Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பு

Posted Date : 14:56 (03/11/2012)Last updated : 16:48 (03/11/2012)

Obama-Mitt-Romney.jpgவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ம் தேதி நடக்கிறது.தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

அப்போது, ஒபாமா தனது ஆட்சி காலத்தில் நிகழ்த்திய சாதனைகளை பட்டியலிட்டார் மோசமான நிலையில் இருந்த அமெரிக்க பொருளாதாரம் சீரமைக்கப்பட்டுள்ளது. பல வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக் போர் முடிவுக்கு வந்து ராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவையும், உலக நாடுகளையும் மிரட்டிய தீவிரவாதி பின்லேடன் கொல்லப்பட்டான் என தெரிவித்தார். மேலும் குறைந்த செலவில் கல்வி வழங்குதல், வரி மாற்றம் செய்தல், ஏழை எளிய, மக்கள் மற்றும் மூத்த குடிமகன்கள், மாற்று திறனாளிகளின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

[size="2"] [/size]

இதனிடையே தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. இண்டர் நேஷனல் சர்வே நிறுவனமும் இணைந்து வெற்றி வாய்ப்பு குறித்து ஒகியோவில் பொது மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது.

அதில் மிட்ரோம்னியை விட ஒபாமா 3 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஒபாமாவுக்கு 50 சதவீதமும், மிட்ரோம்னிக்கு 47 சதவீதமும் வாக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஒபாமா அள்ளி வீசும் வாக்குறுதிகள் காரணமாக, வாக்குப்பதிவன்று ஒபாமாவுக்கு மேலும் கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம் என்றும், இதனால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

http://news.vikatan.com/?nid=11073#cmt241

  • கருத்துக்கள உறவுகள்

அதிபர் தேர்தல் இறுதி நிலவரம்: திணறும் ராம்னி... வெற்றியின் விளிம்பில் ஒபாமா!

Published: Saturday, November 3, 2012, 17:54 [iST]

Posted by: Shankar

வர்ஜினியா பீச்(யு.எஸ்): ஒருவார காலமாக சான்டி புயல், அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலங்களை மட்டுமல்லாமல், குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ராம்னியின் வெற்றி வாய்ப்புகளையும் முடக்கிப் போட்டுவிட்டது.

சான்டி புயலின் அறிவிப்பு வந்த நிலையிலிருந்தே அதிபர் ஒபாமா பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். ஒருநாள் முன்னதாகவே பிரச்சார பயணத்திலிருந்து, வெள்ளை மாளிகைக்கு வந்துவிட்ட அவர், நகர மேயர்கள், மாநில கவர்னர்களிடம் நள்ளிரவு தாண்டியும் தொடர்பு கொண்டு தேவையான ஏற்பாடுகளை முடுக்கி விட்டுக்கொண்டிருந்தார்.

FEMA என்றழைக்கப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து ஆங்காங்கே மீட்புக்குழுவினரை தயார் நிலையில் வைக்கச் செய்தார்.

FEMA வேண்டுமா வேண்டாமா?

ஒபாமா தேர்தல் பணிகளிலிருந்து முற்றிலும் விலகி, அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ராம்னி. சான்டி புயல் சேத்த்திற்கு பிறகு, ஒஹயோவில் உதவிப்பொருட்களை சேகரிப்போம் என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்து ஐயாயிரம் டாலர்களுக்கு வால்மார்ட்டில் பொருட்கள் வாங்கி செஞ்சிலுவை அமைப்பிடம் கொடுத்தார்.

அவசரகால நேரத்தில் பொருடகள் வேண்டாம் பணமாகக் கொடுங்கள் என்று கூறி, செஞ்சிலுவைச் சங்கம் ராம்னியின் செயல்களை மூக்குடைத்துவிட்டது. அந்த் பொருட்களை தூக்கி செல்லுவதற்கு அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தவரிடம், 'தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம்/ தேவையில்லை என்று முன்னர் கூறினீர்களே, இப்போதும் அதே நிலைதானா?' என்று செய்தியாளார்கள் கேள்வி எழுப்பினர்.

எந்த பதிலும் சொல்ல முடியாமல், அவரது ஆதரவாளார்களை நோக்கி எல்லோரும் உதவி செய்வோம் என்று சம்மந்தம் இல்லாமல் பதில் சொன்னார். ராம்னியின் FEMA குறித்த நிலை என்ன என்ற கேள்விகளுடன் இரண்டு நாட்கள் தேசிய தொலைக்காட்சிகளில் அதிகமாக விவாதத்திற்குள்ளானது.

