Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் எழுதியிருக்கமாட்டேன்!’

Featured Replies

[size=2]978-81-8493-311-6_b.jpg[/size]

[size=2]

[size=4]பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ராஜிவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றியவர்கே. ரகோத்தமன். பிரபாகரன் மரணம் வரை ஒரு சந்தர்ப்பத்தில்கூட வாய் திறக்காதிருந்த இவர், ராஜிவ் படுகொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் (வெளியீடு: கிழக்கு பதிப்பகம்) என்ற புத்தகத்தின்மூலம் பல அதிர்ச்சிகரமான செய்திகளை முதல் முறையாக வெளியிட்டிருக்கிறார்.[/size][/size]

[size=2]

[size=4]விடுதலைப் புலிகள் தங்களுக்குள் எழுதிக்கொண்ட பல கடிதங்களை ஆதாரங்களாக முன்வைக்கும் இந்நூல், பல தமிழக அரசியல்வாதிகள், இந்திய உளவுத்துறை அதிகாரிகள், சிறப்புப் புலனாய்வுக் குழுத் தலைவர் என்று பலர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இது குறித்து ஆர். முத்துக்குமார் ரகோத்தமனிடம் மேற்கொண்ட உரையாடலின் ஒரு பகுதி குமுதம் ரிப்போர்ட்டரில் மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. அவசியம் கருதி முழுவடிவம் இப்போது உங்களுக்காக.[/size][/size]

https://www.nhm.in/shop/978-81-8493-311-6.html

  • தொடங்கியவர்

[size=2]

[size=5]பதினெட்டு வருடங்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ராஜிவ் கொலை வழக்கு பற்றி எழுதவேண்டிய அவசியம் என்ன?[/size][/size]

[size=2]

[size=4]மொத்தம் மூன்று காரணங்களைச் சொல்லவேண்டும். நம்முடைய நாட்டில் நடந்த முக்கியப் படுகொலை இது. அதைப் பற்றிய புலன் விசாரணையைத் தொடங்கி, மூளை உழைப்பு, மனித உழைப்பு எல்லாவற்றையும் கொட்டி, ஏ டு இஸட் எல்லா விவரங்களையும் சேகரித்தோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தோம். விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தோம். இத்தனைக்குப் பிறகும் ராஜிவ் கொலையை விடுதலைப் புலிகள் செய்யவில்லை என்ற ஒரு கருத்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. சந்திராசாமி செய்யச் சொன்னார் என்கிறார்கள். சிஐஏ உளவு அமைப்பின் கைங்கர்யம் என்கிறார்கள். இந்தத் திசை திருப்பல் எனக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, இதற்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.[/size][/size]

[size=2]

[size=4]அடுத்து, படுகொலை செய்யப்பட்ட ராஜிவின் மனைவி இன்று இந்தியாவின் மிகப்பெரிய கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார். அவரது கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. ராஜிவ் காந்தியைக் கொன்றது யார் என்பதைத் தெரிந்துகொள்வது வெகு சுலபம். அவர்களாக ஏஜென்ஸி வைத்துக்கூட விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் தனது மகள் பிரியங்காவை அனுப்பி குற்றவாளி நளினியிடம், ‘என் அப்பாவைக் கொலை செய்தது யார்?’ என்று கேட்டதாக செய்தி வந்தது. [/size][/size]

[size=2]

[size=4]எனில், ராஜிவ் குடும்பத்தினர் சிறப்பு புலனாய்வுக் குழுவையோ, அதன் குற்றப்பத்திரிகையையோ நம்பவில்லை என்றுதானே அர்த்தம். இது எனக்கு மனவருத்தத்தைக் கொடுத்தது. உண்மையில் தடா நீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்த பல சாட்சியங்கள், ஆவணங்கள் வெளியே வராமல் போய்விட்டன. அவை முறைப்படி எல்லோருக்கும் தெரியவந்திருந்தால் இந்த சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம். ஆதாரங்கள் கைவசம் இருந்தும் யாருக்கும் தெரியாமல் இருக்கிறதே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தது.[/size][/size]

[size=2]

[size=4]எல்லாவற்றுக்கும் மேலாக, ராஜிவ் கொலை வழக்கைப் பொருத்தவரை நான் தலைமைப் புலனாய்வு அதிகாரி. வழக்கின் பிரதம குற்றவாளியான பிரபாகரனும், அடுத்த நிலைக் குற்றவாளியான பொட்டு அம்மானும் தேடப்படும் குற்றவாளிகளாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புலனாய்வு அதிகாரியான நான் – ஓய்வு பெற்றுவிட்டாலும் – அது குறித்துப் பேசக்கூடாது. அது சட்ட விரோதம். அதனால்தான் ராஜிவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக நான் அறிந்த உண்மைகளை இதுநாள் வரை வெளியில் பேசாமல் இருந்துவந்தேன்.[/size][/size]

[size=2]

[size=4]ஆனால் சமீபத்தில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மண் கதிர்காமர் கொலை வழக்கு விசாரணையில், பிரதான குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்து விட்டதாக இலங்கை அரசே அறிவித்து, அந்த வழக்கை மூடிவிட்டார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]இனி இந்தியாவிலும் ராஜிவ் கொலைவழக்கில் தேடப்படும் குற்றவாளிகளாக நிச்சயம் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இருக்கப்போவதில்லை. இதுதான் என்னை புத்தகம் எழுதத் தூண்டியது. எழுதிவிட்டேன். ஒருவேளை பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால் புத்தகமே எழுதியிருக்கமாட்டேன்.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=2]

[size=5]பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?[/size][/size]

[size=2]

[size=4]பரிபூரணமாக. [/size][/size]

[size=2]

[size=4]இலங்கை அரசு நீதிமன்றத்திலே அதைப் பதிவுசெய்த பிறகு ஏன் நம்பாமல் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் எந்த நாடும் பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சொல்லவும் மாட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இறந்து போனவர் பிரபாகரன் என்று கருணாவே அடையாளம் காட்டியிருக்கிறார். ஆகவே, பிரபாகரன் உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=2]

[size=5]சிறப்புப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கார்த்திகேயன் மீது நீங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை இதற்கு முன்னால் எந்த அதிகாரியும் வைத்ததில்லை. [/size][/size]

[size=2]

[size=5]புலனாய்வின்போது நிறைய இடையூறுகள் ஏற்பட்டதாகவும் புத்தகத்தில் சொல்லியிருக்கிறீர்கள். [/size][/size]

[size=2]

[size=5]ஓரிரு உதாரணங்களைச் சொல்லமுடியுமா?[/size][/size]

[size=2]

