Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அய் நா தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறியது -விசாரணை அறிக்கை

Featured Replies

[size=3]PLOTE was active in cultivating international connections: it established links with the Popular Front for the Liberation of Palestine (PFLP) under [/size]George Habash[size=3], the [/size]Tunisian Communist Party[size=3], the [/size]Democratic and Social Movement[size=3] [/size]communist party[size=3] of [/size]Algeria[size=3], the[/size]Turkish[size=3] [/size]Organisation for Solidarity with Palestine[size=3], the [/size]African National Congress[size=3], the [/size]Farabundo Martí National Liberation Front[size=3] of [/size]El Salvador[size=3], the [/size]Sandinistas[size=3] of [/size]Nicaragua[size=3], and the ruling [/size]Mauritian Militant Movement[size=3] in [/size]Mauritius[size=3] and [/size]Communist Party[size=3] in[/size]Cuba[size=3].[/size][citation needed]

[size=3]There have been suggestions that the PLOTE may have been promised one of the small Maldivian islands as a base, possibly for Arms shipments. In a recent interview, Vetrichelvan PLOTE's former representative in New Delhi claims it was Athulathmudali, then Srilankan Prime Minister, who instigated PLOTE into such a venture on a promise of some islands.[/size][2]

  • Replies 83
  • Views 5.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே – ஐ.நா.

16 நவம்பர் 2012

இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார். சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக அறிக்கைகளின் சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தகவல்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்துவது பொருத்தமாகது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பக்கச்சார்பற்ற வகையிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாக சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85473/language/ta-IN/article.aspx

[size=3]

[size=5]தி.மு.கா.வோ, அ.தி.மு.கா.வோ, இன்ன பிற கட்சிகளோ, அமைப்புகளோ முதலில் நெருக்கவேண்டியது ஐ.நா.வை அல்ல...இந்தியாவைத்தான்..[/size][/size]

[size=3]

[size=4]ஐ.நா.வில் ஒரு மெமோரண்டம் கொடுக்கப்பட வேண்டுமென்றால்...அது ஐ.நா.வின் உறுப்பு நாடு சார்பாகவோ அல்லது ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட சுயேச்சை அமைப்புகளின் சார்பாகவோதான் கொடுக்கமுடியும்.[/size][/size]

[size=3]

[size=4]அப்படி கொடுக்கப்படும் மனுதான் ஐ.நா.வின் பரிசீலனைக்கும், விவாதத்திற்கும் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் தி.மு.க சார்பில் கொடுக்கப்பட்ட மனு இந்த இரண்டு வகையிலும் சேராது. இந்த மனுவால் எந்த பயனும் இல்லை.[/size][/size]

[size=3]

[size=4]உண்மையிலேயே தி.மு.க.விற்கு ஈழதமிழர்களின்பால் அக்கறையிருந்தால் தன் கட்சி அங்கம் வகிக்கும் இந்திய அரசின் மூலமாக ஐ.நா.விடம் அம்மனுவை அளித்திருக்கவேண்டும். அப்படி செய்திருந்தால் அம்மனு பரிசீலனைக்கும், விவாதத்திற்கும் எடுத்துகொள்ள வாய்ப்புகள் இருந்திருக்கும். அப்படி செய்யாமல் விஜய் நம்பியாரை வைத்து ஐ.நா. துணைப் பொதுச்செயலாளரிடம் கொடுத்திருக்கிறது. [/size][/size]

[size=3]

[size=4]சந்திப்பின்போது உடனிருந்த இந்த விஜய் நம்பியார்தான் இலங்கை போரின்போது பலியான தமிழர்களின் எண்ணிக்கையை ஐ.நா.விடம் குறைத்துகாட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர். மேலும் இவரது சகோதரரான சதீஷ் நம்பியார்தான் இலங்கை இராணுவத்திற்கு ஆலோசகராக சம்பளம் பெற்று பணிபுரிந்தவர் என்பது இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்று.[/size][/size]

[size=3]

