Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்ய ஆற்றின் கீழே கொழுந்துவிட்டு எரியும் எரிமலைக்குழம்பு. மாயன் காலண்டரின் மர்மமா?

Featured Replies

ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றின் கீழே எரிமலை போல நெருப்புகுழம்பு எரிந்து கொண்டிருப்பதை அமெரிக்காவின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளது. இதனால் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

 

 

ரஷ்யாவின் Kamchatka Peninsula என்ற இடத்தில் உள்ள ஆற்றின் தண்ணீருக்கு அடியில் லாவா என்ற எரிமலையின் நெருப்புக்குழம்பு ஓடிக்கொண்டிருப்பதை அமெரிக்காவின் நாசா படம் பிடித்துள்ளது. அந்த ஆற்றின் தண்ணீர் பயங்கரமாக கொதிநிலையில் உள்ளதாகவும், அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனே அந்த கிராமத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. 

 

வோல்கானா என்று சொல்லப்படும் இந்த நெருப்புக்குழம்புகளை இன்ஃப்ரா ரெட் கதிர்கள் மூலம் படமெடுத்த நாசா, அதன் வெப்பநிலையை கணக்கிட்டு, தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

 

மேலும் Peninsula அருகிலுள்ள பனிமலையின் ஐஸ்கட்டிகள் எரிந்து கொண்டிருக்கின்றன. டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்ற மாயன் காலண்டர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதோ என பொதுமக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்.

 

கொழுந்துவிட்டு எரியும் லாவா படம் பார்க்க....

  • தொடங்கியவர்

இப்பொழுதே, அரைபாதி மக்கள் பட்டினியில்தானே வாடுகிறார்கள். கடவுளுக்கு இங்கு எங்கே இடம் இருக்கிறது. கடவுள் பெயரை கூறிக்கொண்டு, ஊரை ஏமாற்றும் கயவருக்கான உலகம்தானே இது. கலிகாலம்....

 

 

 
காலத்துக்குக் காலம் இப்படி எவராவது பூமி அழியும் என்ற மிரட்டல்களைச் செய்துகொண்டுதானிருக்கிறார்கள்:

உலக அழிவு பற்றிய ஒரு செய்தி பரவி உலக நாடுகள் பலவற்றிலும் மக்கள் பதற்றத்துக்குள்ளாகியிருப்பது கொஞ்சம் புதுமையானதுதான். இம்மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (21.12.2012) அன்று உலகம் அழியப்போகிறது என்று மாயன் இன மக்களின் கலண்டரில் சொல்லப்பட்டிருப்பதைக் கணிசமான உலக மக்கள் நம்புவதே இந்தப் பீதிக்குக் காரணம்.

தென்அமெரிக்காவின் பெரு மற்றும் பிரேசில் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் இந்த மாயன் இன மக்கள். சிலைகள், கோயில்கள் என்று பல கலாசார சின்னங்கள் கொண்ட மாயன் நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் பலகலை களிலும் மிகுந்த விற்பன்னர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என அறியப்படுகிறது. இந்த மக்களின் கலண்டரில் இருப்பதாகச் சொல்லப் படும் எத்தனையோ ஆருடங்களில் ஒன்றுதான் இந்த பூமியின் அழிவு பற்றிய தகவலும்.

...

மாயன் இன மக்கள் உருவாக்கிய அந்தக் கலண்டர் 5125 ஆண்டுகளுக்கு உரியது. அது இந்த 21 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. கலண்டர் முடியும் நாளில் உலகம் இருக்காது என்ற அனுமானமே இந்தப் பீதிக்குக் காரணம். ரஷ்யாவிலேயே மக்கள் அதிகளவுக்கு நடுங்குவதாக ஊடகங்கள் நாளுக்குநாள் செய்திகளைத் தருகின்றன.

வழக்கம் போல ஊடகங்கள், புதிதாகக் கிடைத்திருக்கும் இந்தப் பரபரப் பைத் தங்கள் வியாபாரத்திற்கு நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பேட்டி,கட்டுரை,வரைபடம் என்று ஊதி ஊதிப் பெரிதாக்கி மக்களை முடிந்தளவுக்குப் பயமுறுத்துகிறார்கள். ரஷ்ய சிறைகளில் மயான அமைதி நிலவுகிறது. விரோதிகள் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி மன்னிப்புக் கேட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். கடைகளில் கூட்டம் இல்லை. வைத்திருப்பவர்கள் இலவசமாக அள்ளிக் கொடுக்கிறார்கள் என்றெல்லாம் உலக அழிவு நிச்சயம் என்பது போலச் செய்திகள்.

