Jump to content

உலக கோப்பை கால்பந்து 2006


Recommended Posts

பதியப்பட்டது

உலகக் கிண்ண உதைபந்தாட்ட வரலாறு

உருகுவே - 1930

சர்வதேச ரீதியில் உலகில் நடத்தப்பட்டு வரும் விளையாட்டுப் போட்டிகளில் முதன்மை விளையாட்டாகக் கணிக்கப்படுவது உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிதான். உலகம் முழுவதிலும், கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் ரசித்துப் பார்க்கும் ஒரு விளையாட்டு உதைபந்தாட்டப் போட்டி தான். 4 வருடங்களுக்கு ஒரு தடவை நடைபெறும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதன் முதலில், இலத்தின் அமெரிக்க நாடான உருகுவேயில் தான் 1930 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் உருகுவே அணியும், அயல் நாடான ஆர்ஜென்ரீனா அணியும் போட்டியிட்டன. 20,000 ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற போட்டியில் உருகுவே அணி 4-2 கோல்கள் வித்தியாசத்தினால் வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இத்தாலி - 1934 2 ஆவது உலகக் கிண்ணப் போட்டி இத்தாலியில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி, செக்கஸ்லோவாக்கிய அணியை 2-1 கோல்களினால் தோற்கடித்து, முதல் தடவையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

பிரான்ஸ் - 1938

3 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1938 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்றது. இப்போட்டியில், கால்இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி எதிர்பாராத விதமாக இத்தாலி அணியிடம் தோல்வி அடைந்ததினால் இறுதி ஆட்டத்தில் பங்குபற்றும் வாய்ப்பை இழந்தது.

33 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி, ஹங்கேரி அணியை 4-2 கோல்களினால் வெற்றி பெற்று தொடர்ந்து 2 ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

பிரேசில் - 1950

4 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1950 ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்றது. கிட்டத்தட்ட ஒரு இலட்சம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியே வெற்றி பெறும் என்று பெரும்பாலானோர் எதிர்பார்த்த போதிலும் உருகுவே அணி கடும் போட்டியின் பின்பு 2-1 கோல்களினால் பிரேசில் அணியை தோற்கடித்து 2 ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

சுவிற்சர்லாந்து - 1954

5 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1954 ஆம் ஆண்டு, சுவிற்சர்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தான் முதன் முதலில் மொத்தம் 16 நாடுகளின் அணிகள் பங்குபற்றின.

இதன் இறுதி ஆட்டத்தில் மே.ஜேர்மனி அணி ஹங்கேரி அணியை 3-2 கோல்களினால் வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

சுவீடன் - 1958

6 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1958 ஆம் ஆண்டு சுவீடனில் நடைபெற்றது. இந்த ஆண்டு தான் உலகப் புகழ்பெற்ற பிரேசில் வீரர் பீலே முதன் முதலில் தனது 17 ஆவது வயதில் பிரேசில் அணியில் அங்கம் வகித்து விளையாடினார்.

இதன் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி சுவீடன் அணியை 5-2 கோல்களினால் வெற்றி பெற்று, முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

சிலி - 1962

7 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1962 ஆம் ஆண்டு, இலத்தின் அமெரிக்க நாடான சிலி நாட்டில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி செக்கஸ்லோவாக்கியா அணியை 3-1 கோல்களினால் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2 ஆவது தடவையாக கிண்ணத்தைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து - 1966

8 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1966 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணி மே.ஜேர்மனி அணியை 1-0 கோல்களினால் வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

மெக்ஸிக்கோ - 1970

9 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1970 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி இத்தாலி அணியை 4-1 கோல்களினால் வெற்றி பெற்று 3 ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்த இறுதி ஆட்டத்தில் தான், பிரேசில் வீரர் பீலே 3 கோல்களை அடித்து சிறந்த வீரருக்காக முதன் முறை வழங்கப்பட்ட தங்கப் பாதணியையும் பரிசாகப் பெற்றார். மே.ஜேர்மனி - 1974

10 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1974 ஆம் ஆண்டு மே.ஜேர்மனியில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் மே.ஜேர்மன் அணி நெதர்லாந்து அணியை 2-1 கோல்களினால் வெற்றி பெற்று 2 ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது.

நடைபெற்று முடிந்த 9 ஆவது உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரேசில் அணி 3 தடவைகள் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியதனால் அப்போதைய சம்பியன் உலகக் கிண்ணம், பிரேசில் அணிக்கே சொந்தமானது.

10 ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் தான் தற்போதைய புதிய சம்பியன் கிண்ணம் உருவாக்கப்பட்டது. இப்புதிய சம்பியன் கிண்ணத்தை முதன் முதலில் கைப்பற்றிய பெருமை மே.ஜேர்மனிக்கே உரித்தாகும்.

ஆர்ஜென்ரீனா - 1978

11 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1978 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனாவில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்ரீனா அணி, நெதர்லாந்து அணியை 3-1 கோல்களினால் வெற்றி பெற்று முதல்தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

ஸ்பெயின் - 1982

12 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1982 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடைபெற்றது. இந்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் முதன் முதலில் 24 நாடுகளின் அணிகள் பங்கு பற்றியதும் குறிப்பிடத்தக்கது

இதன் இறுதி ஆட்டத்தில் இத்தாலி அணி மே.ஜேர்மனி அணியை 3-1 கோல்களினால் வெற்றி பெற்று 3 ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

மெக்ஸிக்கோ-1986

13 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1986 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்ரீனா அணி மே.ஜேர்மனி அணியை 3-2 கோல்களினால் வெற்றி பெற்று 2 ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இந்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் ஆர்ஜென்ரீனா அணிக்கு தலைமைதாங்கிய சர்வதேசப் புகழ்பெற்ற வீரர் மரடோனா சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டு தங்கப் பாதணியைப் பரிசாகவும் பெற்றார்.

