Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள அணிக்கு பாடம் புகட்ட சிட்னி தமிழர்களை அழைக்கிறது தமிழரின் குரல் அமைப்பு!

Featured Replies

விளையாட்டை விளையாட்டாக எடுத்து நூறு சதவீதம் சிங்கள வீரர்களைக் கொண்ட சிறிலங்கா கிரிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர்கள் தம்பக்கம் உள்ளார்கள் என்ற மாயையை சர்வதேசத்துக்கு காட்ட சிறிலங்காவுக்கு இடம்கொடுக்கக்கூடாது என தமிழரின் குரல் (Voice of Tamil) அமைப்பைச் சேர்ந்த சுஜன் செல்வன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு கோடைகால கிரிக்கற் சுற்றுலா வந்துள்ள சிறிலங்கா கிரிக்கற் அணிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக தமிழர்கள் அனைவரும் அவுஸ்திரேலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் சுஜன் குறிப்பிட்டார்.

இம்முறை சிட்னியில் நடக்க இருக்கின்ற கிரிக்கற் போட்டிகளில் சிறிலங்கா ஆதரவாளர்களுக்கு தனிப் பகுதி ஒதுக்குவதுபோல் அவுஸ்திரேலியா அணிக்கு ஆதரவான தமிழர்களுக்கும் தனிப் பகுதி ஒதுக்க நியுசவுத்வேல்ஸ் கிரிக்கட் கழகம் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளதாக தெரிவித்த தமிழரின் குரல் (Voice of Tamil) அமைப்பின் நிறுவனத் தலைவர் சுஜன், பெருமளவான தமிழர்களின் வருகையே இக் கவனயீர்ப்பை வெற்றிபெறச் செய்யும் எனவும் தெரிவித்தார்.

விளையாட்டும் அரசியலும் ஒன்றினுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது இரண்டையும் வெவ்வேறாகப் பார்க்க முடியாது எனத் தெரிவித்த சுஜன் இரண்டையும் பிரித்துப்பார்க்க வேண்டும் எனக் கூறுபவர்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் சிம்பாப்பே ஆகிய அணிகளுடன் மற்றைய அணிகள் விளையாடாமல் புறக்கணித்தது அரசியற் காரணங்களுக்காகவே என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சிட்னியில் கிரிக்கற் கவனயீர்ப்பில் தமிழரின் குரலுடன் (Voice of Tamil)  இணைய விரும்பும் தமிழர்கள் தமிழரின் குரல் (Voice of Tamil) அமைப்புடன் தொடர்புகொள்ளுங்கள். அவர்கள் குறிப்பிடும் இடத்தில் ரிக்கற்றை பதிவுசெய்தால் உங்களுக்கு அவர்களால் விற்பனை செய்யும் Jersey ஒன்று இலவசமாகக் கிடைக்கும்.

http://www.tamilleader.com/mukiaya/7860-2012-12-03-12-01-41.html

73030_306744592762793_1801056876_n.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.