Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே பார்வையில் வரவு -செலவுத் திட்டம்

Featured Replies

இலங்கை பாராளுமன்ற வரவு-செலவுத் திட்டம் 2013 முன்மொழிவுகள்

ஓய்வூதியர்களுக்கு நிவாரணம்

சூதாட்ட, குதிரைப் பந்தய நிலைய வரிகள் அதிகரிப்பு

விவாசயக் கடனுக்கான வட்டி நீக்கம்

படையினரின் வீடமைப்பு திட்டத்திற்கு 1000 மில்லியன் ரூபா

பாடசாலை மாணவர்களுக்கு இலவச சப்பாத்துகள்

வெளிநாட்டு பணிப்பெண்களாக செல்வோரின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படும்

வெளிநாட்டு மது வகைகளுக்கான வரி 25 வீதத்தால் அதிகரிப்பு

வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்கு வீடு கட்ட 10 வீத வட்டியில் 250,000 ரூபா கடன்

ஆடைத் தொழிலால் 5000 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்குமென எதிர்பார்ப்பு

50 மில்லியன் ரூபாவுக்கு வருவாய் பெறும் சுப்பர் மார்கெட்டுகளுக்கு தேச நிர்மாண வற் வரி

நாட்டின் சுகாதார சேவைகள் முன்னேற்றத்துக்கு 125 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

வரி மறுசீரமைப்பு

சிறிய வர்த்தக நிறுவனங்களுக்கு வற், தேசநிர்மாண வரிகள் விலக்கு.

ரின்மீன் இறக்குமதிக்கு வரி

ஆடை ஏற்றுமதி உபகரண இறக்குமதி துறைமுக வரி 2.5% 5% குறைப்பு

மோட்டார் வாகன அனுமதிப்பத்திரக் கட்டணம் 1500 ரூபா அதிகரிப்பு

பந்தயக் கார் இறக்குமதிக்கு வரி விலக்கு

உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இலகுவான வரி முறை

பங்குச் சந்தையில் 20 வீதக் கையிருப்புகளை கொண்ட கம்பனிகளுக்கு 3 வருட வரி விலக்கு.

இரவு விடுதிகளுக்கு வரி 5% அதிகரிப்பு

தேசிய காப்புறுதி நிதியத்துக்கு சகல நிதி நிறுவனங்களும் லாபத்தில் 1% செலுத்த வேண்டும்.

50 மில்லியன் ரூபாவிற்கு மேல் வருவாய் பெறும் பல்பொருள் அங்காடிகளுக்கு தேச நிர்மாண வற் வரிகள்.

உள்சார் கட்டமைப்பு மேம்பாடு

துறைமுகங்கள் வீதிகள் ரயில்பாதை நிர்மாணம், புனரமைப்புக்கு 2100 கோடி டொலர் ஒதுக்கீடு.

கிராம வீதிகள் நிர்மாணத்திற்கு ரூ.75 கோடி.

சேரிக் குடியிருப்பாளர்களுக்கான நகர குடியிருப்புகளுக்கு ரூ 75 கோடி.

கடல் விவகாரங்களுக்கு 20 கோடி ரூபாவில் புதிய செயலகம்.

கிராமந்தோறும் தகவல் தொழில்நுட்ப நிலையம்.

கொழும்பைச் சூழவுள்ள காணி, அபிவிருத்தி, கால்வாய் அபிவிருத்தி, உள்சார் கட்டமைப்புக்கு 100 கோடி ரூபா.

புதிய அறிவிப்புகள்

பயன்படுத்தப்படாத காணிகள் சுவீகரிப்பு.

விவசாயிகளின் கடன் வட்டி நீக்கம்.

மாகாண ஆசிரியர் பயிற்சிக்கு 90 கோடி ரூபா.

வெளிநாட்டவருக்கு காணி விற்பனை தடை.

12,500 இளைஞருக்கு 25,000 ஏக்கர் காணியைப் பயன்படுத்த 10 கோடி ரூபா.

சமூகநலனோம்பல் திட்டங்கள்

வறிய பாடசாலை மாணவருக்கு பால், முட்டை, அரையாண்டுச் சீருடை இலவசம்.

கஷ்டப் பிரதேச மாணவருக்கு வருடாந்தம் 1 சோடி பாதணி.

5 இலட்சம் குடும்பங்களின் நீர்த்தேவைக்கு 3 ஆண்டுகளுக்கு 12,600 கோடி ரூபா முதலீடு.

சுகாதார மேம்பாட்டுக்கு 13,500 கோடி ரூபா ஒதுக்கீடு.

கல்வித்துறைக்கு நிகர தேசிய உற்பத்தியில் 4.1 % மாக 30,600 கோடி ரூபா ஒதுக்கீடு.

பல்கலைக்கழக கல்விமான்களின் ஆராய்ச்சிக்கு 25 கோடி ரூபா ஒதுக்கீடு.

கலைஞர்கள், ஊடகத்துறையினருக்கு உதவ ரூபா 20 கோடி.

சுதேச மருத்துவத்துறையை ஊக்குவிக்க 30 கோடி ரூபா.

சமூக நலனோம்பல் மற்றும் தொழிலாளர்களுக்கு 25 கோடி ரூபா ஒதுக்கீடு.

வீட்டுப்பணிப்பெண்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்.