இத்தாலி-1990

14 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1990 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்றது. இதன் இறுதி ஆட்டத்தில் ஜேர்மனி அணி, ஆர்ஜென்ரீனா அணியை 1-0 கோல்களினால் வெற்றி பெற்று, 3 ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இப் போட்டியில் ஜேர்மன் அணியின் தலைவர் பக்கமோர் சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டார்.

அமெரிக்கா-1994

15 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்றது. இப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில், இத்தாலி அணிகள் போட்டியிட்டன. வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்காக வழங்கப்பட்ட 5 பெனால்டி உதைகளில் பிரேசில் அணி 3-2 கோல்கள் வித்தியாசத்தினால் வெற்றி பெற்று 4 ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

இத்தாலி அணியின் உலகப் புகழ் பெற்ற வீரர் பக்கியோ, மேற்படி பெனாட்டி உதையை கோல் கம்பத்துக்கு மேலாக அடித்ததினாலேயே, இத்தாலி அணி தோல்வி அடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.

பிரான்ஸ்-1998

16 ஆவது உலகக் கிண்ணப் போட்டி 1998 ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்றது. இந்த உலகக் கிண்ணப் போட்டியில் தான், முதன் முதலில் 32 நாடுகளின் அணிகள் பங்கு பற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

இப்போட்டியின் ஆரம்ப சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து ருமேனியா ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பெக்கம், முறை தவறி விளையாடியதினால் ்சிவப்பு காட்ீ காட்டி மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதன் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி,நடப்புச் சாம்பியனான பிரேசில் அணியை 3-0 கோல்களினால் தோற்கடித்து, முதல் தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.

கொரியா-ஜப்பான்-2002

17 ஆவது உலகக் கிண்ணப் போட்டியை 2002 ஆம் ஆண்டு கொரியாவும் ஜப்பானும் கூட்டாக நடாத்தியது. உலக கிண்ணப் போட்டி ஒன்று ஆசிய கண்டத்தில் நடாத்தப்பட்டது இதுதான் முதல் தடவை.

இதன் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி, ஜேர்மன் அணியை 2-0 கோல்களினால் வெற்றி பெற்று 5 ஆவது தடவையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது.

www.dinakural.com

  • Replies 618
  • Created
  • Last Reply
Posted

ஆசிய அணிகள் அசத்துமா? 2 ஆவது சுற்றுக்காவது முன்னேற முயற்சி

ஜேர்மனியில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள 2006 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் ஆசிய அணிகள் முதல் சுற்றில் வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறுமா?

2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சாதனை படைத்த ஆசிய அணிகளால் மீண்டும் அந்த சாதனையை 2006 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்துப் போட்டியில் தொடரமுடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

ஜப்பானும், தென் கொரியாவும் இணைந்து 2006 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியை நடத்தின. மேற்படி இரண்டு அணிகளும் உள்நாட்டு ரசிகர்கள் முன்பு அபாரமாக ஆடின. தென் கொரிய அணி அரை இறுதிக்குத் தகுதி பெற்றதன் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதேபோல் ஜப்பான் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தது. கடந்த உலகக்கிண்ணத்தில் அரை இறுதிக்கு சென்றதன் மூலம், இந்தச் சாதனையைப் புரிந்த முதல் ஆசிய அணி என்ற பெருமையை தென்கொரியா பெற்றது. இதற்கு முன் 1966 ஆம் வருடம் வட கொரியா கால் இறுதிக்கு சென்றதே சாதனையாக இருந்து வந்தது.

கடந்த நான்கு வருடங்களில் ஆசிய கால்பந்து நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து லீக் போட்டியில் தற்போது ஆசியாவைவச் சேர்ந்த வீரர்கள் பலர் விளையாடி, அனுபவம் பெற்ற போதிலும் கடந்த உலகக் கிண்ணப் போட்டி சாதனையை ஆசிய அணிகள் தொடர்வது சந்தேகம் தான்.

ஆனால் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உலகக் கிண்ணப் போட்டியில் ஆசிய அணிகள் பங்கேற்பதால் ஏதாவது ஓர் அணி முக்கிய போட்டிக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது. ஆசிய அணிகளுடன் அவுஸ்திரேலிய அணியும் இந்தப் பட்டியலில் சேர்கிறது.

32 வருடங்களுக்குப்பின் அவுஸ்திரேலிய அணி முதன் முறையாக உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் முக்கிய போட்டியான லீக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. எனவே. இந்த உலகக் கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முடிந்த வரை போராடும்.

ஆசிய கால்பந்துச் சங்கத்தின் சார்பில், ஜப்பான், தென்கொரிய, ஈரான், சவுதி அரேபியா ஆகிய அணிகள் 2006 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கால்பந்துப் போட்டியில் தங்களது கொடிகளை பறக்கவிடவிருக்கின்றன என்பது நினைவு கூரத்தக்கது.

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் முதல் சுற்றில் தென்கொரியா அணி அபாரமாக ஆடி ஆச்சரியத்தை அளிக்கும் என்கிறார் அந்த அணியின் பயிற்சியாளரான டிக் அட்வகேட். இதே பிரிவில் டோகோ, சுவிற்சர்லாந்து, மற்றும் 1998 ஆம் ஆண்டு சம்பியன் பிரான்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கவிருக்கின்றன.

தென் கொரிய அணியில் 2002 ஆம் ஆண்டின் நட்சத்திர வீரரான பார்க் ஜீ சுங், லீ யங் பியோ, சாய் ஜின் செயுல் மற்றும் ஆன் ஜங் ஹிவான் ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்களும், பார்க் சு யங் போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ஜப்பான் இடம்பெற்றுள்ள பிரிவில் அவுஸ்திரேலியா,பிரேசில் மற்றும் குரோசிய அணிகள் இடம்பெற்றுள்ளன. எனவே இந்தப் பிரிவில் ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் 2 ஆவது சுற்றுக்குத் தகுதி பெறுமா என்பது சந்தேகமே? மூன்று முறை ஆசிய சாம்பியன் வென்ற ஜப்பான் அணிக்குப் பிரேசிலின் முன்னாள் நட்சத்திர வீரரான ஜிக்கோ பயிற்சி அளித்து வருகிறார்.

