Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜீவ்காந்தியை கொன்றவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை உடையும் உண்மை!

Featured Replies

  • தொடங்கியவர்

From Life of Pi:

I applied my reason at every moment. Reason is excellent for getting food, clothing and shelter. Reason is the very best tool kit. Nothing beats reason for keeping tigers away. But be excessively reasonable and you risk throwing out the universe with the bathwater.

[size=5]However one may be wrong in his or her opinion, that opinion should be respected. Calling it as 'vithandaavaatham' does not make any good in any discussion - Akootha[/size] :D

  • Replies 113
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]அடுத்து கொலை பற்றி, உண்மையில் பெரும்பான்மை தமிழர்கள் 'புலிகள் தான் கொன்றார்கள்' என உறுதியாக நம்பினால் ஏன் அதைப்பற்றி மீண்டும் மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள், கதைக்கின்றார்கள்?[/size][/size]

உண்மையில் ராஜீவ் கொலையைப் பற்றிக் கதைப்பவர்கள் இப்போது மிகவும் குறைவு. அதன் பிறகு எத்தனையோ அவலங்கள் நடந்துவிட்டன என்பதுதான் காரணம்.

மீளவும் பயணம் ஆரம்பித்த இடத்திற்குத் திரும்பமுடியாத அதல பாதாளத்திற்கு வந்தாயிற்று. இனிப் போவதிற்குப் பாதை தெளிவாக இல்லையென்பதால் இந்த இடத்திற்கு வந்ததற்கான காரணிகளை மறுத்தால்தானே இவ்வளவு காலமும் பயணம் செய்ததற்கு அர்த்தத்தைக் கற்பிக்கமுடியும். இல்லையென்றால் தெரிவு செய்த பாதையில் தடைக்கற்களாக இருந்தவை என்று நம்பி அப்புறப்படுத்திதைப் பிழை என்று ஒத்துக்கொள்ளவேண்டிய சிக்கலில் மாட்டிவிட வேண்டி வந்துவிடுமல்லவா.

  • தொடங்கியவர்

உண்மையில் ராஜீவ் கொலையைப் பற்றிக் கதைப்பவர்கள் இப்போது மிகவும் குறைவு. அதன் பிறகு எத்தனையோ அவலங்கள் நடந்துவிட்டன என்பதுதான் காரணம்.

[size=1][size=4]நீங்கள் இந்த திரியின் தலைப்பே கவனிக்காமல் கருத்துக்களை முன்வைப்பது போலுள்ளது[/size] :([/size]

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையான மக்கள் எப்போதும் எதிலும் தெளிவாகவே இருந்திருக்கின்றார்கள் என்பதுதான் வரலாறு.

எது சரி

வெற்றி என்றால் கை தட்டல்

தோற்றுப்போனால் நான் அவனில்லை

பெரும்பான்மை இது தானே???? :( :( :(

  • தொடங்கியவர்

மீளவும் பயணம் ஆரம்பித்த இடத்திற்குத் திரும்பமுடியாத அதல பாதாளத்திற்கு வந்தாயிற்று. இனிப் போவதிற்குப் பாதை தெளிவாக இல்லையென்பதால் இந்த இடத்திற்கு வந்ததற்கான காரணிகளை மறுத்தால்தானே இவ்வளவு காலமும் பயணம் செய்ததற்கு அர்த்தத்தைக் கற்பிக்கமுடியும். இல்லையென்றால் தெரிவு செய்த பாதையில் தடைக்கற்களாக இருந்தவை என்று நம்பி அப்புறப்படுத்திதைப் பிழை என்று ஒத்துக்கொள்ளவேண்டிய சிக்கலில் மாட்டிவிட வேண்டி வந்துவிடுமல்லவா.

[size=4]இல்லை. இந்த உண்மையை வெளியில் கொண்டுவரும் பொழுது தமிழர்களுக்கு உரிமையும் கிடைக்கும் .[/size]

  • தொடங்கியவர்

[size=1]

[size=4]"பெரும்பான்மை மக்களுக்கு தமிழீழமும் வேண்டாம் " என கூறுபவர்களும் இவர்கள் தான். [/size][size=4]தென் சூடான் கூட பிரிந்தது. நிச்சயம் வட சூடான் (சூடான்) கூறி இருக்கும் " [/size][size=4]"பெரும்பான்மை மக்களுக்கு தென் சூடான் வேண்டாம் " என. [/size][/size]

[size=1]

[size=4]ஐ.நா. கூட தருச்மன் அறிக்கையை பகிரங்கமாக வெளியிட மறுக்கின்றது? ஏன்? உண்மைகள் வெளியே வரக்கூடாது என![/size][/size]

[size=1]

[size=4]இந்த திரியின் தொடக்கத்தில் பல கேள்விகளை அதன் எழுத்தாளர் முன்வைத்துள்ளார். இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டவர்.[/size][/size][size=1]

[size=4]முடிந்தால் அதற்கு பதில்[/size][size=4]களை தாருங்கள் ![/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=1][size=4]நீங்கள் இந்த திரியின் தலைப்பே கவனிக்காமல் கருத்துக்களை முன்வைப்பது போலுள்ளது[/size] :([/size]

அவ்வளவு தூரத்திற்கு இன்னமும் மூளை பிசகவில்லை <_<

ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியபடி எதையும் எப்படியும் ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப நிறுவ முனையலாம்.