தொழிற்பயிற்சிப் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவர்.

http://www.thinakkur...ocal&Itemid=458

Edited by மல்லையூரான்

  • Replies 168
  • Views 8.9k
  • Created
  • Last Reply

[size=4]

ஆடை ஏற்றுமதி உபகரண இறக்குமதி துறைமுக வரி 2.5% 5% குறைப்பு
[/size]

[size=4]ஜி.எஸ்.பி. ஐரோப்பிய ஒன்றிய தடை தாக்கங்களை ஏற்படுத்துகின்றது [/size]

[size=4]

கல்வித்துறைக்கு நிகர தேசிய உற்பத்தியில் 4.1 % மாக 30,600 கோடி ரூபா ஒதுக்கீடு.
[/size]

[size=4]இதை ஆறு வீதமாக உயர்த்தி தர கேட்டு பல்கலைக்கழங்கள் மூடப்பட்டு உள்ளன. [/size]

[size=4]

தொழிற்பயிற்சிப் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவர். [/size]

[size=4]மத்திய கிழக்கு நாடுகளை விட்டு தென்கொரியாவை குறி வைத்துள்ளது இந்த திட்டம். [/size]

Edited by akootha

JVP பல புதிய குண்டுகலை தூக்கிப் போடுகிறது.

பட்ஜெட்டில் மஹிந்தவுக்கு 750 கோடி அரச ஊழியருக்கோ வெறும் 1500 ரூபா - ஜே.வி.பி.

images%20%283%29.jpg

2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதில் தனக்கான விசேட ஒதுக்கீடாக 750 கோடி ரூபாவை ஒதுக்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரச ஊழியர்களுக்கு வெறும் 1500 ரூபாவையே உயர்த்தியுள்ளார்.

எனவே இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு "கண்கட்டு வித்தையே'. இந்த வரவு செலவுத் திட்டத்தில் எதிர்காலப் பொருளாதார இலக்குகள் எவையும் இல்லை இவ்வாறு விமர்சித்துள்ளது ஜே.வி.பி.

அதேவேளை, ஏழை மக்களை மறந்துள்ள அரசு, கறுப்புப்பண வியாபாரிகளுக்கு நிவாரணத்தை வாரி இறைத்துள்ளதெனவும் ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜே.வி.பியின் செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை பெலவத்தையிலுள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்றது.

ஜே.வி.பியின் செயலர் ரில்வின் சில்வா அங்கு தெரிவித்ததாவது:

இந்த அரசின் வரவு செலவுத் திட்டமானது மக்கள் விரோதச் செயல் என்பதை நாம் ஆரம்பத்திலேயே கூறிவைக்க விரும்புகின்றோம். பொருள்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. மக்களின் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பால் வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது மக்கள் திண்டாடுகின்றனர்.

இந்நிலையில் தங்களுக்கு வரவுசெலவுத் திட்டத்தில் ஏதாவது நிவாரணம் கிடைக்குமென மக்கள் பரவலாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அரசு அதனைச் செய்யவில்லை. மக்கள் முழுமையாக ஏமாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாட்டின் எதிர்கால பொருளாதார இலக்குகள் தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படாத இந்த வரவுசெலவுத் திட்டத்தில் இலக்குகள், கொள்கைகள் என்பன வகுக்கப்படவில்லை. வருமானங்களையும் செலவினங்களையுமே அரசு தொகுத்துக்காட்டியுள்ளது. இதற்குப் பெயர் வரவுசெலவுத் திட்டம் அல்ல. சாவு வீடு தொடர்பில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையாகும்.

அரச ஊழியர் சம்பள அதிகரிப்பு ஒரு ஏமாற்று

குறிப்பாக, அரச ஊழியர்களுக்கு 1,500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதென அரசு பிரசாரம் செய்கின்றது. ஆனால் அது சம்பள அதிகரிப்பல்ல. சம்பள சூத்திரம். கபடத்தனமாக வகுக்கப்பட்டு அரச ஊழியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

முதல் தடவை 750 ரூபாவும், அதற்குப் பின்னர் மீதமுள்ள 750 ரூபாவை இரண்டு தடவைகள் வழங்குவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. எனவே, சம்பள அதிகரிப்பு என்பது வெறும் கண்கட்டிவித்தையாகும்.

50 ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெறுபவர்களுக்கே மாதாந்தம் 2,500 ரூபா அதிகரிப்பை, 5சதவீத சம்பள அதிகரிப்பு முறைமைக்கமையப் பெறமுடியும். நாட்டில் எத்தனைபேர் 50 ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளத்தைப் பெறுகின்றனர்?

அரச ஊழியர்களுக்கு சாராசரியாக நாளாந்தம் 2.50 சதமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஜனாதிபதியின் நாளாந்த செலவினம் 2 கோடியாகும். அதிலும் விசேடமாக ஜனாதிபதிக்கு வரவு செலவுத் திட்டத்தில் 750 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மீனவரை மறந்த மஹிந்த ராஜபக்ஷ

மீனவர்களுக்கும் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த ஜனாதிபதியே மீனவர்களை இன்று மறந்துவிட்டார். அடுத்ததாக, கல்விக்கு 6 சதவீதத்தை ஒதுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மொத்த தேசிய உற்பத்தியில் 1.86 சதவீதமே கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், தனியார்துறை ஊழியர்கள், தோட்டத்தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வரவு செலவுத் திட்டம் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. மாறாக கறுப்புப்பண வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வகையிலேயே பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளையும் உள்ளடக்கியே அரசு வரவுசெலவுத் திட்டத்தை வகுத்துள்ளது. ஆகமொத்தத்தில் சொல்லப்போனால் அரசின் இந்த வரவுசெலவுத் திட்டமானது கண்கட்டி வித்தையாகும் என்பதுடன், மக்கள் விரோத செயலாகவும் கருதப்படுகிறது.

