Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுடன் இணைந்து செயற்பட ரெலோ முடிவு- சிவாஜிலிங்கம் அறிவிப்பு

Featured Replies

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக, ரெலோ என்ற தமிழீழ விடுதலை இயக்கம் தனியான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை அரசாங்கத்துடன் தாம் நேரடியாக பேசப்போவதாகவும் ரெலோ அமைப்பை சேர்ந்த சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

 

 

திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ரெலோவின் பொதுச் சபை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.  தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேராமல் தாம் தனியாக மகிந்த ராசபக்ச அரசுடன் பேசப்போவதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

 

ரெலோ இயக்கம் எதிர்வரும் ஜனவரி 27ஆம் 28ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் கட்சி மகாநாடு ஒன்றை நடத்த உள்ளதாகவும், அக்கூட்டத்தில் மகிந்த ராசபக்சவுடன் நேரடியாக பேசி ஒரு இணக்கத்திற்கு வருவது பற்றிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

 

 

ரெலோ இயக்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த சிவாஜிலிங்கம் மீண்டும் அக்கட்சியில் இணைத்து கொள்ளப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் குழப்பங்களை ஏற்படுத்தி வந்தார். தற்போது தாம் மகிந்த ராசபக்சவுடன் தனியாக பேசப்போவதாக அறிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை குலைக்கும் நடவடிக்கையில் சிவாஜிலிங்கம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

http://www.thinakkathir.com/?p=44401

ஒரே செல் செல்லாக அடிக்கின்றார்கள்.கத்தியை தீட்டுவம்.

  • தொடங்கியவர்

அரசியல் தீர்வுக்கு டெலோ முன்மொழிவு தயாரிப்பு

 

இனப்பிரச்சினைக்கு  அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான டெலோ என்று அழைக்கப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தனியான முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது.டெலோவின் பொதுச் சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது.

 

இதன்போதே தனியான முன்மொழிவொன்றை சமர்ப்பிப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.தனியான முன்மொழிவை தயாரிப்பதற்றகாக  குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.இந்த குழுவில் டெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன், பொது செயலாளர் ஹென்றி மகேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், என். ஸ்ரீகாந்தா, மற்றும் ஜே.கருணாகரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.இந்த முன்மொழிவை தயாரிப்பிற்கு கட்சியிலுள்ள புத்திஜீவிகளின் ஆலோசனைகளும் பெறப்படும் என அவர் குறிப்பிட்டார்.

 

ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்காக இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்படும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார். இதேவேளை, டெலோவின் மாநாட்டை  ஜனவரி 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடத்துவது எனவும் நேற்றைய பொதுச் சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 



http://telo.org/?p=6571&lang=ta

கூட்டமைப்பு, தீர்வுக்கு தனது திட்டத்தை வழங்குவதில்லை என்றும் அரசு முன் வைக்க வேண்டும் என்றும் பலதடவை கூறியிருக்கிறது (அதாவது தான் பேச்சுவார்த்தையில் கூறி, அரசு பதிலளிப்பதாக எற்றுக்கொண்டவற்றுக்கு முதலில் அரசு பதில் அளிக்க வேண்டும்). டெலோ தன் திட்டத்தை முன் வைப்பத்தால் அது முற்று முழுத்தாக கூட்டமைப்புக்கு எதிராக மாறாது. ஆனால் 13ம் திருத்தத்திற்கு கீழே எதையாவது வைத்தால் அது கூட்டமைபுக்கு எதிராக அல்ல, தேவானந்த போன்றோர்களைப் போல தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே கருதப்படும்.  அண்மையில் சிவாஜிலிங்கம் அரசுக்கெதிராக கூட்டமைப்பை விட கடுமையான போக்குக்களையும் சிலதடவைகளில் காட்டியிருந்தார்.

  • தொடங்கியவர்

மகிந்தர் பேசுவாரா?
இல்லை குழுவில் சேரக்கேட்பாரா?

 

 

டெலோ,"ஒரு தீவு இரண்டு நாடுகள்" என்ற அணுகுமுறையில் தீர்வை வைத்தால், சிவாஜிலிங்கம் கொல்லவும்  படலாம்.

‎//இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான டெலோ என்று அழைக்கப்படும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தனியான முன்மொழிவொன்றை சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது.டெலோவின் பொதுச் சபை கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போதே தனியான முன்மொழிவொன்றை சமர்ப்பிப்பது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.தனியான முன்மொழிவை தயாரிப்பதற்றகாக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.இந்த குழுவில் டெலோவின் தலைவர் செல்வம் அடைகலநாதன், பொது செயலாளர் ஹென்றி மகேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், என். ஸ்ரீகாந்தா, மற்றும் ஜே.கருணாகரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.// இதனை எப்படி அணுகுவது என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது தொட்டு பல குழப்பகரமான நடவடிக்கைகளை செய்து கொண்டு வந்தவர்தான் சிவாஜிலிங்கம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்குள் தங்களது அமைப்பு சார்பில் பேசட்டும். அதைவிடுத்து அவர்கள் தனியாகத் தீர்வுக்கான முன்மொழிவை சமர்ப்பிக்கும் பொழுது தமிழ்மக்கள் சார்பில் பொதுவாகக் கட்சிகள் அனைத்தும் இணைந்த நிலையிலான பொதுத்தீர்வொன்றை முன்வைப்பதில் சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரே செல் செல்லாக அடிக்கின்றார்கள்.கத்தியை தீட்டுவம்.

 

செத்துக் கிடப்பவன் மனிதன் என்று ஏங்குகின்றது மனிதப் பண்பு!

புலியா அது என்று இரை கண்ட மிருகம் போல் கொண்டாடுகின்றது இதுவும் ஒரு பண்பு!

எதற்கு எது புத்தி சொல்லும் யோக்கியம் உள்ளது என்பது தெரியாததா?

மகிந்தர் பேசுவாரா?

இல்லை குழுவில் சேரக்கேட்பாரா?

 

 

டெலோ,"ஒரு தீவு இரண்டு நாடுகள்" என்ற அணுகுமுறையில் தீர்வை வைத்தால், சிவாஜிலிங்கம் கொல்லவும்  படலாம்.

 

யாரால்?

 தெளிவுபடுத்தவும்.

 

  இலங்கை அரசுடன் சேரமுன்னும் ரெலொ தலைவர்களை திரத்தி திரத்தி சுட்டார்கள்

:blink::rolleyes:

  • தொடங்கியவர்

யாரால்?

 தெளிவுபடுத்தவும்.

 

  இலங்கை அரசுடன் சேரமுன்னும் ரெலொ தலைவர்களை திரத்தி திரத்தி சுட்டார்கள்

:blink::rolleyes:

 

சிங்களத்தால்.

கனடாவிற்கு அகதி மனு கேட்டு வந்த முன்னாள்  சிப்பாய் தன்னை சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு  குண்டெறிய தனது மேலதிகாரிகள் கூறியதாக கூறியுள்ளார்.

சிங்களத்தால்.

கனடாவிற்கு அகதி மனு கேட்டு வந்த முன்னாள்  சிப்பாய் தன்னை சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு  குண்டெறிய தனது மேலதிகாரிகள் கூறியதாக கூறியுள்ளார்.

 

ஆகா மொத்ததில் ரெலொ அனைத்து பக்கத்திலும் எதிரி உள்ள அமைப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.