Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொடுப்பவர்களெல்லாம் கோமாளிகல்ல......................

Featured Replies

காலங்கள் மாறினாலும் சில மனிதர்கள் மாறுவதில்லை. அந்த அடிப்படையில் மாறாத மனிதர்களை, கொடுப்பவர்கள் வாங்குபவர்கள் என இருவகைப்படுத்தலாம். கொடுப்பவர்களை, புண்ணியத்துக்காகக் கொடுப்பவர்கள் மனிதாபிமானம் கருதிக் கொடுப்பவர்கள். என இருவகைப்படுத்தலாம்.

pegan.jpg

வாங்குபவர்களையும், வேறு வழியில்லாமல் வாங்குபவர்கள் வாங்குவதையே வழியாக எண்ணி வாழ்பவர்கள் என இருவகைப்படுத்தலாம்.

வாங்குவோரில் சிலர் நினைத்துக்கொள்ளலாம்.. இப்படி அள்ளி அள்ளிக்கொடுத்தால் கடைசியாக நம்மைப்போலத்தான் இரவலராக போவார். இவர் ஒரு ஏமாளி,

இவர் ஒரு கோமாளி என்று கூட எண்ணிக்கொள்ளலாம். இருந்தாலும் இவர்களுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

பேகன் என்றொரு வள்ளல். ஆம் மயிலுக்காகப் போர்வை கொடுத்தானே அதே வள்ளல்தான்..

சிலர் நினைக்கலாம் மயிலுக்கு ஏன் இவர் போர்வைகொடுத்தார்?. அது பேகனின் அறியாமையல்லவா? என்று. உயிர்கள் மீது பேகன் கொண்ட அன்பின் அடையாளமது.

அதற்குப் பெயர் கொடை மடம்.

அந்த பேகனிடம் பரிசில் பெற்று வந்த பாணன் ஒருவன் பரிசில் பெறக்காத்திருக்கும் பாணனிடம் பேகனின் கொடைத்திறனை எடுத்துரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

பரிசில் பெற்ற பாணன் சொல்கிறான், கொடுத்தால் புண்ணியம் என்று மறுமையை எண்ணியெல்லாம் பேகன் இரவலர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கவில்லை அவர்களின் வறுமையை எண்ணித்தான் வழங்குகிறான் என்கிறான்.

கோமாளியாகக் கூட நடிக்கலாம்

ஏமாளியாக மட்டும் இருக்கக் கூடாது

என்றொரு பொன்மொழி உண்டு. இந்த பேகன்

ஏமாளியா? கோமாளியா?என்றால் இவன் மனிதன் என்றே அறிவுடையோர் கூறுவோர்.

பாடல் இதுதான்...

பாணன் சூடிய பசும்பொற் றாமரை

மாணிழை விறலி மாலையொடு விளங்கக்

கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ

ஊரீர் போலச் சுரத்திடை யிருந்தனிர்

யாரீ ரோவென வினவ லானாக்

காரெ னொக்கற் கடும்பசி யிரலவ

வென்வே லண்ணற் காணா வூங்கே

நின்னினும் புல்லியே மன்னே யினியே

இன்னே மாயினே மன்னே யென்றும்

உடாஅ போரா வாகுத லறிந்தும்

படாஅ மஞ்ஞைக் கீத்த வெங்கோ

கடாஅ யானைக் கலிமான் பேகன்

எத்துணை யாயினு மீத்த னன்றென

மறுமை நோக்கின்றோ வன்றே

பிறர், வறுமை நோக்கின்றவன் கைவண்மையே.

புறநானூறு (141)

பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையுமாம்.

வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.

பேகனிடத்தில் பரிசு பெற்ற பாணன் ஒருவன், வழியில் எதிர்ப்பட்ட மற்றொரு பாணனிடம் பேகனின் கொடைச் சிறப்பைக் கூறி, அவனிடம் பரிசில் பெற்றுவர வழிப்படுத்தினான்.