தமிழர்கள் மிருகங்கள் என்ற நினைவில் இருக்கின்றதா அரசு?; பட்ஜெட்டில் வடக்கு, கிழக்கு திட்டமிட்டுப் புறக்கணிப்பு; செல்வா எம்.பி. ஆவேசம்

pon%20selva.jpg

போரை முன்னின்று நடத்தியவர்கள் மனிதர்கள், போரால் பாதிக்கப்பட்டவர்கள் மிருகங்களா? தமிழ் மக்களும் ஆறறிவு படைத்த மனிதர்கள்; அவர்களும் அபிவிருத்தியுடன் சுய உரிமையுடன் வாழவேண்டும் என்பதை மஹிந்த அரசு விளங்கிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையின் 66ஆவதும் மஹிந்த அரசின் 8 ஆவதுமான 2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ஆனால், இந்த வரவு செலவுத் திட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக தாயக இடங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மஹிந்த அரசால் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டு இருக்கின்றன, ஆனால், எமது தாயகத்தை அபிவிருத்தி செய்ய திட்டங்கள் எதையும் முன்வைக்காமல் இராணுவ வீட்டுத் திட்டக்கடனுக்கு 100 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது மஹிந்த அரசு.

இது எந்த விதத்தில் நியாயமானது? வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை மிருகங்கள் என்று நினைத்துக் கொண்டு மஹிந்த அரசு இருக்கின்றதா? என எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு இந்த அரசு தொடர்ந்து செயற்படுமானால் இலங்கைக்கு தொடர்ந்து சர்வதேச அழுத்தம் வந்து கொண்டே இருக்கும். அதேவேளை, நாமும் சர்வ தேசத்தை நாடியே தீர்வைப் பெறுவோம். இதை மஹிந்த அரசுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

இதேவேளை, நாடாளுமன்றில் நடைபெறும் வரவு செலவுத் திட்ட விவாதங்களின் போது அரசின் திட்டமிட்ட புறக்கணிப்புக்கு எதிராக தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரத்துக் குரல் கொடுக்கும் என்றார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஜேவிபி பல குண்டுகளை போடுகின்றது தான் ஆனால் ஒண்டுமே வெடிக்கிதில்ல அது தான் பிரச்சனையே மற்றது ஜேவிபி என்பது இப்பொழுதெல்லாம் பல பிரிவுகளாக பிளவுண்டு இலங்கை அரசியலின் செல்லாக்காசு அது கடந்த தேர்தல்களில் அதற்க்கு தென்னிலங்கையில் பலத்த அடி :D

மற்றது துளசி அக்கா london இல் மட்டும் அல்ல இலங்கை மருத்துவர்கள் மட்டும் அல்ல எந்த மொழியா கலாச்சாரமா இருந்தாலும் பிழையான மருத்துவம் பாத்து பிடிப்பட்டால் உடனே தடை தான் அது இலங்கை மருத்துவர்களுக்கு மட்டும் பொருந்தாது அக்கா :D

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது துளசி அக்கா ஒவொரு நாட்டிற்கு ஒவொரு நடைமுறை இருக்கு ஆஸ்திரேலியாவில் ஆண்டு 12 இல் நடைபெறுகின்ற சோதனையில் நீங்கள் எத்தனை புள்ளிகள் எடுக்கின்றிர்கள் என்பதனை அடிப்படையாக வைத்து உங்களுக்கு விரும்பின பாடத்தை தெரிவு செய்யலாம் இலங்கையில் வேறு மாதிரி நடைமுறை ஒவொரு நாட்டிற்க்கு ஓன்று சும்மா அது சரி இல்லை இது சரி இல்லை என்று சப்பைக்கட்டு கட்டிட்டு இருக்க கூடா..... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்ஜெட்டை எதிர்த்து கறுப்பு உடை படை

2013 வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று கறுப்பு உடை அணிந்தனர். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கறுப்பு உடையுடனேயே ஊடகவியலாளர்கள் முன் தோன்றினர்.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டிருந்த தலைவர்கள் அனைவரும் கறுப்பு உடையுடனேயே காணப்பட்டனர்.

"2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஏழை மக்களுக்கு நன்மையானதல்ல. அதற்குத் எமது கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கறுப்பு நிற ஆடை அணிந்து கலந்து கொள்கிறோம்'' என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் கலாநிதி குமரகுருபரன், நவ சமசமாஜக்கட்சித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, ஐக்கிய சோஷலிஸக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, ருஹுணு மக்கள் கட்சித் தலைவர் அருணசொய்ஸா, மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார, ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் ஸ்ரீமஸ்ரீ ஹப்பு ஆராய்ச்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

12 நவெம்பர் 2012, திங்கள் 8:00 மு.ப

http://www.onlineuthayan.com/News_More.php?id=421781603612798891

ஆக இலங்கை டாகுத்தர் மார் எல்லாம் மொக்கங்கள். வெள்ளைக்கார டாகுத்தர் மார் விண்ணர்கள் அப்பிடித்தானே அக்கா? சண்டையில காயப்பட்ட அத்தினயோ சனங்களை எதுவித வசதிகளும் இல்லாமல் காப்பாற்றிய எங்கட டாகுத்தர் மார் கடவுளுக்கு சமம். யாழ் மருத்துவமனையில் இருக்கும் எத்தனையோ மருத்துவர்கள் சிறந்த விற்பன்னர்கள். வைத்தியர் தயாளன், வைத்தார் குனானந்தன், வைத்தியர் சிவக்குமார், கண் வைத்தியர் குகதாசன் எண்டு ஒரு பெரிய பட்டியலே இருக்கு.

