Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கார்களுக்கு இலங்கையில் கடும் வரி: அதிர்ச்சியில் உற்பத்தியாளர்கள்

Featured Replies

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்க வரியை இலங்கை பலமடங்கு உயர்த்தியிருப்பது, இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, இலங்கை அரசுடன் பேசித் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர்.
 
இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இலங்கை மிக முக்கியமான வாடிக்கையாளர் நாடு ஆகும்.
கடந்த ஆண்டு மட்டும் 100 மில்லியன் டாலர் அளவுக்கு இந்திய கார் மற்றும் பிற வாகனங்கள் இலங்கைக்கு ஏற்றுமதியாகியுள்ளன. அந்த நிலையில், இலங்கையின் திடீர் முடிவு, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார் மீதான சுங்க வரியை 73 சதமும், மூன்று சக்கர வாகனங்கள் மீதான வரியை 45 சதமும் உயர்த்தியது.
 
வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீதான வரியும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
 
இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்த இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநதி சுகோதோ சென், ''கடந்த ஏப்ரல் மாதம் பயணிகள் கார் மீதான இறக்குமதி சுங்க வரியை இலங்கை அரசு தீடீரென உயர்த்தியது. கடந்த நவம்பர் மாதம் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் மீதான வரியையும் உயர்த்திவிட்டது. இது இந்திய ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஜனவரியில் இலங்கையில் நடத்தத் திட்டமிட்டிருந்த ஆட்டோமொபைல் கண்காட்சியையும் ஒத்திவைத்திருக்கிறோம். காரணம், இலங்கையில் ஆட்டோமொபைல் முகவர்கள், இந்திய வாகனங்களை விற்க முடியாததால், அவற்றை ஏற்க மறுப்பதாக தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்’’, என்றார்.
 
இலங்கை அரசு, அன்னிய செலாவணியை அதிகரிக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் சுகோதோ சென் கூறினார்.
 
அதே நேரத்தில், ஜப்பான் உள்பட மற்ற ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியை இலங்கை அரசு குறைத்திருப்பது எப்படி என்று கருத்துத் தெரிவித்த சுகோதோ சென், ''எஃப்.டி.ஏ எனப்படும் தடையற்ற வர்த்தக உடன்பாட்டின்படி, இந்தியாவுடனான ஒப்பந்தத்தில், வாகனங்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால், ஜப்பான், சீனா போன்ற நாடுகளுடனான ஒப்பந்தங்களில் வாகனங்களையும் இலங்கை சேர்த்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய அரசின் வர்த்தகத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசியிருக்கிறோம். இலங்கையுடனான ஏற்றுமதி பாதிக்கப்பட்டால், ஆட்டோமொபைல் தொழில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறோம்’’, என்றார்.
 
அதேபோல், சீன நிறுவனங்கள் இரண்டு கார் தயாரிப்பு ஆலைகளை அமைக்க இலங்கை அரசு அனுமதியளித்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் தொடர்பாகவும் கவனிக்குமாறு இந்திய அதிகாரிகளைக் கோரியிருப்பதாக சுகோதோ சென் தெரிவித்தார்.
 
இலங்கைக்கு ஏற்கெனவே ஏற்றுமதியான இந்திய வாகனங்களை அந்நாட்டு முகவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பவோ அல்லது வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகோதோ சென் தெரிவித்தார்.
 
இதற்கிடையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த இந்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ராஜீவ் கெர், இது மிகவும் கவலையளிப்பதாகவும், ராஜாங்க ரீதியாக இலங்கை அரசுடன் பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
 
http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121210_indialankaauto.shtml

Edited by akootha

சினக் கார்களை இலங்கையில் உற்பத்தி செய்ததாக மேற்கு நாடுகளுக்கு அனுப்ப சீனா முயல்கிறது.

இதில் இந்திய மூக்கை நுளைத்தால் யார் என்ன செய்ய முடியும்?

இதை நாம் இந்தியதாயின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட முதலாவது ஆணியெண்டு எடுத்துக்கொள்ளலாம்..

  • தொடங்கியவர்

அதேபோல், சீன நிறுவனங்கள் இரண்டு கார் தயாரிப்பு ஆலைகளை அமைக்க இலங்கை அரசு அனுமதியளித்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் தொடர்பாகவும் கவனிக்குமாறு இந்திய அதிகாரிகளைக் கோரியிருப்பதாக சுகோதோ சென் தெரிவித்தார்.

நேற்று துவிச்சக்கரவண்டிகளை சீன உதவியுடன் செய்து இல்லை செய்த வண்டிகளை "இலங்கையில் செய்யப்பட்டது"என முத்திரை குத்தி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்தது இலங்கை.

இன்று மோட்டர் வண்டிகளை செய்து .... ஏற்றுமதியும் செய்யவுள்ளது.

ஆனால் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் எதையும் பார்க்கும் தூர நோக்கு அற்றவர்களாக உள்ளனர்.