[size=4]தி.மு.கா.வோ, அ.தி.மு.கா.வோ, இன்ன பிற கட்சிகளோ, அமைப்புகளோ முதலில் நெருக்கவேண்டியது ஐ.நா.வை அல்ல...இந்தியாவைத்தான்...ஏனென்றால் போர் நடைப்பெற்று கொண்டிருந்தபோது புலம்பெயர் தமிழர்களும், தாய்தமிழர்களும் ஐ.நா. முதற்கொண்டு உலகின் பல்வேறு நாடுகளையும் மனித உரிமை அமைப்புகளையும் போரை நிறுத்தவும் அம்மக்களை காக்கவும் மன்றாடினார்கள். அப்போது அவர்கள் கைகளை காட்டியது இந்தியாவை. இந்தியாவின் காலடியில் நடைப்பெற்ற அந்தபோரின்போது இந்தியா கள்ளமவுனம் காத்தது. போரின் இறுதிவரை கடைப்பிடித்த கள்ளமவுனத்தால் பல்வேறு நாடுகளும், மனித உரிமை ஆர்வலர்களும் களைப்படைந்தார்கள். [/size][/size]

[size=3]

[size=4]ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் பெரும்பாலும் பூகோள, வர்த்தக, அரசியல் ராஜதந்திரரீதியாக இந்தியாவோடு பின்னி பிணைந்துள்ளன. இந்தியாவை மீறி எந்த நாடும். ஐ.நா.வும் இலங்கை விடயத்தில் ஓரளவிற்கு மேல் தலையிடாது. அதே நேரத்தில் இந்தியா இலங்கைக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்தால் ஐ.நா.வும், பெரும்பாலான நாடுகளும் (சீனா, பாகிஸ்தான், ரசியா மற்றும் சில நாடுகள் தவிர) இந்தியாவிற்கு பின் அணி திரளும். [/size][/size]

[size=3]

[size=4]இங்கே தமிழக தலைவர்கள் முதலில் நெருக்கவேண்டியது இந்தியாவை! உடைக்கவேண்டியது இந்தியாவின் கள்ள மவுனத்தை! நிறுத்த வேண்டியது இந்தியாவின் நாடகத்தை! (அதோடு தமிழக கட்சிகளின் அருவருக்கத்தக்க ஏமாற்று நாடகத்தையும், ஒற்றுமையின்மையையும்)...[/size][/size]

[size=3]

[size=4]கள்ளமவுனத்தை சாதித்து வரும் இந்தியா, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரிப்பதுபோல் ஆதரித்தது. இப்போது இந்த மாதம் நடைபெற்ற இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் அவையின் காலமுறை விசாரணை (Universal Periodic Review) மறுஆய்வு கூட்டத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நடந்துகொண்டது இந்தியாவின் நாடகத்தை வெட்டவெளிச்சமாக்கியது. இலங்கைக்கு ஆதரவான நாடுகள் என்று கணிக்கப்படும் சீனாவும் பாகிஸ்தானும் கூட கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால், உலகிலேயே அதிக எண்ணிக்கையில் தமிழ் பேசுவோரைக் குடிமக்களாகக் கொண்ட இந்தியா ஒரே ஒரு கேள்வியைக் கூட எழுப்பாமல் மவுனம் சாதித்தது. [/size][/size]

[size=3]

[size=4]கடத்த ஆகஸ்டு மாதம் நடைப்பெற்ற டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா.மன்றத்திற்கும், ஐ.நா. மனிதஉரிமை அமைப்பிற்கும் வழங்கிவிட்டு வெற்றியோடு தாயகம் திரும்பினார்களாம் ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும். இதற்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பும், அறிவாலயத்தில் பாராட்டு நிகழ்ச்சியும் வேறு. விமான நிலையத்திற்கு வந்த கூட்டம் அன்று மாலை நடைப்பெற்ற பாராட்டு விழாவிற்கு போதிய அளவு கூட்டம் வரவில்லை என்று தலைவர்களுக்கு அதிர்ச்சி, கவலை வேறாம் (தொண்டர்களுக்கு தெரிகிறது எதற்கு பாராட்டவேண்டும் எதற்கு பாராட்டக்கூடாது என்று).[/size][/size]

[size=3]

[size=4]ஐ.நா.வின் புரோட்டாகால்கூட தெரியாமல் மனு அளித்துவிட்டு வந்த பாராட்டு விழா நடத்துவது என்பது ராசபக்சே ஒன்றரை இலட்சம் மக்களை கொன்றபோது ஏற்பட்ட வழியைவிட கொடியது. அதுவும் 95 வயதுவரை சிறுநீர் குடுப்பையோடு பகுத்தறிவு வளர்த்த இயக்கத்தின் வழிவந்த ஒரு முதுபெரும் தலைவர் நடந்துகொள்ளும் விதம் ஜீரணிக்கமுடியாதது. [/size][/size]

[size=3]