அக்காச்சி, அது internship. விஷயம் விளங்காமல் எழுத வெளிக்கிட்டால் இப்பிடித்தான் :lol:

Reason for edit - எழுத்துப் பிழை

எனக்கு ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை வருவது சகஜம், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அண்ணாச்சி... :)

நீங்கள் தமிழில் எழுத்துப்பிழை விட்டு திருத்தும்போது நான் ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை விடக்கூடாதா? :icon_idea:

அண்ணா, சண்டையின் போது காப்பாற்றியது உண்மைதான். இல்லை என்று கூறவில்லை. ஆனால் சண்டை தவிர்த்து சாதாரணமாக பாருங்கள். எம் நாட்டில் படித்து விட்டு அந்த படிப்புடன் வெளிநாட்டில் வேலை செய்ய முடியாது. ஏனென்றால் வெளிநாட்டில் உள்ள வைத்தியர்களுக்கு தெரிந்த அளவு விடயம் எம் நாட்டு வைத்தியர்களுக்கு தெரியாது. இலங்கையில் சிறிய வருத்தங்களுக்கு கூட மரணம் சம்பவிப்பது இன்றும் உள்ளது. அதே சிறிய வருத்தங்கள் இங்கு காட்டப்படும் போது அது சாதாரண வருத்தமாக இங்கு பார்க்கப்படுகிறது. :):icon_idea:

மற்றது துளசி அக்கா london இல் மட்டும் அல்ல இலங்கை மருத்துவர்கள் மட்டும் அல்ல எந்த மொழியா கலாச்சாரமா இருந்தாலும் பிழையான மருத்துவம் பாத்து பிடிப்பட்டால் உடனே தடை தான் அது இலங்கை மருத்துவர்களுக்கு மட்டும் பொருந்தாது அக்கா :D

மச்சி, இலங்கையில் படித்து விட்டு இங்கு மருத்துவராக வந்து வேலை செய்பவர்கள் அனுபவமின்மை காரணமாக பல பிழைகளை விடுவார்கள். வெளிநாடுகளில் படிப்பவர்கள் அவ்வாறான பிழைகளை விடுவது குறைவு.

மற்றது துளசி அக்கா ஒவொரு நாட்டிற்கு ஒவொரு நடைமுறை இருக்கு ஆஸ்திரேலியாவில் ஆண்டு 12 இல் நடைபெறுகின்ற சோதனையில் நீங்கள் எத்தனை புள்ளிகள் எடுக்கின்றிர்கள் என்பதனை அடிப்படையாக வைத்து உங்களுக்கு விரும்பின பாடத்தை தெரிவு செய்யலாம் இலங்கையில் வேறு மாதிரி நடைமுறை ஒவொரு நாட்டிற்க்கு ஓன்று சும்மா அது சரி இல்லை இது சரி இல்லை என்று சப்பைக்கட்டு கட்டிட்டு இருக்க கூடா..... :D

ஒவ்வொரு நாட்டில் ஒவ்வொரு நடைமுறை இருந்தாலும் குறைந்த வயதிலிருந்து மருத்துவ கல்வி தொடர்பாக practical ஆக செய்து பார்க்க வெளிக்கிட்டவர்களுக்கு அனுபவம் அதிகம். எனவே பிழை விடும் வாய்ப்பு குறைவு..

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியா நீங்க சொன்ன கரெக்டா தான் இருக்குமக்கா அப்பிடின்னு சொல்லத்தான் ஆசை ஆனா என்ன செய்ய உங்கள் மருத்துவ அரசியல் அறிவு தான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே :D

ஆஸ்திரேலியா ல பிரக்டிகல் இல்லை அதற்காக ஆஸ்திரேலியா மருத்துவத்தை குறை சொல்ல முடியுமா?

தவலைய வெட்டி பாகிரதில இருந்து கரப்பான் கவுட்டு கைவிட்டு போட்டு பாகிறது வரைக்கும் இலங்கையிலையும் இருக்கு அக்கா நீங்கள் இலங்கை மீது கண்டபடி விமர்சனம் வைக்கும் ஒருவர் சோ உங்கள் வாதம் நேர்மையா இருக்க போவது இல்லை :D

இலவசப்பாட புத்தகத்திக்கும் சீருடைக்கும் ஒராள் லைன் ல அடிபட்டுக்கொண்டு நிண்டத நினைச்சன் சிப்பு சிப்பா இக்கு

வடிவேலு மண்ணெண்ணெய் க்கு லைன் ல நிண்டிட்டு பெட்ரோல் கிடங்கு சொந்தமா இருக்கு என்ற காமடி தான் யாபகம் வருது :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை வருவது சகஜம், சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அண்ணாச்சி... :)

நீங்கள் தமிழில் எழுத்துப்பிழை விட்டு திருத்தும்போது நான் ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை விடக்கூடாதா? :icon_idea:

அண்ணா, சண்டையின் போது காப்பாற்றியது உண்மைதான். இல்லை என்று கூறவில்லை. ஆனால் சண்டை தவிர்த்து சாதாரணமாக பாருங்கள். எம் நாட்டில் படித்து விட்டு அந்த படிப்புடன் வெளிநாட்டில் வேலை செய்ய முடியாது. ஏனென்றால் வெளிநாட்டில் உள்ள வைத்தியர்களுக்கு தெரிந்த அளவு விடயம் எம் நாட்டு வைத்தியர்களுக்கு தெரியாது. இலங்கையில் சிறிய வருத்தங்களுக்கு கூட மரணம் சம்பவிப்பது இன்றும் உள்ளது. அதே சிறிய வருத்தங்கள் இங்கு காட்டப்படும் போது அது சாதாரண வருத்தமாக இங்கு பார்க்கப்படுகிறது. :):icon_idea:

