராகக் கதை சொன்னவர்கள் எண்ணைக் கொப்பறையிலும், நஞ்சு ஊட்டப்பட்டும், கண் தொண்டப்பட்டும் கெகாலை செய்யப்பட்டார்கள். அல்லது சித்திரவதை செய்யப்பட்டார்கள். இவ்வாறான செயற்பாடுகள் பைபளின் திரிவை உறுதி செய்கின்றன. ஏதோ ஒன்றை மறைகக்வும், பேசாமல் இருக்கவும் தான் அந்தச் செயற்பாடுகளாகவும் இருக்கலாம்!

அதை மீண்டும் இக் கலைஞர் மீண்டும் கிளறுகின்றார். ஆனால் கிறிஸ்தவ மேலாதிக்கம் இப்போது ஒழிந்து போய்விட்டதால்,, இது குறித்து றோம் எவ்வித கட்டுப்பாட்டையும் செய்ய முடியாது இருக்கின்றது என்பதே உண்மை.

(மத்தேயு, லூக்கா பற்றி நான் சொல்லியிருப்பது எடுத்துக்காட்டுக்கே தவிர அவை ஆதராம் அல்ல. அவ்வாறன தவறுகள் இருக்கின்றன என்பதே )

ஏன் அந்தப் படத்துக்கு டாவின்சி கோட்..என்று பெயரிடப்பட்டுள்ளது. லியனாடோ டாவின்சி ( உலகப் புகழ் பெற்ற ஓவியர்.. அவரின் சித்திரங்களில் இருந்து வெளிப்பட்டதன் படி என்ற அர்த்தத்திலா...??!) சார்ந்த அல்லது வேறேதேனும் காரணங்களுக்காகவா...இவை குறித்து யாரும் அறிந்திருந்தால் குறிப்பிடுங்களேன். :P :idea: :?:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா களத்தில தேடிட்டு இருக்கும் போது என் கண்ணில் பட்டது. நீங்களும் வாசித்து பாருங்க

http://ukumar.blogspot.com/2006/05/blog-po...0796047242.html

டாவின்சிகோட் படம் பார்த்தேன்.. நன்றாக இருந்தது... நல்ல படைப்பு.

நானும் மனைவியும் ஈஸ்டர் பண்டிகை நேரம் பிரான்ஸ் சென்றிருந்த நேரம்..டாவின்சிகோட் படப்பிடுக்காக கட்டப்பட்டிருந்த சிகரவடிவ அமைப்பினை படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது...கீழே அழுத்தவும்.

http://www.geocities.com/roshan_rulez/davincicode.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.