Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்ணன்: பார்ப்பனீய சூழ்ச்சிகளின் அம்புகளைத் தன் மார்பில் தாங்கியவன்

Featured Replies

Karnan-Movie-Stills.jpeg

ஒரு பேருந்துப்பயணம். பொழுதைக்கழிக்க பேருந்து வீடியோவில் எந்தப்படத்தைப் பார்க்கலாம் என்ற பலரின் பலவித ஆலோசனைகளுக்குப் பிறகு கர்ணனைப் பார்க்கலாம் என்ற ஒரு மனதான முடிவுக்கு வந்தோம். புதிய வண்ணங்கள் ஏறிய கர்ணன் திரைப்படம். 1964 - ல் வெளிவந்த திரைப்படம். சிவாஜி கணேசன், சாவித்திரி, தேவிகா, என்.டி.ராமாராவ் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

மிகவும் முக்கியமான விடயம், முழுப்படமும், கர்ணன் என்ற முழு குணச்சித்திரமும் பார்ப்பனர்களுக்கு எதிராக, எந்தவிதத் தயக்கமுமின்றி சொல்லப்பட்டிருப்பது தான்! பார்ப்பனீய மனம் எத்தகைய தந்திரமான சூழ்ச்சியான அமைப்புகளைக் கொண்டு இயங்கும் என்பதைத் தெளிவாகவும், நேர்த்தியான திரைக்கதை அமைப்பாலும் சித்திரித்திருக்கின்றார், படத்தின் இயக்குநர், பி. ஆர். பந்துலு. சமீபத்தில் அந்த படம் மீண்டும் திரைக்கு ஏறி, நில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது! இவ்வெற்றிக்கு நிறைய காரணங்களைப் படத்தில் காணமுடிகிறது.

கர்ணன் என்னும் கொடையாளன், என்பவன் இம்மண்ணின், மக்களின் குறியீடாக இருக்கிறான். செஞ்சோற்றுக்கடன் தீர்க்கும் நன்றியுணர்வு, இல்லையெனாது கொடுத்தல், மான உணர்வு, துன்பம் தாங்குதல், மதிநுட்பம், வெளிப்படையான குணங்கள் என கர்ணன் உயர்ந்து கொண்டே போகிறான். சிவாஜி கணேசன் தன் அசாதாரண நடிப்பால் கர்ணன் எனும் ஒற்றை மனிதனுக்கு சற்றும் சளைக்காமல் பேருருவம் கொடுக்கிறார்.

ஒரு தேரோட்டியின் மகனாக வளரும் கர்ணன், இயல்பில் சூரியனின் மகன். அவனுக்கு இயல்பாக அமைந்த தீரங்கள் எப்படி அவனிடமிருந்து பொய்வேடங்களாலும், சுயநலத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்படுகின்றன என்பதும், தான் பிறந்த குலத்தைக் காரணம் காட்டித் தனக்கு மறுக்கப்பட்ட கலைகளையும் வீரங்களையும் அவன் வேட்கையுடன், சிரமங்களுடன் எப்படி அவன் கற்றுக் கொண்டான் என்பதும், அவையெல்லாம் அவனுக்கு உபயோகப்படாமல் போகுமாறு பார்ப்பனீய உலகம் எப்படி அவனிடமிருந்து சூறையாடியதும் என்பதும் தான் கர்ணன் என்ற காவிய கதாபாத்திரம்.

சாதியின் துல்லியமான ஒடுக்குமுறை வெளிப்படையாகப் புலனாகிறது. கர்ணன் உயிருக்குப் போராடும் நிலையிலும் அவனுடய உயிரையும் தானதர்மங்களால் உண்டான களிப்பையும் கூட விட்டுவைக்காமல் அந்தணவேடம் ஒன்று வந்து வாங்கிச் செல்கிறது.

ஒவ்வொரு நிலையிலும் கர்ணனிடமிருந்து வஞ்சகத்தால் சத்தியத்தின் மேல் சத்தியங்கள் பெறப்பட்டு, அவன் உடைமைகள் எல்லாம் அபகரிக்கப்படுகின்றன. இந்த சூழ்ச்சிகளையும் வஞ்சகங்களையும் அறிந்திருந்தும் கர்ணன் தன் நல்ல குணங்களை இழக்காமல் இருப்பதும், தன் துணிவின் மீது நம்பிக்கை கொள்வதும் கர்ணனைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நம்மை அவனுடன் இரண்டறப் பிணைக்கிறது.

பஞ்சபாண்டவர்களும் கெளரவர்களும் ஏன் கிருஷ்ணனும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி தம்மை மாற்றி மாற்றிப் பேசிச் சமாளிக்கும் போது, கர்ணன் தன் வெற்றுக் கைகளுடன் சந்தர்ப்பத்தின் கைதியாகி நிற்கிறான். போர்க்களத்தில் கையாளப்படும் வியூகங்கள் போல கர்ணன் என்னும் சூரியனின் மகன் மீது, தேரோட்டியின் வளர்ப்பு மகன் மீது, இயல்பிலேயே கொடையுள்ளம் கொண்டவன் மீது, சொன்ன சொல் தவறாதவன் மீது எல்லா வியூகங்களும் கையாளப்படுவது எந்தச் சிரமமும் இல்லாமல் அற்புதமான வசனங்களால் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் திரைக்கதை அமைப்பு, பார்ப்பனீய அமைப்பைத் தெளிவுபடுத்துவதையே முழு நோக்கமாகக் கொண்டு அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறையும் பாடலும் இசையும் எழும்பி, 'கர்ணன்' எனும் மனிதக் குறியீட்டைப் புரிய வைக்க உதவுகின்றன. பாடல்களில் வரும் ஒவ்வொரு சொல்லின் ஆழத்திலும் சாதியை மறுக்கும் நுட்பம் பொதிந்திருக்கிறது. இத்தனைக்கும் வணிகத் தளத்தில் இயங்கி வசூலை அள்ளிய படம்! சமயம் வாய்த்தால் மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுங்கள்!

குட்டி ரேவதி

http://kuttyrevathy.blogspot.fr/2012/08/blog-post_13.html

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் இந்த படத்தில் வரும் ........மழை வழங்கும் கொடையோ என்று தொடங்கும் அந்த பாடலும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலும் சூப்பர் அனால் நான் இன்னும் இந்த படம் பாக்கல்ல பாக்கணும்

மழை வழங்கும் அந்த பாடலை யாரவது இணைக்க முடியுமா?

  • தொடங்கியவர்

நீங்கள் கேட்ட மழை கொடுக்கும் வரமும் பாடல்

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

இதில் கூறப்பட்ட கீதை உபதேசத்தின் சாரம்சமும் சிறிது யோசிக்க வைக்கத்தான் செய்கின்றது

உள்ளத்தில் நல்ல உள்ளம்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மகாபார‌தத்தில் எனக்கு பிடித்த பாத்திர‌மே கர்ணன் தான்...கண்ணன்,கர்ணணுக்கு செய்தது அநியாயம் என்று தெரிந்ததில் இருந்து கண்ணனை பிடிப்பதில்லை...கட‌வுளே இப்படி அநியாயம் செய்தால் மனிச‌ன் செய்யிறதில என்ன பிழை

  • தொடங்கியவர்

மகாபார‌தத்தில் எனக்கு பிடித்த பாத்திர‌மே கர்ணன் தான்...கண்ணன்,கர்ணணுக்கு செய்தது அநியாயம் என்று தெரிந்ததில் இருந்து கண்ணனை பிடிப்பதில்லை...கட‌வுளே இப்படி அநியாயம் செய்தால் மனிச‌ன் செய்யிறதில என்ன பிழை

இப்படியும் யோசிக்கலாம் தானே !!!!!!!!

ஒரு மனிதனுக்கு நான்கு வகைதுணை வேண்டும் மாதா, பிதா, குரு, தெய்வம் ஆனால் அந்த குந்தியின் மூத்த புதல்வனுக்கோ அந்த துணைகளில் ஒன்றுகூட கிட்ட வில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை, அவன் வந்த வழி அப்படி காரணம் என்ன?, அவன் என்ன பாவம் செய்தான் முற்பிறப்பில் (நம்பிகையில்லாதவருக்கிச்சொல்லிலை) பாவம் செய்ததால்தானோ இப்பிறப்பில் வந்தவர்களுக்கெல்லாம் இல்லையென்னாது வாழங்கினான்?

தாய் குந்தி பெற்றாள் போட்டாள் ஆற்றில், தந்தை சூரியன் உதவமுடியவில்லை, குரு சொல்லாவே வேண்டாம் அவருக்கு சத்ரியர்கள் மீதிருந்த மாற்சர்யம், தெய்வம் அவனே வந்த இவன் செய்த புண்ணியமனைத்தையும் பெற்றுக்கொண்டான்.