அக்கா, நீங்கள் விட்டது எழுத்துப் பிழை இல்லை, சொற்பிழை. Intensive, internship இரண்டுமே முற்றியும் வேறான சொற்கள். இதிலே எழுத்துப் பிழை என்ற கதைக்கே இடமில்லை. :icon_idea: எமது நாட்டில் மட்டுமல்ல, அவர்களின் நாடு தவிர வேற அநேக நாடுகளில் படித்தவர்கள் அவர்களின் சோதனை எடுக்கவேண்டும் என்பது கட்டாயம். ரஷ்யா , பங்களதேஷ், சீனா ஆகிய நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இலங்கையில் வைத்தியராக சட்டப்படி வேலை செய்ய, இலங்கை சுகாதார அமைச்சின் சோதினை எடுக்க வேண்டும், தெரியுமா?

அவுசைப் பொறுத்தவரை மேலதிகமாக ஒன்றுமே படிகத்தேவயில்லை. AMC யின் சோதினைய பாஸ் பண்ணினால் சரி. இரண்டு மாதங்களுக்கு முன் தான் எனது நெருங்கிய நண்பனின் தங்கை (கொழும்பு மருத்துவ பீட MBBS முடித்து களுபோவிலவில் வேலை செய்பவர்) AMC முடித்து வைத்தியராக வேலை செய்கிரா. இலங்கைப் படிப்புடன் தான் AMC தேர்விலே சித்தியடந்தவ .

இலங்கையில் கிடைக்கும் இலவச மருத்துவத்தின் தரத்துடன் தான் அவுஸின் மருத்துவத்தின் தரம் ஒப்பிடப்படுகிறது. முதலில திரிய ஒழுங்கா வாசிச்சுப் பார்க்கோணும். இதிலே கருத்துக் கூறிய என்னையும் சுண்டலையும் தவிர நீங்கள் ஒருத்தருமே அவுசில் இல்லை. பிறகு என்னத்துக்கு இந்த முக்கு முக்குறீங்கலோ தெரியேல்ல. வெள்ளை காரன் எண்டால் எதோ கடவுள் எண்டுறது எங்கட சனத்திண்ட நினைப்பு. அவங்கள் உங்களை ஒரு சதத்துக்கும் மதிக்கிறேல்ல எண்டுறது வேற விஷயம். அவனுக்கு நீங்கள் நாங்கள் அனைவரும் bloddy Indians தான். நீங்கள் அசைலம் அடிச்சுப்போட்டியல் திரும்பி ஜென்மத்துக்கும் ஊர்ப்பக்கம் போக ஏலாது எண்ட கடுப்பு உங்களுக்கு. நான் நினைத்தால் நாளைக்கே போகலாம், எதுவிதமான பிரச்சனைகளும் எனக்கு இல்லை. இப்பவே நல்ல வேலை கிடைத்தால் வீடு வாசலை வித்துப்போட்டு, கார்கள், சாமான் சட்டிய ஒரு கொண்டேயினர் கப்பலில இலங்கைக்கு அனுப்பிப் போட்டு போகத் தயார்.

  • கருத்துக்கள உறவுகள்

இலவசப்பாட புத்தகத்திக்கும் சீருடைக்கும் ஒராள் லைன் ல அடிபட்டுக்கொண்டு நிண்டத நினைச்சன் சிப்பு சிப்பா இக்கு

வடிவேலு மண்ணெண்ணெய் க்கு லைன் ல நிண்டிட்டு பெட்ரோல் கிடங்கு சொந்தமா இருக்கு என்ற காமடி தான் யாபகம் வருது :D

Good one machchi. எங்கட வைத்தியர்களை இந்தக் கழட்டு கழட்டுகினம், வெள்ளைக்காரனுக்குப் பிறந்திருப்பினமோ? எங்கட நேர்ஸ் மார் வைத்தியர் மார் அக்கறையா தம்பி, அம்மா, அக்கா, ஐயா எண்டு மரியாதையாய் கூப்பிட்டு கதைக்கிரதிலேயே பாதி வருத்தம் போயிடும். எங்கட வைத்தியர்களின் அர்ப்பணிப்பு, சேவை, வெள்ளைக் காரனுக்கு மருந்துக்கும் இல்லை. அடுத்த பகிடி இங்க வெள்ளைக்கார டாக்குத்தர் மாறே வலு குறைவு. சீன, இந்திய, இலங்கை வைத்தியர்கள் தான் எல்லா இடங்களிலும் வேலை செய்கிறார்கள். அவுஸ் ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்தா நிலைமை தெரியும். அரைவாசி நேர்ஸ் மார் கூட மலையாளிகள் தான்.

[size=4]2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் இலங்கை ஜனாதிபதியும், நிதி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ மூலம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து, அதன் வெளிப்பாடுகள், உள்ளடங்கியுள்ள முன்மொழிவுகள் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டபொழுது, பெரும்பாலாளோர், வரவு செலவுத்திட்டத்தை வரவேற்கும் வகையிலான கருத்துக்களை முன்மொழிந்திருந்தனர். ஆயினும் சில முன்மொழிவுகள் கேள்வியை எழுப்பும் வகையில் அமைந்திருந்தன. இவ்வாறு பொதுமக்களின் கருத்துக்களை அலசும் ஒரு களமாக இந்த பார்வை அமைந்துள்ளது.