சவூதி அரேபியா சாதிக்குமா?

ஜேர்மனியி உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி தொடங்கவுள்ள நிலையில் அதற்கான மோகம் பல மடங்கு அதிகரித்துள்ளது. அணிகள் பற்றிய கணிப்புகள், வீரர்கள் பற்றிய விபரங்கள், பயிற்சியாளர்கள் பற்றிய ஆய்வுகள் என நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே போகிறது.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் பற்றிய எதிர்பார்ப்பு எந்த அளவு முக்கியத்தவம் பெறுகிறதோ அதே அளவு ஆசிய அணிகளும் பெற்றுள்ளன என்பதை மறுக்க முடியாது.

ஜப்பான் மற்றும் தென்கொரிய அணிகள் முக்கியத்துவம் பெற்றிருப்பது போல சவூதி அரேபிய அணியும் மிகுந்த எதிர்ப்பார்ப்பைப் பெற்றுள்ளது.

அந்த அணி தொடர்ந்து நான்காவது முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

அனுபவசாலிகள் அதிகமானோரைக் கொண்ட அணி என்ற பெருமை சவூதி அரேபியாவுக்கு உண்டு. ஆனாலும் 2002 ஆம் ஆண்டுப் போட்டியில் முதல் சுற்றியலேயே 0 - 8 என்ற கோல் கணக்கில் கமரூன் அணியிடமும், 0 - 3 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியிடமும் தோல்வியைத் தழுவியது.

1994 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் சவூதி அணியின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. இரண்டாம் கட்டத்துக்கு முன்னேறி திறமையை வெளிப்படுத்தியது.

2002 இல் ஜேர்மனியுடன் சவூதிக்கு ஏற்பட்ட படுதோல்வி, அரபு நாடுகள் முழுவதும் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இம்முறை டுனீஷியாவும், சவூதி அரேபியாவும் ஒரே பிரிவில் இருக்கின்றன. இந்நிலையில் சவூதி அணியைப் பற்றி ஆய்வு செய்ய டுனீஷிய உளவாளிகள் சவூதி அரேபியாவில் இறங்கியுள்ளதாக அரேபிய பத்திரிகைகள் வெளியிட்டுள்ள செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

12 ஆண்டுகளுக்கு முன் அணியில் இடம்பெற்ற மூத்த ஆட்டக்காரர்கள் கப்டன் சமி அல் ஜாபர் மற்றம் கோல்கீப்பர் முகமது தியே ஆகியோர் இம்முறை இடம்பெற்றுள்ளனர். முகமது தியே மிகச் சிறந்த வீரர். சவூதி ரசிகர்களின் நட்சத்திர நாயகனாகத் திகழ்பவர்.

அணியின் இளம் புது முகங்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.`மிட் பீல்ட்' என்று சொல்லக்கூடிய மையப் பகுதி ஆட்டக்காரராக அல்ஹிலாலைச் சேர்ந்த முகமது அல் சல்ஹோப், எகிப்து அணிக்கு விளையாடிய முகமது நூர் மற்றம் அல் ஹிலால் முன்கள ஆட்டக்காரர் யாசர் அல் குவதனி போன்றோர் ஆசியாவில் நடைபெறும் போட்டியகளில் உயர்ந்துவரும் நட்சத்திரங்கள்.

சவூதி அரேபிய அணியின் எதிர்பார்ப்பு முழுவதும் அல்ஹிலால் அணியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பயிற்சியாளர் பக்கியூட்டா மீதுதான் கடந்த டிசம்பரில்தான் சவூதி அணிக்கு பயிற்சியாளராக இவர் நியமிக்கப்பட்டார்.

ஆனால் பக்கியூட்டா மீது ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அணி இறுதிப்போட்டியை எட்டும் தருணத்தில் அவரை விலக்கிவிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் போலந்து. போர்த்துக்கல் ஆகியவற்றுடன் சவூதிக்கு ஏற்பட்ட தோல்வி மற்றம் ஈராக்குடன் சமன் செய்தது பக்கியூட்டா மீது மதிப்பை பெரிய அளவில் வரவழைக்கவில்லை.

இதற்கிடையே சவூதி அரேபியாவில் அணிகள் இல்லாததைப் பெரிய குறையாகத் தெரிவிக்கிறார் பக்கியூட்டா. அணிகளில் விளையாடும் போது கிடைக்கும் பயிற்சியே தனி என்கிறார் அவர்.

-தினக்குரல்

Posted

தேடித் தந்த தகவல்கள் பயன்..! நன்றிகள்..! தொடர்ந்து உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டம் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்குங்கள்..! :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[cஒலொர்=ரெட்]உலகக் கோப்பையில் இதுவரை..[/cஒலொர்]

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது. இதுவரை 17 உலகக் கிண்ணப் போட்டிகள் நடந்துள்ளன. இந்தப் போட்டிகள் எங்கு, எப்பொழுது நடந்தது என்ற விபரம் வருமாறு :

