Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலதும்,பத்தும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனுக்கு அவ்வப்போது ஏற்படும் உணர்வுகளில் கோவமும் ஒன்று... விஞ்ஞானியள் கண்டு பிடிக்க ஒன்றுமில்லாமல் கோவத்தையும்

 

வைரஸ் ஆக்கிட்டார்கள்.. :lol:

  • Replies 584
  • Views 42k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை ஒரு நாணயம் போன்றது.இன்பம்,துன்பம் என்று இரு பக்கங்கள் அதற்கு உண்டு.ஒரே சமயத்தில் இரு பக்கங்களையும் நாம் பார்க்க முடியாது.துன்பம் என்கிற பக்கத்தை நாம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, இன்பம் என்கிற இன்னொரு பக்கம் நமக்காக அடுத்த பக்கத்தில் காத்துக் கொண்டிருக்கிறது என்கிற உண்மையை நாம் மறந்து விட‌க் கூடாது

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எக் கார‌ணம் கொண்டும் பிறர் விச‌யங்களில் தலையிடாதீர்கள்.அவர்கள் தவறானவர்களாகவே இருக்கலாம்.பொருட்படுத்தாதீர்கள்.யாரையும் எதையும் குறை கூறாதீர்கள்.பிறரைக் குற்றவாளி என்று தீர்மானிக்கும் உரிமையை கட‌வுள் உங்களுக்கு கொடுக்கவில்லை.எல்லோரும் அவர‌வர் விருப்பப்படி தான் நட‌ந்து கொள்வார்கள். நீங்கள் உங்கள் சொந்த வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களை விமர்சனம் செய்பவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்.அவர்கள் மீது கோபமோ,பகைமை உணர்ச்சியோ கொள்ளாதீர்கள்.இது வெளிப்படையாக கோபத்தை காட்டுவதை விட‌ மோச‌மானது.உள்ளே பகைமையை வளர்த்துக் கொண்டால் உங்களால் சரி வர‌ தூங்க முடியாது.பசி பாதியாய் குறைந்து-உணவை சுவைத்து சாப்பிட‌ முடியாத படி செய்து விடும்.அந்தப் பகையுணர்வு உங்களுடைய ர‌த்தத்தை நஞ்சாக மாற்றி விடும்.அதன் கார‌ணமாக ர‌த்தக் கொதிப்பும்,பட‌பட‌ப்பும் அதிகரிக்கும்.அற்ப விச‌யங்களுக்காக உங்களுடைய நேர‌த்தையும்,வாழ்க்கையும் வீணடித்துக் கொள்ளாதீர்கள்.மனித வாழ்வு மிகவும் சுருங்கியது.அதன் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நிம்மதியாகவும்,மகிழ்ச்சியாகவும் அமைய வேண்டுமானால்,நீங்கள் சகிப்புத்தன்மையோடு இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.  

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குத் தெரிகிற பெற்றவர்களை மதிக்கத் தெரியா விட்டால் கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை.தாய்,தந்தையரை எவன் ஒருவன் கடவுளின் வடிவமாக பார்க்கிறானோ,அவனுக்கு நிகழ்காலம் மட்டுமல்ல...வருங்காலுமும் பொற்காலம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் நேரிடும் ஒவ்வொரு அனுபவத்தையும் அது வரும் விதத்திலேயே ஏற்றுக் கொள்ளுங்கள்.எரிச்சல் கொள்ளாதீர்கள்,வருந்தாதீர்கள்,மகிழ்ச்சி அடையவும் வேண்டாம்.அமைதியாக இருங்கள்.செயலும்,விளைவும் எப்போதும் அன்றாட‌ வாழ்வில் உண்டு.பிறருடைய துன்பத்தை பார்த்து நீங்கள் சிரித்தால் பின்னர் நீங்கள் அழ வேண்டி இருக்கும். சமமான தரையில் நீங்கள் மண்மேடு ஒன்றை உருவாக்க விரும்பினால் வேறு எதாவது ஓரிட‌த்தில் பூமியைத் தோண்டி மண் எடுக்க வேண்டி இருக்கும்.பள்ளம் இன்றி மேடு இல்லை.கண்ணீர் இன்றி சந்தோச‌ம் இல்லை.எனவே துன்பத்தையும்,இன்பத்தையும் சமமாகப் பாவியுங்கள்.எப்போதும் அட‌க்கமாக இருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரை வெறுப்பது கூட‌ உண்மையாக இருக்கலாம்.ஆனால் நேசிப்பது மட்டும் போலியாக இருந்து விட‌க் கூடாது.வாழ்க்கையில் எல்லோரையும் நேசியுங்கள்.ஏனென்றால் நல்ல மனிதர்கள் சந்தோச‌த்தை கொடுப்பார்கள்.மோச‌மான மனிதர்கள் அனுபவத்தை கொடுப்பார்கள்.இரு சாராருமே நமக்கு வேண்டியவர்கள் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
" நீ என்னருகில் இல்லை
  என்பது
  எவ்வளவு உண்மையோ...
  அவ்வளவு உண்மை
  நீ எனக்குள் இருக்கிறாய்
  என்பதும்..."
  • கருத்துக்கள உறவுகள்