  • தொடங்கியவர்

அவ்வளவு தூரத்திற்கு இன்னமும் மூளை பிசகவில்லை <_<

ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியபடி எதையும் எப்படியும் ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப நிறுவ முனையலாம்.

[size=4]அப்படியானால் இந்த எழுத்தாளர் முன்வைத்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் உள்ளனவா? [/size]

  • கருத்துக்கள உறவுகள்

எது சரி

வெற்றி என்றால் கை தட்டல்

தோற்றுப்போனால் நான் அவனில்லை

பெரும்பான்மை இது தானே???? :( :( :(

மூழ்கும் கப்பலில் எலிகள் தங்குவதை விரும்புவதில்லை என்பதை முள்ளிவாய்க்காலில் பார்த்த பின்னரும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லையா?

நான் சொல்ல வந்தது பெரும்பான்மை மக்கள் எப்போதும் தங்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்திருக்கின்றார்கள். சூழலுக்கும், காலத்திற்கும் ஏற்ப தங்கள் தேவைகளை மீளாய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள்.. இந்த யதார்த்தத்தை உணர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து அரசியல் செய்வதுதான் நல்லது.

ஒரு முக்கிய பதில்.

காவித் திரிந்தது தமிழின விரோதிகளின் கைக்கூலிகளும், அரைவேக்காட்டு ஊடகவியலாளர்களும் / கட்டுரையாளர்களும் தான். இவர்கள் தான் தமிழினப் படுகொலைகளுக்கு துணை போனவர்கள்.

சாரி சார் தவறான பாதையில் வந்துவிட்டேன் :lol::D:icon_idea:

  • தொடங்கியவர்

நான் சொல்ல வந்தது பெரும்பான்மை மக்கள் எப்போதும் தங்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்திருக்கின்றார்கள். சூழலுக்கும், காலத்திற்கும் ஏற்ப தங்கள் தேவைகளை மீளாய்வுக்கு உட்படுத்தியிருக்கின்றார்கள்.. இந்த யதார்த்தத்தை உணர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து அரசியல் செய்வதுதான் நல்லது.

தாயக மக்கள் ஒரு அடக்குமுறைக்குள் உள்ளனர் என்பது யாரும் அறிந்த விடயம். அவர்களின் செயல்பாடுகளை "பெரும்பான்மை மக்கள் எப்போதும் தங்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்" என வர்ணித்தால் அதற்கும் அடக்கும் சிங்களவனிற்கும் என்ன வித்தியாசம்??

[size=4]இலண்டனில் இன்று பேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விட உங்களுக்கு அதிகம் தெரிவது ஆச்சரியமாக உள்ளது :icon_mrgreen:[/size]

  • தொடங்கியவர்

மூழ்கும் கப்பலில் எலிகள் தங்குவதை விரும்புவதில்லை என்பதை முள்ளிவாய்க்காலில் பார்த்த பின்னரும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லையா?

[size=4]இன்றும் முள்ளிவாய்க்காலில் போர் முடிந்தாலும் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உள்ளதாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் கூறியுள்ளார். இங்கு ஒரு சக உறவோ "[/size] [size=4]மூழ்கும் கப்பலில் எலிகள் தங்குவதை விரும்புவதில்லை என்பதை முள்ளிவாய்க்காலில் பார்த்த பின்னரும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லையா? " என கேட்கிறார் :([/size]

  • தொடங்கியவர்

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். [size=5]அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை[/size].

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. [size=5]எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.[/size]

[size=5]சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.[/size]

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது[size=5] ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து![/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அப்படியானால் இந்த எழுத்தாளர் முன்வைத்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் உள்ளனவா? [/size]

அவர் தன்னை முன்னிலைப்படுத்த பலவற்றைச் சொல்லியிருக்கின்றார். அவரது நம்பகத்தன்மை மிகவும் குறைவு என்பது அவரது கருத்துக்களில் இருந்தே தெரிகின்றது. சுப்பிரமணிய சுவாமியின் கோமாளித்தனமான அரசியல் செயற்பாடுகள் நிறைந்த ஜனதாக் கட்சியில் இருந்தவர்களுக்கு முக்கியம் கொடுப்பது நேர விரயம்.