[size=4]இந்தியாவை வழிக்கு கொண்டு வரவேண்டுமென்றால் முதலில் தமிழக கட்சிகள், அமைப்புகள் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரளவேண்டும். (திரள்வார்களா?). (அங்கு நடைபெற்ற அழிவை பார்த்தபின்பாவது, அச்சத்தின் பிடியில் இருக்கும் எஞ்சி உள்ள மக்களை காப்பாற்றவாவது)...[/size][/size]

[size=3]

[size=4]இல்லையென்றால் தமிழினம் வீழும், தமிழகத்தை பார்த்து புதுதில்லியும், கொழும்பும் கைகொட்டி சிரிக்கும் இங்குள்ள கோமாளி (பொன்சேகா சொன்னதுபோல்) அரசியல்வாதிகளை பார்த்து...[/size][/size]

[size=3]

[size=4]முத்தமிழ் வேந்தன் [/size][/size][size=3]

[size=4]சென்னை [/size][/size]

[size=3]

[size=5](மின்னஞ்சல் மூலம்) [/size][/size]

மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே – ஐ.நா.

16 நவம்பர் 2012

இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டமை சரியானதே என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பில் மீளாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு பொதுமக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களை பாதுகாக்கவும், சில இரகசிய ஆவணங்களைப் பாதுகாக்கவும் மீளாய்வு அறிக்கையின் சில பகுதிகளை தணிக்கை செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயரதிகாரி சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார். சில தகவல்கள் உள்ளகத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளக அறிக்கைகளின் சகல விடயங்களையும் பகிரங்கப்படுத்துவது பொருத்தமான தீர்மானமாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில தகவல்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை பகிரங்கப்படுத்துவது பொருத்தமாகது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பக்கச்சார்பற்ற வகையிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதில் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூடுதல் சிரத்தை எடுத்துக் கொண்டதாக சுசனா மெல்கொரா தெரிவித்துள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

இதில் இருந்து இவர்கள் யாரைக் கார்பாத்த நினைக்கிறார்கள் என்று தெரிகிறது.

இப்படி பகிரங்கமாக மறைப்பதையும் மறைத்ததை பகிரங்கம்மாக தெரிவிப்பதும் இப்படியான ஒரு பொது அமைப்புக்கு பொருத்தமானதா?

இவர்களிடம் நீதியை எதிபார்க்க முடியுமா?

நாம் பலமில்லாதவர்கள் ஆதரவற்றவர்கள் என்பதன் அடிப்படையிலேயே இக்கருத்து அமைந்துள்ளது. பலமான ஒரு இனத்துக்கோ அல்லது ஒரு நாட்டுக்கோ இப்படி ஒரு அநியாயம் நடந்திருந்தால் இவர்களால் இப்படி மறைக்க முடியுமா?

16112012-md-hr-2%20copy.jpg

189768_382894508452585_1585692341_n.jpg

[size=6]Sri Lanka "least constructive nation ever to appear before the UPR"[/size]

[size=5]Sri Lanka appeared before the United Nations Universal Periodic Review last week - a four yearly stock-take of their human rights record. You can see the video here:[/size]

[size=5]http://blog.srilankacampaign.org/2012/11/sri-lanka-least-constructive-nation.html[/size]

[size=5]Sri Lanka's response to the process was extraordinarily belligerent. Sri Lanka rejected 100 of the 210 recommendations made to it. In the previous 206 reviews no country has ever rejected more than 95. As well as being the largest absolute number of recommendations ever rejected outright this is also the fourth highest proportion of recommendations rejected.*

Meanwhile further research suggests that there can be little hope for the implementation of those recommendations that they did accept. On 52 out of 71 pledges the Government of Sri Lanka accepted last time, they have done nothing whatsoever. So on past form we can expect the Government of Sri Lanka to completely fail to deliver on 73% of the pledges they made this time round.**

Our comprehensive report (available here) analyses each of Sri Lanka's pledges from 2008 in detail. The Government of Sri Lanka claimed to have delivered fully on 12 of their 71 pledges but we could only find this to be true in four cases. They euphemistically described progress towards the remaining recommendations as "ongoing", but we could only find evidence of any progress in 15 cases.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டும் - கருணாநிதி

20 நவம்பர் 2012

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்ய வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதி கோரியுள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையில், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உரிய முறையில் கடமையாற்றவில்லை என ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

டொசோ மாநாட்டு தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மற்றும் ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் அமைப்பு எடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் முனைப்புக்களுக்கு மத்திய அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டுமென கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளுடன் ராஜதந்திர ரீதியாக தொடர்பு கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானித்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/85608/language/ta-IN/article.aspx

3921_376705309082728_1665187250_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.