சரி ஏன் அவன் பெற்றுக்கொண்டான் கர்ணன் புலவர், ஏழை, என மனிதர்கள் அத்துனை பேருக்கும் கொடுத்துச் சிறந்தான்; இந்திரனுக்கும் கொடுத்து தேவர்களுக்கும் கொடுத்ததாக பேர் பெற்றுவிட்டான்.பெற்றெடுத்த தாய்க்கும் கொடுத்துவிட்டான் வரம் என்ற பெயரில் இனி கொடுக்க வேண்டியது தெய்வத்திற்கு தான் அதான் அந்த கண்ணன் வந்து பெற்றுக் கொண்டானோ?.

" வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்

மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்

தேன்பெற்ற துழாயலங்கல் களப மார்பும்

திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்

ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்

உணர்வுடன் நின்திருநாமம் உரைக்கப் பெற்றேன்

யான் பெற்ற பெருந்தவப்பேறு என்னையன்றி

இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே! "

கண்ணன் அந்தணர் வேடம் பூண்டு தேர்தட்டில் விழுந்து கிடக்கும் வள்ளலிடம் கேட்கிறான்.

”மேரு மலையிடத்தே தவம் செய்து கொண்டிருந்தேன். உன்னிடம் யாசகம் பெற்று போக வந்தேன் , நீ இல்லை என்று வந்தவர்களுக்கெல்லாம் இல்லையென்னாது வழங்குவாயமே?"

“தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த

தரணியில் தளர்ந்தவர் தமக்கு

வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன்

மேருவினிடைத் தவம் பூண்டேன்

ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழந்தேன்

இயைந்தது ஒன்று இக்கணத்து அளிப்பாய்

தூண்டிய கவனத் துரகத் தடந்தேர்

சுடர்தரத் தோன்றிய தோன்றால்"

சித்தர்களும், யோகியரும் இவனை நோக்கித்தான் தவம் செய்கிறார்கள். ஆனால் இவனே தான் தவம் செய்வதாகப் பொய்சொல்கிறான். செல்வத்திற்கெல்லாம் அதிபதி இந்தக் கண்ணபரமாத்மாவாயகிய திருமால்தான்! திருமகளையே நெஞ்சில் தாங்கியவன் இவன்தான! ஆனால் இவன் கூறுகின்றான், வறுமையால் துன்பமடைந்தேன் என்று! இல்லத்திலும் கொலு மண்டபத்திலும் வரையாமல் கொடுத்த வள்ளலுக்கு போர்க்களத்திலும் வந்த வாய்ப்பை எண்ணி மகிழ்கின்றான். அவ்வந்தணன் சொல்லிய சொல் அவனை மயங்கச் செய்கிறது. தான் அடிபட்டுக்கிடப்பதை மறந்து சொல்கிறான்.

"அந்தணரே! அம்புகளால் அடிபட்டுத் தேர்த்தட்டில் விழுந்துகிடக்கின்றேன். உடல் ஓய்ந்து போயிற்று! இந்தக் கர்ணனுடைய கரங்கள் இதுவரை கொடுக்கத்தான் நீண்டிருக்கின்றன. ஒரு போதும் வாங்கு வதற்கு நீண்டதில்லை! இன்று வாங்குவதற்கு நீள்கின்றன! உம்மிடம் ஒன்றை யாசிக்கிறேன். என்னிடம் இருக்கின்ற ஒன்றைக் கேளுங்கள்.

இல்லாததை கேட்டு விடாதிர்கள். வாழ்ந்தநாள் வரையிலும் வரையாது வழங்கிய வள்ளல் கர்ணன் போர்க்களத்தில் இல்லையென்று கைவிரித்தான் என்று இந்த வையகம் வசைபாடுமாறு செய்துவிடாதீர்கள். என்னால் இப்போது தரத்தகுந்த பெருளாகக் கேளுங்கள், என்று கூறுகின்றான் அந்தக் கொடை வள்ளல்.

கேட்கிறான் மாயோன்,” கர்ணா! நீ இதுவரை செய்த புண்ணயம் அனைத்தையும் எனக்கு வழங்குவாயா”

கர்ணன்:

“அந்தணரே! என் உயிரோ நிலை கலங்கியுள்ளது. அது உடலுக்கு உள்ளே இருக்கிறதா? வெளியே இருக்கிறதா என்பதை யான் அறியேன்". இந்தப் பாவி நீ கேட்கும் பொருளையெல்லாம் தருகின்ற காலத்தில் நீர் வரவில்லை. இந்த உடலைத் தரலாம் என்றால் இது அம்பகளால் துளைக்கப்பட்டு சிதைந்து கிடக்கிறது. உயிரைத் தரலாம் என்றால் அது உள்ளே இருக்கிறதா உடலின் வெளியே இருக்கிறதா என்று தெரியவில்லை. வில்லும், அம்பும், அச்சு முறிந்த இந்தத் தேரும் அந்தணராகிய உமக்குப் பயன்படா! நல்ல வேளையாக என்னிடம் உள்ள புண்ணியத்தைக் கேட்கின்றீர்கள். செய்த புண்ணியத்தைத் தானே கேட்டீர்கள்?

அந்தனரோ! யான் செய்த புண்ணியத்தையெல்லாம் உங்களுக்குத் தருகின்றேன். அப்படித் தருவதால் ஒரு புண்ணியம் வருமல்லவா! அதனையும் சேர்த்துத் தருகின்றேன்.

தெய்வத்திற்கு ஆச்சரியம் தான் கேட்கவந்தது செய்த புண்ணியத்தைமட்டும் ஆனால் அந்த வள்ளலோ வரப்போகும் புண்ணியத்தையுமல்லவா தறுவதாக சொல்கிறான்,

”கர்ணா! நீ கூறிய வண்ணம் புண்ணியத்தை எனக்கு தாரை வார்த்துக் கொடு,” என்கிறான்.அந்த வள்ளல் தண்ணீருக்கு எங்கோ போவான் தன் இதயத்தில் பாய்ந்திருந்த ஓர் அம்பினை எடுக்கிறான் அதிலிருந்து வந்த உதிரத்தை உத்தமன் உலகலந்தவனுக்கு தாரை வார்க்கிறான். கையேந்தா கடவுளும் கையேந்தி பெற்றுக்கொள்கிறது. வஞ்சகனின் கையில் வள்ளலின் குருதிபடவும் அவனும் வள்ளலாகிறான்,” உனக்கு என்ன வேண்டும் என்கிறான் கொஞ்ச நேரத்திற்கு முன் கையேந்திய கடவுள் இப்பொழுது உனக்கு என்ன வேண்டும் கேள் என்கிறது.

"ஆவியோ நிலையிற் கலங்கியது யாக்கை

அகத்தோ புறத்ததோ அறியேன்

பாவியேன் வேண்டும் பொருளெலாம் நயக்கும்

பக்குவத்தில் வந்திலையால்

ஓவிலாது யான் செய் புண்ணியம் அனைத்தும்

உதவினேன் கொள்க நீ உனக்குப்

பூவில் வாழ் அயனும் நிகரிலன் என்றால்

புண்ணியம் இதனினும் பெரிதோ?

ஒன்று மட்டும் நிச்சயம் வையத்தில் வால்வாங்கு வாழ்பவர்கள் வசதியுடனும் செல்வத்துடனும் வாழ்வதில்லை நடுநிலைமையில் உள்ளவர்கள் நடு நிலைமையாகவே இறப்பர். உயர்ந்து இருந்தவர்கள் கொஞ்சநாள் தாழ்ந்து வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்பது தான் உலக நியதி.

http://ennar.blogspo...og-post_21.html

Edited by கோமகன்

எனக்கு பிடித்தபாடல் கண்கள் எங்கே. அதை எனது உறவினர் ஒருவர் இரைச்சல் அழுக்கு ( Noise Pollution) லின் வடிவம் என்பார். பிரச்சனை என்ன வென்றால் சுசிலாவின் hi-pitch குரல் வெளியில் வந்து காற்றை கிழிப்பது போன்ற மாயை உண்டாக்க அந்த பாடசலை சற்று பலத்த சத்தத்தில் வைத்து கேட்டால்தான் ரசனை.

அடுத்தது மரணதை எண்ணி கலங்கிடும் விஜயா. வீரர்களுக்குள் வீரனான அரிசுனன், பந்த பாசத்தாலும்(,ஒருவேளை ஊர்வசியின் பழைய சாபத்தின் தாக்கம் ஒருகொஞ்சம் மிஞ்சி இருந்ததாலும், )போர்க்களத்திலே மரணத்தைகண்டு, மிரளத்தொடங்கினான். அவனின் பீதியை போக்கிய பகவத்கீதையின் சாரதை சொல்லும் பாடல்.