[size=1][size=4]எது நேர விரயம் ? [/size][size=5]conspiracy theory [/size] [size=4]உடன் சம்பந்தப்பட்டாதால் நேர விரயம் என்கிறீர்களா? :D[/size][/size]

[size=1][size=4]ஒரு [/size][/size][size=4]இன[/size][size=1][size=4]ப்படுகொலையே இதில் சம்பந்தப்பட்டுள்ளது. புலிகளின் தடையில் இந்த சுவாமி முக்கிய பங்கு வகித்தவர். [/size][/size]

[size=1][size=4]இதை கேட்பது அதற்கு பதில் கூறுவது என்பது நேர விரயம் என்றால் ..... ^_^[/size][/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்கள் ஒரு அடக்குமுறைக்குள் உள்ளனர் என்பது யாரும் அறிந்த விடயம். அவர்களின் செயல்பாடுகளை "பெரும்பான்மை மக்கள் எப்போதும் தங்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்" என வர்ணித்தால் அதற்கும் அடக்கும் சிங்களவனிற்கும் என்ன வித்தியாசம்??

[size=4]இலண்டனில் இன்று பேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விட உங்களுக்கு அதிகம் தெரிவது ஆச்சரியமாக உள்ளது :icon_mrgreen:[/size]

அடக்குமுறை இல்லையென்றோ, மக்கள் அவலங்களுக்குள் இல்லையென்றோ கூறவில்லை. தமிழ்மக்கள் உரிமைகளுடன் வாழ சுயநிர்ணய உரிமைவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கான வழி வன்முறைப் போராட்டம் அல்ல என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அத்தோடு தனித் தமிழீழம்தான் தீர்வு என்று முன்பிருந்த நம்பிக்கையும் இப்போது இல்லை. இதெல்லாம் கூட்டமைப்புக்கும் நன்றாகத் தெரியும். தெரியாமல் இருப்பவர்கள் பழைய காலத்தில் உறைந்து நிற்பவர்கள்தான்.

[size=4]இன்றும் முள்ளிவாய்க்காலில் போர் முடிந்தாலும் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உள்ளதாக ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் கூறியுள்ளார். இங்கு ஒரு சக உறவோ "[/size] [size=4]மூழ்கும் கப்பலில் எலிகள் தங்குவதை விரும்புவதில்லை என்பதை முள்ளிவாய்க்காலில் பார்த்த பின்னரும் இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லையா? " என கேட்கிறார் :([/size]

கேள்வியின் அர்த்தம் புரியாவிட்டால் இப்படித்தான் குழப்பம் வரும். மக்கள் எப்போதுமே வாழ விரும்புகின்றார்கள். அதற்காக அடிமையாக வாழவேண்டும் என்று விரும்புவதில்லை. உரிமைகள் வேண்டி நிற்கும் மக்களை மீளவும் பலியெடுக்கும் அரசியல் எடுபடாது.

[size=1][size=4]எது நேர விரயம் ? [/size][size=5]conspiracy theory [/size][size=4]உடன் சம்பந்தப்பட்டாதால் நேர விரயம் என்கிறீர்களா? :D[/size][/size]

[size=1][size=4]ஒரு [/size][/size][size=4]இன[/size][size=1][size=4]ப்படுகொலையே இதில் சம்பந்தப்பட்டுள்ளது. புலிகளின் தடையில் இந்த சுவாமி முக்கிய பங்கு வகித்தவர். [/size][/size]

[size=1][size=4]இதை கேட்பது அதற்கு பதில் கூறுவது என்பது நேர விரயம் என்றால் ..... ^_^[/size][/size]

[size=4]நம்பகத்தன்மையற்றவர்களால் வெளியிடப்படும் conspiracy theory பற்றி அலசுவது நேரவிரயம்தான்.[/size]

[size=4]புலிகளின் தடைக்கு முக்கிய காரணம் புலிகளின்றி வேறு ஒருவருமல்லர். அத்தோடு இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கை அரசோடு இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் இருந்தன. ஆனால் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும் என்று அவர்களைத்தானே கேட்கும் நிலைமை உள்ளது![/size]

  • தொடங்கியவர்

அடக்குமுறை இல்லையென்றோ, மக்கள் அவலங்களுக்குள் இல்லையென்றோ கூறவில்லை. தமிழ்மக்கள் உரிமைகளுடன் வாழ சுயநிர்ணய உரிமைவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதற்கான வழி வன்முறைப் போராட்டம் அல்ல என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். அத்தோடு தனித் தமிழீழம்தான் தீர்வு என்று முன்பிருந்த நம்பிக்கையும் இப்போது இல்லை. இதெல்லாம் கூட்டமைப்புக்கும் நன்றாகத் தெரியும். தெரியாமல் இருப்பவர்கள் பழைய காலத்தில் உறைந்து நிற்பவர்கள்தான்.