" நீ என்னருகில் இல்லை

  என்பது

  எவ்வளவு உண்மையோ...

  அவ்வளவு உண்மை

  நீ எனக்குள் இருக்கிறாய்

  என்பதும்..."

பத்தாம் ஆண்டில் படிக்கும்போது எழுதி புத்தகத்திற்குள் வைத்துக் கொடுத்த காதல் கடிதத்தையும், கடிதம் எழுதத் தூண்டியவரையும் நினைவுக்கு கொண்டுவந்தது! :wub: 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முடியும் வரை முயற்சி செய்!உன்னால் முடியும் வரை அல்ல; நீ நினைத்தது முடியும் வரை! ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு மனசுக்குள் கிளம்பும்.ஆனால் அந்த நாள் முடியும் போது ஒரு மிகப் பெரிய அனுபவத்தைக் கொடுக்கும்.அந்த அனுபவங்கள் தான் நாம் அடையப் போகும் வெற்றிக்கான படிக்கட்டுகள்.நீ வலிகளை ஜிரணிக்க கற்றுக் கொண்டாலே போதும்-வெற்றி தானாய் உன்னைத் தேடி வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகம் முழுக்கவும் பொய்யானது என்பதை நம்புங்கள்.இனைத்து மகான்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக,'இது வெறும் கனவுலகம்' என்று கூறிச் சென்றுள்ளார்கள்.கசப்பான அனுபவங்களை நீங்கள் அனுபவிக்கும் போது கூட இவை அனைத்தும் பொய்யே என்ற உணர்வு உங்களுக்குத் தோன்றி விட்டால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகம் முழுக்கவும் பொய்யானது என்பதை நம்புங்கள்.இனைத்து மகான்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக,'இது வெறும் கனவுலகம்' என்று கூறிச் சென்றுள்ளார்கள்.கசப்பான அனுபவங்களை நீங்கள் அனுபவிக்கும் போது கூட இவை அனைத்தும் பொய்யே என்ற உணர்வு உங்களுக்குத் தோன்றி விட்டால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.

 