கைவிரித்த நண்பர்

அதே சான்டி புயல் தாக்கிய நியூ ஜெர்ஸி மாநில குடியரசுக்கட்சி கவர்னரும், ராம்னியின் ஆத்ரவாளருமான கிறிஸ் கிறிஸ்டி, ஒபாமாவின் கட்சி சாராத அணுகு முறைக்காக மூன்று நாட்கள் தொடர்ந்து அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒபாமா புராணம் பாடிவிட்டார். மேலும் ஒபாமாவுடன் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட கிறிஸ், ராம்னி நியூஜெர்ஸிக்கு வரத்தேவையில்லை என்றும் கூறிவிட்டார். எதிரணியினருடன் இணைந்து செயல்படாதவர் ஒபாமா என்று குறை சொல்லிக்கொண்டிருந்த ராம்னிக்கு, அவரது நண்பரே பதில் கொடுத்து மூக்குடைத்துள்ளார்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பாரா ராம்னி?

இந்நிலையில் சான்டி புயலால் பாதிப்படைந்த, கடும் போட்டி நிலவும் மாநிலமான வர்ஜினியாவில் பிரச்சாரம் செய்யச் சென்ற ராம்னியை சான்டி மேலும் துரத்தியது. சுற்றுச்சூழலை பாதுகாத்து புவி வெப்பமயமாதலை தடுக்க ஒபாமா நடவடிக்கை எடுத்து வருகிறார்.

ராம்னியோ சுற்றுச்சூழல் பற்றி கவலை இல்லை என்ற ரீதியில் ‘உங்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் தான் கவலை' என்று கூறியிருந்தார். சுற்றுச்சூழல் மாசுபடுவதாலும், புவி வெப்பமயமாகிதாலும் தான் சான்டி புயல் வந்ததாக நியூயார்க் மேயர் ப்ளூம்பெர்க் கூறியிருந்தார்.

மேலும் சுற்றுச்சுழல் மேம்பாட்டிற்காக ஒபாமா செயல் திட்டம் நிறைவேற்றுவதால் தான் அவரை ஆதரிப்பதாகவும் கூறியிருந்தார்.

வர்ஜினியா பீச்சில் ராம்னியின் பிரச்சாரத்தில், இதே கருத்தை வலியுறுத்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர் ‘ சுற்றுச்சூழல் குறித்து வெளிப்படையாக கருத்து சொல்லவும்' என்று பேனர் காட்டி, முழக்கமிட்டார்.

நேருக்கு நேராக நின்று இப்படி ஒருத்தர் கேள்வி கேட்பார் என்று ராம்னி கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை என்பதால், செய்வதறியாது திகைத்தார்.. ராம்னியின் பாதுகாவலர்கள் அந்த சுற்றுச்சூழல் ஆர்வலரை அப்புறப்படுத்தினர். அதன் பிறகே வழக்கமான பிரச்சார பேச்சை ஆரம்பித்தார். முன்னர் ஏற்பட்ட அதிர்ச்சியில், அவரது பேச்சில் சுவாராஸ்யம் குறைந்தே காணப்பட்டது.

'எதிரி நாட்டில்' ராம்னியின் மகன்!

இதற்கிடையே, ராம்னியின் மகன் மேட் ராம்னி கடந்தவாரம் தொழில் ரீதியாக ரஷ்யா சென்று வந்துள்ளார். கலிஃபோர்னியாவில் உள்ள தனது ரியல் எஸ்டே நிறுவனத்திற்கு முதலீடு திரட்டுவதற்க்காக இந்த பயணம் என்று நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்கிறீர்களா? சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்காவின் மிக்ப்பெரிய எதிரி யார் என்று ராம்னியிடம் கேட்ட போது ‘ரஷ்யா' என்று பதில் சொல்லியிருந்தார்.

ராம்னியின் கூற்றுப்படி எதிரியாக கருதப்படும் நாட்டில் தொழில் ரீதியாக நட்பு தேடுகிறார் அவரது சொந்த மகன்.

ராம்னி முன்பு சொன்ன வார்த்தைகளே, தேர்தலின் கடைசிக் கட்ட நேரத்தில் அவருக்கு எதிராக திரும்புவதால், செய்வதறியாது திகைக்கிறார் ராம்னி என்றே சொல்லலாம்!

புதிய கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு வெற்றி!

இதனிடையே தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. இண்டர்நேஷனல் சர்வே நிறுவனமும் இணைந்து ஒஹயோவில் நடத்திய கருத்து கணிப்பில் ராம்னியை விட ஒபாமா 3 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார். ஒபாமாவுக்கு 50 சதவீதமும், ராம்னிக்கு 47 சதவீதமும் வாக்குகள் கிடைத்துள்ளன.