[size=4]கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை ??[/size]

[size=4]அகிம்சை போராட்டத்தில் இருந்து தான் வன்முறை வந்தது ![/size]

கேள்வியின் அர்த்தம் புரியாவிட்டால் இப்படித்தான் குழப்பம் வரும். மக்கள் எப்போதுமே வாழ விரும்புகின்றார்கள். அதற்காக அடிமையாக வாழவேண்டும் என்று விரும்புவதில்லை. உரிமைகள் வேண்டி நிற்கும் மக்களை மீளவும் பலியெடுக்கும் அரசியல் எடுபடாது.

[size=4]இலண்டனில் இன்று பேசிய தமிழ் அரசியல் பிரநிதிகள் கேட்டது - போர்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு. [/size]

[size=4]ஆம், மக்கள் உரிமையுடன் வாழ அதை அவர்களின் பிரதிநிகள் கேட்கிறார்கள். வாங்கள் சேர்ந்தே உழைப்போம் ![/size]

  • தொடங்கியவர்

[size=4]

நாமும் நமது பிற்சந்ததியினரும், உள்ஊக்கமும் விழிப்புணர்வும்கொண்ட சமூகமாக உருவெடுக்க நமது [/size]வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான இந்தநிகழ்வை உரியமுறையில் ஆவணப்படுத்திப் பேணுவது நம் தலையாய கடமையாகும்.

புலம்பெயர்தமிழர்கள் தாம் வாழ்ந்துவரும் மேலைநாட்டின்மக்கள், எப்படித் தம் வரலாற்று நிகழ்வுகள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் பேணிப்பாதுகாக்கின்றனர், அவற்றைக் கொண்டாடுவதின்மூலம் நினைவுகளைப் புதிப்பித்து தம் பிற்சந்ததியினரிடம் ஒப்படைக்கின்றனர் என்பதை நாம் கவனிக்கலாம்.

[size=4]நாம் அந்தப்பண்புகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். நம் இளம்தலைமுறையினருக்கும் கற்றுக்

கொடுக்கவேண்டும். [/size]

[size=4]அந்தவகையில் நமது முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பை நாம் பல்வேறுவழிகளிலும் ஆவணப்படுத்திப் பதிவுசெய்தல் வேண்டும். அந்தவகையில் இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சியின் "கொலைக்களங்கள்" , ஐ.நா.பணியாளராகிய Gordon Weiss அவர்களின் "The Cage " என்ற நூல், அண்மையில் வெளியிடப்பட்ட பிபிசி நிருபர் Frances Harrison அவர்களின் " Still Counting the Dead " என்பன குறிப்பிடத்தக்கன. [/size]

[size=4]எனினும் இவர்கள் எல்லோரும் வெளியாட்கள். தாம் பல்வேறு வழிகளில் பெற்ற தகவல்கள், சில நேரடி அனுபவங்களைக்கொண்ட அவர்களின் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டவை அவை.[/size]

[size=4]எனினும் இந்த இனஅழிப்பினால் நேரடியாகப்பாதிக்கப்பட்ட, அந்த இறுதிக்கால அவலவாழ்வில் பங்குகொண்டு,

துன்பப்பட்ட ஈழத்தமிழ்மக்களின் சாட்சியங்கள், அவர்களின் பார்வையில், கன்ணோட்டத்தில், பதிவுசெய்யப்படல்

முக்கியமானது. அந்தவகையில் முதல் ஆவணப்படுத்தலாக வெளிவந்திருப்பது கலாநிதி N மாலதி அவர்களின்

" A Fleeting Moment in My Country: The Last Years of the LTTE De-Facto State" என்ற நூலாகும்.

[/size]

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110877

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இலண்டனில் இன்று பேசிய தமிழ் அரசியல் பிரநிதிகள் கேட்டது - போர்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு. [/size]

[size=4]ஆம், மக்கள் உரிமையுடன் வாழ அதை அவர்களின் பிரதிநிகள் கேட்கிறார்கள். வாங்கள் சேர்ந்தே உழைப்போம் ![/size]

மிகவும பிளவுபட்டு, சிதைவுண்டிருக்கும் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்கான பயணம் மிகவும் நீண்டதாகத்தான் இருக்கப்போகின்றது. மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தன்னலமற்று, இதயசுத்தியுடன், அதிகாரங்களுக்கு ஆசைப்படாமல் செயற்படுகின்றார்களோ அவர்களுடன் எமது உழைப்பு எப்போதும் தொடர்ந்துதான் இருந்து வந்திருக்கின்றது.

[size=4]நல்லது அது தொடரட்டும். மக்கள் நிம்மதியாக ஆனால் சுதந்திரமாகவும் வாழட்டும். [/size]

  • தொடங்கியவர்

இலண்டனில் இன்று பேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விட உங்களுக்கு அதிகம் தெரிவது ஆச்சரியமாக உள்ளது

[size=6]http://tamilnet.com/art.html?catid=79&artid=35733[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலைச் சதி லண்டனில் நடந்தது! - ராஜீவ் சர்மா. கே.பி.யை வைத்து ஆடிய நாடகம் அம்பலம்.