உலகம் அழியாது, இதெல்லாம் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று விடுக்கப்படும் அறிவிப்புகளை யாரும் சட்டை செய்வதாயில்லை. உலக சமுதாயமே அழிவுச் செய்தி களைக் கேட்பதற்குத்தான் ஆவலாயிருப்பதை நிரூபித்துக் கொண்டிருக் கிறார்கள். பெரு, பிரேசில் நாடுகளுக்கு அமெரிக்கர்கள் போய் குவிகின்ற னர். சுற்றுலாப் பயண நிறுவனங்கள், தனியார் விமானசேவைகள் எல்லாம் இந்தப் பரபரப்பையும் மேலும் விசிறிப்பணம் சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

இந்தப் பீதியின் விஸ்வரூபத்தைப் பார்த்துவிட்டு, நாசா விஞ்ஞானிகள் உலகம் அழியாது அதற்கு எந்த வாய்ப்பும் இப்போதைக்கு இல்லை என்று அறிவிக்கின்றனர். இராட்சத எரிகல் பூமியை தாக்கி அழிக்கும் என்பதே பரவலாக பயமுறுத்தப்படும் செய்தி. கடைசியாக ஆறரைக் கோடி வருடங்களுக்கு முன் அப்படி நடந்தது. டைனோசர்கள் அப்போது அழிந்தன. இப்போதைக்கு அது இல்லை என்கிறது நாசா.

காலத்துக்குக் காலம் இப்படி எவராவது பூமி அழியும் என்ற மிரட்டல் களைச் செய்துகொண்டுதானிருக்கிறார்கள்.

அப்படி அழிவு நடக்கத்தான் போகிறது என்றால், எவராலும் தடுக்க முடியாததைப் பற்றிச் சும்மா கவலைப்பட்டு என்ன? தவிரவும்,சாகப்போகும் சமயத்தில் நல்லது செய்ய நினைப்பது மனித இயல்பு. இந்தத் தருணத்திலாவது, மனிதர்களி டையேயும், சமூகங்களிடையேயும் பகையும் வெறுப்பும் எதற்கு? எல்லா வற்றையும் விட்டுவிட்டு நம் கரங்களைக் கோர்த்துக் கொள்ளலாமே என்று நம்மில் பலர் நினைப்போமென்றால், அதுதான் மாயன் கலண்டரின் வெற்றி என்று வாழ்த்தலாம்.

நன்றி: inaiyachaithigal..

 

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் இருக்கும், கடல்களுக்கு அடியில், எத்தனையோ எரிமலைகள், 'உயிர்ப்பு' நிலையில் உள்ளன!

உயிரினங்களும், அதற்கேற்றவாறு கூர்ப்படைந்து, வாழ்ந்து வருகின்றன!

இதுவும், இன்னொரு எரிமலையின் 'உயிர்ப்பு' மட்டுமே!

ஆனால், எரிமலைகள், கொழுந்துவிட்டு எரிவதை, அதுவும் தண்ணீருக்கடியில், இப்போது தான் கேள்விப்படுகின்றேன்! :o

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் இருக்கும், கடல்களுக்கு அடியில், எத்தனையோ எரிமலைகள், 'உயிர்ப்பு' நிலையில் உள்ளன!

உயிரினங்களும், அதற்கேற்றவாறு கூர்ப்படைந்து, வாழ்ந்து வருகின்றன!

இதுவும், இன்னொரு எரிமலையின் 'உயிர்ப்பு' மட்டுமே!

ஆனால், எரிமலைகள், கொழுந்துவிட்டு எரிவதை, அதுவும் தண்ணீருக்கடியில், இப்போது தான் கேள்விப்படுகின்றேன்! :o

கடலுக்கடியில்... எரிமலைக் குழம்புகள், செந்நிறத்தில் வந்து கொண்டிருப்பதை... தொலைக்காட்சிகளில்... பார்த்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் இருக்கும், கடல்களுக்கு அடியில், எத்தனையோ எரிமலைகள், 'உயிர்ப்பு' நிலையில் உள்ளன!