மோட்டார் வாகனங்களின் இறக்குமதி வரி வீதத்தில் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்த்திருந்த பலருக்கு ஏமாற்றமளிப்பதாக இம்முறை வரவு செலவுத்திட்டம் அமைந்திருந்ததுடன், இதற்கு முரணான வகையில், அறிவிக்கப்பட்டிருந்த விளையாட்டு துறையுடன் தொடர்புபட்ட மோட்டார் வாகனங்களின் மீதான இறக்குமதி வரி தளர்த்தப்படும் எனும் முன்மொழிவு பலரையும் பல்வேறு கோணங்களில் சிந்திக்கச் செய்வதாக அமைந்திருந்தது.

இந்த ஒரு குறிப்பிட்ட விடயத்தை தவிர, ஏனைய விடயங்கள் பல்வேறு தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் மீதான வரி அதிகரிக்கப்படும் எனும் முன்மொழிவானது, பலரின் கண்டத்தை எதிர்கொண்டது, ஏனெனில் இலங்கையில் நாட்டின் மொத்த பாலுற்பத்தியை நிவர்த்தி செய்வதற்கான சூழ்நிலை உள்ளதா என்பதை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்துடன், எமது நாட்டுக்கும் போதியளவான பால்மாவை தயாரிப்பதற்கான நிலை இன்னமும் ஏற்படவில்லை. மேலும் இந்த வரி அதிகரிப்பின் காரணமாக வறிய நிலையில் காணப்படும் மக்கள் மேலும் ஏழ்மை நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் எழும்.

விவசாயத்துறைக்கு வழங்கப்படும் சலுகைகள், வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் போன்றன பெரிதும் வரவேற்கப்படுவதாக பொதுமக்களின் கருத்துக்கள் அமைந்திருந்தன.

அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 1500 ரூபா சம்பள அதிகரிப்பானது, பெரும்பாலான அரச துறை ஊழியர்களின் எதிர்பை பெற்றுள்ளது. நாட்டில் தற்போது காணப்படும் வாழ்க்கைச்செலவு உயர்வான சூழ்நிலையில், இந்த சம்பள அதிகரிப்பு எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என அவர்களின் கருத்து அமைந்துள்ளது.

பெருந்தோட்டத்துறையை பொறுத்தமட்டில், தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அரச நிவாரணங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும், பெருந்தோட்டக் கம்பனிகளின் மூலம் பயன்படுத்தப்படாமல் தரிசு நிலங்களாக காணப்படும் பகுதிகளில், எதிர்வரும் காலங்களில் இளைஞர்கள் மத்தியில் பகிரப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் வரவேற்கத்தக்க விடயங்களாக காணப்பட்ட போதிலும், இந்த விடயங்களில் அரசியல் தலையீடுகள் இருக்கக்கூடாது என்பதும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் வெளிபிரதேசத்தில் உள்வாங்கப்படக்கூடாது என்பதும் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டிருந்தன.

எனவே 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சாதகமான, பாதமான இரு அம்சங்களையும் கொண்ட ஒரு துறையாக அமைந்துள்ளதாக பொதுமக்களின் கருத்துக்கள் அமைந்துள்ளன.[/size]

http://tamil.dailymirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/52561-2012-11-12-09-48-04.html

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலா கொக்கா நாங்க முதலே சொல்லிடம்ல இது பெரும்பாலும் வரவேற்ப்பை பெரும் ஒரு budget என்று :D

[size=4]இந்த வரவு செலவு திட்டத்தை சாதாரண (சிங்கள) மக்கள் வரவேற்று இருப்பார்கள். அதில் ஆச்சரியம் இல்லை. காரணம், கவனமாக அவர்களை மகிழ்விக்க திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது. உதாரணத்திற்கு "இலவச பாதணிகள்". சகல எதிர்க்கட்சிகளும் எதிர்த்து உள்ளன. [/size][size=1]

[size=4]இதே வரவு செலவு திட்டத்தை பொருளியியல் நிபுணர்கள் எவ்வாறு பார்கிறார்கள் என்பதையும் பார்த்துதான் ஒரு முடிவிற்கு வரலாம். அந்த வகையில் இந்த வரவு செலவு திட்டமானது பெரிய வரவேற்பை பெறவில்லை. முக்கிய காரணம் அதிகரித்து செல்லும் துண்டு விழும் தொகை, ஒட்டு மொத்த கடன். [/size]