[size=4]கார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு எதையும் முன்வைக்கவில்லை. ஆனால் சில குறைபாடுகள் இருந்தன என்பதுதான் என்னுடைய வாதம். புலனாய்வு தொடங்கிய புதிதில் இதில் சம்பந்தப்பட்ட ஒருவரைக்கூட விட்டுவிடக்கூடாது. எல்லோரையும் கண்டுபிடிக்கவேண்டும் என்று எல்லோருமே சொன்னார்கள். அவர் எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் சரி என்றார்கள். விசாரணை தொடங்கி, அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது என்று தெரிந்தால் யாராக இருந்தாலும் கொஞ்சம் பின்வாங்குவார்கள். இதுதான் ராஜிவ் கொலை வழக்கு விசாரணையிலும் நடந்தது.[/size][/size]

[size=2]

[size=4]ஒரு புலனாய்வு நடக்கிறது என்றால் அதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளுக்கு எல்லா கோணங்களிலும் விசாரிக்க சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும். ஆனால் இவரைப் போய் விசாரிக்காதே… அவரைப் போய் எதுவும் கேட்காதே என்று சொல்வது தவறு.[/size][/size]

[size=2]

[size=4]ராஜிவ் படுகொலைக்கு முன்பு அந்தப் பகுதியில் நடக்க இருந்த கருணாநிதியின் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்றால் அது ஏன் என்பது குறித்து விசாரிக்கவேண்டும். நான் கருணாநிதியை விசாரிக்கவேண்டும் என்று கார்த்திகேயனிடம் கேட்டேன். ஆனால் கார்த்திகேயன் என்ன சொன்னார் தெரியுமா? ‘இனிமே இந்தமாதிரி வேலையெல்லாம் செய்யாதீங்க’ இதற்கு என்ன அர்த்தம்? கருணாநிதியை விசாரிப்பதில் கார்த்திகேயனுக்கு விருப்பமில்லை என்றுதானே![/size][/size]

[size=2]

[size=4]புலன் விசாரனையின்போது பல வீடியோ கேசட்டுகள் கிடைத்தன. அதில் ஒன்று, புலிகளின் குகையில் என்ற தலைப்பிடப்பட்ட வீடியோ. வைகோ இலங்கைக்கு சென்று பிரபாகரனைச் சந்தித்தது, அவருடன் பேசியது போன்ற காட்சிகள் எல்லாம் அதில் இருக்கும். ஆகவே, புலிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட அவரிடம் விசாரணை செய்யவேண்டும் என்று நினைத்தேன். பிறகு சின்ன சாந்தனிடம் விசாரணை செய்தோம். அப்போது அவர், ‘கொடுங்கையூரில் சிவராசனை வெள்ளை உடையில் வந்த ஒருவர் சந்தித்து, ‘இந்தக் காரியத்தை நல்லபடியாக முடியுங்கள். அடுத்த இலக்கு வைகோவை சி.எம் ஆக்குவதுதான் என்றார்’ என்று சின்ன சாந்தன் கூறினார். இது என்னுடைய சந்தேகத்தைக் கிளறியது.[/size][/size]

[size=2]

[size=4]பாளையங்கோட்டையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ, ‘பிரபாகரனுக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளது’ என்று விவரித்துப் பேசினார். அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘அந்த உருவம் என்னுடையது. ஆனால் குரல் என்னுடையது அல்ல’ என்று பொய் சொன்னார். அது பத்திரிகையில் வெளியான செய்திதான். ஆனால் அதைச் சொல்வதற்கே தயங்கி, பொய் சொன்னார். இது என்னுடைய சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தியது. அவரை விசாரிக்கவேண்டும் என்று சொன்னேன். அனுமதி கொடுத்தார் கார்த்திகேயன். ஆனால் சந்தேகத்துக்குரியவராக அல்ல; முக்கியமான சாட்சியமாக மட்டுமே விசாரிக்கவேண்டும் என்று சொன்னார். [/size][size=5]விசாரணையை சரியான பாதையில் செல்வதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். இது எனக்கு மன உளைச்சலைக் கொடுத்தது.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=2]

[size=5]புலனாய்வு நடந்துகொண்டிருந்தபோது கார்த்திகேயனுக்கும் உங்களுக்கும் உறவு எப்படி இருந்தது?[/size][/size]

[size=2]

[size=4]ஒருமுறை என் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். சிவராசனின் செயற்கைக் கண், துப்பாக்கி, மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தகம் போன்ற தடயங்களைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்துவிட்டேன் என்று சொன்னார். உண்மையில் [size=5]அந்த தடயங்களைக் கொடுத்து பெரிய பெரிய அதிகாரிகள்தான்[/size]. ஆனால் என்னைக் குற்றம்சாட்டியபோது அதை நான் ஆதாரத்துடன் மறுத்தேன். உங்களுக்கு என் மீது சந்தேகம் இருந்தால் இந்த விசாரணையில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். பிறகு என்னைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து பணியாற்றக் கேட்டுக்கொண்டார்.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=2]

[size=5]ராஜிவ் கொலைச் சம்பவம் அது நடப்பதற்கு முன்பே வைகோவுக்குத் தெரியும் என்று எழுதியுள்ளீர்கள். இந்த முடிவுக்கு நீங்கள் வர எது ஆதாரமாக இருந்தது?[/size][/size]

[size=2]

[size=4]இரும்பொறை என்பவருக்கு திருச்சி சாந்தன் எழுதிய கடிதம். ராஜிவ் கொலை வழக்கு பற்றி எனக்குத் தெரியும் என்று யாரிடமும் பேசாதே. ரவிச்சந்திரனின் வீட்டில் விடுதலைப் புலிகளை அழைத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தார்கள். ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது நிச்சயம் வைகோவுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல, இந்தமுறை ராஜிவ் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது’ என்று பேசியதாக செய்திகள் வெளியாகின. உடனே வைகோ, ‘மண்டல் கமிஷனை எதிர்த்தால் தமிழ்நாட்டில் இருந்து வெளியே போக முடியாது என்றுதான் சொன்னேன் என்று மாற்றி விளக்கம் கொடுத்தார். அவர் என்ன பேசினார், என்ன வார்த்தைகள் பயன்படுத்தினார் என்பதை இன்னும் கொஞ்சம் கூர்மையாக விசாரித்திருக்கவேண்டும்.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=2]

[size=5]ராஜிவ் கொலைவழக்கு விசாரணையிலும் கொலைக்கு முந்தைய புலனாய்வு சேகரிப்பு நடவடிக்கைகளிலும் உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?[/size][/size]

[size=2]

[size=4]தொடக்கத்தில் இருந்தே கொலையைச் செய்தவர்கள் விடுதலைப்புலிகள் அல்ல என்று ’ரா’ அமைப்பின் இயக்குனர் பாஜ்பாய் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தார். அதிலும் பொலிட்டிகல் அஃபயர்ஸ் கமிட்டி என்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் பிரதமரிடம் சொல்லியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அமைச்சர் சுப்ரமணியன் சுவாமியும் இருந்துள்ளார். ‘புலிகள் இல்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?’ என்று பிரதமர் சந்திரசேகர் கேட்டதற்கு, ‘என்னுடைய உளவாளி கிட்டு சொன்னார்’ என்று சொல்லியிருக்கிறார். இதைவிட அபத்தம் வேறு என்ன இருக்கமுடியும்?[/size][/size]