உயிரினங்களும், அதற்கேற்றவாறு கூர்ப்படைந்து, வாழ்ந்து வருகின்றன!

இதுவும், இன்னொரு எரிமலையின் 'உயிர்ப்பு' மட்டுமே!

ஆனால், எரிமலைகள், கொழுந்துவிட்டு எரிவதை, அதுவும் தண்ணீருக்கடியில், இப்போது தான் கேள்விப்படுகின்றேன்! :o

 

புங்கை என்ன இது உங்களுக்கு அருகில் இருக்கும் எரிமலைகளை தெரியாமல்,

 

 

http://www.australiangeographic.com.au/journal/submarine-volcano-grows-at-record-rate.htm

 

http://www.sardi.sa.gov.au/information_and_news/media_release_archive/2010_media_releases/vocano_discovered_great_australia_bight

 

பாவம் மாயர்கள், நடகப்போகிற உலக அழிவு எப்ப என்று எழுத்தி வைத்துவிட்டு அழிந்துபோயிருக்கிறார்கள். ஆனால் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்து அழிந்தவர்கள் தாம் எப்படி அழிந்தார்கள் என்று நடந்ததை எழுதிவைக்க இல்லை. <_<

 

உண்மையில் மாயரின் வாழ்கையின் உண்மையை சரித்திரம் என்று ஒன்றை ஒருவரும் ஆயவில்லை. அவற்றில் தமது புனந்துரைகளுக்கு ஆதாரம் தேடி வியாபரம் செய்பவர்களே அதிகம். இதுவேதான் இந்தியாவின் ஆரிய-திராவிட சண்டையின் முடிவும். சுமேரியரை பற்றி கூறப்படும் புனைந்துரைக்களுக்கும் அளவில்லை. மிகைப்படுத்தப்படாமலும், அதிகம் தாழ்வில்லாமலும் வெளியே தெரியும் ஒரேஒரு நாகரீகம் சீனாவின் மட்டுமே. மற்றயவெயெல்லாம் சரித்திரம் அல்ல வெறும் அரசியல்(தரித்திரம்).

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்கடியில் எத்தனையோ எரிமலைக் குழம்புகளை பலதடவை காட்டியுள்ளனர்.இது ஒன்றும் புதிதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

கடலுக்கடியில் எத்தனையோ எரிமலைக் குழம்புகளை பலதடவை காட்டியுள்ளனர்.இது ஒன்றும் புதிதல்ல.

 

 

சரியாக சொன்னீர்கள்.
 
இதெல்லாம் வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் பேசுகின்ற விடயம்.
 
''ரஜனி ஒரு படத்தில் கூறுவார் சாகிற காலம் தெரிந்தால் மனிதனுக்கு வாழ்கின்ற காலம் பாரமாகிடும் என்று'' அதேபோன்றதுதான் இப்படியான கதைகளும். 
 
மாயன் இன மக்கள் உருவாக்கிய அந்தக் கலண்டர் 5125 ஆண்டுகளுக்கு உரியது. அது இந்த 21 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. கலண்டர் முடியும் நாளில் உலகம் இருக்காது என்ற அனுமானமே இந்தப் பீதிக்குக் காரணம்.

ஒருவேளை இந்த கலண்டரை உருவாக்கியவர்/உருவாக்கியவர்கள் இறந்திருந்தால் இந்த கலண்டரை தொடர முடியாமல் போயிருக்கலாம் தானே. அவ்வாறு ஏன் யாரும் சிந்திக்கவில்லை? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
புங்கை என்ன இது உங்களுக்கு அருகில் இருக்கும் எரிமலைகளை தெரியாமல்,

 

 

http://www.australiangeographic.com.au/journal/submarine-volcano-grows-at-record-rate.htm

 

http://www.sardi.sa.gov.au/information_and_news/media_release_archive/2010_media_releases/vocano_discovered_great_australia_bight

 

 

நன்றிகள், உடையார்!

 

தெரியும், உடையார். ஆனால் கொழுந்து விட்டெரிகிறது என்ற வார்த்தைப் பிரயோகத்தின், மிகைபடுத்தலுக்காகத் தான் அவ்வாறு எழுதினேன்!

 

நான் டேவிட் அட்டன்பரோவின் விசிறியாக்கும்! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.