இந்திய முன்னால் பிரதமர் இராசீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேரடியாக குற்றம் சாட்டப்பட்டு அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று வரை அவப்பழியை சுமந்து கொண்டு இருக்க வேண்டியுள்ளது.

அண்மைய நாட்களில் கூட சிங்களத்தின் அடிமையாக விளங்கிவரும் கே.பி.யை வைத்து இந்திய சிறிலங்கா புலனாய்வாளர்கள் நடத்திக்காட்டிய அற்புத காட்சிப்படுத்தல்களும் முன்நாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி அவர்களை கொன்றது புலிகள் தான் என்றும் அதற்கு தான் மன்னிப்புக் கேட்பதாகவும் உப்புச்சப்பற்று வெளிவந்திருந்தது.

தற்போது அதனையும் இத்தனை ஆண்டுகால மர்ம முடிச்சுக்களையும் அவிழ்க்கும் முயற்சியில் ராஜீவ் சர்மா என்பவர் எழுதி வெளியிட்டுள்ள "விடுதலைப் புலிகளுக்கு அப்பால் - ராஜீவ் கொலைப் பின்னணி - காலடிச் சுவடுகள்" என்ற புத்தகம் உதவுகின்றது. இதனை தமிழில் ஆனந்தராஜா என்பவர் மொழி பெயர்த்துள்ளார். அதிலிருந்து....

"ராஜீவ் காந்தி படுகொலை என்பது நம்புவதற்கு அப்பாற்பட்ட ஒரு கொடூரம் என்பது வெளிப்படை. இதில் புலிகள் வெறும் கைகள் மட்டுமே. தனுவும் சிராசனும் அதில் வெறும் விரல்களே. இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள மூளை இதுவரை மறைந்தே உள்ளது. ராஜீவ் படுகொலை இந்தியாவின் ஸ்திரத்தன்மையை குலைக்கவும் வலுவிழக்கச் செய்யவுமான சர்வதேச சதி என்ற சக்கரத்தின் இன்நெரு கம்பிகும்!" என்ற பீடிகையின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் ஒரு வாக்குமூலத்தை படிக்கும் போது அதிர்ச்சியாக இருக்கின்றது.

ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஷாஹீத் பெருமான் செரோமணி அகாலிதல் அமைப்பின் தலைவரான மகந் சேவா தாஸ் சிங் அளித்த வாக்கு மூலம் தான் அது. அதைமட்டும் அப்படியே தருகிறோம்.

மகந் சேவா தாஸ் சிங் சொல்கிறார்...

நான் டிசம்பர் 26 1990 அன்று லண்டன் சென்றேன். அடுத்த நாள் நான் அவர்(ஜக்ஜித் சிங் சௌகான்) வீடு இருந்த 64, வெஸ்டர் கோட் மத்திய லண்டன் முகவரிக்குச் சென்றேன். அங்கு காலிஸ்தானின் அலுவலகமும் இருந்தது. லண்டன் செல்வதற்கு முன்னதாக நான் பிரமமந்திரி சந்திரசேகரை சந்தித்தேன். நான் லண்டனிற்கு புறப்படுவதாக சந்திரசேரிடம் தெரிவித்தேன். அவர் என்னிடம் என் நண்பரான ஜக்ஜித் சிங் சௌகானிடம் பேசுமாறு கூறினார். பஞ்சாப்பில் வன்முறையை நிறுத்திவிட்டு பஞ்சாப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்று சௌகானிடம் கூறுமாறு என்னிடம் தெரிவித்தார்.

நான் லண்டனில் உள்ள சௌகானின் அடுக்குமாடிக் குடியிருப்பிற்கு சென்றேன். இருவரும் தேநீர் அருந்தினோம். அந்த இடத்தில் ஏற்கனவே 10அல்லது 12 நபர்கள் இருந்தனர். சௌகான் என்னை கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு தொலைத் தொடர்பிற்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் பொருத்தப்பட்டு இருந்தன. ஆப்கானிஸ்தான. பாக்கிஸ்தான் மற்றும் பிற நாடுகளுடன் தொலைத் தொர்பு கொள்வதற்காக பயண்படுத்தப்படும் கருவிகளின் செயற்பாட்டினை அவர் விளக்கினார். சௌகானிடம் மேல் தளத்தில் கூடியிருக்கும் நபர்கள் யார் எனக் கேட்டேன். அவர்கள் பப்பர்பல்சா, காலிஸ்தான் கமாண்டோ படை மற்றும் எல்.டி.டி.ஈ.ஐச் சேர்ந்தவர்கள் எனக் கூறினார். அதில் எல்.டி.டி.ஈ.இன் ஆர்.எம்.ரதியும் இருந்தார். நான் பிறநபர்களின் பெயர்களை கேட்கவில்லை.