உடம்பு என்பது வெறும் இரசாயனக்கலவையே. எப்படி நாம் கையில் ஒரு பிடி மண்ணைக் கோலி எடுதால் அது உயிர் தொடர்பில்லாத்து என்று உணரமுடியுமே, அது போலவே பூமியில் காணப்படும் பிரபஞ்ச மூலகங்கள் சேர்ந்து ஆன உடம்பு தனக்கென்று உயிர்த்தன்மை இல்லாதது. அது இறப்பில்லாத ஆன்மாவால் உயிர்த்தன்மை பெறுவது. ஆன்மா கழித்துவிடும் மேனி இலகுவில் தான் ஆக்கப்பட்ட பிரபஞ்சத்துடன் கலந்துவிடும். ஆனால் ஆத்மா பரமாத்மாவை அடைய பல படிகள் மேலும் கடக்கவேண்டியிருக்கும். அது மேனி இருந்த போது ஆற்றிய பாவ புண்ணியங்களால் கடுட்டுண்டும் இருக்கும். கிருஸ்ண பரமாத்மா மனித உணர்வுகளால் கட்டுண்டு போயிருக்கும் அரிசுனன், பாசத்தாலும், பயத்தாலும் செயலாற்றி வினைகளை தேடிகொள்ளாமல் பற்றற நிலையில் இருந்துகடமையை செய்து தன்னை வந்து அடையட்டும் என்ற கருணையினால் செய்த உபதேசம் கீதை. எனவே மரணம் என்பது உண்மையானது அல்ல. மரண உணர்வு. அது மாயையின் ஒருபகுதி மிக்க தத்துவமான பாடல்.

B. Ramakrishnaiah Panthulu தெலுங்கு பிராமணன் என்று கேட்ட ஞாபகம். தேடிய போது கூகிள் உதவவில்லை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் பிறப்பால், சத்திரியன்!

வளர்ப்பால் தேரோட்டி!

அவனது, சத்திரிய குணங்கள், அடிக்கடி வெளிப்படுவதைக் காட்டி நிற்பதே, அவனது கதை!

இங்கும் வருணாச்சிர தர்மமே, மேலோங்கி நிற்கின்றது!

இறுதியில், கர்ணன் என்ற பாத்திரமே, மகாபாரதத்தின் கதாநாயகன் ஆகின்றது!

முடிவில், பாண்டவர்கள் அழுகின்றார்கள்! குந்தியும் அழுகின்றாள். கண்ணனும் அழுகின்றான். தேரோட்டியும், மாமனும் ஆகிய சன்சஜனும் அழுகின்றான்!

காஞ்சனா மாலாவும் அழுகின்றாள்.

ஆனால் ஒருவர் கூடக் 'கர்ணன்' என்ற மனிதனுக்காக அழவில்லை! தர்ம தேவதையைத் தவிர!

கர்ணன் என்ற ஆரியன் தவறுதலாகக் கொல்லப்பட்டு விட்டானே, என்பதற்காகத் தான் அழுகின்றார்கள்!

கர்ணன், உண்மையில் தேரோட்டியாக இருந்திருந்தால், ஒருவர் கூட அழுதிருக்க மாட்டார்கள்!

  • தொடங்கியவர்

கர்ணன் பிறப்பால், சத்திரியன்!

வளர்ப்பால் தேரோட்டி!

அவனது, சத்திரிய குணங்கள், அடிக்கடி வெளிப்படுவதைக் காட்டி நிற்பதே, அவனது கதை!

இங்கும் வருணாச்சிர தர்மமே, மேலோங்கி நிற்கின்றது!

இறுதியில், கர்ணன் என்ற பாத்திரமே, மகாபாரதத்தின் கதாநாயகன் ஆகின்றது!

முடிவில், பாண்டவர்கள் அழுகின்றார்கள்! குந்தியும் அழுகின்றாள். கண்ணனும் அழுகின்றான். தேரோட்டியும், மாமனும் ஆகிய சன்சஜனும் அழுகின்றான்!

காஞ்சனா மாலாவும் அழுகின்றாள்.

ஆனால் ஒருவர் கூடக் 'கர்ணன்' என்ற மனிதனுக்காக அழவில்லை! தர்ம தேவதையைத் தவிர!

கர்ணன் என்ற ஆரியன் தவறுதலாகக் கொல்லப்பட்டு விட்டானே, என்பதற்காகத் தான் அழுகின்றார்கள்!

கர்ணன், உண்மையில் தேரோட்டியாக இருந்திருந்தால், ஒருவர் கூட அழுதிருக்க மாட்டார்கள்!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி ........... எங்கடை வாத்திமார் எங்களுக்கு உதுகளை படிப்பிக்கேக்கை , தெரிஞ்சே பிழை விட்டினமோ ?? தெரியாமல் பிழை விட்டினமோ ??

[size=4]

எனக்கு பிடித்தபாடல் கண்கள் எங்கே.

[/size]

[size=1][size=4]எனக்கும் மிகப் பிடித்த பாடல் "கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே" [/size][/size]

[size=1][size=4]அதிலும் இந்த வரிகள் .............[/size][/size]

[size=1][size=4]இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் [/size][/size]

[size=1][size=4]ஈடொன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்[/size][/size]

[size=1][size=4]துணை கொள்ளும் மதயானை உயிர்கொண்டு நடந்தான்[/size][/size]

[size=1][size=4]குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன் [/size][/size]

[size=4]மகாபாரதம் முழுவதுமே பொய், சூழ்ச்சி, வஞ்சகம். இதில் என்ன நல்ல கருத்து இருக்கிறது அறிந்து கொள்வதற்கு(no offence) இந்தக் கட்டுரையில் வந்த எண்ணமே எனதும். [/size][size=1][size=4]நீண்ட நாளைக்கு முன்பு திண்ணையில்(Thinnai.com) வந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு [/size][/size]

[size=1][size=4]குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமனின் மூலமாக, மஹாபாரதம், பழிவாங்கும் செயல்கள் ஒழுக்க ரீதியில் நியாயமானவையா என்பதை ஆராய்கிறது. ஒரு தவறு இழைக்கப்பட்ட முறையிலேயே, அந்தத் தவறைப் பழிவாங்கும் விதமாகச் செய்யப்பட்ட செயல்களும் சரியானவை என்றும் நியாயமானவை என்றும் அழைக்கலாமா ? [/size][size=4]அஸ்வத்தாமனின் கோபக்கனல் தன் தகப்பனார் போர்க்களத்தில் கொல்லப்பட்டதால் அல்ல. பாண்டவர்களால் அவர் கொல்லப்பட்ட விதமே அஸ்வத்தாமாவின் கோபத்தின் காரணம். போர்வீரர்கள் போர்க்களத்தில் நேருக்கு நேர் மோதியதால் அவர் கொல்லப்படவில்லை. 'அஸ்வத்தாமா இறந்துவிட்டான் ' அசிங்கமான பொய்யை அவர் முன் சொல்லித்தான் அவரைக் கொன்றார்கள்.[/size]

[size=4]துரோணாச்சாரியார் யுதிஷ்டிரரிடமிருந்து உண்மையைத் தெரிந்து கொள்ள விழைந்தார். எத்தனையோ ராஜாங்கங்களைக் கொடுத்தாலும் யுதிஷ்டிரன் பொய் சொல்ல மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தது அவருக்கு. யுதிஷ்டிரன் துரோணாச்சாரியாரிடம் 'அஸ்வத்தாமா கொல்லப்பட்டான் ' என்று உரக்கக் கூறினான். ஆனால் 'அஸ்வத்தாமா என்ற போர்யானை கொல்லப்பட்டான் ' என்று துரோணாச்சாரியாருக்கு கேட்காமல் முணுமுணுத்தான். [/size][size=4]தன் ஒரே மகன் போரில் இறந்தான் எனக்கேட்ட துரோணாச்சாரியார் தனது தேரில் தன் தலையை தொங்கப்போட்டு மிகுந்த புத்திர சோகத்தில் உட்கார்ந்தார். இந்த நேரத்திலேயே,பாஞ்சால நாட்டின் துருபத ராஜனின் மகன் திருஷ்டத்துயும்னன் துரோணாச்சாரியாரை நோக்கிப் பாய்ந்தான்.[/size]

[size=4]துரோணாச்சாரியாரை தலைமுடியைப் பிடித்து இழுத்து, அவரைக் கேவலப்படுத்தி திட்டி, தன் வாளால் ஒரே வீச்சில் அவரது தலையைக் கொய்தான். துரோணாச்சாரியார் அவலமான இறப்பை அடைந்தார். அஸ்வத்தாமா தன் தகப்பனாரின் இறப்பைப் பழிவாங்க உறுதிபூண்டான்.[/size]