அதாவது தலைவர் இல்லையென்று அழுவதை விட்டுவிட்டு, இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்..! :o:rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எக் காரணத்தை முன்னிட்டும் யாரிடம் விவாதம் செய்யாதீர்கள்.விவாதத்தில் வெற்றி பெற வேண்டும் என விருப்பாதீர்கள்.அந்த வெற்றி உங்களுக்கு எந்த விதத்திலும் பயன் தராது.மாறாக,உங்களுடைய ஆணவத்தை அதிகப்படுத்தும்.மற்றவரைப் புண் படுத்தும்.நண்பர்களிடையே பிரிவை உண்டாக்கும்.அதே நேரத்தில் ஒரு சில நம்பகமான நண்பர்களிடம் மட்டுமே பழகுங்கள்.எவருடனும் அதிகமாக நெருங்கி பழக வேண்டாம்.அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை காயப்படுத்தி மன அமைதியைக் கெடுத்து விடுகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசை இல்லாத வாழ்க்கை ஒன்றை நாம் எப்போது வாழ ஆர‌ம்பிக்கிறோமோ,அப்போதே துன்பம் இல்லாத வாழ்க்கை ஒன்று நம்மைத் தேடி வரும்.ஒரு அப்பிளில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதை சுலபமாய்ச் எண்ணிச் சொல்லி விட‌லாம் ஆனால் ஒரு விதைக்குள் எத்தனை அப்பிள்கள் இருக்கும் என்பதை கணக்கிட‌ முடியாது. அதே போல் கண்ணுக்குத் தெரியாத வருங்காலத்தை நினைத்து கலங்காமல் நிகழ்காலத்தில் வாழ்வோம்.நாட்களை சந்தோச‌மாய் கழிப்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் நல்லவனாக இருப்பதும்,கெட்டவனாக இருப்பதும் அவனவன் விருப்பங்களை பொறுத்தது அல்ல. அவனை சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பொறுத்தது....எனவே உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஒரு ஓரப் பார்வையிலாவது கவனித்து வாருங்கள்.அது உங்களைத் தேடி வரும் பிரச்சனைக்கு ஒரு தடுப்பு சுவராய் இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெட்டியாய்ப் பேசி நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கும் போது கடிகாரத்தைப் பாருங்கள்.அதில் ஓடுவது 'முள் இல்லை...உங்கள் வாழ்க்கை'என்பதை உங்களால் உணர முடியுமானால்,எதிர் காலத்தில் வெற்றி பெற்ற மனிதர்களில் நீங்களும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டியாய்ப் பேசி நேரத்தை வீணாக்கி கொண்டிருக்கும் போது கடிகாரத்தைப் பாருங்கள்.அதில் ஓடுவது 'முள் இல்லை...உங்கள் வாழ்க்கை'என்பதை உங்களால் உணர முடியுமானால்,எதிர் காலத்தில் வெற்றி பெற்ற மனிதர்களில் நீங்களும் ஒருவர்.

 

வெற்றி பெற்றவனுக்கும் கடிகாரம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.. :D அதுபோல அவனும் தோல்வி அடைந்தவனைப் போல ஒருநாள் பாடையில் போகவேண்டியவன்தான்.. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் வருத்தப்பட வேண்டாம்.உங்கள் கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள்.அந்தப் பாடங்களை அடிக்கடி நினைத்துப் பாருங்கள்.அவை உங்கள் எதிர் காலத்திற்கு நல்ல வழிகாட்டியாய்-சிறந்த புத்தகமாய் அமையும்.ஒரு மனிதன் கவலைப் பட்டுக் கொண்டே இருந்தால் அந்தக் கவலை அவனைக் கரைத்து விடும்.கவலைகளை ஜீர‌ணித்துக் கொள்பவன் நிகழ்கால நாட்களை சந்தோச‌மாய்க் கழிப்பான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு ஐயர் எழுதினது போலை இருக்கு.. :icon_idea:

 

 

ஆமாம் நம்மட கறுப்பி ஜயர் தான் எழுதியது :lol:

திருவாளர் மோகனிடமிருந்து இப்படி ஒரு  வாக்கு.

ம்ம்ம் :D

 

 

என்ன செய்ய அண்ணா அந்தாளும் நகமும்,சதையுமுள்ள மனிசன் தானே :)

இணைப்புகளுக்கு நன்றி ரதி, வாழ்த்துகள் !