தேர்தல் நாளன்று இந்த வித்தியாசம் 10 சதவீத அளவுக்கு ஒபாமாவுக்கு சாதகமாக அமையும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

-தமிழ்.ஒன்இந்தியா எக்ஸ்க்ளூசிவ்

http://tamil.oneindia.in/news/2012/11/03/world-mitt-romney-heckled-end-climate-silence-164095.html

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் வாக்கு மீண்டும் ஒபாமாவுக்கு கிடைக்குமா?

obama_dreamers_.jpg

obama_dreamers_.jpgloading.gif

வாஷிங்டன், நவ. - 5 - அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடந்த தேர்தலைப் போல இம்முறை ஒபாமாவுக்கு பெண்கள் வாக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. 2008 ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது பெண்கள் வாக்கு ஒபாமாவுக்கு அதிகமாகக் கிடைத்ததால் வெற்றி பெற முடிந்தது. ஒபாமாவுடன் ராம்னி நடத்திய முதல் நேருக்கு நேர் விவாதத்தின் போது ராம்னிக்கே பெண்கள் ஆதரவு அதிகமாக இருந்தது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் ஒபாமா தரப்பு இதை நிராகரிக்கிறது. இம்முறையும் ஒபாமாவின் வெற்றிக்கு பெண்களின் வாக்குகளே முதன்மையான காரணமாக இருக்கும் என்கின்றனர். கல்வி, சுகாதாரம், சமமான ஊதியம் போன்றவற்றை ஒபாமா நிர்வாகம் செய்திருக்கிறது என்பது அவரது ஆதரவாளர்களின் வாதம். செப்டம்பர் மாத இறுதியில் ராய்ட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் கூட ஒபாமாவுக்கே பெண்கள் வாக்கு அதிகமாக கிடைத்திருந்தது என்பதையும் அவரது தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் ராம்னி ஒவ்வொரு முறையு பெண்கள் விஷயங்களில் நிலையான கொள்கை முடிவு இல்லாமல் மாறி மாறி பேசுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

http://thinaboomi.com/2012/11/04/16793.html

  • கருத்துக்கள உறவுகள்

7772.jpg

TN_134818000000.jpg

ஒபாமா நாளைய தேர்தலில், வெற்றி பெற்றால்...

108 தேங்காய் உடைக்க, உத்தேதித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

7772.jpg

TN_134818000000.jpg

ஒபாமா நாளைய தேர்தலில், வெற்றி பெற்றால்...

108 தேங்காய் உடைக்க, உத்தேதித்துள்ளேன்.

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்களா, தமிழ் சிறி

தேங்காய் உடைப்பது விரயம், அதை யாருக்கு ஏழைகளுக்கு கொடுங்கள்.

மீண்டும் வருவார்

[size=4]ஒபாமாவை விட ரொம்னி வந்தால் ஈரான் மீதான தாக்குதல் அதிகம் சாத்தியம். [/size][size=1]

[size=4]ஒபாமா முதல் தடவை பதவி ஏற்கும்பொழுது அமெரிக்கா இரண்டு யுத்தங்களை செய்தது. இவரின் கவனம் - பொருளாதாரம்.[/size][/size][size=1]

[size=4]ரொம்னி மீது அமெரிக்க யூதர்களும் இஸ்ரேலும் செல்வாக்கு கூடுதலாக செலுத்தும் நிலமைகள் உண்டு. [/size][/size]

தமிழ் சிறி ஒபாமாவுக்கு வேண்டி தேங்காய் உடைப்பதால் அவர் வெல்லப்போகிறார். ஆனால் அவர் வெல்வதால் வரும் முழு நன்மையையும் தமிழர் காண வேண்டுமானால் ஜநநாயக கட்சி செனட்டை வெல்ல வேண்டும் என்று ஒருவர் தேங்கய் உடைத்தால் நல்லது.

ஒபாமா வருவது கிடத்தட்ட நிச்சயமாகிவிட்டது. ஆனால் வரும்போது செனட்டையும் நிச்சயமாக இழந்து விடுவாராம். எற்கனவே பொதுமக்கள் சபை இழக்கப்பட்டுவிட்டது. இதனால் குடியரசுக்கட்சி இவரளவு அதிகாரத்தை காங்கிரசில் வைத்திருக்க போகிறது.

[size=5]ரொம்னி 49% - ஒபாமா 49%[/size]

121105162931_obama_romney__us_election_304x171_bbc_nocredit.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.