ஆண்டு, இடம், சம்பியன், கோல், 2 ஆவது இடம், 3 ஆவது இடம் என்ற ரீதியில்

1930, உருகுவே, உருகுவே,4௨, ஆர்ஜன்ரீனா, அமெரிக்கா, யூகோஸ்லாவியா 1934, இத்தாலி, இத்தாலி, 2௧, செக்கோஸ்லாவாக்கியா, ஜேர்மனி 1938, பிரான்ஸ், இத்தாலி, 4௨ ஹங்கேரி, பிரேசில் 1950, பிரேசில், உருகுவே,2௧, பிரேசில், சுவீடன் 1954, சுவிற்சர்லாந்து, மேற்கு ஜேர்மனி, 3௨, ஹங்கேரி, ஆஸ்திரியா 1958, சுவீடன், பிரேசில்,5௨, சுவீடன்,பிரான்ஸ் 1962, சிலி, பிரேசில், 3௧, செக்கோஸ்லாவாக்கியா, சிலி 1966, இங்கிலாந்து, இங்கிலாந்து,4௨, மேற்கு ஜேர்மனி, போர்த்துக் கல் 1970, மெக்சிகோ, பிரேசில்,4௧, இத்தாலி, மேற்கு ஜேர்மனி 1974, மேற்கு ஜேர்மனி,மேற்கு ஜேர்மனி, 2௧, ஹொலன்ட், போலந்து 1978, ஆர்ஜன்ரீனா, ஆர்ஜன்ரீனா, 3௧, ஹொலன்ட், பிரேசில் 1982, ஸ்பெயின், இத்தாலி, 3௧, மேற்கு ஜேர்மனி, போலந்து 1986, மெக்சிகோ, ஆர்ஜன்ரீனா,3௨, மேற்கு ஜேர்மனி, பிரான்ஸ் 1990, இத்தாலி மேற்கு ஜேர்மனி, 1-0, ஆர்ஜன்ரீனா, இத்தாலி 1994, அ மெரிக்கா, பிரேசில், 3௨, இத்தாலி, சுவீடன் 1998, பிரான்ஸ், பிரான்ஸ், 3-0, பிரேசில், குரோஷியா 2002, தென்கொரியா மற்றும் ஜப்பான், பிரேசில், 2-0, ஜேர்மனி, துருக்கி 2006 ஜேர்மனி ?????

யாழ்கள நேயர்களின் உலகக்கிண்ணப்போட்டியில் நீங்களும் கலந்து கொள்ள போட்டிகள் பகுதிக்கு சென்று பதில் அளியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து கைப்பற்றும் அணிவீரர்கள் இளவரசரிடம் உறுதியளிப்பு

உலகக் கிண்ணத்தை வெல்வோம் என்று இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்கள் இளவரசர் வில்லியமிடம் உறுதியளித்துள்ளனர்.

18 ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டி ஜேர்மனியில் 9 ஆம் திகதி தொடங்குகிறது.

32 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் பிரேசில், இத்தாலி, ஆர்ஜென்ரீனா அணிகளுக்கு அடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கிறது.

1966 ஆம் ஆண்டில் உலக கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணி அதன் பிறகு உலக கிண்ணத்தை வெல்லவில்லை. கடந்த முறை (2002) அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி காலிறுதியாட்டத்தில் பிரேசிலிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

இந்த முறை இங்கிலாந்து அணி, நட்சத்திர வீரர் டேவிட் பெக்காம் தலைமையில் களமிறங்குகிறது. இங்கிலாந்து அணி ்பிீ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் சுவீடன், ரினிடாட், பராகுவே ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக கோரன் எரிக்சன் இருக்கிறார். இவர் சுவீடனைச் சேர்ந்தவர். தொடக்க சுற்று ஆட்டத்திலேயே தனது சொந்த நாட்டுக்கு எதிராக இங்கிலாந்து அணிக்கு பயிற்சியளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இளவரசர் வாழ்த்து

இங்கிலாந்து அணி இந்தப் போட்டிக்காக தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறது. அணி வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இங்கிலாந்து நாட்டு இளவரசரும் அந்த நாட்டு கால்பந்து சங்க தலைவருமான வில்லியம், மான்செஸ்டரில் பயிற்சியில் ஈடுபட்ட இங்கிலாந்து அணி வீரர்களை நேரில் சந்தித்தார்.

அவர் ரூனி உட்பட அனைத்து வீரர்களையும் நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிலாந்து அணிக்கு பின்னால் நான் முழுமையாக இருப்பேன். அதுபோல் எமது நாட்டு மக்களும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா என்பது குறித்து இப்போது தெளிவாகக் கூற முடியாது. சிறு அச்சம் தரும் நிலை தான் உள்ளது. உலக கிண்ணத்தை நாட்டுக்கு வென்று கொடுப்போம் என்று இங்கிலாந்து அணி வீரர்கள் என்னிடம் உறுதியளித்தனர்.

உலகக் கிண்ணப் போட்டி நெருங்கும் இந்த தருணத்தில் அனைத்து நாட்டு மக்களின் எண்ணமும் அதனைப் பற்றி தான் இருக்கிறது. இங்கிலாந்து அணியின் வெற்றியை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்து மக்கள் அனைவரும் அணிக்கு கடைசிவரை ஆதரவளிப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

1 பிரேசில் 5 தடவையும் ஜேர்மனி இத்தாலி 3 தடவையும் வெற்றிபெற்றுள்ளது

2 ஜேர்மனிய வீரர் கீரட் முல்லர் அதிகமாக 14 கோல்களைப்போட்டுள்ளார்

3 ரஸ்ய வீரர் ஓலக் 1994 இல் அமெரிக்காவில் நடைபெற்ற கமரூனுக்கெதிரான போட்டியில் 5 கோல்களைப்போட்டிருந்தார்

4 ரோகர் மில்லா கமரோன்வீரர் 42 வயதில் கோல் போட்ட சாதனையைப்புரிந்துள்ளார்

5 வயது குறைந்த கோல் போட்டவர் என்ற சாதனையை பிரேசிலைச் சேர்ந்த பிலே 17 வயதில் ஏற்படுத்தியிருந்தார்

6 வயது குறைந்த வீரர் என்ற சாதனையை வடஅயர்லாந்தைச் சேர்ந்த நோர்மான் ஏற்படுத்தியிருந்தார்