[size=2]

[size=4]புலிகள் செய்யவில்லை என்று கிட்டு சொன்னதை ராவின் தலைவரும் திரும்பத் திரும்பச் சொன்னால் இவருக்கும் அவருக்கும் என்னதான் வித்தியாசம்? குற்றவாளிகளை திரைபோட்டு மறைக்கப்பார்த்த பாஜ்பாய்தான் முதல் குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டியவர் என்று நினைத்துக்கொண்டேன்.[/size][/size]

[size=2]

[size=4]ராஜிவ் கொலை தொடர்பாக ஒரு முக்கிய வீடியோ ஆதாரம் இண்டலிஜென்ஸ் பியூரோவுக்குக் கிடைத்தது. வர்மா கமிஷன் சார்பாக அந்த வீடியோ கேசட்டைக் கேட்டபோது இறுதிவரை இண்டலிஜென்ஸ் பியூரோ தரவேவில்லை. அப்போது ஐ.பியின் இயக்குனராக இருந்தவர் [/size][size=4]எம்.கே. நாராயணன். [/size][/size]

[size=2]

[size=5]பாஜ்பாய் முழுப்பூசணிக்காயை மறைக்கிறார். எம்.கே. நாராயணன் கேசட்டைக் கொடுக்கத் தயங்கினார். இந்த அளவில்தான் ரா மற்றும் ஐ.பி என்ற இரண்டு உளவு அமைப்புகளின் ஒத்துழைப்பு இருந்தது.[/size][/size]

அது சரி இது என்ன புது நாடகம் . வைகோ , கருணாநிதி என்ன விளையாட்டு .கருணாநிதி காங்கிரஸ் இல் இருந்து விலகிடுவார் என்ற பயம் போல அவரையும் மாட்டனும் என்று நினைக்கிரங்கலா .

  • தொடங்கியவர்

[size=5]சுப்ரமணியன் சுவாமியின் எந்தக் கருத்தையும் தமிழக மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்னும் நிலையில் ராஜிவ் கொலையை அடுத்து நடைபெற்ற அதிமுக்கியமான உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் நடந்தவை பற்றி சுப்ரமணியன் சுவாமி எழுதியதை நீங்கள் ஒரு முக்கிய ஆதாரமாகக் கொடுத்திருக்கிறீர்கள். [/size]

[size=5]உளவுத்துறை மீதான சுவாமியின் விமரிசனங்களையும் ராஜிவ் கொலை தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகளையும் சந்தேகங்களையும் நீங்கள் நம்புகிறீர்களா?[/size]

[size=2][size=4]பொலிட்டிகல் அஃபயர் கமிட்டி கூட்டத்தில் பேசியதாக சுப்ரமணியன் சுவாமி சொன்னதை நான் நம்புகிறேன். அங்கே பேசப்படும் விஷயங்களுக்குப் பதிவுகள் இருக்கும். ஆகவே அந்த விஷயத்தில் பொய் சொல்வதற்கு வாய்ப்பில்லை. ஒருவேளை என்னை அனுமதித்திருந்தால் அந்தப் பதிவையும் எடுத்துவந்திருப்பேன். திரும்பவும் சொல்கிறேன். சுப்ரமணியன் சுவாமி எழுதிய புத்தகத்தில் இருக்கும் மற்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=2]

[size=5]புலனாய்வின்போது ஏற்பட்ட ஏராளமான சயனைடு மரணங்கள் சிபிஐயின் அலட்சியத்தால்தான் நடந்தன என்பதற்கு உங்கள் பதில் என்ன?[/size][/size]

[size=2]

[size=4]சயனைடு என்பது விடுதலைப்புலிகளின் முக்கிய ஆயுதம். விடுதலைப்புலி ஒருவர் போலீஸாரால் பிடிபடுவதற்கான சூழல் ஏற்பட்டால் உடனடியாக குப்பி கடித்து சாக்வேண்டும் என்பது அவர்கள் இயக்கத்தின் ஆணை. [/size][/size]

[size=2]

[size=4]சிவராசனை கர்நாடகாவில் சுற்றிவளைத்தபோது தேசிய பாதுகாப்பு படையை அனுப்பி அதிரடியாகப் பிடித்திருக்கவேண்டும். அதைவிடுத்து, டெல்லியில் இருந்து சிறப்புப் படைகள் வந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லி ஒருநாளுக்கு மேல் தாமதம் செய்ததுதான் சிவராசன் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு கொடுத்தது. அதைவிடக் கொடுமை, அவர் வசம் இருந்த ஆவணங்களை எல்லாம் அழிப்பதற்குத் தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட்டதுதான். அதிரடியாகச் செயல்பட்டிருந்தால் சிவராசனை உயிரோடு பிடிக்க முடியவில்லை என்றாலும் ஆதாரங்களைக் கைப்பற்றியிருக்கலாம்.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=2]

[size=5]ஜெயின் கமிஷன் விசாரணையின்போது சிபிஐ ஒத்துழைப்பு தரவில்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?[/size][/size]

[size=2]

[size=4]ஜெயின் கமிஷனை நியமித்த உடனே அவர் விசாரணையைத் தொடங்கவில்லை. சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை முடியட்டும். அதைப் பற்றிய தகவல்களை எனக்குக் கொடுங்கள். அதன்பிறகு நான் விசாரணையைத் தொடங்குகிறேன் என்றார் ஜெயின். [/size][/size]

[size=2]

[size=4]விசாரணைகள் எல்லாம் முடிந்ததும் திரட்டப்பட்ட ஆதாரங்கள் பற்றிய அறிக்கையின் பிரதி ஒன்றை ஜெயின் கமிஷனுக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் கார்த்திகேயன் அப்படிச் செய்யவில்லை. தடா நீதிமன்றத்தில் பெட்டிஷன் ஒன்று சிபிஐ பப்ளிக் பிராசிகியூட்டரால் போடப்பட்டு, வழக்கு விவரங்களை அதிகாரப்பூர்வமற்ற நபர்களுக்குக் கொடுக்ககூடாது என்று ஆர்டர் வாங்கப்பட்டது.[/size][/size]

[size=2]

[size=4]அதன்மூலம் ஜெயின் கமிஷனுக்கு எந்த விவரங்களையும் கார்த்திகேயன் தரவில்லை. இதன் பின்னணியில் ஜெயின் சொன்ன ஒரு கருத்து இருக்கிறது. ‘சிறப்புப் புலனாய்வு குழு விசாரிக்காத நபர்களை எல்லாம் நான் விசாரிப்பேன்’ என்றுச் சொல்லியிருந்தார்.[/size][/size]

[size=2]