[size=4]பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றவுடன் அஸ்வத்தாமனின் தருணம் வருகிறது. பாண்டவருக்கு எதிராக மூன்றே பேர்தான் நிற்கிறார்கள். அஸ்வத்தாமன், கிருபாச்சார்யர், கிருதவர்மன். வெற்றி பெற்றவர்களின் பக்கம் இருக்கும் பாஞ்சாலப் படை உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. களைப்பினால் இறந்தது போன்ற உறக்கம். [/size][size=4]இறந்த இரவே பழிவாங்க சரியான தருணம். மற்றவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது, தன் தகப்பனாரைக் கொன்ற திருஷ்டத்யும்னனைக் கொன்று பழிவாங்க அஸ்வத்தாமன் திட்டமிடுகிறான்.[/size][size=4]இதனை கிருபாச்சாரியாரிடமும், கிருதவர்மனிடமும் சொல்கிறான். அஸ்வத்தாமன் சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆழ்ந்த வெட்கத்தை அடைகிறார்கள்.[/size]

[size=4]கிருபாச்சார்யர் அஸ்வத்தாமனிடம் சொல்கிறார். 'அன்பு மகனே, உன் நல்லதுக்காக உன் மனத்தைக் கட்டுப்படுத்து. நான் சொல்வதை நம்பிக் கேள். உறங்கிக் கொண்டிருக்கும் இவர்கள், தங்களது ஆயுதங்களை விட்டுவிட்டு, தங்கள் குதிரைகளிலிருந்து இறங்கி அவைகளைக் கட்டிப்போட்டுவிட்டு, 'நான் உங்கள் கைகளில் ' என்று பாதுகாப்பைக் கோரியிருக்கிறார்கள். இவர்களைக் கொல்லவே கூடாது. இவர்களைக் கொல்வது அறமாகாது. சூரிய வெளிச்சத்தில் போரிடு ' [/size][size=4]அஸ்வத்தாமன் இதற்கு பதில் சொல்கிறான்: ' எனக்கு அறத்தைப் பற்றியும் அறமற்றதைப்பற்றியும் பாடம் கற்பிக்க முயலாதீர்கள். பாண்டவர்கள் அறத்தை சுக்குநூறாக ஏற்கெனவே உடைத்து எறிந்து விட்டார்கள். நீங்கள் ஏன் அவர்களைக் குறைக் கூறக்கூடாது ? '[/size]

[size=4]'இந்தத் தீய மனிதர்கள் என் தகப்பனாரைக் கொன்றதை நீங்கள் சாட்சியாக இருந்து பார்த்தீர்கள். அந்த ஞாபகமே என் இதயத்தை மறுபடி மறுபடி குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. என் தகப்பனாரைக் கொன்றவனை உறக்கத்தில் கொன்றேன் என்பதற்காக நான் அடுத்த பிறவியில் பூச்சியாக பிறந்தாலும் அது எனக்கு உவப்பானதே ' என்கிறான். [/size][size=4]அஸ்வத்தாமன் பாஞ்சாலப் படை முகாமுக்கு செல்கிறான். அவன் திருஷ்டதுயும்னனைப் கண்டுபிடிக்கிறான். அஸ்வத்தாமன் அவனை எழுப்பி தன் காலால் உதைத்து தன் கைகளால் அவனை மெல்ல மெல்லக் கொல்ல ஆரம்பிக்கிறான்.[/size]

[size=4]'போதும்! என்னை உடனே ஒரு ஆயுதத்தால் வேகமாகக் கொல் ' என்று அஸ்வத்தாமனிடன் சொல்கிறான். அஸ்வத்தாமன் அதற்கு ' முடியாது, நீ உன் ஆசிரியரைக் கொன்றவன். ஒரு போர் வீரன் ஆயுதத்தால் இறப்பது போன்ற கெளரவமான மரணத்துக்கு நீ அருகதையானவன் அல்ல ' என்கிறான்.[/size]

[size=4]பிறகு தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ராணுவத்தினை அழித்தொழிக்கிறான். வெற்றி பெற்ற பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் அவன் கொன்று முடிக்கிறான். போர்வீரர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் அமைதியான முகாமுக்குள் வந்த அஸ்வத்தாமன், போர்வீரர்கள் இறந்தொழிந்த அமைதியான முகாமிலிருந்து வெளியேறுகிறான். தன் கொலையுண்ட தகப்பனாருக்கு தான் பட்ட கடனை அடைத்து விடுகிறான். தன் தகப்பனாருக்கு நேர்ந்த இழிவிற்கு அவன் பழி வாங்கி விட்டான். [/size][size=4]அடுத்த நாள் காலையில், சென்ற இரவு என்ன நடந்தது என்பதை பாண்டவர்கள் உணர்கிறார்கள். யுதிஷ்டிரனின் அழுகையின் மூலம், மஹாபாரதம், எந்த வெற்றியும் முழுமையான வெற்றியல்ல என்பதையும், ஏதாவது ஒரு வழியில் அது தோல்வியாகி விடுகிறது என்பதை கற்பிக்கிறது.[/size]

[size=4]முடிவற்ற சுழற்சியாக வன்முறையும், பழிவாங்கலும், அதற்குப் பதில் இன்னொரு வன்முறையும் அதற்குப் பதில் இன்னொரு பழிவாங்கலுமாக நடந்த கதை, இன்றும் உலகெங்கும், இந்த வரிகள் எழுதும் போது கூட நடந்து கொண்டிருக்கின்றன. [/size][size=4]வெறுப்பும் பழிவாங்கலுமே உலகத்தை அழிக்கும் ஆயுதங்கள். உலகத்தை அழிக்கும் ஆயுதங்களுக்கு அளவற்ற சக்தி கொடுப்பது அவைகளின் மீது செலுத்தப்படும் கோபமும், வெறுப்பும், பழிவாங்கலுமே. அளவு கடந்த வெறுப்பும், அளப்பரிய பழிவாங்கும் வைராக்கியமும் ஒரு புல்லையும் மாபெரும் சக்தி வாய்ந்த ஆயுதமாக்கி விடும். வெறுப்பும், பழிவாங்கலும் தோய்ந்து வீசப் பட்ட இந்த ஆயுதங்கள் திரும்பப் பெறமுடியாதவை.[/size][/size]

http://www.thinnai.c...ion_id=20011022

Edited by ஆதித்ய இளம்பிறையன்

பாரதக்கதையில் துரோணர் பழிவாங்கல்களை ஆரம்பித்து வைக்கிறார். இதை துருபதன், அஸ்வத்தாமன் என்று தொடர்கிறார்கள்.

நடந்தது முற்றிலிலும் வேறு. அது வெறுமனே கிருஸ்ணன் என்ற திராவிட அரசனுக்கும் கண்டகாரில் இருந்து வந்து மெல்ல இடம்பிடித்துக்கொண்டிருந்த ஆரியருக்கும் இடையில் நடந்த போர். இதில் இரு பக்கமும் ஒருவரை ஒருவர் வஞ்சித்தார்கள். ஏன் எனில் தத்துவார்த்தமான போர் என்று ஒன்று இல்லை. இரண்டு பக்கமும் தங்கள் உயிர்களை காக்கத்தான் போர் புரிகின்றன. அதில் எதையும் செய்துதான் உயிர்களை காப்பார்கள்.கிருஸ்ணன் battles எல்லாவற்றையும் வென்றான். ஆனால் கடைசில் war ல் தொற்றுபோய் முடிவில் குலத்தோடு சேர்த்து அழிக்கப்பட்டான்.

பாரதத்தில் நான்கு வேறு வேறுகதைகள் ஒன்றாக்கப்பட்டிருகின்றன.

1.நடந்த ஆரிய திராவிட யுத்தம். - கொடியதொரு யுத்தம். வஞ்சகம், சூது, மிருகத்தனம்....... வழமையான போர்

2.திராவிடரின் கர்ணபரம்பரைக் கதை - தம்மை காப்பாற்ற முயன்ற தலைவனை புகழ்ந்தும், துதித்தும் பேசப்பட்டு வந்தது.

3.வென்ற ஆரியர்களின் ஆதிக்கம் மெல்ல மெல்ல இறுகத்தொடங்கியபின், அவர்களுக்காக பல நூற்றாண்டுகளின் பின்னர் நடைபெற்ற திரிப்புகளின் பின்னர் வந்த கதை - கதை உண்மைத்தன்மை குறைந்து இருபக்கமும் சமநிலைப்படுத்தபட்டு அல்லது battles களில் தோற்ற ஆரியர்களின் தோல்வி மறைக்கப்பட்டு. சுனாமிக்கு பின்னர் ஆரியர் செய்த கேவல, ஈவு இரக்கமில்லாத பாதக்கக் கொலைகள் மறைக்கப்பட்டும் சொல்லப்பட்டுவந்தது.

