Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13வது திருத்தத்தை இரத்து செய்தால், பௌத்த மதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும்: சமித்த தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

samitha_seithy-150.jpg

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு கூக்குரலிடுவோர் அந்த திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட்ட பின்னர், வழங்க போகும் மாற்று திட்டம் என்ன என்பதை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் பத்தேமகம சமித்த தேரர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு நடந்து விட்டால், எமது நாடு சர்வதேசத்தின் முன்னிலையில் மிலேச்சத்தனமான, வலதுகுறைந்த நாடாக மாறிவிடும். எவர் எதனை கூறினாலும் சர்வதேச சமூகம் இன்றி எம்மால் வாழ முடியாது. வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வு வழங்கும் நோக்கத்தில் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்தியா - பண்டைய காலம் தொட்டு இலங்கையுடன் நெருங்கி செயற்பட்டு வரும் நாடாகும். வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் கடுமையான தேவை இந்தியாவுக்கு இருந்தது. இதற்கு ராஜதந்திர ரீதியிலான தீர்வை முன்வைக்கும் தேவை இந்தியாவுக்கு இருந்தது. இந்த திருத்தச் சட்டம் இந்தியாவினால் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட தீர்வு எனக் கூறுகின்றனர். இலங்கை மீது பலவந்தமாக பருப்பு போட்ட கதையை கூறுகின்றனர்.

அன்று இயக்கர், நாகர்கள் வாழ்ந்த இலங்கைக்கு பௌத்தம் மதம் எம்மை கேட்டு வழங்கப்படவில்லை. பௌத்த மதம் எம்மை கேட்டு அனுப்பி வைக்கப்படவில்லை. அப்படியானால் பௌத்த மதத்தையும் இரத்துச் செய்ய வேண்டும்.13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் பாரிய பிரதிபலன்களை கொடுத்தது. அன்று ஆயுதங்களை தாங்கி இருந்தவர்கள் ஆயுதங்களை கைவிட்டு அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டனர் எனவும் பத்தேகம சமித்த தேரர் கூறியுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடா, இது?

புத்தருக்கு வந்த சோதனை? :o

[size=4]இவர் சுடப்பட்டு கொல்லவும்படலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திருத்தச் சட்டம் இந்தியாவினால் இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட தீர்வு எனக் கூறுகின்றனர். இலங்கை மீது பலவந்தமாக பருப்பு போட்ட கதையை கூறுகின்றனர்.

அவன் அப்போ பருப்பு போட்டான் ....இனி யாருக்கு போட போகிறான் ... அது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்...... அப்படியே போட்டாலும் வாங்கி தின்று போட்டு ஈழ தோழர்கள் உசாராக இருக்க வேண்டிய காலம் இது...

டிஸ்கி

இவனுக்கு எதிராக திரும்புறம் என்று எல்லாம் கவலை பட கூடாது .. அவன் பருப்பு.... டால்டா..... குடுக்கிறான் என்றால் ஏதோ ஓசியில் கிடையாது.. அப்பன் வீட்டு காசில் இருந்து கொடுக்கவில்லை அதில் எங்கட காசு உயிர் எல்லாம் இருக்கு.. சோ டோண்டு வொர்ரி :icon_idea: :icon_idea:

பிள்ளையானின் அண்ணவோ தெரியாது. இந்த முன்னணிகள் எல்லாம் மகிந்தாவினதுதானே. இரண்டு பூவை முன்னுக்கு காதில் வைத்தால், ஒரு பூவை பின்னு கொண்டையில் வைப்பதுதானே மகிந்தா வழமையில் செய்வது.

[size=4]இந்த பிக்கு கொஞ்சம் விடயங்கள் விளங்கி உள்ளவர் போலுள்ளது. அதாவது சர்வதேசத்தை, குறிப்பாக மேற்குலகத்தை பகைத்து செழிமையாக வாழ முடியாது என்பதை கூறுகிறார். [/size]

[size=1]

[size=4]ஆனால் வழமையான இனவாதம் பொதிந்த பிக்குகள் இல்லை அரசியல் வாதிகள் இவரை இல்லை இவர் கருத்தை உள்வாங்கும் பண்புகள் கொண்டவர்கள் அல்ல. [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.