பேகனின் புகழைப் பாராட்டுகின்றவன், தம்மையும் பாணனாகக் காட்டிக்கொள்வதோடு, பாணன் சூடிய தாமரைப் மலரையும், விறலி அணிந்த பொன்னரி மாலையையும் சுட்டிக்காட்டி இந்த சுரத்திலும் ஊரிலிருப்பதுபோல மகிழ்வோடு இளைப்பாறி இருக்கும் நீங்கள் யார்? எங்களைப் பார்த்துக் கேட்ட வறுமையுடைய சுற்றத்தையும், மிகுந்த பசியையும் உடைய இரவலனே!

வென்றிவேலுடைய பேகனைக் காண்பதற்குமுன் நாங்களும் உங்களைவிட வறுமையுடையவர்களாகவே இருந்தோம். இப்போது அந்த வறுமையெல்லாம் நீங்கி வளமாயினோம். மதமிக்க யானையும், மனம் செருக்கிய குதிரையும் உடையவன் பேகன். உதவாது என்று தெரிந்தும் உயிர்கள் மீது தான் கொண்ட இரகத்தால் மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தவனான பேகன் தன்னை நாடிவருவோருக்கெல்லாம் அளவில்லாது கொடை வழங்குவது, மறுமைப் பயன் (புண்ணியம்) நோக்கியல்ல - பிறரது

வறுமைத் துன்பத்தைப் போக்குவதை மட்டும் நோக்கியது.

பாடல் வழியே..

  1. சங்ககாலத்தில் வள்ளல்கள் தம்மை நாடிவரும் கலைஞர்களுக்கு வழங்கும் பரிசில்களுள், பாணனுக்குத் தாமரை மலர் தருவதும், விறலிக்குப் பொன்னரி மாலை தருவதும் மரபாக இருந்தது என்ற கருத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

  2. பேகன் மயிலுக்குப் போர்வை தந்தவன் என்ற செய்தி சுட்டிக்காட்டப்படுகிறது.

  3. மயில்போன்ற உயிரினங்களிடம் பேகன் கொண்ட சீவகாருண்யம் (உயிரிரக்கம்), மனிதர்கள் மீதுகொண்ட மனிதாபிமானம் ஆகிய பண்புகள் இன்றைய தலைமுறையினரும் கற்றுக்கொள்ளவேண்டிய சிறந்த பண்புகளாக அமைகின்றன.

http://www.gunathami...-post_6850.html

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி இணைப்புக்கு..

டிஸ்கி:-

வர வர நீங்கள் ஏமாத்துறிங்கள், சொந்தப்படைப்பு என்று பார்த்தால் கீழே வேறு இணைப்பு இருக்கு.. :rolleyes:

146,000 மக்கள் உண்ண வழியின்றி, உடுக்க படுக்க இடமின்றி, தலைக்கு மேலே திறந்த வானத்திலிருந்து வந்த வெயிலோடும், மழையோடும் சேர்ந்து வந்த குண்டுகளால் அழிந்துபட்டதை நேரில் அனுபவப்பட்ட நமக்கு கொடுப்பது என்றால் என்ன என்று தெரியும் ஆனால் கொடுப்பதில் நம்பிக்கை இல்லை.

அதே நேரம் செல்வ செழிப்பில் சங்க காலத்தில் திளைத்திருந்த தமிழ் அரசர்களுக்கு கொள்வோர் இல்லையால் கொடுப்பதை பற்றிய விளக்கம் சரியாக இருந்ததில்லை. எனவே ஒரு மன்னன், மயிலை போர்த்தான், இன்னொருவன் முல்லைக்கு தான் பயணித்த சித்திர தேரை அளித்தான் என்றால் சிரிப்புத்தான் வருகிறது.

காலம் எதுவாக இருந்தாலும் அன்பு உள்ளங்களையும், இளகிய மனங்களையும் கடவுள் அவ்வப்போது படைக்க தவறியதில்லை. இந்த நிழ்வுகள் அவர்கள் தங்களின் மனங்களை வெளிக்காட்டிய சந்தர்பங்களே அல்லாமல் சட்டப்புத்தங்களில் இனிமேல் மக்கள் எல்லோரும் எந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ஏற்படுத்தப்பட்ட உதாரணங்கள் அல்ல. மாறாக மக்கள் எப்படி பெரிய மனங்களுடன் மக்களாக வாழலாம் என்று காட்டிவைக்க வந்த உதாரணங்களே. தனிய இலக்கியமாக படித்து இரசித்துவிட்டு போய்விடாமல் மனத்தையும் பண் படுத்த பயன் படுத்த வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