நான் சௌகானிடம் எப்படி சந்திரசேகர்ஜி 5வருடங்களிற்கு பிரதம மந்திரியாக நீடிப்பார்? எனக்கேட்டேன். அதற்கு சௌகான், சந்திரசேகர், ராஜீவ்காந்தியை அழிப்பார் என என்னிடம் கூறினார். ராஜீவ் அழிவிற்குப் பிறகு காங்கிரசில் முக்கியமான தலைவர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின்னர் காங்கிரஸ் சந்திரசேகரரை பிரதமராக ஏற்றுக் கொள்ளும். எனவே சந்திரசேகர் 5வருடங்கள் பதவியில் இருப்பார் என்றார்.

நான் சௌகானிடம் ராஜீவ் எவ்விதம் அழிக்கப்படுவார் எனக் கேட்டேன். சீக்கியர்கள் மட்டுமல்ல தன்னுடன் வேறு தீவிரவாதக் குழுக்களும் இருக்கிறார்கள். ஹரியானா ஆட்கள் மற்றும் பிறர் இந்த வேலைக்கு தயாராக இருக்கலாம் என்றார். அப்பொழுது இடைமறித்த சர்தார் பர்விந்தர் சிங் வர்மா, 'மகந்த்ஜி, ராஜீவ்ஜி து கயா' (ராஜீவ்ஜி போய்விட்டார்) எனக் கூறினார். நான் அந்தத் திட்டத்தை அறியவிரும்பினேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்கக் கூடாது எனக் கூறினார்கள்.

ஜம்முக் காஸ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நபரும் இடைமறித்து ராஜீவ் அழிக்கப்படுவார் என்பதை நான் சந்திரசேகரிடம் கூறவேண்டும் எனத் தெரிவித்தார். சௌகான் என்னிடம் புதுதில்லி பாராளுமன்ற வளாகத்தில் ராஜீவை கொல்வதற்கான திட்டம் அவர்களிடம் இருந்தது எனக் கூறினார். நான் அவரிடம் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்களே? புதுதில்லியில் வைத்து ராஜீவ் கொலைசெய்யப்பட்டால் இந்தியாவில் உள்ள மூன்று கோடி சீக்கியர்களும் கொல்லப்படுவார்கள். ஒரு சீக்கியர் கூட உயிருடன் தப்பமுடியாது என்று சொன்னேன். நாங்கள் ஏற்கனவே அதைப்போன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டுவிட்டதால் அந்தப்பாதையில் இருந்து விலகமாட்டேன் என அவர் சொன்னார்.

நான் சௌகானை கீழ்த்தளத்திற்கு அழைத்துச் சென்று அவருடைய முடிவை மறுபரிசீலனை செய்யும் விதமாக அவர்மனதை மாற்றினேன். ராஜீவ் டெல்லியில் வைத்து கொல்லப்படாமல் இருப்பதை தான் பார்த்துக் கொள்வதோடு வேறு ஏதேனும் ஓர் இடத்தில் கொலை நிகழ்த்தும்படி பார்த்துக் கொள்வேன் என்று அவர் கூறினார். எனக்கு சந்திரா சாமியிடம் தொடர்பு உள்ளது என்றார். சந்திரா சாமியிடம் போதுமான அளவு பணமும் திட்டங்களும் உள்ளது. அவரிடமும் இதைப்பற்றி கேட்டபோது தாங்கள் டெல்லியில் வைத்து ராஜீவ்காந்தியை கொல்லப்போவது இல்லையென முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

நான் லண்டனில் இருந்து 1991 ஜனவரி 2 அன்று திரும்பினேன். சௌகான் என்னிடம் 3கடிதங்கள் கொடுத்தார். அதில் ஒன்று சந்திரசேகரிற்கு. நான் அங்கிருந்து கிழம்பும் போது இந்தியத் தலைவர்கள் ஆன சரத்பவார், ஓம்பிரகாஷ் சவுதாலா சந்திராசாமி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் கோயங்காவுடன் சர்தார் வல்வீந்தர் சிங் வர்மா ஆகியோர் தன்னை வந்து சந்தித்தாக சௌகான் என்னிடம் தெரிவித்தார். ஒரு சந்திப்பு பம்பாயில் இந்தியன் எக்ஸ்பிரஸ் அலுவலகம் உள்ள எக்ஸபிஸ் ரவரில் நடந்தது. அந்தக் கூட்டம் காலிஸ்தான் இயக்கத்தை மீண்டும் அமைப்பது ராஜீவ்காந்தியை அழிப்பது ஆகிய விசயங்கள் சம்மந்தப்பட்டது.

