Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது: பாலஸ்தீன அதிபர் அப்பாஸ்

Featured Replies

 121202141159_abbas_palestine_304x171_bbc

பாலஸ்தீனத்தின் மேற்குக்கரையிலுள்ள தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றியுள்ள பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், "எங்களுக்கு தற்போது நாடென்று ஒன்று உள்ளது" எனக் கூறியுள்ளார்.

நியுயார்க்கில் ஐநா தலைமையகம் சென்று திரும்பிய அப்பாஸுக்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது.

 

உறுப்பு நாடல்லாத கண்காணிப்பாளர் நாடு என்ற ஒரு அந்தஸ்து பாலஸ்தீனர்களுக்கு வழங்கப்படுவது தொடர்பான ஐநா வாக்கெடுப்பில் வென்று அப்பாஸ் நாடு திரும்பியுள்ளார்.

 

தாங்கள் கடக்க வேண்டிய பாதை நெடியதாக இருந்ததென்றும், கடுமையான அழுத்தங்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றும் ஆனாலும் மனம் தளராமல் போராடி இந்த அந்தஸ்தை பாலஸ்தீனர்கள் வென்றுள்ளனர் என்றும் ரமல்லாவில் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அப்பாஸ் தெரிவித்துள்ளார்.

 

பாலஸ்தீன மக்கள் அனைவரும் நல்லிணக்கம் காணவேண்டும் என்று அப்பாஸ் கேட்டுக்கொண்டார்.

 

மேற்குக்கரையின் பாலஸ்தீன நிர்வாகமும், காஸாவின் ஹமாஸ் நிர்வாகமும் பிளவுபட்டு நிற்பதை அவர் இதன் மூலம் சுட்டிக்காட்டியதாகக் கொள்ளலாம்.

121130164915_netanyahu_304x171_getty_noc

ஐநாவில் பாலஸ்தீனர்களின் அந்தஸ்து உயர்த்தப்பட்டிருப்பதன் பின்னணியில், அந்த மக்களுக்காக அறவிடப்பட்டிருக்கின்ற இந்த மாதத்துக்கான வரிவருமானங்களை அவர்களிடம் கையளிக்கப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.

12 கோடி டொலர்கள் பெறுமதியான இந்த வரிவருமானத்தை பாலஸ்தீன அதிகாரசபை இஸ்ரேலிய மின்சார கம்பனியொன்றுக்கு செலுத்தவேண்டிய கடனுக்காக செலுத்தவுள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

 

ஐநாவில் பாலஸ்தீனர்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் இஸ்ரேலின் பிரதமர் பென்யமின் நெதென்யாஹு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

 

முன்னைய ஒப்பந்தங்களை முழுமையாக மீறுகின்ற நடவடிக்கை இதுவென்று சுட்டிக்காட்டியுள்ள அவர், பாலஸ்தீனத்தின் பகுதிகளில் தொடர்ந்தும் தமது குடியிருப்புகள் நிர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/global/2012/12/121202_palesinestatus.shtml

65329_4924853082902_1214714504_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ஹெய்ம் போனதால் பாலஸ்தீனப் போராட்டமே அழிந்துபோனது என்று முன்பு கட்டுரைகள் வாசித்த ஞாபகம்.. இப்போது? :rolleyes:

  • தொடங்கியவர்

பாலஸ்தீனம் என்ற நிலம் போன்று தமிழீழம் என்ற எமது பூர்வீக நிலமும் அங்குதான் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பலஸ்தீனா நாளை தமிழீழம் நம்புங்கள் ஒன்றுபடுங்கள் தமிழீழம் காலத்தின் கட்டாயம்

அரபாத் தலைமை இல்லாமல் போனதும் இதற்கு ஒரு காரணம் .

விட்டுக்கொடுப்பனவுகளுக்கு தயாராக முன் சென்று, அரபாத்துடன் நோபல் பரிசை வென்றிருந்த ஜிட்சாக் ரபினை சுட்டுக்கொன்றும், அரபாத்துக்கு நஞ்சூட்டிக்கொன்றும், ஸ்ரேலிய உளவு படை சமாதானத்தை குழிதோண்டி புதைத்திருந்தார்கள். இதனால் அந்த உடன்பாட்டில் கிளின்ரனுடன் சேர்ந்து ஏற்கப்பட்டிருந்த "இரு நாடு" தீர்வு நடைமுறைக்கு வர இத்தனை நாட்கள் எடுத்தன.  இதனால் சமாதனத்தை விரும்பாத கமாஸ் பதவிக்கு வந்து ஸ்ரேலியர் மீது கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து அவர்களைத் தடுமாற வைக்கிறது. மேலும் ஸ்ரேலின் கடும் போக்குத்தனத்தால், வெறும் ஒரு கொள்கைக்காக, 1940 களில் நடந்தவற்றை மறப்பதற்காக, ஐ.நா வில் கண்முடித்தனமாக ஸ்ரேலை ஆதரித்து வாக்களித்து வந்த ஜேர்மனி போன்ற நாடுகளே இந்த முறை ஸ்ரேலை ஆதரிக்கவில்லை. 