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வந்த நாட்டில தனக்கே வருத்தத்துக்கு டாகுத்தரிட்ட போக ஆளுக்குப் பயம் எண்டு எங்கயோ சொன்னவ. காட் கிடைக்காமல் போனால் காட் தராமல் விட்டிடிவாங்கலாம் . ஊரில எண்டா ஒரு துண்டில பெயர், வயது, பால் மூன்றையும் எழுதிபோட்டு தம்பி பொய் வாங்கிலில இருங்கோ எண்டு அனுப்பி விடுவாங்கள். இங்கிருக்கும் வைத்தியர்களுக்கு சில மருந்துகள் கொடுக்கவே பயம். நான் மோட்டார் சைக்கில் நெடுந்தோஒரம் ஓடிய பொழுது (கன்பரா - மெல்பேர்ன் - 850km) வெயிலிலே எனது கால் அவிந்து விட்டது. மிகப் பெரிய காயம். டாகுத்தரிட்டப் போனா அந்த மனிசன் கண்ணியப் போட்டுத் தட்டிபோட்டு எனைப் பார்த்து முளுசுது. நான் சொன்னான் அமோக்சிளின் 500mg நாளுக்கு மூண்டு தரம் சாப்பாட்டுக்குப் பிறகு எடுத்தா காயம் மாறீடும், துண்டு தாரீங்களா எண்டு (இங்கு மருத்துவரின் சிட்டை இன்றி அண்டிபயோடிக் வாங்க முடியாது). அந்தாள் ஒண்டுக்கும் உதவாத ஒரு பண்டேஜ வாங்கிக் கட்டச் சொல்லிச்சு. ரெண்டு நாள் பாத்துப்போட்டு இங்க ஆஸ்பத்திரியில வேலை செயிர ஒரு மலையாளி நண்பனிட்ட விசயத்த சொல்லி கொஞ்சம் அமோக்சளின் தேவை, சுட்டு தாறியா எண்டு கேட்டேன். அவனும் பாப்பம் எண்டு சொல்லி, அவனது இன்னொரு நண்பன் இந்தியாவில இருந்து கொண்டந்தது எண்டு சொல்லி 15 குளிசை தந்தான். போடத்துடங்கி மொஊடு நாளில காயம் காஞ்சு 5ஆவது நாளில தோலும் வளர தொடங்கீட்டுது. இவ இப்ப காலிண்ட படத்த காட்டு, ஆதாரம் தேவை எண்டு கேப்பினம் எண்டதால கையோட ஏன்டா கால் கிடந்த கோலத்தையும் இணைக்கிறன் . படத்தைப் பாத்து சத்தி எடுத்தால் நான் பொறுப்பு அல்ல.

29012011409.jpg

07022011423.jpg

07022011425.jpg

07022011426.jpg

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கண்ட உங்கள் பத்திரிக்கை செய்தியில் இணைக்கப்படிருப்பது பெரும்பாலான மக்கள் என்று அதுவும் தமிழ் மிரர் செய்திகள் நல்ல ஒரு பத்திரிக்கை......

அரசு கொண்டு வரும் எல்லாவற்றையும் எதிர்ப்பது தானே எதிர்க்கட்சி :D

மச்சி நீ இருக்கிற இடத்தில ஒரு மலேசியா தமிழ் வைத்தியர் இருக்கிறார் புத்தகத்த திறந்து வைச்சுத்தான் மருந்து பாப்பார் இதுவே இலங்கை வைத்தியர் எண்டா

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கண்ட உங்கள் பத்திரிக்கை செய்தியில் இணைக்கப்படிருப்பது பெரும்பாலான மக்கள் என்று அதுவும் தமிழ் மிரர் செய்திகள் நல்ல ஒரு பத்திரிக்கை......

அரசு கொண்டு வரும் எல்லாவற்றையும் எதிர்ப்பது தானே எதிர்க்கட்சி :D

மச்சி நீ இருக்கிற இடத்தில ஒரு மலேசியா தமிழ் வைத்தியர் இருக்கிறார் புத்தகத்த திறந்து வைச்சுத்தான் மருந்து பாப்பார் இதுவே இலங்கை வைத்தியர் எண்டா

அந்த பண்டேஜ தொடர்ந்து கட்டியிருந்தா எண்ட இடகாலக் கழட்டி வலக் கையில தந்திருபாங்கள் பாவி மக்கள் ஊரிலே ஒரு பல்சர் ஓடி விழுந்து எனது இடைகால் முழங்கால் எலும்பு வெளியிலே வெள்ளையாக தெரிந்தது. இரவு ஆறரைக்கு மந்திகைக்கு கொண்டு ஓட. அந்த நேர்ஸ் அக்கா பென்சிலினும் போட்டு மருந்தயும் கட்டிவிட்டா . ஒரு கிழமையில மீண்டும் பல்சர். எனது இடது கையிலும் நாய் குறுக்கே ஓடினதிலே தூக்கி எறியப்பட்டு மிகப்பெரிய தழும்பு ஒன்று இருக்கிறது. யாழ்ப்பான ஆஸ்பத்திரியில தான் எல்லாம் மாத்தி அனுப்பினவங்கள். எனக்கு இடது கை குறிந்த போதும் அதே மாதிரித்தான். உடனேயே xray பிடித்து, தியேட்டருக்கு எடுத்து வைத்தியம் செய்தார்கள்.

அக்கா, நீங்கள் விட்டது எழுத்துப் பிழை இல்லை, சொற்பிழை. Intensive, internship இரண்டுமே முற்றியும் வேறான சொற்கள். இதிலே எழுத்துப் பிழை என்ற கதைக்கே இடமில்லை. :icon_idea:

சரி ஆங்கிலத்தில் எழுத்துப்பிழை, சொற்பிழை, ஏன் வசன பிழையே எனக்கு வரும். எதிர்காலத்தில் திருத்திக்கொள்கிறேன். ஆனால் என்ன சொல்ல வந்தேன் என்று விளங்கிக்கொண்டீர்கள் தானே? அது போதும்.

அப்பிடியா நீங்க சொன்ன கரெக்டா தான் இருக்குமக்கா அப்பிடின்னு சொல்லத்தான் ஆசை ஆனா என்ன செய்ய உங்கள் மருத்துவ அரசியல் அறிவு தான் எங்களுக்கு ஏற்கனவே தெரியுமே :D

மருத்துவ, அரசியல் அறிவு மட்டுமா? ஏனைய அறிவுகளும் எனக்கு குறைவு தான். :icon_mrgreen: ஆனாலும் காலம் இருக்கு தானே... கொஞ்சம் கொஞ்சமா அறிவை வளர்த்துக்கொள்ளுவம்.