4.மிகப்பெரிய தத்துவ ஆசிரியனும், கவிஞனுமாமான விசாயன், பல ஆண்டுகளின் பின்னர், பல கதா பாத்திரங்களை புதிதாக இசைச்சு, தனது காலத்தில் புதிதாக வளர்ந்திருந்த வேதாந்த தத்துவங்களை கதையின் மேல் ஏற்றி பின்னியிருந்த மகா பாரதம் என்ற இதிகாசம்.

இவற்றை எல்லாவறையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒன்றாக பார்க்காலாம். அல்லது அந்தந்த கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை மட்டும் பார்க்கலாம்.

குந்தி திராவிட இளவரசி, ஆரிய மாளிகையில் வளர்ந்து ஆரிய இளவரசர்களை மணக்கிறாள். ஆனால் திருமணத்திற்கு முன்னர், ஆரியர்கள் கடைப்பிடித்து வந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், கள்ள உறவு வைக்கிறாள். இதில் பிறந்த பிள்ளை கொல்லப்படவில்லை. ஆனால் மிகவும் தாழ்ந்த நிலக்கு தள்ளப்பட்டு பழி வாங்க படுகிறது. கர்னன் உண்மையாக ஒரு ஆளாக இருந்தால் அவன் அரமணை (திராவிட) காவல் காரரர் , சிறு நிலை தளபதிகள் ஒருவரின் பிள்ளையாக இருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. ஏனெனில் அவன் இயல்பாக ஒரு போர் விரும்பி. கர்னன் கதா பாத்திரம் 3 வது கதைக் காலத்தில் மிகைப்படுத்தபட்ட ஒரு பாத்திரம். ஆரியர்களுக்கு இப்படி பிறந்த பிள்ளை ஒரு Bastard.

இதிகாசத்தில் கர்னன் ஒரு வில்லன். B.R. பந்துலு கர்னன் படத்தை ஆக்கும் போது பாரத இதிகாச வழிகாட்டல்களை பின் பற்றவில்லை. ஆனாலும் படம் காளிதாசனின் சகுந்தலை நாடகம் போல மிளிர்கிறது.

மல்லை. இந்தக் கதையில் பல இடைச் செருகல் இருந்திருக்கிலாம். ஆனால் இது ஆரிய திராவிட யுத்தம் என்பதை என்பதை என்னால் ஏற்க இயலவில்லை.இராமாயணம் இருவேறு இனக் குழுக்களுக்கே இடையே நடந்தே போர். அது ஆரிய திராவிட யுத்தம் என்பது கண்கூடு. ஆனால் இது கர்ணனுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த போர் அல்லவே.கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த போர் தானே. மகாபாரதம் ஒரே இனக் குழுக்களுக்கே இடையே நடந்தே போர் என்றே தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரத காலத்திலேயே சாதி வேற்றுமை,போர்க்களத்தில் அநீதி எல்லாம் நடந்திருக்குது...கூத்திரிய குலத்தவனான சல்லியன்[கிருஸ்ணனுக்கு இணையானவனாம்] சாதி குறைந்த தேரோட்டி மகனான கர்ணனுக்கு தேரோட முதலில் மறுக்கிறான் பிறகு துரியோதனுக்காக சம்மதித்த பின்னரும் தேரில் இருந்து கொண்டு அவனை வார்த்தைகளால் அவமானப்படுத்தினான்[தர்மனுக்கு வாக்குக் கொடுத்திருந்தானாம்]...கர்ணனின் தேர் சேற்றில் புதைந்த போது கர்ணன் அதைத் தூக்கிக் கொண்டு இருக்கும் போது ஒரு கோழை மாதிரி அர்ஜூனன் நிராயுதபாணியாக நின்ட கர்ணனை கொண்டான்...அந்த நேரத்தில் இந்த மகாபாரத யுத்தம் நடைபெற கண்ணன் சொன்ன காரணம் உலகத்தில் அக்கிரமக்காரர் கூடி விட்டனராம்,வன்முறை பெருகி விட்டதாம்,கெட்டவரை அழிக்க இந்த யுத்தம் தேவையாம் என்று பல கார‌ணங்களால் நட‌ந்தது தான் மகா பார‌த யுத்தம்.

இந்த காலத்திலும் எங்கட‌ முள்ளி வாய்க்கால் யுத்தத்திலே யுத்த விதி முறைகள் மீறப்பட்டு இருக்குது...நிராயுதபாணியாக நின்ட‌வர்களை தான் கொண்டார்கள்...சல்லியனை மாதிரி ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு மற்ற பக்கத்திற்கு ஆதர‌வு கொடுத்த ஆட்கள் இருக்கிறார்கள்...தலைவர் சாதி குறைந்தவர்,படிப்பறிவு இல்லாதவர் என சொல்லுற கூட்டம் இருக்குது...கர்ணன் நல்லவன் அவன் சேர்ந்த கூட்டம் தான் சரியில்லை என்ட‌ மாதிரி தலைவர் நல்லவர் அவரை சுத்தி இருந்தவர்களால் இப்படி நட‌ந்தது என சொல்லுகின்ற ஆட்களும் இருக்கிறார்கள்...முள்ளி வாய்க்காலில் செத்தவர்கள் அனைவரும் கெட்டவர்களோ,ஒரு யுத்தம் மக்கள் கூட்டம் அழியட்டும் என்று தான் கட‌வுள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தாரோ

எது எப்படி இருந்தாலும் மகா பார‌தத்திற்கும்,தற்போதைய காலத்திற்கும் சம்மந்தம் இருக்கின்ற மாதிரி மனம் சொல்லுது

  • தொடங்கியவர்

முடிவற்ற சுழற்சியாக வன்முறையும், பழிவாங்கலும், அதற்குப் பதில் இன்னொரு வன்முறையும் அதற்குப் பதில் இன்னொரு பழிவாங்கலுமாக நடந்த கதை, இன்றும் உலகெங்கும், இந்த வரிகள் எழுதும் போது கூட நடந்து கொண்டிருக்கின்றன. வெறுப்பும் பழிவாங்கலுமே உலகத்தை அழிக்கும் ஆயுதங்கள். உலகத்தை அழிக்கும் ஆயுதங்களுக்கு அளவற்ற சக்தி கொடுப்பது அவைகளின் மீது செலுத்தப்படும் கோபமும், வெறுப்பும், பழிவாங்கலுமே. அளவு கடந்த வெறுப்பும், அளப்பரிய பழிவாங்கும் வைராக்கியமும் ஒரு புல்லையும் மாபெரும் சக்தி வாய்ந்த ஆயுதமாக்கி விடும். வெறுப்பும், பழிவாங்கலும் தோய்ந்து வீசப் பட்ட இந்த ஆயுதங்கள் திரும்பப் பெறமுடியாதவை.

மிகவும் சத்தியமான யதார்த்தமான உண்மை ஆதித்த இளம்பிறையன் . அதேவேளை வெறுப்பும், பழிவாங்கலும் தோய்ந்து வீசப் பட்ட இந்த ஆயுதங்கள் திரும்பப் பெறமுடியாதவை மட்டுமல்ல , இவை எய்தவனையே திருப்பி அடிக்கும் பூமராங்குகள் .

  • தொடங்கியவர்

மகாபாரத காலத்திலேயே சாதி வேற்றுமை,போர்க்களத்தில் அநீதி எல்லாம் நடந்திருக்குது...கூத்திரிய குலத்தவனான சல்லியன்[கிருஸ்ணனுக்கு இணையானவனாம்] சாதி குறைந்த தேரோட்டி மகனான கர்ணனுக்கு தேரோட முதலில் மறுக்கிறான் பிறகு துரியோதனுக்காக சம்மதித்த பின்னரும் தேரில் இருந்து கொண்டு அவனை வார்த்தைகளால் அவமானப்படுத்தினான்[தர்மனுக்கு வாக்குக் கொடுத்திருந்தானாம்]...கர்ணனின் தேர் சேற்றில் புதைந்த போது கர்ணன் அதைத் தூக்கிக் கொண்டு இருக்கும் போது ஒரு கோழை மாதிரி அர்ஜூனன் நிராயுதபாணியாக நின்ட கர்ணனை கொண்டான்...அந்த நேரத்தில் இந்த மகாபாரத யுத்தம் நடைபெற கண்ணன் சொன்ன காரணம் உலகத்தில் அக்கிரமக்காரர் கூடி விட்டனராம்,வன்முறை பெருகி விட்டதாம்,கெட்டவரை அழிக்க இந்த யுத்தம் தேவையாம் என்று பல கார‌ணங்களால் நட‌ந்தது தான் மகா பார‌த யுத்தம்.