 

 

நன்றி சுவியண்ணா

மனிதனுக்கு அவ்வப்போது ஏற்படும் உணர்வுகளில் கோவமும் ஒன்று... விஞ்ஞானியள் கண்டு பிடிக்க ஒன்றுமில்லாமல் கோவத்தையும்

 

வைரஸ் ஆக்கிட்டார்கள்.. :lol:

 

கோபம் ஒருவருக்கு வராட்டில் அவர் மனிதப் பிறவியே இல்லை.நன்றி யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கொஞ்சநாளாக நீங்க எழதுவது

நீட்டி முழுங்குவது போலுள்ளது

வாசிக்க வருகுதில்லை

 

இருவரிச்சொற்களே  நன்று ரதி

பழைய வழிக்கு வாங்கோ

அசத்துங்கோ சகோதரி

வாழ்த்துக்கள்

நன்றிகள் நேரத்திற்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறு துகளின் அசைவு முதல் பிர‌பஞ்ச‌த்தில் உள்ள பிர‌மாண்ட‌ இயக்கம் வரை ஒவ்வொரு நிகழ்வும்-ஒவ்வொரு கார‌ண காரியமும் எல்லாம் வல்ல,எல்லாம் அறிந்த,எங்கும் நிறைந்த பர‌ம் பொருளின் விருப்பத்தால் இப்படித் தான் நிகழ வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.நிகழ்ச்சிகள் எவ்வாறு நிகழ வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளதோ,அவ்வாறே நிகழ்கின்றன.கட‌வுளின் விருப்பத்தை மாற்ற எந்த மனிதனாலும் இயலாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்மிலே பலர் கீழே விழும் போதோ...நமக்கு பிடிக்காத செய்திகளை கேட்கும் போதோ எங்களை அறியாமலே 'ஜயோ' என்று சொல்கிறார்கள்.அப்படிச் சொல்வது மிகவும் தவறு.ஏனெனில் "ஜயோ" என்பது எமதர்மனின் சகோதரியின் பெயர்.நாங்கள் "ஜயோ" என்று சொல்லும் போது தன்ட சகோதரியைத் தான் யாரோ கூப்பிட்கிறார்கள் என்று ஓடி வந்து விடுவான் :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்மிலே பலர் கீழே விழும் போதோ...நமக்கு பிடிக்காத செய்திகளை கேட்கும் போதோ எங்களை அறியாமலே 'ஜயோ' என்று சொல்கிறார்கள்.அப்படிச் சொல்வது மிகவும் தவறு.ஏனெனில் "ஜயோ" என்பது எமதர்மனின் சகோதரியின் பெயர்.நாங்கள் "ஜயோ" என்று சொல்லும் போது தன்ட சகோதரியைத் தான் யாரோ கூப்பிட்கிறார்கள் என்று ஓடி வந்து விடுவான் :lol:

 

எனது தகப்பனார்

ஐயோ  என்பதையும்

தலையின் பின்னால் இரு கைகளையும் கட்டுவதையும் அனுமதிக்கமாட்டார்.

எனது வீட்டிலும் அது தான் சட்டம்

 

தொடருங்கள்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஒட்டகங்கள் வெயிலில் பாலைவன மணல் எவ்வளவு கிலோ மீற்றர் தூரம் நடந்தாலும் வியர்க்காது.காரணம் அதற்கு வியர்வை சுரப்பிகளோ,நாள்ங்களோ இல்லை.
 
16,000 நிலக்கரியை எரித்தால் கிடைக்க கூடிய மின்சாரத்தை 1 டன் யுரேனியத்தை எரிப்பதன் மூலம் பெறலாம்.
 
ஒரு காய் பழமாக மாற ஏதிலின் என்ட வாயு தேவைப்படுகிறது.
 
விமானங்கள் எப்பொழுதும் காற்றின் எதிர் திசையில் ஏறும்.எதிர் திசையில் இற்ங்கும்.
 
தாவரங்களில் வேகமாக வளர்வது மூங்கில் மட்டுமே
 
காண்டா மிருகத்தின் கொம்புகள்,ரோமங்களால் ஆனது.ஆனால் இரும்பை விட உறுதியாய் இருக்கும்.
 
வைர‌த்தை வைர‌த்தால் அறுக்க முடியும் என்பது தவறான கருத்து.வைர‌த்தை அறுக்கவும்,ஓட்டை போட‌வும் எலக்ரோன் கதிர் பயன்படுகிறது.அதன் மூலமே வைர‌த்தை அறுக்க முடியும்.
 
 
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

யுரேனியத்தை எரிப்பவர்கள் யார்? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.