ஆனாலும் இப்படி பிழை பிழையா எழுதி உங்களிடம் குட்டுப்பட எனக்கு ஆசை. :icon_mrgreen: அப்ப தான் நான் பல விடயங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அடிக்கடி வரும். அதற்கான உங்கள் உதவிகளுக்கு நன்றி மச்சி... :icon_idea:

வந்த நாட்டில தனக்கே வருத்தத்துக்கு டாகுத்தரிட்ட போக ஆளுக்குப் பயம் எண்டு எங்கயோ சொன்னவ. காட் கிடைக்காமல் போனால் காட் தராமல் விட்டிடிவாங்கலாம் . ஊரில எண்டா ஒரு துண்டில பெயர், வயது, பால் மூன்றையும் எழுதிபோட்டு தம்பி பொய் வாங்கிலில இருங்கோ எண்டு அனுப்பி விடுவாங்கள். இங்கிருக்கும் வைத்தியர்களுக்கு சில மருந்துகள் கொடுக்கவே பயம்.

அடப்பாவி தும்பு அண்ணா, எனக்கு பயம் என்று யார் சொன்னது. இப்ப சில மாதங்களுக்கு முன்னம் தான் விசா accept பண்ணியிருக்கினம். visa cart க்கு இன்னும் apply பண்ணவில்லை. நான் வைத்தியரிடம் போனால் எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் பின்னர் அரசாங்கம் medical check up இற்கு அழைத்து அதற்கு நான் செல்லும்போது அந்த பதிவுகளை பார்ப்பார்கள். cart தருவதற்கு பிறகு தாமதமாகலாம். அதனால் ஏற்கனவே இந்த நாட்டில் உதவி இல்லாமல் இருக்கும் நான் பின்னர் cart கையில் கிடைப்பதற்கும் இழுபறி வந்து விட்டால் என்ன செய்வது என்பதால் தான் அவ்வாறு சொன்னேனே தவிர எனக்கு ஒரு பயமும் இல்லை. :)

பி.கு: சரி சுண்டு, தும்பு அண்ணாக்களா... வரவு செலவு பற்றி கதைக்கும் திரியில் இதெல்லாம் எதற்கு என்பதால் இதோட இத்திரியில் இருந்து விடைபெறுகிறேன். :)

Edited by துளசி

  • 2 weeks later...

விரைவில் கவிழும் மஹிந்தவின் அரசு - ரவி கருணாநாயக்க

ravikarunayakka.jpg

"முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க தானே ஆட்சியில் நீடித்து நிலைப்பேன் என்ற மமதையுடன் பேசினார். ஆனால் எதிர்பாராத நேரத்தில் அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதே போன்றுதான் இந்த அரசும் அதி விரைவில் கவிழும்'' என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணா நாயக்க கூறினார்.

நாடாளுமன்றம் நேற்று சனிக்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் நடைபெற்றது.

ரவி கருணாநாயக்க விவாதத்தை ஆரம்பித்து பேசும் போது மேலும் கூறியதாவது:

ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்டம் சினிமாபடம் பார்ப்பது போன்ற மாயையை ஏற்படுத்தி உள்ளது. மூன்று மணி நேரத்தில் படம் முடிந்த பின் அங்கு எதுவுமே இருக்காது. அப்படித் தான் இந்த வரவு செலவுத் திட்டமும்.

12 இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதாக போக்கு காட்டி உள்ள ஜனாதிபதி 70 லட்சம் தனியார் துறை ஊழியர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை. தனியார் துறையினரே நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டிக் காக்கின்றனர் என்பதை மறந்துவிட்டனர்.

பொது மக்களுக்கு எந்தவிதமான நிவாரணமும் இல்லை. மாறாக சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பத்து ரூபாவை கொடுத்துவிட்டு 90 ரூபாவைத் தட்டிப்பறித்துள்ளது. முன்பு முப்பது ரூபாக இருந்த தண்ணீர் கட்டணம் 120 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 78 வீத அதிகரிப்பாகும்.

வெளிநாட்டு முதலீடுகள் என்ற பெயரில் பல ஒப்பந்தங்கள் முறையற்ற வகையில் செய்துகொள்ளப்பட்டுள்ளன. மதிப்பீடுகள் குறைக்கப்பட்டு நேர்மையற்ற வகையில் நியமித்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் நாம் ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும்.

"திவிநெகும' சட்டவரைவு நடைமுறைக்கு வந்தால் எதிர்க்கட்சி அழித்துவிடும் என்று அரச தரப்பில் கூறுகின்றனர். தாமே ஆட்சியில் நிரந்தரமாக இருக்கப்போகின்றோம் என்று கருதுகின்றனர். இப்படித்தான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் இறுமாப்புடன் பேசினார்.

அவருக்குத் தெரியாமலே அவரது ஆட்சி கவிழ்ந்தது. அதி விரைவில் இந்த அரசுக்கும் அந்த நிலை ஏற்படும். நாடெங்கிலும் 666க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆடைத் தொழிற்சாலைகளில் ஊழியர்களுக்குக் கூடுதலான வேலை, குறைந்த சம்பளம் என்பதே வீழ்ச்சிக்கான காரணம்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் கமரனும் மியான்மாருக்கு முதலீட்டாளர்களுடன் செல்கின்றனர். அப்படி இங்கும் முதலீட்டாளர்கள் வர வேண்டும். அரசுகள் மாறலாம். ஆனால் பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் இருக்கக் கூடாது என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=253421641525108499

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.