உதவாது என்று தெரிந்தும் உயிர்கள் மீது தான் கொண்ட இரகத்தால் மயிலுக்குப் போர்வையைக் கொடுத்தவனான பேகன் தன்னை நாடிவருவோருக்கெல்லாம் அளவில்லாது கொடை வழங்குவது, மறுமைப் பயன் (புண்ணியம்) நோக்கியல்ல - பிறரது

வறுமைத் துன்பத்தைப் போக்குவதை மட்டும் நோக்கியது.

இந்தப் பதிவு சொல்லவிழைகின்ற செய்தியும் , நீங்கள் சொல்கின்ற கருத்துக்கும் அதிக வித்தியாசங்களை நான் காணவில்லை . இப்படிப்பட்ட பேகன்களினது ஆக்கிரமிப்பு குறைவாகவே இருக்கிறது . ஈகைக்கு என்றே வள்ளுவர் தனி அதிகாரத்தையே திறந்தார் . எனது பார்வையில் அன்னை திரேசாவையும் ஒரு பேகனாகவே காண்கின்றேன் . வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மல்லையூரான் .

  • தொடங்கியவர்

நன்றி இணைப்புக்கு..

டிஸ்கி:-

வர வர நீங்கள் ஏமாத்துறிங்கள், சொந்தப்படைப்பு என்று பார்த்தால் கீழே வேறு இணைப்பு இருக்கு.. :rolleyes:

வெட்டி ஒட்டுவதில் எனக்கும் உடன்பாடில்லைத்தான் . என்னால் முடிந்த அளவில் சுய ஆக்கங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றேன் . எனது சுய ஆக்கங்கள் மட்டும் யாழின் இதயத்துடிப்பை சீர் செய்யுமா என்ன ?? உங்கள் வரவிற்கும் ஆக்கபூர்வமான கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஜீவா :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

கொடுப்பதில் இன்னும் இரண்டு மூன்று வகைகள் உண்டல்லோ கோமகன்.இரக்கமும் இல்லாது அன்பும் இல்லாது தான் மதிக்கப் பட வேண்டும், தன்னை பலர் முன் முன்னிலைப் படுத்த வேண்டும் என எண்ணுபவர் கூட கொடுப்பார்கள். தாம் செய்யும் தில்லுமுல்லுகளுக்கு பரிகாரமாகவும் கொடுப்பவரும் உண்டுதானே.

நான் கற்பிக்கும் போது ஒரு மாணவன் கேட்டான். பாரி மன்னன் தன் காவலர்களைக் கூப்பிட்டால் அவர்கள் செய்துவிடுவார் தானே என்று. உண்மை அதுதான். அளவுக்கதிக அன்பின் காரணமாகத் தன் படை பலத்தைப் பெருக்காது தன் நாட்டையும் இழந்து இரு மக்களையும் நடுத்தெருவில் விட்டதுதான் மிச்சம்.

உங்களுடை கருத்திற்கு எனது பதில் இதுதான் சுமே ..........

வறியார்க்குஒன்று ஈவதே ஈகை; மற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து. 221

வறியவர்களுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படும் . பிறருக்குக் கொடுப்பதெல்லம் பயனை எதிர்பார்த்துத் தருவதாகும் .

எனது கருத்து:

சந்தனம் மிஞ்சினவைக்கு ஒண்டை எதிர்பாத்து குடுக்கிறதுக்கு பேர் வந்து ஈகை இல்லை ஒண்டையுமே எதிர்பாக்காமல்.வாழ்கையில கஸ்ரப்பட்ட ஏழைபாழையளுக்குக் குடுக்கிறதுக்குப் பேர்தான் ஈகை இதை சிலபேர் இந்த்க் காலத்தில செய்யினம் ஆனால் காணாது.

Call that a gift to needy men thou dost dispense,

All else is void of good, seeking for recompense.

Donner aux pauvres, c’est faire la charité; il est de a nature de tous les autres dons de n’être faits qu’en vue d’un profit, que l’on en attend dans la suite.

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் :) :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.