[size=4]தனக்குத் தகவல் கொடுக்காத ஆதங்கத்தில்தான் எல்லோருடைய அஃபிடவிட்டுகளையும் வாங்கி, விசாரித்து, இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் விளைவாகவே குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. பிறகு விசாரணை செய்வதற்காக கார்த்தியேகயனை அழைத்தார். அப்போது தலைமைப் புலனாய்வு அதிகாரி என்ற முறையில் நானும் சென்றிருந்தேன்.[/size][/size]

[size=2]

[size=4]‘என்னிடம் எந்த ஆதார நகலையும் தரவில்லை. எனக்கு ஒத்துழைப்பும் தரவில்லை. உங்களைப் போன்ற போலீஸ் அதிகாரியை நான் பார்த்ததே இல்லை’ என்றார் ஜெயின்.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=2]

[size=5]உளவுத்துறைத் தலைவர் முதல் கலைஞர் வரை, மரகதம் சந்திரசேகர் முதல் வைகோ வரை இந்நூலில் ஏராளமானவர்கள் மீது நீங்கள் கடுமையாகக் குற்றம்சாட்டுகிறீர்கள். இதன் எதிர்வினைகள் எப்படி இருக்கும்?[/size][/size]

[size=2]

[size=4]அரசியல்வாதிகளோ, மற்றவர்களோ எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. யாரையும் குற்றம் [/size][/size][size=2]

[size=4]சாட்டவேண்டும், நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. [/size][/size]

[size=2]

[size=4]சாட்சி இருந்தால் எவரையும் விடக்கூடாது. இல்லையென்றால் ஒருவரையும் தண்டிக்கக்கூடாது. [/size][/size]

[size=2]

[size=4]இதுதான் என்னுடைய எண்ணம்.[/size][/size]

  • தொடங்கியவர்

[size=5]ஆக்கம் : ஆர். முத்துக்குமார்[/size]

[size=1]

[size=5]மூலம் : [/size]http://www.tamilpaper.net/?p=7049&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+tamilpaper%2FQQvv+%28TamilPaper%29[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் என்ற ஒற்றை மனிதருக்கு இவ்வளவு விசாரணை என்றால் அந்த மனிதர் ஈழத்தில் மேற்கொண்ட அனைத்து நகர்வுகளையும் படுகொலைகளையும் விசாரிக்க யார் வைக்கிறார் விசாரணைக்கமிசன்.. அதனைப் பற்றி இந்த நூல் ஏன் ஒன்றும்.. சொல்லேல்ல. ராஜீவ் கொலையை குடையுறவை ஏன்.. அந்த கொலைக்கான காரண காரியப் பின்னணிகள் பற்றி ஆராய்ந்து எழுதினம் இல்லை..??! ராஜீவ் காந்தி கொலை ஒரு சாதாரண படுகொலை அல்ல. அது ஒரு அரசியல் நிகழ்வு. அதன் பின்னால் உள்ள ராஜீவின் கெட்ட படுகொலை அரசியலை ஆராயாமல் அந்த கொலையை மட்டும் ஆராய்ந்து நியாயப்படுத்துவதில் தான் இந்திய ஆட்சியாளர்கள் தொடங்கி றோ வரை கவனம் செலுத்துகிறது. காரணம் தங்கள் இயலாமைகளை மக்கள் மனங்களில் இருந்து மறைக்கவும்.. தங்கள் கோர முகம் மக்களைச் சென்றடையாமல் இருக்கவும்..! தமிழர்கள் எங்குமே உய்வு பெறக்கூடாது என்பதற்காகவும்..!

ராஜீவ் கொலை யார் செய்திருப்பினும்.. ஈழத்தைப் பொறுத்தவரை அவர் ஈழத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக சர்வதேச ரீதியில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மிலோசவிச் போன்றவர்கள் தண்டிப்பட்ட வகையில் தண்டிக்கப்பட வேண்டிய நபர். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது..! ஈழத்தின் மிலோசவிச் ராஜீவ்காந்தி..! இதனைச் சொல்ல.. எங்களுக்கு தகுதி இருக்குது.. ஏன்னா நாங்களும் இந்தியப் படைகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் பாதிப்பு விசாரணைக்குள்ள வராது.. ராஜீவ் குடும்பத்தின் பாதிப்பு மட்டும் தான் விசாரணைக்குரிய பாதிப்போ..???! :icon_idea:

  • தொடங்கியவர்

[size=4]ஆம் பலவேறு விசாரணைகள், பலநூறு கருத்துக்கள். [/size]

[size=1]

[size=4]இந்த ஒருவர் கொலையின் மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்படவே இல்லை. அதனால் உண்மையும் எது என தெரியாது. அதற்கு பிரியங்கா சிறைக்கு சென்று கேட்டதே சாட்சியாக உள்ளது. [/size][/size]

[size=1]

[size=4]இருந்தும் இந்த கொலைக்கு முன்னரும் பின்னருமாக எமது இனத்தை அதை வைத்தே அழித்தார்கள். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி கேட்டவர் சரியான கேள்விகளைக் கேட்கவில்லை..

கடிதங்களைக் கைப்பற்றியவர்கள் (?) அவை புலிகளால் எழுதப்பட்டவை எனபதற்கு என்ன ஆதாரங்களை வைத்திருந்தார்களாம்? அக்கடிதத்தில் இருந்து கைரேகைகளைப் பெற்று அவற்றைத் தலைவர் அல்லது பொட்டு அம்மானின் கைரேகைகளுடன் பொருந்தச் செய்தார்களா?

சும்மா கடிதம் எடுத்தேன்; ஃபோட்டோ எடுத்தேன்; வீடியோ எடுத்தேன்.. இவைதான் ஆதாரங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியசாமி, சந்திராசாமி, சோனியாகாந்தி எல்லாரையும்... உள்ளுக்கை போட்டு...

முட்டிக்கு, முட்டி தட்டுங்கப்பா...

உணமை வெளியிலை வரும்.

ராஜீவின் தம்பி, சஞ்சீவ் காந்தி முதலில் விமான விபத்தில் செத்ததுக்கே... ஒழுங்கான தீர்ப்பு இல்லை.

சரி போகுது, தாய் இந்திராகாந்தி செத்ததுக்கு... என்ன தீர்ப்பு கொடுத்தீர்கள்?

போனாப்.. மகாத்மா காந்தியை... கொன்றவனை... என்ன செய்தீர்கள்.

முதலில்... காந்தி கொலைகளை... வரிசைப்படி, விசாரிச்சுக்கொண்டு... வாங்கோ...

ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கியமான வீடியோ ஆதாரம் ஒன்றை முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியான எம்.கே. நாராயணன் மறைத்தாரா? சி.பி.ஐ.யின் முன்னாள் அதிகாரியான கே.ராகோத்தமன் தெரிவித்திருக்கும் பரபரப்பான குற்றச்சாட்டையடுத்து அனைவரது பார்வையும் இப்போது நாராணனின் பக்கம் திரும்பியிருக்கின்றது. உண்மையில் என்னதான் நடந்தது என்பதையிட்டு இந்தவாரம் சற்று விரிவாகப்பார்ப்போம்!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை அத்தியாயம் மீளத் திறக்கப்பட்டிருக்கின்றது!