இந்த காலத்திலும் எங்கட‌ முள்ளி வாய்க்கால் யுத்தத்திலே யுத்த விதி முறைகள் மீறப்பட்டு இருக்குது...நிராயுதபாணியாக நின்ட‌வர்களை தான் கொண்டார்கள்...சல்லியனை மாதிரி ஒரு பக்கத்தில் இருந்து கொண்டு மற்ற பக்கத்திற்கு ஆதர‌வு கொடுத்த ஆட்கள் இருக்கிறார்கள்...தலைவர் சாதி குறைந்தவர்,படிப்பறிவு இல்லாதவர் என சொல்லுற கூட்டம் இருக்குது...கர்ணன் நல்லவன் அவன் சேர்ந்த கூட்டம் தான் சரியில்லை என்ட‌ மாதிரி தலைவர் நல்லவர் அவரை சுத்தி இருந்தவர்களால் இப்படி நட‌ந்தது என சொல்லுகின்ற ஆட்களும் இருக்கிறார்கள்...முள்ளி வாய்க்காலில் செத்தவர்கள் அனைவரும் கெட்டவர்களோ,ஒரு யுத்தம் மக்கள் கூட்டம் அழியட்டும் என்று தான் கட‌வுள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தாரோ

எது எப்படி இருந்தாலும் மகா பார‌தத்திற்கும்,தற்போதைய காலத்திற்கும் சம்மந்தம் இருக்கின்ற மாதிரி மனம் சொல்லுது

பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கிய சாதீயமும் , வர்ணாச்சிரமும் முள்ளிவாய்கால் அவலத்தின் பின்பும் நீறுபூத்த நெருப்பாக கனந்து கொண்டுதான் இருக்கின்றது . என்னைப்பொறுத்தவரையில் பல்வேறு காரணங்களை மகாபாரதம் கூறி நின்றாலும் , கர்ணனும் அவன் சம்பந்தமான கதைகள் , முடிவுகள் அனைத்தும் அப்பட்டமான சாதீய வாந்திகளே !! இதை டிஸ்கிறிமினேசன் என்று சொல்லாமோ தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதத்தின், சாதீயத்துக்குப் பலியானவன் கர்ணன் மட்டுமல்ல!

அர்ஜுனனுக்கு நிகரான, ஏகலைவன், தனது கட்டை விரலைத் தானமாகக் கொடுக்க வேண்டி ஏற்பட்டது!

அவன் தான், துரோணர் எடுத்த முதலாவது, பலி!

மல்லை. இந்தக் கதையில் பல இடைச் செருகல் இருந்திருக்கிலாம். ஆனால் இது ஆரிய திராவிட யுத்தம் என்பதை என்பதை என்னால் ஏற்க இயலவில்லை.இராமாயணம் இருவேறு இனக் குழுக்களுக்கே இடையே நடந்தே போர். அது ஆரிய திராவிட யுத்தம் என்பது கண்கூடு. ஆனால் இது கர்ணனுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த போர் அல்லவே.கவுரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த போர் தானே. மகாபாரதம் ஒரே இனக் குழுக்களுக்கே இடையே நடந்தே போர் என்றே தோன்றுகிறது.

கிருஸ்ணன், அஸ்தினாபுரியில் வைத்து ஆரியர் மேலும் தெற்கே வரவிடாமல் அமைத்த முயற்சிதான் மகாபாரம். அவர்கள் துவராகை மட்டும் வந்தது மட்டுமல்ல, கிருஸ்ணனின் யாதவர்களை பூண்டோடு அழித்துவிட்டார்கள்.

குந்தி கறுப்பு இளவரசி. அவளுக்கு பிறந்த பிள்ளைகளை அரண்மையில் இருந்த எந்த பெரிமனிதனும் ஏற்று அரசுரிமை கொடுக்கப் படவேண்டும் என்று கூறவில்லை. அவர்கள் தேவர்களின் பிள்ளைகள் என்பது வியாசர் காலத்தில் சேர்க்க பட்ட கதை. வியாசர் போரை பார்க்க வில்லை என்பதற்கு நிரூபனம், அவர் அதில் நடந்ததாக கூறும் அமானுஷ விடயங்கள். அவை எல்லாம் சுத்த இட்டுகட்டு என்றதை நாம் இன்றைய நாட்களில் மறுக்க மாட்டோம். போர் நடந்த நாட்களில் குந்தி கூறிய தேவ வரக்கதையை அரண்மனையில் யாரும் நம்பவில்லை. நம்பியிருந்தால் கட்டாயம் எல்லோரும், தேவர்களின் பிள்ளைகளான பாண்டவர் பக்கம் நின்றிருந்திருக்க வேண்டும். ஆனல் அரண்மனையில் இருந்த அறிவு முதிர்ந்தவர்கள் துட்டனாயினும், அரசுரிமை, அரச பிள்ளைகளுக்கு மட்டும்தான் என்று நினத்து கௌரவர் பக்கம்தான் நின்றார்கள்.

எப்படி ஒபாமா கறுப்பர் ஆனாரோ அதேமாதிரியே பாண்டவர் திராவிடர். குறந்தது, அரண்மனை முதியோர்களால் திராவிடருக்கு இணையாக நடத்தப்பட்டர்கள்.

எழுதிய புலவர் கர்ணபரம்பரை கதையுடன் தன் கதையையும் சேர்த்தார்.

உங்களின் பழைய திரி ஒன்றில் இதையேதான் இன்னுமொருதடவை கூறியிருக்கிறேன்.

கிருஸ்ணனும், கிருஸ்ணாயினியும் தான் போரை தொடக்கி நடத்தி முடித்தது. இருவரும் திராவிடர். தமக்கு ஆரியர் இழத்த கொடுமைகளுக்கு பழிவாங்கத்தான் போரை நடத்தினார்கள்.

ஈழப்போரில் இயங்கங்கள் தம்முள் அடிபட்டன. ஆனால் அதன் சூத்திரம், இந்திய மத்திய அரசு தனது எதிரிகள் என நினைத்த தமிழர்கள் மேல் நடத்திய போர்தான் அது. அதில் இந்தியா தோற்றது. ஆனல் இறுதியில் இந்தியா பயங்கரமான வெற்றியை பெற்றது. அது போன்ற ஒரு நிகழ்வுதான் இது.

கிருஸ்ணன், அஸ்தினாபுரியில் வைத்து ஆரியர் மேலும் தெற்கே வரவிடாமல் அமைத்த முயற்சிதான் மகாபாரம். அவர்கள் துவராகை மட்டும் வந்தது மட்டுமல்ல, கிருஸ்ணனின் யாதவர்களை பூண்டோடு அழித்துவிட்டார்கள்.

[size=4]கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு நூலில் வேறுவிதமாக படித்தேன்.[/size]

[size=4]பழையோன் -> பண்டையோன் -> பாண்டியன்.[/size]

பாண்டியன் என்ற வார்த்தையிலிருந்து திரிந்த வார்த்தையே பாண்டவர்கள். குமரிக் கண்ட அழிவிற்குப் பின் எஞ்சியிருந்த தமிழர்கள் கொஞ்சம் பேர் வடக்கே இடம்பெயர்ந்தனர். அவர்கள் தான் வாழ்ந்த பழைய நகரத்தின் பெயரையே("மதுரை") இடம்பெயர்ந்த புது நகருக்கும் இட்டனர். பின்நாளில் அது "மதுரா" "மத்ரா" என்றாகி விட்டது. ஆரியர்கள் பல்வேறு இனங்களில் உள்ள இலக்கியங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தனர். அப்படி செய்யும்போது பாண்டிய நாட்டில் நடந்த ஒரு போரே மகாபாரதமாக எழுதப் பட்டது. அவர் இன்னும் நிறைய எழுதியிருந்தார். அவரது ஆராய்ச்சியில் கதையில் வரும் பெயர்கள் அதனின் தமிழ் வேர்சொற்கள் என்று அலசியிருந்தார்.

ஆனால் உங்களின் பார்வை வேறுவிதமாக உள்ளது. என்ன குறிப்புகள் உங்களை "கிருஸ்ணன், அஸ்தினாபுரியில் வைத்து ஆரியர் மேலும் தெற்கே வரவிடாமல் அமைத்த முயற்சிதான் மகாபாரம்" என்ற கருத்துக்கு இட்டு சென்றது.