7 கூடுதலாக கோல் அடிக்கப்பட்டது 1982ம் ஆண்டு கங்கேரி எல்சல்வடோர் 10 -1

8 கூடுதலாக கோல் போடப்பட்ட இறுதியாட்டம் 1958 பிரேசில் சுவீடன் 5-2

9 லோதர் மத்தியுஸ் ஜேர்மனியவீரர் 5 தடவைகள் பங்குபற்றியள்ளார்

10 2002ம் ஆண்டு துருக்கியவீரர் சுகர்; 11 வினாடியில் தென்கொரியாக்கிடையிலான போட்டியில் கோல் போட்டுள்ளார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

தகவல்களுக்கு நன்றி.. தொடர்ந்து தகவல்களை தொகுத்துவழங்குமாறு சுயநலத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

1950ம் ஆண்டு இந்தியவீரர்கள் உபைந்தாட்டம் விளையாடுவதற்குரிய சப்பாத்து போட்டு விளையாடத்தெரியாத படியால் போட்டியில் பங்குபற்ற அனுமதிக்கப்படவில்லை

1986ம் ஆண்டு மெக்சிக்கோவில் ஆர்ஜென்டீனா வீரர் மரடோனா இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் கையால் கோல் போட்டு இங்கிலாந்தை தோல்வி அடையச்செய்திருந்தார்

1930 ஆண்டு நடைபெற்ற முதல் போட்டியில் 13 நாடுகளே பங்குபற்றியிருந்தன

இவ்வருடம் 736 வீரரர்கள் 32 நாடுகளில் இருந்து பங்குபற்நவுள்ளார்கள் இதில்

96 பந்துகாப்பாளர்

242 பின்பகுதிவீரர்கள்

236 மத்தியபகுதிவீரர்கள்

162 முன்பகுதிவீரர்கள் அடங்குவார்கள்

Posted

சர்வதேச கால்பந்தாட்ட சபை (பீபா) உலகக் கிண்ணப் போட்டியை முதன் முதலாக 1930 இல் நடத்த தீர்மானித்த போது ஹங்கேரி, ஹொலன்ட், ஸ்பெயின், சுவீடன் ஆகிய நாடுகள் அதை நடத்த போட்டி போட்டன.

ஆனால், உருகுவே 1924 பாரீஸ், மற்றும் 1928 ஆம்ஸ்ரடாம் ஒலிம்பிக்கில் கால்பந்தாட்டத்தில் தங்கம் பெற்றிருந்தது.

உருகுவே சுதந்திரம் அடைந்த நூற்றாண்டு விழாவை 1930 இல் சிறப்பாகக் கொண்டாடவும், உலகக் கால்பந்து போட்டியை நடத்த ஆசைப்பட்டது; பீபாவும் அதற்கு சம்மதித்தது. பீபாவில் அங்கம் வகித்த 41 நாடுகளில் 13 நாடுகள் மட்டுமே இப்போட்டியில் கலந்துகொண்டன. காரணம், உருகுவே செல்ல ஒரு மாத காலம் படகுப் பயணம் என்பதுதான்.

இறுதிப் போட்டியில் ஆர்ஜென்ரீனாவும், உருகுவேயும் கலந்து கொண்டன. இறுதி ஆட்டத்தில் முதல் பாதியில் ஆர்ஜென்ரீனா நாட்டு பந்தும், பின் பாதியில் உருகுவே நாட்டு பந்தும் பயன்படுத்தப்பட்டது. இறுதியில் `ஜூல்ஸ்ரீமேட்' கிண்ணத்தை வென்றது உருகுவே.

* லூசியண்ட் லூரண்ட் என்ற பிரான்ஸ் ஆட்டக்காரர் தான் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் முதல் கோலை 1930 இல் மெக்ஸிகோவிற்கெதிராக போட்டவர்.

* கால்பந்தாட்டப் போட்டியில் விதியை மீறும் விளையாட்டு வீரர்களுக்கு சிவப்பு கார்ட் (வீரரை வெளியேற்றி), மஞ்சள் கார்ட் (எச்சரிக்கை கொடுக்க) கொடுக்கும் முறையை கொண்டு வந்தவர் நடுவர்களின் குழுத் தலைவராக பணியாற்றிய கென் ஆஸ்டன் தான். இவர் காரில் வந்தபோது `சிக்னல்' விளக்கை பார்த்து அவருக்கு தோன்றிய எண்ணந்தான் இது. 1970 இல் நடந்த உலகக் கால்பந்தாட்டப் போட்டியில் தான் சிவப்பு, மஞ்சள் கார்ட்டுகள் நடைமுறைக்கு வந்தன. ஆனால், இப்போட்டியில் எவருக்கும் சிவப்பு கார்ட் காட்டப்படவில்லை.

* உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் அதிகமுறை பங்கேற்றவர் ஜேர்மனியைச் சேர்ந்த லோத்தார் மத்யூஸ். 1982 முதல் 1998 வரை 25 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

* உலகக் கால்பந்தாட்டப் போட்டியில் ஒரே ஒருவர் தான் அணியின் தலைவராக ஒருமுறையும், பயிற்சியாளராக இருந்து ஒருமுறையும் உலகக் கிண்ணத்தை பெற்றிருக்கிறார். அவர் ஜேர்மன் அணியின் பிரான் பேக்கன்பர். 1974 இல் ஜேர்மன் அணியின் கப்டனாக இருந்து கிண்ணத்தை பெற்றார். அடுத்தது 1990 இல் அந்த அணியின் பயிற்சியாளராக இருந்து மறுமுறை கிண்ணத்தை வென்றார்.

* பிரேசில் 3 முறை உலகக் கிண்ணத்தை வென்றதால், 1970இல் `ஜூல்ஸ்ரிமெட்' கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. பிரேசில் கால்பந்தாட்ட சங்கத் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த கிண்ணம் 1983 இல் காணாமல் போய்விட்டது. இதனால், தற்போது கிண்ணத்தை வெல்லும் அணி 6 மாதம் மட்டுமே வைத்திருந்து விட்டு பின் பீபாவிடம் கொடுத்து விட வேண்டும் என்று கூறிவிட்டனர்.

* உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத்தில் குறைந்த வயதில் கலந்து கொண்டவர், பிரேசில் நாட்டின் பிலே மற்றும் வடஅயர்லாந்து நாட்டின் நோர்மன் வைட். இருவருமே 17 வயதில் கலந்து கொண்டனர். 1958 சுவீடன் போட்டியில் கலந்து கொண்டார் பிலே.

* உலகக் கிண்ணப் போட்டியில் கலந்து கொண்ட இளவயது நடுவர், உருகுவேயின் பிரான்சிஸ்கோ மிட்டாச்சி- 27 வயதில், 1930 இல் நடுவராக கலந்து கொண்டார். வயதான நடுவர், இங்கிலாந்தின் ஜோர்ஜ் ரீடர். 1950 இல் நடுவராக கலந்து கொண்ட போது இவரின் வயது 53. அதிக போட்டிகளில் நடுவராக கலந்து கொண்டவர் மேற்கு ஜேர்மனியின் ஹெல்மட்சகான். 1966 முதல் 1978 வரை 25 முறை.

* உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை நடத்த பீபா அனுமதி வழங்கியும், பொருளாதார நெருக்கடியால் அதை நடத்த முடியாது என்று கை விரித்த நாடு கொலம்பியா.

* உலகக் கிண்ணப் போட்டியில் `பெனால்டி' மூலம் முதல் கோல் போட்டவர் ஹொலண்ட் நாட்டின் ஜான் நீஸ்கின்தான். 1974 இல் இறுதி போட்டியில் ஜேர்மனிக்கு எதிராக.

* ஜேர்மனி, 1954 இல் கிண்ணத்தை வென்றபோது அந்த அணியில் பிரிட்ஜ் மற்றும் ஆட்மர் வோல்டர் என்ற சகோதரர்கள் விளையாடினர். 1966 இல் இங்கிலாந்து வென்றபோது, அதில்ஜாக் மற்றும் பொபி சர்டன் எனும் சகோதரர்கள் விளையாடினர்.

* இங்கிலாந்து வீரர் அலன் கிளார்க். 1970 உலகக் கிண்ணப் போட்டியில் செக்கோஸ்லாவாக்கியாவிற்கு எதிராக ஒரு பெனால்ட்டி கிக்கையே கோலாக்கினார். அந்த ஆட்டத்தின் ஒரே கோல் அதுதான்.

* உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அதிக வயதில் கலந்து கொண்டவர் கமரூன் அணியைச் சேர்ந்த ஜோஜர் மில்லா. 1994 இல் ரஷ்யாவுக்கு எதிராக விளையாடி, ஒரு கோலையும் அடித்தார். அப்போது அவருக்கு வயது 42.

* சுவிற்சர்லாந்தில் 1954 இல் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் தான் அதிக கோல்கள் போடப்பட்டன. 26 போட்டிகளில் மொத்தம் 140 கோல்கள். ஒவ்வொரு போட்டிக்கும் தலா 5 கோல்கள் என்ற விகிதத்தில்.

* உலகக் கிண்ணப் போட்டியில் அதி விைரவாக கோல் போட்டவர். ருமேனியாவைச் சேர்ந்த அடால்பெர்ட் டியூ, பெருவுக்கு எதிராக 1930 களில் நடந்த போட்டியில், 15 செக்கன்களில் ஒரு கோலை போட்டார்.

* உலகக் கிண்ணப் போட்டியில் அதிகளவு கோல்களை போட்டவர் ஜஸ்ட் போன் டெய்ன் என்ற பிரெஞ்சு வீரர். 1958 இல் நடந்த போட்டியில் அவர் 13 கோல்களை போட்டார். இந்த சாதனை இன்னும் முறியடிக்கப்படவில்லை.

* உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு போட்டியில் அதிக கோல்களை போட்ட அணி ஹங்கேரி தான். 1982 இல் எல்சல்வடோர் அணிக்கு எதிராக 10 கோல்களை போட்டு, 10-1 என்று வெற்றி பெற்றது.

* உலகக் கிண்ண இறுதிப்போட்டி 1950 இல் ரியோடி ஜெனீரேவாவில் (பிரேசில் தலைநகர்) பிரேசில் - உருகுவேயிடையே நடந்தது. இதைப் பார்க்க 2 இலட்சத்து ஐந்தாயிரம் பேர் வந்தனர். உலகக் கிண்ண கால் பந்தாட்ட போட்டியை பார்க்க வந்த மிகப்பெரிய கூட்டம் இதுதான். 1930 இல் நடந்த உலகக் கிண்ணப் போட்டியில் ருமேனியா - பெருவுக்கும் இடையே நடந்த போட்டியை பார்க்க மொத்தமே 300 பேர் மட்டும் வந்திருந்தனர். உலகக் கிண்ணப் போட்டியை பார்க்க வந்த மிகக்குறைந்த கூட்டம் இதுதான்.

* உலகக் கிண்ண இறுதிப்போட்டிகளில் ரைபிரேக்கர் - பெனால்டி கிக் போட்டிகளில் மூன்று முறை (1990-1994-1998) தோற்றுள்ள ஒரே அணி இத்தாலிதான்

http://www.thinakkural.com/news/2006/6/7/s...ws_page3959.htm

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடிக்கப் போவது யார்? சறுக்கப் போவது யார்?

கால்பந்து கோலாகலங்கள் தொடங்கிவிட்டன. யார் அடிக்கப் போகிறார்கள், யார் அடி சறுக்கப் போகிறார்கள் என்ற பேச்சு ரசிகர்களிடையே தொடங்கி விட்டன.

உலகத்தை கால்பந்து ஜுரத்தில் மூழ்கடிக்கும் உலக கிண்ணப் போட்டித் தொடர் நாளை 9 ஆம் திகதி தொடங்குகிறது.

இது வரை 17 உலக கிண்ண போட்டிகள் முடிவுற்றுள்ளன. 18 ஆவது தொடராக ஜேர்மனியில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்காக ஒவ்வொரு அணியும் பல திட்டங்களை தீட்டி பயிற்சி செய்து வருகின்றன.