ராஜீவ் கொலையில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட மூவருக்கு மரண தண்டனைத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் உள்நாட்டு புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ.யின் முன்னாள் அதிகாரியான கே.ரகோத்தமன் ராஜீவ் கொலை தொடர்பில் புதிய சர்ச்சை ஒன்றை இப்போது கிளப்பியிருக்கின்றார்.

இதன் மூலம் ராஜீவ் கொலை அத்தியாயம் 21 வருடங்களின் பின்னர் மீளத் திறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகத்திலுள்ள ஸ்ரீபெரம்புத்தூருக்கு வந்தபோது 1991 மே மாதம் 21ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் ராஜீவ் காந்தி தனு என்ற பெண் மனிதவெடி குண்டினால் கொல்லப்பட்டார். கொலை நடைபெற்ற வேளையில் ஹரிபாபு என்ற புகைப்படப்பிடிப்பாளரினால் எடுக்கப்பட்ட படங்களின் அடிப்படை யில் விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் இனங்காணப்பட்டனர். உண்மையில் சம்பவ இடத்தில் கொல்லப்பட்ட ஹரிபாபுவின் கமராவுக்குள் இருந்த படங்கள்தான் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தியது. அதன் மூலமாகவே பலரும் அடையாளம் காணப்பட்டு சி.பி.ஐ.யினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்கள்.

ஆனால், ராகோத்தமன் இப்போது புதிய சர்ச்சை ஒன்றைக் கிளப்பியுள்ளார். ரகோத்தமன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு புறக்கணித்து விடக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில் அவர் சி.பி.ஐ.யில் 36 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டவர். முன்னதாக லஞ்ச ஊழல் வழக்குகள், நிதி மோசடி வழக்குகள் உள்ளிட்ட பொருளாதார குற்றப் புலனாய்வில் கவனம் செலுத்தியவர். இதற்குப் பின்னர் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமை அதிகாரியாகப் பதவி வகித்தவர். இந்தப் பின்னணியிலேயே அவரது குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகின்றது.

"ராஜீவ் கொலை வழக்கின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாகவிருந்த வீடியோ கசெட் ஒன்றை மத்திய உளவுப்பிரிவின் அன்றைய இயக்குநரும், தற்போதைய மேற்கு வங்காள ஆளுநருமான எம்.கேக.நாராயணன் மறைத்து விட்டார்" என்பதுதான் ரகோத்தமனின் தற்போதைய குற்றச்சாட்டு.

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்புப் புலனா#வுக் குழுவின் தலைமை விசாரணை அதிகாரியாக இருந்த ரகோத்தமனின் இந்தக் குற்றச்சாட்டை எளிதில் புறக்கணித்து விடமுடியாது. "ராஜீவைக் கொல்ல நடைபெற்ற சதி: சி.பி.ஐ.ஆவணங்களிலிருந்து" என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள புத்தகத்திலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ராஜீவ் கொலை தொடர்பில் ரகோத்தமன் எழுதியிருக்கும் இரண்டாவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது. "ராஜீவ் கொலை: மர்மம் விலகும் நேரம்" என்ற தலைப்பிலான நூல் ஒன்றை அவர் முன்னர் வெளியிட்டிருந்தார்.

ராஜீவின் படுகொலை வழக்கில் முக்கிய ஆதாரமாகவுள்ள வீடியோ கசெட்டை பதுக்கியதன் மூலமாக யாரோ ஒருவரைப் பாதுகாப்பதற்கு நாராயணன் முயன்றுள்ளார் என்பதுதான் ரகோகாத்தமனின் தற்போதைய குற்றச்சாட்டு. இதனைவிட ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அதே தினத்தில் மாலையில் நடைபெறவிருந்த தி.மு.க.வின் பிரசாரக் கூட்டம் ஒன்றை மு.கருணாநிதி இரத்துச் செய்தார் எனவும் குறிப்பிடும் ரகோத்தமன், அதற்கான காரணம் என்ன எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

சென்னைக்கு அருகேயுள்ள ஸ்ரீபெரம்புத்தூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோதுதான் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிப்பதற்காக வந்து காத்திருந்த பெண் ஒருவர் அவரது காலில் விழுந்து வணங்குவதுபோல பாஷாங்கு செய்து குண்டை வெடிக்க வைத்ததாகக் கூறப்படுகின்றது. உண்மையில் இதனை நேரில் கண்ட சாட்சியங்கள் எவரும் இல்லை. அவ்வாறு சம்பவத்தை அருகேயிருந்து நேரில் பார்த்த அனைவருமே அந்தக் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுவிட்டனர்.

இருந்தபோதிலும், சம்பவங்களை கோர்வையாகப் படம் எடுத்த ஹரிபாபுவின் கமராவுக்குள் இருந்த படச்சுருள் தான் இந்தக் கொலை தொடர்பான பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பினால் ராஜீவ் காந்தியின் கொலையைப் படம் பிடிப்பதற்காக அமர்த்தப்பட்டிருந்த ஹரிபாபு குண்டுவெடிக்கும் படத்தை இறுதியாக எடுத்த நிலையில் அந்த குண்டுக்கே இலக்காகி அந்த இடத்திலேயே மரணமானார்.

ஆனால், அவரது உடலுக்குப் பக்கத்தில் கிடந்த அவரது கமராவின் பதிவுகள்தான் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டிருந்த பலரையும் காட்டிக்கொடுத்தது. தற்கொலைக் குண்டுதாரியான தனுவை அடையாளம் காட்டியதும் இந்தக் கமராதான். ராஜீவ் கொலையின் முக்கிய குற்றவாளிகளான ஒற்றைக் கண் சிவராசன் மற்றும் சுபா போன்றவர்களை அடையாளங்கட்டு சி.பி.ஐ. வேட்டையாடுவதற்கு அடிப்படையாக இருந்ததும் இந்த கமராவுக்குள் இருந்த பதிவுகள் தான்!

குண்டு வெடிப்பதற்கு முன்னதாக சிவராசனுடன் தனு நிற்கும் படங்கள் கமராவில் பதிவாகியிருந்தது. இந்தக் கமரா புலனாய்வாளர்களால் எடுக்கப்பட்டு அதற்குள் இருந்த படங்கள் பிரின்ட் போடப்பட்டபோதுதான் பல விடயங்கள் அம்லமாகியது. அதுவரையில் இந்தக் கொலை புலனாய்வாளர்களுக்கு மர்மான ஒன்றாகவே இருந்தது.