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு நூலில் வேறுவிதமாக படித்தேன்.[/size]

[size=4]பழையோன் -> பண்டையோன் -> பாண்டியன்.[/size]

பாண்டியன் என்ற வார்த்தையிலிருந்து திரிந்த வார்த்தையே பாண்டவர்கள். குமரிக் கண்ட அழிவிற்குப் பின் எஞ்சியிருந்த தமிழர்கள் கொஞ்சம் பேர் வடக்கே இடம்பெயர்ந்தனர். அவர்கள் தான் வாழ்ந்த பழைய நகரத்தின் பெயரையே("மதுரை") இடம்பெயர்ந்த புது நகருக்கும் இட்டனர். பின்நாளில் அது "மதுரா" "மத்ரா" என்றாகி விட்டது. ஆரியர்கள் பல்வேறு இனங்களில் உள்ள இலக்கியங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தனர். அப்படி செய்யும்போது பாண்டிய நாட்டில் நடந்த ஒரு போரே மகாபாரதமாக எழுதப் பட்டது. அவர் இன்னும் நிறைய எழுதியிருந்தார். அவரது ஆராய்ச்சியில் கதையில் வரும் பெயர்கள் அதனின் தமிழ் வேர்சொற்கள் என்று அலசியிருந்தார்.

ஆனால் உங்களின் பார்வை வேறுவிதமாக உள்ளது. என்ன குறிப்புகள் உங்களை "கிருஸ்ணன், அஸ்தினாபுரியில் வைத்து ஆரியர் மேலும் தெற்கே வரவிடாமல் அமைத்த முயற்சிதான் மகாபாரம்" என்ற கருத்துக்கு இட்டு சென்றது.

ஆதி, நீங்கள் வாசித்த நூலின், திரி கிடைத்தால், இணைத்து விடுங்கள்!

அநேகமாகப் பலர் எழுதும் கருத்துக்கள், புனை கதைகளையும், திரைப்படங்களையும் மட்டுமே, அடிப்படையாகக் கொண்டவை என எண்ணுகின்றேன்!

நான் அறிந்த வரையில், கர்ணனின் திருமண வாழ்வைப் பற்றியோ, அவனது மகனைப் பற்றியோ,பெரிதாக எங்கும் வாசித்ததாக நினைவில்லை!

ஆனால், அவன் போர்க்கோலம் புனைந்து சென்ற போதில், அவனது மனைவி, தலைக்குத் தைலம் சாத்தியபடி இருந்தாள் என்றும், அவனை முறையாக வழியனுப்பி வைக்கவில்லை என்றும் தான் வாசித்ததாக நினைவு!

ஆனால், கர்ணன் படத்தில் அதையும், படத்திற்காக மாற்றிவிட்டார்கள், என நினைக்கின்றேன்!

[size=4]கொஞ்ச நாளைக்கு முன்னால் ஒரு நூலில் வேறுவிதமாக படித்தேன்.[/size]

[size=4]பழையோன் -> பண்டையோன் -> பாண்டியன்.[/size]

பாண்டியன் என்ற வார்த்தையிலிருந்து திரிந்த வார்த்தையே பாண்டவர்கள். குமரிக் கண்ட அழிவிற்குப் பின் எஞ்சியிருந்த தமிழர்கள் கொஞ்சம் பேர் வடக்கே இடம்பெயர்ந்தனர். அவர்கள் தான் வாழ்ந்த பழைய நகரத்தின் பெயரையே("மதுரை") இடம்பெயர்ந்த புது நகருக்கும் இட்டனர். பின்நாளில் அது "மதுரா" "மத்ரா" என்றாகி விட்டது. ஆரியர்கள் பல்வேறு இனங்களில் உள்ள இலக்கியங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தனர். அப்படி செய்யும்போது பாண்டிய நாட்டில் நடந்த ஒரு போரே மகாபாரதமாக எழுதப் பட்டது. அவர் இன்னும் நிறைய எழுதியிருந்தார். அவரது ஆராய்ச்சியில் கதையில் வரும் பெயர்கள் அதனின் தமிழ் வேர்சொற்கள் என்று அலசியிருந்தார்.

ஆனால் உங்களின் பார்வை வேறுவிதமாக உள்ளது. என்ன குறிப்புகள் உங்களை "கிருஸ்ணன், அஸ்தினாபுரியில் வைத்து ஆரியர் மேலும் தெற்கே வரவிடாமல் அமைத்த முயற்சிதான் மகாபாரதம்" என்ற கருத்துக்கு இட்டு சென்றது.

லெமுறியா சரித்திர காலத்திற்கு முற்பட்டது. அதில்த்தான் ஒரு கண்டமளவு நிலப்பரப்பு அழிந்தது. குமரி கண்டம். சிறிய (அல்லது பெரிய) கடல் கோள்கள். இதில் தமிழரின் சில பாரிய துறைமுகப் பட்டணங்கள் அழிந்தன. துவாரகையும் அப்படி ஒன்று. தமிழர் அரண்மனைகளை இழக்கவில்லை. துறைமுகப் பட்டணங்களை, மிக பிரதான வியாபார நகரங்களை இழந்தார்கள். இவற்றை நிறுவ மத்திய அரசு பணத்துடன் வரும் வரை நடை பெறாது. ஆனாலும் இலங்கையில் அகழ்வாராச்சி என்று இறங்கி இலங்கை அரசு புராதன சின்னங்களை அழிப்பதிலும், மத்திய அரசு முயற்சி இல்லாதிருப்பது ஓர் அளவுக்கு நன்றி. யராவது தனிப்படவர்கள் ஒரு நாளைக்கு முறையாக அவற்றை செய்வார்கள்.

இவை உண்மையான ஆராய்சி மூலம் நிறுவப்பட வேண்டியது. மதுரை தன்னுள் கடசியாக -ஊர் என்பதை கொண்டிருந்திருக்கலாம். மா+... + ஊர். இது வடக்கிருந்து தெற்கே வந்திருக்கத்தான் சந்தர்ப்பம். கன்னியா குமரியில் சுனாமியால் அவதிப்பட்டோர், அன்றைய ஆண்டுகளில் அவ்வளவு தூரம் வடக்கே சென்று, வாழ்ந்து மதுரை என பெயரை வைக்க சந்தர்ப்பம் இல்லை. தெற்கு நோக்கிய தமிழரின் இடப்பெயர்சி, பெயரை தெற்கே கொண்டுவந்தது.

"கிருஸ்ணன், அஸ்தினாபுரியில் வைத்து ஆரியர் மேலும் தெற்கே வரவிடாமல் அமைத்த முயற்சிதான் மகாபாரதம்"

ஆரியர் வடக்கு, கிழக்கு நோக்கி நகர்ந்தார்கள் என்பதை நான் நம்புகிறேன். இதை பற்றி பல புத்தகங்களில் படித்துள்ளேன். குறிப்பு எடுத்து வைக்கவில்லை. கிருஸ்ணன் திட்டமிட்டு அஸ்தினாபுரியில் சண்டையை நடத்துவதற்கு கற்பிக்கதக்க ஒரேஒரு காரணம் அது.

எனது பழைய பதிவு

http://www.yarl.com/...85

Edited by மல்லையூரான்

மேலும் இந்த பதிவை பார்த்தீர்களானால், அதில் நான் இராமாயணத்தில், ஆரிய திராவிட யுத்தம் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறேன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=104585&#entry776951

(இலங்கை திராவிட காலம் முதல் வட இந்தியாவுடன் அதிசயிக்கதக்க தொடர்புகளை வைத்திருந்திருக்கிறது. ஆக மோதிக்கொண்ட இராமனும் இராவணனும், பாரதபோர் போலல்லாது, சிவபக்தர்களான திராவிடர்களே).