இந்தப் போட்டித் தொடருக்கு பெரும்பாலான அணிகள் தகுதி சுற்று மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படும். மொத்தம் 160 அணிகளுக்கு தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றது. இவற்றில் பல்வேறு வடிகட்டுதல்கள் மூலம் 31 அணிகள் புள்ளிகள் அடிப்படையில் உலக கிண்ணப் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளன.

போட்டியை நடத்தும் ஜேர்மனி மட்டும் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. ஆகவே, உலக கிண்ணப் போராட்டத்தில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன.

இதுவரை நடந்துள்ள போட்டிகளில் பிரேசில் அணி 5 முறை உலக கிண்ணத்தை வென்றுள்ளது. 2 முறை இறுதிப் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. இந்த முறையும் அந்த அணியே கிண்ணத்தை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக விளையாட்டு வல்லுநர்கள் ஆரூடம் கூறியுள்ளனர்.

பிரேசிலுக்கு அடுத்தபடியாக ஜேர்மனி அணியுள்ளது. இந்த அணி 3 முறை கிண்ணத்தை வென்றுள்ளது. 4 முறை இறுதிப் போட்டி வரை முன்னேறி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.

இத்தாலி இதற்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 3 முறை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இரண்டு முறை இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது.

பிரபல அணிகளில் ஒன்றான ஆர்ஜென்ரீனோ மற்றும் உருகுவே அணிகள் தலா 2 முறை சாம்பியனாக முடிசூட்டியுள்ளன.

18 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் முனிச் நகரில் 9 ஆம் திகதி நடக்கிறது. இதில் ஜேர்மனி - கோஸ்டாரிகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் பொர்லினில் அடுத்த மாதம் ஜூலை 9 ஆம் திகதி நடக்கிறது.

இந்தக் கால இடைவெளிக்குள் மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும் விதமாக போட்டித் தொடர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

12 நகரங்களில் போட்டிகள் நடைபெறும் விதத்தில் போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சுற்று போட்டிகளின் மூலம் இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் தேர்வு செய்யப்படும்.

தற்போது நடக்கப் போகும் உலகக் கிண்ணத்தில் பிரசேில், ஜேர்மனி, இத்தாலி, ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸு ஆகிய அணிகள் பலமிக்கதாக தோன்றுகின்றன. இவற்றில் ஏதாவது ஒரு அணி சாம்பியனாக முடி சூடலாம்.

பிரேசில் அணியை பொறுத்தவரை நட்சத்திர வீரர்களின் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அனுபவ வீரர்களும் துடிப்புமிக்க இளம் வீரர்களும் அணியில் உள்ளனர். இதனால் எத்தகையை கடினமான சூழ்நிலையையும் திறமையாக சமாளித்து பிரேசில் அணி வெற்றி பெறும் தன்மை கொண்டது.

அதே நேரத்தில், அனுபவ வீரர் ரொனால்டோ மற்றும் ரொனால்டினோ எதிர் அணிக்கு கடும் சவாலாக விளங்கக் கூடியவர்கள்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை டேவிட் பெக்காம் சிறந்த வீரர். இவர் தலைமையில்தான் இங்கிலாந்து அணி உலக கிண்ணப் போட்டியை சந்திக்கிறது. இவர் பழுத்த அனுபவசாலி. இவர் தனது அனுபவத்தின் மூலம் எதிர் அணிகளின் பலம், பலவீனங்களை கணக்கு போடக் கூடியவர். அதே நேரத்தில் இங்கிலாந்து - ஆர்ஜென்ரீனா அணிகள் மோதும் ஆட்டம் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்துக்கு நிகரான விறுவிறுப்பைக் கொண்டிருக்கும்.

ஆர்ஜென்ரீனா, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய அணிகளிலும் திறமையான வீரர்கள் பலர் இடம் பிடித்துள்ளனர். இதனால் கிண்ணத்தை வெல்லும் நாடுகளின் பட்டியலில் இந்த அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஆனால், கால்பந்து போட்டிகளின் முடிவை எளிதில் நிர்ணயம் செய்ய முடியாது. இதனால் சாதாரணமாக நினைக்கப்படும் அணிகள் விசுவரூபம் எடுத்து கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதனால் போட்டித் தொடர் முழுவதும் கால்பந்து ரசிகர்களுக்கு தீனி போடும் நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

-தினக்குரல்

Posted

யாழ்கள உலகக்கிண்ணப்போட்டி நடைபெறுகிறது. இதுவரை வெண்ணிலா, கந்தப்பு,தலா,கரி,லக்கிலுக்கு, புத்தன், மணிவாசகன், சின்னக்குட்டி, மது, கனேஸ், சுபத்திரன், கறுப்பி,மதூரன், செல்வமுத்து ஆகிய 14 போட்டியாளர்கள் பங்குபற்றியுள்ளார்கள். மற்றவர்களும் பங்கு பெற விரும்பினால் http://www.yarl.com/forum3/viewtopic.php?p...ee3b9651#191961

Posted

நாளை (9/6/2005) அவுச்திரெலியா சிட்னி நேரம் மாலை 4 மணிக்கு, கனடா ரொன்ரோ நேரம் அதிகாலை 2 மணிக்கு, இலண்டன் நேரம் காலை 7 மணிக்கு, மற்றைய ஐரோப்பிய நேரம் காலை 8 மணிக்கு, இலங்கை நேரம் காலை 10:30 க்கு போட்டிகள் முடிவடையும். அதன் பிறகு பங்கு பற்ற முடியாது. திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவீர்கள். 14 நேயர்கள் ஏற்கனவே பதில் அளித்திருக்கிறார்கள். மிகுதிப்போட்டியாளர்களுக்கு இறுதிச் சந்தர்ப்பம்

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=192013#192013

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்கிலாந்து அணியில் ரூனி ஆடுவாரா இன்றைய சோதனையில் தெரியும்

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து வீரர் ரூனி ஆடுவாரா என்பது இன்று நடைபெறும் மருத்துவ சோதனையின் முடிவில் தெரியும்.