ஆனால், இதனைவிட முக்கியமான வீடியோ ஒன்றும் முக்கிய ஆதாரமாக இருந்துள்ளது என ரகோத்தமன் ஒரு புதிய புயலை இப்போது தன்னுடைய நூலின் மூலமாகக் கிளப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட மறுதினம் அப்போதைய இந்தியப் பிரதமர் சந்திரசேகருக்கு இந்த வீடியோ ஆதாரம் தொடர்பாக நாராயணன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ரகோத்தமன் தனது புத்தகத்தில் இணைத்துள்ள அந்தக் கடிதத்தின் விபரம் வருமாறு:

"ராஜீவ் காந்தி பங்கேற்ற கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மோசமாக இருந்தன. அங்கு தடுப்புகள் சரியாக அமைக்கப்பட்டிருக்கவில்லை. பொது மக்கள் பகுதிக்குள் இருந்து பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு யாரும் வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன.

கொலையாளி பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு ராஜீவ் காந்தி வரும்போது தான் வந்தாரா அல்லது அவரை வரவேற்க நின்றிருந்தவர்களுடன் ஏற்கனவே இருந்தாரா என்பது குறித்துத் தெரியவில்லை.

இது தொடர்பான வீடியோ ஆதாரம் இப்போது ஆய்வு செய்யப்ப்பட்டு வருகின்றது. அந்தக் கொலையாளியை அடையாளம் காண்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன."

இவ்வாறு தனது கடிதத்தில் நாராயணன் குறிப்பிட்டிருப்பதாக ராகோத்தமன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ஆதாரம் பற்றி இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கும் நாராயணன், அது தொடர்பில் சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் எதுவுமே தெரிவிக்கவில்லை என்பதுடன், அந்த வீடியோ கசெட்டை விசாரணையாளர்களிடம் ஒப்படைக்கவும் இல்லை என்பதுதான் ரகோத்தமனின் குற்றச்சாட்டு. அவர் புதிதாக வெளியிட்டுள்ள நூலின் பிரதான அம்சமாக இருப்பதும் இதுதான்.

ரகோத்தமன் எழுப்பியுள்ள கேள்விக்கு பதில் கூறவேண்டியவராக இருப்பவர் நாராயணன்தான்!

ஈழத் தமிழர் பிரச்சினையுடன் நாராயணனுக் குள்ள தொடர்புகள் மிகவும் நெருக்கமானவை. இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளராகவும் பின்னர், பாதுகாப்பு ஆலோசகராகவும் கடமையாற்றிய காலத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பிலான இந்தியாவின் கொள்கை வகுப்பில் நாராயணனின் பங்கு பிரதானமாக இருந்துள்ளது.

இப்போது மேற்கு வங்காள ஆளுநராகப் பணிபுரியும் நாராயணனிடம் இதற்கான பதிலை உடனடியாகப் பெறமுடியவில்லை. காரணம் அவர் தற்@பாது அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் நகரில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் இந்தியாவின் பிரபல தொலைக் காட்சிச் சனல்களில் ஒன்றான "ரைம் நவ்' மெல்பேர்னில் அவரைத் துரத்திப் பிடித்து இது தொடர்பில் கேள்வி எழுப்பியது. அப்போது கேள்விக்கு நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்துக் கொண்ட நாராயணன், "அனைத்து ஆதாரங்களும் விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டன" என மட்டும் பதிலளித்தார். குறிப்பிட்ட வீடியோ சசெட் பற்றி குறிப்பாக எதனையும் கூறுவதற்கு நாராயணனன் மறுத்துவிட்டார்.

நாராயணனின் இந்த நழுவல் போக்கு, ரகோத்தமன் தெரிவித்த குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கலாம் என்ற சந்@தகத்தை இயல்பாகவே எழுப்புகின்றது. பொதுக்கூட்டம் நடைபெறவிருந்த இடத்துக்கு ராஜீவ் காந்தி வந்த பின்னரே தனு பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்ததாக தமிழ்நாடு பொலிஸார் தெரிவித்திருக்கின்றார்கள். தனுவுடன் யார் யார் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதை வெளிப்படுத்தக்கதாக இந்த வீடியோ ஆதாரம் இருந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

அது சரி, இந்த வீடியோவை எடுத்தது யார்? அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தவர்கள் யார்?

ஸ்ரீ பெரம்புத்தூர் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை வீடியோவில் எடுப்பதற்காக உள்ளூர் வீடியோகிராபர் ஒருவரை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நியமித்திருந் தார்கள். பெரம்புத்தூரிலுள்ள விஜயா ஸ்ருடியோ நிறுவன ஊழியர் ஒருவரே இந்த வீடியோவை எடுத்தார். அவர் மேடையில் நின்று இதனை எடுத்துள்ளார். ராஜீவ் காந்தி வருவதற்கு முன்னர் உள்ள காட்சிகளிலிருந்து குண்டு வெடிக்கும் அல்லது வெடித்த பின்னர் உள்ள காட்சிகளையு­ம் அவர் வீடியோவில் பதிவு செய்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதால் இதில் பலனுள்ள ஆதாரமாக இருந்திருக்கும். ஹரிபாபுவின் புகைப்படங் களை விட இந்த வீடியோவில் அதிக தகவல்கள் இருந்திருக்கலாம்.

இந்த வீடியோவை எடுத்தவர் அதன் பிரதியை வீடியோ நிறுவன முதலாளியிடம் கையளித்ததாகக் கூறப்படுகின்றது. மறுநாள் குறிப்பிட்ட முதலாளி அதனை புலனாய்வாளர்களிடம் கையளித்திருக்கின்றார். அதனை தமது ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நாராயணனன் தலைமையிலான புலனாய்வாளர்கள் "ஏதோ" காரணத்தினால் அந்த வீடீயோவைப் பதுக்கிவிட்டார்கள் என்பதுதான் ராகோத்தமனின் வாதம்!

அதனால்தான் இந்த வீடியோ தொடர்பில் ரகோகாத்தமன் கிளப்பியிருக்கும் சர்ச்சை பெரிதாக வெடித்திருக்கின்றது.

நீதிபதி வர்மா கமிஷன் இந்த வீடியோ தொடர்பாகக் குறிப்பிட்ட பின்னரே சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு இது தொடர்பில் தெரிய வந்தது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பார்வைக்கு இந்த வீடியோ கொண்டுவரப்படாமல் மறைக்கப்பட்டு விட்டது என ரகோத்தமன் கூறியிருக்கின்றார். நீதிபதி வர்மா கமிஷனின் ஆவணங்களிலிருந்தே நாராயணன் பிரதமர் சந்திரசேகருக்கு எழுதிய கடிதத்தைக் கண்டெடுத்து ரகோத்தமன் தனது நூலில் வெளியிட்டிருக்கின்றார்.