லண்டனில் பேசப்பட்ட விசயங்களை நான் ராஜீவ்காந்தியிடம் (பெப்ரவரி 10௧991 அன்று பாராளுமன்ற இல்லத்தில் வைத்து) விளக்கினேன். இந்த விசயங்களை சந்திரசேகரிடமும் தெரிவித்து விட்டதாகக் கூறினேன். சிறிது அதிர்ச்சியடைந்த ராஜீவ்காந்திக்கு வேர்த்துக் கொண்ட்ட ஆரம்பித்தது. அவர் கோபம் அடைந்தது நன்றாகத் தெரிந்தது. நான் ராஜீவை மீண்டும் 1991 பெப்ரவரி 14 அல்லது 15இல் அவருடைய இல்லத்தில் சந்தித்தேன். அவருடைய இல்லத்தை வேவு பார்த்ததாக இரண்டு ஹரியானா காவலர்கள் பிடிபட்டனர். ராஜீவே இதை என்னிடம் கூறினார். இதேயளவு ஆபத்தான விசயத்தை நான் அவரிடம் தெரித்ததாகவும் ராஜீவ் கூறினார்.

சௌகானிற்கு சந்திராசாமி மற்றும் சரத்பவார் பணம் அளித்திருந்தனர். ராஜீவ்ஜீயின் கொலைக்குப் பின்னால் சந்திராசாமி உள்ளார் என்று விலாவாரியாக விபரிக்கிறது அந்த வாக்கு மூலம்.

எஸ.ஐ.டி. விசாரனைக்கு நேர்மாறான விசயங்களாக இருக்கின்றன ஜெயின் கமிசன் வாக்குமூலங்கள். தமிழகத்திலும் இவை பலத்த சர்ச்சையை கிளப்பலாம்!

சிங்களத்தின் முற்றுமுழுதான பிடிக்குள் அகப்பட்டிருக்கும் கே.பி.யை வைத்து இந்திய சிறிலங்கா புலனாய்வாளர்கள் அண்மையில் நிகழ்த்திய நாடகத்தை இந்த புத்தகம் உடைத்தெறிந்துள்ளது. உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.

(நன்றி ஜூனியர் விகடன்.)

-----------------------------------------------------------------------------------------------

http://www.sangam.org/PIRABAKARAN/Part33.htm

  • தொடங்கியவர்

[size=4]இந்தக்கொலை சம்பந்தமாக இறுதிவரை கட்டை பஞ்சாயமே நடந்துள்ளது. [/size][size=1]

[size=4]ஒரு சுயாதீன விசாரணை நடந்தால் மட்டுமே சந்தேகங்கள் முழுமையாக தீரும். [/size][/size]

நான் சௌகானிடம் எப்படி சந்திரசேகர்ஜி 5வருடங்களிற்கு பிரதம மந்திரியாக நீடிப்பார்? எனக்கேட்டேன். அதற்கு சௌகான், சந்திரசேகர், ராஜீவ்காந்தியை அழிப்பார் என என்னிடம் கூறினார். ராஜீவ் அழிவிற்குப் பிறகு காங்கிரசில் முக்கியமான தலைவர்கள் யாரும் இல்லை. அதற்குப் பின்னர் காங்கிரஸ் சந்திரசேகரரை பிரதமராக ஏற்றுக் கொள்ளும். எனவே சந்திரசேகர் 5வருடங்கள் பதவியில் இருப்பார் என்றார்.

நான் சௌகானிடம் ராஜீவ் எவ்விதம் அழிக்கப்படுவார் எனக் கேட்டேன். சீக்கியர்கள் மட்டுமல்ல தன்னுடன் வேறு தீவிரவாதக் குழுக்களும் இருக்கிறார்கள். ஹரியானா ஆட்கள் மற்றும் பிறர் இந்த வேலைக்கு தயாராக இருக்கலாம் என்றார். அப்பொழுது இடைமறித்த சர்தார் பர்விந்தர் சிங் வர்மா, 'மகந்த்ஜி, ராஜீவ்ஜி து கயா' (ராஜீவ்ஜி போய்விட்டார்) எனக் கூறினார். நான் அந்தத் திட்டத்தை அறியவிரும்பினேன். ஆனால் அவர்கள் அதைக் கேட்கக் கூடாது எனக் கூறினார்கள்.