 

இந்த அங்கீகாரம் நடப்பதை தடுப்பதற்காக,நெத்தினியாகு, அமெரிக்க தேர்தலில் பாரிய மூலதனங்களை செலவளித்திருந்தார்.  அந்த தோல்வியின் நமைச்சலைக் காட்ட உடனே காசாவில் படைகளை குவித்தார். அதிலும் தோல்வி. அடுத்தடுத்து வந்த தோல்விகளால்  இப்போது வெஸ்ட்பாங்கில் மீளக்குடியேற்றத்தை ஆரம்பித்துவிட்டார். இதுவும் கிளின்டன் காலத்தில் மீளப்பட்டிருந்தது. எனவே அதை அமெரிக்கா ஆதரிக்காது என்பதும், அதிலும் நெத்தினியாகு தோற்கவேண்டி வரும் என்பதும் உண்மை. அதை இப்போது ஒபாமா பெரித்துபடுத்தி முட்டாள்த்தனமாக வரவிருக்கும் தேர்தலில் தனக்கு எதிரான அரசொன்றை ஸ்ரேலில் அமைக்க முயலமாட்டார். ஆனால் தேர்தலில் நெத்தினியாகு திரும்ப வந்தால் அவர் அதை தன் கையால் மீளப்பெற வேண்டிய நிலைக்கு இட்டுச்செல்லப்படுவார். 

 

ஈரானின் கொட்டத்தை அடக்கிய பின்னர் அமெரிக்கா  ஸ்ரேலின் நட்பை அதிகம் பெரிதுபடுத்தாது. இந்திய ரூசிய உறவு மெல்ல மெல்ல அழிந்து போவது போலப் போய்விடும். 

 

இலங்கையில் சிங்கள அரசுகளை பலகாலம் ஆதரித்த சித்தார்த்தன் இன்னமும் அரபாத்தின் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பெயரான PLO வை பின் பற்றியே தனது கட்சிக்கும் PLOTE என்ற பெயரில் இயங்குகின்றார்.  சிதார்த்தன் இ்ங்கையின் அரசுகளின் எடுபிடியாக இயங்கி வந்த சமயம் அரபாத் ஒரு தடவை இலங்கை வந்திருந்தார்.  அரபாத், தான் இலங்கை மண்ணில் இருந்ததால் தமிழர்கள்,்தங்களை உரிமைகளை பெற, அகிம்சை போரை நடத்துவதை தான் ஆதரிப்பது போல் பிரஸ்தாபித்தார். சித்தாதன் எழுந்து அரபாத் இலங்கையில் பயங்கரவாதத்தை பரப்புவதாக குற்றம் சாட்டினார். PLO தமிழீழ போராளிகளுக்கு கொரில்லா சண்டை பயிற்றுவிப்பத்தாகவும் கூறினார். முட்டாள்தனமான கதைத்த  PLOTE தலைவன் சித்தார்த்தனுக்கு, சர்வதேச ராசதந்திரியாக கணிப்பட்டு சொலெயுமின் நாட்டால் சமாதனப் பரிசு அளிக்கப்பட்டிருந்த அரபாத், தான் மற்றய நாடுகளின் உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதில்லை என்றும், PLO  யாருக்கும் வன்முறை பயிற்சிகள் அளிப்பதில்லை என்றும் பதில் கூறினார்.

 

ஆனால் அதற்கு, சாப்பிட்ட தட்டில் மலம் கழிக்கும் துரோக தமிழர்களின் தலைவர்களில் ஒருவராக  கடமையாற்றி வந்த சித்தார்தன் PLOTEன் கேணைத்தனங்களை ஒழிக்க முடியாமல், அதை விடாப்பிடியாக வெளியே காட்டுவதற்காக எழுத்து, அது சுத்த பொய் என்றும் தான் கூட PLO வின் காம்புகளில் சென்று பயிற்சி எடுத்திருப்பதாகவும் கூறினார்.  இந்த சலசலப்புகளை போகும் இடமெல்லாம் கண்டு வந்த அரபாத், தான் வாழ் நாளில் ஒரு நாளும் பன்றி இறைச்சி சாப்பிட்டிருக்காவிட்டாலும், அநாவசியமாக ங்கொங் ங்கொங் என்னும் இதை அறுத்து ஆராவது ஆக்கித்தந்தால் ஆறுதலாக இருந்து  ரசித்து சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவேன் என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த கேள்வியாளருக்கு சென்றுவிட்டார்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.