இந்த வீடியோ ஆதாரத்தை மறைத்தது தொடர்பாக எம்.கே.நாராயணன் மீது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடங்கியது. ஆனால், இந்த விசாரணைக் குழுவின் தலைவராக இருந்த கார்த்திகேயன் விசாரணையைத் தடுத்துவிட்டதாக ரகோத்தமன் குறிப்பிடுகின்றார். இது தொடர்பாக கார்த்திகேயனிடம் இந்திய ஊடகம் ஒன்று கருத்துக்கேட்ட போது, "புத்தகத்தைப் படித்த பின்னரே இந்த விடயம் தொடர்பாக எதுவும் சொல்ல முடியும்" எனப் பதிலளித்தார். ஆக, அவரும் நேரடியாகப் பதிலளிப்பதைத் தவிர்த்துக் கொண்டுள்ளார். அதேவேளையில் அவ்வாறான வீடியோ சசெட் ஆதாரம் எதுவும் இல்லை என கார்த்திகேயனும் அடித்துக் கூறுவதற்குத் தயாராகவிருக்கவில்லை.

ஆக, கசெட் விவகாரம் ஒன்று இருப்பது உண்மைதான்! ஆனால், அதில் மறைந்துள்ள உண்மை என்ன என்பதுதான் மர்மமாக உள்ளது. அது நாராயணனுக்கே தெரியும்!

- தமிழ்லீடருக்காக கொழும்பிலிருந்து பார்த்தீபன்.

http://www.tamilleader.com/mukiaya/7272-2012-11-04-02-38-36.html

  • கருத்துக்கள உறவுகள்

அவன் குற்றவாளி என்று எல்லொருக்கும் தெரியும் .. அவன் மண்டைய போட்ட பிறகு குற்றவாளி என அறிவிப்பார்கள். மத்தவன் எல்லாம் குச்சு மிட்டாய் சப்பிட்டு நிக்கணும்..

டிஸ்கி:

இந்திய அரசியல் தெரியாதவங்களெல்லாம் என்னை காண்டெக் பண்ணுங்க பிளீஸ் எல்லத்தையும் புட்டு புட்டு வைப்பன்... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் எழுதிய ஒரு கட்டுரை.... இத்தலைப்புக்கும் பொருத்தம் என்பதால்.......

ராஜீவ் காந்தி கொலை என்ற நாகாஸ்திரம் மீண்டும் தமிழர்கள் மீது ஏவப்படுகிறது.

perarivaalan-murugan-santhan.jpg

ராஜீவ் காந்தி என்றால் என்ன பெரிய பருப்பா. ஈழத்தில் யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் என்பது.. மோசமான போர்க்குற்றங்களில் ஒன்று. புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகள் வைத்தியசாலைகள் மீது செல் தாக்குதல் நடத்தியதை ஐநா மூவர் குழு மோசமான போர்க்குற்றமாக இனங்காட்டி இருக்கிறது (2011 ஐநா அறிக்கையின் பிரகாரம்). 1987 ஒக்டோபரில் இந்தியப் படைகள் யாழ் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியர்கள் ஊழியர்கள் மற்றும் நோயாளிகளை எந்த முகாந்தரமும் இன்றி படுகொலை செய்ததானது மிக மோசமான போர்க்குற்றம். அது மட்டுமல்ல.. இது போன்ற நூற்றுக்கணக்கான ஈழத்தமிழர்களின் மீதான படுகொலைகளுக்கு ராஜீவ் காந்தி என்ற போர்க்குற்றவாளி பொறுப்பு.

அவை தொடர்பில் எந்த சர்வதேசமும் எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. ராஜீவ் போன்ற போர்க்குற்றவாளிகளை.. நீதியின் முன் நிறுத்தி தண்டித்ததும் இல்லை. ஏன் இது என்று எனக்குப் புரியவில்லை.. இந்த உலகில் அப்பாவிகள் மீதும்.. அதிகாரமற்றவர்கள் மீதும் தானா நீதி காட்டப்படுகிறது.

சரி அவற்றை வழமை போல "மறப்போம் மன்னிப்போம்"..( ராஜீவ் காந்தியை கொன்றால் அது குற்றம்.. அதை ஏற்றுக் கொள்வோம்.. ஆனால் ராஜீவ் காந்தி எங்களைக் கொன்றால் மறப்போம் மன்னிப்போம்... நல்ல கொள்கை....) அதன்படி நின்றால் கூட..

இந்தியாவால் ராஜீவ் கொலை தொடர்பில் பிரதான குற்றவாளிகளாகச் சொல்லப்பட்டு பிரபாகரனும்.. பொட்டு அம்மானும் இன்னும் 60,000 அப்பாவி தமிழ் மக்களும் கொல்லப்பட்டு விட்டனர். (ஐநாவும்..இந்தியாவும் சிங்களமும் அறிவித்ததற்கு அமைய)

இந்தக் கொலையில் இந்திய அதிகார வர்க்கத்தின் விருப்பப்படி எல்லோரும் பழிவாங்கப்பட்டு விட்டனர். இந்தக் கொலையில் நேரடியாக பங்கேற்றதாகச் சொல்லப்பட்ட பலரும் (பிரபாகரன்.. பொட்டு அம்மான்.. ஒற்றைக்கண் சிவராசன்..) என்று எல்லோருமே நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படாமலே கொல்லப்பட்டுள்ளனர்.. அல்லது தற்கொலை செய்ய தூண்டப்பட்டுள்ளனர்.

நளினி உட்பட்ட இந்த 4 பேரும்.. உண்மையில் இந்திய குற்றச்சாட்டின் பிரகாரம்... இந்தக் கொலையில் நேரடியாக சம்பந்தப்படவர்கள் கிடையாது. கொலைக்கு ஏதோ ஒரு வழியில் தெரிந்தோ தெரியாமலோ உதவினர் என்று தான் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் இவர்களின் பொலிஸ் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பொலிஸார் ஆளும் வர்க்கத்தின் உத்தரவுக்கு அமைய வாக்குமூலங்களைப் பெறுவதில் கில்லாடிகள். இதனை உலகமே அறியும். அந்த வகையில் இந்த மரண தண்டனைகள் எப்படிப்பட்டவை என்பதைச் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆக.. 1991 இல் இருந்து ராஜீவ் காந்தி கொலை என்பதனூடாக.. இந்திய பிராந்திய நலன் திட்டமிட்டு காக்கப்படும் நடவடிக்கைகளும்.. காங்கிரஸ் கட்சியினூடான.. நேரு குடும்ப ஆட்சி தொடர்வதும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது. ஆகவே இந்தக் கொலையை வைத்து இந்தியம் தனது அதி உச்ச பலனை அடைய முடிவு செய்திருக்கிறது. ஆனால்.. ராஜீவ் என்ற அந்தக் கொடூரனால் வஞ்சிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் இன்று வரை கிடைக்கவில்லை. அதேபோல் தான் இந்த 4 அப்பாவிகள் மீதும்.. நீதி செயற்படவில்லை. நளினிக்கு.. மன்னிப்பு அளிக்கப்பட்டும்.. தொடர்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளார். மாறாக மீண்டும் மீண்டும் இந்திய ஆளும் வர்க்கத்தின் தேவைக்கு ஏற்ப இந்திய நீதித்துறை பயன்படுத்தப்படும் மிகக் கேவலமான தன்மையே காணப்படுகிறது. இது தெற்காசியாவில் ஒரு தீராத நோயும் கூட. இது முற்றுமுழுதான ஜனநாயக விரோதச் செயலும் கூட.