இங்கிலாந்து கால்பந்து அணியின் துடிப்பான இளம் வீரர் வெய்னே ரூனி. கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த போட்டியில் ஆடிய போது ரூனிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

உலகக் கிண்ணப் போட்டிக்காக இங்கிலாந்து அணி ஜேர்மனி சென்று விட்டது. கடந்த சில நாட்களாக ரூனி பயிற்சியில் ஈடுபட்டார். அவர் நேற்று முன்தினம் இங்கிலாந்து அணியினருடன் பயிற்சியில் ஈடுபட்டார்.

ரூனிக்கு இன்று மான்செஸ்டரில் `ஸ்கேன்' எடுத்து மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்காக அவர் இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றார்.

இதன் முடிவை பொறுத்தே உலக கிண்ணப் போட்டியில் இவர் ஆடுவது முடிவு செய்யப்படும். ரூனி ஆட முடியாத நிலை ஏற்பட்டால் அது இங்கிலாந்து அணிக்கு பேரிடியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதேபோல் ஜேர்மனி கப்டன் மைக்கேல் பல்லாக் ஆடுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தசைப் பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வரும் இவர் உடல் தகுதி பெற்று விடுவார் என்று பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

-தினக்குரல்

Posted

மாலுமி இல்லாமல் களமிறங்குகிறது ஜெர்மனி: கோஸ்டா ரிகாவின் சவாலை சமாளிக்குமா?

பெர்லின், ஜூன் 9: உலகமே ஆவலோடு எதிர்நோக்கியுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் கோஸ்டாரிகா அணியை எதிர்த்து போட்டியை நடத்தும் ஜெர்மனி விளையாடுகிறது.

மூனிச்சில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

ஜெர்மனியைப் பொறுத்தவரை மாலுமி இல்லாத கப்பலாக களம் இறங்குகிறது. காப்டன் மைக்கேல் பேலாக், தசைப்பிடிப்பு காரணமாக விளையாட முடியாத நிலையைப் பெற்றுள்ளார். இதனால், அந்த அணி கரைசேர கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

கால் தசை பிடிப்பு காரணமாக வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்திலும் மைக்கேல் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், கோஸ்டாரிகாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாட மாட்டார் என்று ஜெர்மனி அணியின் மேலாளர் ஜார்சன் கின்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.

மிரோஸ்லாவ்: அதே சமயம் மிரோஸ்லோவ் கோஸின் ஆட்டம் அணிக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

லட்சக் கணக்கானவர்கள் காண பிறந்த நாள் கொண்டாடுபவர் உலகில் பலர் இருக்க, ஜெர்மனி கால்பந்தாட்ட வீரர் மிரோஸ்லோவ் கோஸ் தனது பிறந்த நாளை கோடிக்கணக்கானவர்கள் காணும் உலகக் கோப்பை போட்டியின் தொடக்க நாளில் கொண்டாடி மகிழ உள்ளார்.

dinamani

Posted

மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய உலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜேர்மனி முதலாவது கோலை தற்போது போட்டுள்ளது.

Posted

ஆகா ஜேர்மனியை எதிர்த்து விளையாடிய Costa Ricaம் தற்போது ஒரு கோலை போட்டு கோல் எண்ணிக்கையை சமப்படுத்தியுள்ளது

Posted

ஆட்டம் நல்ல விறுவிறுப்பாக செல்கின்றது. தற்போது ஜேர்மனி 2வது கோலையும் போட்டு 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றது. ஆட்டம் தொடங்கி 17 நிமிடத்திற்குள்ளாகவே 3 கோல்கள் போடப்பட்டுவிட்டன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

3:2 என்ற அடிப்படையில் உள்ளது.

Posted

Costa Rica விற்கு 2வது கோலும் கிடைத்த நிலையில் ஜேமனி 3-2 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றது

Posted

ஆகா ஜேர்மனி அடுத்த கோலையும் போட்டு விட்டது

தற்போதைய நிலவரம் ஜேர்மனி 4 - 2 Costa Rica

Posted

ஜேர்மனி முதல் ஆட்டத்தை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றுவிட்டது.

Posted

சரி .சரி....ஜெர்மன் வென்றிட்டுது வாஸ்தவம் தான்.... இதுக்கு முன்று நாலு தரம் பதியோணுமே :lol:

Posted

ஹி ஹி ஒரே கருத்து இரண்டு தரம் பதிஞ்சதை இப்ப தான் கவனிச்சிட்டு நீக்கினன். சுட்டி காட்டிதற்கு நன்றி சின்னக்குட்டி

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் கடல் எல்லைக்குள் வந்து எமது மீன்வளத்தைச் சூறையாடிவிட்டு, நேவி துரத்துகிறது என்று இந்தியக் கடல் எல்லைக்குள் ஓடி ஒளிந்துவிட்டு மீண்டும் நேவி அகன்றவுடன் இலங்கை எல்லைக்குள் வந்து மீண்டும் சூறையாடலில் ஈடுபடுவார்களாம். இவர்கள் பண முதலைகள். அரசியல் செல்வாக்குள்ளவர்கள். இவர்களுக்கும் சாதாரண தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் தொடர்பில்லை. இதனை தடுப்பதைத்தவிர வேறு வழியில்லை. இவர்களின் கடற்கலங்கள் அழிக்கப்பட்டால் ஒழிய இவர்கள் நிற்கப்போவதில்லை.  இதற்கு இனச்சாயம் பூசத்தேவையில்லை. கடற்கொள்ளை கடற்கொள்ளைதான். 
    • விசுகர்! அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி  எலான் மஸ்க்  என சொல்கிறார்கள்.எதற்கும் அடக்கி வாசியுங்கள். 😂 
    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.