ஜம்முக் காஸ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நபரும் இடைமறித்து ராஜீவ் அழிக்கப்படுவார் என்பதை நான் சந்திரசேகரிடம் கூறவேண்டும் எனத் தெரிவித்தார். சௌகான் என்னிடம் புதுதில்லி பாராளுமன்ற வளாகத்தில் ராஜீவை கொல்வதற்கான திட்டம் அவர்களிடம் இருந்தது எனக் கூறினார். நான் அவரிடம் இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கியர்கள் பெருமளவில் கொல்லப்பட்டார்களே? புதுதில்லியில் வைத்து ராஜீவ் கொலைசெய்யப்பட்டால் இந்தியாவில் உள்ள மூன்று கோடி சீக்கியர்களும் கொல்லப்படுவார்கள். ஒரு சீக்கியர் கூட உயிருடன் தப்பமுடியாது என்று சொன்னேன். நாங்கள் ஏற்கனவே அதைப்போன்ற ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டுவிட்டதால் அந்தப்பாதையில் இருந்து விலகமாட்டேன் என அவர் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த உலகத்தையே சுற்றி கடலில் சொந்த முயற்சியில் ஆயுதம் கொண்டுவந்தவர்கள் செய்யாத குற்றத்தை செய்யவில்லை என்று சரிவர முக்கியமானவர்களுக்கு எடுத்துச் செல்லமுடியவில்லையா?

அப்போ ஏன் பாலசிங்கம் அண்ணை அப்படி ஒரு பேட்டி கொடுத்தவர்?

உதயன் ஆசிரியர் 2000 இன் ஆரம்பபப் பகுதியில் கொழும்பிலிருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் பணியிலிருந்த ரோ முக்கியஸ்த்தர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறார். இவர் மூலம் புலிகளின் தலமையை அணுகியிருக்கிறது இந்திய உளவுத்துறை. புலிகளின் தலமைக்குத் தெரியாமல் கொலை நடந்திருந்தது தெரிந்திருந்தும்கூட, புலிகளின் தலமையிடமிருந்து ஒரு மன்னிப்புப் போன்ற கருத்து வெளியிடப்பட்டால் இந்தியாவுடன் நல்லுறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று வித்தியாதரன் மூலம் கிளிநொச்சிக்குத் தூது அனுப்பப்பட்டது. தமிழ்ச் செல்வனும், பாலசிங்கமும் இதை தலைவரிடம் வலியுறுத்தி சர்வதேச செய்தியாளர் மாநாடொன்றினை நடத்துமாறு தலைவரைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வாறு நடந்த மாநாட்டில் இந்தியச் செய்தியாளர் ஒருவர் தனக்குச் சொல்லித்தரப்பட்ட கேள்வியைக் கேட்க, பாலசிங்கமும் தலைவரிடம் இப்படிக் கூறுங்கள் என்று சொல்கிறார். தான் எதிர்பார்த்த பதிலை தலைவர் கூறியதும் இந்தியா அன்றே புலிகளை அழிக்க நாள் குறித்தது.

ஆக, புலிகள் செய்யாத ஒரு கொலைக்காக அந்த இயக்கம் மட்டுமல்லாமல், அந்த இயக்கத்தை நம்பியிருந்த ஒட்டுமொத்தத் தமிழினமே முள்ளிவாய்க்காலில் பலியிடப்பட்டது.

அப்படியானால் கொன்றவர்கள் யார்/??

  • தொடங்கியவர்

உதயன் ஆசிரியர் 2000 இன் ஆரம்பபப் பகுதியில் கொழும்பிலிருந்த இந்திய உயர்ஸ்த்தானிகராலயத்தில் பணியிலிருந்த ரோ முக்கியஸ்த்தர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறார். இவர் மூலம் புலிகளின் தலமையை அணுகியிருக்கிறது இந்திய உளவுத்துறை.

புலிகளின் தலமைக்குத் தெரியாமல் கொலை நடந்திருந்தது தெரிந்திருந்தும்கூட, [size=5]புலிகளின் தலமையிடமிருந்து ஒரு மன்னிப்புப் போன்ற கருத்து வெளியிடப்பட்டால் இந்தியாவுடன் நல்லுறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம்[/size] என்று வித்தியாதரன் மூலம் கிளிநொச்சிக்குத் தூது அனுப்பப்பட்டது.

தமிழ்ச் செல்வனும், பாலசிங்கமும் இதை தலைவரிடம் வலியுறுத்தி சர்வதேச செய்தியாளர் மாநாடொன்றினை நடத்துமாறு தலைவரைக் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வாறு நடந்த மாநாட்டில் இந்தியச் செய்தியாளர் ஒருவர் தனக்குச் சொல்லித்தரப்பட்ட கேள்வியைக் கேட்க, பாலசிங்கமும் தலைவரிடம் இப்படிக் கூறுங்கள் என்று சொல்கிறார். தான் எதிர்பார்த்த பதிலை தலைவர் கூறியதும் இந்தியா அன்றே புலிகளை அழிக்க நாள் குறித்தது.

[size=1]

[size=4]ஒருவர் தெரியாததை அறியவும் மற்றையவர் தெரிந்ததை பகிரவும் இந்த களம் வழிசமைத்து தருகின்றது. [/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள் இரகுநாதன். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.