இந்த 3 பேருக்குமான மரண தண்டனை என்பதை தமிழக காங்கிரஸ் வாழ்த்தி இருப்பதோடு புலிகளே தங்கள் எதிரிகள் என்றும் கூறி இருக்கின்றனர். இது தான் காங்கிரஸின் நிலைப்பாடு என்றால்.. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களை வீடு தேடி வந்து கொன்ற.. ராஜீவ்.. சோனியா உட்பட முழுக் காங்கிரசும் அவர்களின் எதிரிகள். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் கிடையாது.

ஆனால் இப்போது உள்ள பிரச்சனை.. இந்த 3 அப்பாவிகளின் உயிர்களையும் காங்கிரஸ் தனது பழிவாங்கல் கொள்கைக்காக பலியிடுவதில் இருந்து பாதுகாப்பது தான்.

சோனியா காங்கிரஸ் மீண்டும்.. இந்த ராஜீவ் கொலையை வைத்து இன்னொரு நாடகத்தை ஆட தொடங்கி இருக்கிறது. அண்மைய தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தில் வரலாறு காணாத தோல்வியைக் கண்டது. அதற்கு நாம் தமிழர் கட்சியின் எழுச்சியும் சீமானின் துணிச்சலுமே காரணமாக இருந்தது.சீமானுக்கு இந்த 3 பேருடனும் சிறையில் தொடர்பிருந்தது. இதனை சீமானே வெளியில் சொன்ன போது காங்கிரஸ் அதனை பெரிதுபடுத்தவில்லை... ஆனால் உள்ளூர ரசித்தது.

மேலும் தமிழகத்தில் மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் விருப்புக்கு மாறாக அல்லது அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத்தமிழர் சார்ப்பு தீர்மானங்களை இயற்றி உள்ளமையும் சோனியா நட்புப் பாராட்டும் மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடை போர்க்குற்ற விசாரணைகளை கோரியுள்ளமையும் சோனியாவுக்கு தான் இலங்கைத் தமிழர்களுக்காகவே செயற்படுகிறேன் என்ற போலிப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் சிக்கல்களை தோற்றிவித்துள்ளன.

அதுமட்டுமன்றி.. இப்போ காங்கிரஸின் ஆயுள் தமிழகத்தில் மோசமாக உள்ள நிலையில்.. சீமானை விழுத்த வேண்டிய ஒரு தேவையும் சோனியாவுக்கு எழுந்துள்ளது. அதற்கு உள்ள ஒரே மாற்றீடு.. ராஜீவ் கொலை. மீண்டும் அந்தக் கொலையை கிளறி.. அதன் உச்ச இலாபத்தின் இன்னொரு பக்கத்தை உருசிக்க காத்திருக்கிறார்.. புற்றுநோயாளி சோனியா.

நிச்சயம் பேரறிவாளனை முன்னிறுத்தினால் சீமான் சீறுவார் என்று அறிந்து கொண்ட காங்கிரஸ்.. இந்திய ஜனாதிபதியாக இருக்கும் சோனியாவின் பொம்மையைக் கொண்டு.. இவ்வளவு காலமும் கிடப்பில் கிடந்த கருணை மனுவை நிராகரிக்கச் செய்ததாக ஒரு செய்தியை பரப்பி விட்டுள்ளனர். உண்மையில் கருணை மனு நிராகரிக்கப்பட்டமை உத்தியோகபூர்வமாக வெளிவரவில்லை. அது தேவைக்கு ஏற்ப வெளி வரும்.

ஆனால் அதற்கிடையில் சீமானை தூக்கி உள்ள போடு என்று பொலிஸ் கமிசனுருக்கு மனுப் போயுள்ளது. ஆக.. இந்த 3 பேரையும்.. ராஜீவ் கொலையையும் வைத்து இன்னும் என்னென்னவெல்லாத்தையும் சம்பாதிக்க முடியுமோ அவற்றை சம்பாதிக்க சோனியா திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவே தெரிகிறது. இது அவருக்கே ஓவரா தெரிந்தாலும்.. தமிழ் மக்களின் பலவீனத்தை நன்கு பயன்படுத்தி அவர் உச்ச பலன்களை அனுபவிக்கிக்கத் துடிக்கிறார். இதற்கு தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகளும் மறைமுகமாக.. தமது அரசியல் இலாபத்திற்காக ஆதரவளித்தே வந்துள்ளன... வருகின்றன.

ஆனாலும் எனியும் இதனை தொடர விடாது.. தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயம்.. உலகத் தமிழினத்துக்கு (தமிழகம் உட்பட) உண்டு. ராஜீவ் இந்தியர்களுக்கு அப்பாவியாக தலைவராக இருக்கலாம். ஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை அவர் ஒரு பிரகடனப்படுத்தப்படாத போர்க்குற்றவாளி. அதற்கான ஆயிரம் சான்றுகள் அவர்களிடம் உண்டு. ராஜீவ் மேற்கொண்ட படுகொலைகளுக்காக சோனியாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி நீதி கேட்டிருக்க வேண்டிய தமிழர்கள் இன்று தங்கள் 3 பேரின் உயிரைக் காக்க.. சோனியாவின் காலில் விழுந்து கெஞ்சும் துர்ப்பாக்கியத்தைப் பார்க்கிறோம்.

தமிழர்களின் சாணக்கியமற்ற விவேகமற்ற "மறப்போம் மன்னிப்புக்களின்" பின்னால் உள்ள ஆபத்துக்களில் இதுவும் ஒன்று. நாளை இந்த 3 அப்பாவிகளும் தூக்கில் தொங்குவார்களாக இருந்தால்.. அவர்களுக்காக குரல் கொடுத்து சீமான் சிறைக்குள் வாடுவாராக இருந்தால்.. அதற்கு தமிழர்களின் செயல் திறனற்ற.. தூர நோக்கற்ற.. செயற்பாடுகளே காரணம். ராஜீவ் கொலை அல்ல..!

இதனை தமிழர்கள் இன்றே உணர்ந்து தகுந்த வழியில் செயற்படவில்லை என்றால் இந்த ராஜீவ் கொலை என்றும் தமிழர்களைப் பழிவாங்கும் இந்திய நாகாஸ்திரமாக நேரு குடும்ப காங்கிரஸ் கட்சிக்கு அமையப் போவது உறுதி..!

http://kundumani.blogspot.co.uk/2011/08/blog-post.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.