Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழகம் அமையாதது ஏ‌ன்? ‌விள‌க்கு‌ம் கருணாநி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஈழத்தமிழகம் அமையாதது ஏ‌ன்? ‌விள‌க்கு‌ம் கருணாநி
திங்கள், 3 டிசம்பர் 2012( 11:09 IST )
 
''தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததால் ஈழத் தமிழகம் அமையவில்லை'' என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 80வது பிறந்தநாள் விழாவில் பேசுகையில், இளமை காலத்தில் நானும், வீரமணியும் பெரியாரின் கொள்கைகளை பரப்ப தமிழகம் முழுவதும் பகல் இரவு பார்க்காமல் நடந்தே சுற்றுப்பயணம் மேற்கொண்டது இப்போது நினைவுக்கு வருகிறது. திராவிட கழகத்தில் சின்னஞ்சிறு பிள்ளையாக வீரமணி இணைந்த போது, ஒரு திருஞானசம்பந்தர் கிடைத்திருக்கிறார் என்று அண்ணா அறிவித்தார். பெரியாருக்கு பின்னர் அவரது சொத்துகளையும், கொள்கைகளையும் வீரமணி சிறப்பாக பாதுகாத்து வருகிறார். இந்த செயலை என்னால் கூட செய்ய முடியாது. அவரது வளர்ச்சியை நான் ஆச்சரியமாக பார்க்கிறேன்.
 
1949ஆம் ஆண்டு ராபின்சன் பூங்காவில் நடந்த தி.மு.க. அறிமுக கூட்டத்தில் பேசிய அண்ணா, ‘‘இந்த இயக்கம் பெரியாருக்கும், திராவிட கழகத்திற்கும் எதிரானது அல்ல. தி.மு.க.வும், தி.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக இயங்கும்’’ என்றார். தி.மு.க. என்ற அமைப்பை யாராலும் அழித்துவிட முடியாது. அவ்வாறு அழிக்க யாரேனும் முற்படும் போது அதை தடுத்து நிறுத்தும் கேடயமாக திராவிடக்கழகம் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனவே எங்களிடம் யாரும் வாலாட்ட முடியாது ஜாக்கிரதை.
 
திராவிடம் என்ற பெயரில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. ஒருவர் 2 நாட்களுக்கு முன் திராவிடம் என்பதை ஏற்க முடியாது, அதை வீழ்த்தியே தீருவோம், அந்த வார்த்தை எங்கள் சாதிக்கு விரோதமாக உள்ளது என்று கூறி உள்ளார். நல்ல வேளை சாதி ஆதிக்கத்துக்கும், சாதி பிரிவினைக்கும் திராவிடம் ஆதரவாக உள்ளது என்று அவர் சொல்லவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
 
கலப்பு திருமணத்தின் மூலம் தான் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும். என் மகன் அழகிரி ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று எனக்கு மறைமுகமாக தகவல் அனுப்பினான். ஆனால் நான் அதைத் தடுத்து நிறுத்தினேன். பின்னர் காந்தி என்கின்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை திட்டமிட்டு திருமணம் செய்து வைத்தேன். சமத்துவ சமுதாயத்துக்கு தி.மு.க. தான் முதலில் வித்திட்டது.
 
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு 1961ஆம் ஆண்டே ஐ.நா. சபைக்கு அண்ணா கடிதம் எழுதினார். இலங்கையில் உள்ள 25 லட்சம் தமிழர்களை அழிக்க நினைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். இப்போது ஸ்டாலின், டி.ஆர்.பாலு மூலம் ஐ.நா. சபைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதை அமைச்சராக இருந்த ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். இது தான் விதண்டாவாதம். தமிழன் உருப்படாமல் போனதற்கு இது தான் காரணம்.
 
பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடிய போதே ஈழத்தமிழகம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் ஈழத்தமிழகம் கிடைக்கவில்லை. எனவே ஈழத்தமிழகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நானும், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்டோர் கொண்ட டெசோ அமைப்பு முயற்சித்து வருகிறது. அந்த முயற்சி வெற்றி பெற தமிழர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எ‌ன்று கருணாநிதி கூ‌றினா‌ர்.
  • கருத்துக்கள உறவுகள்

அதென்னப்பா ஈழத்தமிழகம்.. தமிழீழம் என்றதையும் சொக்கத்தங்கம் சோனியாவிற்கு தாரைவார்த்தாச்சோ..???! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்னப்பா ஈழத்தமிழகம்.. தமிழீழம் என்றதையும் சொக்கத்தங்கம் சோனியாவிற்கு தாரைவார்த்தாச்சோ..???! :)

 

 

இந்தியத் தமிழகம் போன்று ஈழத்தமிழகமும். இவரது ஈழம் என்ற குறியீடு முழு இலங்கையை நோக்கியதாய் இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியின் "ஈழத் தமிழகம்"- தமிழீழத்துக்கு மாற்றா?

 

சென்னை: ஈழத் தமிழர் விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் நிலைப்பாடுகள் பலராலும் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் "தமிழீழம்" என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் திடீரென "ஈழத் தமிழகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

 

ஈழத் தமிழர் பிரச்சனையில் காலந்தோறும் பயன்படுத்தப்பட்டு வரும் சொல் "தமிழீழம்" என்பதுதான். திமுக டெசோ மாநாடு நடத்துவதாக அறிவித்த போதுதான் "தமிழீழம்" என்ற சொல்லுக்கே பிரச்சனை வந்தது. "தமிழீழம்" என்பதே இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரானது என்று மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதைத் தொடந்து திமுக முன்னின்று நடத்திய டெசோ மாநாட்டில் அதாவது "தமிழீழ ஆதரவாளர்கள் மாநாட்டில்", "தமிழீழம்" என்ற சொல்லே இல்லாமல் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட்னா. அவற்றைத்தான் இன்றளவும் "டெசோ" தீர்மானங்களாக திமுக புகழ்ந்து வருகிறது.

 

தற்போதைய சூழலில் திமுக- காங்கிரஸ் உறவு பலப்பட்டுவிட்ட நிலையில் "தமிழீழம்" என்ற சொல்லையே பயன்படுத்த விரும்பாததைப் போல திமுக தலைவர் கருணாநிதி, "ஈழத் தமிழகம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்.

 

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 80-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசுகையில் "ஈழத் தமிழகம்" என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கிறார். பொதுவாக தமிழ்நாட்டைத் தான் "தமிழகம்" என்று சொல்வது வழக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது கருணாநிதி, "ஈழத் தமிழகம்" என்று புது சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்.

 

"தமிழீழம்" என்ற சொல்லைத்தானே பயன்படுத்தக் கூடாது.. "ஈழத் தமிழகம்" என்று சொன்னால் ஒரு பாதுகாப்பாக இருக்கலாம் என்று அவர் கருதியிருக்கலாம். ஆனால் கருணாநிதியின் இந்த 'சொல் விளையாட்டு' என்பது "தமிழீழம்" என்ற உயரிய லட்சிய பயணத்தில் குழப்பம்தான் விளைவிக்கும் என்கின்றனர் ஈழத் தமிழர் ஆர்வலர்கள்.

 

நன்றி: http://tamil.oneindia.in/news/2012/12/03/tamilnadu-karunanidhi-use-eezha-thamizhagam-165638.html

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எப்பா சாமி... ஸ்லாங்கு ஒரே மாறி இருப்பதற்காக "ஈழ கேரளம்" என்று சொல்லாம விட்டாரே..! அதை நினைச்சு சந்தோசபடுவம் :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழகம் அமையாதது ஏ‌ன்? ‌விள‌க்கு‌ம் கருணாநி
திங்கள், 3 டிசம்பர் 2012( 11:09 IST )
 
''தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாததால் ஈழத் தமிழகம் அமையவில்லை'' என தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 

கருணாநிதி அவர்களே! இதை நீங்கள் உங்கள் வாயால் சொல்ல தகுதியற்றவர்.கடந்த சில பத்தாண்டுகளில் உங்களின் அரசியல் எமக்கு புரியாததல்ல....ஒற்றுமையின் கலங்கரைவிளக்கம் மு.க.கருணாநிதி விளக்கம் தருகின்றார். th_baby184.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.