  • தொடங்கியவர்

சிறிலங்காவின் இரண்டாவது மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி பாகிஸ்தான்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112665

இந்தியா, சிறிலங்கா இடையே இழுபறி நிலை தீவிரம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=112714

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கான சுங்க வரியை இலங்கை பலமடங்கு உயர்த்தியிருப்பது, இந்திய ஆட்டோமொபைல் தொழில் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, இலங்கை அரசுடன் பேசித் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர்.

இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு இலங்கை மிக முக்கியமான வாடிக்கையாளர் நாடு ஆகும்.

கடந்த ஆண்டு மட்டும் 100 மில்லியன் டாலர் அளவுக்கு இந்திய கார் மற்றும் பிற வாகனங்கள் இலங்கைக்கு ஏற்றுமதியாகியுள்ளன. அந்த நிலையில், இலங்கையின் திடீர் முடிவு, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார் மீதான சுங்க வரியை 73 சதமும், மூன்று சக்கர வாகனங்கள் மீதான வரியை 45 சதமும் உயர்த்தியது.

வர்த்தகப் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீதான வரியும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று பிபிசி தமிழோசையிடம் கருத்துத் தெரிவித்த இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கத்தின் பிரதிநதி சுகோதோ சென்,   கடந்த ஏப்ரல் மாதம் பயணிகள் கார் மீதான இறக்குமதி சுங்க வரியை இலங்கை அரசு தீடீரென உயர்த்தியது. கடந்த நவம்பர் மாதம் வர்த்தக வாகனங்கள் உள்ளிட்ட பிற வாகனங்கள் மீதான வரியையும் உயர்த்திவிட்டது. இது இந்திய ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஜனவரியில் இலங்கையில் நடத்தத் திட்டமிட்டிருந்த ஆட்டோமொபைல் கண்காட்சியையும் ஒத்திவைத்திருக்கிறோம். காரணம், இலங்கையில் ஆட்டோமொபைல் முகவர்கள், இந்திய வாகனங்களை விற்க முடியாததால், அவற்றை ஏற்க மறுப்பதாக தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்  , என்றார்.

இலங்கை அரசு, அன்னிய செலாவணியை அதகரிக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் சுகோதோ சென் கூறினார்.

அதே நேரத்தில், ஜப்பான் உள்பட மற்ற ஆசிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியை இலங்கை அரசு குறைத்திருப்பது எப்படி என்று கருத்துத் தெரிவித்த சுகோதோ சென்,   எஃப்.டி.ஏ எனப்படும் தடையற்ற வர்த்தக உடன்பாட்டின்படி, இந்தியாவுடனான ஒப்பந்தத்தில், வாகனங்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால், ஜப்பான், சீனா போன்ற நாடுகளுடனான ஒப்பந்தங்களில் வாகனங்களையும் இலங்கை சேர்த்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய அரசின் வர்த்தகத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசியிருக்கிறோம். இலங்கையுடனான ஏற்றுமதி பாதிக்கப்பட்டால், ஆட்டோமொபைல் தொழில் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறோம்  , என்றார்.

அதேபோல், சீன நிறுவனங்கள் இரண்டு கார் தயாரிப்பு ஆலைகளை அமைக்க இலங்கை அரசு அனுமதியளித்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் தொடர்பாகவும் கவனிக்குமாறு இந்திய அதிகாரிகளைக் கோரியிருப்பதாக சுகோதோ சென் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஏற்கெனவே ஏற்றுமதியான இந்திய வாகனங்களை அந்நாட்டு முகவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பவோ அல்லது வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகோதோ சென் தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்தப் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த இந்திய வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலர் ராஜீவ் கெர், இது மிகவும் கவலையளிப்பதாகவும், ராஜாங்க ரீதியாக இலங்கை அரசுடன் பேசி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

http://www.thedipaar.com/news/news.php?id=55330

அட சும்மா போங்கப்பா, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என முத்திரை குத்தி அனுப்பினாலும் யார் கேட்பார்?

  • தொடங்கியவர்

Industry to end year with tepid 6-7% growth: Maruti

Last year, Maruti had exported about 15,000 units of vehicles to Sri Lanka. This time around exports are likely to be less than 2,500.

The industry feels that the Indian companies are being unfairly targeted. About a month ago on November 8, the Sri Lankan government had announced the budget and the Indian industry was hoping that there will be some clarity and relief.

Things became worse as they only made it clear that only certain segments of car where India has a big advantage only those vehicles will face duty rates. Indian officials are worried and  are planning to take up this matter diplomatically.

http://www.moneycontrol.com/news/cnbc-tv18-comments/auto-industry-cries-foulsri-lankas-anti-india-stand_793227.html

பல தடைகளை தாண்டிய கருணாநிதியும், சோனியாவும் இதையும் தாண்டுவார்களாக. அமெரிக்கா கூட தனது GSP+ நீக்க முதல், அது இலங்கைக்கு தேவை இல்லாத தாக வந்துவிடும். அன்றைய நாள் அவர்கள் அமெரிக்க கோதுமைக்கு தடை கொண்டுவந்துவிடுவார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.