Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தா VS அங்கயன் இராமநாதன் - யாழ் SLFP - EPDP முரண்பாடு உச்சத்தில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
slfp%202_CI.jpg

 

யாழ்.குடாநாட்டில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை புறந்தள்ளி அண்மைக்காலமாக ஆளும் தரப்பு முண்டியடித்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்ற நிலையில் உள் முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ளன. 

சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள யாழ்.பல்கலைக்கழக விவகாரத்தில் இடம்பெற்ற பேச்சுக்கள் எவற்றிலும் அமைச்சரோ அவரது தரப்புகளோ அழைக்கப்பட்டு இருக்கவில்லை. மறுபுறத்தே அவரது அரசியல் போட்டியாளரும் சுதந்திக்கட்சி அமைப்பாளருமான அங்கயன் மற்றும் அவரது தந்தையார் இராமநாதன் ஆகியோரே அழைக்கப்பட்டிருந்தனர். 

துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளுக்கு ஈடாக அவர்கள் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி கத்துருசிங்காவினால் கூட்டப்பட்ட கூட்டத்தில் முக்கியமளிக்கப்பட்டிருந்தனர்.

slfp.jpg

(படம் - யாழ் பல்கலைக்கழகம் குறித்த கலந்துரையாடல்)

அதே போன்று நேற்று யாழ்.நகரில் இடம்பெற்ற விடுதிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் புறந்தள்ளப்பட்டிருந்தார். பாதுகாப்பு அமைச்சின் செயலரது நிர்வாகத்திற்குட்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் அங்கயனே முதன்மைபடுத்தப்பட்டார். 

எனினும் அங்கு அழைக்கப்பட்டிருந்த முதல்வர் யோகேஸ்வரி அங்கயன் பற்றி ஏதும் பேசவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இரு தரப்பிடையேயும் நடந்த மோதலின் போது அங்கயனின் தரப்பினரால் யோகேஸ்வரி தரப்பினர் தாக்கப்பட்டிருந்தனர்.

இதே வேளை இதன் தொடர்ச்சியாக நாளை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த வடக்கு மாகாண சபையினது இலக்கிய விழா தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அமைச்சருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்hமையே தடைக்கு காரணமென கூறப்படுகின்றது. 

அதிலும் தனது கட்சியை சேர்ந்த சந்திரகுமாருக்கு வழங்கப்பட்ட கௌரவத்தை கூட தனக்கு வழங்கவில்லையென அமைச்சர் சீறிப்பாய்ந்ததாக வடமாகாண சபை அதிகாரிகள்; தரப்பில் கூறப்படுகின்றது.

எனினும் ஊடகங்களது கண்களிலிருந்து தப்பிக்க ஏதுவாக காலை ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்கும் நிகழ்வை மட்டும் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்தடன் கலைஞர்களை கௌரவிக்கும் விருதினை தானே வழங்க வேண்டுமென பணித்துள்ள அமைச்சர் திட்டமிடப்பட்ட பாடசாலை தவிர்ந்த வேறு பாடசாலை மண்டபங்களை ஒதுக்கவும் பணித்துள்ளார்.

விடுதலைப்புலிகளது முதற் கரும்புலித்தாக்குதல் இப்பாடசாலையில் தளமைமைத்திருந்த படையினர் மீதே நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86299/language/ta-IN/article.aspx

டக்ளஸ் தேவானந்தா VS அங்கயன் இராமநாதன் - யாழ் SLFP - EPDP முரண்பாடு உச்சத்தில்
 

 

 

 இனத்தை காட்டி கொடுத்து பிழைப்பதற்கும் போட்டி  <_<

Edited by akootha

டக்ளஸ் தேவானந்தா VS அங்கயன் இராமநாதன்

எட்டப்பர்களுக்கும் காக்கவன்னியர்களுக்கும் 

போட்டி இனத்தை காட்டி கொடுப்பதற்கு <_<

Edited by நவரத்தினம்

அந்த நபர் இரண்டு படங்களிலும் தனது முகத்தை போட்டோவில் விழவிடாமல் வேறு எங்கோ திருப்பியிருக்கிறார். அவரின் படத்தை போடவந்த ஊடகவியலாருக்கு அவரின் முகத்துடன் கூடிய படம் கிடைக்கவில்லை. உறுண்டு திரண்டு, நெடுத்துப் பெருத்திருக்கும் அங்கயன், உருவத்தில்,  அங்கஜனை விட சற்றுப் பெரிதாகக் காணப்படுகிறார்.

 

கிழக்குக்கு ஒரு பிள்ளையான்-கருணா. வடக்கிற்கு ஒரு தேவானந்தா-அங்கயன்.

 

முதல் அமைச்சர் பதவிக்கு போட்டியிட்ட தேவானந்தா அடுத்த தேர்தலில் ஜனாதிபதியின் ஆலோசகர் ஆவார். அதற்கடுத்ததில் சொந்தவீட்டில் ஆலோசகர் ஆவார்.

 

சென்ற தடவை கொட்டேலுக்கு அடிக்கல் நாட்டிய போது மகிந்த விட்ட சவால், நெடுந்தீவை சிங்கப்பூராக்குவது. (இது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை. ஆசிய ஆச்சரியத்தை சீனா கற்பித்து கொடுக்கும் வரை இலங்கை முழுவதையும் "சிங்கப்-போராக்குவதுதான்" மகிந்தாவின் சவால். ஆனால் நடந்து முடிந்திருப்பது இராவணனின் அண்ணனான மகிந்தா தன் வீட்டை மட்டும் குபேரப்பட்டணமாக்கியிருக்கிறார்.) 

 

செயலாளர் நாயகத்திற்கு இந்த முடிவு வருவதை நமது கள உறவு சண்டமாருதன் அறிந்திருந்தாரா என்பது அறிய சுவரசியமான விடையம்.

 

அங்கயன் என்று ஒருமையில் அவரை அழைக்காமல் அவரின் சரியான விளிப்புமுறையை யாராவது இங்கே எழுதினால், அவரை அப்படி அழைத்துகொள்ளலாம்.

Edited by மல்லையூரான்

செயலாளர் நாயகத்திற்கு இந்த முடிவு வருவதை நமது கள உறவு சண்டமாருதன் அறிந்திருந்தாரா என்பது அறிய சுவரசியமான விடையம்.

 

வழமைபோன்று நாம் இவர்களை (அங்கையன், டக்லஸ், கருணா, பிள்ளையான்...) எதிர்த்து சிங்கள பேரினவாதத்திற்கு பலம் சேர்க்ககூடாது என்பார்கள்  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.