[size=4]

ஆதி, நீங்கள் வாசித்த நூலின், திரி கிடைத்தால், இணைத்து விடுங்கள்![/size]

[size=4]

[/size]

[size=4]புங்கை. இணையத்தில் இது கிடைக்கவில்லை. புத்தகம் விபரம் தேடித் தருகிறேன். [/size]

[size=4]

[/size]

[size=4]இராமாயணத்தில், ஆரிய திராவிட யுத்தம் நடக்கவில்லை[/size]

[size=4]மேலும் வடமொழியில் புராணமாக இருப்பதுதான் தமிழில் இலக்கியம். வடமொழி புராணங்கள் ஆரியரின் சரித்திரங்களை கூறுவதோ, தமிழ் மொழி இலக்கியங்கள் திராவிட சரித்திரத்தை கூறுவதுமோ இல்லை. பல வடமொழி புராணங்கள் தமிழரால் இயற்றப்பட்டவை. தமிழ் இலக்கியங்கள் வடமொழி படித்த பண்டிதர்களால் இயற்றப்பட்டவை. எல்லாம் ஒரே வெளியிடுதாம். இவற்றை பிரித்து பார்ப்பதில் பொருள் இல்லை

[/size]

[size=4]ஆரியமும் திராவிடமும் இரண்டற கலந்துவிட்டன அல்லது பிரிக்க முடியாதபடி கலக்கப்பட்டன என்ற கூற்று முற்றிலும் உண்மை. ஒவ்வொரு முறையும் இந்த விவாதம் வரும்போது கடைசியில் நான் குழம்பிப் போகிறேன்.எந்த உறுதியான கருத்துக்கும் வரமுடியவில்லை. யூகத்தின் அடிப்படையிலேயே எதாவது திசையை நோக்கி நகர வேண்டி இருக்கிறது. தமிழர்கள் தங்களது வேர்களைத் அறிவதற்கான தேடல் ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கும் தெளிவற்ற வரலாற்றையே விட்டுச் செல்வோம் என்றே நினைக்கிறேன்.[/size]

  • தொடங்கியவர்

[size=4]புங்கை. இணையத்தில் இது கிடைக்கவில்லை. புத்தகம் விபரம் தேடித் தருகிறேன். [/size]

ஆரியமும் திராவிடமும் இரண்டற கலந்துவிட்டன அல்லது பிரிக்க முடியாதபடி கலக்கப்பட்டன என்ற கூற்று முற்றிலும் உண்மை.[size=4] ஒவ்வொரு முறையும் இந்த விவாதம் வரும்போது கடைசியில் நான் குழம்பிப் போகிறேன்.எந்த உறுதியான கருத்துக்கும் வரமுடியவில்லை. யூகத்தின் அடிப்படையிலேயே எதாவது திசையை நோக்கி நகர வேண்டி இருக்கிறது. தமிழர்கள் தங்களது வேர்களைத் அறிவதற்கான தேடல் ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கும் தெளிவற்ற வரலாற்றையே விட்டுச் செல்வோம் என்றே நினைக்கிறேன்.[/size]

இந்த நிலையில் எப்படி ஆரியம் உயர்ந்தது அல்லது திராவிடம் உயர்ந்தது என்ற விவாதிக்கமுடியும் ??

[size=4]புங்கை. இணையத்தில் இது கிடைக்கவில்லை. புத்தகம் விபரம் தேடித் தருகிறேன். [/size]

[size=4]ஆரியமும் திராவிடமும் இரண்டற கலந்துவிட்டன அல்லது பிரிக்க முடியாதபடி கலக்கப்பட்டன என்ற கூற்று முற்றிலும் உண்மை. ஒவ்வொரு முறையும் இந்த விவாதம் வரும்போது கடைசியில் நான் குழம்பிப் போகிறேன்.எந்த உறுதியான கருத்துக்கும் வரமுடியவில்லை. யூகத்தின் அடிப்படையிலேயே எதாவது திசையை நோக்கி நகர வேண்டி இருக்கிறது. தமிழர்கள் தங்களது வேர்களைத் அறிவதற்கான தேடல் ஒவ்வொரு தலைமுறையிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அடுத்த தலைமுறைக்கும் தெளிவற்ற வரலாற்றையே விட்டுச் செல்வோம் என்றே நினைக்கிறேன்.[/size]

இராமயண காலம், ஆரிய-திராவிட யுத்தம் ஆரம்பித்த காலத்திற்கு முன்பானதாக இருக்க வேண்டும். கதையில் எந்த இடத்திலும் கறுப்பு வெள்ளை சண்டை இல்லை. கர்ணபரம்பரை கதையை இதிகாசமாக மாற்றிய வால்மீகி, பிற்கால நடத்தைகளை அதில் ஏற்றியிருக்கிறார். அதில் துணி துவைப்பவன் கதை வந்தாலும், சாதித்துவம் வரவில்லை. ராமர் தன் மனைவியை பழித்தவனை களுவேற்றாமல், அவனை குடிமகனாக மதித்து தன்னைத்தான் தண்டிக்கிறார். இந்த மாதிரி குடிமக்கள் கருத்தை அரசர்கள் வேவு பார்ப்பதை சங்க பாடல்கள் காட்டுகின்றன. இது பார்த்தில் காணப்படவிலை. அங்கே ஆரிய பாணி அடக்குமுறை துளிர் வைத்துவிட்டது. ஏகலைவன் செய்யாத குற்றத்திற்கு கை விரல் வெட்டப்படுகிறான்.

மேலும் வால்மீகி இராமனை பராக்கிரம்மம்மிக்க மான்னாக காட்ட அசுவமேத யாகத்திற்கு அடுக்குப் பண்ணுகிறார். யாகத்திற்கு தேவையானவை எல்லாம் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன. மன்னன் றெடி. குதிரை றெடி. தலைமைக்குரு றெடி ஆனால் யாகத்திற்கு தேவையான அதி முக்கிய நான்கில் ஒன்று குறைகிறது. அது பட்டத்து ராணி! வால்மீகி அங்கு ஓடுகிறார், இங்கு ஓடுகிறார். அவர் தான் செய்த தப்பை எண்ணி வருந்துகிறார். அவர் இராமாயணக்கதையில் சீதையை காட்டுக்குள் விட்டு விட்டு தான் படிப்பித்த மன்னனின் பிள்ளையும் அங்கே விட்டுவிட்டு இங்கே வந்து கதை ரசனைக்காமட்டும் அசுவமேத யாகத்தை தொடங்கி விட்டார். நல்ல காலம், அவர் குதிரைக்காகவோ, அல்லது மன்னனுக்காவோ அல்லது வசிட்டருக்கவோ சிலை ஒன்றை கொண்டுவந்து சபையில் வைக்க வில்லை. பட்டத்து ராணியின் இடத்தை நிரப்ப மட்டும்தான் சிலையை கொண்டு வந்தார்.

அவர் யாகத்தினன்று பகலில் கொண்டு வந்த சிலை இரவிலும் அவரை இடஞ்சலான இடத்தில் காப்பாற்றிவிட்டது.

யாகத்தை நடத்தும் தலைமை புரோகிதரை யாகத்திலன்று மகிழ்விப்பது பட்டத்து ராணியின் கடமை என்பது அன்றைய வழக்கம். ஆனால் தான் தெய்வத்தில் தெய்வமாக வருணித்த சீதாப்பிராடியையோ, ஆசாரங்களுக்கு தலைவனான வசிட்டரையோ வால்மீகி இப்படி ஒரு "ராகிங்ங்க்குள்" தள்ள வேண்டிய தடுமாற்றத்தை சீதைய சிலையாக்கி அன்றிரவையும் வலு லாவகமாக சமாளித்துவிட்டார். இராமன் ஆரியனாக இருந்திருந்தால் அந்த அபசாரம் அன்று நிகழ்ந்திருக்காது. ஆசாரம் கடைபிடித்திருக்கப்படும். அவன் திராவிடனென்பதால் அசுவமேத யாகத்தில் பட்டத்து ராணியின் கடமை நிறைவேற்றப்படவில்லை. அதாவது இராமன் யாகம் செய்ய வில்லை. அவன் யாக காலங்களுக்கு முந்தைய அரசன். (5000-6000 ஆண்டுகளுக்கு முன்னர்) அங்கு ஆரிய திராவிட யுத்தம் நிகழவில்லை.

ஈழத்தவர்கள் இப்போது இருக்க இடம் தேடி அலைகிறோம். இன்றைய நிலையில் தமிழ் நாட்டு உறவுகள்தான் நடந்தவற்றை பற்றி அலசி வருங்காலத்திற்கு ஒரு ஒழுங்கான வரலாற்றை தேடி வைக்க வேண்டும்.

ஆரியம், திராவிடம்; பிராமணியம் சூத்திரத்துவம் எல்லாம் நிஜ வாழ்க்கைக்கு ஆகாதவை. அவை சரித்திரமாக மட்டும் ஆராயப்படவேண்டும். நோக்கம் பிரிவினைக்கு ஆதாரம் காண்பதல்ல. உண்மையைக் காண்பது

இந்த நிலையில் எப்படி ஆரியம் உயர்ந்தது அல்லது திராவிடம் உயர்ந்தது என்ற விவாதிக்கமுடியும் ??

ஆரியம், திராவிடம்; பிராமணியம் சூத்திரத்துவம் எல்லாம் நிஜ வாழ்க்கைக்கு ஆகாதவை. அவை சரித்திரமாக மட்டும் ஆராயப்படவேண்டும். நோக்கம் பிரிவினைக்கு ஆதாரம் காண்பதல்ல. உண்மையைக் காண்பது

[size=4]கடந்த கால வரலாற்றை எந்த விருப்பும் வெறுப்பும் இல்லாமல் அதன் தன்மையிலேயே உணர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். [/size]

Edited by ஆதித்ய இளம்பிறையன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.